வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

வெள்ளி வீடியோ : கல்வி என்று பள்ளியிலே... கற்று வந்த காதல் மகள்...

 முதலில் நேயர் விருப்பம் :

2012 ல் வெளியான படம் தாண்டவம். அனுஷ் நடித்த படம். விக்ரம் உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தில் எனக்கு பிடித்த ஒரே பாடல் ஒரு பாதி கதவு பாடல்தான். அதைத்தான் பானு அக்காவும் நேயர் விருப்பமாகக் கேட்டிருக்கிறார்!

ஏ எல் விஜய் இயக்கத்தில், நா முத்துக்குமார் பாடலுக்கு ஜி வி பிரகாஷ் இசை.

பாடலை ஹரிசரணும் வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடி இருக்கிறார்கள்.

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி...
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி...
இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
இன்றேனே நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே




======================================================================

100 நாட்களைக் கடந்து ஓடிய படம். ராம அரங்கண்ணல் தயாரிப்பில் பீம்சிங் இயக்கத்தில் 1964 ம் வருடம் வெளியான பச்சை விளக்கு படத்தில் அத்தனை பாடல்களும் அருமையான பாடல்கள். கண்ணதாசன் பாடல்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி விஜயகுமாரி, எஸ் எஸ் ஆர் நடித்த படம்.

இந்தப் பாடல் பி சுசீலாவும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடிய இருகுரலிசை! அந்நாட்களில் இந்தப் பாடலில் சுசீலாம்மாவின் குரலைவிட ஈஸ்வரியம்மாவின் குரல் நன்றாய் இருப்பதாக சிலாகித்தவர்கள் உண்டு.

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி?
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி?
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி
வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே
பேசலாகுமோ தோழி
இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி
கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே
கலக்கம் வராதோ தோழி
 
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பான் மனைவி

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?



"1976-1979 அண்ணாமலை சர்வகலாசாலை பொருளாதாரம் படித்த கல்லூரி நாட்கள், அன்புத் தோழர்கள், நாயர் டீக்கடை, கீதா கேண்டீன், என்.சி.சி. அலுவலகம், கோகலே ஹால், ஸாஸ்த்ரி ஹால், டைப்ரைடிங் வகுப்புகள், ஆரோக்கியமான அப்பா அம்மா உடனான வாழ்க்கை, திங்கள் பிரம்பராயர் கோவில், வியாழன் சரபேஸ்வரர் கோவில், வெள்ளி தில்லையம்மன் கோவில், ராஜன் குளிர்பானக் கடை லெஸ்லி, மான்ஸ்ரோ தேங்காய் பன், ஹாஸ்டல் புலவு குருமா நினைவுகள் வருகின்றன இந்த பாடலுக்கும் மேல்கண்ட நினைவுகளுக்கும் சம்பந்தம் இல்லை தான். பாடல் காலகட்டத்தில் நிகழ்ந்தவை என்பது மட்டுமே"

இந்த அபிப்ராயம் பாடல் இடம்பெற்ற யு டியூப் பக்கத்தில் இருக்கிறது! ஒரு பாடல் என்பதை அந்த காலகட்டத்தில் ரசித்தது மட்டுமல்ல, இப்போது கேட்கும்போது பாடலுடன் என்னென்ன நினைவுகள் எல்லாம் சேர்ந்து வருகிறது பாருங்கள்.

இந்தப் பாடல் டி எம் எஸ்ஸும் பி சுசீலாவும் பாடி இருக்கும் பாடல். 'குத்து விளக்கெரிய' என்று சட்டென ஆரம்பிக்கும் வரிகள் திருப்பாவைப் பாடலின் முதல் வரியிலிருந்து எடுத்தது! படித்த மனைவிக்கும் படிக்காத கணவனுக்கும் இருக்கும் உணர்வுகளைச் சொல்லும் பாடல் என்று நினைக்கிறேன். நான் படம் பார்க்கவில்லை. 'கல்வி என்ற பள்ளியிலே கற்றுவந்த காதல்மகள் காதலெனும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ' என்கிற வார்த்தைகள் அந்த எண்ணத்தை ஊர்ஜிதம் செய்கின்றன!

அப்புறம் ஒரு சோக இசையைத் தொடர்ந்து இனிமையான குரலில் பாடல் ஆரம்பம்.

குத்து விளக்கெரிய... கூடமெங்கும் பூ மணக்க... மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க..

வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம் பாவை தன்னை

கண்ணழகு பார்த்திருந்து...  காலம் எல்லாம் காத்திருந்து...
பெண்ணழகை ரசிப்பதற்கு.... பேதை நெஞ்சம் துடி துடிக்க...
பேதை நெஞ்சம் துடி துடிக்க

வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னி அவள்
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை

பக்கத்தில் பழமிருக்க...  பாலோடு தேனிருக்க...
உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன்
உட்கார்ந்த மன்னன் அவன்

கல்வி என்று பள்ளியிலே...  கற்று வந்த காதல் மகள்...
காதலென்னும் பள்ளியிலே... கதை படிக்க வருவாளோ...
கதை படிக்க வருவாளோ

121 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இசையோடு மகிழ்ச்சி மலரும் வெள்ளிக்கிழமை போல
    எல்லோர் வாழ்வும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. தாண்டவம் படம் எப்போது டி.வி.யில் வந்தாலும் அனுஷ்காவிற்காக பார்ப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
    மற்ற பாடல்களும் இனிமை. "வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணனவன்.."பாடலை QFRல் மிக நன்றாக பாடினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா. 'தாண்டவம்' ஓடிட்டியிலும் இருக்கிறது.

      நீக்கு
    2. எபப்போதோ ஒரு முறை போடும் பொழுது அட! அனுஷ்கா படம் என்று ரசிக்கலாமே ஒழிய, தினசரி பார்க்க முடியாது.

      நீக்கு
  3. இன்று பக்கம் திறந்ததும் பார்த்த பாடல் வரிகள்
    இன்ப அதிர்ச்சி.
    சிங்கம் ரசிக்கும் பாடல். பச்சைவிளக்கு படம் நண்பர் சுந்தரத்துடன்
    பார்த்தாராம்.

    அந்தப் படப் பாடல் என்று என்னிடம்(!!) மெச்சிப்
    பேசினார்:)
    மிக நன்றி ஸ்ரீராம். பதிவைப் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. இந்த செய்தி எனக்கு அதே போல இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. நன்றி அம்மா.

      நீக்கு
  4. தாண்டவம் படம் பார்த்ததில்லை.
    ஆனால் பாடல் மிக இனிமை.

    இருவர் குரலும் இசைந்து ஒலிப்பது அதீத சிறப்பு.

    அனுஷ்காவின் அழகும் விக்ரம் நடிப்பும்
    சொல்லவே வேண்டாம். அருமையாகத் தேர்ந்தெடுத்த பானுவுக்கு
    நல் நன்றி. பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் தான்.

    பாடல்வரிகளில் தான் பிழையோடு

    பிரசுரித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா அம்மா..  தற்போதைய பாடல்கள் மனதில் பதிவதே இல்லை!

      நீக்கு
  5. பச்சை விளக்குப் படமும் நான் சென்னையில் படித்த போது வந்த
    படம்.
    பிறகு தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    சிவாஜியின் பாடல்கள், விஜயகுமாரி, புஷ்பலதா, SSR+ AVM RAJAN

    எல்லோருமே மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
    அத்தனை பாடல்களும் அத்தனை இனிமை.

    அவள் மெல்லச் சிரித்தாள் பாடலும் சுசீலாம்மா குரலில் அத்தனை
    அழகாக இருக்கும்.

    விஜயகுமாரி, புஷ்பலதா நல்ல அக்கா தங்கைகளாக
    நிறைய படங்களில் உலா வந்தார்கள்.
    சிறப்பாகத் தமிழ் பேசி , படத்தில் லயிக்க வைத்த
    நடிகைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை விளக்குனு 2020 ஆம் ஆண்டில் கூட ஒரு படம் வந்திருக்கு போல. கூகிளில் பார்த்தால் அதான் வருது. :)))))

      நீக்கு
    2. இந்த பச்சை விளக்கு படம், 1964 ல் வந்தது. இந்தப் படம் பார்த்தது எப்பொழுதுமே எண் நினைவில் இருக்கும். ஏன் என்றால், இந்தப் படத்தை நாகப்பட்டினம் பாண்டியன் தியேட்டரில் வெளியிட்ட சமயத்தில், இந்தப் படத்தோடு ஜவஹர்லால் நேருவின் இறுதி யாத்திரையும் காட்டப்பட்டது. மிகவும் வேதனையான செய்தியான அதை அப்போது தியேட்டரில் பார்த்து பலரும் கண்ணீர் விட்டு அழுதது மறக்கமுடியாத நிகழ்ச்சி.

      நீக்கு
    3. நான் சொன்னது ஜிவாஜியோட பச்சை விளக்கு இல்லை கேஜிஜி அவர்களே! இது ஏதோ ஒரு பச்சை விளக்கு. த்ரில்லர் படம் போல!

      நீக்கு
    4. ஆம். நானும் கவனித்தேன். தற்சமயம் ஒரு பச்சை விளக்கு வந்திருக்கிறது என்பதை!

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. நுழைஞ்சதுமே ரோபோ தொல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! முதல் பாடலோ/படமோ தெரியவே தெரியாது. சமீபத்திய படங்கள் அவ்வளவாய்ப் பரிச்சயமே இல்லை. பாடல்களும். ஆனால் பச்சை விளக்குப் படம் தொலைக்காட்சி/திரை அரங்கு ஆகியவற்றில் பார்த்திருக்கேன். பாடல்களும் பிரபலமானவையே. தூது சொல்ல பாடல் நான் படிச்ச காலகட்டத்தில் தோழிகளுக்குள் சங்கேதமாய்ப் பாடிப்பாங்க. முதலில் எல்லாம் புரியவில்லை. அப்போ ஒன்பதாம் வகுப்புனு நினைக்கிறேன். ஜிவாஜி புகைவண்டி ஓட்டுநரா வந்தது ரொம்பவே பேசப்பட்ட காலம். எங்க அப்பா/சித்தப்பா (அம்மாவோட தங்கை கணவர்) எல்லாம் ஜிவாஜி ரசிகர்கள். ஜிவாஜி ஏதோ ஒரு படத்தில் முன்னுச்சித் தலை மயிரை ஸ்டைலாக வாரி இருப்பார். சித்தப்பா (மருத்துவர்) அதே மாதிரி வாரிப்பார். வரலைனா எங்களில் யாரையேனும் வாரி விடச் சொல்லுவது உண்டு. அவ்வளவு பைத்தியம். அதே போல் தங்கை மேல் உயிரையே வைத்திருந்தார். பாசமலர் பாடல்களை எல்லாம் உருகி உருகிக் கேட்பார்.

    அதெல்லாம் சரி, நான் மட்டும் ஏன் இப்படி ஜிவாஜினா சிப்புச் சிப்பாச் சிரிக்கிறேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை விளக்கு வந்த காலத்தில் நான் ஏழாம் வகுப்பு முடித்திருந்தேன். ஆக, நீங்க எனக்கு அக்கா என்று தெரிந்துவிட்டது! சிவாஜி முன்னுச்சி முடி ஸ்டைல் 'பாலும் பழமும் ' படம். நீங்க ஜிவாஜின்னா சிப்பு சிப்பா சிரிப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு சைக்கலாஜிகல் பின்னணி உள்ளது.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))) நான் அக்காவாகவே இருக்கேன். தப்பெல்லாம் இல்லை. ஆனால் நான் எஸ் எஸ் எல்சி முடிச்சப்போ எனக்குப் பதினைந்து வயது ஆகலைனு சமீபத்தில் தான் ஏதோ ஒரு பதிவில் ஏதோ ஒரு காரணத்திற்குச் சொல்லி இருந்தேன். அது போகட்டும். அது என்ன சைகலாஜிகல் பின்னணி? ஜிவாஜியின் நடிப்பைப் பார்த்து எனக்குப் பொறாமைனு சொல்லிடுவீங்களோ? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. அந்தக் கேள்விக்கு புதன்கிழமை கேள்வி/பதிலுக்குப் பதில் சொல்லுங்க கேஜிஜி சார்!

      நீக்கு
    4. புகைவண்டி ஓட்டுனரா நடிச்சது அப்போது புதுமையாய் இருந்ததாம்.  படத்தில் சாரம் சேர்க்க அப்புறமாய் ஏ வி எம் ராஜன் காட்சிகளை சேர்த்தார்களாம்.

      நீக்கு
  8. இந்த ரோபோவோட போதும் போதும்னு ஆயிடுத்து! கோவிச்சுண்டு போறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வரும்.  நம் பிளாக்கில் நமக்கு வராது.  மற்றவர்கள் பிளாக்கில் கமெண்ட்டும்போது வரும்.  எனக்கு இன்னும் தொடங்கவில்லை!

      நீக்கு
    2. ஹை ஹை ஹை கீதாக்கா உங்களுக்கு வந்துருச்சா...ஆ அப்ப அடுத்து எனக்கு வந்துருமே....இதுவரை வரலை டச் வுட்!!

      கீதா

      நீக்கு
  9. ''இந்தப் பாடல் பி சுசீலாவும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடிய இருகுரலிசை! அந்நாட்களில் இந்தப் பாடலில் சுசீலாம்மாவின் குரலைவிட ஈஸ்வரியம்மாவின் குரல் நன்றாய் இருப்பதாக சிலாகித்தவர்கள் உண்டு.''

    ம்ஹூம்......சுசீலாம்மா விஜய குமாரிக்கு குரல் கொடுத்ததால்
    மெச்சூர்டாகப் பாட வேண்டும்.

    புஷ்பலதாவுக்கு இளைய குரல் கொடுக்கவேண்டுமே.
    அவரின் குரல் இன்னும் தேனாகப் பாயும். எல் ஆர் ஈஸ்வரியின் குரல்.

    வடக்கின் லதா ,ஆஷா போஸ்லே மாதிரி.:)
    எல் ஆர் ஈஸ்வரிக்குத் தனிப்பதிவே போட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எல் ஆர் ஈஸ்வரியும் பிடிக்கும்.  சில பாடல்கள் முன்னரே பகிர்ந்தும் இருக்கிறேன்.  ஆனால் ஒப்பீடு அளவில் சுசீலாம்மாதான் முதல்!

      நீக்கு
  10. கவிஞர் கண்ணதாசன் வரிகள் !!!எவ்வளவு பாராட்டுவது. !!!
    ஒவ்வொரு வரியும் அமுதம்.

    நாயகன் நாயகியின் மன அழுத்தமும் பொறுமையும்
    நாயகியின் பெருமையும் அன்பும் அத்தனையும்
    கலந்து வரும் வார்த்தைகள். நடிப்பு.
    அதற்கேற்றது போலக் குரல் கொடுத்த சௌந்தரராஜன் சுசீலா அம்மா.
    எப்போது கேட்டாலும் இனிமை.

    சிங்கம் புதுக்கோட்டை டிவிஎஸ்ஸில் இருக்கும் போது
    அவரது ஆப்த நண்பர்
    தமிழ் சினிமாவுக்கு அழைத்துப் போவாராம்.

    எனக்கு பாடல்களும் சினிமாவும் பைத்தியம் என்று தெரிந்த உடனே
    அவர் சொன்ன பாடல் இந்தப் பாடல்.
    சென்னை வானொலியில் கேட்கும் போது
    பாட்டி நிறைய சினிமாப்பாடல்கள் கேட்க விடமாட்டார்.

    திருமணத்துக்குப் பிறகு வானொலியில்
    சிலோன் ஒலிபரப்பில் கேட்டு மகிழ்ந்தேன்.
    நல்ல நினைவுகளுக்கு நன்றி மா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிலேயே சொல்லி இருப்பது போல பாடல் நாம் அதை முதலில் கேட்ட காலத்துக்கும் அழைத்துச் செல்லும் மாய வாகனம்! மனம் நனையும்.

      நீக்கு
  11. காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
    காத்திருந்தாள் அந்தத் தலைவி
    காவிய நாயகன் காதலன் வணிகன்
    கோவலன் என்பான் மனைவி''

    கவிஞர் பேனாவில் விளையாடிய தமிழ்.



    பதிலளிநீக்கு
  12. வெள்ளிக்கிழமை வள்ளி மணாளன் பெயரைச் சொல்லி எல்லோர் நலனுக்காகவும் துதிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமா இருக்கே!! (ஒருவேளை அங்கதமோ ??)

      நீக்கு
    2. //ஆச்சரியமா இருக்கே!! (ஒருவேளை அங்கதமோ ??) //

      :>))

      வாங்க ஜீவி ஸார்..  வணக்கம். வெள்ளின்னா வள்ளிதானா?  ஏன் தெய்வானையாக இருக்கக் கூடாதா?!

      நீக்கு
    3. தெய்வானை கிரியா சக்தி. வள்ளி இச்சா சக்தி. அனைவருக்கும் இச்சை தான் பிடிக்குது போல! இங்கே இச்சை என்பது உலகப் பற்றைக் குறிக்கும்.

      நீக்கு
  13. காலை வணக்கம்.
    மாலை வருகிறேன்.
    அப்பொழுது தான் பிறர் சொல்லாது விட்டுப் போன கருத்தை சொல்ல வசதியாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  15. @ கீதாக்கா..

    //அதெல்லாம் சரி, நான் மட்டும் ஏன் இப்படி ஜிவாஜினா சிப்புச் சிப்பாச் சிரிக்கிறேன்//

    விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை சொல்லிக் குற்றமில்லை!  காலம் செய்த கோலம்.  அவன் பித்தனா?

      நீக்கு
    2. எவன் பித்தனா? அது சரி! இந்த வாரம் இலக்கிய ஒப்புவமை ஏன் வரலை? கேஜிஜி ரொம்பவே வேலை மும்முரத்தில் இருக்காரோ?

      நீக்கு
    3. // எவன் பித்தனா? //

      ரங்கோன் ராதாதான்!

      //து சரி! இந்த வாரம் இலக்கிய ஒப்புவமை ஏன் வரலை? கேஜிஜி ரொம்பவே வேலை மும்முரத்தில் இருக்காரோ?//

      கேஜிஜி...

      நீக்கு
  16. படத்தில் அத்தனை பாடல்களும் அருமை.. பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.. பாடல்களுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி..

    இப்படி ஒரு பக்கம்..

    பதிலளிநீக்கு
  17. ஒற்றைக் குரலிசையாய் சீர்காழியார்..

    மேலும் பாடியோர் -
    TR மகாலிங்கம் P லீலா
    திருச்சி லோகநாதன் LR ஈஸ்வரி
    TM சௌந்தரராஜன்- P.சுசீலா,
    PB.ஸ்ரீநிவாஸ் S.ஜானகி
    தேவகானம்.. தேவகானம்..

    இப்படி ஒரு பக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   அப்படிச் சொல்கிறீர்களா?  'எப்படிப் பாடினரோ' என்று நானும் பாடி வியக்கிறேன்.

      நீக்கு
  18. இசையோடும் தமிழோடும் வாழ்ந்த / வளர்ந்த நாட்களுக்கு ஈடு இணை இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாய்... 

      நிச்சயமாய் அந்நாள் போல இந்நாள் இல்லை.

      நீக்கு
    2. //நிச்சயமாய் அந்நாள் போல இந்நாள் இல்லை.// வயதாகி விட்டது என்பதற்கு அடையாளம் :))

      நீக்கு
    3. இன்று போல நாளையே இருக்காதே...  ஒவ்வொரு நாளும் வயது ஏறத்தான் செய்யும்.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. பகிர்ந்த பாடல்கள் மூன்றும் இனிமையான பாடல்கள்
    கேட்டேன்.
    பச்சை விளக்கு படத்தை தொலைக்காட்சியில் போடும் போது பார்த்து விடுவேன்.
    பாடல்கள் நன்றாக இருக்கும். பிடித்த பாடல்கள்பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னமும் படத்தை முழுமையாகப் பார்க்கவில்லை!  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  21. பச்சை விளக்கு பாடல்கள் சிறப்பானவை.

    இன்றைய பாடல்களில் போடி, போடா என்ற வார்த்தைகளால் மரியாதை என்றால் என்ன என்பதே தெரியாமல் செய்து விடுகிறது.

    சமீபத்தில் நீயா ? நானா ? நிகழ்ச்சியில் கணவனை பொதுவெளியில் வாடா போடா என்று அழைக்கிறாள் (இதனுள் பாசம் இருக்கிறதாம்) காலக்கெரகமடா கந்தசாமி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலக் கெரகமடா கந்த சாமி..
      காலக் கெரகமடா கந்த சாமி..

      நீக்கு
    2. கணவனைப் பொதுவெளியில் போடா/வாடா என அழைப்பதை அறிமுகம் செய்தவர் இயக்குநர் சிகரம் என எல்லோராலும் பராட்டப்படுபவர். அவரோட தொலைக்காட்சித் தொடர் "ரமணி/ரமணியில் தான் முதல் முதலாக இதை அறிமுகம் செய்து வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார். :(

      நீக்கு
    3. அது இருக்கும் 20/25 வருஷங்கள்!

      நீக்கு
    4. போடா வாடா என்று அழைப்பதை தற்போதைய கணவன்மார்கள் கேட்டு வாங்கி கொள்கிறார்கள்!

      நீக்கு
    5. அப்படித் தெரியலை ஶ்ரீராம். வேறே வழியில்லாமல் அசடு வழிகின்றனர் என்றே தோன்றும்.

      நீக்கு
    6. ஆக அவர்கள் விருப்பம்தானே...   எனக்குத் தெரிந்தே உதாரணம் இருக்கிறதே!

      நீக்கு
  22. // சமீபத்தில் நீயா ? நானா ? நிகழ்ச்சியில்.. //

    ஜீ.. இன்னுமா அதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கீக!..

    கொடும தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீயா நானா நிகழ்ச்சி என்றால் என்ன?!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் என்பவரால் நடத்தப்படுகிறது என்பதெல்லாம் தெரியும். தம்பி வீடு/அண்ணா வீடு போனால் அங்கெல்லாம் விஜய் தொலைக்காட்சி தான். பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, நீயா நானா, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என்றெல்லாம் பேசிப்பாங்க. எங்களுக்கு விஜய் தொலைக்காட்சியே வராதுனு நினைக்கிறேன். வந்தாலும் விஜய் தொலைக்காட்சி பார்க்க மாட்டோம்/ பார்த்ததும் இல்லை. குறிப்பிட்ட 2,3 தொடர்கள் மட்டும் மாலை வேளையில். காலையிலிருந்து மாலை ஆறரை வரை தொலைக்காட்சிப் பெட்டியைப் போடுவதில்லை. எப்போவேனும் ஏதேனும் கோயில் நேரடி ஒளிபரப்பு என்றாலோ நல்ல இசை நிகழ்ச்சி எனக் கேள்விப் பட்டாலோ தேர்தல் முடிவுகள் வந்தாலோ பாலிமர் போடுவோம். அல்லது பொதிகை.

      நீக்கு
    3. விஜய் என்றொரு தொலைக்காட்சியா... அட!

      நீக்கு
  23. ஹைய்யா ஷாமீ..
    வாய்யா ஷாமீ!..

    கோட பம்பலை..ல
    இப்போ தான் ஓடி முடிந்தது..

    பதிலளிநீக்கு
  24. பச்சைவிளக்குப் பாடல்களைக் கேட்டால், மனதில் பச்சைவிளக்கு எரிகிறது. அந்தக்காலம் அழகாய் அசைகிறது..

    பதிலளிநீக்கு
  25. பாடல் வரிகள் நன்று. கேட்ட பாடல்களும் கூட.

    மீண்டும் ஒரு முறை பாடல்களை கேட்க வேண்டும். கேட்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்கள்தான்.  நன்றி வெங்கட்.

      நீக்கு
  26. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள். இன்றைய பாடல்கள் அருமை. முதல் பாடல் இதுவரை நான் கேட்டதே இல்லை. இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது. பாடல் வரிகள் , கதவை காதலர்க்கு உருவாக்கப்படுத்திய விதம் அலாதி. நா. முத்துக்குமார் அவர்களின் முத்திரைப் பாடல்களில் ஒன்று. அவருடைய பாடல்களை கேட்கும் பொழுது அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை என்ற வருத்தமும் சேர்கிறது. அருமையான பாடல்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வானம்பாடி...   நா முத்துக்குமார் ஒரு புத்தகப்பிரியரும் கூட.  இன்று நம்மிடையே அவர் இல்லை என்பது வருத்தம்தான்.  அதுசரி, அப்புறம் கதை, ரெஸிப்பி எதையும் காணோமே...  எப்போ அனுப்பப் போறீங்க?

      நீக்கு
  27. முதல் பாடல் - பானுக்கா கேட்டதுமே ஸ்ரீராம் ஹிஹிஹி என்று சொன்னதன் அர்த்தம் இன்று விளங்கியது!!!!

    படம் இப்படி ஒன்று தெரியும் ஆனால் பாட்டு இன்றுதான் கேட்கிறேன். பாட்டு நல்லாருக்கு...வரிகளும். பானுக்கா நன்றி அண்ட் ஸ்ரீராமுக்கும் நன்றி.

    தூது சொல்ல வரி பார்த்ததுமே தெரிந்துவிட்டது (ஹே!!!!!!) என்ன பாட்டு என்று . ரசித்த பாடல்

    மூன்றாவது பாடல் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது பாடல் கேட்டதில்லையா...   அடப்பாவமே...   கேளுங்க..  கேளுங்க...   அப்புறம் இன்னும் எதெது என்னென்ன ராகம்னு இன்னும் சொல்லலை நீங்க..

      நீக்கு
    2. //மூன்றாவது பாடல் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன்.// ஆ! அது எப்படி? மிகவும் பிரபலமான பாடலாயிற்றே..?

      நீக்கு
    3. அதுதானே நானும் கேட்கிறேன்!

      நீக்கு
  28. தாண்டவம் படப் பாடலில் அனுஷ் என்னமா இருக்காங்க!! ஸ்பாஅ ...ஆனா விக்ரம் வயதானவராக ரொம்பவே தெரியுது...அப்படி வயசாகிடுச்சா என்ன அவருக்கு? என்ன வயசிருக்கும்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாண்டவம் படப் பாடலில் அனுஷ் என்னமா இருக்காங்க//

      சும்மா வில்லு மாதிரி! 

      //விக்ரம் வயதானவராக ரொம்பவே தெரியுது...அப்படி வயசாகிடுச்சா என்ன அவருக்கு? என்ன வயசிருக்கும்?//

      அவருக்கென்ன 65 இருக்கும்.  மீராவுக்கு முன்பே திரை உலகத்துக்கு வந்து விட்டாரே...

      நீக்கு
    2. விக்ரம் பெண்ணிற்குக் கல்யாணம் ஆகிப் பேரன், பேத்தி எல்லாம் எடுத்துட்டார் போல!

      நீக்கு
    3. ஆமாம். கலைஞர் வீட்டு சம்பந்தம்.

      நீக்கு
  29. அனுஷ் காகவே தாண்டவம் பார்க்கணும் எதுல ஃப்ரீயா கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாண்டவம் அமேசானில் கிடைக்குது.  ஆனால் ஆனா  ஆனா பாதிலயிலேயே அனுஷ்...

      நீக்கு
  30. கௌ அண்ணா என்னாச்சு? ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே காணவில்லையே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன குறிப்பாக அந்தப் பாடல்...   ஏற்கெனவே பகிர்ந்தாச்சே!!!

      நீக்கு
  31. இன்னும் சில பாடல்கள
    இன்னிசைத் தென்றலாய்..

    1 சித்திரப் பூவிழி வாசலிலே (இதயத்தில் நீ) msv √

    2 மலருக்குத் தென்றல் பகை ஆனால் (எங்க வீட்டு பிள்ளை) msv √

    3 உனது மலர் கொடியிலே (பாத காணிக்கை) msv √

    4 தூது செல்ல ஒரு தோழி இல்லை என (பச்சை விளக்கு) msv √

    5 கடவுள் தந்த இரு மலர்கள் (இரு மலர்கள்) msv √

    6 மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்(தேனும் பாலும்) msv √

    7 அடிப்போடி பைத்தியக்காரி நான் (தாமரைநெஞ்சம்) msv √

    8 வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி (பணக்காரகுடும்பம்)msv √

    9 கட்டோடு குழலாட ஆட (பெரிய இடத்து பெண்) msv √

    10 அனுபவி ராஜா அனுபவி
    (அனுபவி ராஜா அனுபவி) msv √
    11 குங்குமப் பொட்டு குலுங்குதடி
    (இது சத்தியம்) msv √

    இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பாடல்கள் என் பகிர்வு லிஸ்ட்டில்.. சில பாடல்கள் பகிர்ந்த லிஸ்ட்டில்.. அனைத்தும் எனக்கு(ம்) பிடித்த லிஸ்ட்டில்.

      நீக்கு
    2. இதுக்கு நானும் ஒரு கருத்துச் சொல்லி இருந்தேன். எத்தனை முயன்றும் போடவே முடியலை. இப்பொ என்ன செய்யப் போறதோ பார்க்கலாம். :))))

      நீக்கு
    3. என்ன கொடுமை சரவணன்...    ஏற்கெனவே  இங்கு போடவேண்டிய ஒரு கமெண்ட் எண்ணங்கள் பதிவில் வெளியாகி இருக்கிறது!

      நீக்கு
  32. மேற்குறித்ததைப் போல நிறைய இருக்கின்றன..

    சும்மா... எனக்குப பிடித்தவைகளாக ஒரு சில..

    பதிலளிநீக்கு
  33. பழைய பாடல்கள் என்றும் இனிமை...

    உங்களுக்கு விருப்பமான நேயர் விருப்பம்... பாடல் வரிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
  34. ஆனந்த மயமாக இசை கேட்டு, 60 களை ரசிக்க வைத்ததற்காக
    ஸ்ரீராமுக்கும், பதில் சொன்ன கௌதமன் ஜிக்கும் நன்றி.

    பாடல்கள் எங்கள் வீட்டில் பல பிணக்குகளைத் தீர்த்து வைத்திருக்கின்றன.
    குத்து விளக்குப் பாடலை என் வலைப் பதிவில்
    பகிரவில்லை.

    இன்னும் சில பாடல்கள் அந்த வரிசையில் தான்.
    கேட்டு ரசிப்பதை பெண்கள் அவர்கள்
    பதிவில் பதியலாமா என்ற தயக்கம்.

    என்ன ஒரு பிற்போக்குத் தனம்!!!!
    நல்ல
    ரசனைக்கு ஏது விளிம்பு?

    எபியின் இந்த ஒலிபரப்பு சேவை வளரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் கூட தயக்கம் இருக்குமா?   ஆச்சர்யம் அம்மா.

      நன்றி.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்,

      எங்களை அப்படிக் கட்டுப் படுத்தி வளர்த்தார்கள்.
      இதை சொல்லாதே அதை சொல்லாதே என்று.

      அதில் வந்த தயக்கம் சில சமயங்களில் விடுபடும்.

      உங்கள் பதிவில் என்னை மீறி பதிந்துவிட்டேன்.
      இது விமரிசனம் இல்லை. ஒரு எண்ண ஓட்டம்.

      நீக்கு
    3. //எங்களை அப்படிக் கட்டுப் படுத்தி வளர்த்தார்கள்.
      இதை சொல்லாதே அதை சொல்லாதே என்று.// ஆமாம், இதைத் தான் குமுதம் படிப்பது குறித்தும் அடிக்கடி கூறுவேன். பல கட்டுப்பாடுகள். இப்போ மாதிரித் திறந்த மனம் என்பது அப்போது பெற்றோர் மட்டுமில்லாமல் சுற்று வட்டாரங்களிலும் இல்லை. பெற்றோர் எதுவும் சொல்லலைனாக் கூட எங்களை எல்லாம் அக்கம்பக்கத்தினர் கூடக் கண்டித்திருக்கிறார்கள். அதிலும் நாங்க இருந்தது ஒரே பெரிய வீட்டில் ஒரு போர்ஷனா! மற்ற 3 குடித்தனக்காரங்களையும் பெருமளவு அனுசரித்தே நடக்க வேண்டும். அப்பா/அம்மா எதிரிலேயே அவங்க சொன்னாலும் அப்பா/அம்மா "நல்லதுக்குத் தானே சொல்றாங்க!" என்றே இருப்பார்கள்.

      நீக்கு
    4. முன்னர் ஒரு தரம் நான் சொன்ன நினைவு. கற்பகம் படத்தின் "பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்" பாடலை நான் ரேடியோவில் கூடக் கேட்க முடியாது. மற்றக் குடித்தனக்காரங்க வீட்டில் ரேடியோவில் அந்தப் பாட்டு ஒலிபரப்பானால் அப்பா ஜாடையாக உள்ளே கூப்பிட்டுவிடுவார். நின்று ரசிக்கவெல்லாம் முடியாது.

      நீக்கு
  35. எதிர்பாரா முத்தம், எதிர்பார்த்திருந்த மழைக்கு நடுவே எதிர்பாரா மின்னல் எல்லாமே அந்தந்த நேரங்களில் நம்மை கிளுகிளுக்க வைக்கும் கொடுப்பினைகள்...

    '1976-79 அண்ணாமலை சர்வகலாசாலை' என்று ஆரம்பித்து
    'இந்த பாடலுக்கும் மேல் கண்ட நினைவுகளுக்கும் சம்பந்தம் இல்லை தான்: பாடல் கால கட்டத்தில் நிகழ்ந்தவை என்பது மட்டுமே' என்ற காவிய வரிகளைப் படித்து மனசு பரபரத்தது. முக நூலிலும் இலக்கியம்!

    இந்த வரிகளுக்குச் சொந்தமான கலைஞன் யார் ஸ்ரீராம்? அவர் வரிகளை உபயோகித்துக் கொண்டீர்கள். அந்தக் கலைஞனின் பெயரைப் போட்டு எங்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கக் கூடாதா, ஸ்ரீராம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Z.Y. HIMSAGAR

      1 month ago (edited)
      ❤️1976-1979 அண்ணாமலை சர்வகலாசாலை பொருளாதாரம் படித்த கல்லூரி நாட்கள், அன்புத் தோழர்கள், நாயர் டீக்கடை, கீதா கேண்டீன், என்.சி.சி. அலுவலகம், கோகலே ஹால், ஸாஸ்த்ரி ஹால், டைப்ரைடிங் வகுப்புகள், ஆரோக்கியமான அப்பா அம்மா உடனான வாழ்க்கை, திங்கள் பிரம்பராயர் கோவில், வியாழன் சரபேஸ்வரர் கோவில், வெள்ளி தில்லையம்மன் கோவில், ராஜன் குளிர்பானக் கடை லெஸ்லி, மான்ஸ்ரோ தேங்காய் பன், ஹாஸ்டல் புலவு குருமா நினைவுகள் வருகின்றன ❤️இந்த பாடலுக்கும் மேல்கண்ட நினைவுகளுக்கும் சம்பந்தம் இல்லை தான். பாடல் காலகட்டத்தில் நிகழ்ந்தவை என்பது மட்டுமே ❤️

      2

      நீக்கு
    2. அதே.. அதே... அவர் யாரோ எக்ஸ்.. எனவே ஒரு நேயர் என்ற அளவில் குறிப்பிட்டிருந்தேன்.

      நீக்கு
  36. அன்றும் இன்றும் என்றும் எனக்கு ஒரே ஒரு பாட்டுதான். எங்கு கேட்டாலும் அப்படியே நின்று முழுதும் கேட்டுவிட்டுத்தான் நகர்வேன். அது

    பாவ மன்னிப்பு

    வந்த நாள் முதல்

    எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  37. நல்ல பாடல்கள்.

    இன்று தொட்டு நாளுக்கு ஐந்தரை மணிநேர மின்சார வெட்டு ;( இதுவும் கடக்கும் என நம்புவோம். முதல் மின்சாரத் தடைக்குள் வந்து போட்ட ஊட்டம் நெற் பிரச்சினையால் ஏறாமல் திரும்பினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி...  ஐந்தரை மணிநேரமா?   அடக்கடவுளே...  கஷ்டமாக இருக்குமே..   உங்கள் அடுத்த வரி புரியவில்லை.

      நீக்கு
    2. உங்கள் நிலை பற்றி அறிந்ததும் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இலங்கை முழுவதுமே இப்போது பற்பல பிரச்னைகள் என தினசரிகள் மூலம் அறிகிறோம். விரைவில் எல்லாம் சரியாகப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  38. பதில்கள்
    1. ஆம்.  பாவம் அம்மா.   இங்கும் தமிழகத்திலும் சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.  இப்போதே கட்டியங்கள் கூறத்தொடங்கி இருக்கின்றனர்.  என்ன, இவர்கள் முதலில் ரெண்டு மணிநேரம் என்று ஆரம்பிப்பார்கள்.  பின்னர் அது காலை மாலை என இருவேளையாகும்!  

      அம்மா.. நேற்றிரவு 'ஓ மை கடவுளே' என்றொரு படம் பார்த்தேன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்,வல்லிசிம்ஹன் உங்கள் அன்பான ஆதங்கத்துக்கு நன்றி.
      சிரமம் தான் பொறுப்போம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!