வியாழன், 10 பிப்ரவரி, 2022

கொல்லும் சொல்லும் வெல்லும் சொல்லும்..

 தமிழில் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பது பற்றிய ஓர் உரையாடலில் மறைந்த கவிஞர் வாலி சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

நமக்கே தெரியும் சில உதாரணங்கள்.  கேஆர் ராமசாமி, தங்கவேலு போன்ற உதாரணங்கள்.  ஏன், டி எம் எஸ் கூட நானொரு ராசியில்லா ராஜா, பாடலும், நூலுமில்லை வாலுமில்லை பாடலும் பாடியபிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன என்றும் சொல்வார்கள்.

ராஜயோகி என்று ஒரு படம்.  வால்மீகி பற்றிய படம்.  வால்மீகி பெரிய கொள்ளைக்காரனாய் இருந்து முனியானவர், கவியானவர்.  அவரைப்பற்றிய படம்.  எம் கே டி பாகவதர் உச்சத்தில் இருக்கும்போது ஏ வி எம் நிறுவனம் அவரை வைத்து ஒப்பந்தம் செய்த படம்.   முதல்நாள் முதல் காட்சி.அரசவையில் எம் கே டியை கைது செய்து கட்டி இழுத்து வருகிறார்களாம்.  மன்னர் யார் நீ என்று கேட்க, எம் கே டி கைகளை நீட்டி "நான் கைதி" என்று சொல்ல இயக்குனர் கட் சொல்லி விடுகிறார். அன்று எடுக்கப்பட்ட ஒரே காட்சி அதுதானாம்.  அன்று மாலை தினசரிகளில் கொட்டை எழுத்து செய்தி...  பாகவதர் கைது செய்யப்பட்டார்.

சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் வரும் "வெள்ளிக்கிண்ணம்தான்"  பாடல் முதலில் 'வெள்ளித்தட்டுதான் தங்கக்கைகளில்' என்று எழுதி இருந்தாராம் வாலி.  முதலிரவுக்கு வரும் மணமகள் கைகளில் வெள்ளித்தட்டில் பழம் கொடுவாருவார் என்பதால் அப்படி எழுதி இருந்தாராம்.  டி எம்.எஸ் சுசீலா பாடி ஒலிப்பதிவும் செய்யப்பட்டுவிட்ட நிலையில் மறுநாள் அந்தப் பாடலைக் கேட்க வருகிறார் தயாரிப்பாளர்.  பாடலைக் கேட்டுவிட்டு வாலியைத் தனியே அழைத்துச் சென்றாராம்.  வெள்ளி என்றால் பணம்.  தட்டு என்றால் தட்டுப்பாடு.  இது சரியில்லை.  நாளை என்ன ஆகுமோ..    எனவே இந்த வரிகள் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.   அப்புறம்தான் அந்த வரி வெள்ளிக்கிண்ணம் ஆனதாம்.

1968 ல் எடுக்க ஆரம்பித்த படம் தலைவன்.  அதில் நீராழி மண்டபத்தில் என்ற ஒரு அற்புதமான பாடல் உண்டு.  அற்புதமான பாடல் என்றாலே அது எஸ் பி பி  பாடிய பாடல் என்று புரிந்திருக்கும் உங்களுக்கு!!  அதில் வரும் ஒரு வரி "தலைவன் வாராமல் காத்திருந்தாள்" என்ற ஒரு வரி வரும்.  தலைவன் படத்தில் எம் ஜி ஆர் - வாணிஸ்ரீ.  எம் ஜி ஆரே தயாரிப்புச் செலவுகளுக்கு பணம் கொடுத்து உதவியும் கூட படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனதாம்.  ஒருநாள் எம் ஜி ஆர் வாலியை அழைத்து, "நீர் அந்த தலைவன் வாராமல் காத்திருந்தான்" என்ற வரி எழுதியதால்தான் இதை நிலைமை" என்றாராம்.  வேறொன்றும் சொல்ல முடியாத வாலி அதை வேறுவகையில் சமாளித்தாராம்.  அந்தப் படத்தைத் தயாரித்தவர்கள் தாமஸ் பிக்சர்ஸ் என்பவர்கள்.  அந்தக் காலப் பத்திரிகைகளில் புள்ளி சரியாக விழாமல் தாமஸ பிக்சர்ஸ் என்றே வருமாம்.  அதுதான் காரணம் என்று சமாளித்தாராம்.  கடைசியில் 1970 ல் படம் வெளியாகி சரியாகப் போகவில்லை.

இதையெல்லாம் கேட்ட பிறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.  என் சமீபத்திய உடல் உபாதைகளுக்கு, மனக்குழப்பங்களுக்கோ காரணம் சமீபத்தைய பதிவுகளில்  ஏதாவது அதிகமாக புலம்பி விட்டேனோ, தவறான வார்த்தைகள் உபயோகித்திருக்கிறேனோ என்று.  

சாதாரணமாக நான் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட என் பாஸும், இளையவனும் உடனே அதைத் திருத்தி மறுவார்த்தை வெளியிடச் செய்வார்கள்.  உதாரணமாக "நாளைக்கு நான் ஆறரைக்கே போகணும்" என்றால் "நாளைக்கு ஆறரைக்கே கிளம்பணும் என்று சொல்லு, அல்லது போயிட்டு வரணும்" என்று சொல்லு என்று வலியுறுத்துவார்கள்.

நாம் தவறான வார்த்தை உபயோகிக்கும்போது வானில் உலவும் தேவதைகள் ததாஸ்து என்று சொல்லி விடுவார்களாம்!  உண்மையோ பொய்யோ, நல்ல வார்த்தைகளே பேசுவது நல்லதுதானே!

எனக்கும் இது போன்ற சொற்களில் நம்பிக்கை உண்டு, அனுபவமும் உண்டு. அலுவலகத்தில் பெரும்பாலான சமயங்களில் அவசரப்பட்டு ஏதாவது தவறாக கோபத்தில், ஆத்திரத்தில் சொல்லி இருந்தால் பல சமயங்களில் அதே போலவே நடந்திருக்கிறது.  நடந்தது விதியா, நடந்ததை முன்னரே என் வாயால் சொன்னது விதியா என்று குழம்பி இருக்கிறேன். 

ஏன், பள்ளி நாட்களில் கூட பள்ளிக்கு லேட்டான சமயங்களில் ஆசிரியரிடம் சைக்கிள் பங்சர் என்று சொல்லி இருப்பேன்.  பள்ளி முடிந்து வீடு வரும்போது பங்சர் கூட இல்லை, பர்ஸ்ட் ஆகும் டயர் அல்லது டியூப்!  செலவு வைக்கும்!

சட்டென நினைவுக்கு வராவிட்டாலும் வேறு சில அனுபவங்களும் உண்டு!

============================================================================================

சமீபத்தில் சைதை துரைசாமி அவர்கள் சொல்லி இருப்பதாக  ஒரு செய்தி படித்தேன்.  முன்னர் அவர் இதைச் சொல்லி இருக்க முடியுமா?  இது உண்மையா என்றெல்லாம் தோன்றியது!

பொருந்தா உணவால் எம்.ஜி.ஆரை இழந்தோம்!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி: 

"நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் கடை இருந்ததால், காலையில் இட்லி சாப்பிடுவேன். ஆனால், அம்மா வற்புறுத்தி பழையது சாப்பிடச்  சொல்வார். வெங்காயம் அல்லது மிளகாயோடு கம்மஞ்சோறு, கேழ்வரகு களி அல்லது எங்க ஊரில் புளிச்ச தண்ணின்னு சொல்லும் நீராகாரம் தான் காலை உணவு.

சென்னை வந்ததும், எல்லாமே மாறிப் போனது. ஒரு கட்டத்தில் உடல் சோர்வு, ஏதோ ஓர் அசதி என்னை சுறுசுறுப்பாக இயங்கவிடாமல் செய்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மரணம், கடுமையான அதிர்ச்சி தந்தது. அவர் 100 வயது வரை இருப்பார் என்ற அதிதீவிர நம்பிக்கையில் இருந்தவர்களில் நானும் ஒருவன்; ஆனால், அது பொய்யாகி விட்டது. எல்லாவற்றிலும் சரியாக இருந்த அவர், உணவு விஷயத்தில் குறிப்பாக, உடலுக்கு பொருந்திய உணவு, பொருந்தாத உணவு என்ற பாகுபாடு பார்த்து, உண்ணுவதில் சரியாக கவனம் செலுத்தாததுதான், அவர் மரணத்திற்கான அடிப்படை காரணம் என்று தெரிந்தது. அதன் பின்தான், என் உடல்நிலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். 

கந்தசாமி முதலியார் என்பவர் எழுதிய, 'உணவே மருந்து' என்ற புத்தகத்தை படித்ததற்கு பின்தான், உணவு விஷயத்தில் எவ்வளவு தவறு செய்கிறோம் என்று புரிந்தது. அதன்பின் சமைத்த உணவுகள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறு, பச்சை காய்கறிகளை உண்ணப் பழகினேன். இப்படியே, 15 நாட்கள் தாண்டினேன். அதற்கு பின் தான், அதன் மகத்துவத்தை உணர்ந்தேன்.'நொறுங்கத் தின்றால், 100 வயது' என்பது பழமொழி. நமக்கு, 32 பற்கள் இருக்கின்றன. நாம் ஒரு கவளம் உணவை வாயில் போட்டால், 32 முறை மென்று திரவமாக்கி, இரைப்பைக்கு அனுப்ப வேண்டும் என்பதை குறிக்கிறது அது. 

ஆனால், இங்கு எல்லாரும் அப்படியா நேரம் ஒதுக்கி சாப்பிடுகின்றனர்... கோழி, இரை எடுக்கிற மாதிரி, 'கபக்'கென்று அப்படியே விழுங்குகின்றனர். அதுதான் எல்லா பிரச்னைக்கும் ஆரம்பம். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும்; நின்று கொண்டு சாப்பிடுவது, உடல் விதிகளுக்கு புறம்பானது.

சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிடும் போதும் தண்ணீர் பருகக் கூடாது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்கு பின் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். விக்கல் எடுக்கிறது, நெஞ்சை அடைக்கிறது எனில், நீங்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்று பொருள். 

------------------------------------------------------------------------------------------

குழந்தை எதிரில் எதுவும் செய்யாதீர்கள்! மத்திய அரசின், 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதைப் பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மூவரில் ஒருவரான, குழந்தைகளை கவனிக்கும் நர்ஸ் மணிமேகலை:

'தொற்றாலோ அல்லது உடல்நலப் பிரச்னையாலோ வரக்கூடிய நோயை யாராலும் தவிர்க்க முடியாது; ஆனால், அஜாக்கிரதையால் பாதிக்கப்பட்டு அழைத்து வரப்படும் குழந்தைகளைப் பார்த்தால், வேதனை தொற்றிக் கொள்கிறது.எதையோ விழுங்கிட்டதாக வரும் குழந்தைகள்; கூரான பொருளால் காயம்பட்டு வரக்கூடிய குழந்தைகள்; பெட்ரோல், பினாயில், கழிப்பறை சுத்திகரிப்பான் போன்றவற்றை குடித்து விடும் குழந்தைகள்...மாத்திரை, மருந்துகளை விழுங்கி விடும் குழந்தைகள்; தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கும் குழந்தைகள் என, பல வித பிரச்னைகளுடன் அழைத்து வரப்படும் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்புணர்ச்சி, பெற்றோரிடம் குறைந்து கொண்டே வருகிறதோ' என்று தோன்றும்.

ஏனெனில், இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காரணம் என்ன என கண்டுபிடிப்பதை விட, அவர்கள் விழுங்கியது என்னவென்றே தெரியாமல், 'வீசிங்'கா, மூக்கில் ஏதாவது அடைத்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படும்.சில குழந்தைகளுக்கு, உள்ளே போன பொருளால், உணவுக்குழாயே எரிந்திருக்கும். அதை வெளியில் எடுத்தால், மறுபடியும் உணவுக்குழாய் வெந்து விடும். இதையெல்லாம் அவர்களுக்கு சொல்லவும் தெரியாது. இந்த சூழலில் மருத்துவரும், செவிலியரும் எவ்வளவு இக்கட்டைச் சந்திப்பர் என்று யோசித்து பாருங்கள்.

எந்த குழந்தையாக இருந்தாலும், அது தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்வதை, அப்படியே தானும் செய்ய நினைக்கும். சிறு குழந்தை தானே என, நீங்கள் இடுப்பில் வைத்தபடியோ அல்லது அதன் கண்ணில் தென்படும் வகையிலோ, ஒரு மாத்திரையோ, மருந்தோ சாப்பிட்டால், நீங்கள் இல்லாத சமயம், தானும் குடிக்க, விழுங்க அந்தக் குழந்தை முயற்சி செய்யும். ஒரு ஜூசை குடித்தீர்கள் என்றால், அதே நிறத்தில், வடிவத்தில் இருக்கும் கழிப்பறை சுத்திகரிப்பானையோ, வேறு ஆபத்தான பானத்தையோ எடுத்துக் குடித்து விடும்.அதனால், குழந்தைகள் எதிரில் எதையும் செய்யாதீர்கள்; அவர்கள் கைக்கு எட்டும் இடத்தில், எதையுமே வைக்காதீர்கள்.குழந்தைகளை தனியாக விடாமல், பக்கத்தில் யாராவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

=======================================================================================================

ஒரு கவிதை முயற்சி!

தலையில் உற்பத்தியாகி
அல்லது 
கண் வாய் வழியே
நெஞ்சுக்குள் நுழைந்து
விடும்
எண்ணச் சிக்கல்கள்
உள்ளேயே தங்காமல் 
வயிறு இடுப்பு
தாண்டி
கால்கள் வழியே 
வழிந்தோடிவிட்டால்
நலமே.

==================================================================================================

இது யார் கண்கள்?



=======================================================================================================


ப்ளாக்கில் எழுதுபவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது!  -  அசோகமித்திரன்.







 
===================================================================================================

சென்ற வாரம் ஜீவி ஸார் மதன் ஜோக்ஸ் எங்கே காணோம் என்று விசனப்பட்டிருந்தார்!  எனவே இந்த வாரம் மறுபடியும் கொஞ்சம் மதன்.

பைசா கோபுரம் சாய்ந்து கொண்டே வருகிறது என்கிற செய்தியைப் படித்ததும் அப்போது மதனுக்குத் தோன்றிய சில யோசனைகள்!







= = = =

208 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை. அது என்ன ராசியோ தெரிலே, மதன் வந்தால் வியாழன் களை கட்டி விடுகிறது.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. நர்ஸ் மணிமேகலை அவர்கள் சொல்லும் அறிவுரைகள் எற்புடையவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. பதிவில் அதைப் பிரித்துப் போட்டிருக்கவேண்டும். இதோ..

      நீக்கு
  4. நல்லவேளை..

    எம்ஜியார் அவர்கள் நூறு வயது வரைக்கும் வாழவில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு என்ன!..

      கட்சிக் கறை வேட்டிகளே கரை மீறிப் போயின..

      ஆனால், நான் சொல்லியிருப்பதற்கு வேறு அர்த்தம்..

      நீக்கு
    2. அதையும் சொன்னால் தெரிந்து கொள்வேனே...

      நீக்கு
  5. கபாலியோட புதுப்பட ஒப்பந்த அறிவிப்பு இன்னிக்கு வெளி ஆகுதாமுங்கோ!..

    கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்.. கெழவனைத் தூக்கி மணையில வை!...

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. கொஞ்ச நாளைக்கு முன்னால ஓ.. போடு..ன்னு ஒரு கூச்சல் பாட்டு... அதனால் ஏற்பட்ட விளைவுகள் எத்தனை பேருக்குத் தெரியும்?..

    அப்புறம் இன்னொரு இசையமைப்பாளர்..
    Copy Cat.. ந்னு பிரபலம்..

    ரெண்டெழுத்து அமங்கல வார்த்தையைப் போட்டு ஒரு பாட்டு..
    அதுக்கு அப்புறந்தான் வந்தது - வேட்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் கிசுகிசு என்ன துரை செல்வராஜூ ஸார்...   யாருனு உடைச்சு சொல்லுங்க..   சுவாரஸ்யமாய் இருக்கும்!

      நீக்கு
  8. சொல்லும் வெல்லும்!...

    இந்த அறம் எல்லாம் டகர டப்பா
    கோஷ்டிகளுக்குத் தெரியாது.. தெரிந்தாலும் பிடிக்காது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிக்காதா?  வியாபாரம் என்று வரும்போது அவர்கள்தான் இதை எல்லாம் நன்றாய்ப் பார்ப்பார்கள்.

      நீக்கு
    2. டகர டப்பா கோஷ்டி என்றால் என்ன?

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது. உண்மையில் நாம் நினைப்பது எங்கே அப்படியே நடந்து விடுமோ என்ற அச்சத்தால்தான் நல்லதையே எப்போதும் நினைக்கத் சொல்லி நல்லதையே எப்போதும் பேச் சொல்லி நம் வீட்டின் பெரியவர்கள் நம்மை வளர்த்தார்கள்.மேலும் நல்ல வார்த்தைகள் சொல்வதற்கும்,கேட்பதற்கும் மனதுக்கு அமைதி தரும். ஆனால், சில நேரங்களில் நம் மன/உடல் இயலாமைகள், மனம் வெறுத்து போகும்படியான எதிர்பாராத சம்பவங்கள், வாழ்க்கைத் திருப்பங்கள் இப்படியான நெகடிவ் வார்த்தைகளை சமயங்களில் தானாகவே உருவாக்கி விடுகிறது. மற்றபடி நல்லதைதானே எல்லோர் மனங்களும் விரும்பும்.

    நான் அம்மா வீட்டில் இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள எங்கள் உறவுகளில் ஒரு பெண்மணி அடிக்கடி (வாரத்திற்கு இருமுறையாவது) வீட்டிற்கு வருவார். அம்மாவுடன் (வந்தவரும் அம்மா வயதுதான்.) சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பும் போது "போகிறேன்" என்றபடிதான் எப்போதும் கிளம்புவார். "அப்படிச் சொல்லாதே.. போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போ" என எங்கள் அம்மா அவர்களிடம் எவ்வளவோ தடவை சொல்லி நான் கேட்டுள்ளேன். ஆனால்,அவர் தன் பழக்கத்தை எப்போதும் மாற்றி கொள்ளவேயில்லை.:) அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்திருந்தார்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விதி விலக்குகள் எப்போதும் உண்டு.

      நீக்கு
    2. நல்லது நடந்தாலும் மனித மனம் அதை நினைவில் வைத்துக் கொள்வதில்லை!  எனவே கெட்டது நடந்தால் மனதில் நின்று விடுகிறது, நடந்து விடுமோ என்கிற பயமும் வருகிறது!  அப்படியான வார்த்தைகளை பேச தயக்கம் வருகிறது!

      உங்கள் அம்மாவின் தோழி வார்த்தைகள் பலிக்காதது மகிழ்ச்சி.  ஆனால் அப்படி சொல்பவர்கள் அதிகம் உண்டுதான். 
       
      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    3. அந்த அம்மாவிற்கு தான் சீக்கிரம் உலகத்தை விட்டுப் போகணும் என்ற மன ஆசையில் அப்படிச் சொன்னால் பலிக்காது.

      நானும் ஏதோ கோபத்தில் நண்பனை பத்தாம் வகுப்புத் தேர்வில் கணக்கில் சென்டம் எடுக்க மாட்டாய்னு சொல்லிட்டேன். அவனோ கணக்கில் புலி. மத்தவங்களுக்கும் சொல்லித்தரும் நல்ல குணம். அப்போ படிக்காமல் பொழுது போக்கிய எனக்கும் நிறையச் சொல்லித் தந்து 84 மார்க் வாங்க வைத்தான். அவன் 91 வாங்கினான் என நினைவு.

      வாயைத் திறவாமல் இருப்பது நல்லது என எனக்குப் புரியவைத்த சம்பவம் இது.

      நீக்கு
    4. எல்லோர் வாழ்விலும் சம்பவங்கள்!

      நீக்கு
  10. இப்போ ஒரு பாட்டு வந்திருக்கின்றது.. நானாக விரும்பிப் பார்க்கலை..

    இந்த Fb விளம்பரத்துல கோத்து உட்டுட்டானுங்க...

    அந்த காலத்து

    ஐயா ஷாமீ!..
    ஆவோஜி ஷாமி!.. - ஞாபகம் இருக்குதா.. அதுல இருந்து உருட்டுனது...

    சும்மா போறியே..ங்கற மாதிரி ஏதேதோ வார்த்தைகள்.. கருமம்..

    வறுமைய தாங்க முடியாதவங்க போல இருக்கு.. ஏதோ கண்றாவி காட்சிகள்..

    இளிச்சி இளிச்சிக்கிட்டு ஒரு கேவலம்.. ஆனா அதுதான் ஓஹோ ன்னு சொல்லி காலைல ஆறரை மணிக்கெல்லாம் ரோட்டுல கேட்டுக்கிட்டுப் போறாங்க...

    இதுனால என்னென்ன கேடு வரப் போகுதோ..

    பிரியாணி சோத்துக்காக சென்னையில ஒருத்தி பெத்தெடுத்த புள்ளைகளை...

    அதெல்லாம் எதனால
    நடந்ததுன்னு நெனைக்கிறீங்க ஸ்ரீராம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆவோஜி ஷாமி!.. - ஞாபகம் இருக்குதா.. அதுல இருந்து உருட்டுனது...//

      என்ன பாட்டுன்னு யோசிக்கிறேன்!  என் காதில் விழுந்திருக்கிறதா என்று யோசிக்கிறேன்!

      //வறுமைய தாங்க முடியாதவங்க போல இருக்கு.. ஏதோ கண்றாவி காட்சிகள்../

      ஹா..  ஹா..  ஹா  புரிகிறது!

      //அதெல்லாம் எதனால நடந்ததுன்னு நெனைக்கிறீங்க ஸ்ரீராம்!..//

      கலிகாலம்.  காலம் செய்த கோளமடி கடவுள் செய்த குற்றமடி ன்னு அன்னிக்கே பாடி வச்சிருக்காங்களே...!

      நீக்கு
  11. @ கமலா ஹரிஹரன்..

    தங்களது கருத்தினைச் சிறப்பாக பதிவு செய்திருக்கின்றீர்கள்...

    நினைவில் கொள்ளத் தக்கவை... நன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      எல்லாம் நம் வலைத்தள இனிய நட்புகளின் வாயிலாக கற்றுக் கொண்டவைதான்.

      தங்கள் பாராட்டான கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கிய வாழ்வு தொடர இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    /நல்லது நடந்தாலும் மனித மனம் அதை நினைவில் வைத்துக் கொள்வதில்லை! எனவே கெட்டது நடந்தால் மனதில் நின்று விடுகிறது, நடந்து விடுமோ என்கிற பயமும் வருகிறது!/

    உண்மை. நல்லது நடக்கும் போது மனதுள் மகிழ்ச்சி நிறைந்து விடுவதால், மனம் அமைதியாக இருக்க பழகி விடுகிறது. வேறு கெடுதல்கள் விதி வசம் நடக்கும் போது, மனது அதை சட்டென ஏற்றுக் கொள்ள மறுத்து மறுபடி ஏதாவது அப்படியே நடந்து விடுமோ என்ற பயங்கள் அசையாத தூண்களாக நின்று விடுவதால், நாம் பேசும் வார்த்தைகளில் எப்போதாவது சில நேரங்களில் நம்மையும் மீறி விரக்தியின் அழுத்தம் பதிந்து விடுகிறது. எல்லாமே விதிதான் என்ற பக்குவம் வந்து விட்டால், மனதுக்கு என்றுமே ஆனந்தந்தான்..! இறைவன் அந்த மனநிலையை அனைவருக்கும் தர வேண்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அப்புறம்?  வேலை எப்படி போயிக்கிட்டிருக்கு?"
      "சாவடிக்குதுங்க..."

      இந்த உரையாடலில் வரும் வார்த்தை பலிக்குமா?  சில வார்த்தைகள் நமக்கு நல்லவை அல்லாத வார்த்தைகள் என்பதே மறந்து போய்விட்டன!?

      நீக்கு
    2. //எல்லாமே விதிதான் என்ற பக்குவம் வந்து விட்டால், மனதுக்கு என்றுமே ஆனந்தந்தான்..! இறைவன் அந்த மனநிலையை அனைவருக்கும் தர வேண்டும். நன்றி.//

      உண்மைதான் கமலாக்கா .

      நீக்கு
  14. அன்பின் ஸ்ரீராம்,
    தாமதமாக வருகிறேன் போல.
    பைசாவிலிருந்து ஆரம்பிக்கிறேன்:)
    நல்ல யோசனைதான். அரைப் பைசா!!

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் சிறப்பு. பைசா கோபுரம் குறித்த மதன் துணுக்குகள் மிகவும் ரசித்தேன். ப்ளாக் எழுத்தாளர்கள் குறித்த அசோகமித்திரன் அவர்களின் கருத்து படிக்க தந்ததற்கு நன்றி. எண்ணமும் செயலும் நல்லதாகவே இருக்க வேண்டும் என்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.  சில பயமுறுத்தல்கள் இருந்தால்தான் மனிதன் ஒழுங்காய் வாழ்வான் போல!

      நீக்கு
  16. மதன் சூப்பர்ப். ஆஹா எத்தனை யோசனைகள். பிரமாதம் .நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீ அசோகமித்திரன் அவர்களின் கருத்துகள்
    ஒத்துக் கொண்டு போகிற மாதிரிதான் இருக்கிறது.
    நம் கீதாவிற்கு இன்னும் நன்றாகத் தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர் வந்து மேலதிக விவரங்கள் தருவார்! முன்னரும் தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதை அழகாக உள்ளது. முதல் பகுதிக்கு ஏற்ற கவிதை. ஐம்புலன்களின் மூலமாக உதயமாகும் அநாவசியமான எண்ணங்களின் பிரச்சனைகள் மனதில் தங்காமல், தங்கி உடல் உபாதைகளை, மனச்சிரமங்களை ஏதும் உண்டாக்காமல், கால்களின் வழியே கீழிறங்கிச் சென்று விடும் தன்மையை இறைவன் நமக்கு வரமாக தந்து விட வேண்டும் என்ற கருத்துடன் கூடிய கவிதையை ரசித்தேன். மிக அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    மதன் ஜோக்ஸ அனைத்தும் அருமை. 11 எண் போன்ற பைசா கோபுர ஐடியாவும் . இரு பாதியாக வெட்டி அரைப் பைசாவாக மாற்றும் ஐடியாவும் நகைப்பை தந்தது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. கண்கள் மட்டும் தெரியும் நடிகர் யாரோ??
    தெரியவில்லை.
    ஒரு வேளை அதே கண்களோ????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அம்மா... அது டி எம் எஸ். அருணகிரிநாதர் படத்தில் முத்தைத்தரு பாடல் காட்சி!

      நீக்கு
  20. @ ஸ்ரீராம்..

    // என்ன பாட்டுன்னு யோசிக்கிறேன்!.. //

    ஐயா சாமீ.
    ஆவோஜி சாமி..
    ஐயா வாய்யா.. ராய்யா..
    யூ.. கம் ஐயா!..

    இப்போது நினைவில் பளிச்சிடுமே!..

    விரைவில் இந்தப் பாடல் வெள்ளி மலராக மலர வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாட்டு நல்லாவே தெரியும் சாமீ....   இதுபோலவே இப்போதைய பாட்டுன்னு சொல்லிருந்தீகளே..  அதுதான் சாமீ தெரில!

      நீக்கு
  21. காலை வணக்கம் எல்லோருக்கும்.

    ஸ்ரீராம் ...வெல்லும் சொல், கொல்லும் சொல் பற்றி டக்கென்று மனதில் தோன்றியதை மட்டும் முதலில் சொல்லிவிட்டு அப்புறம் வாசித்துவிட்டு வருகிறேன்.

    வெல்லும் சொல் - கொல்லும் சொல் - இந்த இரண்டுமே ஒருவரின் மன நிலையைக் கொண்டு செல்வது. கொல்லும் சொல் ஒருவரின் மன நிலையை எப்படி பாதிக்கும் என்பது அந்த நபரின் சென்சிட்டிவ் தன்மையைப் பொருத்து என்றாலும் நாட்பட நாட்பட தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டிருந்தால் பாதிக்கப்படும் நபரின் மன நிலை சோர்வது என்பது நடக்கும்.

    அதே நிலையில் வெல்லும் சொல்லை கொல்லும் சொற்களைப் பயன்படுத்தாமல் அதே சமயம் என்ன குறையோ அதை மட்டும் சுட்டிக் காட்டி மற்றபடி வெல்லும் சொற்களைப் பயன்படுத்தினால் கண்டிப்பாக சொல்லப்படும் நபரின் மனம் ஊக்கம் பெறும்.

    உங்கள் பதிவு என்ன சொல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வருகிறேன். முன்னரே இதே அர்த்தத்தில் வேறு நிகழ்வுகள் சொல்லி பதிவோ, கருத்துகளோ இங்கு வந்தது நினைவுக்கு வருகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. வார்த்தையை வேறுவிதமாக அணுகி நன்றாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  22. வார்த்தைகள் பற்றிய செய்தி அனுபவம் பேசுகிறது.

    அஸ்து தேவதைகள் உலவும், உலவிக் கொண்டிருக்கும்.
    நல்லன அல்லாத வார்த்தைகளைச் சொல்லக் கூடாது.

    என் பெற்றோர், என் மாமியார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
    அம்மாவுக்குக் கோபம் வந்தாலும் நாசமற்றுப் போக
    என்று தான் சொல்வார்.:)

    எல்லாம் நல்ல படியாக நடக்கும்பா. கவலை வேண்டாம். அனாவசியமாக

    உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
    நம் மனம் பலவேறாகத் தான் சிந்திக்கும்.
    நாம் தான் நல்ல வழியில் நடத்திக் கொள்ள வேண்டும். அனாவசியப்
    படபடப்பு வேகம் நல்லதில்லை. தயவு செய்து கவனமாகக்
    கவனித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட,  ஆமாம்..  அஸ்து தேவதைகள்  பிரயோகம் எழுதும்போது மறந்து வைத்தது!  நன்றி அம்மா.  குறையொன்றுமில்லை...

      நீக்கு
  23. ஆமாம் ஸ்ரீராம் நாம் சொல்லும் வார்த்தைகளில் கவனம் மிகவும் தேவைதான்...

    //போயிட்டு வரணும்"//

    என் பாட்டி அடிக்கடிச் சொல்லியது, 'நான் இப்ப போறேன்' என்று சொல்லாதே....போய்ட்டு வரேன்ன்னு சொல்லு அல்லது இப்ப கிளம்பறேன் திரும்ப வரேன்னு சொல்லு. என்பார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோர் வீட்டிலும் சொல்வதுதான் கீதா...   ஆபீஸ் போறேன் என்று சொல்லக் கூடாதாம்.  ஆபீஸ் கிளம்பறேன் அல்லது ஆபீஸ்  போயிட்டு வர்றேன் என்று சொல்லணுமாம்.

      நீக்கு
  24. மேலே சொன்ன கருத்தின் படி எனக்கு வேறொன்றும் தோன்றியதுண்டு. வேண்டாம் இங்கு...இடம் பொருள் பார்த்துச் சொல்கிறேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பாகவதின் காட்சி - கைதியாக வருவது - யதார்த்த நிகழ்வும் ஒத்துப் போகலாமாக இருக்கலாம். ஆனால் அவர் மீது ஏதோ வழக்கெல்லாம் இருந்ததுதானே? அக்காட்சி அமைக்கப்படவில்லை என்றாலும் கைது ஆகியிருப்பார்தானே இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராத்தனை பண்ணிக்காம இருந்திருந்தாலும் நடப்பது நடந்திருக்குமில்லயா. னு கேட்டா அதுக்கு பதில் உண்டா?

      நீக்கு
    2. ஆனால் எனக்கும் கீதா சொல்லி இருப்பதுபோல தோன்றும்தான் நெல்லை.

      நீக்கு
  26. சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிடும் போதும் தண்ணீர் பருகக் கூடாது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்கு பின் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். விக்கல் எடுக்கிறது, நெஞ்சை அடைக்கிறது எனில், நீங்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்று பொருள்.

    ஆளை விடு. நீரின்றி அமையாது என் உணவு. சாப்பிடுவதற்கு முன், சாப்பிடும் போது, சாப்பிட்டபின்
    வென்னீர் அருந்துவது என் வழக்கம்.

    பச்சையாக உணவு எடுக்கக் கூடாது என்பது ஆகார நியமம்.
    வேக வைத்தே உண்ண வேண்டும்
    என்பதும் எங்க வீட்டுப் பெரியவர்கள் சொல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரெல்லாம் நானும் சாப்பாட்டுக்குமுன் பின் தண்ணீர் குடிப்பதில் ஸ்ட்ரிக்ட்டாகத்தான் இருந்தேன்.  இப்போதெல்லாம் இடையில் கூட தண்ணீர் குடிக்கிறேன்.

      நீக்கு
  27. நாம் தவறான வார்த்தை உபயோகிக்கும்போது வானில் உலவும் தேவதைகள் ததாஸ்து என்று சொல்லி விடுவார்களாம்! உண்மையோ பொய்யோ, நல்ல வார்த்தைகளே பேசுவது நல்லதுதானே!//

    இப்படியும் சொல்வாங்கதான். என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் நல்ல வார்த்தைகளைச் சொல்வது நல்லது. அட்லீஸ்ட் பிறர் மனதைக் கொல்லாமல் இருப்போமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க மனசு இலைவடாம் மாதிரி மெல்லிசு னா நாம் என்ன பண்ணறது?

      நீக்கு
    2. //அட்லீஸ்ட் பிறர் மனதைக் கொல்லாமல் இருப்போமே!!//

      அதானே!  புண்படுத்தாமல் இருப்போம்!!

      நீக்கு
    3. இலைவடாம் மெல்லிசா கிடைக்குதா நெல்லை?  இழைவதாம் என்று சொல்லிவிட்டு தடிவடாம்தான் தர்றாங்க!

      நீக்கு
    4. ///இலைவடாம் மாதிரி//

      முன் ஜென்ம நினைவுகள் வந்து போகுது :)முந்திக்காலத்தில் தேவதையின் சமையல் பக்கம்னு ஒன்னு திறந்த நினைவு :))

      நீக்கு
    5. எனக்கும் முன் ஜென்மத்துல இரண்டு பேரின் தளங்களுக்குச் சென்றது போலவும், ஒருத்தர் சமையல் குறிப்பும் இன்னொருத்தர் தோட்டத்துச் செடிகள் எல்லாமே அழகானால் எண்ணமும் அழகாயிடும் என்றெல்லாம் த்த்துவங்கள் போட்டமாதிரியும் நினைவு.

      நீக்கு
    6. அப்போ நாம அடுத்த ஜென்மத்துக்கு வந்துட்டோமோ :) நெல்லைத்தமிழன் என்பவர் சொன்னா சரியாதான் இருக்கும்னு முன் ஜென்ம நினைவு சொல்கிறது :))))))))))))))))
      நீங்க சொன்னவரை ஸ்பேஸ் ஷிப்பில் ட்ராவல் செய்யும்போது பார்த்தேன் அவர் சொன்னார் எங்கள் பிளாக் வரும்படி ஆனால் காணவில்லை இங்கே 

      நீக்கு
  28. கவிதை நலம். நல்லவை அல்லாததை
    உடனடியாக வெளியேற்றி விவது நல்லது.
    அருமையான பதிவுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  29. சைதை துரைசாமி சொன்ன விஷயம் என் ஜி ஆர் பற்றியதற்கு அப்பாற்பட்டு, பொதுவாகவே அவர் சொன்ன விஷயங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளில் வாசித்ததுண்டு. எதுவானாலும் மருந்து போன்று அளவாகச் சாப்பிட்டால் நல்லது. மிளகு மருந்து என்று தினமும் சாப்பிடக் கூடாதுதானே. அப்படித்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாச் சொன்னீங்க...   அமிர்தமே நஞ்சு என்னும்போது...

      நீக்கு
  30. திரு. பார்த்திபன், அஜீத், தேவயானி - நடித்த ஒரு படம்..

    15 வருடங்களுக்கு முந்தையது.. பாடலின் சரணங்கள் எல்லாம் கூடாது.. கூடாது .. என்றே வரும்...

    பாடலில் சுப்ரபாதத்தை
    உருட்டியிருப்பார்கள்..

    அந்தப் பாடல் இப்போது தான்
    கோடை பண்பலையில் ஓடி முடிந்தது..

    பதிலளிநீக்கு
  31. குழந்தைகளை கவனிக்கும் நர்ஸ் மணிமேகலை://

    சொன்ன விஷயத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன். கூடவே இன்னொன்றும் சொல்கிறேன். தற்போதைய டெக்னாலஜி வளர்ந்த நிலையில் குழந்தைகள் கையில் அவர்களைச் சமாதானப்படுத்த அல்லது நம் வேலையைக் கவனிக்க அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஆண்ட்ராய்ட் மொபைலைக் கொடுக்கும் பெற்றோர் பெருமையாகச் சொல்வதையும் பார்க்கிறென் என் குழந்தை என்னமா மொபைலை பிரித்து மேய்கிறாள்/ன் என்று. வேண்டாம் ப்ளீஸ்! என்பது என் அன்பான பணிவான கோரிக்கை. அப்படியே கொடுத்தாலும் நம் கண் காணிப்பில் இருப்பதும் பல ஆப்ஷன்ஸை டி ஆக்டிவேட் செய்து கொடுப்பதும், நம் கண் காணிப்பில் வைத்துக் கொள்வதும் மிக மிக மிக முக்கியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. வழக்கமாக "கொண்டு வா / கொன்று வா" என ஒரு சொல்லால் சிலப்பதிகாரம் என சொல்வதும் உண்டு...

    சொல் வெல்லுமோ கொல்லுமோ, அதற்கு திருக்குறளில் ஒரு கணக்கு உண்டு...

    சில வேறுபாடுகள் :-
    256. தினற்பொருட்டால் கொல்லாது / கொள்ளாது
    1013. ஊனைக் குறித்த / ஊணைக் குறித்த
    1139. அறிவிலார் எல்லாரும் / அறிவிலார எல்லாரும்

    வேறுபடும் சொல்லை, திருக்குறள் முழுவதும் தேடி "ஒரு கண்க்கு" செய்தால், கிடைக்கும் சரியான சொல் எதுவென்று...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொண்டு வா - கொன்று வா...சிலப்பதிகாரச் சொல் பதற வைக்கிறது.  கும்பகர்ணன் வரம் கேட்கும்போது நாத்தடுமாறலால் மாற்றிச் சொன்னனான்.  தூங்கும் வரம் கிடைத்ததாம்.

      நல்ல உதாரண வேறுபாடுகள்.

      நீக்கு
  33. சொல் வெல்லுமா...? கொல்லுமா...? :-

    இனியவைகூறல் என அதிகாரம் இருந்தாலும், "இன்சொல்" எனும் சொல் திருக்குறள் முழுக்க உள்ளதில் ஒரு கணக்கியல் உண்டு... அதன் முடிவில் 7 (ஏழு) என வந்து விட்டால், சொல் வெல்லுமா...? கொல்லுமா...? என்று அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளலாம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதன் முடிவில் 7 (ஏழு) என வந்து விட்டால், //

      என்ன காரணம்?

      நீக்கு
    2. அது தான் திருக்குறள் எனப்படும் முப்பாலின் கட்டமைப்பு...

      நீக்கு
  34. சிறு குழந்தைகளுக்கும் தற்போது ஆன்லைன் வகுப்புகள். பெற்றோரை கூடவே இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்தான். என்றாலும் இது தேவையா என்றும் தோன்றுகிறது. ரொம்பவே சின்னக் குழந்தைகள்!!

    அடுத்து வயது வந்த குழந்தைகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள்....இதில் பல அத்து மீறல்கள், வேண்டாத விஷயங்கள் நடக்கின்றன என்பதையும் அறிகிறேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் இருப்பது மிக மிக மிக அவசியம்.

    ஒரு பக்கம் நல்ல தலைமுறை உருவாகிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது. மறு புறம் இதுவும்...எனவே ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை/பெற்றோர் வளர்ப்பினிலே...கண்ணதாசனின் வரிகள்!!! எவ்வளவு ஆப்ட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைன் வகுப்புகளின் சாதக பாதகங்களை நான் அறியேன்.

      நீக்கு
    2. ஆனா ஒர்க் ஃப்ரம் ஹோம் சாதக பாதகங்கள் தெரிஞ்சிருக்கணுமே

      நீக்கு
    3. அதில் சாதகங்களைவிட பாதகங்கள்தான் அதிகம்.

      நீக்கு
  35. கவிதை நன்று ஸ்ரீராம்....கருத்து.

    கால்களுக்குப் போவதற்கு முன்னரே மனம் இருக்கிறதே அங்கிருந்தே எடுத்துவிடலாமோ!!! அங்கயும் ஒரு பெர்மனென்ட் டஸ்ட்பின் சைச்சிருவோம்!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து நல்லாருக்கு ஸ்ரீராம் ஆனால் ஏதோ ஒன்றுகுறைவது போல்...

      கீதா

      நீக்கு
    2. ஆம். சொற்களில் கவர்ச்சியும் சொல்வதில் நேர்த்தியும்.

      நீக்கு
  36. அசோகமித்ரன் அவர்கள் ப்ளாக், எடிட்டர் பத்தி சொல்லியிருப்பது மிகவும் சரி என்றே சொல்வேன். எனக்கும் தோன்றுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மறுபடி படித்து எடிட் செய்வதே இல்லை.

      நீக்கு
    2. நான் செய்தேன். இன்றைய பதிவின் சில எழுத்துப் பிழைகளை சரி செய்தேன். காலையில் !!

      நீக்கு
  37. நகைச்சுவைகளை அதிகம் ரசித்தேன். சொற்கள் அழகிய வீணையைப் போன்றவை. அதை கவனமாக மீட்டவேண்டும் என்று என் நண்பர் சொல்லுவார். முதல் பகுதியைப் படித்தபோது அது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  38. கவிதை பற்றி அசோகமித்ரன் அவர்களின் கருத்து மிகவும் வித்தியாசமாக வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது. மீண்டும் அதை வாசிக்கிறேன்.
    கீதா

    பதிலளிநீக்கு
  39. பைசா கோபுரம் மதனின் யோசனைகள் ஹாஹாஹாஹா. சிரித்தாலும் அட என்று சொல்ல வைக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  40. தொண்டு கிழம் ஆனபிறகு, சிலர் விருதே இல்லாமல் இறந்துவிடுகிறார்கள்//

    அவர் கருத்து மிக மிகச் சரியே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ஃபீல்டில் அவர் சொல்கிறார்.  இது வெவ்வேறு இடங்களிலும் பொருந்தும்.

      நீக்கு
    2. தொண்டு கிழம் ஆனபிறகு விருது கொடுப்பதே அவமானப்படுத்துவது போ.

      உதாரணமா இப்போ நாகேஷ் உயிரோட இருந்தால் அவருக்கு பத்மஶ்ரீ கிடைக்கும். அவரைவிட ஜூனியர்கள் (பசங்க வயசு) நடிக நடிகைகள் பத்மஶ்ரீ வாங்கியாச்சேன்னு வருத்தப்படத்தான் முடியும்.

      நீக்கு
    3. எழுத்தாளர் சுஜாதா என்ன விருது வாங்கினார்?

      நீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    கண்கள் படம் நடிகர் அசோகனை நினைவு படுத்துகிறது. விழி வழி கண்ணீரில் தெரியும் கண்கள் நடிகை தேவிகாவையும் நினைவுக்குள் கொண்டு வருகிறது.தங்கள் பதிலில் இதில் யாரோ? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  42. வாக்குகள் நல்லவை பலிக்கவில்லை என்று கவலைப் படமாட்டோம். ஆனால் ஒரு சுடுசொல் பலித்து விட்டால் ஐயோ என்போம். இதுவே மனப்பாங்கு.

    குழந்தைகள் நம்மைக் கண்டு படிப்பது மரபியல்பு. நல்லவை அவர் காண செய்வோம்.

    பாட்டுக்குப் பாட்டு.

    எண்ணங்கள் சிக்கல் ஆவது எண்ணுபவரின்
    எண்ணங்களால் தான் எண்ணுபவரின் மனதில்
    எண்ணங்கள் தெளிவாயின் அவர் மனதில்
    எண்ணங்கள் இல்லாதாகும். அந்நிலையே நிர்வாணம்.

    அசோகமித்திரன் இறந்து 4 வருடங்கள் ஆகின்றனவே. பேட்டி எப்போது எடுக்கப்பட்டது என்று பார்த்தேன். 2014. மீள்பதிவு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவை மனித மனதில் நிற்பதில்லை!

      எண்ணச்சிக்கல் என்பார்கள்.  சிக்கலான எண்ணம் என்பார்கள் அது உங்கள் பாட்டுக்குப் பாட்டில் தெரிகிறது!
      மீள்பதிவுதான்!  பிளாக்கில் பகிர்ந்தேனா நினைவில்லை, பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.

      நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  43. @ ஸ்ரீராம்...

    // இதுபோலவே இப்போதைய பாட்டுன்னு சொல்லிருந்தீகளே.. அதுதான் சாமீ தெரில!.. //

    உங்களோட Fb ல ஊடாடி வரலையா!.. என்ன ஷாமி நீங்க!..

    புசுப்பா... ன்னு ஒரு படம்.
    அதுல ராசலெச்சிமி ..ன்னு ஒரு பொண்ணு பாடுனது!..

    ஏதோ ஒரு டீவீயில வந்து அழுதிச்சாமே - அது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புசுப்பா படம் தெரியும்!  அதில் இரண்டு பாடல்கள் தெரியும்.  ஒன்று விவகாரமான பாடல்.

      நீக்கு
  44. //நாம் தவறான வார்த்தை உபயோகிக்கும்போது வானில் உலவும் தேவதைகள் ததாஸ்து என்று சொல்லி விடுவார்களாம்! உண்மையோ பொய்யோ, நல்ல வார்த்தைகளே பேசுவது நல்லதுதானே!//

    ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். வீட்டு பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் "நல்லதே பேசு என்பதுதான்."

    பேசுவது மட்டும் இல்லை மனதில் நினைப்பதும் நல்லதாக இருக்க வேண்டும் என்பார்கள்.

    முன்பு ஒரு முறை உங்கள் தளத்தில் "ததாஸ்து" பற்றி பேசி இருக்கிறோம்.

    //சாதாரணமாக நான் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட என் பாஸும், இளையவனும் உடனே அதைத் திருத்தி மறுவார்த்தை வெளியிடச் செய்வார்கள். //

    உங்களை மகன், மனைவி உங்களை சரியாக பேச செய்வது போல இப்போது என்னை என் குழந்தைகள் நல்லதே பேச சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... மனசிலே நல்லதாக நினைக்கப் பழகுவது சிறந்தது.

      நீக்கு
  45. பதில்கள்
    1. வாங்க சிறப்பு விருந்தினர்!

      நீக்கு
    2. நோஓஓஓஓஒ இது அலாப்பித்தனம்:).. இன்று இங்கு நாந்தேன் ஜிறப்பு விருந்தினர் ஆக்கும்...க்கும்..க்கும்..:))

      நீக்கு
    3. வருக, வருக, அதிரடி வருக. நான் இருக்கும் வரை வரலை. அப்புறமா வந்திருக்கீங்க! அம்புட்டு பயமா? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    4. வாங்க சிறப்பு விருந்தினர் II...

      நீக்கு
    5. கீசாக்கா உங்கட பக்கம் வந்துதான் உங்களோடு பேசுவதென இருக்கிறேன்:))[என்னா ஒரு எஸ்ஸ்கேப்பூஊ:)]..

      சிறப்பு விருந்தினர்111... இருக்கோ ஸ்ரீராம்:))

      நீக்கு
  46. //'நொறுங்கத் தின்றால், 100 வயது' என்பது பழமொழி. நமக்கு, 32 பற்கள் இருக்கின்றன. நாம் ஒரு கவளம் உணவை வாயில் போட்டால், 32 முறை மென்று திரவமாக்கி, இரைப்பைக்கு அனுப்ப வேண்டும் என்பதை குறிக்கிறது அது. //

    உண்மைதான்.

    உணவு உண்ணும் முறை மாறி இருப்பது உடல் நல கேடுதான்.
    நின்று கொண்டு சாப்பிடுவது. வேண்டுமென்பதி நடந்து போய் போய் எடுத்து உண்ணும் பபே சிஸ்டமும் கெடுதல்தான். சாப்பிட அமர்ந்த பின் இடையில் எழுந்து கொள்ள கூடாது, சாப்பிடும் போது பேசி கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ சாப்பிட கூடாது என்கிறார்கள் அதை கடை பிடிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மென்று சாப்பிடும் வழக்கமே குறைந்து வருகிறது.  அவுக் அவுக் என்று விழுங்குவதே வாடிக்கையாகிறது!

      நீக்கு
    2. வாங்க ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      நான் நலமாகி வருகிறேன். உடல் குறைவு இருந்தது.
      நீங்களும் அதிராவும் வலை பக்கம் வந்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  47. என்ன மாறினாலும் என் பழக்கம் ரிவர்ஸ் ஆர்டரில் வர்ரதுதான் அப்டியே வரேன் 

    பதிலளிநீக்கு
  48. //குழந்தைகளை தனியாக விடாமல், பக்கத்தில் யாராவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.//

    உண்மை.

    நேற்று பார்த்த செய்தி இதை உறுதி செய்கிறது. மனதை பதற செய்த காட்சி இரண்டு குழந்தைகள் விளையாட போன போது ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போனது, காப்பாற்றியும் பிரயோசனம் இல்லை குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு தாய் கதறிய காட்சி மனதை கலங்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  49. கீதா ரெங்கன் ,வல்லிம்மா ,கமலாக்கா ,கோமதிக்கா எல்லாரையும் பார்த்தேன் where இஸ்  கீதாக்கா???????? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கேன், இருக்கேன், இன்னிக்குப் பையர், மருமகள், குஞ்சுலு ஊருக்குப் போனபின்னர் எடுத்து வைக்க வேண்டியவற்றை வைப்பதும் சமையலறையைச் சுத்தம் செய்வதுமாகப் பொழுது போய் விட்டது. சாப்பிட்டு வேலைகளை முடிக்கையில் மதியம் ஒன்றரை மணி. இதில் ப்ளம்பர் வேலை வேறே இருந்தது. எல்லாம் முடிஞ்சு அப்பாடானு வந்து பதிவைப் படிச்சுட்டுப் போயிட்டேன். அப்புறமா இப்போ வந்தா இத்தனை நாழி இணையமே வரலை. :( நேரம். :)))

      நீக்கு
    2. நினைவு வைத்துக் கொண்டு விசாரித்ததுக்கு நன்றி ஏஞ்சல். எங்கே உங்க பூசார்? அவரையும் உங்களையும் நினைக்காத நேரம் இல்லை. :))))

      நீக்கு
    3. குட்டி குஞ்சுலு வந்திருந்ததா !!! வாவ் பிளாக் பக்கம் வராததால் தெரியலை குழந்தை எப்படி இருக்கா ?

      நீக்கு
    4. ஆமாம், ஏஞ்சல், இங்கே ஒன்றரை மாதமும் அவங்க தாத்தா வீட்டில் 20 நாட்களும் இருந்தாங்க. பையர் அலுவலக வேலை செய்ததால் இங்கே தான் இருந்தார். அங்கே இணையம் சரி இல்லை. குஞ்சுலுவின் விஷமங்கள் குறைந்து விட்டது. அதான் வருத்தம். மற்றபடி காலம்பர எழுந்து பல் தேய்ப்பதில் இருந்து ராத்திரி படுக்கும் வரை லூட்டி தான். எல்லாத்துக்கும் படுத்தல். :))))

      நீக்கு
  50. திரு . அசோகமித்திரன் அவர்கள் சொன்னது போல பாராட்டுக்கள், விருதுகள் சரியான காலத்தில் கொடுத்தால் நல்லது.

    மதன் அவர்கள் நகைச்சுவை எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  51. இந்த சொல்லும் சொல்லும் வெல்லும் சொல்லும் என்னை பொறுத்தவரைக்கும் உண்மைதான் .எதை சொல்றோம் என்பது மிக மிக முக்கியம் . அவசரப்பட்டு கோபத்தில் ஒன்று சொல்லிட்டு இதுவரைக்கும் ஊருக்கு போக முடியாம இருக்கு :(

     எந்த இடத்தில எதை சொல்ரதுன்னும் ஒரு வரைமுறை இருக்கு ஒரு தூரத்து உறவினர் பெண்மணி மரண வீட்டில் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டார் ஒரு மண வீட்டில் போறேன் என்று சொல்லிட்டார் எல்லாரும் புகைஞ்சு தள்ளிட்டாங்க 
    அப்புறம் ஒரு நட்பு ஆன்ட்டி எதுக்கெடுத்தாலும் ஹௌ ஸ்வீட் என்பார் ஒருமுறை அவரது நண்பி தனது கணவர் பாத்ரூமில் தடுக்கு விழுந்த்து கால் உடைந்ததை  கவலையுடன் சொல்ல இவர் விவஸ்தையின்றி பழக்க தோஷத்தில் ஹொவ் ஸ்வீட் என்று சொல்லிட்டார் :) நட்பு க்ளோஸ் முடிஞ்சது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படித்த பள்ளியில் ஒரு ஆஆ... சிரியை //அந்த வேலைக்கு பொருத்தமில்லாதவர் .சில மாணவிகளை அவருக்கு பிடிக்காது காரணம் உருவ அமைப்பு .அதனால் ஒரு சிலரை பார்த்து //நீங்க உருப்படமாட்டீங்க /ப்ளஸ்டூ ரிசல்ட் வரும்போது அழுதுட்டித்தான் போவீங்கனார் அதேபோல் பல மாணவிகள் போனதை பார்த்தேன் :( 

      நீக்கு
    2. //இவர் விவஸ்தையின்றி பழக்க தோஷத்தில் ஹொவ் ஸ்வீட் என்று சொல்லிட்டார் :)//

      சிரிக்கலாமா? ஆனால் என்ன கொடுமை!

      நீக்கு
  52. //நாளைக்கு ஆறரைக்கே கிளம்பணும் //
    இதில் கிளம்பணும் அப்படின்னா என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வார்த்தை நிஜம்மா தெரியாதா?

      நீக்கு
    2. கிளம்பணும்///
      எதிலிருந்து மருவி உருமாற்றம் அடைந்த சொல் கிளம்புதல் ??சாமீ கடவுளே என்னை இவ்ளோ தமிழ் சுத்தமா எழுத வைச்சிட்டாரே !!இது நானா நானேதானா மருவி உருமாற்றம் எல்லாம் 5 ஜென்மம் முன் எங்கேயோ கேட்டது போல் இருக்கே 

      நீக்கு
    3. ​கிளம்ப வேண்டும். கிளம்பணும்!

      நீக்கு
  53. ஆமா இந்த வானத்து தேவதைகள் நியாயப்படி எல்லாத்துக்கும் ததாஸ்து சொல்லியிருந்தா நல்லாயிருக்கும் .எதுக்கு செலக்டிவா கெட்ட விஷயத்துக்கு மட்டும் காதை நீட்டிக்கிட்டு ததாஸ்து சொல்றாங்க ? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை ஏஞ்சல். அவங்க எப்போதுமே சுற்றிச் சுற்றி வந்து "ததாஸ்து" எனச் சொல்லுவார்கள். அப்படியே ஆகட்டும் என்பது பொருள். என் தாத்தா அவர்களை "திக் தேவதைகள்" என்பார். நாம் பேசிக் கொண்டிருக்கையில் ஏதேனும் அவச் சொல்லோ, அல்லது இம்மாதிரியான பேச்சுக்களோ பேசுகையில் அவங்க அந்த நேரம் பார்த்து ததாஸ்து சொல்லிக் கொண்டிருந்தால் அது அப்படியே நடக்கும் என்பார்கள். பொதுவாக அறச் சொல் யாருமே சொல்ல மாட்டார்கள் தான். ஆனால் தமிழ்த்திரைப்படங்களில் காமெடி என்பதே இப்படியான அறச் சொற்களைப் பேசுவதும் அடுத்தவர் நிறம், உயரம் ஆகியவற்றைக் கேலி செய்வதும் என்றே ஆகி விட்டது.

      நீக்கு
    2. ஆஹா புரிஞ்சது ததாஸ்து  .
      இந்த காமெடி உருவ கேலி எல்லாம் இங்கே அடுத்த ஜெனரேஷனுக்கு சரியே வராது .என் பொண்ணு ரொம்ப கோபப்படுவா யாரையாச்சும் கிண்டலோ கேலியோ  செய்றதை பார்த்தா 

      நீக்கு
    3. நல்ல கேள்வியும், நல்ல பதிலும். நன்றி ஏஞ்சல், நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  54. என்னது எம் ஜி ஆர்   உணவில் கவனமெடுக்கலையா ??  செத்துட்டாரா அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கார் ஆச்சர்யமா இருக்கு அப்படின்னா எப்படி தலைவி படத்தில் கங்கனா ராவத்துடன் டூயட்லாம் பாடறார் ??

    பதிலளிநீக்கு
  55. குழந்தைகள் விஷயம் உண்மைதான் .ஒவ்வொரு பொருளையும் பார்த்து வைப்பேன் என் பொண்ணு தவழும் நடக்கும் பருவத்தில்  இருந்தப்போ .ஆனாலும் எல்லாத்தையும் தோண்டி துருவுவா .ஸ்ஸ்ஸ்யப்பா .அந்த பிரச்சினை எல்லாம் கடந்து வந்தாச்சு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஞ்சுலு சப்பாத்தி பண்ணும்போது மட்டும் சமையலறையை விட்டுப் போகாது. அதுவும் ஒரு சப்பாத்தி பண்ணி வேக வைத்துத் தரச் சொல்லி எல்லோருக்கும் கொடுக்கும்.

      நீக்கு
    2. சுவாரஸ்யம். காத்திருக்கிறேன்!

      நீக்கு
  56. //தலையில் உற்பத்தியாகி//
    பேனாக இருக்குமோ இல்லை பொடுகு ??
    எண்ண சிக்கல்களுக்கு எண்ணையை தேச்சு ஈருள்ளியால் வார சொல்லவும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம ஃபார்ம்ல இருக்கீங்க போல!

      நீக்கு
    2. //செம ஃபார்ம்ல இருக்கீங்க போல!//

      ஹா ஹா ஹா அதே அதே:) பிள்ளைக்கு விட்டமின் டி நல்லா வேலை செய்யுது:)) ஹையோ ஹையோ:))

      நீக்கு
    3. அதிரா வாங்க , வாழ்க வளமுடன்
      நலமா? நீங்கள் வலைபக்கம் வந்தது மகிழ்ச்சி.
      தொடர்ந்து வர பாருங்கள் இருவரும்.

      நீக்கு
    4. அதிரடி, அதிரடியாக வந்ததுக்கு நல் வரவு. அது எப்படி உங்க செக் வரது தெரிஞ்சு நீங்களும் வந்தீங்களா? இல்லைனா ரெண்டு பேரும் பேசி வைச்சுக் கொண்டீர்களா?

      நீக்கு
    5. நன்றி கோமதி அக்கா.. இனி எப்படியும் வலை உலா வர இருக்கிறேன், ஆனா நான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்காமல் இருந்தால் போதும்:))..

      கீசாக்கா, இந்தவாரம் எப்படியும் களமிறங்கோணும் என சொல்லி வச்சிருந்தோம், ஆனா நேற்று அஞ்சு வராட்டில் நானும் வந்திருக்க மாட்டேன், தலைக்கு மேல வேலையும், தலைக்குள் தலையிடி இருமல் தும்மலுமாக இருக்குது, அதனாலேயே பிற்போடலாம் என இருந்தேனாக்கும்:))

      நீக்கு
  57. //இது யார் கண்கள்?//

    not mine because i dont use kajal :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும்.. செம ஃபார்ம்ல இருக்கீங்கன்னு சொல்லிக்கொள்கிறேன்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா மறுபடியும் அதே அதே.. ஓவர் டோஸ் எடுத்திட்டா போல:))

      நீக்கு
    3. ஓவர்டோஸையும் அளவாத்தான் எடுத்திருக்காங்க போல!!

      நீக்கு
  58. அசோகமித்திரன் ஐயா அவர்களின் பதில்கள் நன்றாக இருந்தது .சீரிய  கூர்மையான பார்வை அப்படியே கீதாக்காவுக்கும் இருக்கு .பொதுவா  திறமைக்கான அங்கீகாரம் என்பது அதற்க்கான காலத்தில் கிடைக்கணும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, ஏஞ்சல், அவர் என் அம்மாவின் தங்கை கணவர். அப்பா வழிச் சித்தப்பா இல்லை. அப்பா தான் கடைசி. :))))

      நீக்கு
    2. சரி, இன்றைய நேரம் முடிஞ்சாச்சு! :)))) இனி நாளைக்குத் தான். நாளைக்கும் வாங்க.

      நீக்கு
    3. ஆஆவ் !! அப்படியா ஆனா அந்த தீவிர யோசனை பார்வை அப்படியே உங்களுக்கும் இருக்கே !! ஆச்சர்யம் 

      நீக்கு
    4. நேரம் கிடைக்கும்போது ஓடி வறேன்க்கா நிச்சயம் .இங்கே வந்தா எல்லாரையும் மொத்தமா பார்த்த மாதிரியும் இருக்கு .நிச்சயம் வர்றேன் 

      நீக்கு
    5. அன்புள்ள சகோதரி ஏஞ்சலுக்கு அன்பான வணக்கங்கள்.நலமா? எப்படி உள்ளீர்கள்? நீண்ட நாட்கள் கழித்து இன்று உங்களைக் கண்டதும் மனதுக்கு நன்றாக சந்தோஷமாக உள்ளது. உங்களது இணைபிரியாத அன்புத் தோழி அதிரா அவர்கள் எப்படி இருக்கிறார்? நாங்கள் உங்களை இருவரையும் நினைக்காத நாளில்லை. வரவையும் எதிர்பார்த்துக் கொண்டேயிருப்போம். அவரையும் நான் மிகவும் கேட்டதாகக் கூறவும். இன்று இங்கு உங்கள் வரவை,கருத்துக்கள் அனைத்தையும் நான் இப்போதுதான் படித்து ரசித்தேன். என் அன்பான வரவேற்பை நீங்கள் எப்போது பார்ப்பீர்களோ? நாளை எப்படியும் நீங்கள் வரும் சமயம் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. நோஓஓஓஓஓ கமலாக்கா இது சரிவராதாக்கும்:)).. மீ இங்கிருக்கும்போதே அதிராவைப் பற்றி அஞ்சுவிடம் தூது விடக்குடா ஜொள்ளிட்டேன்ன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    7. ஆ... என்ன செய்வது? நீங்கள்தான் இப்படி அவரை "தூது போ கிளியே" என அடிக்கடி அனுப்பி வைத்து விட்டு பின்னாடியே வந்து விடுகிறீர்கள்.ஹா ஹா ஹா. நலமா அதிரா சகோதரி? பார்த்து எவ்வளவு நாட்கள்..... இல்லையில்லை.. வருடங்கள் ஆகி விட்டது.

      நீக்கு
    8. அடிக்கடி இல்லை... இப்போது இப்படி எப்பவாவது... :))

      நீக்கு
  59. ஹாஹா அரைப்பைசா ஐடியாதான் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நன்றி ஏஞ்சல். அடிக்கடி வாங்க...

      நீக்கு
    2. //அடிக்கடி வாங்க...//
      ஒரு சிறு திருத்தம் ஸ்ரீராம்.. அதிரா அடிக்கடிக்க என வந்திருக்கோணுமாக்கும் இது:))

      நீக்கு
    3. உங்கள் இருவரையும் எப்போதுமே ஆவலுடன் எதிர்பார்க்கும்...

      நாங்கள்!

      நீக்கு
  60. ஆஆஆ நான் இப்போ போஸ்ட்டுக்குக் கொமெண்ட் போடுவேனா?:), கொமெண்ட்ஸ்க்குக் கொமெண்ட் போடுவேனா என ஒரே டடுமாற்றமா இருக்கு.. கை எங்கின வைக்கிறது லெக் எங்கின வைக்கிறது என ஒண்ணுமே புரியல்ல ஜாமீஈஈஈஈ..

    ஆனாலும் நான் படுபயங்கரமாக ஆணித்தரமாக வந்திருக்கிறேன் இன்று ஆரையும் நலம் விசாரிக்கப்போவதில்லை என, பிக்க்க்கோஸ்ஸ் போன தடவை எல்லோரையும் விசாரிக்கிறேன் பேர்வழி என நினைச்சு பானு அக்காவை விட்டிட்டேன்ன்.. அதால பானு அக்கா கவலைப்பட்டிட்டா.. அதனால இம்முறை இங்கு காணம் இருப்பினும் பானு அக்கா நலம்தானே?.. வேறு ஆரையும் கேய்க்க மாட்டேனாக்கும்:))..

    மெதுவா தளத்துக்கு வந்து கேட்கிறேன் டீல்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னையும் விசாரிக்கலையாக்கும். போனால் போகுதுனு விட்டுட்டேன். :(

      நீக்கு
    2. நான் சொல்லிக்கொள்வதில்லை..  அவ்வளவுதான்!

      நீக்கு
    3. போனதடவை கீசாக்காவை விசாரிக்காமல் விட்டேனா??? ஆஆஆஆஆ என் செக் இதைச் சொல்லவே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹா ஹா ஹா ஸ்ரீராமை ஆராம் விசாரிக்காமல் விட்டது?

      நீக்கு
  61. போஸ்ட்டில நீல மை எழுத்துக்களின் விசயம் நான் ஒரு போஸ்ட்டாகப் போட்டனே.. அதையும் மறந்திருப்பீங்கள் சரி விடுங்கோ...

    நாங்கள் கிளம்புதல் எனும் வார்த்தை பாவிப்பதில்லை.. போயிட்டு வாறேன் எனத்தான் சொல்வோம், அதைச் சின்னவர்கள் நான் போறேன் என்பார்கள்,அப்படிச் சொல்லக்கூடாது என்போம். ஒரு சொல்லில் சொல்வதானால் நான் வரட்டே.. “நான் அப்போ வாறன்” இப்படிச் சொல்லிட்டுப் போவார்கள் ஊரில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஏற்கெனவே சில போஸ்ட்டும் போட்டிருக்கேன்.  இந்தப் பதிவில் வாலி சொன்னதாய் வந்த விஷயங்களை பகிர்வதில்தான் முக்கியத்துவம்.  அப்புறம் அதற்கு துணை இணையாய் சில வார்த்தைகள்!

      நீக்கு
  62. வெளிநாடுகளில் ஆரம்பகாலம் வந்தோர்[நம்மவர்கள்] அப்பாட்மெண்ட்களில்தான் இருந்தார்கள், அப்போ அவர்கள் பாசை, போகப்போகிறேன் என்பதற்குப் பதில், இறங்கப்போகிறேன் எனப் பழகிவிட்டினம்.. மேல் மாடிகளில் இருந்ததனால்.. அது அப்படியே பழக்கப்பட்டு.. வீடுகளுக்கு வந்திட்டாலும்.. இறங்கப்போறேன், இறங்கட்டோ இப்படித்தான் சொல்வது வழக்கமாகி விட்டது.. அது என்னையும் தொற்றி இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நளதமயந்தி சில காட்சிகள் பார்த்தேன்.  இதுமாதிரி வசனங்கள் கேட்டு மகிழ்ந்தேன்.

      நீக்கு
  63. கவிதை நன்று, ஆனால் அது கீழே இறங்குவதற்குப் பதில், மேலே ஏறித்தலையில் இருந்து தலையிடி எல்லோ வந்திடுது:)..

    இவர்தான் அசோகமித்திரனோ.. முன்பு வேறு மாதிரிப் படம் பார்த்த நினைவு..

    பதிலளிநீக்கு
  64. உசிலை மணி அங்கிள்[இல்ல இல்ல இது அஞ்சுட முறையில சொல்லிட்டேனாக்கும்:)].. தாத்தா இன்னும் இருக்கிறாரோ?..

    அதில என்ன ஜோக் இருக்கிறது?.. சிரிக்கிறமாதிரி ஜோக் போடுங்கோ ஸ்ரீராம்:)).. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா? உங்கள் இருவரையும் காணாமல் எங்கள் கண்கள் பூத்து விட்டது.( ஓ... அதனால்தான் இன்று சகோதரர் ஸ்ரீராம் கண்கள் படத்த்தை பதிவில் யதேச்சையாக போட்டிருக்கிறார் போலும்.) இப்பத்தான் உங்களைப் பற்றி ஏஞ்சலிடம் விசாரித்தேன். கண்மூடித் திறப்பதற்குள் மாயமாக புறப்பட்டு வந்து விட்டீர்களே....! வருக.. வருக. உங்கள் வரவு நல்வரவாகட்டும். எங்களையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு நினைவாக வந்ததற்கு மிகவும் சந்தோஷம். வானத்து திக் விஜய தேவதைகள்தான் இந்தப்பதிவுக்கு உங்களை வரச்சொல்லி, கையோடு அழைத்து வந்திருக்கிறது போலும். இதைப் போல் நினைவாக இனியும் வருவோம் எனச் சொல்லி விடுவதோடு மட்டுமின்றி, வந்து கொண்டேயிருக்க வேண்டுமாய் விண்ணப்பித்து கொள்கிறேன். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. //ஓ... அதனால்தான் இன்று சகோதரர் ஸ்ரீராம் கண்கள் படத்த்தை பதிவில் யதேச்சையாக போட்டிருக்கிறார் போலும்.)//

      ஹா..  ஹா..  ஹா..  கமலா அக்கா...   உங்கள் பாணியில் கலக்குகிறீர்கள்.  ஒரு விஷயம் என்னவென்றால் செக் முதலில் வந்தால் தலைவியையும் சென்று தகவல் கொடுத்து அழைத்து விடுவார்!

      நீக்கு
    3. // அதில என்ன ஜோக் இருக்கிறது?.. சிரிக்கிறமாதிரி ஜோக் போடுங்கோ ஸ்ரீராம்:)).. ஹா ஹா ஹா. //

      ஜோக்கே சிரிக்கணுமா அதிரா?!!

      நீக்கு
    4. ஆஆஆஆஆஆஆஆ நன்றி கமலாக்கா.. எல்லோரும் நினைப்பீங்கள் எனத் தெரியும், எங்களால்தான் நேரம் கிடைச்சாலும் வர அலுப்பாக இருக்கும் பல சமயம்.. இனிமேல் வரோணும் பார்க்கலாம்.

      நீக்கு
  65. வியாழன் பதிவு முழுமையாக இருக்கிறது. புகைப்படம் போடுவதை நிறுத்தி கொஞ்ச நாட்கள் ஆகி விட்டதே? கவிதை..??
    அசோகமித்திரனின் ஆச்சர்யம் எனக்கும் உண்டு ப்ளாகில் எழுதித் தள்ளுபவர்களைப் பார்த்தால் வியப்பாக த்யானம் இருக்கும். எனக்கு அசாத்தியம் அது.

    பதிலளிநீக்கு
  66. சைதை துரைராஜ் கூறியதை ஏற்கனவே படித்திருக்கிறேன்.
    செவிலியர் மணிமேகலை கூறியிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  67. ஜோக்ஸ் ரசித்தேன்.

    .குழந்தை வளர்ப்பு பற்றி நன்றாக செவிலியர் சொல்லியுள்ளார் .நேரடி கண்காணிப்பு அவசியம் .

    பதிலளிநீக்கு
  68. நாம் பேசும் சொற்களில் எப்போதுமே கவனம் தேவைதான். நாங்கள் 'அப்ப வரட்டே' 'அப்ப காணாம்' என்று சொல்வது வழக்கம்.

    வழக்கமான ஸ்ரீராம்ஜியின் கவிதை போல இல்லை என்று தோன்றுகிறது. (எனக்கு கவிதை எட்டாக்கனி!)

    அந்தக் கண்கள் அசோகன் அவர்களின் கண்கள் போன்று இருக்கிறது

    அசோகமித்ரன் அவர்களின் பேட்டி சுவாரசியம் என்பதோடு நல்ல ஆழமான கருத்துகள்.

    ஜோக்ஸ் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கண்கள் யாருடையவை என்பதை ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  டி எம் எஸ் கண்கள் அவை!

      நன்றி துளஸிஜி.

      நீக்கு
  69. சைதை துரைசாமி சொல்லியிருப்பது நல்ல விஷயம்.

    மணிமேகலை அவர்களின் கருத்து மிகச் சிறப்பு என் அனுபவத்தில் கண்டதும் கூட

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!