சனி, 4 பிப்ரவரி, 2023

நடேச மாதவன் மற்றும் நான் படிச்ச கதை


============================================================================================================================================================
===================================================================================================================================================================================================================


=============================================================================================================


======================================================================================================


=====================================================================================================================================================================================================


===================================================================================================================================


நான் படிச்ச கதை (JK)

கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை

கதையாசிரியர்: அசோகன் குப்புசாமி

 

முன்னுரை

கதை, கட்டுரை, கவிதைஎதுவானாலும்  தலைப்பு கவரும்படி இருந்தால்  வாசகர்கள் எட்டிப் பார்ப்பார்கள். அது ஒரு தூண்டில்  முள். உதாரணமாகத் ‘திருடப்போனவன் திருப்பதி போன கதை’,  ‘அழகர்சாமியின் குதிரைவண்டிபோன்ற கதைகள் இப்பகுதியில் இடம் பெற்றது அவ்வாறேஇந்தக் கதையும் அவ்வாறே என்னைக் கவர்ந்தது.

கார்பொரேட் கம்பனி என்றவுடன் பாட்டி கம்பெனி உருவாக்கியது எப்படி என்று விவரிக்கும் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் இது குழந்தைக் கதையானபாட்டி  வடை சுட்ட கதை  எப்படி கார்பொரேட் கம்பெனியில் நடக்கும் வினைகளுக்கும் பொருந்தும் என்பதை சுட்டிக் காட்ட எழுதப்பட்டது. படித்தால்அட இப்படியும் சிந்திக்க முடியுமாஎன்று திகைக்க வைக்கிறது.  இந்த  மாற்றி யோசிக்கும் வக்கீல் திறன் கதை ஆசிரியரிடம் சிறப்பாகப்  புலன்படுகிறது.


கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார்.

அடே, அடே, வாப்பா இராஜேஷ்என உள்ளே கூப்பிட்டு போனார்.

என்ன அங்கிள் வெளியே போகலையா?” என்று கேட்டான் இராஜேஷ். அதற்கு வெயில் கொளுத்தறதால வீட்டை விட்டு எங்கும் போகவில்லை என்றார் ராமகோபாலன்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது….

அங்கிள் சாக்லேட், அப்புறம் ஒரு கதைவழக்கமாய் கேட்பது போலவே அன்றும் கேட்டான் ராமகோபாலனின் பேரன் சீனு.

இராஜேஷ் தன் மடியில் உட்கார்த்தி வைத்து, “ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுஅப்படின்னு ஆரம்பித்தான். “போங்க அங்கிள், அந்த வடை கதையா? எல்லாரும் இதைத்தான் சொல்றாங்க, போரடிக்குது, வேற ஏதாச்சிலும் சொல்லேன்என்று கேட்டான்.

அது இல்லேடா செல்லம், பாட்டி வடை சுட்ட கதையில, ஒனக்கு தேவையானதும் இருக்கும், எங்க கம்பெனிக்கு தேவையானதும் இருக்குஎன்றான் இராஜேஷ்.

சரி அங்கிள் சொல்லுங்க, எனக்கு தேவையானதை நான் கேட்டுக்கறேன்என்றான் சீனு. “சரி இந்த சாக்லேட் சாப்பிட்டுகிட்டே கேளு”, அதற்குஎன்னப்பா இராஜேஷ், பெரிய மல்டி நேஷனல் கம்பெனில கம்ப்யூட்டர் என்ஜினியர் நீ போய் அந்த காலத்து பாட்டி வடை சுட்ட கதையைப் போய் சொல்றே, இன்னுமா பத்தாம்பசலித்தனமா இருக்கே?” என்று கேட்டார்.

இல்லே, நான்கூட பாட்டி வடை சுட்ட கதைல என்ன  இருக்குன்னுதான் நினைச்சேன். ஆனா அதில, பெரிய கார்பரேட் நிறுவனத்துக்குத் தேவையான தாரகமந்திரமும் இருக்கு, குழந்தைகளுக்குத் தேவையான அறிவுரையும் இருக்குன்னு அப்புறமாத்தான் புரிய ஆரம்பிச்சுது. அந்தக் கதையில பத்துவிதமான நீதிபோதனைகள் அடங்கி இருக்கு அங்கிள்என்று ஆரம்பித்தான்.

முதல்ல, சீனுவுக்கு சொல்லிடுறேன். அப்புறம் ஒங்களுக்கு பாட்டி வடை சுட்ட கதை, கார்பரேட் கம்பெனிக்கு எப்படி பொருந்துது-ன்னு சொல்றேன்என்றான்.

முதலாவதாக பாட்டி வடை சுட்ட வடையில், ஒரு வடையைக் காகம் கொத்தி சென்றதிலும், அதைப் பறித்த நரியின் தந்திரம்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாட்டி சுட்ட வடையில் ஒரு வடையைக் காகம் கொத்தி சென்றதால், வறுமை நிலையில் உள்ள பாட்டிக்கு அன்றைய வருவாயில் ஒரு வடைக்கான தொகை நட்ட கணக்கில் சேர்கிறது. இது வியாபாரத்தில் கவனக்குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.

இரண்டாவதாக, பாட்டி அசந்த நேரம் பார்த்து, காகம் வடையைக் கொத்தி சென்றது. எப்போதும் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்பது சீனு மாதிரி உள்ள குழந்தைகளுக்கு.

மூன்றாவதாக, பாட்டி வடையைச் சுட்டு விற்கும்போது, பொருட்களைத் தக்க பாதுகாப்பின்றி வைத்து வியாபாரம் செய்தது தெரியவருகிறது.

நான்காவதாக, பாட்டி சுட்ட வடையை கொத்தி சென்ற காகம் மரக்கிளையில் அமர்ந்திருந்தது. கீழே இருந்த நரி, தனக்கே உரித்தான தந்திர புத்தியால், “காக்கா, காக்கா, நீ எவ்வளுவு அழகா இருக்கே, ஒரு பாட்டு பாடேன்என்று கேட்டது. காகம், யோசிக்கவில்லை, தனக்கு அழகிருக்கிறதா, பாட்டு பாடும் தேவையில்லாம புகழ்ந்தா எச்சரிக்கையா இருக்கணும்திறனும் உள்ளதா என யோசிக்காமலே, வாயைத் திறந்து வடையைக் கோட்டை விட்டது இது குழந்தைகளுக்கு தேவையில்லாம புகழ்ந்தா எச்சரிக்கையா இருக்கணும்-ன்னு ஒரு நீதி.

ஐந்தாவதாக, கீழே விழுந்த வடையை நரி எடுத்து சென்று சாப்பிட்டது. அதாவது ஏமாற்றி சாப்பிட்டது இது குழந்தைகளுக்கு.

ஆறாவதாக, பாட்டி சுட்ட வடையில் ஒரு வடையை திருடிக் கொண்டு சென்றது. திருடுவது குற்றம். ஆனால், உயிரினங்களின் உணவுக்கான தேவை. இதையேதான் புலி மானை வேட்டையாடுவது நிகழ்கிறது. இது மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கு உள்ள வாழ்வியல் வேறுபாட்டைக் காட்டுகிறது.

ஏழாவதாக, பாட்டி வடை சுட்ட கதையில், வயதான காலத்தில், தன் உழைப்பையே நம்ப வேண்டும். அடுத்தவர்களின் தயவினை எதிர்பார்ப்பது நல்லதல்ல இது குழந்தைகளுக்கு.

எட்டாவதாக, காகத்தை நீ அழகாய் இருக்கிறாய் என்று நரி சொல்ல அதையே நம்பிய காகம். இது தவறுதானே.

ஒன்பதாவதாக, யாராவது தேவையின்றி திறமையிருப்பதாக புகழ்ந்தால் யோசிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு.

பத்தாவது, இந்த பாட்டி வடை சுட்ட கதை, இந்த காலத்து சந்ததிகளுக்கு தெரியாதென்பதால், கதையை மறக்காமல் சொல்லி, தலைமுறையை இடைவெளியை சமன்படுத்த முயற்சிப்பது குழந்தைகளுக்கு. “சீனு, உனக்கு கதை முடிஞ்சுதடா, இப்போ ஒன் தாத்தாவுக்கு சொல்றேன்என ஆரம்பித்தான்.

திறனுள்ள ஒருவரை, மற்றோர் கம்பெனி, ஆசைவார்த்தைக் காட்டி கூட்டி போனால், அந்த கார்பரேட் கம்பெனிக்கு நட்டம்.

திறனுள்ள ஒருவரைக் கோட்டை விட்டதில், அந்த கம்பெனி நிர்வாகத்தில் விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

கணிணி போன்ற மின்னணுப் பொருட்களை தக்க பாதுகாப்பின்றி கவனமின்றி கையாண்டால் இந்நிலைதான் என்பதும் புரிகிறது.

ஒரு சிலரிடம், நீதான் இந்த கம்பெனியில ஸ்மார்ட், ஒன்னைய விட்டா இந்த வேலைய முடிக்க ஆளே இல்லேஎன சும்மாவாச்சும் புகழ்ந்து, தன்வலையில் விழவைப்பது ஒரு ரகம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் எங்கள் கம்பெனியில்.

நரி வடையைச் சாப்பிட்டது போல, தன் வேலையை பிறரிடம் நயமாக கொடுத்து விட்டு, அரட்டை அடிக்க கேன்டின் பக்கம் போய்விடுவது. அதாவது அடுத்தவர் உழைப்பில் வாழ்வது.

சில நிறுவனங்களில் தேவைக்கதிகமாக வேலை நேரத்தை அதிகப்படுத்தி, பணியாளர்களின் உழைப்பினை வாங்குவதும் ஒரு வகையில் திருட்டுதான். அதாவது உழைப்பு திருட்டு.

உங்கள் திறமைக்கு இந்த பதவி குறைச்சல், பெரிய பதவிக்கு லாயக்கான ஆள் நீங்க, நீங்க இந்த கம்பெனிலஅப்படின்னு உசுப்பேத்தினாஉங்க வேலைக்கு உலை வைக்கிறாருன்னு அர்த்தம்.

கம்பெனியில் சீனியர்கள் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு கணிணி நுணுக்கம் தெரியாது. ஆனால், மற்ற வேலைகளில் சிறந்த அனுபவம் இருக்கும். அதைப் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களிடம் புகழ்ச்சியாக பேசி அவர்களை வஞ்சிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. ஆதலால் எச்சரிக்கை உணர்வு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

எப்படி, வீர சிவாஜிக்கு அவரது தாயார் வீரதீர கதைகளைச் சொல்லி, வீரனாக வளர்த்தாரோ, அப்படி இந்த பாட்டி வடை சுட்ட கதையில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்ற முடித்தான் இராஜேஷ்.

எனக்கு இவ்வளவு வயசாயிடுத்து, நான் இதைப்பத்தி யோசிக்கவில்லையே. பலே, பலே, கைக்குலுக்கி வழியனுப்பினார் ராமகோபாலன்.

நன்றிவளர்தொழில் பத்திரிகை

ஆசிரியர்  : அசோகன் குப்புசாமி

தொழில்: தமிழக அரசுப் பணி (2013 பணி நிறைவு)

நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி. நகர், சேலை, திருவள்ளுர் 631 203

தற்காலிக முகவரி: சி-20 சம்பக், .டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் - 507 208

தொடர்பு எண்: 9047896065

மனைவி பெயர்: . சகுந்தலை – குடும்பத் தலைவி

மகன் பெயர்: .ராஜ்மோகன்

நன்றி: sirukathaigal.com

சுட்டி : நரி,காக்கா,வடை

பாட்டி வடை சுட்ட கதை - தமிழ் விக்கிப்பீடியா18 கருத்துகள்:

 1. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 2. போற்றுதலுக்கு உரிந்தவைகளை அறிந்து போற்றுபவர்களைப் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 3. போற்றுதலுக்கு உரியனவற்றை அறிந்து
  போற்றுபவர்களைப் போற்றுவோம் --
  தட்டச்சுப் பிழையைத் திருத்தி வாசிக்கவும்.

  பதிலளிநீக்கு
 4. நடேச மாதவன், கண்ணா, மாணவர் கார்த்தி, ஐடா, ரிஷி, குன்னூர் தம்பதி ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. இந்த நாளும் இனிய நாளே..

  எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. வாரந்தோறும் சனிக்கிழமை பதிவுகள் என்றாலே மனம் குதுகலிக்கின்றது..

  நல்ல செய்திகளை புதிய விதத்தில் வடிவமைத்து வழங்கும் விதமே தனி..

  மேலும் கீழுமாக இப்படியும் அப்படியுமாக உருட்டி உருட்டி ( இது உருட்டல்களின் காலம் அல்லவா!..) செய்திகளைப் படிப்பதற்குள் வயதான விழிகளுக்குள் புதுப் புத்துணர்ச்சியே பொங்கி வருகின்றது..

  மடி கணினி என்றெல்லாம் இல்லாமல் பிடி கணினி எனும்
  கைப்பேசியின் வழியாகவே
  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக - வலை உலகை அணுகி வரும் எனக்கு இந்த வடிவமைப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

  அடுத்தடுத்த நாட்களில் கூட எல்லாப் பதிவுகளையும் இம்மாதிரி மாற்றி விட்டால் நன்றாக இருக்கும் என்பது பணிவான கருத்து...

  வாழ்க நலம்.
  வளர்க எபி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜேஷ்..
   இராஜேஷ்..
   இராஜேஷ்..

   -- இப்படியே ராஜேஷின் பெயரை பத்து தடவைகள் உச்சரித்துப் பாருங்கள், இதுவே வேடிக்கையாக இருக்கும்.

   அதே நேரத்தில் கீழ் உதடுக்கு நல்ல பயிற்சி என்பது கூடுதல் உத்திரவாதம்.

   நீக்கு
  2. இந்தக் காணொளியைக் கடைசி வரை ஸ்கிப் பண்ணாமல் பாருங்கள்.. அதிர்ச்சி காத்திருக்கின்றது.. என்று யூடியூப்பில் பலர் குறளி வித்தை காட்டி சம்பாதிக்கின்றனர்...

   தங்களுக்கு,
   யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகா  -

   என்று நினைவுக்கு வரவில்லையா அண்ணா?..

   நீக்கு
  3. பன்னிரு திருமுறை தானே?..

   இன்று காலைப் பொழுது பூராவும் திருப்புகழ் கேட்பதில் திளைத்திருந்தேன்.

   அப்படி செவிமடுத்த இன்பம், எபி வாட்ஸாப் க்ரூப்பில் அதைப் பகிர்ந்து கொள்ள உந்தித் தள்ளியது.

   நீக்கு
 7. எதையும் ஆராய்ந்து பார்த்தால் பல விடயங்கள் கிடைக்கும் என்பது இக்கதையின் வழியாக தெரிகிறது.

  கதாசிரியர் நண்பர் திரு. அசோகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. கதையாசிரியர் அசோகன் அவர்கள் பதிவர் நண்பர். இங்கு எபி யிலும் கூட கருத்துகள் இட்டதுண்டு. பல வலைப்பதிவுகளில் அவரைக் காணலாம்.

  நாம் லேட்டரல் திங்கிங்க் கொண்டிருந்தால் எல்லாக் கதைகளிலும் பல கருத்துகள் மறைமுகமாக அடங்கி உள்ளன என்பது தெரியவரும். அது கதை ஆசிரியர் ரொம்ப அழகாக வெளிக் கொண்டுவந்துள்ளார். மிக மிக வித்தியாசமான சிந்தனை ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்நிலா தளத்திலும் கருத்திருக்கிறார் அசோகன் குப்புசாமி அவர்கள்.

   கீதா

   நீக்கு
 9. எல்லா செய்திகளுமே அருமையான செய்திகள்.

  மயிலாடுதுறை மருத்துவமனை செய்தி வாசித்த செய்தி. ராணி அம்மையார் மெய் சிலிர்க்க வைக்கிறார். வாழ்த்துகள்.

  முதல் செய்தியில் இக்குழந்தைக்கு வாழ்த்துகளோடு, மட்டுமல்ல இன்னும் 3, 4 பேர் உள்ளனர். எதுக்கு இப்படித் தலைப்பு?

  //அபுதாபியில் நடந்த உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் சந்தீபன், சவுரி ராஜன், தனுஷ், நடேச மாதவன்//

  ஒன் இந்தியா தளத்தில் இந்தச் செய்தி வந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. கீதாக்கா, கமலாக்கா, பானுக்கா காணலையே....நெல்லை பயணத்தில்...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அனைத்து நல்ல செய்திகளும் அருமை. பெற்றோர்களை குழந்தைகளின் கடிதம் நல் வழி படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
  அன்பு அனைத்தும் செய்யும்.

  ராணி அம்மையார் தன் குழந்தைகள் அனைவரையும் ஆசிரியர் ஆக்கியது போற்ற தக்கது, அவர்களின் மன உறுதியை பாராட்ட வேண்டும். வணங்க வேண்டும்.
  நல்ல செய்தியில் இடம்பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள். நல்ல செய்திக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கதை விழிப்புணர்வு கதை. எங்கேயும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ற கதை.
  கதை பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. செய்திகள் அருமை...

  வலைப்பதிவருக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 14. திறமையுள்ளவர்களை போற்றுவோம்.

  கதை பற்றிய வித்தியாசமான பார்வை காலத்துக்கு ஏற்ப.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!