ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

தென்னம்பாறை காட்சிகள் (3)

 

கட்டிடத்தின் வர்ணம் எந்த நாட்டுக் கொடியை நினைவுபடுத்துகிறது? 


எந்தக் காரிலிருந்து இறங்கி வருகிறார்? 


மலை நோக்கி பயணம் 


சிறு மலைகளும், பெரு மலையும் 


பயமுறுத்தும் மேகக் கூட்டம் 


பெரியமலை 


??யாஸ் பிரியாணி ? 


கடன் வேண்டுமா? 


பி எஸ் எல் வி ராக்கெட் போல இருக்கு !


இரட்டை மலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்கிறார் !!பூதப்பாண்டி முதல்நிலை பேரூராட்சி " மழை நீர் சேகரிப்போம் .. "


மரம் வளர்ப்போம் -- 


மண் வளம் காப்போம் - - -


மலைகளையும் பார்ப்போம் 


மலையும், தென்னையும் காற்றிலிருந்து மின்சாரமும் பெறுவோம் !


(தொடரும்) 

50 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கியம்
  நிறை வாழ்வு எல்லோருக்கும் இறைவன்
  அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.

   நீக்கு
 3. சிறு மலையும்,பெரு மலையும் அதன் பின்னால்
  இன்னும் பெரிய மலைத்தொடரும் அருமை.

  வித விதமான காட்சிகள் , உருவங்களில், முகங்களில் மலை சிகரங்கள்
  மிக அருமையாகப் படமாக்கப்
  பட்டிருக்கின்றன. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. கீதா அக்காவுக்கு ஒரு குட் நியூஸ்! இன்று எனக்கும் எல்லா தளங்களிலும் ரோபோ வந்து விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! இன்னிக்கு எனக்கு ரோபோ வராதே! ஆடுவோம்/பாடுவோம்/கொண்டாடுவோம்! ஸ்வீட் எடு! கொண்டாடு! :)))))))

   நீக்கு
  2. // இன்னிக்கு எனக்கு ரோபோ வராதே! // வேற கணினி வாங்கிட்டீங்களா !!

   நீக்கு
  3. அதெல்லாம் இல்லை. சும்மா ஒரு யூகம். மத்தவங்களுக்கு வராததே எனக்கு எப்போவும் வரும். மத்தவங்களுக்கும் வந்தால் எனக்கு வராது. :)))))) ஜிம்பிள்!

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். உலக மக்கள் அனைவர் வாழ்விலும் முக்கியமாய் உக்ரேன் மக்கள் தொல்லைகள் நீங்கி அமைதியான (சப்தமே இல்லாத) வாழ்க்கையை மன நிறைவுடன் வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அனைத்துமே அருமை! நன்றாக வந்திருக்கின்றன. தென்னை மரங்களின் அணிவகுப்பும், மலைகளின் மேற்பார்வையும் சுத்தமான நீண்ட சாலைகளின் பராமரிப்பும் இது இந்தியாவா/அதுவும் தமிழ்நாட்டுப் பகுதியா என்று சந்தேகத்தை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. பராமரிக்கும் பொதுமக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நெல்லை இப்போது எங்கே இருக்கார்? மதுராவா?

  பதிலளிநீக்கு
 8. வழக்கம் போல
  இடங்களும் அழகு..
  படங்களும் அழகு!..

  பதிலளிநீக்கு
 9. மதுரை/தேனீ வழியிலும் ஒரு பூதப்பாண்டி இருக்குனு நினைவு. வீரபாண்டி இருக்கு. மாரியம்மன் திருவிழா பெரிய அளவில் விமரிசையாக நடைபெறும்.

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். இன்றைய பதிவில் படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

  எனக்கு கடந்த சில வாரமாக தீடிரென மாறி மாறி வந்த உடல்நலக் குறைவால், என்னால் வலைப்பக்கமே முன்பு போல் சுத்தமாக வர இயலவில்லை. இன்னும் பழையபடி உற்சாகமாக உடலையும், மனதையும் முழுமையாக குணமாக விடாமல் ஏதோ படுத்திக் கொண்டே உள்ளது. என்னை இதுநாள் வரை காணவில்லையே என அன்புடன் தேடிய, என் உடல்நலத்திற்கு பிரார்த்தித்துக் கொண்ட அன்பான நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த மாதிரி தூய அன்பான உள்ளங்களை எனக்கு உடன் பிறப்பாக தந்த இறைவனுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  இங்கு என் இளைய மகன் (இப்போதைக்கு வெளிநாட்டிலிருப்பவர்) வந்திருக்கிறார். வீடு சில புதிய மாற்றங்களை அவர் திரும்பி அங்கே செல்வதற்குள் சந்தித்து கொண்டுள்ளது. வீட்டில் கீழிருக்கும் பொருட்கள் பரணிலும்,பரணில் ஏற்கனவே உள்ளது வெளியிலுமாக இடம் மாறி வீட்டுடன் ஒத்துழைத்தபடி உள்ளது. அந்த வேலைகள் வேறு என்னை என் உபாதைகளின் இடையே மீதி இருக்கும் நேரங்களை முழுமையாக பிடித்துக் கொண்டுள்ளது. அதனால் உடல் அசதிகள் இன்னும் அதிகம். அதனாலும் நான் எப்போதும் போல் கலகலப்பாக வலையுலகிற்கு வர மேலும் சில/பல நாட்கள் தாமதமாகுமெனதான் நினைக்கிறேன். என் தாமத வருகை குறித்த தகவலாக இருக்குமென்பதால், இதையும் இங்கே குறிப்பிடுகிறேன். வேறு ஒன்றுமில்லை.

  எப்போதும் எதுவும் நடக்க வேண்டியது அது பேசாமல் நடந்து கொண்டேதான் உள்ளது. நம் கையில் எதுவுமில்லை.( பத்து விரல்களையும், சில அழிந்தும் அழியாமலும் இருக்கும் சில உள்ளங்கை ரேகைகளையும் தவிர.) நடக்க நடக்க நாராயணன் செயல். இடையிடையே இந்த மாதிரி வர முடிந்தால் வருவதற்கு முயற்சிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடல் நலம் பேணவும் குடும்ப மகிழ்ச்சி முக்கியம்.

   நீக்கு
  2. கமலாக்கா உடல நலம் பார்த்துக்கோங்க. மெதுவா வாங்க போதும். விரைவில் எல்லாம் சரியாகிடும்.

   கீதா

   நீக்கு
  3. உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள். ஊரிலிருந்து வந்து இருக்கும் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள். நேரம் கிடைக்கும் போது வலைத்தளம் வரலாம்.

   நீக்கு
  4. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

   நீக்கு
  5. வாங்க கமலா. உடல் நலம் தேறி வருவதற்கு மகிழ்ச்சி. முழுதும் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். எங்க பையர் இங்கே வந்தப்போவும் இப்படித்தான் சாமான்கள் அவர்கள் விருப்பத்திற்கிணங்க இங்கேயும் அங்கேயுமாய்ப் பயணங்கள் செய்து கொண்டிருந்தன. அதுக்கப்புறமும் இதைப் போட்டுடு வீட்டில் வைச்சுக்காதேனு பையர் சொன்னதற்கிணங்கப் பத்து நாட்களாக சாமான்களைப் பார்த்து வேண்டியவற்றை ஒதுக்கிவிட்டு வேண்டாதவற்றைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். ஓய்வு, ஒழிச்சல் என்பது இல்லை. :( இன்னிக்கு மொத்த வீடும் சுத்தம் செய்யும் வேலை. ஆட்கள் வந்திருக்காங்க. வேலை நடந்து கொண்டிருக்கு. மதியம் சாப்பிடும்போது மணி 2 ஆகி விட்டது. :))))

   நீக்கு
  6. அன்பின் கமலாமா,
   விரைவில் நலமாகி மீண்டு வரவும்.

   நீக்கு
 11. @ கமலா ஹரிஹரன்..

  // உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்..
  நன்றிகள்.. //

  தங்களுக்கு நல்வரவு..
  அன்பின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..

  பேத்தியும் நலம் தானே!..
  வாழ்க நலமுடன்..

  பதிலளிநீக்கு
 12. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் கமலா ஹரிஹரன்!

  பதிலளிநீக்கு
 13. படங்கள் அனைத்தும் அழகு. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.

  பதிலளிநீக்கு
 14. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆஹா பூதப்பாண்டி போனாங்களா. அழகான ஊர். மலைகள் சூழ் வயல்கள் சூழ் ஊர். பசுமையான ஊர். எங்கூர் இது எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 16. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  சாலை காட்சிகள் அருமை. கடைசி படம் அருமை.

  பதிலளிநீக்கு
 17. அழகிய பசுமை, மலைகள், மரங்கள் என மனதை கவர்கிறது காட்சிகள். படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!