பானுமதி வெங்கடேஸ்வரன்:
டி.வி. டாக் ஷோக்கள் பார்பதுண்டா? உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்தால் எந்த டி.வி.யின் எந்த டாக் ஷோவில் பங்கேற்க விருப்பம்?
# எந்தக் காலத்திலோ நினைவில்லை, "நம் விருந்தினர்" அல்லது "இன்றைய விருந்தினர்" என்ற நிகழ்ச்சியை ஆர்வமாகப் பார்த்ததுண்டு. பொதுவாக பிரபலங்களின் பேட்டி சினிமா நட்சத்திரங்களாக இல்லை என்றால் பிடிக்கும். எழுத்தாளர்-கர்நாடக இசைப் பாடகர்- சாதனையாளர் ஆனால் ரசித்துக் கேட்பதுண்டு.
டாக் ஷோ என்றால் இரண்டு அணியாக இருந்து இலக்கியம் பற்றி விவாதம் செய்தால் கேட்க ஆர்வம் உண்டு. தமிழ் சானல்களில் இது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆங்கில சானல்களில் சில (?) சமயம் வெற்றுக் கூச்சலாக இருப்பது சலிப்பு.
எஸ் வி சேகர் , மாலன், சுப்பிரமணியன் சுவாமி, தற்போது அண்ணாமலை ஆகியோர் பேட்டி ரசிக்கும். இவர்கள் பி ஜே பி ஆதரவாளர் என்பது தற்செயல். பிரச்சினைகளை எதிரணியை இழிவு படுத்தாமல் பேசுவதைக் கேட்கப் பிடிக்கும்.
சமயச் சொற்பொழிவுகள் நுணுக்கமான விளக்கங்களாக இருந்தால் கேட்பேன். பட்டி மன்றங்களில் ஓரிரு நபர்கள் பேசுவது, மதுரை முத்து காமெடி ஓகே.
தற்போது தரம் தாழ்ந்து போனதால் கிட்டத்தட்ட எதுவும் பார்ப்பதில்லை. டி விக்கு லீவு.
& Dog show எல்லாம் டீ வி யில் வருகின்றனவா!
ஆங்கில சேனல்கள் நடத்தும் அரசியல் விவாதங்கள், தமிழ் சேனல்கள் நடத்தும் அரசியல் விவாதங்கள், யார் சிறப்பாக நடத்துவதாகவும் நினைக்கிறீர்கள்?
# அரசியல் விவாதங்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமே வெறும் கூச்சல் ஆகி விட்டது.
& தமிழை விட ஆங்கில சானல்கள் நடத்தும் விவாதங்கள் சிறப்பாக உள்ளன.
எளிமை என்பதை எளிமையாக விளக்க முடியுமா?
# எளிமை சிக்கல், செலவு இல்லாதது, மனத்தாங்கல், வருத்தம் உண்டாக்காதது. சொல்-செயல் இரண்டுக்குமானது.
& முடியும்.
நிறக்குருடாக (colour blind) இருப்பவர்கள் வண்டி ஓட்டும் உரிமம் (driving licence) பெற முடியுமா?
# தேடிக் கண்டு பிடிக்கலாம்.
& நி கு உள்ளவர்கள், ஓ உ பெற்றால் என்ன ஆகும் என்பதை இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் !
= = = = =
எங்கள் கேள்விகள் :
1) வீட்டில் ஜன்னலருகே உட்கார்ந்து, வெளியே பெய்யும் மழையை ஒரு மாலை நேரத்தில் ரசிக்கிறீர்கள் - அப்போது என்ன சாப்பிடப் பிடிக்கும்?
2) கீரை வகைகளில், உங்களுக்கு சாப்பிட மிகவும் பிடித்த கீரை எது?
3) சென்னையில் நீங்கள் முதன் முதலில் போன சுற்றுலா இடம் எது?
= = = = =
படம் பார்த்துக் கருத்துரையுங்கள்.
1)
2)
3)
= = = = =
மின்நிலா 072 இதழின் சுட்டி >>>> இங்கே <<<<<<
= = = = =
" மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் " மெட்டில், ஆசிரியர் KGY ராமன் இயற்றிய பாடல் :
பாட்டுப் பாடும் பையா வாய்
மூட வேணும் சொன்னேன்..
பாட வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே..
பாட்டு என்றால் சுதியும் வேணும்
போட்டுக் கேக்க லயமும் வேணும்
சுதியும் லயமும் தப்பிப் போனா
கதிகலங்க வைக்குதடா (வாய் மூட வேணும் சொன்னேன்)
சுதிக்கு ஒரு பெட்டியுண்டு
லயமோ கை கொட்டிலுண்டு
சுதியும் லயமும் பத்திரமா
சும்மா கிட சொல்லி வைப்பேன்
(பாட வேணும் ஐயா தடை...)
கூவம் நதிக்கரையில்
கூட்டமாய்க் குடிகளுண்டு
கூச்சலென்ன கலாட்டானு
கும்பலாக வம்பு செய்வார்
(பாட வேண்டாம் சொன்னேன்)
குடும்பமென்றால் கூச்சல் உண்டு
கும்மாளம் பலவுமுண்டு
எங்க வூட்டு சங்கீதம்
உங்க காதுக்கில்லை என்போம்
(பாடவேணும் சாரே தடை சொல்லாதீர் நீரே)
நேசமுள்ள நெய்பர் மக்கள்
பேசிக் கோபம் காட்டிடுவார்
நாசமாப் போச்சு என்பார்
நாராசமாய் இருக்குதென்பார்
(வாய் மூட வேணும் சொன்னேன்)
நேசமென்றால் பொறுமை வேணும்
பாட்டுக் கேட்கும் பண்பு வேணும்
பாஷை புரியாத போதும்
பேஷு போட்டு ரசிக்க வேணும்
(பாட வேணும் மேடம் தடை சொல்லாதீர் மேடம்)
ஜோராகப் பாடிடுவோம்
ஜாலியாக் கேட்டிடுவோம்
தாளம் தப்பும் பரவாயில்லே
(சொல்) தெரியாட்டாலும் பாதகமில்லே
பாடிடுவோம் நாமே அதைக்
கேட்டிடுவீர் நீரே
கைதட்டி ரசித்திடுவீர் அன்றேல்
கைகொட்டி சிரித்திடுவீர்
பாடவேணும் மக்கள் அதைக்
கேக்க வேணும் மக்காள்....
= = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅமாவாசை நன்னாளில் அனைத்து முன்னோர் ஆசிகளையும்
பெற்று நலமுடன் இருப்போம்.
நவராத்திரி நாட்கள் எல்லோருக்கும் நன்மை தரும்.
நவ நாயகிகள் அருளப் பிரார்த்தனைகள்.
இனிய காலை வணக்கம்.
நீக்குதிரு.ராமன் அவர்களின் பாட்டும் மெட்டும் மிக அருமை. தாய், சார், ஐயா
பதிலளிநீக்குஎன்று அருமையாகத் தொடர்கிறது.
நன்றி.
நீக்குஜோராகப் பாடிடுவோம்
பதிலளிநீக்குஜாலியாக் கேட்டிடுவோம்
தாளம் தப்பும் பரவாயில்லே
(சொல்) தெரியாட்டாலும் பாதகமில்லே///
இதுதான் நமக்குத் தேவை.அற்புதமான சொல்லமைப்பு.
மீண்டும் நன்றி.
நீக்குkgy பாடல் ஜாலி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமழை பெய்யும் நாட்களில்
பதிலளிநீக்குஅந்த ரிதம் கேட்கப் பிடிக்கும். நல்ல Trumpet இசையும்
பிடித்த புத்தகமும் இருந்தால் போதும்.
5 ஸ்டார் bar, Eclair, Nutties
இருந்தால் போதும்:)))))) கற்பனை தான். ஒன்றையும் வாயில்
போட முடியாது.
// கற்பனை தான். ஒன்றையும் வாயில்
நீக்குபோட முடியாது.// :)))
கீரையில் அரைக்கீரைக்கும், கீரைத்தண்டுக்கும் முதலிடம்.
பதிலளிநீக்குமுதல் கீரையை மசித்து,
இரண்டாவதை கூட்டாகச் செய்து சாப்பிட மிகப்
பிடிக்கும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவகை பேதம் பார்க்காமல் விரும்பிச் சாப்பிடுவேன் என்றாலும் சமீபமாக எனக்குப் பிடித்து வருகிற கீரை வகை kale.
பதிலளிநீக்குபாட்டி வீட்டில் அவர் செய்த அகத்தி(?) கீரை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்.
மங்களூர் நண்பன் வீட்டில் முள்ளங்கி இலையில் கீரைக்குழம்பு செய்வார்கள் (உடன் முள்ளங்கியை பொறியல் செய்வார்கள் - ஏன் என்று கேட்டதில்லை). பொலபொலவென்று சாதம், நெய் கலந்து சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
ரசனையான கருத்துரைக்கு நன்றி.
நீக்கு3....... ஏழு வயதில் மாமா என்னை அழைத்துச் சென்ற இடம்
பதிலளிநீக்குஅப்போதிருந்த Zoo. ஆரோக்கியமான புலி,சிங்கம்
எல்லாம் பார்த்து மகிழ்ந்தோம். பின்னணியில்
ரயில் சத்தம் கேட்கும்.
ஓ ! அப்படியா!
நீக்குமுதல் படம் புரியவில்லை.
பதிலளிநீக்குகண்ணைக் கட்டுகிறது என்று சொல்லலாமா:)
மூன்றாவது படம்,
'" ஹேய் நாமளும் குளிக்கணும் டா. இல்லாவிட்டால் இந்த அம்மா
இதுக்குள்ள போட்டு விடுவாள்.ஏற்கனவே ரெண்டு பேர் உள்ள இருக்காங்க பாரு.:_)
இரண்டாவது படம்.
இந்த அப்பாவுக்கு ஒண்ணும் தெரியலை. நான் உனக்கு ஊட்டி விடுகிறேன்!!!
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி 1 கீரை: முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை. முளைக்கீரை பொரியல், அரைக்கீரை மசியல், பசலைக்கீரை கூட்டு என்பவை பிடிக்கும்.
பதிலளிநீக்குசென்னை முதல் பயணம். மிக சின்ன வயதில் சென்னைக்கு வந்து செத்த காலேஜ், உயிர் காலேஜ், மெரினா என்று பார்த்தாலும் நினைவில் நிற்பது என்னவோ 1968 இல் IITIF FAIR தான். நடந்தது தற்போதைய அண்ணா நகர்.
கில்லெர்ஜீக்கு போட்டியா? பாட்டைச் சொல்லுகிறேன்.
Jayakumar
:)))) நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குநல்லதொரு பதிவு..
பதிலளிநீக்குவாழ்க மகிழ்வுடன்..
நன்றி.
நீக்குஉங்கள் கேள்விகள்//
பதிலளிநீக்கு1. இதோ இப்போது கூட நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. வேலைகளின் நடுவே அவ்வப்போது ஜன்னல் அருகே சென்று ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
மாலை நேரத்திலும் ரசிப்பதுண்டு ஆனால் எதுவும் சாப்பிட்டுக் கொண்டெல்லாம் இல்லை. ஒரு வேளை யாராவது செய்து கொடுத்தால் சாப்பிட பிடிக்குமோ!!!!?? ஹிஹிஹி
கீதா
!!! :))) நன்றி.
நீக்குவிவாதங்கள் நண்பர்களைப் பிரிக்கின்றன - என்பது விவேகானந்தர் அறிவுரை..
பதிலளிநீக்குஇன்றைய விவாதங்கள் ஒருதலைப் பட்சமானவை...
அவற்றால் எந்தவொரு பயனும் இல்லை என்பதை உணர்ந்தபின் அவற்றை நினைத்துக் கூட பார்ப்பதில்லை...
ஆம், உண்மைதான்.
நீக்குகட்சி பட்டிமன்றம் மாதிரி, 'மாநில அரசு மிகச் சிறப்பாக செயல்படுதுன்னு நினைக்கிறீங்களா? இல்லை மிகச் சரியான முடிவுகளை எடுக்கிறது என்று நினைக்கிறீங்களா? இல்லை சரியான தலைமை அமைந்திருக்குன்னு நினைக்கிறீங்களா'..... 'மத்திய அரசு..இல்லை இல்லை ஒன்றிய அரசு மோசமாகச் செயல்படுதா இல்லை மக்கள் விரோதப் போக்கைக் கொண்டிருக்கிறதா இல்லை அதானிக்கு மட்டுமே உழைக்கிறதா' என்பதுபோல விவாதங்கள் நடத்தி.... காசு வாங்கிக்குவாங்க
நீக்கு:)))
நீக்குகீரைவகைகள் எல்லாமே பிடிக்கும்.
பதிலளிநீக்குகீதா
அப்படியா!
நீக்குபொதுவாகவே எதுவும் பிடிக்காது என்பது எப்போதுமே இல்லை. உணவைக் குறை சொல்லும் பழக்கம் அறவே கிடையாது. மிகச் சிறு வயது முதலே பழகிவிட்டது. வீட்டுச் சூழலினால், அப்படி வளர்க்கப்பட்டதால்..
பதிலளிநீக்குபின் தலையில் அடிபட்டு மணம் அறியும் சக்தி இழந்ததால் அதனால் நாவில் அதன் மணமும் தெரியாவிட்டாலும், வெறும் உப்பு புளிப்பு காரம், துவர்ப்பு கசப்பு இனிப்பு மட்டுமே தெரியும் என்றாலும் ரசித்துச் சாப்பிடுவதுண்டு!!!! (சுவை என்பது வேறு.சுவை என்றால் அறுசுவை. எனவே நான் சுவை உணர முடியாது என்று சொல்லமாட்டேன். மணம், அதனால் நாவில் உணர்வது..அந்தச் சுவை).
மணம் குணம் எல்லாம் தெரிந்த போதும் கூட உணவை குறை சொல்லும் பழக்கம் இல்லாததால், யார் எப்படிச் செய்தாலும் சாப்பிடும் பழக்கம். நன்றாக இருக்கும் பட்சத்தில் பாராட்டுவதுண்டு, அவர்களின் உழைப்பையும் பாராட்டுவதுண்டு. அந்த நேரத்தில் நமக்கு அந்த உணவு கிடைக்கிறதே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி...வயிறார உண்டேன் என்று மனாரச் சொல்வதுண்டு.
அதே சமயம் நெருங்கிய நபர் என்றால் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அது சரியில்லை இது சரியில்லை நன்றாக இல்லை என்று குறை என்று சொல்லாமல் பாராட்டிவிட்டு... அதை இப்படியும் செய்யலாம் என்று, மேம்படுத்தவும் சில டிப்ஸ் சொல்வதுண்டு.
ஆனால் இப்போது அதுவும் முடிவதில்லை. நாவில் தெரிந்தால்தானே!!!! கொரோனா வந்து சென்ற பிறகு முன்பு அவ்வப்போதேனும் தெரிந்த கறிவேப்பிலை, வெந்தயம் வெங்காயம், பூண்டு மணம் கூட இப்போது சுத்தமாகத் தெரிவதில்லை!!!!
ஆஅனாலும் விடுவமா சாப்பிடாம...உட்கார்ந்து மெதுவாக ரசித்துச் சாப்பிடுவதுண்டு!!
கீதா
கரோனா வந்து சென்ற சில நாட்களில், மீண்டும் சுவையும் மணமும் உணரமுடியுமே! எவ்வளவு நாட்கள் ஆகின்றன? விவரமான விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குகௌ அண்ணா எனக்குத்தான் ஏற்கனவே பிரச்சனை கடந்த 7 வருடங்களாக இருக்கிறதே. முதல் ஒரு வருடம் சுத்தமாக எந்த மணமும் தெரியவில்லை. அதன் அதன் பின் அவ்வப்போது ஸ்ட்ராங்க் ஸ்மெல் அதாவது வெங்காயம், பூண்டு முதலியவை.....அப்புரம் வேண்டாத துர்நாற்றங்கள், கொஞ்சமேனும் தெரிந்தது. கொரோனாவிற்குப் பிறகு மணம் சுத்தமாகத் தெரிவதில்லை. சைனஸ் உண்டு என்பதால் சளி வேறு அது கொஞ்சம் இறங்கிய போது 4,5 நாட்கள் முன்பு ஒரு இரு நாள் ஓரிரு நேரம் தெரிந்தது மீண்டும் இப்போது சுத்தமாக இல்லை
நீக்குகொரோனா வந்தது மே மாதம்.
கீதா
// தெரிந்த கறிவேப்பிலை, வெந்தயம் வெங்காயம், பூண்டு மணம் கூட இப்போது சுத்தமாகத் தெரிவதில்லை!!!!//- தப்பித்தேன். வெங்காயம், பூண்டு, உருளையும் (ஹாஹா), எலுமிச்சை சாறு உபயோகிக்காம உங்களுக்கு பூரி மசால் செய்துபோடப்போறேன் கீதா ரங்கன்(க்கா). நிச்சயம் குறை சொல்ல மாட்டீங்க ஹாஹா
நீக்குமுதல் படத்தைப் பார்த்ததும் குதித்து நீங்க வேண்டும் போல் இருந்தது. ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது நீந்தி.
பதிலளிநீக்கு2. குழந்தைகள் இரண்டும் ச்சோஓஓஓஓ ஸ்வீட்டு! ஒன்று - இந்த இதை சாப்பிட்டுப் பாரு...
இரண்டாவது - ஹையே கீழ கிடந்ததை பொறுக்கி போட்டுருக்கியே வாயில போடலாமா? கூடாது...அம்மா பார்த்தா அடி கிடைக்கும். அதை வெளில எடு...
மூன்று - வாய காமி என்ன சாப்பிடற? எனக்குத் தராம?
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு3 வது படம். ஹையோ ரொம்ப ரொம்ப ரசித்தேன் செம க்யூட்டிஸ்..பூனாச்சுங்க (ஸ்ரீராம்-பாஸ் வைச்ச பெயர்!!!) எட்டிப் பார்க்கும் அழகு ..
பதிலளிநீக்குஜெர்ரி இதுக்குள்ளார ஒளிஞ்சுருக்கோன்னு பூந்து பார்த்து துரத்திப் பிடிக்கலாம்னு பார்த்தா அங்கயே நம்ம ஷோ டாம் அண்ட் ஜெர்ரி ஷோ நடக்காப்ல இருக்கே...
கீதா
ஹா ஹா ! நன்றி.
நீக்குரசனையான கேள்விகளும், பதில்களும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகேள்வி பதில்களும் பாடலும் அருமை...
பதிலளிநீக்குஎளிமை :
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
தஞ்சம் எளியன் : ஒருபொருட்பன்மொழி
கருத்துரைக்கு நன்றி.
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎளிமையாக இருப்பதனாலேயே பலரும் கேலி செய்யப்படுவார்களே! ஆனால் இங்கே எளிமை சிக்கல் இல்லாதது என்கிறீர்களே!
பதிலளிநீக்குதமிழ் சானல்களில் வேறே எது பார்த்தாலும் இந்தப் பட்டிமன்றங்களைத் தவிர்த்தல் நலம். பொதிகையில் வந்தால் பார்க்கலாம்.
நான் எந்தப்பேச்சு/பேட்டிகளும் தொலைக்காட்சியில் பார்க்க உட்கார மாட்டேன். அலுப்புத் தட்டும் விஷயம்! ஒரு சார்பான தொலைக்காட்சி நெறியாளர்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசின்ன வயசில் முளைக்கீரை தான் பிடிக்கும். ஏனெனில் அதுக்குத் தான் அம்மா தேங்காய் எல்லாம் அரைத்துவிட்டுப் பண்ணுவா. இல்லைனா புளி விட்ட கீரை, மோர்க்கீரைனு பண்ணுவா. அரைக்கீரைனா வெறும் மசியல் தான். ஆனாலும் அதில் மோர் மிளகாய், கருவடாம்(குழம்பு) போன்றவை தாளிப்பதால் அதுவும் பிடிக்கும். மற்றக் கீரைகள் எல்லாம் கல்யாணம் ஆகி வந்து வடக்கே போனப்புறமாத் தான் பழக்கம். அப்படியும் பல வருஷங்கள் வெந்தயக்கீரை வாங்கியதற்கு யோசிப்போம். பின்னர் அதுவும் பழகி விட்டது. இப்போ முளைப்பயறோடு வெந்தயக்கீரை போட்ட புலவு எனில் ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குஇரசனையான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஜன்னல் கிட்டே உட்கார்ந்து பார்க்கும்போது மழை பெய்யணும்னா அதுக்குத் தகுந்தமாதிரி இடம் அமையணும். எனக்குத் தெரிஞ்சு ராஜஸ்தான், குஜராத் வீடுகளில் அப்படி அமைந்திருந்தது. அதிலும் ராஜஸ்தானில் அமர்க்களம். வெளியே பார்த்தால் பசுமையான லானும் சுற்றி நட்டிருக்கும் வண்ண வண்ணப் பூச்செடிகளும் தெரியும். மழையில் நனைந்து கொண்டு மயில் ஆடிக்கொண்டிருக்கும். சூடான சமோசா குழந்தைகள் விருப்பம். எனக்குப் பகோடா! அல்லது நசிராபாத் கா கசோடா! கவனிக்கவும் கசோடி இல்லை. அது சின்னது. நான் சொல்வது நசிராபாதில் மட்டுமே தயாரிக்கப்படும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கசோடா! அந்த மழைக்கு அதைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தால்! ஸ்வர்கம் கைகளில்!
பதிலளிநீக்குகசோடா கசோடி எல்லாம் என்ன? ஒருமுறை சென்ட்ரல் ஸ்டேஷனில் கசோரி என்ற ஒரு வஸ்துவை வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். சப்பாத்தியைப் பிய்த்து பூரி போல பொரித்து செய்திருந்தார்களோ என்று நினைத்தேன்.
நீக்கு@கௌதமன் சார், நம்ம வீட்டில் ரங்க்ஸுக்குப் பிடிக்காத வஸ்து. போணி ஆகாது. இல்லைனா செய்து எ.பி.க்கு அனுப்பலாம். :( இதிலே கோதுமை மாவு+மைதா மாவு கலந்து மாவு பிசையணும். அநேகமாகக் கடைகளில் மைதா மாவு தான் (விலை குறைவு என்பதால்!) கசோடா, கசோடி இரண்டுக்கும் உள் பூரணம் ஒன்றே. கசோடாவில் காரம் அதிகம் இருக்கும். கசோடியில் காரத்தோடு கொஞ்சம் தித்திப்பும் இருக்கும். ஸ்டஃப்ட் பூரினு வைச்சுக்கோங்களேன். பின்னர் விபரமாக செய்முறைக்குறிப்புப் போடறேன். குழந்தைகள் இருந்தால் பண்ணினால் செலவு ஆகும். இப்போ நான் மட்டும் சாப்பிட வேண்டி இருக்கும். :(
நீக்குகௌ அண்ணா அக்கா சொல்லியிருக்கும் கசோடா பெரீயிசு...அது தட்டை போல பார்க்க இருக்கும் தட்டைக்குக் குத்தி விடுவது போல் இதற்கும். மற்ற கசோடிகள் உப்பி இருக்கும் உள்ளே பூரணத்துடன். நசிராபாத் கசோடா உப்பி இருக்காது. பொதுவாக மைதாவில் செய்வது. நான் வீட்டில் மைதா கோதுமை கலந்து செய்வது. கசோடி போலில்லாமல் காரம் இருக்கும். முன்பு செய்ததுண்டு தற்போது செய்வதில்லை. செய்தால் படம் எடுத்து குறிப்புகளுடன் அனுப்புகிறேன் கசோடி யும் சரி கசோடாவும்...இரண்டுக்குமே உள்ளே ஒன்றுதான் என்பதால் செய்யலாம்..
நீக்குகீதா
கீதாக்கா சொல்லிருக்காங்க பாருங்க அதேதான்....அக்கா குறிப்பு போடுறீங்களா!!! ஹப்பா மீ எஸ்கேப்...இப்ப எல்லாம்...படம் எடுக்கறது கூட கஷ்டமா இல்லை...ஆனா எழுதணும் பாருங்க அதுதான் ஹிஹிஹி
நீக்குகீதா
https://venkatnagaraj.blogspot.com/2015/02/blog-post_17.html// வெங்கட்டின் இந்தப் பதிவில் கசோடா பற்றிய விளக்கம் கருத்துரையில் கொடுத்திருக்கேன். கீழே பார்க்கவும். :)
நீக்குஜலேபா, ராஜஸ்தானில் நசிராபாதில் சாப்பிடணும். நசிராபாத் கசோடாவுக்குப் பெயர் போனது. கசோடிக்குக் கொள்ளுத் தாத்தா கசோடா. அதுவும் நசிராபாத் கசோடா ரொம்பப் பிரபலம். :))) அந்தக் கசோடாவோட இந்த இனிப்பான ஜலேபா தான் சரியான துணை. தால் பாட்டிக்குச் சூர்மா மாதிரி! ஆனால் மைதாமாவில் நான் கொஞ்சம் தயிர் சேர்ப்பேன். ஒரு சிலர் மாவு பொங்கி வரணும்னும் சொல்றாங்க. தயிர் சேர்த்துப் பிசைந்து இரண்டு மணி நேரம் வைத்துவிட்டுப் பின் பிழிவது உண்டு. இதுக்குனு மெஹந்தி இடும் கோன் கிடைக்குதே, அதைக் காலியாக மெஹந்தி இல்லாததாக வாங்கி வைச்சுக்கலாம். கடைகளில் சொல்லி வைச்சால் மெஹந்தி அடைக்காத கோனாகத் தருவாங்க. ஆனால் மொத்தமாக வாங்கறாப்போல் இருக்கும். :))))
விளக்கங்களுக்கு நன்றி.
நீக்கு//இல்லைனா செய்து எ.பி.க்கு அனுப்பலாம். // - பேசாம சொஜ்ஜியப்பம் செய்து மாமாவுக்குக் கொடுத்துட்டு, அதே படத்தை வைத்து கச்சோடி என்று சொல்லி எபிக்கு செய்முறை அனுப்பலாமே கீசா மேடம்...
நீக்குசென்னைக்கு முதல் முதல் நாங்க எல்லோருமாப் போனது 62-63 ஆம் ஆண்டுகளில். அண்ணாவுக்கும் தம்பிக்கும் திருமலையில் பூணூல் போட்டார்கள். அதற்குப் போயிட்டுத் திரும்பி வரும்போது சென்னையில் சில நாட்கள் தங்கினோம். போகும்போது மதுரை=விழுப்புரம்=திருப்பதி=திருமலை என்று போனோம். அப்போல்லாம் முன்பதிவுனு எல்லாம் இல்லையே! ஓடிப் போய் இடம் பிடிப்பது தான். நாங்களும் அப்போ அதில் சமர்த்தர்களாக இருந்தோமே! அதிலும் ஜன்னல் இடம் பிடிப்பதில்! அப்போ விஜயம் செய்த சென்னையில் முதலில் போனது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பெரியப்பா வீட்டில் இருந்து கிட்டே இருந்தது. பாரதியார் இருந்த வீட்டைப் பார்க்கணும்னு நான் துடிக்க யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. சில ஆண்டுகள் கழித்து நான் வங்கிப் பணியின் இன்டர்வியூவுக்கு வந்தப்போ பாரதியார் வீட்டைப் பார்த்தேன். அப்போ ஏமாற்றம் தான்.
பதிலளிநீக்குஓ! அப்படியா!! :((
நீக்கு//அப்போ ஏமாற்றம் தான்.// என்ன எதிர்பார்த்தீங்க? ஏன் ஏமாற்றம்? ஒருவேளை பாரதியார் எட்டிப் பார்ப்பார் என்று நினைத்தீர்களா?
நீக்குபாரதியார் வீட்டை மிக நன்றாகப் பராமரித்திருப்பார்கள் என நினைத்து ஏமாந்து போனேன். பின்னாட்களில் மாறிவிட்டதாய்ச் சொன்னார்கள். ஆனால் பெரியப்பா அங்கே இருந்து மதுரை போய்விட்டதால் திருவல்லிக்கேணி போகும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது மீசையை முறுக்கும் பாச்சுவைப் பார்க்கப் போவோம்.
நீக்குஅப்போ சென்னையில் மிருகக்காட்சி சாலை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி/மூர் மார்க்கெட்டை ஒட்டி அமைந்திருந்தது. அங்கேயும் போனோம். அங்கே உள்ள சின்ன ரயில்பெட்டியில் சுற்றி இருக்கோம். அங்கே இருந்த பெரிய மைதானத்தில் மத்தியானங்களில் சர்க்கஸ் நடக்கும். பெரும்பாலும் ரஷியர்கள் பங்கெடுத்த சர்க்கஸ். எனக்குத் தெரிந்து ஜெமினி சர்க்கஸும், கமலா த்ரீ ரிங் சர்க்கஸும் தான் இந்தியர்களால் நடத்தப்பட்டது என நினைக்கிறேன். இத்தனை பார்த்தும் எங்க அப்பா என்னை சர்க்கஸுக்கு மட்டும் அழைத்தே செல்லமாட்டார். யாரானும் அழைத்துச் செல்கிறேன் என்றாலும் அனுப்ப மாட்டார். நான் முதல் முதல் சர்க்கஸ் பார்த்தது நாங்க சிகிந்திராபாதில் இருந்தப்போ. எங்க குழந்தைகளுடன் சிகிந்திராபாதில் இருக்கையில் அங்கே நடந்த பெரிய கண்காட்சி ஒன்றுக்குப் போய்ப் பார்த்துட்டு மாலையில் நான் சர்க்கஸே பார்த்தது இல்லைனு சொன்னதால் எங்களை அழைத்துச் சென்றார். சிகிந்திராபாதில் வெளியே போய்விட்டு வரும் அலுப்பெல்லாம் தெரியாது. மழை பெய்தால் கூட இரவு நேரங்களில் மட்டும் பெய்யும். பகலில் பெய்து தொந்திரவு கொடுத்தது இல்லை. இப்போ எப்படினு தெரியலை! :))))
பதிலளிநீக்குஇரசனையான கருத்துரைக்கு நன்றி.
நீக்குநீச்சல் குளம் ஞாயிறு பதிவில் வந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ளதா?
பதிலளிநீக்குகுட்டிப் பாப்பாவுக்கு அதன் அண்ணா (?) ஏதோ ஊட்டுகிறான்.
இந்த இரண்டு குட்டிகளும் எங்காவது வாஷிங் மெஷினில் போய் மாட்டிக்கப் போகுதுங்க! பாவம்!
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேஜிஒய் அவர்களின் பாட்டைப் பாடிப் பார்த்துக்கொண்டேன். கற்பனாசக்தியில் வெளுத்துக் கட்டுகிறாரே! நல்லா இருக்கு பாடல்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகமலா ஹரிஹரன், நெல்லை தமிழன் இரண்டு பேரையும் காண முடியவில்லையே? நலம்தானே?
நீக்குநெல்லையுடைய ரெசிபி இந்த திங்கக்கிழமையும் வெளியாகாததால் எ பி யுடன் டூ காய் விட்டுட்டார். சந்தித்ததும் சிந்தித்தும் தளத்தில் கருத்து இட்டுள்ளார்.
நீக்குJayakumar
அடுத்த திங்க கிழமை கமர்கட்டு ரெசிபி போட்டால் நெல்லை பழம் விட்டுடுவார்.
நீக்குJayakumar
நெல்லை பயங்கரமான வேலை மும்முரத்தில் இருப்பதாகச் செய்தி அனுப்பி இருந்தார். அநேகமாக நாளைக்குக் கொஞ்சம் பளு குறையலாம். கமலாவிற்கு மறுபடி உடம்பு சரியில்லையோ? நானும் கேட்க நினைச்சேன்.
நீக்குவேலை ரொம்ப அதிகம் சார்... மற்றபடி உடல் நிலையெல்லாம் பிரச்சனை இல்லை.
நீக்குரெசிப்பி வருவதற்கும் எபிக்கு வருவதற்கும் சம்பந்தம் இல்லை. இருந்த வெகு குறைந்த நேரத்தில், சட்னு பின்னூட்டம் போடவேண்டியிருக்கு.
//முடியும்.// அடுத்த வாரம் விளக்கவும்.
பதிலளிநீக்குஎளிமை.
நீக்குஅதாவது எளிமை என்பதை எளிமையாக விளக்கியுள்ளேன்!!
நீக்குபாட்டு ரொம்ப நன்றாக இருக்கிறது. கேஜிவொய் அசத்துகிறார்!!!
பதிலளிநீக்குகௌ அண்ணா நான் இப்ப கொஞ்சம் பாடுவது சிரமமாக இருக்கிறது. சிரமம் சரியானதும் பாடி அனுப்புகிறேன்.
கீதா
ஓ கே - நன்றி.
நீக்கு1. உங்க வீட்டில் கொலு வைப்பது உண்டா? அதற்கு உங்க வீட்டில் மனைவிக்கு உதவி செய்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்கு2. அவங்களே என்ன வேணா பண்ணிக்கட்டும்னு இருப்பது நல்லதா? உதவி செய்வது நல்லதா?
3. கொலுவுக்கு தினமும் சுண்டல் உண்டா? மாற்றி மாற்றிப் பண்ணுவாங்களா?
4. கொலுவுக்கு வருபவர்களின் பாடல்களைக் கேட்டுக் காது புளித்துப் போயிருக்கா? ரசிச்சிருக்கீங்களா?
5. கொலுவுக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள் பற்றி உங்க கருத்து என்ன?
6. முன்னெல்லாம் வெற்றிலை, பாக்கு, பழத்தோடு முழுத்தேங்காய்+ரவிக்கைத் துணி தான் வைச்சுக் கொடுப்பாங்க. இப்போல்லாம் ரவிக்கைத் துணி 100 ரூ 150ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தாலும் சிலர் திரும்ப நம்மிடமே கொடுத்துடறாங்க! அது சரியா? அல்லது நாம் ரவிக்கைத்துணி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதா?
7. கொலு வைப்பது எப்போது ஆரம்பித்திருக்கும்?
8. நீங்கள் பார்த்ததிலேயே யார் வீட்டு கொலு நன்றாய் இருக்கும்?
9. கொலுவில் கீழலங்காரங்கள் எல்லாம் செய்வது உண்டா? அதற்கு தினமும் ஒரு கருத்துனு எடுத்துப்பீங்களா? அல்லது வெறும் நகரம், கோயில், குளம், மலைகள் மட்டுமே இடம் பெறுமா?
10.சின்ன வயசில் உங்கள் சகோதரிகளுக்குத் துணையாகக் கொலுவுக்குப் போனது உண்டா? அங்கே உங்களுக்கும் சேர்த்துச் சுண்டல் கிடைச்சது உண்டா?
கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம்.
நீக்கு//கொலுவுக்கு வருபவர்களின் பாடல்களைக் கேட்டுக்// பல சமயம் மற்ற விருந்தினர்கள் தாமாகவே செல்வதற்கு அவை உதவுவதில்லையா?
நீக்குபல சமயங்களிலும் நன்றாகப் பாடுபவர்களின் பாடலைக்கேட்க விடாமல்/முடியாமல் சுற்றி இருக்கிறவங்க சத்தமாய்ப் பேச ஆரம்பிச்சுடுவாங்க! :(
நீக்குவீட்டிலும் சரி பொதுவெளியிலும் சரி நட்புகளுக்கு இடையிலும் சரி வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பதிலளிநீக்குசென்னையில் முதன்முதலில் சென்றது மயிலை கோயில்! அதன் பின் மஹாபலிபுரம்.
மழைக்கு - சாயா கூட ஏதேனும் கடிக்க இருந்தால் சுகம்.
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎவ்வளவோ எழுத விஷயம் இருக்கும் (சேர்ந்திருக்கும்). இன்னும் எழுதவில்லையே துளசிதரன் சார்
நீக்குகேள்விகளும் பதிலும் மிக அருமை.
பதிலளிநீக்குமழையை ரசிக்கபிடிக்கும் எப்போதும். எனக்கு எதுவும் சாப்பிட தோன்றியது இல்லை. என் கண்வருக்கும், குழந்தைகளுக்கும் சூடாய் பஜ்ஜி , பக்கோடா எல்லாம் செய்து கொடுப்பேன் அவர்கள் மகிழ்வார்கள்.
சிறு வயதில் அம்மா செய்யும் அனைத்து கீரைகளும் பிடிக்கும்.
இப்போது உடலுக்கு ஒத்துக் கொள்ளும் கீரை மட்டும் .
கேஜிஒய் அவர்கள் மாற்றி அமைத்த பாடல் நன்றாக இருக்கிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசென்னைக்கு 10 வது பள்ளி விடுமுறையில் முதன் முதலில் போனேன். வழக்கம் போல் சென்னையில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம் அழைத்து போனார்கள் என் சகோதரி. என் அப்பாவோடு ஸ்வாமி தயனந்த சரஸ்வதி அவர்களின் கீதை உரை கேட்க போனோம்.
பதிலளிநீக்குஆஹா ! சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம்.
நீக்குகீரைவகையில் எல்லாமே பிடிக்கும்.
பதிலளிநீக்குமழை நாளில் இஞ்சி ரீ உடன் மொறு மொறுக்கஏதாவது இருந்தால் பிடிக்கும்.
சென்னையில் முதல்பார்த்த இடம் வள்ளுவர் கோட்டம்.
முதல் படம் எனக்கு நீந்தத்தெரியாது குளிக்க விருப்பம்:) மகள் நன்கு நீந்துவாள்.
இரண்டாவது- அட..இதையும்தான் சாப்பிட்டு பாரேன் என்ன சுவை.
மூன்று- நாங்கள் தப்பி விட்டோம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு