கே வீரமணி பாடிய "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" என்று ஒரு பாடல் உண்டு. அதைப் பகிர, நானும் தேடித்தேடி அலுத்து விட்டேன்! சில பாடல்கள் இதுபோல எவ்வளவு தேடினாலும் கிடைப்பதில்லை. எனவே மாற்றுப் பாடலாக அடுத்த பாடலை எடுத்தேன்!
கேள்வி ஞானத்தில் ராகங்களுடன் பயிற்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் மனதில் நின்ற சில பாடல்களின் ராகம் அறிந்து கொண்டு அதை வைத்து மற்ற பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பேன்.
அந்த வகையில் சிந்துபைரவி ராகத்துக்கு முதலில் எனக்கான முத்திரைப் பாடல் இதுதான். டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள, நெமிலி எழில்மணி எழுதியுள்ள, "சிந்தை எல்லாம் அந்த கந்தன் வசம்" பாடல். பின்னர் "வெங்கடாசல நிலையம்" பாடலை சிந்துபைரவிக்கு மனதில் நிறுத்திக் கொண்டேன். 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' கூட சிந்து பைரவிதான்.
இசை குன்னக்குடி வைத்யநாதனாயிருக்கலாமோ என்னவோ..
துதிப்போர்க்கு வல்வினை போம் நெஞ்சிற்பதிப்போர்க்கு செல்வம்
பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை
சிந்தை எல்லாம் அந்த கந்தன் வசம் நெஞ்சம்
சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம்
முந்தைவினை அருகில் வரக்கூசும் -வந்தால்
முருகனின் வேல் வந்து அங்கு பேசும்
முந்தைவினை அருகில் வரக்கூசும் -வந்தால்
முருகனின் வெளிவந்து அங்கு பேசும் அதனால்
சிந்தை எல்லாம் அந்த கந்தன் வசம் நெஞ்சம்
சிந்திப்பதே கந்த சஷ்டி கவசம்
சஷ்டி கவசம்.. கந்தர் சஷ்டி கவசம்
செந்திலிலே முருகன் படைவீடு அங்கே
சென்றவருக்கு எது குறைபாடு
செந்திலிலே முருகன் படைவீடு அங்கே
சென்றவருக்கு எது குறைபாடு
வந்தனை செய்வோர்க்கு கனிவோடு
வந்தனை செய்வோர்க்கு கனிவோடு குமரன்
வழங்கிடுவான் அன்பை மகிழ்வோடு குமரன்
வழங்கிடுவான் அன்பை மகிழ்வோடு அதனால்
சிந்தை எல்லாம் அந்த கந்தண்வ வசம்
தந்தைக்கு திருவேத பொருள் சொன்னவன் என்றும்
துதித்திடும் அடியார்க்கு அருள் தந்தவன்
செந்தமிழில் லயிக்கும் மனம் கொண்டவன்
அன்பரின் சிந்தையிலே வசிக்கும் குணம் கொண்டவன் அதனால்
சிந்தை எல்லாம் அந்த கந்தன் வசம்
==================================================================
1977 . வெளிவந்த பக்திப்படம் 'புனித அந்தோணியார்'. முத்துராமன் லஷ்மி உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம். கண்ணதாசன், தஞ்சை வாணன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை. சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் கதை வசனம் பி டி சாமி. இயக்கம் நாஞ்சில் துரை.
இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும். ஒன்று கே ஜெ யேசுதாஸ் பாடிய அருள்வடிவே பரம்பொருள் வடிவே... மற்றொன்று இன்று பகிரும் 'மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார் பாடல். வாணி ஜெயராம் குரலில் அற்புதமான பாடல்.
இந்தப் பாடல் சிறப்புற்றதே வாணி அம்மா குரலால்தான் என்று எனக்குத் தோன்றும். அவர் கணவர் திரு ஜெயராம் அவர்களுக்கு இவர் பாடிய பாடல்களில் ரொம்பப் பிடித்த இரண்டு பாடல்களில் இதுவும் ஒன்றாம்.
விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் ஞான ஜோதியே
உயர்வான ஜோதியே தானாகவே உலகில் இறங்கும் தர்ம ஜோதியே
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார்.. வாங்க..
நீக்குகந்த சஷ்டி கவசத்தின் காப்புச் செய்யுளுடன் ஆரம்பமாகும் பாடல் இனிமை. கந்தன் அருள் வேண்டி துதிப்போம்.
பதிலளிநீக்குமுருகா போற்றி
ஷண்முகா போற்றி
அழகா போற்றி
ஆறுமுகா போற்றி போற்றி..
துதிப்போம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவரும் பரிபூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்றைய இரண்டு பாடல்களும் அருமை. அடிக்கடி கேட்ட பாடல்கள். முருகன் அனைவரையும் நலத்துடன் காக்க வேண்டும். இரு பாடல்களையும் தேர்ந்தெடுத்து விபரங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. நலமா? நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீங்கள் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்னு அனைவரும் நலமே...
நீக்குஇவங்களை இங்கே பார்த்து எத்தனையோ வாரங்களாகிவிட்டன. ஒருவேளை Around the world in 80 days என்று சொல்றாப்போல இவர் 80 நாட்கள் யாத்திரைனு ஏதேனும் சென்றிருந்திருப்பாரோ?
நீக்குமகன் விஜயம்!
நீக்குஹா ஹா ஹா. இப்போது நினைவுக்கு வந்து விட்டதா? நெல்லைத்தமிழர் சகோதரரே. யாத்திரையின் பெயரும் நன்றாக உள்ளது ஸ்ரீராம் சகோதரரே. ஆனால் இது பந்தபாசங்களுக்கு உட்பட்ட அதிலிருந்து விடுபட முடியாத யாத்திரை. இன்று இரு இடங்களிலும் நின்று நிலைத்திருக்கும் முருகனருள் என்னை இந்த உலகிற்கு இழுத்து வந்து விட்டது.
நீக்குஇது நிஜமாகவே நானேதான்... அன்று என்னைப் போலவே கருத்திட்ட ஒரு போலியின் கருத்தைப் போன்றதல்ல...
நீக்குஇந்தப் பாடலை எழுதியது யார்? நான்..நானேதான் ஐயா - வசனம் நினைவுக்கு வருது
நீக்குஹா ஹா ஹா. இல்லை. சென்ற பதினான்காம் தேதியன்று என் காலைவணக்கம் கருத்துரை நான் பதிவாக்காமலையே இங்கு பதிவாகியிருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன். அதற்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் சகோதரி கீதா ரெங்கன் அவர்களும் பதில் கருத்து தந்திருந்தார்கள். அப்போதைய சில குளறுபடிகளையும் படித்து தெரிந்து கொண்டேன். அதனால்தான் இந்த ஊர்ஜிதம். வேறு ஒன்றுமில்லை. நன்றி சகோதரரே.
நீக்குஇரண்டும் பாடல்களுமே சூப்பர் ஜி
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி ஜி.
நீக்குஇந்த நாளும் இனிய நாளே..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடலில் "முருகனின் வேல் வந்து அங்கு பேசும் "என்று வரும் ஸ்ரீராம். மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குதிருத்தி விட்டேன். நன்றி அக்கா.
நீக்குஇரண்டு இடங்களில் வரும் ஸ்ரீராம்.
நீக்குபார்க்கிறேன் அக்கா.
நீக்குஅடுத்த பாடலும் மிகவும் பிடிக்கும் நிறைய தடவை கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
நன்றி அக்கா.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇன்று பதிவாகியுள்ள முருகன் பாடல் இதுவரையிலும் கேட்டறியாதது..
பதிலளிநீக்குநல்லதொரு பாடலைத் தந்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆச்சர்யம்.
நீக்குஎனக்கு ராகம்லாம் தெரியாது. முதலில் பாடலைக் கேட்போம் என ஆரம்பித்து, கந்தசஷ்டி கவச வரிகள் வரும் போதே மனதில் சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே என்ற பாடல் தோன்றியது. பிறகு படித்துப் பார்த்தால் சிந்துபைரவி, மற்றும் சில பாடல்களைக் குறிப்பிட்டிருக்கீர்கள். மிக அருமையான பாடல்.
பதிலளிநீக்குசீர்காழி மாதிரி ஆட்களை எங்கே தேடுவது?
'எங்கெல்லாம் தேடுவதோ' என்று கூட ஒரு சீர்காழி பாடல் உண்டு நெல்லை! சீர்காழியை அவ்வளாவாகப் பிடிக்காத சில ரசிகர்களும் உண்டு!
நீக்குகழுதைகளுக்கு கற்பூரம் பிடித்து என்ன.. பிடிக்கா விட்டால் என்ன?..
நீக்குகற்பூரம் பிடித்திருந்தால் ஜென்ம சாபல்ய்ம் ஆகலாம்!..
சீர்காழியைப் பிடிக்காதவர்களும் உண்டா? (பக்திப் பாடல்களில்). மைக் தேவையில்லாமல் கூட்டத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நன்றாகக் கேட்கும்படி பாடும் குரல்வளம் படைத்தவர் சீர்காழி. You are banned to specify songs without using them in Friday பதிவு. ஹாஹா. எங்கெல்லாம் தேடுவதோ.....என்ன மாதிரியான சூப்பர் பாடல்....
நீக்கு"எங்கெல்லாம் தேடுவதோ"அருமையான பாடல். அதுவும் சீர்காழி அவர்களின் குரலினிமையில் மெய்மறக்கச் செய்யும் பாடல். அந்த பாடலின் அருமையான பொருளுணர்ந்து நானும் இறைவனை தேடிக் கொண்டேதான் உள்ளேன். என்று காணப்போகிறேனோ? தெரியவில்லை...
நீக்கு//You are banned to specify songs without using them in Friday பதிவு.//
நீக்குநானே அப்படி தான் நினைப்பேன். நீங்களும் சொல்லி விட்டீர்கள்!
மண்ணுலகில் இருந்து தேவன் இறங்கி வருகிறார் பாடலை சவேரியார் ஹாஸ்டலில் பலமுறை கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்.
பதிலளிநீக்குவாணி ஜெயராம் குறளுக்காகவே கேட்க வேண்டிய பாடல்.
நீக்குஅதாவது ஸ்ரீராம், வாணி ஜெயராமின் இரங்கல் பதிவில், பகிர மறந்த பாடல்.
நீக்குகுறள்? அல்லது குரல்?
நீக்குஅட, குரல்தான் அக்கா.. ஆட்டோ ஆட்டத்தில் மாறியது.
நீக்குநெல்லை வாணி ஜெயராம் இரங்கல் பதிவில் வாணி ஜெயராம் தனிப்பாடல் நான் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். யாருமே பதிவு சரியாகப் படிக்கவில்லை போல.. யாரும் ஒன்றும் சொல்லவில்லை. நானு விட்டுவிட்டேன்!
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்...
பதிலளிநீக்குமெல்லிசை மன்னரின் ஆகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று..
கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் என்பது மாதிரி வாணி ஜெயராம் அவர்களது குரல்...
ஆம்.
நீக்குஇரண்டு பாடல்களும் சிறப்பானது...
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் சிறப்பானது...
பதிலளிநீக்குஆமாம் DD.
நீக்குஎம்மை பக்தியில் தோயவைக்கும் இருபாடல்களும் அருமை. எத்தனை தடவை கேட்டாலும் அலுப்பதில்லை..
பதிலளிநீக்குவெள்ளி பாடல்கள் பகிர்வு சிறப்பு.
நன்றி மாதேவி.
நீக்குமண்ணுலகில் இன்று தேவன் இறங்கி... வருகிறார்..
பதிலளிநீக்குஅழகாகப் பாடியிருக்கிறார் வாணி.
எப்போதோ கேட்டது. இன்றும் கேட்கக் கிடைத்தது.
இன்று என்வழியாக தேவன் உங்கள் காதில் இறங்கி வந்திருக்கிறார்!
நீக்குசீர்காழி குரலில் எந்தப் பாட்டானாலும் ரசிப்பேன் என்றாலும் "சின்னஞ்சிறு பெண் போலே!" பாடலுக்குப் பின்னரே மற்றவை. மற்றப் பாடலும் கேட்டிருக்கேன், ஆனால் வாணி ஜெயராம் எனத் தெரியாது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குநலமா? தங்களுக்கு கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்திருக்கும் என நினைக்கிறேன். அது பற்றி பதிவுகளில் படித்து தெரிந்து கொண்டேன். இப்போது எப்படி இருக்கிறீர்கள்.?
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
I am ok. Thank You.
நீக்குசின்னஞ்சிறு பெண் போலே பாடலை விட காவிரி சூழ்பொழில் இருக்கிறதே... நீங்கள் வசிக்கும் ஊர் பற்றிய பாடல். அப்புறம் நாராயணா எனும் பாராயணம்..
நீக்குசின்னஞ்சிறு பெண் போலே.... இதை அடித்துக்கொள்ள பாடலே கிடையாது. நான் சின்ன வயதில் பாடுவேன். சீர்காழி என்றதும் இந்தப் பாடலைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.
நீக்குகீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்?
நீக்குஆரம்ப காலங்களில் மனதில் நின்ற சில பாடல்களின் ராகம் அறிந்து கொண்டு அதை வைத்து மற்ற பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பேன்.
பதிலளிநீக்குஅந்த வகையில் சிந்துபைரவி ராகத்துக்கு முதலில் எனக்கான முத்திரைப் பாடல் இதுதான். //
சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்...இப்ப எங்க போச்சோ?
எங்கிட்ட கேட்டீங்கன்னா புலம்ப ஆரம்பிச்சிருவேன்!!!! ஹிஹிஹி
ஆமாம் அருமையான சிந்துபைரவி ....சீர்காழியின் குரலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?! ரசித்த பாடல்!!! இப்போதும் ரசித்தேன்....கேட்டுக் கொண்டேதான் கருத்து அடிச்சுட்டுருக்கேன்....தனி டாபில் - குமரன் வழங்கிடுவான் அன்பை என்பதை இரண்டாவது முறை பாடும் போதான சிந்துபைரவி சங்கதி செமையா இருக்கும் இல்லையா...
அது போல இரண்டாவது சரணத்திலும் ஒரு இடத்தில்...
கீதா
ஆமாம். நம் தலை தானாய் அசையும்!
நீக்குவாணியின் இந்தப் பாடலும் கேட்டு ரசித்ததுண்டு. ரொம்பவே....என்ன ஒரு குரல்....
பதிலளிநீக்கு//இந்தப் பாடல் சிறப்புற்றதே வாணி அம்மா குரலால்தான் என்று எனக்குத் தோன்றும்.//
உண்மை.....என்ன ஒரு குரல் அதுவும் நல்ல உணர்ச்சி பூர்வமாக...
// அவர் கணவர் திரு ஜெயராம் அவர்களுக்கு இவர் பாடிய பாடல்களில் ரொம்பப் பிடித்த இரண்டு பாடல்களில் இதுவும் ஒன்றாம்.//
ஓ! இரண்டாவது பாடல் என்ன பாடலா இருக்கும்னு யோசனை.
ஹை பிச்! செமை...தொடக்கமே சுருதி ஹை சுருதி!! இதெல்லாமே ஆசிர்வாதம்தான்.....
கீதா
இரண்டாவது பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல். அதுவோ மல்லிகை முல்லை பூப்பந்தல் பாடலோ... இரண்டில் ஒன்று.
நீக்கு
பதிலளிநீக்கு//இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும். ஒன்று கே ஜெ யேசுதாஸ் பாடிய அருள்வடிவே பரம்பொருள் வடிவே... மற்றொன்று இன்று பகிரும் 'மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார் பாடல். வாணி ஜெயராம் குரலில் அற்புதமான பாடல்.//
எனக்கும் கே ஜெ யேசுதாஸ் பாடல் பிடிக்கும்.
வாணி ஜெயராம் இறந்த பின் அவர் பாடல்களை நிறைய கேட்கிறேன் ஸ்ரீராம்.
நான் வைத்துள்ள லிஸ்ட்டிலிருந்து ஒவ்வொரு பாடலாய் பகிர்ந்து வருகிறேன் அக்கா! ஏற்கெனவே பகிர்ந்த வாணி பாடல்களை மறுபடி பகிர்வதா விட்டு விடுவதா என்றும் யோசனை.
நீக்குஏற்கனவே பகிர்ந்த பாடல் இல்லாமல் நிறைய இருக்கே ! வாணி பாடியது அதை ஒவ்வொன்றாக பகிரலாம்.
நீக்கு