புதன், 18 ஜனவரி, 2023

டிசம்பர் சீசனில் மட்டும் கச்சேரி கேட்பவரா நீங்கள்? + சு நா மீ 08

 

கீதா சாம்பசிவம் : 

உடம்பு சரியில்லாமல் மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிடும்போதே நடுவில் நுழைந்து அவங்க வைத்தியத்தையும் சொல்லுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அதிலும் சிலர் பிடிவாதமாகத் தாங்கள் சொல்லுவதை வாங்கிச் சாப்பிட்டே ஆகணும் என வற்புறுத்துவது சரியா?

# நாமும் பிடிவாதமாக மறுக்கலாமே? ஆனால் சிலசமயம் அனுவபூர்வமாக தரப்படும் மருத்துவக் குறிப்புகள் நன்கு பயன்படுவதும் உண்டுதானே.

 வற்புறுத்தல் சரியல்ல என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

& // உடம்பு சரியில்லாமல் மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிடும்போதே நடுவில் நுழைந்து அவங்க வைத்தியத்தையும் சொல்லுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?// 

மிகவும் நல்லவர்கள். நம்முடைய ஆரோக்கியத்தில் அதீத அக்கறை கொண்டவர்கள். நாம் விரைவில் பூரண நலமடையவேண்டும் என்று நினைப்பவர்கள். 

// அதிலும் சிலர் பிடிவாதமாகத் தாங்கள் சொல்லுவதை வாங்கிச் சாப்பிட்டே ஆகணும் என வற்புறுத்துவது சரியா?// 

அவர்களைப் பொருத்தவரை அது சரி. நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு ' அப்படியே செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, பிறகு நம் இஷ்டம்போல செய்துகொண்டால் போகிறது! 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

தீவுளிக்கு தீவுளி மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் போல டிசம்பர் சீசனில் மட்டும் கச்சேரி கேட்பவரா நீங்கள்?

# ஆம். நேரில் கச்சேரி கேட்பது என்றால் ராமநவமி, கோகுலாஷ்டமி, டிசம்பர், ஹனுமத் ஜெயந்தி என்று "சீசன்" கச்சேரி கேட்பது தான் வழக்கம். (இதுவே வருஷம் பூராவும் என்பது போல் இருக்கிறதா ?)

& முன் காலத்தில் அப்படித்தான். கடந்த பல வருடங்களாக அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது :(( 

தியாகராஜர் எத்தனையோ கீர்த்தனைகள் பாடியிருக்க, பஞ்சரத்ன கீர்த்தனைகளுக்கு மட்டும் என்ன சிறப்பு?

b). அவைகளை அப்படி அவரே அமைத்தாரா?

c). பலருக்கும் தெரிந்த திருவையாறில் பாடப்படும் அந்த பஞ்சரத்ன கீர்த்தனைகள் தவிர லால்குடி பஞ்ரத்னம் போல இன்னும் சிலவும் உண்டாமே? விளக்க முடியுமா?

# பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை அமைப்பு மற்றவை போல் இன்றி இன்னும் விசாலமாக இருப்பதைப் பார்க்கவில்லையா ? 

கோவூர், ஶ்ரீ ரங்கம், திருவொற்றியூர்  பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் என்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

& மற்ற கீர்த்தனைகளில் தனக்காக வேண்டிய சத்குரு தியாகராஜர், பஞ்சநதிகள் பாயும் திருவையாறில் பாடியுள்ள பஞ்சரத்ன க்ருதிகளில் தனக்கென எதுவும் வேண்டாது, எல்லாவற்றிலும் ஸ்ரீராமனின் புகழ் பாடி, தான வர்ண வகையில் அமைத்துள்ளதால் இந்தப் பஞ்சரத்ன கீர்த்தனைகளுக்கு சிறப்பு. 

மற்ற கீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, ஒன்று அல்லது இரண்டு சரணங்கள் இருக்கும். ஆனால் ப. ர கீர்த்தனைகளில் பல சரணங்கள் உண்டு. 

பஞ்சரத்ன கீர்த்தனைகளின் சிறப்பை வேறொரு வழியிலும் காணலாம். திருப்பாவை பாடல்களுக்கு இசை அமைத்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள், திருப்பாவை முதல் ஐந்து பாடல்களுக்கும், பஞ்சரத்ன க்ருதிகளின் அதே வரிசையில், நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகிய ராகங்களில் இசை அமைத்திருக்கிறார். 

 

= = = = =

சு நா மீ முந்தைய பகுதி சுட்டி : சு நா மீ 07 

சு நா மீ 08 : சுந்தரம், மீரா கலக்கமும், ஆறுதலும். 

நாகூர் போலீஸ் ஸ்டேஷனில் நாகேஸ்வரன் காணாமல் போனது பற்றி, முதல் நாள் இரவு பதிவு செய்திருந்த புகாரை போலீசார் மறுநாள் காலை பத்து மணி சுமாருக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் சுனாமி பேரலை அன்று காலையில் ஏற்பட்டதால், போலீஸ் படை முழுவதும், சுனாமியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் முழு மூச்சாக இறங்கவேண்டியதாகிவிட்டது. 

அடையாளம் தெரியாத சிறுவன் உடல் கிடைக்கும்போதெல்லாம் போலீசார் சுந்தரம் மீரா தம்பதிகளை அழைத்து, 'இந்த உடல், உங்கள் பையனுடையதா?' என்று கேட்டு ' இல்லை' என்ற பதில் கிடைத்ததும், அவர்களை அனுப்பி வைப்பதுமாக இருந்தனர். 

சுந்தரம் மீரா இருவரும் - போலீஸ் அழைத்தவுடன் கலக்கத்துடன் வந்து, இறந்த சிறுவன் தங்கள் மகன் இல்லை என்று தெரிந்ததும் ஆறுதல் அடைந்து திரும்புவது தொடர்ந்துகொண்டிருந்தது. 

அதிக அலைச்சலைத் தவிர்க்க - அவர்கள் இருவரும், நாகையில் உள்ள தங்கள் மீகாம் கம்பெனி மாடி தளத்தில் தங்கினர். 

மீகாம் ஊழியர் ஒருவர் அவர்களிடம் வந்து, சுனாமி பேரலையில், மீகாம் கம்பெனி தரை தளத்தில் நிகழ்ந்துள்ள சேதங்களையும், மீனாக்ஷி மாமி மெஸ் சேதங்களையும் பற்றி கூறினார். 

சுந்தரம், மீகாம்  மற்றும் மீனாக்ஷி மெஸ் சேதங்களைப் பார்வையிட்டு, இன்சூரன்ஸ் பேப்பர்களில் கையெழுத்து போட்டு, நிவாரண வேலைகளுக்குப் பணம் கொடுத்துவிட்டு பிறகு, 'மீனாக்ஷி மாமி வீடு எங்கே உள்ளது?' என்று கேட்டார். 

மீனாக்ஷி மாமி வீடு இருக்குமிடம் தெரிந்ததும் சுந்தரமும், மீராவும் மீனாக்ஷி மாமி வீட்டிற்குச் சென்றனர். 'சீக்கிரமே மீனாக்ஷி மாமி மெஸ் செப்பனிடப்படும் என்றும்,  அவர் தன்னுடைய உணவகத்தை அங்கு தொடர்ந்து நடத்தலாம்' என்றும் சொல்லிவிட்டு வருவதற்கு சென்றனர். 

அப்பொழுது இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. மீனாக்ஷி அம்மாள், சுனாமியால் ஏற்பட்ட இழப்புகளை எப்படி சரி செய்வது என்ற கவலையில் ஆழந்திருந்தார். சிறுமி சுசீலா பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். நாகேஸ்வரன் மட்டும் உறங்காமல், பாட்டியிடம் ' சுப்பா அங்கிள் எப்போ வருவார்? அப்பா எப்போது வருவார் என்று கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தான். 

அப்போதுதான் வீட்டிற்குள் வந்தனர், சுந்தரமும் மீராவும். 

மீனாக்ஷி மாமிக்கு சுந்தரத்தை ஏற்கெனவே தெரியும். மீகாம் கம்பெனி அவருடையதுதான் என்பதும், மீனாக்ஷி மெஸ் இருப்பதும் அவருக்குச் சொந்தமான இடத்தில்தான் என்பதும் மீனாக்ஷி மாமிக்குத் தெரியும். 

வந்தவர்களை வரவேற்க அவர் வாய் திறப்பதற்குள், சிறுவன் நாகேஸ்வரன், மீராவைப் பார்த்ததும், " அம்மா " என்று அழைத்தவாறு ஓடிச் சென்று மீராவின் கால்களைக் கட்டிக் கொண்டுவிட்டான். 

திகைத்துப்போன மீரா, அவனிடம், ' உன் பெயர் என்ன?' என்று கேட்டாள். 

பையன் தன் பெயர் 'நாகேஸ்வரன்' என்று சொன்னதும், மீரா, சுந்தரம் இருவருக்கும் கண்ணீர் வந்துவிட்டது. மீரா நாகேஸ்வரனை அப்படியே தூக்கி வாரி அணைத்துக்கொண்டாள். 

பிறகு அவர்கள் தாங்கள் வந்த காரணமாகிய மீனாக்ஷி மெஸ் நிவாரண பணிகள் பற்றி  மீனாக்ஷி மாமியிடம் சொன்னார்கள். 

மீனாக்ஷி மாமிக்கு மிகவும் சந்தோஷம். 

சுந்தரம் மீனாக்ஷியிடம், " அம்மா - யார் இந்தப் பையன்? " என்று கேட்டார். 

மீனாக்ஷி மாமி அவர்களிடம், சுப்பா ராவ் தன்னிடம் முதல்நாள் தெரிவித்த விவரங்களைக் கூறினார். 

சுந்தரம், "ஓ கொடுமைக்கார சித்தியின் பிடியிலிருந்து விடுபட்டு வந்திருக்கிறார்களா! அடக்கடவுளே ! " என்றார். "இந்தக் குழந்தைகளைப் பெற்ற அம்மா எண் மனைவி மீராவின் ஜாடையில் இருந்திருப்பார் போலிருக்கு. அதுதான் இந்தப் பையன் மீராவைப் பார்த்ததும் அம்மா என்று அழைத்து கட்டிக்கொண்டு விட்டான்" என்றார். 

பிறகு அவர், " மீனாக்ஷி அம்மா - இந்தக் குழந்தைகளை திரும்ப அழைத்துச் செல்ல யார் வந்தாலும், எனக்கு உடனே மீகாம் கம்பெனி ஊழியர் யார் மூலமாகவாவது தகவல் சொல்லுங்கள். நான் அவர்களைப் பார்த்துப் பேசி, இந்தப் பையனை எங்களுக்கு ஸ்வீகாரம் கொடுக்க முடியுமா என்று கேட்கிறோம். நாங்கள் போய் வருகிறோம் " என்று சொல்லி புறப்படத் தயார் ஆனார்கள். 

ஆனால், நாகேஸ்வரன் அவர்களை விடுவதாக இல்லை. " அம்மா இனிமேல் என்னை விட்டுப் போகாதே. நான் எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன்" என்று சொல்லி மீராவின் இடுப்பிலிருந்து கீழேயே இறங்கவில்லை. 

சுந்தரம், மீனாக்ஷி மாமியிடம் " இந்தப் பையனுக்கும் மீராவைப் பிரிய மனமில்லை - எங்களுக்கும் இந்தப் பையனைப் பிரிய மனம் வரவில்லை. இந்தப் பையனை, நாங்கள் எங்களுடனேயே அழைத்துக்கொண்டு நாகூர் செல்கிறோம். இவனைத் தேடி யார் வந்தாலும் உடனே மீகாம் கம்பெனி மானேஜரிடம் சொல்லுங்கள். அவர் எங்களுக்கு ஃபோன் செய்து சொல்வார். உடனே பையனைக் கொண்டுவந்து ஒப்படத்துவிட்டு அதன் பின் அவர்களிடம் ஸ்வீகாரம் பற்றி பேசுகிறோம். அது வரை இந்தப் பையன் எங்களுடன் இருக்கட்டும்; இந்தப் பெண் சுசீலா உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும்" என்று சொல்லி, நாகேஸ்வரனை அழைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர். 

(தொடரும்) 

51 கருத்துகள்:

  1. சென்னை வந்தாயிற்று.
    அதனால் சென்னையிலிருந்து நேரடியான பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.  பயணம் சௌகர்யமாக இருந்ததா?

      நீக்கு
  2. நேரும் எதிரும் கலந்து. விமானப் பயணங்களின் அசெளகரியங்கள் இப்பொழுதெல்லாம்
    உலகளவில் கொரானாவிற்கு அப்பறம் லேசாகக் குடியிருப்பதாகவே
    தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
  3. செளகரியங்கள்
    அசெளகரியங்கள்
    கலந்தே. கொரானாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என்று இரண்டு நிலைகள். உலகளவில்.

    பதிலளிநீக்கு
  4. KGG- யின் அடுத்த கதை
    சங்கீதப் பின்னணியிலா?
    தெரிந்த விஷயங்களை மனத்தில் புதுப்பித்துக் கொள்ள எழுதுவோருக்கு
    இது ஒரு செளகரியம்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் நெடுநாட்கள் கழித்துக்காலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. என்னோட கேள்வி சரியாப் புரிஞ்சுக்கப்படலை. போகட்டும். நாகேஸ்வரனுக்கு ஒரு அம்மா கிடைச்சாச்சு! சுசீலாவுக்கு? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சென்னையில் வசிக்கும் பாக்யம் கிட்டாததால், இந்த மாதிரி இசைக் கச்சேரிகளுக்குப் போய் பெரும் வித்வான்களிடமிருந்து புறப்படும் பாரம்பர்ய இசைவடிவொன்றை நேரடியாக அனுபவிக்க முடிந்ததில்லையே என்கிற ஏக்கம் மனதில் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. பிடிவாதமாக மருத்துவத்தை சொல்பவர்கள், நமக்கு அவை சரிவரவில்லை என்றால், நம்மை குறை சொல்லவும், கழட்டி விடவும் தயங்க மாட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  9. நான் யார்...?

    1) இந்தக் கேள்வி "எங்கள்ஸ்" நோக்கி கேட்கவில்லை...

    2) ஒவ்வொருவரும் தன்னை நோக்கி கேட்டுக் கொண்டால், பதில் என்ன...?

    குறிப்பு : அடுத்த திருக்குறள் கணக்கியல் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது, இந்த கேள்வி மனதில் எழுந்தது... நன்றி...

    பதிலளிநீக்கு
  10. சு நா மீ மெயின் ட்ராக்குக்கு வந்திருக்கு. கேள்வி எல்லாம் குழந்தை கேள்வி போல் உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கேள்வி எல்லாம் குழந்தை கேள்வி போல் உள்ளது.// பதில்கள் ?

      நீக்கு
  11. இந்த நாளும் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. வழக்கம் போல புதன் பதிவு..

    இயல்பான கேள்விகளும் பதில்களும்!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  13. வைத்திய முறையை சொல்லலாமே தவிர வற்புறுத்தக் கூடாது. கடைப்பிடிப்பது அவரவர் விருப்பம் .

    சுனாமி ஒருஅலை ஓய்ந்து விட்டது :) மறு அலை.....தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்! பதில்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஓவியம் புகைப்படம் போல இருக்கிறது. துல்லியம்!

    பதிலளிநீக்கு
  16. மருத்துவ முறைகள் நமக்குத் தெரிந்தால், நெருங்கிய உறவு, நட்பு என்றால் சொல்லலாம் இல்லை என்றால் கப்சிப். என்னதான் நல்ல டிப்ஸ் வழிமுறைகள் என்றாலும் கூட அவர்கள் பின்பற்றுவதும் இல்லாததும் அவர்கள் பொறுப்பு. நீ செஞ்சுதான் ஆக வேண்டும் என்று சொல்வது சரியல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. யாருக்குமே நான் கேட்டதன் அர்த்தமே புரியலை. நமக்கு வைத்தியம் சொல்லுபவர் அனுபவசாலியாகவோ, திறமை வாய்ந்தவராகவோ இருக்க மாட்டார். சும்மாவானும் கூகிளைப் பார்த்துப் படித்து மருந்துகள் பற்றிய அறிவு கொண்டவராக இருப்பார். மருத்துவரிடம் உடல் நலம் சரியில்லைனு அழைத்துச் சென்றால் அவரிடமே இந்த நோய் எனக்கு வந்திருக்கு/அதுக்கு இது சாப்பிடலாமா? கூகிளில் பார்த்தேன்னு பெருமையாச் சொல்லிப்பார். அவர் தான் நமக்கும் மருத்துவம் சொல்லித் தருவார். மருத்துவரிடம் போய் நாம் மருந்துகள் வாங்கிச் சாப்பிடும்போதே அவர் சொல்லும் மருந்துகளையும் வாங்கிச் சாப்பிடச் சொல்லி வலியுறுத்துவார். உதாரணமாக எனக்கு ஆன்டி பயாடிக் ஒத்துக்காதுனு மருத்துவர் கொடுக்க மாட்டார். ஆனால் இவர் சொல்லுவதோ ஆன்டி பயாடிக்கை எடுத்துக்கொண்டால் தான் உடம்பு சரியாகும் என வற்புறுத்துவார்.

      நீக்கு
    3. மேற்கண்ட திறமைசாலி மெத்தப்படித்தவரே என்றாலும் உடலுக்கு வேண்டிய வைடமின்கள் மாத்திரைகள் மூலமே கிடைக்கும் என உறுதியாக நம்புபவரும் கூட.. அதுக்கு வேறே பிடுங்கல் தாங்காது. வைடமின் மாத்திரைகள் என்ன சாப்பிடறே? நீ சாப்பிடுவது போதாது என மல்டி விடமின் மாத்திரைகளை எல்லாம் வாங்கிச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார். நான் நெல்லிக்காய்ச் சாறு+பாகல் சாறும் முருங்கைக்கீரை சூப்பும் வைச்சுச் சாப்பிட்டு வரேன்னா அதில் எல்லாம் எதுவும் கிடைக்காது என்பார். :)))))

      நீக்கு
  17. கௌ அண்ணா, ஓவியம் நல்லா வந்திருக்கு.

    சங்கீதம் குறித்த கேள்விகள் அதற்கான பதில்கள் சூப்பர். நல்ல தகவல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா எங்கே வரைந்திருக்கிறார்? பெயர் இல்லையே!

      நீக்கு
  18. கதை...அப்ப அந்த நாகேஸ்வரன் (ஒரிஜினல்) ரயில் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டவன் என்ன ஆனான்? யாரிடம் வளர்கிறான்? மீகாமிடம் இருக்கும் நாகேஸ்வரன் தற்போது சிங்கப்பூர் என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. @ கீதா அக்கா
    நான் கச்சேரிகள் கேட்டதெல்லாம் மதுரையோடு போய்விட்டது. சென்னை வந்தப்புறமா சபாக்கள் மூலம், நாடகம், மெல்லிசைக்கச்சேரிகள் எனக் கேட்டது தான். அதுவும் ஆரம்ப காலங்களில். பின்னாட்களில் குடும்பம் நடத்துவதே ஒரு கச்சேரி போல் இருந்ததால் தனியாகக் கச்சேரிக்குனு போகலை. :)))))).. //

    பதிலளிநீக்கு
  20. Geetha Sambasivam18 ஜனவரி, 2023 அன்று பிற்பகல் 12:48
    நான் கச்சேரிகள் கேட்டதெல்லாம் மதுரையோடு போய்விட்டது. சென்னை வந்தப்புறமா சபாக்கள் மூலம், நாடகம், மெல்லிசைக்கச்சேரிகள் எனக் கேட்டது தான். அதுவும் ஆரம்ப காலங்களில். பின்னாட்களில் குடும்பம் நடத்துவதே ஒரு கச்சேரி போல் இருந்ததால் தனியாகக் கச்சேரிக்குனு போகலை. :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    துரை செல்வராஜூ18 ஜனவரி, 2023 அன்று பிற்பகல் 12:56
    இடம் மாறி வந்த கருத்து இது..

    பதிலளிநீக்கு
  21. எல்லோருக்கும் பொதுவான மருத்துவம் என்று ஏதுமில்லை. ஒரே வித உடல் உபாதைக்கு
    மருத்து என்பது நபருக்கு நபர் மாறுபடலாம். அதனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் உடல் சோதனைகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது தேவைப்படுகிறது. எந்த நோயும் வெளித்தெரியாதவர்களுக்குக் கூட ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை என்பது தேவை.

    இந்த சோதனைகளின் அடிப்படையில் பலருக்கு
    மருந்துகள் கூட தேவைப் படாது. உடலில் எந்த சக்தியின் குறைபாடு இருக்கிறதோ அதற்கேற்ப விட்டமின் மாத்திரைகள் உட்கொண்டு வந்தால் போதும். + தவறாத நடைப் பயிற்சி.
    உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  22. ஒருவர் நோய்வாய் பட்டுவிட்டால் நிறைய பேர் இலவசமாக மருத்துவ குறிப்புகள் கொடுப்பது உண்டு. ஆனால் கண்டிப்பாய் இதை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று சொல்வது தப்பு.
    சிலருக்கு உடலுக்கு ஒத்து கொள்வதை தான் சாப்பிட முடியும்.

    ஜீவி சார் சொல்வது சரியே.

    //எனக்கு ஆன்டி பயாடிக் ஒத்துக்காதுனு மருத்துவர் கொடுக்க மாட்டார். //

    எனக்கும் ஒத்துக்காது அதனால் மருத்துவரிடம் முன்பே சொல்லி விட்டதால் அவர் கொடுக்க மாட்டார். வலி மாத்திரைகளும் வீரியம் குறைவான மாத்திரை கொடுப்பார். இல்லையென்றால் வயிற்றுவலி வரும்.

    பதிலளிநீக்கு
  23. டிசம்பர் கச்சேரிகள் தொலைக்காட்சியில், வானொலியில் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. கதை நன்றாக போகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!