புதன், 8 பிப்ரவரி, 2023

எங்கள் கேள்விகள் + சு நா மீ 11 : சுஜாதாவின் சந்தோஷம்.


புதன் கேள்வி பதில் இல்லை என்றால், பதிவு போர் அடிக்கிறது என்று ஒவ்வொருவரும் சொல்கிறீர்கள். ஆனால் - யாருமே கேள்விகள் கேட்பது இல்லை. இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்வது? 

சரி இந்த வாரம் நாங்களாவது சில கேள்விகள் கேட்கிறோம். நீங்க பதில் சொல்லுங்க. 

1) ஒரு நாளில் உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கிரமிப்பது  எது ? 

    a ) மொபைல் ஃபோன் 

    b ) தொலைக்காட்சி 

    c ) கணினி 

    d ) வீட்டு வேலை / அலுவலக வேலை 

    e ) உறவினர் / நண்பர்களுடன் செலவிடும் நேரம் 

2) 24 மணி நேரத்தில், நீங்கள் தூங்குவது / ஓய்வு எடுப்பது எவ்வளவு மணி நேரம் ? 

3) நீங்கள் காலையில் எழுவது எத்தனை மணிக்கு ? 

4) உங்களுக்கு ஒரு நாளில் மிகவும் பிசியான நேரம் என்று எதைச் சொல்லலாம்? 

   a ) காலை எழுந்ததிலிருந்து இரண்டு மணி நேரம் 

   b ) காலை உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் 

   c ) மதிய உணவுக்குப் பின்  இரண்டு மணி நேரம் 

   d ) மாலை டிஃபன் / டீ / காபி நேரம் 

   e ) இரவு படுக்கச் செல்லும் முன்பு இரண்டு மணி நேரம் 

உங்கள் பதில்களை, கருத்துரையாக பதியவும். நன்றி. 

= = = = = 

சு நா மீ 11 :: சுஜாதாவின் சந்தோஷம். 

முந்தைய பகுதி சுட்டி : சு நா மீ 10 

சுந்தரியும் அவனும்  சிறிது நேரம் ஒருவரை ஒருவர் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த பின், நாகராஜ் கேட்டான் " சுந்தரி - யார் அந்தப் பெண்? "

சு : " இவள் சுஜாதா - நம்ம தயா மாமாவின் பெண். சுஜி - இங்கே வா " 

சுஜாதா நாகராஜ் பக்கம் ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு, எழுந்து பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டாள். 

சு : " அண்ணா - அவளுக்கு உன் மீது கோபம். " 

நா : " கோபமா! என்  மீதா ! நான் இவளைப் பார்த்ததே இல்லையே. " 

சு : " நானும் கூட இங்கே வந்த அன்றுதான் இவளைப் பார்த்தேன். என்னை இங்கே பத்திரமாகக் கொண்டுவந்து விட்ட பெண், நெட் மூலம் நீ அனுப்பியிருந்த கம்ப்ளைண்டை பிரிண்ட் எடுத்து போலீஸிடம் கொடுத்திருந்ததால், தயா மாமாவையும், தோட்டக்கார துரைசிங்கத்தையும் சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். தயா மாமாவை போலீஸ் பிடித்துக்கொண்டு சென்றதற்கு, நீ கொடுத்த கம்ப்ளைண்ட் காரணம் என்பதால், உன் மீது கோபமாக இருக்கிறாள், சுஜி. "

நா : " ஓ ! இதுதான் காரணமா? " 

சு : " நான் இங்கே வந்த அன்று இரவு, என்னிடம் வந்து சுஜி - 'அக்கா என்னுடைய அப்பா ரொம்ப நல்லவர். அவர் ஒரு தவறும் செய்யவில்லையே. அவரை ஏன் போலீஸிடம் பிடித்துக் கொடுத்தீர்கள் என்று கேட்டாள். அப்புறம், 'அக்கா உங்க அப்பா என்னை இதுவரை தன்னுடைய மகள் போல பார்த்து வளர்த்து, படிக்க வைத்து, நான் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். உங்கள் நினைவாக சில சமயங்களில் என்னை சுந்தரி என்று கூட கூப்பிடுவார். இப்போ நீங்க வந்துட்டீங்க. உங்கள் அண்ணாவும் வந்துவிடுவார். என்னையும் என்னுடைய அம்மாவையும் இந்த வீட்டை விட்டு அனுப்பிவிடுவீர்களா? என்று கேட்டாள். நான் அவளிடம் ' சும்மா அசட்டுப் பிசட்டு என்று எதையாவது பேசாதே. என் அண்ணா ரொம்ப நல்லவர். அவர் வந்தவுடன் தயா மாமாவை திரும்ப அழைத்து வரச் சொல்கிறேன்' என்றேன் "

அதே நேரத்தில் அடுத்த அறையிலிருந்து சுகந்தியும், மீனாக்ஷி பாட்டியும் வெளியே வந்தார்கள். 

சுந்தரி : " பாட்டீ - என்னுடைய அண்ணாவை ஞாபகம் இருக்கா ? " 

மீ : " நானும் உன்னைப் போலவே அவனை சின்ன வயதில் பார்த்ததுதான். இப்போதான் பார்க்கிறேன்! "

நா : சுகந்தியிடம் " அத்தை - நான் இப்போவே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், என் கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கி, தயா மாமாவை ரிலீஸ் செய்து அழைத்து வருகின்றேன். உங்க பெண்ணை அதுவரை பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள்! "

= = =  =  

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற நாகராஜ் போலீஸ் அதிகாரியிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட பின், லாக் அப்பில் இருக்கும் தயாளனைப் பாக்கச் சென்றான். 

நகராஜைப் பார்த்து, யார் என்று தெரிந்துகொண்டவுடன், தயாளன், நாகராஜின் கைகளைப் பிடித்துக்கொண்டு, " தம்பீ நாகராஜ் - நான் செய்தது மிகவும் தவறான விஷயம். என்னவோ புத்தி கெட்டு இப்படி நடந்துகொண்டேன். சுகந்தி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல், தியாகராஜன் மாமாவின் சொத்துகள் எல்லாம் என் பெண்ணுக்கு வரவேண்டும் என்று பேராசை கொண்டு என்னென்னவோ திட்டம் போட்டேன் - என்னை மன்னித்து விடு. இனி நான் திருந்திவிட்டேன். " என்றார். 

நாகராஜ் போலீஸிடம் தான் கொடுத்திருந்த கம்ப்ளைண்டை வாபஸ் பெற்று, தயாளன் மாமாவை வீட்டிற்கு அழைத்து வந்தான். 

போலீஸ் தயாளனையும், துரை சிங்கத்தையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 

=   =  

தயாளனுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்த நாகராஜ் நேரே சுகந்தியிடம் சென்று, " அத்தை - மாமாவை அழைத்து வந்துவிட்டேன். இப்போ உங்க பெண்ணுக்கு சந்தோஷமா என்று கேட்டுச் சொல்லுங்கள் " என்றான். 

பிறகு தயாளனிடம் " மாமா - நீங்க அப்பாவின் சொத்துக்கு ஆசைப்பட்டுத்தானே திட்டம் போட்டீர்கள்? சொத்து எல்லாம் உங்க பெண்ணுக்குக் கிடைக்க நேர் வழி ஒண்ணு இருக்கு - அப்படி இருக்கும்போது நீங்க ஏன் குறுக்கு வழி எல்லாம் யோசனை செய்தீர்கள்? " என்று கேட்டான். 

த : " என்ன சொல்லுறே - எனக்குப் புரியவில்லையே? "

நா : " உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் உங்க பெண்ணுக்குப் புரியும் என்றான் - அறையின் உள்ளே உட்காரந்திருந்த சுஜாதாவைப் பார்த்தபடி. 

சுஜாதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள். 


சுந்தரி : " அண்ணா - சூப்பர் செலெக்ஷன் !! சரி சுஜியைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நிறுத்து, எனக்கு ஒரு உதவி வேண்டும் அண்ணா. வா என்னுடைய அறைக்குப் போய் பேசுவோம் " 

நாகராஜை அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தாள் சுந்தரி. நாகராஜிடம், சேகர் பற்றி தனக்குத் தெரிந்த  விவரங்கள் எல்லாம் சொல்லி, " அண்ணா - அவருக்கு மீகாம் கம்பெனியில் நல்ல வேலை கொடுக்க நீ ஏற்பாடு செய்வாயா " என்று கேட்டாள். 

நா : " அட - யாரு அந்த சேகர் ! நீயும் உன்னுடைய ஆளை செலெக்ட் செய்துவிட்டாய் போலிருக்கே! " 

சு:  " பாவம் அண்ணா - அவர். நாகை நாணயக்காரத் தெருவில் ஒரு பட்டாணிக் கடை வைத்துள்ளார். அந்த வழியாக நான் மார்க்கெட் போய் வரும்போதெல்லாம் பார்த்தது உண்டு. அவருடைய படிப்பு, புத்தகங்கள், டிரஸ் எல்லாவற்றுக்கும் நான் மீகாம் கம்பெனியிலிருந்து அவ்வப்போது பணம் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறேன். " 

நா : " அட - இவ்வளவு தூரம் நீ உதவி செய்திருக்கிறாய்! மீகாம் கம்பெனி உரிமையாளர் சுந்தரம் அங்கிள்தான். வேலை வாங்கிக் கொடுக்க - சுந்தரம் அங்கிளிடம் நாம் சொல்லுவோம் வா. " 

இருவரும் சுந்தரத்தைப்  பார்த்து, சேகர் பற்றி சொல்லி - மீகாம் கம்பெனியில் சேகருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

சுந்தரம், சுந்தரியிடம், " அந்தப் பையனை நாளை இங்கே வந்து என்னைப் பார்க்கச் சொல்லு அம்மா. சின்ன வயதிலிருந்தே நீ கேட்டது எல்லாவற்றையும் மீகாம் கம்பெனி மூலம் வாங்கித் தந்துகொண்டிருந்தேன். இப்போ நீ கேட்பது உன் நண்பனுக்கு வேலை. இதையும் செய்துவிட்டால் போச்சு " என்றார். 

= =   ==  

சுந்தரி, சேகர் வீட்டுக்கு அருகே உள்ள மளிகைக் கடைக்கு ஃபோன் செய்து, சேகரை அழைக்கச் சொன்னாள். சேகர் போனில் வந்ததும், நடந்தது எல்லாவற்றையும் சுருக்கமாக சொல்லி, பிறகு திருவாரூரில் உள்ள தன்னுடைய விலாசத்தைச் சொல்லி, மறுநாள் காலை பத்து மணிக்கு, படிப்பு சான்றிதழ்கள் எடுத்துக்கொண்டு வந்து, மீகாம் கம்பெனி அதிபர் சுந்தரத்தை வந்து பார்க்கச் சொன்னாள். 

(தொடரும்) 

38 கருத்துகள்:

  1. ) ஒரு நாளில் உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கிரமிப்பது எது ?

    a ) மொபைல் ஃபோன்

    b ) தொலைக்காட்சி

    c ) கணினி

    d ) வீட்டு வேலை / அலுவலக வேலை

    e ) உறவினர் / நண்பர்களுடன் செலவிடும் நேரம்
    இவை அனைத்தும் தான் நேரத்தை எடுத்து கொள்கிறது.
    மொபைல் ஃபோன் காலை உறவினர், நண்பர்கள் காலை வணக்கம் முதல் தொடங்கி விடுகிறது.
    தொலைகாட்சியில் பக்திபாடல் காலை ஒலிக்கிறது. அந்தக்காலம் வானொலி இந்தக்காலம் தொலைக்காட்சி பெட்டி.
    அடுத்து கணினி இந்தியாவில் இருந்தால் பிள்ளைகள் காலையில் பேசுவார்கள். வெளிநாடு வந்தால் காலையில் உறவினர்கள் பேசுவார்கள்.
    காலை கடவுளை கும்பிட கொஞ்ச நேரம், வயிற்றுக்கு உணவு அளிக்க வீட்டுவேலைகள், கணினியில் வலைத்தளம் படித்தல் , நண்பர்கள் உறவினர்களுடன் பேசுதல், கோவிலுக்கு செல்லுதல் என்று இருக்கவே இருக்கு.

    2) 24 மணி நேரத்தில், நீங்கள் தூங்குவது / ஓய்வு எடுப்பது எவ்வளவு மணி நேரம் ?
    மதியம் ஓய்வு , புத்தகம் வாசித்தல். படுக்க செல்வது இரவு 9 மணி,


    3) நீங்கள் காலையில் எழுவது எத்தனை மணிக்கு ?
    காலையில் 4.30க்கு எப்போதும் எழுந்து கொள்வேன்.
    இப்போது 3.30க்கு தூக்கம் கலைந்து விடுகிறது.

    4) உங்களுக்கு ஒரு நாளில் மிகவும் பிசியான நேரம் என்று எதைச் சொல்லலாம்?

    காலை நேரம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான பதில்களுக்கு நன்றி

      நீக்கு
    2. காலை 4:30க்கு எழும் பழக்கம்.... எவ்வளவு அருமையான பழக்கம். பெங்களூர் வந்ததிலிருந்து இதைத் தொலைத்துவிட்டேன். இன்று 7:30க்கு எழுந்திருந்தேன். (5க்கு எழுந்து திரும்பி படுத்ததால்). நல்ல பழக்கம் வைத்திருக்கும் கோமதி அரசு மேடத்திற்குப் பாராட்டுகள்.

      நீக்கு
    3. உங்கள் இருவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  2. //பிறகு தயாளனிடம் " மாமா - நீங்க அப்பாவின் சொத்துக்கு ஆசைப்பட்டுத்தானே திட்டம் போட்டீர்கள்? சொத்து எல்லாம் உங்க பெண்ணுக்குக் கிடைக்க நேர் வழி ஒண்ணு இருக்கு - அப்படி இருக்கும்போது நீங்க ஏன் குறுக்கு வழி எல்லாம் யோசனை செய்தீர்கள்? " என்று கேட்டான். //

    நல்ல கேள்வி. நினைத்த மாதிரி கதை போகிறது.
    சுஜாதாவுக்கு சம்மதம் என்று அவள் வெட்கபடும் படம் சொல்லி விட்டது.

    சுந்தரிக்கு சேகர் ஜோடியா? நல்லது கதை நிறைவு பகுதிக்கு வந்து விட்டது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. காலை எழுந்த பிறகு 4 மணி நேரம் நான் ரொம்பவே பிசி. இதுபோல் படுப்பதற்கு இரு மணி நேரம் முன்பும்.

    பதிலளிநீக்கு


  6. c ) கணினி

    2) மூன்று மணி நேரம் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  7. கணினி தான் நெருங்கிய சினேகிதி. அதனால் அதிக நேரம் செலவிடுவது அதனுடன் தான். மொபைல் அதிகம் உபயோகிப்பதில்லை.
    காலை எப்போதும் 5.30க்கு முழுமையாக உறக்கம் கலைந்து விடும். அதற்கு அப்புறம் காலை 10 மணி வரை பிஸியான நேரம் தான். மதியம் அரை மணி நேரம் படுத்தவாறே ஓய்வெடுப்பதும் வாசிப்பதும். இரவு உறங்குவதற்கு நிச்சயம் 10 மணிக்கு மேல் ஆகி விடும்!

    பதிலளிநீக்கு
  8. கணக்கை எப்படி எழுத்தாக எழுதி, (எனக்கும்) புரிய வைக்கிறது என்று தான் எந்நேரமும் முக்கிய சிந்தனை...(!)

    பதிலளிநீக்கு
  9. கணக்கை எவ்வாறு எழுத்தாக எழுதி, (எனக்கும்) புரிய வைக்கிறது என்பதுதான் எந்நேரமும் சிந்தனை...(!)

    பதிலளிநீக்கு
  10. காலை 5 மணிக்கு எழும் பழக்கம். பத்து மணிவரை வீட்டு வேலைகளில் பிஸி. பின்பு ஆபீஸ் வேலைகளும் வீட்டுடன் தான். அத்துடன் பேரன் வளர்ப்பு.

    மொபைலில் தான் ப்ளாக் படிப்பது ஊட்டம் என போகிறது .புத்தகங்களும் படிப்பது இடையிடையே .

    பதிலளிநீக்கு
  11. 1) ஒரு நாளில் உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கிரமிப்பது  எது ?..

    மொபைல்..
       
    2) 24 மணி நேரத்தில், நீங்கள் தூங்குவது / ஓய்வு எடுப்பது எவ்வளவு மணி நேரம் ?..

    எட்டு மணி நேர தூக்கம்.. ( ஆனால் உடல் நலக் குறைவினால் தூக்கம் தான் வருவதில்லை) மற்றபடி
    ஓய்வு தான்..

    3) நீங்கள் காலையில் எழுவது எத்தனை மணிக்கு ?..

    பெரும்பாலும் ஆறு மணிக்கு முன்..

    4) உங்களுக்கு ஒருநாளில் மிகவும் பிசியான நேரம் என்று எதைச் சொல்லலாம்? ..
    அப்படி எதுவும் கிடையாது..

    உங்கள் பதில்களை, கருத்துரையாக பதியவும்.

    பதிந்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  12. // சுஜாதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக் கொண்டாள். //

    எதற்காக வெட்கம்?!..

    ஆனாலும், அழகான வெட்கம்..

    பதிலளிநீக்கு
  13. c, d, e இந்த மூன்றுமே என்றாலும் இதில் முதல் இரண்டும் சரி சமம் எனலாம்..அதாவது வீட்டு வேலை, என் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி கணினி..அடுத்து மூன்றாவது அதாவது இ. கம்மிதான். ஆனால் இந்த உறவு நட்பு என்பது முதல் a க்குப் போய்விடும் அதான் ஃபோன் வழி ஆனால் குறைவு.

    கண்டிப்பாக 7-8 மணிநேரம் உறக்கம். மதியம் படுக்கும் பழக்கம் இல்லை.

    காலையில் எழுவது 3.30 - 4 க்குள். எழும் போதே கால்கள் பாதங்களுக்கான பயிற்சியை முடித்துவிடுவேன். எழுந்ததும் 11.30 வரை பெரும்பாலும் டைம் சரியாக இருக்கும். ஏனென்றால் எழுந்து காலைக்கடன் முடித்து காஃபி போடும் போதே உடற்பயிற்சிகள் தொடங்கிவிடுவேன். அடுத்து மூச்சுப்பயிற்சி. காஃபி, சமையல், வீட்டு வேலைகள், சின்ன ந்டை, 5-530க்குள் பால் வாங்கச் செல்லும் போது மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டே நடை...அடுத்து 8.30க்கு (சாப்பிட்ட பின் தான்!!) கோயில் நடை. அது ஒரு அரை மணி நேரம்...அதன் பின் வீட்டுப் பெரியவருக்கு நடைக்கு உதவுதல்......அடுத்து நான் பிரிஸ்க் வாக்கிங்க், எல்லம் முடித்து வர 11.30 ஆகிவிடும்.

    கணினி....அடுத்து மதிய உணவு...கணினி....மாலையில் 4 மணிக்கு ஒரு நடைப்பயிற்சி வேக நடை..45 - 1 மணி நேரம்....போகும் முன் அலல்து வந்த பின் சின்ன உடற்பயிற்சி..15 நிமிடங்கள்.....அப்புறம் கணினி கொஞ்சம் வீட்டு வேலைகள்....பெரும்பாலும் 9 மணிக்குப் படுத்துவிடுவேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. நாங்க வீட்டுக்கு வந்தால், நீங்க வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே பேசவேண்டும், இல்லைனா கூட நடைப்பயிற்சிக்கு வந்து அப்போது பேசிக்கொள்ளவேண்டும். ஏதாவது உணவு வேணும்னா, நாங்களே வாங்கிட்டு வந்துடணும் என்று புரிஞ்சிக்கறேன்.

      நீக்கு
  14. என் கருத்து வந்ததா? பெரிசா அடிச்சேனே

    கீதா

    பதிலளிநீக்கு
  15. என்னாச்சு அனுமதி பெற்ற பின் என்று வருகிறது .....மாடரேஷன் இருக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நேற்றைய பின்னூட்டத்தால் மாடரேஷன் புகுத்தப்பட்டுள்ளது.

      நீக்கு
    2. நேற்று அதன் பின் வர முடியலை...இப்ப பார்த்தா அங்கு என்ன அப்படி ஒன்றுமில்லையே என்று தோன்றியது ஆனால் கருத்துகள் மட்டறுத்தல் எல்லாம் பார்த்ததும் ஏதோ வந்திருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

      கீதா

      நீக்கு
  16. அந்த சேகர்தான் ரயில் பெட்டிக்குள் மாட்டிக் கொண்ட நாகேஸ்வரனோ?!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!