செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

காற்றினிலே - 5 / 6 :: துரை செல்வராஜு

 

முந்தைய பகுதிகள் சுட்டி : பகுதி 1, பகுதி 2 , பகுதி 3, பகுதி 4 

சயன அறையின் கதவைத் தகர்த்துக் கொண்டு உள்ளே நுழைந்த கொடூரன் இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை.. 

புயலெனச் சுழன்று வந்த அவந்திகா கையில் வைத்திருந்த பிரம்ம தண்டத்தால் கொடூரனின் மண்டையில் ஓங்கி அடித்தாள்..

" ஆஆ!.. " மண்டையோடு நொறுங்கியது..  பெருகி  வழிந்த குருதி அவனது கண்களை மறைத்தது..

ரத்தத்தைத் துடைத்துக் கொண்ட முரடன் -  வெறியேறியவனாக அவந்திகாவைப் பற்றி இழுத்தான்.. ஏற்கனவே போர்க் கவசத்தை இழந்திருந்த அவள் நிலை குலைந்தாள்.. மூர்க்கனிடமிருந்து தப்பிக்க யத்தனித்த போது அவன் கையில்  சிக்கிக் கொண்ட.து அரையாடை....

ஒருவருக்கொருவர் இழுபறியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கிழிந்தது அரையாடை.. நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள் அவந்திகா..

கிழிந்திருந்த அரையாடைத் துகிலும் இடையில் பொற் சங்கிலியோடு இருந்த மேகலையுமே அவளது பெண்மையைக் காத்து நின்றன..

கைகளால் தன்னை மறைத்துக் கொண்ட அவந்திகா தரையில் நெளிந்தாள்.. உக்ரமாகிச் சீறினாள்.. மூச்சுக் காற்றில் அக்னி வெளிப்பட்டது..

சற்றே பயந்து தடுமாறிய கொடூரன் அந்த நிலையிலும் அவந்திகாவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்..

" எங்கேயெல்லாம் தங்கத்தை ஒளித்து வைப்பீர்கள்?.. " சிரிப்பு இன்னும் அடங்காதவனாக தரையில் நெளிந்து கொண்டிருந்த  அவந்திகாவை வெறியுடன் நெருங்கி மேகலையைப் பற்றியிழுப்பதற்கு முயன்றான்..

" இந்த நிலையிலும் எத்தனை அழகாக இருக்கின்றாய் நீ!.. " - அவனது கண்களில் காமம் ததும்பியது..

பெண்மையைத் தொழுது வணங்கி அதனை அதன் குண நலன்களால் நான்காக சிறப்பித்திருப்பது இந்த நாடு!.. - என்பது அந்த மூடனுக்குத் தெரிந்திருக்கவில்லை!..

ஈவு இரக்கம் என்றால் என்ன என்று தெரியாத கொடூரன்  அவந்திகாவை அடைவதற்காகக் காமவெறியுடன் குனிந்தான்..

அந்த நேரத்தில் ஸ்ரீ உஜ்ஜயினி கோயில் வாசலில் படுத்திருந்த  காளை துள்ளிக் குதித்தது..

" தேவி!.. " - என்றார் ஈஸ்வரன்...

" ஸ்வாமீ!.. " - என்றாள் அம்பிகை..

நிர்க்கதியாய் தரையில் நீண்டு நெளிந்து சீறிக் கொண்டிருந்த அவந்திகா ஸ்ரீஷாந்தினியின் மேனியில் ஸ்ரீ மஹாகாளி ஆர்ப்பவித்தாள்..

மின்னலென வலது காலை உயர்த்தினாள் அவந்திகா.. கொடூரனின் அடிவயிற்றுக் கீழாக எற்றி உதைத்தாள்... 

உலக்கையால் அடிபட்டதைப் போல் இருந்தது அவனுக்கு.. அலறினான்.. துடித்தான்..

ஏனென்று கேட்க ஆள் இல்லாமல் போன வேளையில் -

" ஏய்!.. " - என்ற பெருங்குரலுடன் மின்னலெனப் பாய்ந்து வந்த மித்ரா தரையில் உந்தி எழுந்து கொடூரனின் விலாவில் எலும்புகள் முறியும் படிக்கு முட்டித் தள்ளினாள்..

வாசலில் இருந்தபடியே அவள் தனது சக்கர வாளை சுழற்றி எறிந்திருக்கலாம்... அவனது பின்புறத்தைக் கிழித்திருக்கும் அது.. ஆனாலும்  யுத்த தர்மம் அது அல்லவே!..

எதிர்பாராத இருமுனைத் தாக்குதலால் வேரற்ற மரமாக விழுந்தான் மூர்க்கன்.. 

ஓங்காரமிட்டவாறு துள்ளி எழுந்த அவந்திகா தரையில் கிடந்த வாளைக் கையில் எடுத்தாள்..

" எழுந்து நில்லடா!.. "

அவந்திகா கூவினாள்.. உடை வாளை உயர்த்திப் பிடித்து - எழுந்திருக்கும்படிக்குக் குறிப்பு காட்டினாள்..

கீழே கிடந்த கொடூரன் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான்..

" யாகாவாராயினும் நா காக்க!.. " - தமிழ்த் தேசத்தில் இருந்து திருவள்ளுவர் என்ற மகரிஷி சொல்லி இருக்கின்றார்!.. "

தகாத வார்த்தைகளைப் பேசியவனின் வாயை நோக்கி வாளை வீசினாள்.. தாடையோடு தனியாய்ப் பிளந்து தொங்கியது கொடூரனின் கீழுதடு..

அலறினான்.. ரத்தத் துளிகள் எங்கும் தெறித்தன...

" மேல் கவசத்தைப் பற்றி இழுத்தது இந்தக் கை தானே!.. " - வாளைச் சுழற்றி வலமாக வீசினாள்.. இடக்கை இற்று விழுந்தது..

" இந்தக் கை தானே மேகலையைத் தீண்ட வந்தது?.. " - சுழற்றிய வாளை இடமாக வீசினாள்.. வலக்கை தனித்து விழுந்தது..

ரத்தச் சகதியானது சயனஅறை...

கதியற்றவனாக மீண்டும் கீழே விழுந்தான்..

" தொடையைத் தட்டினாய் அல்லவா!.. "

பிரம்ம தண்டத்தை எடுத்து வீசினாள் மித்ரா.. தாவிப் பிடித்த அவந்திகா தண்டத்தை ஓங்கியபடி நின்றாள்..

" கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல்!..  இது கூட அவர் சொல்லிக் கொடுத்தது தான்!.."

பிரம்ம தண்டத்தை அப்படியே கீழ் இறக்கினாள்.. தூளாகியது அவனது தொடை எலும்பு..

" இப்படி மாய்வதற்காகவா இந்த நாட்டுக்குள் வந்தோம்!.. " கண்ணீருடன் கதறினான்..

"  அடேய்.. யுத்தத்திற்கும் தாம்பூலம் கொடுக்கும் தேசமடா இது.. சத்ருவின் இடுப்புக்குக் கீழ் அடிப்பது எங்களது யுத்த தர்மம் அல்ல..  ஆனால், இம்மண்ணின் மங்கையர் தம் இடையைத் தேடி வந்த மடையன் நீ.. கடையன் நீ!.. உனக்கு இதெல்லாம் பொருந்தாது!.."

" இன்னொன்றும் கேள்..  கேட்டதும் கொடுப்பது புண்ணியம்.. கேளாமல் கொடுப்பது மஹா புண்ணியம்.. நீ கேட்கும் முன் உனக்கு ஒன்றைத் தரப் போகின்றேன்!.. "

அவந்திகா சிரித்தாள்..

முத்துகள் சிதறிடச் சிதறிடச் சிரித்தாள்..

கொதித்திருந்த மேனி குலுங்கிடக்  குலுங்கிடச் சிரித்தாள்..

குதித்தாள்.. குதுகலித்தாள்..

" கொடும்பகை வென்றனம்.. வென்றனமே! " - எனக் கூத்தாடிக் களித்தாள்..

ஸ்ரீ ருத்ரையின் தாண்டவத்தைக் கண்ணார தரிசித்த மித்ரா - பூந்துகில் ஒன்றினை எடுத்து வந்து அவந்திகாவின் மீது போர்த்தி விட்டாள்..

உயிர் வேதனையில் ஏதேதோ சொல்லிக் கொண்டே புரண்டான் அர்க்கன்..

அவந்திகாவின் இடுப்பில் இருந்த கட்டாரி - " நான்.. நான்!. " என்றது.. 

சீற்றம் அடங்காத அவள் அதை உருவிக் கொண்டாள்.. 

குருதி வழிந்தோட அலறிக் கொண்டிருந்த அசுரனின் அருகில் நின்றாள்..

" எங்கேயடா அது?.. "

அவன் ஏதோ சொன்னான்.. 

" எங்கேயடா அது?.. "

மறுபடியும் ஏதோ சொன்னான்.. 

" எங்கேயடா அது?.. "

மீண்டும் அதையே சொன்னான்..  

" நீ சொன்ன எதுவும் எனக்குப் புரியவில்லை..  அது புரிந்தால் என்ன?.. புரியாவிட்டால்தான் என்ன?..  " - என்று சப்தமிட்டபடி குறுவாளை அவனது குரல் வளையில் பதித்து இழுத்தாள்..

" களக்.. " - என்ற சத்தத்துடன் அவனது உயிர் ஓடிப் போனது..

" முறு.. முறு.. " - என, குரல்வளைக் குருத்தெலும்பில் இறங்கிய குறுவாள் நெஞ்செலும்பில் வந்து இடித்து நின்றது..

வெறி பிடித்தவளாக தொண்டைக் குழிக்குள் இருந்த கத்தியை மேலும் வலு கொண்டு இழுத்தாள்..

" நற.. நற.. " - என்று மார்பெலும்புகளைப் பிளந்தது கட்டாரி..

இருதயம். ஈரல், உதர விதானம் என,  ஒவ்வொன்றையும் கிழித்துக் கொண்டு வயிற்றில் இறங்கிய கட்டாரி - 

கும்பி, குடல், குறி - என அனைத்தையும் வகிர்ந்து பிளந்தது..

கட்டாரியை முத்தமிட்ட அவந்திகா எக்காளமிட்டுச் சிரித்தாள்...

" ஜெய் பவானீ..

ஜெய் பவானீ!.. "

யாருமற்ற அரச மாளிகை மித்ராவின் குரலால் அதிர்ந்தது..

அவந்திகாவை விட்டு விலகிய மஹாகாளி கங்கையில் மூழ்கியெழுந்தவளாய் ஸ்ரீ உஜ்ஜயினிக்குப் புறப்பட்டாள்..

' எங்கே அது?.. எங்கே அது?.. ' - என்று  தவித்திருந்த அவந்திகா ஆத்திரம் அடங்காதவளாகி  அசுரனின் நெஞ்சக் கூட்டினுள் கையை நுழைத்துத் தேடினாள்.. 

உதரக்குழியில் அறுந்து கிடந்த குடல் கொழுப்பு அனைத்தையும் அள்ளிப் போட்டு விட்டுத் துழாவினாள்..

ஏமாற்றமே மிஞ்சியது அவளுக்கு..

சதைப் பிண்டத்தின் இதயத்தில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை வழித்தெடுத்து அவந்திகாவின் நெற்றியிலும் தோள்களிலும் ஸ்தனங்களிலும் பூசி விட்டாள் மித்ரா..

வெற்றித் திருமகளாக வாளுடன்  நின்றிருந்த அவந்திகாவை ஆரத் தழுவிக் கொண்டு ஆசை தீர முத்தமிட்ட  - மித்ரா ,

" ஜெய் காளி!.. " என்று அவளது பாதந்தொட்டு வணங்கினாள்..

" இனி என்ன!.. " - என்பது போல மித்ராவின் புருவங்கள் உயர்ந்தன..

வாளை உயர்த்தி சுழற்றிக் காட்டினாள் அவந்திகா.. அடுத்த சில நொடிகளில் சயன அறையின் அலங்காரத் தூண்கள் உடைபட்டன...  அவற்றின் உள்ளிருந்து - அரக்கு நிறைக்கப்பட்ட நார்ப்பந்துகள் விழுந்து உருண்டன.. கற்பூரமும் குங்கிலியமும்  சந்தனத் தூளும் அறையெங்கும் சிதறின.. விதானத்து விளக்குகள் தட்டி விடப்பட்டன.. தளத்தில் எண்ணெய் வழிந்து பரவியது..

தூமணி மாடத்துத் தூங்கா மணி விளக்கைக் கையில் எடுத்தாள் மித்ரா.. மணி விளக்கின் ஒளிச்சுடர் திரைச் சீலையைப் பற்றிக் கொண்டது..

" மித்ரா.. ஆருயிர்த் தோழியே!.. மீண்டும் மீண்டும் பிறந்திருப்போம் வா!.. "


இரு கரங்களையும் சிறகுகளாக விரித்து நின்றாள் ராஜ குமாரி.. அவளது கரங்களுக்குள் ஐக்கியமானாள் மித்ரா சுபாஷினி.. அவளை இறுகத் தழுவிக் கொண்டாள் அவந்திகா ஸ்ரீஷாந்தினி..

அரண்மனையின் மேல் தளத்தை அக்கினியும் ஆவலுடன் தழுவிக் கொண்டிருந்தது..

மித்ராவின் கண்களில் நீர்.. தோழியின் கண்ணீரைக் கண்ட அவந்திகா - வாழ்வின் முதல் முறையாகக் கலங்கினாள்..

ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி உப்பரிகைக்குச் சென்றனர்..

இமயத்தின் பனிக் காற்று கண்ணீருடன் விடை கொடுத்தது.. கோட்டை மதிலுக்கு அப்பால் குன்றின் சரிவில் சலசலப்புடன்  ஷிவானிகங்கா நதி.. 

" ஹே.. லோகேஸ்வரி.. என் தாயே!.. இந்த தேசத்தைக் காத்தருள்வாயாக.. இதுநாள் வரையிலும் நான் காத்திருந்த நற்சிந்தனை, நற்செயல், நல்லொழுக்கம், கற்பெனும் நன்மலர் -  அனைத்தையும் உனது திருவடியில் சமர்ப்பிக்கின்றேன்.. இனிவரும் பிறவிகள் அனைத்திலும் இவற்றை எனக்குத் தந்து அருள்வாயாக!.. "

மனமுருகிப் பிரார்த்தித்தனர்..

நடக்க இருப்பதைக் காணச் சகிக்காத கதிரவன் மேகத்தினுள் மறைந்து கொண்டான்...

பரிதவித்துக் கலங்கிய ஷிவானிகங்கா - வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்..

மேல் மாடத்திலிருந்து விண்ணிற்குத் தாவிய இருவரும் - மண்ணை நோக்கிச் சரிந்தனர்..

ஸ்ரீ மஹா காளீஸ்வரியின் திரு அருளால் செண்பகப் பூக்களாகி உதிர்ந்தனர்..

" வாருங்கள் என் செல்வங்களே!.. " - என்று வரவேற்ற நிலமகள்  உதிர்ந்த மலர்களைத் தன் குழலில் சூட்டிக் கொண்டாள்.

(தொடரும்) 


81 கருத்துகள்:

  1. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்து அனையது உயர்வு..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    காற்றினிலே தொடரின் ஐந்தாம் பகுதியைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகுக்கு அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. சிவ தரிசனத்துடன் இன்றைய பதிவு..மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  5. இந்தக் காளையை எங்கே பிடித்தீர்கள்!.. அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
  6. தேவியின் உக்ர தாண்டவம்!..
    மெய் சிலிர்க்கின்றது...

    பதிலளிநீக்கு
  7. இன்றைய பதிவின் சிவப்பு
    வண்ணம் - வெற்றித் திலகத்தின் பிரதிபலிப்போ!..

    சித்திரச் செல்வருக்கு அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  8. அரக்கனின் போர்க்காட்சிகள் தத்ரூபமாக பார்ப்பது போலிருந்தது ஜி

    இறுதிப் பகுதியை படிக்க ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதையில் தேவி அவந்திகாவின் மேல் படர்ந்த அன்னை மஹாகாளியின் உக்கிரம் படிக்கையில் பயத்துடன் சிலிர்ப்பைத் தருகிறது. அந்தக் காலத்தில் கொடிய அசுரனை கொன்ற அன்னையின் கோபாவேசத்தை நேரில் கண்ட உணர்வு.

    ஒரு உண்மை நிகழ்வை நேரில் பார்ப்பது போல வார்த்தைகளை பின்னிப் பிணைத்திருந்ததை ரசித்தேன். இப்படி எழுத தங்கள் ஒருவரால்தான் முடியும். அந்த ரத்தினக்கல் இந்தப் பிறப்பில் எவ்வாறு அவந்திகாவிடம் மறுபடி வந்து சேருகிறது என்பதை அறிய,அது தொடர்பான கதையின் இறுதிப் பகுதியையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

    கதைக்குப் பொருத்தமாக அன்னை உமா மகேஷ்வரர் காளையுடன் கூடிய படம் அழகாக உள்ளது. உப்பரிகையிலிருந்து கங்கையாற்றில் குதிக்கும் அவந்திகா, மித்ரா படமும் நன்றாக வரையப்பட்டுள்ளது. கதைக்கேற்ற ஓவியங்களை தேர்ந்தெடுத்து நன்றாக வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      வழக்கம் போல கௌதம் அவர்களது ஓவியங்கள் சிறப்பு..

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    சென்ற வாரம் வீட்டில் மகளுக்கு ஜுரம். நான்கு நாட்கள் படுத்தி எடுத்து விட்டது. அதனால் அப்போது எல்லோரின் பதிவுகளுக்கும் உடன் வர இயலாமல் இருந்து விட்டேன். நேற்றிலிருந்து பேத்திக்கும், எனக்கும் ஜுரம். நேற்று இரவு உடல் வலி பொறுக்க முடியாமல் ஒரு டோலோவை விழுங்கி விட்டதில் எனக்கு இப்போது குறைந்துள்ளது. உடன் இன்றைய கதையறியும் ஆவலில் இங்கு வந்து விட்டேன். நமக்கு எப்படியாயினும் தாங்கிக் கொள்ளலாம். குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதுதான் மனதுக்கு வருத்தமாக உள்ளது. இன்றைய கதையில் வந்து அனைவருக்கும் அருளியிருக்கும் அருள் ததும்பும் அன்னை உமா மகேஷ்வரரை அனைத்தும் விரைவில் நலமாக பிரார்த்தித்து கொண்டேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உமா மகேஷ்வர் அருள் நிச்சயம் கிடைக்கும். கவலை வேண்டாம்.

      நீக்கு
    2. @கமலா, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் விரைவில் உடல் நலம் தேறி சுகமாக வாழப் பிரார்த்தனைகள். உமா மஹேஸ்வரர் அருள் புரிவார்.

      நீக்கு
    3. கமலா அக்கா..   உடல்நலன்தான் முக்கியம்.  ஓய்வெடுங்கள்.  உங்கள் பேத்தியும் விரைவில் பூரண  குணமாக பிரார்த்திப்போம்.

      நீக்கு
    4. வணக்கம் அனைவருக்கும்.

      உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். இன்று ஏனோ இன்றைய கதையில் உமா மஹேஷ்வரரை படத்தைப் பார்த்ததும், எங்கள் உடன் நலனைப் பற்றிய விபரம் சொல்ல வேண்டுமென தோன்றியது.அனைத்தும் அவர் சித்தம். அவர் பெயர் கூறியே நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிரார்த்தித்தது மனதுக்கு நிம்மதியாக உள்ளது. உங்கள் அனைவரின் நல் வாக்கிற்கு மிகுந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. குழந்தை விரைவில் நலம் அடைவாள்.. கவலை வேண்டாம்...

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஆரோக்கிய வாழ்வு என்றும் நம்முடன் இருக்க இறைவன் அருள
    வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. ப்ரதோஷ காலத்தில் உமா மஹேஸ்வர தரிசனமும்
    நந்தி தரிசனமும் கிடைக்கிறது.

    குருதி கொப்பளிக்கும் வரிகள் நரசிம்ம அவதாரத்தைக் கண்முன் கொண்டு
    வந்தன.
    அதற்கேற்ற மாதிரி படம் வரைந்திருக்கும் கௌதமன் ஜியின்

    திறமை அருமை.
    அவர்கள் குதிக்கும் வேகமும் ,சுற்றிச் சூழும் தீயும்
    அதற்கான செந்தமிழ் வசனங்களும் மிகவும்
    சிறப்பு.
    திகில் சூழ் கதையின் அடுத்த பாகத்துக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவர்கள் குதிக்கும் வேகமும் ,சுற்றிச் சூழும் தீயும்
      அதற்கான செந்தமிழ் வசனங்களும் மிகவும்
      சிறப்பு..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  15. அன்பின் கமலாமா,
    இத்தனை உடல்வலியிலும்
    கதையைப்
    படிக்கும் ஆர்வமும் கடமை உணர்ச்சியையும்
    பார்த்து மகிழ்கிறேன்.

    சீக்கிரம் குழந்தைக்கும் சரியாகட்டும் . ஓய்வெடுக்க நேரம்
    இருக்கட்டும். நலம் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      உங்களுடைய அன்பு மிகுந்த நல் வார்த்தைகளுக்கும். பிரார்த்தனைகளுக்கும் என் மனம நிறைந்த நன்றி சகோதரி. குழந்தைக்கும் விரைவில் சரியாயாட்டும் என்ற வார்த்தைகள் மகிழ்வை தருகின்றன.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நல்லோர் இல்லங்கள்
      நாயகன் காக்க..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  16. @ கமலா ஹரிஹரன்..

    // குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதுதான் மனதுக்கு வருத்தமாக உள்ளது.//

    கடுமையான ஜூர வேகத்திலும் கதைக் களத்திற்கு வருகை தந்திருக்கும் தங்களுக்கு எங்களது அன்பின் வணக்கம்..

    தங்களுக்கும் பேத்திக்கும் ஜூர வேகம் விரைவில் குறைந்து தாங்கள் இருவரும் பூரண நலம் அடைபதற்கு எம்பெருமானையும் அன்னை மகாமாரியையும் வேண்டிக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கனது அன்பான ஆறுதல் மிகுந்த வார்த்தைகள் ஜுரத்தின் வேகத்திலும் மனதுக்கு உற்சாகமளிக்கிறது. தங்களது மனமார்ந்த பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி சகோதரரே.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. இந்த வார கதைப் பகுதிக்கான முதல் படம் சிறப்பாக அமைந்து விட்டது. வடக்கத்திக் கோயிலுக்கான கோபுர அமைப்பு நுண்ணிய அவதானிப்பு.
    கதைக்கேற்ப படத்தேர்வுகளில் ஆழந்த கவனம் செலுத்துவதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஆர்பவித்தாள் -- இதை விட பொருத்தமான சொல் இருக்க முடியாது என்பது போல தேர்ந்தெடுத்தெடுப்பு.

    பதிலளிநீக்கு
  19. பதில்கள்
    1. அண்ணா.. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல விறுவிறுப்பாகச் செல்கிறது. அடுத்து என்ன என மனம் பரபரக்கிறது. அவந்திகா/மித்ராவின் முடிவு மனதை வருத்தினாலும் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்பது அவர்களுக்கும் ஏற்கெனவே தெரிந்திருப்பது ஆச்சரியமாகவும் இருக்கிறது. வழக்கம் போல் படங்களை கௌதமன் நன்றாகக் கதையை உள்வாங்கி அதற்கேற்ப வரைந்திருக்கார். பாராட்டுகள். அடுத்த வார நிறைவுப் பகுதிக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானோ நீங்களோ -
      எப்போது பிறவாதிருந்தோம்!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  23. துரை அண்ணாவின் தமிழ் அழகு! அழகு உக்ரமாகவும் மிளிர்கிறது! விறு விறு என்று செல்கிறது...இந்த முந்தையது தற்போதோடு எப்படிப் பொருந்தப் போகிறது என்பதும் கொஞ்சம் யூகம் செய்ய முடிகிறது...அந்த வங்காளியிடம் அந்த நாகக்கல் இருக்கிறதா அப்படி என்றால் அடுத்த பகுதியில் தெரியும் என்று நினைக்கிறேன்.

    எனக்கு எழுந்த கேள்விகள். துரை அண்ணா விளக்குங்க ப்ளீஸ்.....

    அவந்திகாவும் மித்ராவும் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அவர்கள்தான் அந்தக் கயவனை கொன்று வென்றுவிட்டார்கள் அப்படியே அந்த நாகரத்தினக் கல் அவர்கள் உக்ரத்துடன் தேடியதால் டக்கென்று கிடைக்கவில்லை ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் தேடியிருக்கலாமோ...அவர்கள் மீண்டும் பிறப்போம் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பகுதிதான் புரியவில்லை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      தங்களது வினாக்களுக்கு விடையை எனது தளத்தில் தருகின்றேன்..

      நன்றி சகோ..

      நீக்கு
  24. கமலாக்கா ஆ உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் புது உருவக் கொரோனாவா மகளுக்கு வந்ததும் இப்போது உங்களுக்கும் பேத்திக்கும்? பயப்படாதீங்க அக்கா. சரியாகிவிடும். கவலை வேண்டாம். குழந்தைக்கும் சரியாகிவிடும். பெரியவர்களுக்கு ஒரு நாளில் கொஞ்சம் அடங்குவதாகவும் சிறியவர்களுக்கு ஒரு மூன்று நாட்கள் அப்புறம் சரியாகிவிடுகிறது என்றும் தெரிகிறது. எனவே கவலை வேண்டாம் சரியாகிவிடும் அக்கா.

    உங்கள், மற்றும் பேத்த்டியின் உடலநலன் பிரச்சனைகளுக்கு நடுவிலும் என் பதிவுக்கு வந்து கருத்திட்டிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி கமலாக்கா. ப்ளீஸ் ப்ளாக் இருக்கும் உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கமலாக்கா ஆ உடம்பு இப்போது எப்படி இருக்கிறது?//

      பாவம்..  அவங்களை ஏன் மிரட்டறீங்க கீதா?!

      நீக்கு
    2. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி.

      தங்களது அன்பான ஆறுதல் மொழிகள் மனதிற்கு இதம் தருகின்றன. நாங்கள் இரண்டு வருடங்களாக கூடுமானவரை அவசியம் ஏற்பட்டால் ஒழிய படி தாண்டாதபடிக்குத்தான் இருந்து வருகிறோம்.அதுவும் நான் எங்குமே செல்லவதில்லை. எல்லாமே ஆன்லைன் வர்த்தகந்தான்..அப்படியும், மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள் என்கிற மாதிரி, இடம் தெரியாமல் வந்திருக்கும் விருந்தாளியும் மூன்று நாளில் கிளம்பி விடுவார் என்பதான தங்களது விபரமான பதில் மனதிற்கு நிம்மதியை தருகிறது. தங்களது அன்பான நல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      /பாவம்.. அவங்களை ஏன் மிரட்டறீங்க கீதா?!/

      நான் நிச்சயமாக மிரளவில்லை.:))))) என்றும் வருவது வந்துதான் தீரும் என்ற கொள்கையில் நான் அசையாத நம்பிக்க கொண்டவள். இப்போது தங்களனைவரின் அன்பான ஆறுதல்கள் என் மன விசாரங்களை குறைத்து விட்டது. ஆனால், வீணில் உங்களையெல்லாம் சற்று கலவரபடுத்தி விட்டோமோ என்ற கவலையுந்தான் இப்போது கொஞ்சம் வருகிறது. தங்களைவனைவரின் அன்பிற்கும். ஆறுதல்களுக்கும் மிக்க நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. பாவம்.. அவங்களை ஏன் மிரட்டறீங்க கீதா?!//

      ஸ்ரீராம் அக்காவை மிரட்டிட்டேனோ!? அக்கா சாரி கமலாக்கா...நீங்க மிரளமாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் நம்ம ஸ்ரீராம் சொன்னதும் சரிதானே...

      கீதா

      நீக்கு
    5. நன்றி கமலாக்கா உங்கள் பதிலுக்கு..நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள்தான். இருப்பது நல்லதுதான்..அக்கா .ப்ளாக் வருவது மனதிற்கு இந்தச் சமயத்தில் சந்தோஷம்தான் இருந்தாலும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. கவனிச்சுக்கோங்க

      கீதா

      நீக்கு
    6. தாங்கள் மீண்டும் வந்து தந்த உங்களது அன்பான பதிலுக்கு என் நன்றிகளும் சகோதரி. தங்கள் சொல்படி உடம்பை கவனித்துக் கொள்கிறேன். உங்கள் எல்லோரின் அன்பிற்கும் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை. நன்றி சகோதரி.

      நீக்கு
    7. //நம்ம ஸ்ரீராம் சொன்னதும் சரிதானே...//

      அட அது ஜோக்குங்க...!​ இந்த நகைச்சுவைம்பாங்களே... அது!

      நீக்கு
    8. ஹா ஹா.ஹா. நான் புரிந்து கொண்டேன். இருவருக்குமே வருத்தம் வேண்டாம்.

      நீக்கு
    9. குழந்தை விரைவில் நலம் அடைவாள்.. கவலை வேண்டாம்..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  25. கதை ஓட்டமும் சிறப்பு படங்களும் சிறப்பு. அடுத்து காண ஆவலுடன் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. கௌ அண்ணா அப்ப சொல்ல விட்டுப் போச்சு. படம் சூப்பரா இருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. சிவ தாண்டவம் போல் தேவி உக்ர தாண்டவம் இப்பகுதி!

    இனிய தமிழ் நடையில் விறு விறுப்பு. அடுத்த நிறைவுப் பகுதிக்கு ஆவலுடன் தொடர்கிறேன்.

    கௌதமன் சார் அவர்களின் படம் மிகப் பொருத்தம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. ருத்ரதாண்டவம் போல இது தேவியின் தாண்டவம். படிக்கும்போது உடல் சிலிர்த்தது. அடுத்த பகுதிக்கான ஆவலுடன் நானும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  29. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்கள் இந்நேரத்துக்கு மேல் இங்கு வருவார்களேயானால் அவசியம் இதைக் கவனித்துச் செய்யவும்..

    1) சாதாரண உப்பினை வலக்கையில் எடுத்து வீட்டில் உள்ளவர்கள் அனனைவரையும் கிழக்கு முகமாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே திருஷ்டி சுற்றி விட்டு - அந்த உப்பினை நீரில் விட்டு விடவும்.. தினமும் இவ்வாறு மாலையில் விளக்கேற்றிய பின் செய்யவும்..

    2) உறங்கும் இடத்தில் எலுமிச்சம் பழம் ஒன்றை வைத்து காலையில் அதனை எடுத்து இரண்டாக நறுக்கி குங்க்குமத்தில் தோய்த்து வாசலில் பிழிந்து விடவும்..
    வாரம் இரண்டு முறை செய்யவும்..

    ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இந்த உப்பை வைத்து சுற்றிப் நீரில் போட்டு கரைய வைப்பது நான் என் குழந்தைகளின் பால்ய பருவத்திலிருந்தே செய்து வருகிறேன். இப்போது அவர்கள் குழந்தைகளுக்கும், சமயத்தில் பெரியவர்களான எங்களுக்கும் இப்படித்தான் செய்து வருகிறேன். வெள்ளி, ஞாயறுகளில் விளக்கேற்றியவுடன் குழந்தைகளுக்கு கற்பூரம் சுற்றி வாசலில் பொருத்தி விடுவேன். தாங்கள் கூறிய இரண்டாவதை இதுவரை செய்யவில்லை. அதையும் செய்கிறேன். அருமையான கண்ணேறு கழிக்கும் முறைகளை அன்பு கூர்ந்து வந்து அறிவுறுத்தியதற்கு மிக்க நன்றி. தங்கள் அக்கறைபான அன்பிற்கு மிக மிக நன்றிகள். வேறென்ன சொல்வது? நன்றி சகோதரரே.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. இதைத் தான் நல்ல நேரம் என்று சொல்வது.. இன்றைய பொழுதில் இந்த விஷயம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும்.. என்று நினைத்திருந்தேன்..

      எல்லாவற்றையும் ஐயனும் அன்னையும் நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது நிதர்சனம்..

      ஓம் சக்தி ஓம்.

      நீக்கு
    3. எனக்கு உடம்பு சரியில்லை ரோகநிவாரணி அஷ்டகம் படித்தேன்.
      எனக்கு இன்றைய பொழுதில் கிடைத்து விட்டது.

      எல்லாவற்றையும் ஐயனும், அன்னையும் நோக்கி கொண்டு இருக்கட்டும் அதுவே ஆறுதல், பலம் எல்லாம்.

      நன்றி.

      நீக்கு
    4. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தது எனக்கு இப்போது தான் தெரியவந்தது..

      அனைவரையும் அம்பாள் காத்து அருள்வாளாக..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  30. கதை மிக நன்றாக இருக்கிறது.

    //நிர்க்கதியாய் தரையில் நீண்டு நெளிந்து சீறிக் கொண்டிருந்த அவந்திகா ஸ்ரீஷாந்தினியின் மேனியில் ஸ்ரீ மஹாகாளி ஆர்ப்பவித்தாள்..//

    அதன் நடந்த அனைத்தும் காளியின் உக்ர ஆட்டம்.
    மேனி சிலிர்த்து போகிறது.

    தொடர்ந்து படிக்க முடியாமல் போய் விட்டது.
    நன்றாக இருக்கிறது கதை தொடர்கிறேன்.
    கெளதமன் சார் படமும் பொருத்தமாக அமைந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நடந்த அனைத்தும் காளியின் உக்ர ஆட்டம்.
      மேனி சிலிர்த்து போகிறது..//

      அன்னை அவள் அல்லால் ஏது கதி?..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!