வியாழன், 3 பிப்ரவரி, 2022

நம்ம நேரம்...

 போன வாரம் இனி தற்போதைய சங்கடத்துக்கு வருவோம்னு சொல்லி இருந்தேன் இல்லையா...  அது என்னன்னா...

முதலில் சொன்னது ஒருவிதம் என்றால் இது வேறு ரகம்!

அலுவலகத்தில் ஒரு நண்பருடன் நன்றாகத்தான் என் உறவு போய்க்கொண்டிருந்தது.  அவர் வேறு அலுவலகத்தில் பணி புரிபவர், என்றாலும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்கும் பணி.  

ஏனோ, திடீரென அவரிடம் ஒரு மாற்றம் காணப்பட்டது.  அதைக்கூட நான் சரியாய் கவனிக்கவில்லை.  ஏனெனில் இதெல்லாம் யார் சம்பந்தப்பட்டவர்களிடம் வந்து சட்டென வெளிப்படையாகப் பேசி விடுகிறார்கள்?!  சில குறிப்புகளால் சிலசமயம் நாம் இது போன்ற சந்தர்ப்பங்களை உணர்ந்து கொள்வோம்.  அந்தக் குறிப்பைக் கூட அவர் எனக்கு உணர்த்தவில்லை.

மாதா மாதம் அலுவலகத்துக்குத் தேவையான பொருட்களை அவர் அலுவலகத்திலிருந்து வாங்க, அவரின் உதவி தேவைப்படும்.  அவர்தான் கணினியில் அவற்றை உள்ளீடு செய்பவர்.  பழைய நட்பில் சில சலுகைகளையும் ஆதாயங்களையும் நான் நட்பின்பாற்பட்டு பெற்றதுண்டு. முன்னுரிமையில் வாங்குவேன்.  மற்றவர்களுக்கு இல்லை என்று சொல்லப்படும் சில பொருட்கள் எனக்கு கிடைக்கும்.  எனக்கு என்றால், எனக்கல்ல, அலுவலகத்துக்கு!  அதே போல சில பொருட்கள் ஒதுக்கீட்டு அளவைத்தாண்டி அதிகமாயும் கிடைக்கும்!    அலுவலகத்துக்காகத்தான்.  சொந்த வேலைக்கு அல்ல. அதே போல அவருக்கு இங்கு, மற்றும் வெளியில் தேவைப்படும் சில உதவிகளை நானும் செய்வதுண்டு.

ஆறு மாதங்களுக்கு முன்னர் அப்படி ஒரு சலுகையை எதிர்பார்த்து இயல்பாக பழைய வழக்கப்படி பேசியபோது மூக்கறுபட்டேன்.  காரணம் தெரியாது திணறினேன்.  வருந்தினேன்.

அந்த மாதமும், அடுத்த ஓரிரு மாதங்களும் சற்று சிரமப்பட்டே என் பணிகளை முடிக்க வேண்டி இருந்தது.  முதல் வரிசையில் இருந்தவன், கடைசி வரிசையில் இடம் பிடிக்கக் கூட திணறினேன்.  

எங்கள் இருவருக்கும் பொதுவானவர்கள் ஏதோதோ பேசி இந்த இடைவெளியை அதிகப்படுத்தவே முனைந்தார்கள்!

பின்னர் அவரிடம் ஒருமுறை மனம் விட்டு பேசியபோது அல்ப காரணமாய் இருந்தது.  வாங்கும் பொருள்களில் சில சிறு பொருட்கள் அங்கு வேலை செய்யும் மற்றவர்கள் - சற்றே கீழ்நிலைப் பணியாளர்கள் - கேட்டால் கொடுப்பதுண்டு.  

இவருக்கு நான் ஒருமுறை கூட அப்படிக் கொடுக்காதது வருத்தம் என்று தெரிந்தது.  கொடுத்தால் இவர் தவறாக நினைப்பாரோ என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது.  "கேட்டிருக்கலாமே...  உங்களுக்குத் தேவை என்று எனக்கு எப்படித் தெரியும்? " என்று கேட்டு சமாதானமானோம். 

அப்புறம் எல்லாம் மறுபடி நல்லாதான் போயிக்கிட்டிருந்தது!  

பொதுவான அவர் வழக்கம், பல வருடங்களாய் அலுவலகத்துக்கு தாமதமாக வருவது.  சற்றே அதிக தாமதம்.  அவருக்கு மேலே உள்ளவர்களும் , கீழே உள்ளவர்களும் பத்து மணிக்கு வந்து விடுவார்கள் என்றால், இவர் 80 சதவிகிதம் பதினொன்றேகால், பதினொன்றரைக்குதான் வருவார்!  இது அவ்வப்போது யாராலாவது புகார் செய்யப்பட்டு, முன்னறிவிப்பில்லாமல் சோதனை செய்ய அதிகாரிகள் வரும் அன்று மிக எதிர்பாராமல் அவர் பணியிலிருப்பார்!  தப்பித்து விடுவார்.

ஜனவரி முதல் வாரத்தில் மாட்டிக்கொண்டார். உடனே அவரை வெளியூருக்கு மாற்றி விட்டார்கள்.  இது எனக்கு ஒரு நண்பர் சொன்னார்.  குடும்பத்தை விட்டு இருப்பதாலும், உணவு வழியில் சாப்பிடுவதால் ஒவ்வாமையினாலும் மிக சிரமப்படுகிறார் என்று நண்பர் மூலம் கேள்விப்பட்டேன்.  

அவரிடம் பேச எண்ணி தள்ளிக்கொண்டே போனது.  முயற்சித்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்களிலும் அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

நான் விடுப்பில் வீட்டில் இருந்த ஒருநாளில் அவருடன் பேசினேன்.  மிகவும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.  யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, யார் யாரெல்லாமோ நான் மாற்றலாகி வந்ததில் சந்தோஷமாகத்தான் இருப்பார்கள் என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். 

வீட்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தேனா, அந்நேரத்தில் என் பெரியவன் இளையவனிடம் ஏதோ சினிமா டயலாக் சிறிய குரலில் சொல்லி மிக சத்தமாக வில்லன் போல சிரித்தான்.  

என் நேரம்..   அது எதிரில் பேசிக்கொண்டிருந்தவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.  நான் அவருடைய மாற்றல் பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க, இந்த சிரிப்பு சத்தம் கேட்டதும் என்ன நினைத்தாரோ, நான் வீட்டிலிருந்து பேசுவதாக சொல்லவுமில்லை, சில கணங்கள் மௌனத்துக்குப் பின் போனை வைத்துவிட்டார்.  என்ன நினைத்துக் கொண்டாரோ..

நான் உண்மையில் அவர் மாறுதலில் மகிழ்வது போலவும், மெப்புக்கு போன் பேசி வருத்தப்படுவது போலவும் தோன்றி இருக்குமோ என்னவோ..

வருத்தமாய் இருந்தது.  யாரை நோவது?

'யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை' என்று பாடல் நினைவுக்கு வருகிறது.

அவருக்கு அப்படித் தோன்றி இருக்குமா என்றும் தெரியாது.  நானாக எதுவும் விளக்கம் தரவும் முடியாது.  அவராக எதுவும் கேட்கவும் மாட்டார்! 

இப்போ நான் என்ன செய்ய...  

========================================================================================================

திருமதி எம் ஏ சுசீலா அவர்கள் என் பாஸுக்கு கல்லூரியில் தமிழ் எடுத்தவர்.  தேனம்மை லக்ஷ்மணனும் இவரிடம் படித்திருப்பதோடு, அவரோடு இன்னமும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்.  இவர் ஒரு வலைத்தளமும் வைத்திருந்தார் என்று ஞாபகம்.உணர்வுபூர்வமான கலை மொழியாக்கம் - தினமணியிலிருந்து...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் "குற்றமும் தண்டனையும்', "அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். "கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:
நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?
மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.
ஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன?
முதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு "அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.
ஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா?
படைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
கலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா?
சுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.
அயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்?
அதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
"குற்றமும் தண்டனையும்', "அசடன்' இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது?
அசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.

எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர் 
=========================================================================================================

கவிதை நேரம்!

சமீபத்தில் சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தபோது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு முன்னர் இந்த இடத்தில் அது இருந்தது, இது இருந்தது என்றெல்லாம்  படிக்கும்போது எனக்குள் ஒரு சிந்தனை எழுந்தது.  படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மடக்கி மொட்டை மாடியிலிருந்து எட்டிப்பார்த்தேன்.  இப்போது நான் காணும் இந்த இடம் இன்னும் நூறாண்டுகள், முந்நூறாண்டுகள் கழித்து எப்படி இருக்கும்.  முற்றிலும் வேறு இடமாக மாறிப் போயிருக்குமோ என்கிற சிந்தனை எழுந்தது!

இன்னுமொரு ஆயிரம் ஆண்டுகள் போகலாம் 
இன்னுமொரு காலையும் இன்னுமொரு மாலையும் 
இதுபோலவே இதே இடத்தில் வந்து போகலாம் 
இன்று போலவே ஒரு மழைக்கால மாலையில் 
யாருமற்ற சாலையைப் பார்த்துக்கொண்டு  
அப்போது இந்த இடத்தில் இருப்பவன் மனதில் 
அந்த இடத்தின் 
எதிர்காலம் பற்றியோ, கடந்தகாலம் பற்றியோ 
என்னைப் போலவே எண்ணமும் இருக்கலாம் 

கற்பனைகளை பறக்கவிட்டு, அல்லது 
கற்பனைகளை புறக்கணித்து 
கடந்து போய்க்கொண்டேதான் இருக்கிறது காலம் 

=====================================================================================================

அடுத்த 200 வருடங்களுக்கு இந்த விண்கல் இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்குமாம்.  பைனாகுலர் வைத்திருப்பவர்கள் யாராவது பார்த்தீர்களா?  கண்டா சொல்லுங்க!


=======================================================================================================

முன்பு ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டமொன்றில் ஜீவி ஸார் என்னை "சிறை படித்திருக்கிறீர்களா ஸ்ரீராம்?" என்று கேட்டிருந்தார்.  படித்திருக்கிறேன்.  ஆனால் படமாக வந்தபோது பார்க்கவில்லை.


=======================================================================================================

தந்தையை வரவேற்க காத்திருக்கும் மகன்.  

கையில் ஒரு அட்டை.  

அது சொல்கிறது ஒரு ஏக்கக் கதை.  

படம் :  நன்றி இணையம்.


==============================================================================================

கிரிக்கெட்டும், டெங்குவும்!பிறருக்காக வேண்டும் அந்த உயர்ந்த உள்ளங்கள்!


டாக்டரா, ஜோசியரா?!


சில சமயங்களில் மழையை நாமே எதிர்பார்ப்போம் - நம் டீம் ஆடும் லட்சணத்துக்கு!


நல்ல கேலி..  இல்லையில்லை... கேள்வி!

சந்தேக நிவர்த்தி!

166 கருத்துகள்:

 1. எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. எண்ணங்களின் பரிமாற்றம் எப்போதாவது தான் இனிக்கின்றது..

  - பதிவு அதனை நினைவுக்குக் கொண்டு வருகின்றது..

  பதிலளிநீக்கு
 4. மொழி பெயர்ப்பு பற்றிய கட்டுரை.. வழக்கம் போலவே எனக்குப் புரியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா?  அவர் தன் அனுபவங்களை சொல்கிறார்.  அவ்வளவுதானே..

   நீக்கு
 5. தமாசு...

  இப்போது படித்து விட்டு நேரம் இருக்கும் போது சிரித்துக் கொள்வேனாக...

  மனம் சரியில்லை..

  பதிலளிநீக்கு
 6. வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளாமல் இதைப்போல் மனதுக்குள்ளேயே தவறாக நினைத்துக் கொள்ளும் சூழல்கள் நிறைய மனிதர்களின் வாழ்க்கையில் உடண்டு ஜி

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  சட்டென சில இடங்களில் மனம் விட்டு மனதில் நினைபபதைச் சொல்லிவிட முடிவதில்லை.

   நன்றி ஜி.

   நீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  நம் மனதின் எண்ணங்கள் வேறு வேறு மாதிரிதான் பிறருக்கு தோன்றுகிறது. இதற்கு காரணம் நம்மை அவர்கள் சரியாக நம்மை புரிந்து கொள்ளாமல் போவதினாலா? இல்லை, புரிந்ததையும் நாம் அனிச்சையாக என்றோ ஒருநாள் செய்யும் செயல் மறக்கடித்துப் போவதாலா? புரியவில்லை. ஆனால், இப்படி நம்முடன் நல்லபடியாக பழகிய நட்புகள் பகைமையுடன் வருத்தமுறும் போது நம் மனமும் வருத்தப்படுகிறது என்பதை அவர்களுக்கு யார் புரிய வைப்பது? எல்லாம் நம் நேரந்தான்..!

  உங்கள் நண்பர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பழையபடி நட்புறவோடு இணக்கமாய் இருக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்.

  கவிதை அழகாக உள்ளது. பாராட்டுகள்
  காலம் நம் கற்பனைகளுக்கு துணையிருப்பது போல் தோன்றும் வேளையில், அது நம்மையே புறக்கணித்தும் ஓடுகிறது. நல்ல சிந்தனை. சில வேளைகளில் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் உண்மையை அல்லது நம் மனதை புரிய வைத்தால் கூட அவர்கள் மனம் சொல்லி அவர்கள் நினைத்ததைதான் நம்புகிறார்கள்.  என்ன செய்ய!

   இப்போதைய அப்டேட்,  அவர் நல்ல புரிதலுடன்தான் இருக்கிறார்!

   கவிதைப் பாராட்டுக்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. நன்றி. தங்கள் நண்பர் இப்போது புரிதலுடன் இருக்கிறார் என்பது சந்தோஷமாக உள்ளது. இதுவே தொடர வேண்டுகிறேன்.

   நீக்கு
 9. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஆரோக்கியம் நிறைந்த வாழ்வு எல்லோருக்கும் தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. சாமாவின் தமாஷ் , அத்தனையும் சுவை. கிரிக்கெட்டிலெயே

  லயித்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. எதற்காக வெல்லாம்
  பிள்ளையாரை அழைத்திருக்கிறோம்:)
  ஆஹா. எப்படித்தான் சாமாவுக்குத் தோன்றுகிறதோ.
  டெங்கு ஜுரம் அப்பவும் இத்தனை தீவிரமாக இருந்தது
  ஞாபகத்தில்.நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காலத்துக் கல்கியில் தான் இவற்றைப் பார்க்க முடியும். நல்ல நகைச்சுவைத் துணுக்குகள்.

   நீக்கு
  2. பிள்ளையார் அனைவரின் இஷ்ட தெய்வம், நண்பன்!!!

   டெங்கு பற்றி ஜோக்கில் பார்த்த உடனேயே சரியான நேரம் என்று பகிர்ந்து விட்டேன்.

   நீக்கு
 11. சிறை கதை நினைவில்.
  படம் லக்ஷ்மியும் ராஜேஷும் நடித்த படம் இல்லையா.
  படமே இணையத்தில் கிடைக்கவில்லையே.

  வேறு பட்ட நிலைக்களன். மனம் நொந்த கணவன்.
  என்ன மாதிரி ஒரு சூழ்னிலை:(

  இவ்வளவு விபரீதம் இல்லாவிட்டாலும்,
  ஒரு பிரிந்த குடும்பம் எனக்குத் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையும் படிச்சேன். படமும் பார்த்தேன் (என நினைக்கிறேன்.)

   நீக்கு
  2. படம் இணையத்தில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். சமீபத்தில் பாஸ் பார்த்துக்கொண்டிருந்தார் என்று நினைவு.

   நீக்கு
  3. நன்றி கேஜிஜி...   ஆனால் எனக்கு பார்க்க பொறுமை இல்லை!!!

   நீக்கு
 12. ''என் நேரம்.. அது எதிரில் பேசிக்கொண்டிருந்தவர் காதில் விழுந்திருக்க வேண்டும். நான் அவருடைய மாற்றல் பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க, இந்த சிரிப்பு சத்தம் கேட்டதும் என்ன நினைத்தாரோ, நான் வீட்டிலிருந்து பேசுவதாக சொல்லவுமில்லை, சில கணங்கள் மௌனத்துக்குப் பின் போனை வைத்துவிட்டார். என்ன நினைத்துக் கொண்டாரோ..''


  நேரம் என்றும் சொல்லலாம். அவர் எவ்வளவு உங்களைப் புர்ந்து
  கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வரும்.
  சோக வேளையில் எல்லாமே அதிகரித்த மாதிரி
  தோன்றும். அவர் மீண்டு வந்து உங்களுடன்
  சுமுகமாக இருக்க சான்ஸ் கொடுங்கள்.

  நட்பை இழப்பது மிகச் சிரமம். உங்களுக்கு அனைத்து நலம்களும்
  சேர்ந்து வரப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூழ்நிலை, எதிராளியின் மனோபாவம் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் பேசுவதைக் கணக்கில் எடுத்துக்கறாங்க. ஆனால் நாம் என்னதான் நல்லபடியாக நடந்து கொண்டாலும் கருத்தை மாற்றிக்கொள்ளாதவங்களே அதிகம்.

   நீக்கு
  2. அவர் இப்போது நல்லபடியாகவே பேசுகிறார். நல்லவேளை அம்மா.

   நீக்கு
  3. சூழ்நிலை, நேரம் அப்படி அமைந்து விடுகிறதுதான். ஆனால் நம்மோடு பழகுபவர்கள் நம்மையோ, நாம் பழகுபவர்கள் பற்றியோ அடிப்படை குணங்களைப் புரிந்து வைத்திருந்தால் பெருமளவு அபுரிதலைத் தடுக்கலாம்.

   நீக்கு
 13. நண்பருடனான டெலபோன் பேச்சு, எனக்கு என் வீட்டில் நடந்ததை நினைவுபடுத்தியது. அம்மா பஹ்ரைன் வந்திருந்தபோது பசங்க அவங்களுக்குள்ளேயே பேசிச் சிரித்துக்கொண்டிருந்தபோது, அம்மாவுக்கு அவரைப் பத்தித்தான் கேலி பேசுகிறார்கள் என்று தோன்றிவிட்டது. இதுலவேற அவங்க எப்போவும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, எதையாவது பகிர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

  துபாய்க்குச் சென்ற புதிதில் க்ளையன்ட் விசிட்டில் அவர்களோடு, கணிணி முன் அமர்ந்து, ப்ரோக்ராம், லாஜிக் கரெக்‌ஷன்லாம் செய்வேன். சில நேரங்களில் இரண்டு மூன்று மணி நேரமாகிவிடும். எனக்கோ விரைவில் வேலையை முடிக்கணும்னு அவசரம். அவரோ குஜராத்தி. சென்ற வாரத்தில் அவரமு அம்மா மிகவும் சீரியசாக ஆஸ்பத்திரியில் இருந்ததைச் சொன்னார். எனக்கு அதில் மனம் செல்லவில்லை. அவரிடம், நல்லது இந்த லாஜிக் சரியா? என்று கேட்டேன். அவருக்கோ பயங்கரக் கோபம். என் அம்மா ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்ததைச் சொன்னால் நல்லதுங்கறயே என்றார்.

  காரணமில்லாத மனத்தாங்கல்கள் சோகம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொன்னது தப்புத்தானே நெல்லை. :(

   நீக்கு
  2. இதிக்குக் காரணம் எதிரே பேசுபவர்களின் பேச்சில் கவனமின்மை. வீட்டிலயும், இப்போவும் கவனமின்மை உண்டு.

   நீக்கு
  3. உங்களிடம் அது அதிகமாகவே இருக்கு நெல்லை. கவனமின்மை என்பது ரொம்பவே ஆபத்தை விளைவிக்கும் பல சமயங்களிலும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதீத கவனம் இருப்பதாலும் கஷ்டப்பட்டிருக்கேன்.

   நீக்கு
  4. கவனம் இல்லாததால் ஒரு தொலைபேசி
   அழைப்பு அதுதான் கடைசி என்பதை
   நான் உணரவில்லை.
   என் தம்பி சின்னவன் அருமையாக ஒரு மணி நேரம் பேசினான்.
   என்னவெல்லாமோ அறிவுரை. இதமான பேச்சு.
   நடுவில் தொலைக்காட்சியில் ப்ரேக்கிங்க் நியூஸ் ஏதோ.:(
   என் கவனம் திரும்ப உம் கொட்டியவாறு இருந்தேன்.
   அடுத்த நாள் காலை அவன் இல்லை.
   யாருக்குத் தெரியும் இப்படி ஏமாறுவேன் என்று.
   18 வருடங்கள் போயும் இன்னும் அந்தக்
   குற்ற உணர்வு போகவில்லை.

   நீக்கு
  5. இந்த மாதிரித் தான் அம்மாவோடு எனக்கும் ஏற்பட்டது ஓர் அனுபவம். அம்மாவுக்கு ஒரு வாய்க் காஃபி கொடுத்திருக்கலாமோ என்னும் குற்ற உணர்ச்சி 35 வருடங்கள் கழிந்தும் என்னுள் இன்னமும் இருக்கு. அம்மா கேட்கவில்லை. ஆனால் அதுக்குத் தான் வந்தாளோ எனத் தோன்றும். :(

   நீக்கு
  6. பாவம் மா.
   என்ன செய்யலாம். அம்மாவை நாம்
   கவனிக்க நமக்கு இன்னும் கொஞ்சம் கவனம் இருந்திருக்கணும்.

   வருந்தாதீர்கள் . அம்மாக்கள் மன்னிப்புடன்
   காத்து இருப்பார்கள்.

   நீக்கு
  7. அம்மாவே அப்படி நினைக்கும்போது மற்றவர்கள் அப்படி நினைக்கக் கேட்பானேன்?!!

   உங்கள் அலுவலக அனுபவம் :  நிச்சயம் நீங்கள் பட்டுக்கொள்ளாமல் "ஓகே அடுத்து" என்று போனது அவருக்கு வலித்திருக்கும்.

   நீக்கு
  8. எதிரில் பேசுபவர் பேச்சில் கவனம் இல்லாமல் போவது சமயங்களில் எனக்கும், ஏன், எல்லோருக்குமே நடக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  9. என் அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாத வருத்தம் எனக்கும் உண்டு.

   நீக்கு
  10. உங்கள் அனைவரின் கருத்துகளும் மனதை வருத்தமுறச் செய்கின்றன. இது அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் அமைந்து விடுவதுதான் போலும். சமீபத்தில் நடந்த நிகழ்வாக சென்ற வருடம் கடைசியில் என்னுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த போது,"உடல் நிலை கொஞ்சம் சரியில்லை" என்று சொன்ன என் அண்ணாவிடம் உடனே சில நாட்களில் "இப்போது எப்படி இருக்கிறது பரவாயில்லையா?" எனக் கேட்கும் சந்தர்ப்பத்தை எனக்கு அளிக்காமல், அவரை என்னை விட்டு சிறிதும் எதிர்பாராமல் பிரித்த விதியை நினைத்து இன்னமும் வேதனைகளுடன்தான் நாட்களை தள்ளுகிறேன். ஆயிற்று... இப்படி நாட்கள் பறப்பதில் "எல்லாமே மாயை" என்று உணரும் பக்குவத்தை இன்னமும் பெற இயலாமல் ஒவ்வொரு நாளும் செல்கிறதே என்ற வருத்தமும் அடிக்கடி எழுகிறது. என்ன செய்வது?

   நீக்கு
  11. உங்கள் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன் கமலா அக்கா.

   நீக்கு
  12. ஆமாம், இந்த அனுபவமும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகையில் ஏற்பட்டிருக்கும்.

   நீக்கு
 14. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 15. மொழிபெயர்ப்பு ஒரு கலை. எனக்கு அது வரும் என்பது என் நம்பிக்கை. மொழிபெயர்ப்பவர்களும் நாவலோ இலக்கியமோ கற்பனைவளத்துடன் எழுத்த் தெரிந்தவர்களாக இருக்கணும். தட்டையாக மொழிபெயர்ப்பவர்கள் எழுத்துக்கும், வாசகர்களுக்கும் துரோகம் செய்கிறார்கள்.

  அந்த அந்த மொழியில் திட்டுவதை, வர்ணணைகளை இயல்பாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்யணும்.

  கண்ணதாசன் பதிப்பகத்தில் வெளியிட்ட அகதா கிரிஸ்டி(?) நாவல்களின் தமிழாக்கம் நன்றாக இல்லை. தமிழக எம்பி மொழிபெயர்த்த விகடன் வெளியீடு, மோசமான மொழிபெயர்ப்புக்கான சிறந்த உதாரணம்.

  ஆங்கிலப் புலமை பெற்ற சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று சொல்லிக்கொள்பவர்கள் சாண்டில்யன் நாவல் ஆரம்ப மூன்று பக்க வர்ணணைகளைத் த்ருப்தியாக மொழிபெயர்த்தால் மார்தட்டிக்கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொழிபெயர்ப்பு ஏதும் இதுவரை முயற்சி செய்திருக்கிறீர்களா நெல்லை? இல்லை என்றாலும், முயற்சி செய்து, ஒன்றை ஏன் ஒன்று எபிக்கு அனுப்பக்கூடாது?

   கண்ணதாசன் பதிப்பக ஆங்கில நாவல்கள் தமிழில் பற்றிய அதே உங்கள் கருத்முதான் எனக்கும்!

   சாண்டில்ய வர்ணனைகளை ஆங்கிலத்தில் அப்படியே மொழிபெயர்ப்பதா? ஓடி விடுவார் அவர்!!

   அது சரி, லா ச. ரா?

   நீக்கு
  2. Jiddu Krishnamurthi's speech also - Tamil translation is difficult.

   நீக்கு
  3. கே.எம்.முன்ஷியின் "கிருஷ்ணாவதாரம்" ஏழு/எட்டு பாகங்களையும் மொழிபெயர்த்தேன், வித்யா பவன் அனுமதியோடு. அச்சுப் புத்தகம் போட அனுமதியும் வாங்கிப் பின்னர் எல்லோரும் பயந்து ஓடிவிட்டனர். ஆயிரம் பக்கங்கள் வருவதால் இது "காலச்சக்கரம் நரசிம்மா" மாதிரி ஆட்களால் தான் முடியும்னுட்டாங்க. :)))))

   நீக்கு
  4. இதுபற்றி நீங்கள் முன்னர் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைவு.  பாராட்டுகள் அக்கா.

   நீக்கு
 16. இந்தத் தவறான புரிதல் பற்றித் தான் நேற்று நான் புதன் கேள்வி/பதிலுக்குக் கேட்டிருக்கேன். நான் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கேன். ஶ்ரீராமின் நண்பர் இப்போது சரியான புரிதலுடன் இருப்பதற்குக் கடவுளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. " Mom Quit?"
  அச்சோ பாவமே. குழந்தைகளின் சோகம் படம் வழியே நம்மைத் தாக்குகிறதே.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்களோடது என்ன விதமான கல்சரோ... King is dead. Long live new king கதைதான் கோலிருக்கு

   நீக்கு
  2. பார்த்த உடனே கஷ்டமாக இருந்ததால்தான் நானும் பகிர்ந்தேன்!

   நீக்கு
  3. இல்லை வல்லிம்மா... அந்தக் குழந்தைகளை நினைத்தவுடன் பரிதாபமாத்தான் இருந்தது. பெற்ற தாய் குழந்தைகளைப் புறக்கணித்துச் செல்வதா... என்ன கல்சரோ என்ற விதத்தில் எழுதினேன்

   நீக்கு
  4. Mom Quit is a ambiguous word. Because of Covid? or anyother reason. But the kids look so pitiable. God Bless.

   நீக்கு
 18. பல சமயங்களிலும் நாம் நல்லதே நினைச்சுச் செய்தாலும் எதிராளிகளுக்கு அதுவும் தவறாகவே தென்படுகிறது. இப்படியும் நான் மாட்டிக் கொண்டிருக்கேன். :)))) சில சமயங்களில் பொல்லாதவளாக/மோசமானவளாக இருந்திருக்கணுமோ என்றும் நினைக்கத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயங்களில் நமக்கு நல்லதாக இருப்பது அவர்களுக்கு பாதகமாக இருக்கிறதோ என்னவோ..   இன்று அலுவலக சகா ஒருவரிடம் நான் பொதுவாக எதையோ பற்றி பேச, அது அவரின் பழைய செயல் ஒன்றை நினைவுபடுத்துவதாக அமைந்து அதற்கு அவர் தேவையில்லாமல் தானாக பதில் சொன்னார்.  எனக்கு அந்த சம்பவம் தெரியக்கூட தெரியாது என்பதை விளக்கினேன்.

   நீக்கு
  2. நாம 'வருங்கால பிரதமமந்திரி வாழ்க' என்று கவுன்சிலர்களைப் பார்த்து அல்லக்கைகள் சொல்லுவதை சிரித்துக் கடந்துவிடுகிறோம். கூழைக்கும்பிடு போடுபவர்களையும் அப்படியே நினைக்கிறோம். எதிரே உள்ளவர்களுக்கு தங்கள் உணர்வு ஆழமா பதியணும் என்பதற்காக ரொம்பவே வெளிப்படையா நடந்துகொண்டால்தான் (கூழைக்கும்பிடு போடுவது போல) எதிராளிகளுக்கு பளிச்சுன்னு புரியும்

   நீக்கு
  3. கும்பிடப்படுபவருக்கு அது நூற்றுக்கு நூற்றைம்பது சதவிகிதம் போலி, எதிரே கும்பிடுபவர் சந்தர்ப்பவாதி என்பதும் புரியும்!

   நீக்கு
  4. என்னைப் பொறுத்த வரையிலும் நான் யாருக்காகக் கடுமையாகப் பாடுபட்டு உழைத்துச் செய்கிறேனோ அவங்க தான் எனக்கு விரோதியாக ஆயிடறாங்க. :))) எப்படியாவது என்னை மட்டம் தட்டணும்னு பாடுபடுவாங்க. :))))) பல உதாரணங்கள் உண்டு. :)))))) ஆனால் இன்னமும் என் நட்பு/உறவு வட்டத்தில் இருக்காங்க தான். நான் ஒதுக்குவதே இல்லை.

   நீக்கு
 19. அலுவலகத்துக்கு தாமதமாக வருவது... எனக்குப் பிடிக்காத குணம் இது. தொழில் செய்யும் இடத்திற்கு மரியாதை வேண்டாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலுவலகங்களுக்கு தாமதமாக  வருபவர்கள்தான் அதிகம் நெல்லை.  தனியார் நிறுவனங்கள் பற்றி தெரியாது.  அரசு அலுவலகங்களில் இது வழக்கம்தான்.  ஐடி நிறுவனங்களில் நேரம் கணக்கு கிடையாது.  எப்போது வேண்டுமானாலும் வரலாம், லாகின் செய்யலாம்.  ஆனால் பணியில் தினசரி ஒன்பது மணிநேரமோ, பத்து மணி  காட்டவேண்டும் 

   நீக்கு
  2. In Ashok Leyland - those days, if the attendance clock punching exceeds 10 minutes after the factory siren time, then the person's wage will be cut for 30 minutes. So, if the production shift starts at 7.30 am, any punching beyond 7.40 am will lead to 30 minutes wage cut. People will not be allowed inside the premises after 7.50 am.

   நீக்கு
  3. அரசு அலுவலகங்களில் ஜூனியர் அசிஸ்டன்ட் எனப்படும் எல்டிசி/யுடிசி, மற்றும் க்ளாஸ் 4 என்னும் சுகாதார ஊழியர்கள், ப்யூன், தலைமை க்ளார்க் போன்றவர்களுக்குக் கட்டாயமாய் அட்டென்டன்ஸ் இருக்கும். கையெழுத்திட வேண்டும். அதுவே கெஜடட் அதிகாரியானால் எப்போ வேணா வரலாம். எப்போ வேணா போகலாம். இன்னும் க்ளாஸ் ஒன் அதிகாரியெனில் அலுவலகத்தில் தலையைக் காட்டிட்டுப் போய்க்கலாம். :)))))ஆனால் இப்போதைய அரசாங்கத்தில் இவற்றை நடத்துவது கடினம் எனக் கேள்வி.

   நீக்கு
  4. க்ளாஸ் ஒன் ஆபீஸர்ஸ் கூட முழுநேரம் ஆபீஸில் இருக்க வேண்டிய நிலைதான் - எனக்குத் தெரிந்து!

   நீக்கு
  5. ஹிஹிஹி, அப்படீங்கறீங்க! எனக்குத் தெரிஞ்சு சில முக்கியமான மீட்டிங்குகளின் போது தான் அவங்க அலுவலக நேரம் அதிகமாகிவிடும். மற்ற நாட்களில் வெளியே ஆடிட்டிங்குக்குப் போயிடுவாங்க. மாமா காலை எல்லாம் ஆடிட். மதியம் அலுவலகம்,

   நீக்கு
 20. அந்தக் குழந்தைக்கு அம்மா இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் எந்த வகையில் இல்லாமல் போனாள் என்பது இன்னும் பெரிய சோகம்!

   நீக்கு
 21. '' திருமதி எம் ஏ சுசீலா அவர்கள் என் பாஸுக்கு கல்லூரியில் தமிழ் எடுத்தவர். தேனம்மை லக்ஷ்மணனும் இவரிடம் படித்திருப்பதோடு, அவரோடு இன்னமும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். இவர் ஒரு வலைத்தளமும் வைத்திருந்தார் என்று ஞாபகம்.''

  வலைப்பதிவு ஆரம்ப வருடங்களில் அன்பின் தேனம்மை,
  சுசீலா அம்மா எல்லோரும் பழக்கம்.
  இப்பொழுது நட்பு வட்டம் குறுகிவிட்டது.

  அவரது மொழி பெயர்ப்பு பற்றிய எண்ணங்கள்
  வெகு யதார்த்தமாக இருக்கிறது.
  எந்த மொழியிலும் நம்மை ஈடுபடுத்தும் போதுதான்
  அந்த வளம் நம்மை நெருங்கும்.
  அருமையான பதிவு ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா..  நானும் அவர் வலைப்பக்கத்துக்குச் சென்றிருக்கிறேன். அப்போது இவர், டோண்டு, கீதா அக்கா, ராஜேஸ்வரி அம்மா, மும்பையில் ஒரு பெண்பதிவர், நீங்கள் எல்லாம் உட்பட பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வலையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தீர்கள்.

   நீக்கு
  2. ராஜேஸ்வரி எல்லாம் எங்களுக்கு ரொம்ப ஜூனியர். முதலில் துளசி, பின்னர் வல்லி, பின்னர் நான், டிஆர்சி, அம்பி, கைப்புள்ள, ராம், மு.கார்த்திக், ச்யாம், மணிப்ரகாஷ், தருமி, பொன்ஸ், வேதா(ள்) (அருமையாக் கவிதையைக் கொட்டுவார்) சிபி என்ற ஜகன்மோகன், இலவசக்கொத்தனார், பெனாத்தல் சுரேஷ் பாபு, ஆசிப் மீரான், ஜி.ராகவன் இன்னும் அமீரகத்தில் இருந்து பலர்! நினைவில் உள்ளவர்களை நினைவு கூர்ந்தேன். பின்னர் வந்தவர்களில் தான் கண்ணபிரான், சண்டைக்கோழி அம்மா என்னும் எஸ்கே எம், கயல்விழி, சீனா, இன்னும் பலர்.

   நீக்கு
  3. ஆம், உண்மைதான்.  இதில் பலபேர் வலைப்பக்கம் நான் செல்லாதது, அறியாதது.

   நீக்கு
 22. வெறித்தோடிய சாலையும் மழையும்
  கற்பனைகளைத் தூண்டும்.
  வெகும் அருமையான சொற்களுடன் , தனி மனிதன் நிலையைச் சொல்லி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். மிக மிக சிறப்பு.

  எண்ணங்களை வடிப்பதற்கும்
  கவனம் வேண்டுமே.
  நிறை பாராட்டுகள் அப்பா.

  பதிலளிநீக்கு
 23. திருமதி எம்.ஏ.சுசீலா பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். மொழி பெயர்ப்பு பற்றி இப்போத்தான். உங்கள் பாஸும் சிறந்த தமிழ்ப்புலமை பெற்றிருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்கள் பாஸும் சிறந்த தமிழ்ப்புலமை பெற்றிருப்பார்.//

   :>))

   நீக்கு
 24. தனி மனிதன் என்றுமே தனி தானோ? உங்களால் எப்படி இப்படி எல்லாம் கவிதை எழுத முடிகிறது எனப் படித்து வியக்கிறேன்,

  பதிலளிநீக்கு

 25. அலுவலக நண்பரின் பிணக்கம் எல்லோரும் அனுபவிப்பதே. நான் என்னுடைய மேலதிகாரியிடம் வாய் பேசாமலேயே 2 வருடங்கள் கடமை ஆற்றினேன். பின்னர் சரியாயிற்று. இந்த இரண்டு எழுத்து ஈகோ சுலபத்தில் போகாது. விரட்ட திறமையும் பொறுமையும் வேண்டும்.

  மொழியாக்கம் பற்றிய சுசீலா அவர்கள் கூறியது சரியே.


  நம்முடைய சினிமா டைரெக்டர்கள் இந்தக் கலையில் வல்லுனர்கள். எந்த வெளி நாட்டு படமானாலும் உடாலங்கடி செய்து தமிழ் படம் எடுத்து விடுவார்கள்.

  பாட்டுக்கு பாட்டு

  காலம் அதைக் கண்டவர் உண்டோ

  இல்லை என்று சொல்ல முடியவில்லை.

  காலம் அது பொன்னானது என்போம்.

  ஆனால் அதை வாங்க முடிவதில்லை.

  காலம் செய்யும் கோலம் என்போம்.

  ஆனால் அதற்கு கையோ கருவியோ இல்லை.

  காலம் போகும் போக்கு என்போம்.

  ஆனால் அதன் தடம் என்றும் தெரிவதில்லை.

  காலம் தான் கடவுளோ?

  இல்லை இல்லை

  ஐன்ஸ்ட்டீன் கூறிய மாயையோ?

  தெரியவில்லை

  எனக்கு எதுவும் தெரிவதில்லை.

  ஒன்று மட்டும் புரிந்தது

  எனக்கு வயது கூடுகிறது.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலுவலக மிஸ்அண்டர்ஸ்டாங்டிங்ஸ் நீங்கள் சொல்வதுபோல சகஜம்தான் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..

   மொழிபெயர்ப்பு வேறு, காப்பியடித்து சினிமா எடுப்பது வேறு இல்லையா?!! காப்பியடிப்பது ன்று சொல்லாமல் இன்ஸ்பையர் ஆகி எடுத்தது என்று உட்டாலக்கடியும் செய்வார்கள்!

   நீங்கள் பதிலுக்கு எழுதி இருக்கும் பாட்டை இன்னும் சுருக்கி எழுதலாம் என்று தோன்றுகிறது.  நன்றி JC ஸார்.

   நீக்கு
 26. சிறுவர்கள் என்னதான் தந்தையிடம் கூறுகிறார்கள். mom quit என்றா?
  அப்படியானால் இந்த அட்டைகளை அழகாக எழுதி கொடுத்தவர் யார்?

  Jayakumar

  பதிலளிநீக்கு
 27. அனைவருக்கும் வணக்கம். கவிதை பிரமாதம். கிரிக்கெட் ஜோக்குகள் அட்டகாசம்! தவறான கண்ணோட்டத்தில் உள்ளவர்களுக்கு எல்லாமே தவறாகத் தான் புரியும்.

  பதிலளிநீக்கு
 28. அனைத்தையும் ரசித்தேன். நகைச்சுவைத்துணுக்குகளை சற்றே அதிகமாக.

  பதிலளிநீக்கு
 29. சொல் என்றும் மொழி என்றும் பொருள்
  என்றும் இல்லை - பொருள் என்றும் இல்லை...

  சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை - விலை ஏதும் இல்லை...

  பதிலளிநீக்கு
 30. ஸ்ரீராம் நாம் சில சமயம் நம் மனதை திறந்து உண்மையைச் சொன்னாலும் கூட அதை நம்பமாட்டார்கள். அவர்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறார்களோ அதையேதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்....ஹைஃபைவ் உங்களோடு!!!

  என் அனுபவங்கள்!! இப்படியான சிலவற்றைக் கடந்து சென்றுவிடலாம் ஆனால் சிலது கடக்க முடியாததாகிவிடுகிறதே....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா...  எல்லோருக்கும் இதுமாதிரி அனுபவங்கள் இருக்கிறது.

   நீக்கு
 31. அலுவலக நண்பர் உங்களிடம் சொல்லியிருக்கலாம், இப்படிச் சிலருக்கு கொடுப்பதுண்டு என்று...கம்யூனிக்கேஷன் கேப். அதுவும் நட்பில் எதற்கு என்று புரிவதில்லை பல சமயங்களில். நல்ல நட்பு என்றால் முதலில் தவறாக நினைக்கத் தோன்றாது அல்லது உங்களைப் போல் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு உங்களை வெகுவாகப் பாராட்டுகிறேன் ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...   எப்போதுமே இதுபோல பேச முடிவதில்லை கீதா.

   நீக்கு
 32. அட!!! எம் ஏ சுசீலா நம்ம பாஸுக்கும் தமிழாசிரியையா!! அவங்களைப் பற்றி தேனம்மை எழுதியிருக்காங்க. அவங்க ஆசிரியைன்னு தெரியும்...அவர்களின் மொழிபெயர்ப்பு பற்றியும் தேனம்மை ஒரு பதிவில் சொல்லியிருந்த நினைவுண்டு.

  ஆமாம் தேனம்மை அவங்களோடு தொடர்பில் இருப்பவர்.

  எம் ஏ சுசீலா அவர்களின் பேட்டி தகவல் சுவாரசியம். திறமை வியக்க வைக்கிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுசீலா அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி சொன்னது அத்தனையும் மிகச் சரி. அதில் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது

   கீதா

   நீக்கு
  2. ஆமாம்.  பாஸும் அவரிடம் படித்தவர் என்பதை முன்னாலேயும் சொல்லி இருக்கிறேன் கீதா...

   நீக்கு
 33. கவிதை அருமை ஸ்ரீராம். உங்களின் கற்பனை அசாத்தியம். என்னென்னவோ எண்னங்கள் வருகிறது. பொக்கிஷமாக்கிக் கொள்ளுங்கள் ஸ்ரீராம்!

  கடைசி மூன்று எனக்கு மிகவும் பொருந்திப் போகிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. சில நேரங்களில் தவறான புரிதலால் நட்பிற்கு சோதனை ஏற்படத்தான் செய்தி றது.

  பதிலளிநீக்கு
 35. கல்லெறி படறதுன்னு நாம சொல்லுவோமே அப்படி விண்வெளி நினைச்சுருக்குமோ பூமியை யோசிக்காம உயிர் வாழற கோளா படைச்சுட்டோமே இப்படி சீரழிக்கிறாங்களேன்னு பூமியை நோக்கி கல்லெறிஞ்சுருக்கு போல!! அப்பப்ப எறியுமே! ஹாஹாஹாஹா

  இங்க தெரியாதாமே அப்புறம் எப்படி பார்க்கறது? பார்த்தா, கடல்ல போய் விழுந்துக்கன்னு சொல்லிடலாம்!! சுனாமி/கடல் பொங்கிடுமோ??!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு பெரிய கல்லாய் எல்லாம் இருக்காது!!!!  பூமி மேல  விழ வந்த கல்லை விண்வெளி தடுத்து நிறுத்தி இருக்கிறது.  பூமி மேல் ஆனாலும் அன்பு அதற்கு!

   நீக்கு
 36. குழந்தையின்/களின் அட்டை...பெரியவன் எழுதியிருப்பானோ?! இரண்டும் சகோதரர்கள் பின்னாலுள்ள் அபையனின் அட்டையும் டாட் என்று தொண்டங்கி மாம் என்று அடுத்தாப்ல இருப்பது போல் இருக்கு.. மிகவும் சோகம் இதெல்லாம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா ஃபிலிம் காட்டுகிறார்களோ?  போட்டோவுக்கு போஸோ?!

   நீக்கு
 37. ஜோக்ஸ் ஹாஹாஹா ரகம்

  ஊரில் இருந்தவரை டெங்கு ஜுரம்னா என்னன்னே தெரியாது!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே நம்மூர்ல ஐம்பது, அறுபதுகளிலிருந்து அது பிரபலம்!

   நீக்கு
 38. சிறை கதை கொடுத்திருக்கும் பக்கம் வாசித்தேன். முடிவு என்னவா இருக்கும் என்று தோன்றவைக்கிறது.

  படம் கூட வந்ததே அது இது பேஸ் செஞ்சதா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், இதையேதான் படமாக எடுத்தார்கள். ராஜேஷ், பிரசன்னா, லட்சுமி.

   நீக்கு
  2. //ராஜேஷ், பிரசன்னா, லட்சுமி.// தெளிவாக சொல்லுங்கள் ஸ்ரீராம் யாராவது சிநேகா பிரசன்னா என்று நினைத்து விடப் போகிறார்கள். இவர் நாடக நடிகர். ஓரிரண்டு படங்களில் நடித்தார். விசு மாதிரியே நடிப்பார்.

   நீக்கு
  3. ஸ்னேகா பிரசன்னா அப்போது குழந்தை நட்சத்திரமாக இருந்திருப்பார் பானு அக்கா!

   நீக்கு
 39. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பத்தில் மற்ற பகுதிகளும் நன்றாக உள்ளது. மொழி பெயர்ப்பாளர் திருமதி.சுசீலா அவர்களின் பேட்டி படித்து அவரின் திறமைகளை தெரிந்து கொண்டேன். நல்ல நிறமை கொண்ட அவரிடம் தமிழ் கற்று தேர்ந்திருக்கும் தங்கள் பாஸுக்கும் வாழ்த்துகள்.

  சகோதரி தேனம்மை அவர்களின் பதிவிற்கும் ஒரிரு முறை சென்றிருக்கிறேன். அவரும் முன்பெல்லாம் என் பதிவிற்கும் வந்து ஊக்கமிகும் கருத்துக்கள் தருவார்.

  அனுராதா ரமணின் சிறை எப்போதோ படித்த நினைவு இருக்கிறது. ஆனால் இப்போது கதைக்கரு அவ்வளவாக நினைவில்லை. நீங்கள் தந்திருக்கும் ஒரு பக்கத்தை பெரிதாக்கி படித்தேன். அதுவே படமாக வந்திருப்பதும் தெரிந்து கொண்டேன்.

  விண்கல் எப்போது வெறும் பார்வைக்கு தெரியுமோ? ஸ்கைலாப் என முன்பு ஒன்று சுற்றிக் கொண்டிருந்து விட்டு கடலைத் தேடிப் போனது.

  டெங்கு ஜுரம் பற்றிய ஜோக்ஸ் அனைத்தும் ரசித்தேன். அப்போது வந்த படங்களில் நாகேஷ் கூட ஒரு படத்தில் அந்த ஜுரம் பற்றி பாடல் பாடி நடித்திருப்பார். அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 40. நண்பரிடம் மீண்டும் ஒருமுறை பேசி தெளிவு படுத்திக் கொள்ளலாமே.

  மொழிபெயர்ப்பு குறித்து திருமதி எம் ஏ சுசீலா அவர்களின் கருத்துகள் நன்று.

  கவிதை அருமை!

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி ராமலக்ஷ்மி. நண்பருடன் இப்போது நல்ல உறவுதான் தொடர்கிறது!

   நீக்கு
 41. சிறை சிறுகதை அது பரிசு பெற்று வெளிவந்த காலக் கட்டத்திலேயே வாசித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 42. சிறை கதையை வாசித்திருக்கிறேன் என்று சொல்லி எளிமையாக கடந்து போனவர்களைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதுவும் கோயில் குருக்களாத்து மாமி தான் கிடைத்தாரா என்று நெஞ்சு பொறுக்குதில்லையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் கதை யோசிக்கலைனா, அப்புறம் எப்படி பரிசு கிடைக்கும்? அதனால்தான் டி.எம்.கிருஷ்ணா போன்றவர்களெல்லாம் மாத்தி யோசித்து பரிசுகள் வாங்கிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். நியாயம், நேர்மை, எழுத்து அறம் இதெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தால், மத்தவங்க பரிசு வாங்குவதைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்

   நீக்கு
  2. சிறை கதையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை அனுராதா ரமணனை நேரில் சந்தித்துப் பொழுது அவரிடமே கூறினேன். "நீங்கள் எதை சொல்கிறீர்கள்? கதையையா? சினிமாவையா?" என்று கேட்டார். இரண்டுமே என்றேன். அதற்கு ஏதோ சமாதானம் சொன்னார்.

   நீக்கு
  3. ஏனோ அப்போது விட்டு விட்டார்கள் போல ஜீவி ஸார்.  எழுதியவரும் அதே பிரிவைச் சார்ந்தவர் என்ற காரணமாக இருக்கலாம். சாவித்ரி படம் பட்ட பாடு நினைவிருக்கிறதா?

   நீக்கு
  4. இதைப் பற்றி அப்போதே பல்வேறு விமரிசனங்கள் ஆனந்த விகடனிலேயே வந்தன. எங்களுக்குள்ளும் பேசிக் கொண்டிருக்கோம். பிராமணர்களைத் தான் எப்போவுமே எளிதாக மட்டம் தட்ட முடியும் என்பது எப்போதுமே உள்ளது தானே. அனுராதா ரமணன் இந்த இடத்தில் வேறு யாரைச் சொல்லி இருந்தாலும் விகடனும் போட்டிருக்காது. போட்டிருந்தாலும் அனுராதா ரமணன் மேல் பல்வேறு விதமான வழக்குகள் வந்திருக்கும். பிராமணர் என்பதால் எளிதில் கடந்து போனார்கள் அனைவருமே வெளியீட்டாளரில் இருந்து. அவர்களும் பிராமணர்களே!

   நீக்கு
 43. நம்ம நேரம் சரியான தலைப்புதான் .
  நம்ம நேரம் நன்றாக இருந்தால் எல்லா உறவுகளும், நட்புகளும் சரியாக புரிந்து கொள்வார்கள் போலும்.
  சரியான புரிதல் இல்லாமலே இப்படி நட்புகள் விலகல் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பை சிலாகித்திருப்பதற்கும் நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 44. எங்கள் வீட்டிலெல்லாம் குமுதம் படிக்க விடமாட்டார்கள் என்று சிலர் வீட்டுக் கட்டுப்பாட்டுப் பெருமை குறித்து சிலிர்த்த பொழுது, 'ஆவி மட்டும் என்னவாம்?' என்று இந்த சிறை கதையை நினைவு கூர்ந்தேன், ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவாச்சும் சாப்பிட அனுமதிக்கிற வெங்காய தோசைக்கும், என்றுமே வெங்காய தோசை, பூண்டு சட்னி என்று அனுமதிக்கிறதுக்கும் உள்ள வித்தியாசம்தான் ஜீவி சார். கல்கிதான் ரொம்ப வருடங்கள் வரை கொஞ்சம் அறம் பார்த்துக்கொண்டிருந்தது.

   நீக்கு
  2. ஆனாலும் குமுதம் கோபாலி அளவு இல்லை, இலையா?!!

   நீக்கு
  3. ஹாஹாஹா, வீட்டுக்கட்டுப்பாட்டுப் பெருமை குறித்து சிலிர்த்தெல்லாம் எழுதவோ/சொல்லவோ இல்லை, அந்தக் கால கட்டத்தில் பல வீடுகளிலும் இந்தக்கட்டுப்பாடு இருந்தே வந்திருக்கு. ஆனந்த விகடன் "சிறை" கதையை வெளியிடும்போது எனக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்தாச்சு. ஆகவே அதுக்கும் திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீட்டில் கட்டுப்பாடுகள் செய்ததற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பொதுவாக என் தலைமுறையில் பிறந்த பெண்களுக்கு ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள், மேற்பார்வைகள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் சிநேகிதி வீட்டுக்குப் போனால் கூட அண்ணாவோ/தம்பியோ துணை இல்லாமல் போக முடியாது. போனதும் இல்லை. அப்படியும் அப்பாவுக்குத் தெரியாமல் பெரியப்பா வீடு, தாத்தா வீடுகளில் குமுதம் படிச்சதையும் சொல்லி இருப்பேனே/இருக்கேனே! அது நினைவுக்கு வரதே இல்லையே! :))))) இது கிட்டத்தட்ட 80 வரை நீடித்தது. அதன் பிறகே பெண்களுக்குப் பரவலாக சுதந்திரம் என்னும் பெயர்.

   நீக்கு
 45. எம்.ஏ.சுசீலா அவர்கள் என் மகளுக்கும் நல்ல நட்பு உண்டு. என்னிடம் என் பதிவுகளை படித்து விட்டு பேசி இருக்கிறார்கள். அவர்கள் மொழிபெயர்ப்பு கதைகள் கொடுத்து இருக்கிறார்கள் என் மகளுக்கு படித்து இருக்கிறேன். அவர்கள் வலைத்தளத்தில் கருத்துக்கள் போட்டு இருக்கிறேன். இப்போது எழுதுவது இல்லை போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பக்கத்தில் அவர் இருந்ததால் எல்லோருக்கும் நண்பர்.  என் கமெண்ட் கூட தேடிப்பார்த்தால் அவர் பக்கத்தில் ஒன்றிரண்டு தேறும்!

   நீக்கு
 46. எம்.ஏ. சுசீலா அவர்கள் ஜெமோவின் முன் வரிசை வாசகர். தெரியுமோ, ஸ்ரீராம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. அது தெரியாது! மேலும், அதனால் என்ன!

   நீக்கு
  2. ஆமாம். அதனாலென்ன?...

   ஜெமோ என்றாலே தனிப்பட்ட உற்சாகம் பிறக்குமில்லையா?
   அதனால் தான்!

   நீக்கு
 47. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது, மழைக்கால நேரத்தில் யாருமற்ற சாலை நிறைய சிந்திக்க வைத்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 48. அதென்ன மழைக்காலம் என்றால் அப்பப்போ நினைவு கொள்கிற கொண்டாட்டம் கவிஞர்களுக்கு.

  மற்றும் ஒரு வியாழன், பட்டினப்பாலையிலிருந்து ஒரு கவிதையை எடுத்துப் போட்டு சிலாகித்துச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 49. கிரிகெட் சீஸ்ன நகைச்சுவை போல.
  குழந்தைகள் பிள்ளையாரிடம் பிரார்த்தனை செய்வது நன்றாக இருக்கிறது.
  குழந்தைகளின் இஷ்ட தெய்வம் பிள்ளையார்.

  பதிலளிநீக்கு
 50. மதன் இல்லாத வியாழனா? அடுத்து வரும் வியாழன் ஒன்றிற்கு மதன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் ஒன்றைக் கொடுக்கிதேன்..

  பதிலளிநீக்கு
 51. உறவுகள் பற்றி யார் எழுதினாலும்
  வெல்லக்கட்டி தான். அதுவும் சாங்கோ பாங்கமாக ஸ்ரீராம் எழுதினால் அதன் தித்திப்பிற்கு சொல்லவும் வேண்டுமா?..

  பதிலளிநீக்கு
 52. ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதை மிகப் பிரமாதம். உணர்வுகள் மிக்கக் கவிதை.

  உங்கள் அலுவலக அனுபவங்கள் போன்று எனக்கும் பணியில் ஓரிரண்டு உண்டு. பணியை விட என்னைப் பாதித்த ஒரு நிகழ்வு நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது என்னோடு மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்தவரை, ஹாஸ்டலில் நேர்ந்த சாதிச் சண்டையில் என் தவறு இல்லாமலேயே என் நண்பருடனான நட்பை இழக்க வேண்டியதானது. எனக்கு மனம் ரொம்பத் தவித்தது. அவர் என்னையும் தவறாக நினைத்திருப்பாரே என்று. அவர் எங்கள் பகுதிக்கு வர விடாமல் தடுத்திட, என்னால் அவருக்குத் துன்பம் வந்திடக் கூடாதே அவரை அடித்துவிடக் கூடாதே என்று இருதலைக் கொள்ளியாகத் தவித்த தருணங்கள். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் அதன் பின் பல வருடங்கள் கழித்து ஃபேஸ்புக் மூலம் திரும்பக் கிடைக்கபெற்றேன். என்னை நினைவில் வைத்திருந்தார். ஒருமுறை அழைத்துப் பேசியும்விட்டேன். அதன் பின் மனம் சமாதானம் ஆனது. அவருக்குக் காவல்துறையில் பணி. இதைப் பற்றி பதிவும் எழுதியிருக்கிறேன்.

  உங்கள் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..  சந்தேகங்கள் தீர்ந்தபின் சங்கடங்கள் விலகும்.  உங்கள் அனுபவமும் அப்படியே இருந்திருக்கிறது துளஸிஜி.

   நீக்கு
 53. எம் ஏ சுசிலா அவர்களை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நம் பதிவர் சகோதரி தேனம்மை அவர்களின் பதிவுகளில் தெரிந்துகொண்டதுண்டு. அவர்களைப் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

  மொழிபெயர்ப்பு பற்றி சுசீலா அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் மிகவும் பயனுள்ளவை. ஏனென்றால் மொழிபெயர்ப்பு என்பது எளிதல்ல. அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

  கிரிக்கெட் ஜோக்குகளை ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 54. நட்பிலும் சில சமயங்களில் இப்படி விரிசல்கள் வந்து விடுவதுண்டு.... பள்ளி காலத்திலேயே ஒரு நண்பர் முரண்டு பிடித்து கொள்ள ஒரு வருடம் கழித்து தான் அவருடன் சமாதானம் செய்து கொள்ள முடிந்தது. இன்னமும் அவர் நட்பு வட்டத்தில்...

  சுசீலா அம்மா சில வருடங்கள் தில்லியில் இருந்தார். அப்போது அவ்வப்போது சந்தித்தது உண்டு. தில்லி பதிவர்கள் சந்தித்த போது அவரும் வந்திருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னர் பழைய பதிவுகளில் படித்த நினைவு. நன்றி வெங்கட்.

   நீக்கு
 55. கவிதைக்கு ஒரு முன்னுரை எழுதி இருந்தேன்.  பின்னர் அது தேவை இல்லையோ என்று தோன்றியது.  எனவே அதை மறைத்து வைத்துள்ளேன்!  ஷிஃப்ட் அமுக்கி கவிதைக்கு மேலே நிரடினால் சில வரிகள் முன்னுரை கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 56. அட! அது தவறாக நேர்ந்த காலியிடம்
  என்று நினைத்தேன்.

  அதிலும் ஒரு விஷயம் உள்ளடங்கியிருக்கிறதா?

  பதிலளிநீக்கு
 57. ஹா.ஹா..ஹா.. என்றால் பெண்பால்.

  ஹி..ஹி..ஹி. என்றால் ஆண்பால்.

  எதுக்கும் நெல்லை கிட்டே ஒரு வார்த்தை கேட்டு கன்பர்ம் பண்ணிக்கறது உத்தமம்... :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு ஏகபோகக் காப்புரிமை எனக்கே எனக்கு. இஃகி,இஃகி,இஃகிக்கும் :)

   நீக்கு
 58. கவிதை நன்றாக இருக்கிறது . ஜோக்ஸ் ரசிக்கவைக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!