சனி, 16 அக்டோபர், 2021

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஊராட்சி தலைவராக வெற்றி.

 

ஓட்டளிக்க மூதாட்டியை சுமந்து சென்ற சப் - இன்ஸ்பெக்டர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. சங்கனாபுரத்தில் மூதாட்டி ஒருவரை மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஸார் தோளில் சுமந்து சென்று ஓட்டளிக்க உதவி செய்தார்.

= = = =  

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று சாதனை


தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.சாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

சாருகலா கோவை நேஷனல் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். தந்தை ரவி சுப்பிரமணியன் செங்கல் சூளை நடத்தி வருகிறார். தாய் சாந்தி பூலாங்குளம் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இளவயதிலேயே ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்வான சாருகலாவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.

இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுள்ள ஸாருகலாவிற்கு வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.

= = = =

90 வயதில் பஞ்., தலைவராக வெற்றி பெற்ற பாட்டி; எதிர்த்த வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 90 வயதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மூதாட்டி. மகிழ்ச்சியில் மூதாட்டியை தோளில் சுமந்து ஆதரவாளர்கள் ஊஞ்சலாடினர்.


தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (அக்.,12) காலை முதல் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். நேற்று வெளியான தேர்தல் முடிவில் பெருமாத்தாள் 2ம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களையும் மூதாட்டி டெபாசிட் இழக்க செய்தார். பெருமாத்தாளின் மகன் கே.எஸ்.தங்கபாண்டியன், இதுவரை தொடர்ந்து 4 முறை சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இந்த முறை சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தங்கபாண்டியன், கீழநத்தம் ஒன்றிய வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமக்கு பதிலாக தமது தாயாரை நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் தங்கபாண்டியன்.

= = = =


திருவனந்தபுரம்:கேரளாவில் 'பெட்ரோல் பங்க்'கில் பணிபுரியும் நபரின் மகள், கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


கேரளாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ராஜகோபாலன். இவரது மகள் ஆர்யா, நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான கான்பூர் ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., பிரிவில் சமீபத்தில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுஉள்ளதாவது:ஆர்யா ராஜகோபாலனின் எழுச்சியூட்டும் கதையை இதில் பகிர்கிறேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலனின் மகளான ஆர்யா, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்துஉள்ளார். இது எங்களை பெருமைப்பட வைத்துஉள்ளது. ஆர்யாவுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ் அவர், 'தன் தந்தை ராஜகோபாலை மட்டும் அல்லாமல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துறையைச் சேர்ந்த அனைவரையும், ஆர்யா பெருமைப்பட வைத்து உள்ளார்' என, குறிப்பிட்டு உள்ளார்.

27 கருத்துகள்:

  1. அனைத்தையும் இதழ்களில் வாசித்தேன். போற்றத்தக்கவர்கள். பெருமைப்படவேண்டிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  2. அது என்னமோ ஆர்யா என்ற பெயர் உள்ள பெண்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

    திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் என்ற பெண்.

    IIT கான்பூர் சேர்ந்த திருவனந்தபுரம் ஆர்யா ராஜகோபாலன்.

    EMS நம்பூதிரிபாட் மனைவியார் ஆர்யா அந்தர்ஜனம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்படியா !! விவரங்களுக்கு நன்றி. ஆதி சங்கரரின் அம்மா பெயர் ஆர்யாம்பாள் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
  3. 22-ம் 90-ம் வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. 90 வயதில் ஊராட்சி வேலையா? என்ன நிரூபிக்கப் பார்க்கிறார்கள்?
    ஓட்டு போட்ட மக்களுக்கு அறிவு சுத்தமாக இல்லை என்று தோன்றுகிறது.
    தேர்தல் ஆணையத்துக்கு அதனினும் அறிவு குறை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் இந்நாட்டு மன்னர் / மன்னி.

      நீக்கு
    2. அவர் தங்கபாண்டியன் உடைய பினாமி. அந்த தொகுதி பெண்களுக்கானது. ஆகவே அவருடைய அம்மாவை நிறுத்தி உள்ளார். அவர் வேறு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

      நீக்கு
    3. என்னவோ கூத்தடித்துக் கொண்டிருக்கின்றார்கள்...

      நீக்கு
    4. அப்பாதுரை ஜி உங்க ஊர்ல கூட தினமும் காலைல ப்ரசிடென்ட் கண்ணு முழிச்சாரா? கட்டில்லருந்து எழுந்து கால்களைத் தரைல ஊன்றி எழுந்தாரா? பல்லு தேய்க்க முடிஞ்சுச்சானு பார்த்து, அதுக்கப்புறம்தான் ஹப்பா இன்னிக்கு எழுந்துட்டாருன்னு நியூஸ் வெளில வருதாமே!!!!!!!!!

      இங்க அந்தப் பாட்டி எங்க? அவங்க மகன் தான் முடிவு செய்வார்....இவர் பெயரில் தான் அவ்வளவுதான்..அவர்தான் வேற ஒன்றில் ஜெயிச்சுருக்காரே.

      கீதா

      நீக்கு
    5. அந்த வேற ஒன்று..ஹிஹி.... எங்க ஊர் கீழநத்தம்... எங்க போய்ச்சொல்ல இந்தக் கூத்தை

      நீக்கு
    6. பினாமியா? ஓகே. இது ஒண்ணும் புதுசில்லே..
      @கீதா: எங்க ஊர்ல ஒரு zombieய தான் பிரஸிடெண்டுனு சொல்றோம்.. அதுக்காக இதை ஒப்புக்கணுமா?

      நீக்கு
  6. உள்ளாட்சி அமைப்புகளுக்குள் இளரத்தம் பாய்வது நல்லதே!..

    ஆயினும்,
    உண்மையில் வெற்றி பெற்றிப்பவை அனகோண்டாக்களா?..
    ஆட்டுக் குட்டிகளா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டுக்குட்டி தோல் போர்த்திய அனகோண்டாக்கள் என்று சட்னு சொல்ல முடியலை. ME படிக்கும் மாணவியும் வெற்றி பெற்றிருக்கிறாரே..ஊருக்கு நல்லது செய்வார் என்று நம்பலாம்

      நீக்கு
  7. அனைத்துச் செய்திகளுக்கும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 'அனைவரில்' பதிவைப் படிக்கின்ற என்னைப் போன்றவர்களும் உண்டா?

      நீக்கு
  8. நற்செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. உள்ளாட்சித் தேர்தலில் இளசு பெரிசு என்று வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    பெட்ரோல் பங்க்கில் பணிபுரிபவரின் மகள் கான்பூர் ஐஐடி செய்தி தெரிந்த ஒன்று என்றாலும் வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எல்லா நற்செய்திகளுக்கும் மிக நன்றி. கான்பூர் ஐஐடி சேர்ந்திருக்கும் மாணவி வாழ்வில் நல்ல வெற்றி பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து செய்திகளும் மிக அருமையான செய்திகள்.
    அனைவரைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!