திங்கள், 27 பிப்ரவரி, 2023

"திங்க"க்கிழமை   :  முருங்கை இலை  ரசம்  - கீதா சாம்பசிவம் 

 முருங்கை இலை  ரசம்

கீதா சாம்பசிவம் 

====================

ரேவதி முருங்கை இலை ரசம் கேட்டிருந்தார். நான் ரசமாகச் செய்தது இல்லை. ஆனால் சூப் மாதிரி நிறைய வைத்துச் சாப்பிட்டிருக்கோம். அதற்குத் தேவையான பொருட்கள்.


இளம் முருங்கை இலை இரண்டு கைப்பிடி, நன்கு ஆய்ந்து அலம்பிக்கொண்டு நறுக்கி வைக்கவும்.

இதற்கு நான் புளி சேர்த்தது இல்லை. நன்கு பழுத்த தக்காளி இரண்டு வெந்நீரில் போட்டுச் சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

உப்பு தேவைக்கு, பெருங்காயம் சிறிதளவு, மிளகு இரண்டு டீஸ்பூன், ஜீரகம் இரண்டு டீஸ்பூன் இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். மஞ்சள் பொடி தேவையானால் கால் டீஸ்பூன்.

வதக்க நெய் இரண்டு டீஸ்பூன், வெண்ணெய் மேலே போட இரண்டு டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, புதினாத்தழை(பிடித்தமானால்(

வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டு பொடியாக நறுக்கிய முருங்கை இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். சுருள வதங்கும். வதங்கிய பின்னர் எடுத்து வைத்திருக்கும் தக்காளிச் சாறைச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். சேர்ந்து வரும்போது தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு வறுத்துப் பொடித்திருக்கும் மிளகு, ஜீரகப் பொடியைப் போட்டுக் கீழே இறக்கி வெண்ணெய் இரண்டு டீஸ்பூன் சேர்க்கவும். கொத்துமல்லித் தழை, புதினாத் தழை சேர்த்துக் குடிக்கலாம். இலைகளை வடிகட்டாமல் சாப்பிட்டால்/குடித்தால் நல்லது . பிடிக்கவில்லை எனில் வடிகட்டிக் கொண்டு அதன் மேல் வெண்ணெய் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா தூவிச் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னால் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை அடிக்கடி/சொல்லப் போனால் தினம் தினம் செய்து சாப்பிட்டு வந்தோம்.

27 கருத்துகள்:

 1. நல்லதொரு சத்தான ரசம்.
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. கீதாக்கா அருமையான சூப்/ரசம். சூப்பர்!

  சென்னையில் இருந்த வரை முருங்கைக் கீரை கிடைக்கும்....எனவே சூப்/ரசம் செய்வது உண்டு.

  ரசம்னு செய்யறப்ப, பருப்பு வேக வைத்து (கொஞ்சமே கொஞ்சம்) ரசத்துக்கு விளாவுவது போலச் செய்வதுண்டு. புளி சேர்க்காமல்தாஅன். சிலப்போ எலுமிச்சை பிழிவதுண்டு.

  நம் வீட்டில் வடிகட்டுவது இல்லை

  கீதா

  பதிலளிநீக்கு
 3. முருங்கைக்கீரை பொரியல், கூட்டு, பொரிச்ச குழம்பு, முருங்கைக்கீரை சப்பாத்தி அல்லது பராந்தா என்பவை மட்டும் தான் வீட்டில் சமைப்பது. 

  ஒவ்வொன்றாக முருங்கை சீரியல் என்று எ பி க்கு அனுப்புங்கள். அவர்களும் திங்கக்கிழமை பதிவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. இங்கு முருங்கை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்....ஒரு வீட்டில் முருங்கை இருக்கு பழைய இடத்தில். எங்களுக்குக் கொரோனா வந்தப்ப அவர்களிடம் சொல்லிக் கேட்டு கேட் அருகில் வைத்துவிட்டுப் போய்விடுவாங்க...இது தினமும் செய்து சாப்பிட்டோம். அது ஒரு கதை...பதிவு போட நினைத்து அப்படியே இருக்கிறது....ஹிஹிஹிஹி.

  நான் இதில் சில சமயம் வெங்காயம் பூண்டு சேர்த்தும் செய்வதுண்டு சூப் என்றால்.

  முருங்கை இலை கிடைக்கவில்லை என்றால் முருங்கைக்காய் சூப்/ரசம் செய்தும் சாப்பிடுவதுண்டு.

  எபி யில் அனுப்பிருக்கேனா? நினைவில்லை...படங்கள் வைத்திருக்கிறேனே.....செக் செய்ய வேண்டும்.

  கீதா
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்டுப் பக்கத்துல தினமும் மூன்று பேர் முருங்கைக் கீரை கடை போடுவாங்க. ஒருத்தர்ட மணத்தக்காளி கீரையும் உண்டு. 20ரூ.

   நீக்கு
 5. எந்த சூப்புமே சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது நல்லதுதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. சாத்தமுது நெல்லையை இன்னும் காணோம்?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மத்தவல்க ஊர்ல இல்லை. பையனுக்கு 7:30க்குள்ள சமையல் தயார் செய்யணும். பிறகு 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணும், அப்படியே கொத்துமல்லி கருவேப்பிலை வாங்கணும். 11 மணிக்கு ஆன்மீக வகுப்பு. சமையல் முடித்து இப்போ சில நிமிடங்கள் வந்தேன்

   நீக்கு
 8. இதோடு சேர்த்து முதலில் கொள்ளு ரசமும் எழுதி அனுப்பி இருந்தேனே! ஒரே பதிவாக! அது ஏன் வரலை????????????????????????????????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி...   ரெண்டு வாரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமே என்று நினைத்து...

   நீக்கு
  2. ஓஓ, ஓகே, நேத்து அனுப்பினது பார்த்தாச்சா?

   நீக்கு
  3. //நேத்து அனுப்பினது பார்த்தாச்சா?// பார்க்கத்தான் முடியுமா? சாப்பிட நன்றாக இருக்காதா? டவுட் வருதே

   நீக்கு
  4. உங்களுக்கு அனுப்பாமல் எனக்கே அனுப்பிக் கொண்டிருக்கேன். இஃகி,இஃகி,இஃகி! நெல்லை, அதுவும் பாரம்பரிய உணவு தான். :)

   நீக்கு
 9. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 10. முருங்கை ரசம் அருமை..

  எளிமையான செய்முறை குறிப்புகள்..

  பதிலளிநீக்கு
 11. சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு - என்பது போல முருங்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்..

  அதெல்லாம் கிராமிய சூழலில் நாம் வாழ்ந்தபோது..

  இப்போது நகர்ப்புறத்தில் தள்ளுவண்டியில் கட்டு பதினைந்து ரூபாய் என்று...

  பதிலளிநீக்கு
 12. நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைச் செய்துபார்க்கும் வாய்ப்பே இல்லை.

  பதிலளிநீக்கு
 13. இயற்கையின் அருங்கொடைகள் ஆயிரம் ஆயிரம்.. அதிலே முருங்கையும் ஒன்று..

  இது உடம்புக்கு நல்லது என்று மட்டுமே சொல்வார்கள்.. சிறு வயதில் மறுபேச்சு இன்றி சாப்பிடுவோம்...

  இரத்த விருத்திக்கு நல்லது என்று பின்னாளில் தெரிய வந்தது..

  வஞ்சனையின்றி
  வாழ்க்கையில் மகிழ்ச்சியை சேர்த்தது முருங்கை..

  இன்று யார் யாரோ கண்டபடி பினாத்துகின்றனர் காணொளி களில்..

  இப்போது முருங்கைக் கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.. ஆனால் கிடைப்பதில்லை..

  அகத்திக் கீரையும் பாகற்காயும் நல்லவை.. ஆயினும், சித்த மருந்துகள் சிலவற்றுக்கு இவையிரண்டும் கூடாது..

  நீதி:-
  -------
  இளமையில் இருந்தே - அகத்தி, முருங்கை,பாகல்
  இவைகளில் இருந்து நீங்காமல் இருக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 14. முருங்கை கீரை சூப் அருமை.

  இன்று எங்கள் வீட்டில் முருங்கை கீரை பொரியல்.
  நாங்கள் கீரை பால் சொதி செய்வோம் முன்பு ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. கருத்துத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இப்போல்லாம் திங்க"ற பதிவு போணியா ஆகிறதில்லை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. எ பி க்கு வரும் வாசகர்கள் குறைந்து விட்டனர். நான், பா வெ, வல்லி போன்றோர்கள் வந்தாலும் கருத்துரைகள் கூறுவதில்லை. அதிராவைக் கூப்பிடுங்கள். சட்ட சபை போன்று களை கட்டும். 

   "என் கடன் சமைப்பதே. சாப்பிடுபவர்கள்  சாப்பிடலாம்."

   Jayakumar

   நீக்கு
 16. முருங்கை ரசம் செய்முறை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!