KB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.1.23

வெள்ளி வீடியோ : ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க

 குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ள பாடல்களில் ஒன்று இன்று தனிப்பாடலாக...  எழுதியவர் தானு கோபால் என்கிறது காணொளியில் வரும் இசைத்தட்டு!  மேலும் தகவலாக பாடல் முதலில் வெளியான ஆண்டு 1966 என்றும் சொல்கிறது.

14.1.22

வெள்ளி வீடியோ ; மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க

 ராமண்ணா தயாரிப்பில், வின்சென்ட் இயக்கத்தில் தோப்பில் பாசி மூலக்கதைக்கு தமிழில் மல்லியம் ராஜகோபால் வசனம் எழுத, வெளியான சோக சித்திரம் துலாபாரம்.

2.10.20

வெள்ளி வீடியோ : தீதிலா காதலா  ஊடலா  கூடலா  அவள் மீட்டும் பண்ணிலா

1977 இல் வெளியான இந்தப் படத்தில்தான் டெல்லி கணேஷ், சரத் பாபு, சிவச்சந்திரன் ஆகியோர் திரையுலகில் நுழைந்தனர்.  விசு எழுதி மேடையேற்றிய நாடகத்தை சுடச்சுட பாலச்சந்தர் வாங்கி, படமாக்கினார்.

25.9.10

ஹரியுடன் நான்...NO HURRY!!

ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பு ஏதுமின்றி சாதாரணமாக அணுகும்போது சிறிய விஷயம் கூட நன்றாக இருக்கிறது. எதிர்பார்ப்புடன் அணுகும்போது ஏமாற்றம் வருவதுண்டு. எம் எஸ் வி கேபி பெயர்கள் பார்த்து முதல் நாள் பார்த்த நிகழ்ச்சி முதல் ரகம். இரண்டாம் நாள் எதிர் பார்ப்பு ஓவராகி விட்டதோ என்பது போல சிறு ஏமாற்றம். மனதைப் பொறுத்ததுதானோ...!

அதே போல இந்த இரண்டாம் நாள் பதிவும் ஏமாற்றம் தந்து விடுமோ என்னமோ..? ஆயிரக் கணக்கான ரசிகர்கள் (ஒரு பதிவர் கமெண்ட் போட்டால் அது ஐநூறு ரசிகர்களுக்கு சமம்...!! அநன்யா, Chitra, கீதா சந்தானம் மூன்று பேர் சேர்த்தா ஆயிரம் தாண்டாதா என்ன?!!) பதிவுல ரெண்டாம் நாள் மூணாம் நாள் நிகழ்ச்சியையும் கவர் பண்ணிடுங்களேன் என்று சொன்னதால அதைப் பற்றி இன்றும் எழுதுகிறோம்... (பதிவுத் தலைப்புக்கு சான்ஸ் தந்ததற்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு ஏதோ போனால் போகிறது என்று எழுதுவது போல அலட்டலைப் பாரு என்கிறீர்களா)
இனி இரண்டாம் நாள் நடந்தது பற்றி பகிர்வுகள்... (டிவியில், மற்றும் யூ குழாயில் பார்க்கிறோமே இது எதற்கு என்கிறீர்களா...பார்க்கப் பொறுமை மற்றும் நேரம் இல்லாதவர்களுக்குதான்...)

ரவி ஷங்கர் பாடியது யேசுதாஸ் பாடிய அவள் ஒரு தொடர்கதை படத்தின் "தெய்வம் தந்த வீடு" பாடல். எஸ் பி பி தான் பாடிய பாடல்களையே கூட தானே மேடையில் பாடும் போது எக்ஸ்ட்ரா சங்கதிகள் போடுகிறேன் பேர்வழி என்று ஏதேதோ மாதிரி எல்லாம் இழுத்துப் பாடுவார். ஒரிஜினலை ரசித்த நம் காதுகளுக்கு அது ஒரு மாதிரி இருக்கும். அது போல இவர் இந்தப் பாடலில் சில இடங்களை இஷ்டத்துக்கு வளைத்துக் கொண்டார். முதல் நாள் பாடிய அனைவருமே நன்றாகப் பாடினார்கள். இவர் சற்று...

அவ்வப் போது ஹரிஹரன் எம் எஸ் வீயை நாற்காலியில் சுழன்று திரும்பிப் பார்த்துக் கொள்வார் அவர் எப்படி ரசிக்கிறார் என்று...

இந்தப் பாடலைப் பற்றி கேபி, யேசுதாஸ் ஆரம்பக் காலங்களில் பாடிய பாடல் என்றும் எம் எஸ் வி 'இவர் நல்லாப் பாடுவார் இவரைப் பாட வைக்கிறேன்' என்று சொன்னதாகவும், பின்னாளில் யேசுதாஸ் எங்கு கேபியைப் பார்த்தாலும் இந்தப் பாடல் தன் இசை வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று சொல்வார் என்றும் சொன்னார். எம் எஸ் வி இதை சோதனையான பாடல், கேபி ரொம்ப சோதித்தார் என்றார். ஹரிஹரன் பாட்டுல பிடிப்பு இல்லாமல் பாடியதாக விமர்சனம் செய்து குரலை எறியச் சொன்னார்!!! ( Voice throw பண்ணி பாடணும்!)

அடுத்து கார்த்திக் பாடிய சிவ சம்போ பாடலும் சுமார் ரகம்தான் என்றாலும் எம் எஸ் வி சொல்லும்போது தான் பாடியதற்கு முன் இவர் பாடியதைக் கேட்டிருந்தால் இவரையே பாடச் சொல்லியிருப்பேன் என்று சொன்னதற்கு கார்த்திக் கீழே தரையைத் தொட்டு வணங்கி நன்றி சொன்னார். கேபி சொல்லும்போது ஒவ்வொரு பாடலும் இசைவடிவம் பெற பல நாட்கள், ஏன் மாதங்கள் கூட ஆகும்போது இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் ஒரு வாரத்தில் போட்டதாகச் சொன்னார். அபூர்வ ராகங்கள் கூட ஒரு இசைப் படம் என்றாலும் வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு ம்யுசிகல் படம் எடுக்க நினைத்து எடுத்த படம், என்றும், கமலுக்கு எஸ் பி பி குரல் என்றால் ரஜினிக்கு எம் எஸ் வி குரல் நன்றாகவே பொருந்திப் போனதாகச் சொன்னார்.இதற்குதான் This is not my film...it is your film visu என்றார்.

எம் எஸ் வி சுவாரஸ்யத் தகவல்கள் சொன்னார். சில பழைய மெட்டுகளின் தழுவல்களில் பாடல்கள் வேண்டுமென டைரக்டர் கேட்டாராம். எங்கேயும் எப்போதும் பாடலை அதே ராகத்தில் "கத்தாழைக் காட்டுக்குள்ள விறகொடிக்கப் போனாளாம்" என்ற நாட்டுப் புறப் பாடல் சாயலில் அமைத்ததையும், சம்போ சிவ சம்போ பாடலை மலையாளப் பாடல் ஒன்றின் சாயலில் அமைத்ததையும் சொன்னார். இது மாதிரி தழுவி எடுக்கும் பாடல்கள் பற்றி இளையராஜாவும் அவரும் அடிக்கடி பேசிக் கொள்வார்களாம்.

நேற்று முழுவதும் பேசாத சரத்தும், ஜேம்ஸ் வசந்த்தும் இன்று பேசினார்கள். ஒரு இசை மேதையின், இயக்குன இமயத்தின் அருகில் ஒரே வரிசையில் அமர நேர்ந்த பெருமையை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். ஜேம்ஸ் முப்பது வருடங்களுக்கு முன் இசையமைக்கப் பட்ட பாடல் இன்றும் கல்லூரிகளில் பாடப் படுவதின் ஆச்சரியத்தைப் பேசினார். சரத்தும் ஆமோதித்தார். எம் எஸ் வி இசை கேரளாவிலும் பெரிய ஹிட் என்றும், அவர் இசையில் உயிர், soul, உண்மை இருக்கிறது என்றார். அவர் அருகில் அமர்ந்துள்ள பெருமை, போதை மயக்கமாய் இருக்கிறது என்றார்.
அடுத்த வந்த செண்பகராஜ் 'ராகங்கள் பதினாறு' பாடலை நன்றாகவே பாடினார். நமக்குப் பிடித்தால் ஹரிஹரனுக்கு பிடிக்கவில்லையே. ஆரம்ப ஆலாபனையில் தப்பு செய்து விட்டதாகச் சொன்னார். காலப்ப்ரமாணம் என்ன என்று கேட்டார். பிராக்டீஸ் செய்யும்போது ஸ்லோ வாகச் செய்யச் சொன்னார். அப்போதுதான் 'சங்கதிகள்' சரியாக வரும் என்றார்!
எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.

கேபி ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் விசு, இது மிகவும் மென்மையான பாடல், மறக்க முடியாதது என்றார்.

ஜேம்ஸ் வசந்த் எம் எஸ் வீயிடம் இது மாதிரி பாடல்களுக்கு ட்யூன் போட்ட அனுபவத்தை கேட்டார்(இந்தப் பாடலில் வரும் 'சங்கதிகள்' நீங்களே சொல்லிக் கொடுத்து பாடகர் பாடியதா, அவரின் சொந்தக் கற்பனையா என்று). எம் எஸ் வி 'ட்யூன் போட்டவுடன் மறந்துடணும், அப்போதுதான் அதன் சாயல் மற்ற பாடல்களில் தெரியாது என்றார். மற்றபடி பாடலைப் பொறுத்து பாடகரை தெரிவு செய்வார் என்று சொன்னார்.

அடுத்து ஹரிணி பாடிய அனுபவி ராஜா அனுபவி பாடலான 'முத்துக் குளிக்க வாரீகளா' பாடல். நன்றாகப் பாடினார் என்றாலும் நாட்டுப்புறப் பாடல் போன்ற ஸ்லேங் என்பதால் ஒரு மாதிரி வாயை வைத்து உச்சரித்தார் என்று பட்டது. கிட்டத்தட்ட அதையே ஹரிஹரனும் சொன்னார். கேபி தூத்துக் குடி பாஷையில், திருநெல்வேலி ஸ்லேங்கில் பாடல் அமைய வேண்டும் என்று விரும்பியதைச் சொன்னார். மெஹ்மூத் இந்தப் பாடலை ஹிந்தியில் எடுக்க விரும்பி ஒரிஜினலை மரியாதை செய்யும் விதமாக தமிழ் வரிகளையே ஹிந்திப் பாடலின் வரிகளாக அமைத்ததைச் சொன்னார். மேலும் இந்தப் படம் தான் அவரும் எம் எஸ் வீயும் இணைந்த முதல் படம் என்றார்.

எம் எஸ் வி, ஆர் டி பர்மன் இந்தப் பாடலைப் பாராட்டியதையும், அந்த நேரம் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த எம் ஜி ஆர் 'என்ன செய்கீறீர்கள்' என்று தொலைபேசி, விஷயம் கேள்விப் பட்டு பாடலைக் கேட்க விரும்புவதாகச் சொல்லி, கேட்டு, பாராட்டியதைச் சொன்னார்.

இன்றைய நிகழ்ச்சியின் கடைசிப் பாடலாக வந்தது பார்க்கின்ற வகையில் கவிதையாக வந்த பார்கவி பாடிய அவள் ஒரு தொடர்கதை பாடல் 'கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்' பாடல். எல்லோரையும் போலவே எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நன்றாகவே பாடினார். ஹரிஹரன் சரணத்தில் தவறு செய்ததாய் சொன்னார். கேபி சொல்லும்போது பொதுவாகவே எல்லா பாடல்களும் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார். குறைகளை நிபுணர்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். இயக்குனர் வசந்த்துடன் கலந்துரையாடி கோல்டன் பீச் கட்ட ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் எடுத்ததாகவும், முதன்முறை அங்கு எடுக்கப் பட்ட காட்சிகள் என்றும் சொன்னார். பல நடிகர்களை தான் முதன்முறை நடிக்க வைத்தது போல கோல்டன் பீச்சையும் தான்தான் முதலில் உபயோகப் படுத்தியதாகச் சொன்னது ரசனை. எம் எஸ் வி பேசும்போது கவிஞர் எப்போதும் கேட்கும் 'சப்தத்துக்கா சந்தத்துக்கா' கேள்வி பற்றி சொன்னார். இந்தப் பாடல் வரிகளாய் எழுதப் பட்டு பின்னர் அதற்கேற்ப இசை வடிவம் கிடைத்ததாகச் சொன்னார்.

பொதுவாக,

பாடல்கள் பாடப் படும்போது பாலச்சந்தர் லேசான திறந்த வாயுடன் கவனித்து ரசிப்பது ரசனை. அவர் பாடல்களை யார் பாடினாலும் எம் எஸ் வி பாடுவது போலவே கேட்கும் என்பதால், குறை சொல்லத் தோன்றாமல் ரசிப்பதாகச் சொன்னார். அவள் ஒரு தொடர்கதை தனது மாஸ்டர் பீஸில் ஒன்று என்று சொல்லி விட்டு மற்றவர்கள் அப்படிச் சொல்வார்கள் என்றார்.

பின்னணி இசை ஒலிக்கும்போதும் சரி, பாடும் போதும் சரி எம் எஸ் வி தலையை ஆட்டிக் கொண்டே ரசிப்பது ரசனை.
பாடப் படும் பாடல்கள் யார் எப்படிப் பாடினாலும் அது பெரிதில்லை. ஒரிஜினலை மனதில் நினைவு படுத்துவது தான் பெரிய விஷயம். இதில் சாய்ராம், அப்பாதுரை கருத்து ஆமோதிக்கப் படுகிறது. (சாய்ராம்.. எங்கள் ப்ளாக்குக்கு வெளியிலிருந்து தரும் ஆதரவை விலககிக் கொள்வதாகச் சொன்னது ஏனென்று தெரியவில்லை) எம் எஸ் வி பாலச்சந்தர் காம்பினேஷன் தான் முக்கியம். கேபி யேசுதாஸ் எஸ் பி பி பாடுவதை விட எம் எஸ் வி பாடுவதுதான் நன்றாக இருப்பதாகக் கூறுவதை அவர் ரசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். "நீ பாடுவது போல அவர்கள் பாடலையே விசு.." என்பாராம்.

ஹேமா சொல்வது போல நான் இந்த நிகழ்ச்சியை தவறாது பார்ப்பதில்லை என்பதற்கு பின்னோக்கி சொன்ன காரணமும் ஒன்று. சும்மா கடினமாக நடுவர்கள் பேசுவது பார்க்கும் நமக்கு சங்கடமாக இருப்பது போலத் தோன்றும். இதை விட ஆசியா நெட்டில் ஐடியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரம்மாதமாய் இருப்பதாய் தோன்றுகிறது. மிகத் திறமையான பாடகர்கள். உஷா உதூப், சரத் என்ற நடுவர்கள்... Hindhi Zee டிவியில் வரும் ச ரி க ம ப என்ற நிகழ்ச்சியும், ஸ்டார் பிளஸ் (?) டிவியில் வரும் சோட்டே உஸ்தாத் நிகழ்ச்சிகள் கூட ரசனையாக உள்ளன..

இந்த நிகழ்ச்சிக்கு இடையில் ஆசியா நெட்டில் பார்த்தபோது உஷா உதூப் உற்சாகமாக ஏதோ "பாப்பா பாப்பா சூ சூ சூ.... ஹவ் டூ யூ டூ" என்று பாட, ஸ்வேதா உட்பட்ட அனைவரும் ஆடிக் கொண்டிருப்பது பார்க்க முடிந்தது.