புதன், 13 அக்டோபர், 2021

கொலு வைப்பது எப்போது ஆரம்பித்திருக்கும்?

 

கீதா சாம்பசிவம்: 

1. உங்க வீட்டில் கொலு வைப்பது உண்டா? அதற்கு உங்க வீட்டில் மனைவிக்கு உதவி செய்திருக்கிறீர்களா?

$ உண்டு.உண்டு. மரப்பலகை, 20 லைட் டின், என்று ஆரம்பித்து slotted angle, LED serial set வரை.

# ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் கொலு வழக்கமில்லை. 

$ எங்கள் குடும்பமும் சரி, மனைவி குடும்பமும் சரி, கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என்பதாலும், வசதிக் குறைவு என்பதாலும், கொலு என்பதெல்லாம் எங்களைப் பொருத்த வரை luxury லைப். பணக்காரர்கள் வீட்டில்தான் கொலு வைப்பார்கள் என்று நாங்கள் நினைத்தது உண்டு.  

2. அவங்களே என்ன வேணா பண்ணிக்கட்டும்னு இருப்பது நல்லதா? உதவி செய்வது நல்லதா?

$ நல்லதில்லை. பண்டிகை காலத்தில் சுளுக்கு காயம் எல்லாம் மனக்கஷ்டங்களுக்கு இடம் கொடுக்கும்.

# உதவி செய்யாதிருக்க கல் மனசு வேண்டும்.

3. கொலுவுக்கு தினமும் சுண்டல் உண்டா? மாற்றி மாற்றிப் பண்ணுவாங்களா?

$ சுண்டல்,புட்டு,ஸ்வீட் என்று மாற்றி செய்வதுண்டு.

4. கொலுவுக்கு வருபவர்களின் பாடல்களைக் கேட்டுக் காது புளித்துப் போயிருக்கா? ரசிச்சிருக்கீங்களா?

$ 'சிலர் இப்படியும் பாடுவர்களா என்ன!' என்று பாடி நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பது உண்டு.

# வெகு சிலர் அக்கம் பக்கத்து கொலுவில் நன்றாகப் பாடக் கேட்டதுண்டு.

5. கொலுவுக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள் பற்றி உங்க கருத்து என்ன?

$ ஒரு செலவுத் திட்டம் வைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் கிழவிகள் வரை பரிசுகள் உண்டு. வீட்டுக்கு வந்தவர்கள் சந்தோஷம் நம் சந்தோஷம்.

# கொடை எப்போதும் நல்லது.

6. முன்னெல்லாம் வெற்றிலை, பாக்கு, பழத்தோடு முழுத்தேங்காய்+ரவிக்கைத் துணி தான் வைச்சுக் கொடுப்பாங்க. இப்போல்லாம் ரவிக்கைத் துணி 100 ரூ 150ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தாலும் சிலர் திரும்ப நம்மிடமே கொடுத்துடறாங்க! அது சரியா? அல்லது நாம் ரவிக்கைத்துணி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதா?

$ சமீபத்திய வருடங்களில் tray fancy items தான் கொடுத்தோம்.

# திருப்பிக் கொடுப்பது சரியல்ல. தற்போதைய வாழ்க்கை முறையில் தவிர்ப்பது தவறில்லை.

7. கொலு வைப்பது எப்போது ஆரம்பித்திருக்கும்?

# கண்டு பிடிக்க வழியில்லை.

& மார்க்கண்டேய புராணத்தில், எண்பத்து மூன்றாவது அத்தியாயம் தொடங்கி, தொண்ணூற்று ஒன்றாவது அத்தியாயம் வரை, தேவி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. அந்த ஒன்பது அத்தியாயங்களிலும் கூறப்பட்டுள்ள மகாத்மியங்களை நவராத்திரி ஒன்பது நாட்கள் - கொலு வடிவில் வைத்து, மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரின் புகழ் பாடிப் போற்றி வணங்கும் வழக்கம் கி மு காலத்திலேயே ஆரம்பித்திருக்கலாம்.  

8. நீங்கள் பார்த்ததிலேயே யார் வீட்டு கொலு நன்றாய் இருக்கும்?

$ கடலூர் வண்டிப்பேட்டையில் பொற்கொல்லர் ஒருவர் வீட்டில் விமர்சையாக வைத்திருப்பார்கள் திருவனந்தபுரம் கோவிலுக்குப் போகும்போது பார்த்திருப்பீர்கள் கடிகாரத்தில் அனிமேஷன் . அது மாதிரி நிறைய...

# கடலூர் பிருந்தாவன் ஹோட்டல் உரிமையாளர் தங்கராஜ முதலியார் வீட்டுக்கொலு அந்த நாட்களில் பிரசித்தம்.

& மேலே கூறப்பட்டுள்ளவைகளை ஆமோதிக்கிறேன். (யார் வீடு என்ற விவரங்கள் எல்லாம் தெரியாத சிறுவனாக நான் இருந்த காலம் அது.) 

9. கொலுவில் கீழலங்காரங்கள் எல்லாம் செய்வது உண்டா? அதற்கு தினமும் ஒரு கருத்துனு எடுத்துப்பீங்களா? அல்லது வெறும் நகரம், கோயில், குளம், மலைகள் மட்டுமே இடம் பெறுமா?

$ Zoo, பார்க், கோயில் எல்லாம் உண்டு. பல சமையம் குழந்தைகளின் science exhibits இடம் பெறும்.

10. சின்ன வயசில் உங்கள் சகோதரிகளுக்குத் துணையாகக் கொலுவுக்குப் போனது உண்டா? அங்கே உங்களுக்கும் சேர்த்துச் சுண்டல் கிடைச்சது உண்டா?

$ போனதும் சுண்டல் சாப்பிட்டதும் உண்டு  இஞ்சி, சுக்கு என்ற சகோதரிகளின் உண்மைப் பெயர் கண்டு பிடியுங்களேன்.

 # சகோதரி சென்று வந்து பகிர்ந்து கொண்டதுண்டு.

& அக்காவுடன் சென்ற கொலு வீடுகளில் - அக்காவுக்கு எல்லாம் கொடுப்பார்கள். எனக்கு சுண்டல் மட்டுமே. எனக்குக் கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய்விடும். வித்தியாசமான விநியோகப் பண்டங்களை மட்டும் (ஸ்வீட், அரிசிமிட்டாய், புட்டு போன்றவை) இரசித்துச் சாப்பிடுவேன்.  

நெல்லைத்தமிழன்: 

1. இசையில் கர்னாடிக்தான் சூப்பர், கிராமத்து இசைதான் சூப்பர் என்றெல்லாம் பேதம் உண்டா?  

 $ அவரவர் விருப்பம் வேறுபடலாம்.

# ஒவ்வொருவருக்கு  ஒருவகை இசை பிடித்திருப்பது இயல்பு.  "இசையில்" உயர்வு எது  தாழ்வு எது   என்பது ஒட்டு மொத்த மெஜாரிட்டியை வைத்துச் சொல்வது சரியாக இராது. சொற்களில் பல்கூசவைக்கும் பிரயோகங்கள் சாஸ்திரிய இசையிலும் இருந்தாலும் மொழி தெரியாததால் பெரிதாகக் கஷ்டப்படுத்துவதில்லை.  இந்த வசதி மெல்லிசையில் கிடையாது.

2. Gadgets னால நீங்க அனுபவித்த சூப்பர் உபயோகங்கள், மோசமான experiences என்ன? 

$ gadgets என்றால் phone மட்டும் தானா? Stapler, stapler remover, cello-tape dispenser இப்படி எத்தனை எத்தனையோ உபயோகமான பொருள்கள் பெருகிவிட்டன; உபயோகமாகவும்  இருக்கின்றன.

# சூப்பர் உபயோகம் எல்லாருக்கும் கிட்டியிருப்பவைதான்.  மோசமான அனுபவம் அரைநிர்வாண அணங்குகள் இரகசிய சம்பாஷணைக்கு விடும் அழைப்புகள். 

& நான் ஒரு gadgets பிரியன். பல gadgets என்னிடம் உள்ளன. நேரம் கிடைத்தால் அவை பற்றி தனி பதிவு ஒன்று போடுகிறேன். 

3. ஆன்லைன்லயே எல்லாமே வாங்கும் காலமாகி வருகிறதே  அதில் பெர்சனல் டச் மனித தொடர்பு குறைந்துவிடுகிறதா?

 $ ஒரு பொருள் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுக்கப் பட்டு, அதன் தரம் எதிர்பார்த்தபடி இருந்தால், online சிலாகிக்கப்பட வேண்டிய விஷயம். வெங்காயம் வாங்குவது, printing paper, battey cell இவற்றில் எந்த மாதிரி personal touch எதிர் பார்க்க முடியும்? Online buying embarrassment தவிர்க்கிறது.

# விற்பனைச் சிப்பந்தி - வாங்குபவர் என்ற நிலையில் நெருக்கமான உணர்வுகள் மிக அபூர்வம்.

== = = =

நீங்கள் கேட்ட கேள்விகளே அதிகம் இடம் பெற்றதால், இந்த வாரம் எங்கள் கேள்விகள் எதுவும் இல்லை. 

= = = = 

மின்நிலா 073 இதழ் link :  இங்கே சொடுக்கவும் 

= = = = 

படம் பார்த்துக் கருத்துரையுங்கள் :

1) 


2) 

3) 
= = = =

74 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

  எல்லோரும் எல்லா நாட்களும் மன அமைதியுடனும்,
  உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம். இந்த வாரம் கொலு வாரம் என்பது நிரூபணம்
  ஆகிவிட்டது.

  பொதுவாக நவராத்திரி நாட்கள்
  சுகமானவை.
  காலையில் பூஜை. மாலையில் அழைத்தவர்கள் வீட்டுக்கு செல்வது. மறு நாள் அவர்கள்
  நம் வீட்டுக்கு வருவது ,கோவில் சென்று சக்தி தரிசனம்,
  அங்குள்ள அலங்காரங்கள், கண்காட்சிகள்,

  புதிய ஆடைகள் வாங்குவது என்று செல்லும் ஆனந்த நாட்கள்.

  எப்போதுமே நம் வீட்டு சுண்டலை விட மற்றவர்கள்
  வீட்டு சுண்டலுக்குத் தனி மகிமை:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எப்போதுமே நம் வீட்டு சுண்டலை விட மற்றவர்கள்
   வீட்டு சுண்டலுக்குத் தனி மகிமை:)//

   ஹா..  ஹா..  ஹா...   சுண்டல் மட்டுமா...  டீவி ப்ரிட்ஜ் மற்ற திங்கற சமாச்சாரங்கள் என்று அனைத்துக்கும் பொருந்துமே...

   நீக்கு
  2. //நம்ம வீட்டுச் சுண்டலை விட// - உண்மை. அதைவிட, மனைவி சமைக்காமல் ஒரு வேளை கணவன் சமைத்துக்கொடுத்தால் அதில் திருப்தி அதிகமாக இருக்கும். எனக்கெல்லாம் ஐந்தாவது நாள் அக்கடான்னு விடுதலை பெற்ற உணர்வைத் தரும்.

   நீக்கு
 3. ஆன்லைனில் டிரெஸ் வாங்குவது (நானல்ல... பெண், அவள் அம்மாவின் விருப்பம்லாம் கேட்டு) ரொம்பவே உபயோகம். பொருட்களை உடனே ரிட்டர்ன் செய்யும் வசதி, பொருத்தமா இருக்கா என ஆலோசிக்கும் வசதி, என்று பல உபயோகங்கள். கடைகள் ஏறி இறங்கவேண்டாம்.

  என் மனைவிக்கு இரண்டு மூன்று புடவைகள் பரிசளிக்க, வெவ்வேனு sourceல ஆன்லைன்ல பதினைந்து புடவைகள் தருவித்து செலெக்ட் செய்தோம்.

  தூக்கிட்டு வரவேண்டாம் என்பதால் மளிகைப் பொருட்களும் லிஸ்ட்டில் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆன்லைனில் வாங்குவதில் ஒரு மைனஸ்.. படத்தில் நீங்கள் பார்க்கும்போது ஒரு நிறத்தில் இருக்கும். நேராய்ப் பார்க்கும்போது ஒரு நிறத்தில் இருக்கும்!

   நீக்கு
  2. ஆமாம். துணி டெக்சரும் வேறுபடும். அதனாலென்ன ரிட்டர்ன்.... சமீபத்தில் வீட்டில் உபயோகிக்க டிரௌசர்கள் பதினைந்து வாங்கி ஐந்து எடுத்துக்கொண்டேன் (வெவ்வேறு வெண்டார்)

   நீக்கு
 4. திருமணமான பிறகு , கொலு வைத்துவிட்டு வீட்டைப்
  பூட்டி செல்லக் கூடாது என்பது எழுதப் படாத ரூல்!!

  தோழிகள் அழைத்துப் போக முடியாத போது பிறகு போய்
  மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொண்டதும் உண்டு,

  முடிந்த வரை நல்ல ரவிக்கைத் துண்டுகள் தான் கொடுத்திருக்கிறேன்.

  ப்ளாஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்
  கொடுப்பது பிடித்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதெல்லாம் பெரும்பாலும் ரவிக்கைத்துண்டுகள் கொடுப்பதில்லை.  பரிசுப்பொருட்கள்தான்!

   நீக்கு
  2. இந்த ரவிக்கைத் துண்டுகள் create செய்த மனவருத்தங்கள், சந்தேகங்கள், தன் மன அழுக்குகளைக் காண்பிக்கும் தருணங்கள் என பலவற்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

   சமீப காலத்தில் ஜிகினாத் தட்டுக் குப்பைகளையும் பார்த்து எரிச்சல் அடைந்திருக்கிறேன்.

   நீக்கு
  3. @நெல்லைத் தமிழன், ஆமாம் அளவு குறைவான பிட் துண்டுகளைக் கொடுத்து விடுவார்கள். நாம் அது போல செய்யவேண்டாம். உறவுகள் அனைவரும் சென்னையில் இருப்பதால். நல்ல தரமான ரவிக்கைகளைக் கொடுப்பது தான் நன்மை.

   நீக்கு
  4. ரவிக்கைத்துணி ஒண்ணும் குறைச்சலான விலையில் இருப்பதில்லை. குறைந்த பட்சமாக 100 ரூபாயில் இருந்து அதிக பட்சமாக 150 ரூபாய் வரை வைச்சுக்கொடுக்கும் ரவிக்கைத்துணிகள் இருக்கின்றன. பெரும்பாலும் கலம்காரி ரவிக்கைத்துணிகளை யாரும் மறுப்பதில்லை. அதுவும் 100 ரூபாய்க்குக் குறைந்து கிடையாது. என்றாலும் ரவிக்கைத்துணி வைச்சுக் கொடுத்தால் மட்டமாகப் பார்க்கும் நபர்களே அதிகம். என்னைப் பலரும் மறைமுகமாகச் சொல்லுவார்கள். ஆகவே சொந்தம் தவிர்த்து மற்றவர்க்குக் கொடுப்பதில்லை. பித்தளை, வெண்கலங்களில் பயன்படும்படியான தட்டு, விளக்கு, விக்ரஹம், பூஜைப் பொருட்கள் என மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு கொடுத்துவிடுவேன்.

   நீக்கு
 5. இந்த ஊரில் வந்த புதிதில் ஒரு பிராண்ட்தான் 10 சதம் டிஸ்கவுன்டில் மருந்துகளைத் தந்தார்கள்... அப்புறம் ஆன்லைன் வியாபாரம் அதிகமாகவும் வளாக பார்மசியே 20 சதம் டிஸ்கவுன்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

  என் மகன், அதுல என்ன சேமிச்சுடுவீங்க.. 150-200 ரூபாயா என்று கேட்கிறான். ஹா ஹா

  நேர A2B போய் ஸ்வீட்ஸ், காரம் வாங்கினா MRPல 120-180ரூ என சார்ஜ் பண்ணுவான் ஆன்லைன் ஆர்டரிங்கில் அதுவே 70-80 ரூபாய்க்குக் கிடைக்கிறது, ஆட்டோ செலவு, கொரோனா ரிஸ்க் இல்லாமல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆட்டோ செலவு, கொரோனா ரிஸ்க் இல்லாமல்.//

   உண்மைதான். தமிழகத்தில் அம்மா பார்மஸி, மற்றும் மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் விலை குறைவாகக் கிடைக்கும்.

   நீக்கு
  2. I use PharmEasy mobile app for ordering medicines and other health related items.

   நீக்கு
  3. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துக்கடைகளில் மிக மிகக் குறைந்த விலைக்கு எல்லா மருந்துகளும் கிடைக்கின்றன. சில மருந்துகள் அதே பெயரில் கிடைத்தாலும் பெரும்பாலும் generic medicines. No side effects.

   நீக்கு
  4. நம் மக்களுக்கு இதன் பயன்பாடு பெரிதும் தெரிவதில்லை. அதே போல் எல் ஈடி பல்புகளும் மத்திய அரசால் விநியோகிக்கப்பட்டுத் தரம் குறைக்காமல் குறைந்த விலையில் மின்சார வாரியம் வாயிலாக விற்கப்படுகின்றன. ஆனால் இதுவும் யாருக்கும் தெரியாது. மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று மட்டும் சொல்லுவார்கள். மீனவர்களுக்காகவும் பற்பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறது மத்திய அரசு. இதைக் குறித்து "விமரிசனம்" பதிவாளர் காவிரி மைந்தன் கூடப் பகிர்ந்திருக்கிறார்.

   நீக்கு
 6. முதல் படம்.
  இந்த சின்னப் பசங்களை விளையாட்டுக்குக்
  கூப்பிடலாமா?
  இரண்டாவது படம்,

  ராத்திரி நேரம் நடனமாட வந்திருக்கும் நாரீமணியே.
  இது எங்கள் மீட்டிங்க். நீ கிளம்பு.

  மூன்றாவது ,
  எத்தனை தடவை தூக்கிப் போட்டாலும்
  வந்துவிடுகிறாயே:)

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதியும் மகிழ்ச்சியும் பெருகிடப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. கொலு என்பதே பெண்களுக்கானது.

  கொண்டுவிடும் ஆண்களுக்கு சட்டுப்புட்டென்று சுண்டலைக் கொடுத்து அனுப்பிவிட மாட்டார்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே! சென்ற ஆண்டு காலமான என் அண்ணன் அடிக்கடி கூறியது: " ஆண்களையும் கொலுவுக்கு அழைக்கவேண்டும். வீட்டு ஆண்கள் வெளி ஆண்களுக்கு தாம்பூலம் / சுண்டல் கொடுக்கும்போது - ஒரு கர்சீப் & விபூதி கொடுக்கவேண்டும்! "

   நீக்கு
 9. கொலு பற்றிய என் கேள்விகளுக்கு சுவாரசியமாகப் பதில் சொன்ன # $ & மூன்று ஆசிரியர்களுக்கும் என் நன்றி. $ இந்த வாரக் கேள்வி, பதிலில் அதிகம் பங்கெடுத்துக் கொண்டிருப்பதால் கொலு அவருக்கு சுவாரசியமான ஒரு பண்டிகை என நினைக்கிறேன். மற்றவற்றிற்குப் பின்னர் வரேன். மத்தியானமா!

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 11. கேள்விகள் அதற்கான பதில்கள் சுவாரசியம்!

  போனதும் சுண்டல் சாப்பிட்டதும் உண்டு இஞ்சி, சுக்கு என்ற சகோதரிகளின் உண்மைப் பெயர் கண்டு பிடியுங்களேன்.//

  ஹாஹா ஒரு சகோதரியின் பெயர் மட்டுமே தெரியும் நம் ஸ்ரீராமின் அம்மா!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 10. சின்ன வயசில் உங்கள் சகோதரிகளுக்குத் துணையாகக் கொலுவுக்குப் போனது உண்டா? அங்கே உங்களுக்கும் சேர்த்துச் சுண்டல் கிடைச்சது உண்டா?

   $ போனதும் சுண்டல் சாப்பிட்டதும் உண்டு இஞ்சி, சுக்கு என்ற சகோதரிகளின் உண்மைப் பெயர் கண்டு பிடியுங்களேன்.//

   இதுக்குத்தா சும்மா சொன்னேன்...அவர் கேட்டிருந்தது இஞ்சி சுக்கு எனும் இரு சகோதரிகளின் உண்மைப் பெயர் கண்டு பிடிக்கச் சொல்லி....

   அதுக்கு உங்கள் சகோதரிகளில்....என்பதற்கான சும்மா ஒரு கருத்து ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. சகோதரிகளின் பெயர் லா ளா என்று முடியும்.

   நீக்கு
 12. & அக்காவுடன் சென்ற கொலு வீடுகளில் - அக்காவுக்கு எல்லாம் கொடுப்பார்கள். எனக்கு சுண்டல் மட்டுமே. எனக்குக் கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய்விடும். வித்தியாசமான விநியோகப் பண்டங்களை மட்டும் (ஸ்வீட், அரிசிமிட்டாய், புட்டு போன்றவை) இரசித்துச் சாப்பிடுவேன். //

  எங்கள் உறவினர் ஒருவர் சொல்லுவார்...எவ்வளவு கஷ்டப்பட்டு மனைவியை, பெண் குழந்தைகளை அழைத்துச் செல்கிறோம் ஆனா நம்மைக் கண்டு கொள்வதே இல்லை. பெண்கள் மட்டும்னு ஆவது சொல்லிடலாம். ஆனா நம்ம பெண்கள் நம்ம துணை இல்லாம போறதும் இல்லை. ஸோ கஷ்டப்பட்டு கூட்டிக் கொண்டு வரும் ஆண்களுக்கு அட்லீஸ்ட் ஒரு கர்சீஃபாவது (ஆண்கள் பயன்படுத்தும் கர்சீஃப்) கொடுக்கலாமே. அல்லது ஒரு பேனா 10 ரூ பால் பென் போதும், வெத்தலை பாக்கு பழத்தோடு. அம்மன் கோயில் குங்குமம் பேக்கட், ஏன் ஆண்கள் குங்குமம் பயன்படுத்த மாட்டாங்களா என்ன?!!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. பிறந்த ஊரான கடலூரையும் 51 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற திருவனந்தபுரத்தையும் ஒரு சேர பதிலில் கண்டபோது மகிழ்ச்சி உண்டாகியது. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. கடலூர் ரெட்டி சத்திரத் தெருவில், ஒரு குருக்கள் வீட்டில் குடியிருந்தோம். அந்த அர்ச்சகர் வீட்டில் என் சம வயது பையன் ஒருவன் ஜெயகுமார் என்ற பெயர். பின்னர் அந்த ஜெயகுமார் நான் பணி புரிந்த அசோக் லேலண்ட் நிறுவனத்திலேயே வேலையில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏழாயிரம் பேரில் எப்படி அவரைக் கண்டுபிடிப்பது?

   நீக்கு
 14. ஒரு சிறு திருத்தம். கடலூரில் வண்டிப்பாளையம் தான் உள்ளது.  நீங்கள் கம்மியம் பேட்டையையும் வண்டிப்பாளையத்தையும் சேர்த்து வண்டிப்பேட்டை ஆக்கி விட்டீர்கள்.  

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் காலை வணக்கம். நவராத்திரி ஸ்பெஷல் கேள்வி பதில் மற்றும் ஆன் லைன் ஸ்பெஷல் கேள்வி பதில்கள் சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 16. எங்கள் இளம் வயதில் மற்றவர் வீடுகளுக்கு நவராத்திரி விசிட் பண்ணும் பொழுது எங்களோடு எங்கள் மாமா பையன்கள் யாராவதுதான் துணைக்கு வருவார்கள். இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம் என்று நினைத்த எங்கள் சகோதரர் வர மாட்டார். எங்கள் மாமா பையன்களின் ஒருவன் உள்ளே வராவிட்டாலும்,"மாமி எனக்கும் ஒரு பொட்டலம் சுண்டல்" என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதோடு, சுண்டல் உப்பு குறைச்சல், இன்னும் கொஞ்சம் போட வேண்டும்" என்று அபிப்ராயம் வேறு சொல்லுவான். "நல்ல வேளை, சொன்னயேடப்பா"என்று சில மாமிகள் நன்றி கூறுவார்கள்.
  மற்ற கஸின்கள் நாங்கள் வெளியே வந்ததும்,"என்ன சுண்டல்?" என்று கேட்பார்கள், பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போன்றவைகளை தீண்ட மாட்டார்கள். பட்டாணி, கொத்துக் கடலை இவைகளை பிடுங்கிக் கொண்டு விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 17. ஆன் லைன் ஷாப்பிங்கில் துணிகள் பெரும்பாலும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் நேரில் சென்று அலசி ஆராய்ந்து வாங்கும் த்ரில் மிஸ்ஸிங்.

  பதிலளிநீக்கு
 18. மூன்று படங்களிலுமே விதம் விதமான செல்லங்கள். நடுப்படத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றி ஏன் இத்தனை நாய்கள்? கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

  பதிலளிநீக்கு
 19. கேள்வி பதில்கள் அனைத்தும் ஸ்வாரஸ்யம். பெரும்பாலும் கொலு பற்றியே இருக்கிறது! நாட்களுக்குத் தகுந்த மாதிரி.

  படங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 20. ரசிக்கும்படியான கேள்வி.பதில்கள்.. கொலு வைக்கப்படுவதை நான் அதிகம் ரசிப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
 21. //ஆண்களுக்கு அட்லீஸ்ட் ஒரு கர்சீஃபாவது (ஆண்கள் பயன்படுத்தும் கர்சீஃப்) கொடுக்கலாமே. அல்லது ஒரு பேனா 10 ரூ பால் பென் போதும், வெத்தலை பாக்கு பழத்தோடு. அம்மன் கோயில் குங்குமம் பேக்கட், ஏன் ஆண்கள் குங்குமம் பயன்படுத்த மாட்டாங்களா என்ன?!!//

  எங்கள் வீட்டு கொலுவுக்கு வரும் ஆண்களுக்கு பரிசு பொருட்கள் உண்டு கீதா.
  சின்ன டவல் கொடுத்து இருக்கிறேன் ஒரு முறை, கீசெயின் கொடுத்து இருக்கிறேன்.
  புத்தகங்கள் கொடுத்து இருக்கிறேன். ஆண் குழந்தைகளுக்கு பேனா, பென்சில் , வண்ணம் கொடுக்க ஓவிய புத்தகம் கொடுத்து இருக்கிறேன். பென்சில், பேனா வைத்துக் கொள்ளும் டப்பாக்கள் உண்டு.

  பதிலளிநீக்கு
 22. கேள்விகளும் பதில்களும் மிக அருமை. எளிமையாக கொண்டாடிய நவராத்திரி கொலு கொஞ்சம் பெரிய அளவில் விரிவடைந்து வந்து கொண்டு இருக்கிறது.

  பண்டிகைகளில் வீட்டில் உள்ளோர் எல்லோரும் கலந்து கொண்டு செய்தால் அலுப்பு சலிப்பு ஏற்படாது.

  மாவிலை கட்டுவது, கொலுபடிகள் அமைப்பது, அம்மன் செய்வது , பூஜை அலமாரியில் உள்ள சாமி படங்களுக்கு பூ வைப்பது எல்லாம் என் கணவர் செய்வார்கள். குழந்தைகள் இருந்த போது அவர்களும் உதவி செய்வார்கள்.

  பதிலளிநீக்கு
 23. இப்போத பெண்கள் எல்லோரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் லலிதா சகஸ்ரநாமம்
  சொல்லும் கூட்டு வழிபாடு நடக்கிறது.

  பதிலளிநீக்கு
 24. இவ்வாரத்தின் கேள்விகளும் பதில்களும் அருமை.

  நவராத்திரியை எளிமையாக கொண்டாடியது ஒரு காலம்..

  இடைப்பட்ட காலத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது உண்மை..

  தற்போது நவராத்திரி கொலு பெரிய அளவில் விரிவடைந்து கொண்டு இருக்கிறது..

  ஆனாலும் சிலர் ஆடம்பரப் படுத்துகின்றார்கள் என்பதையும் சொல்லத் தான் வேண்டும்..

  பதிலளிநீக்கு
 25. நவராத்திரி காலத்தில் நல்ல கேள்வி பதில்கள்.

  1) எங்கே சொல்லு நீ அழகா நான் அழகா ?

  2) எங்கே என்னைக் கடிக்க முடியுமா?

  3) யாரும் இந்த போலை எடுங்கள் பார்ப்போம்?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!