வியாழன், 16 பிப்ரவரி, 2023

ஊர் சுற்றிய இரண்டு நாட்கள்

 என்ன இருந்தது அந்த ஓட்டலில் அவ்வளவு கூட்டத்துக்கு என்று தெரியவில்லை.   முன்னரே தொலைபேசி முன்பதிவு செய்திருந்தும், மதியம் இரண்டு மணிக்கு எல்லா மேஜைகளும் ஆக்ரமிக்கப்பட்டிருந்தன.

சனிக்கிழமை மதியம் ஒரு வேளை வெளியில் சாப்பிடலாம் என்று குடும்பத்துடன் கிளம்பினோம்.  எல்லோரும் அந்த ஹோட்டல் பெயரையே சொன்னார்கள்.  அதற்கு தி நகரில் ஒரு கிளையும், அடையாறில் ஒரு கிளையும் இருந்தன.  அடையாறைத் தெரிவு செய்தோம்.


காலை ஒன்பது மணிக்கே பனிரெண்டு மணி ஸ்லாட் நிறைந்து விட்டிருக்க, இரண்டு மணி ஸ்லாட் முன்பதிவு செய்தோம்.  ஆனால் சென்று பார்த்தபோதோ முன்பதிவு பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படாமல் நிறைத்து விட்டிருந்தார்கள்.  கூட்டத்தை சமாளிக்க முடியவில்லையோ என்னவோ...  எங்களை போலவே இன்னும் இரண்டு குடும்பங்களும் நின்று கொண்டிருந்தார்கள்.  ஒரு வழியாக கால் மணி நேரம் கழித்து இடம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

பஃபே ஸிஸ்டத்தில் உணவு.  ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட தொகை.  நான் நினைத்திருந்தேன், அவர்களிடம் இருக்கும் உணவு வகைகள் அனைத்தும் பஃபே ஸிஸ்டத்தில் நாம் எடுத்துக்கொள்ள முடியும் என்று.  அப்படி இல்லாமல் சில குறிப்பிட்ட வகைகள் மட்டுமே வைத்திருக்க, நாம் ரெகுலராக விரும்பி சாப்பிடக்கூடிய தோசை, இட்லி சப்பாத்தி வகையறாக்களை வைக்க மாட்டார்கள் போலும்.  மேலும் அவர்கள் வைத்திருந்த ப்ராக்கோலி பிரியாணி, வெஜ் அகர்த்தா, போன்றவையும் சாம்பார் ரசம் சாதங்களும் ரசிக்கும் வகையில் இல்லை. 


ஸ்டார்ட்டர்ஸ் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.  அதிலும் நகெட்ஸும் கீரை பக்கோடாவும் புண்ணியம் கட்டிக்கொண்டன!  பஃபேயில் காஃபி உண்டா என்று கேட்டேன்.  இல்லை என்றார்கள்.  தனி பில்லாம்.  ஆர்டர் செய்து சாப்பிட்டேன்.  அது மட்டும் அருமையாக இருந்தது!  ஆனால் அங்கு அமர்ந்து சாப்பிடும் அனுபவம் எல்லோரும் ரசிப்பார்கள்.  ஒவ்வொரு தூணிலும் டிவி வைத்து கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது.  வீட்டிலிருந்து கிளம்பி ஓட்டலை அடையும் முன் ஆஸ்திரேலிய இரண்டாவது இன்னிங்ஸ் முடிந்து போனது ஒரு சிரிப்பு.  வீட்டிலிருந்து கிளம்பும்போது ஒரு விக்கெட் மட்டும் போயிருந்தது.  மாடியில் அமர்ந்து இப்படி ஒரு ஓட்டலில் சாப்பிடுகிறோம் என்கிற உணர்வும், நண்பர்களோடு பேசிக்கொண்டே சாப்பிடும் அனுபவமும் ரசிக்கலாம்.  உணவை அல்ல!


ஞாயிறு காலை பெசன்ட் நகர் பீச் சென்றோம்.  நான் பீச்சுக்கு வருவது இது நான்காவது  முறை என்று சொல்லலாம்! வி ஜி பி கோல்டன் பீச், மெரினா பீச் a  க்கு முன்னால்  ஒவ்வொரு முறையும்,  சமீபத்தில் அஷ்டலக்ஷ்மி கோவில் சென்றபோது கடற்கரை ஓரம் நின்றதும், இன்று பெசன்ட் நகர் பீச்சும்!  காலை நேரத்தில் சென்றதால் கசகச கடைகள் இல்லை.  எல்லாம் மூடி இருந்தது.  கடலை வேண்டிய மட்டும் ரசித்துக் கிளம்பினோம்.  சில இளைஞர்கள் சினிமாவில் வருவது போல ஜம்ப் செய்து கரணம் அடித்துப் பழகிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் முடியலங்காரம் ரசிக்க முடியாததாய் இருந்தது.  நம்மை யார் கேட்கிறார்கள்..  நம் வம்புக்கு வராமலிருந்தால் சரி!


குழந்தைகளை தண்ணீரில் நிறுத்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  விசில் அடித்தபடி எச்சரித்தபடியே கவனம் சொல்லி ஒரு போலீஸ்காரர் பாரா போனார்.  விலை உயர்ந்த பெர்சியன் பூனையுடன் வந்திருந்த ஒருவரிடம் இருந்த பூனையைக் கொஞ்சுவதில் சில இளைஞிகள் ஆர்வமாக இருந்தனர்.  குதிரை சவாரி வாய்ப்பு தேடி இரண்டு மூன்று குதிரைக்காரர்கள் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.  சூரியனின் தங்க நிற கதிர்கள் நடுவே அலைகள் அவசர ஆவேசமாகக் கிளம்பி  ஓடிவந்து மதிப்பிழந்தன.  தூரத்தில் இரண்டு படகுகள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தன.  அவர்களுக்கு  பிழைப்பு. நம் கண்களுக்கு அழகின் அழைப்பு!    கட்டுப்படுத்த முடியாமல் ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்ததில் மறுபடி கூகுள் ஸ்பேஸ் 15 GB யை நெருங்கி பயமுறுத்த்துகிறது.

டிஃபன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று நாங்கள் செல்ல (தவறான) முடிவெடுத்தது முருகன் இட்லி கடை.  முக்கியமான இடத்தில கடை வைத்திருப்பதால் எப்படியும் கூட்டம் வரும் என்கிற நம்பிக்கை போலும்.  ரோஸ்ட் கேட்டால் தொளதொள என்று மூன்றாய் நான்காய் மடித்து, கொண்டு வந்து போட்டதும்,  ஆனியன் ரவாவில் (கண்ராவி) ஒன்றிரண்டு ஆனியன் கண்ணில் பட்டதும் (அதையும் துணி மடிப்பது போல மடித்துதான் கொண்டு வந்து போட்டார்கள்) அழுகல் தேங்காய் சட்னியும், கருகல் வாசனை அடிக்கும் சிவப்பு சட்னியும்...    


பொடி இட்லியும் சாம்பாரும் ரசிக்க வைத்தன.  காஃபி எனும் கண்ராவி! சரி, விடுங்கள்.  எனக்குப் பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லி குறை சொல்வதை நிறுத்துகிறேன்!  ஆனால் வெயிட்டிங்கில் என்ன கூட்டம் என்கிறீர்கள்...    பெயரினால் ஓடிக் கொண்டிருக்கிறது என்று தோன்றியது.  அல்லது மற்றொரு நாளில் நல்ல சுவையில் கிடைக்கக் கூடும்.  


வழியில் மறுபடியும் தாய்லாந்து கொய்யாவை வத்ராப் கொய்யா என்று ஏமாந்தேன்.  என் தவறுதான்.  முதல்முறை தேங்காய்ப்பூ வாங்கி ருசித்தேன்.  உடம்புக்கு ரொம்ப நல்லதாமே... லேசாகத் திகட்டியது. 

விடுமுறை நாளில் சென்னையை இரண்டு நாட்கள் அனுபவித்து ரசித்தேன்.

சின்ன ரு வா?  பெரிய று வா?


எதற்கு வம்பு..  மேலே சின்ன ரு போடு...  கீழே பெரிய று போடு...  யாரும் எதுவும் சொல்ல முடியாது பாரு..

======================================================================================================

சிவனுக்கும் திருமாலுக்குமிடையே பேதம் கற்பிப்பது சரியல்ல.
வைஷ்ணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் உயர்ந்த பக்தி நிலையில் இரண்டையும் ஒரே ஸ்வரூபமாகக் கொண்டு பாடியிருக்கிறார்கள்.  'பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து' என்று ஆழ்வார் பாடினால், அதை அப்படியே எதிரொலிக்கிற மாதிரி, 'குடமாடியை இடத்தே கொண்டு' என்று சைவத்திருமுறை பாடுகிறது.

தமிழ் நாட்டில் ஆதிகாலம் முதற்கொண்டு இந்த ஸமரச பாவம் இருந்து வருகிறது.  இருபத்தேழு நஷத்திரங்களுக்குள் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் ஆகிய இரண்டுக்கு மட்டும் 'திரு' என்ற கெளரவ அடைமொழி சேர்த்து திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம். குழந்தையாக இருக்கும் பொழுதே இந்த சமரஸ உணர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதால் தான் அவ்வைப் பாட்டி ஆத்திசூடியில் 'அரனை மறவேல்' என்றும் 'திருமாலுக்கு அடிமை செய்' என்றும் உபதேசம் செய்கிறாள் 

ஒரே தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு வழிபடுவதே சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகத் தோன்றலாம். இதில் நியாயம் உண்டு.  தங்கள் இஷ்ட தெய்வத்தையே, பரம்பரையாக வந்த குல தெய்வத்தையே உபாஸிக்கலாம். ஆனால் அப்போதும் ரூபமற்ற பரமாத்மாவையே நாம் இந்த ரூபத்தில் வழிபடுகிறோம். எனவே இந்த மூர்த்தி பரமாத்மா தான்.  அதே பரமாத்மா மற்ற ரூபங்களும் எடுத்துக் கொள்ள முடியும்;  அதாவது ' நம் தெய்வமே தான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது' என்ற அறிதல் வேண்டும்.  

-- தெய்வத்தின் குரல்

=======================================================================================================

யானை பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான செய்தி :
=======================================
குட்டி ஈன்ற தாய் யானையை, கவனமாக கண்காணித்து, காவல் காத்து வருகின்றன அதன் சகோதரி யானையும், மகன் யானையும். வால்பாறை வாகைமலை பகுதியில் இந்த கண்கொள்ளக்காட்சியை கண்டு ஆச்சரியப்படுகின்றனர் பொதுமக்கள்.
தமிழக-கேரள வனப் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம் வால்பாறை. இங்குள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.
இவை அடிக்கடி அருகில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைவதும், குடியிருப்புகள், கடைகளை துவம்சம் செய்வதும், மக்கள் அவற்றை விரட்டுவதும் வழக்கம்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை வாகைமலை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி ஈன்று, அந்தப் பகுதியை விட்டு நகராமல் உள்ளது.
யானைகள் கூட்டம்
இந்த யானையை, அதன் சகோதரி யானையும், மகன் யானையும் சில அடி தூரத்தில் நின்று காவல் காத்து வருகின்றன. இங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் 13 யானைகள் சுற்றித் திரிகின்றன.
இந்த கண்கொள்ளாக் காட்சியை அப்பகுதி மக்கள் பரவசத்துடன் பார்க்கின்றனர். எனினும், யானைகள் இருக்கும் பகுதிக்கு அருகில் மக்கள் சென்றுவிடவேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வனத் துறையினர் கண்காணிப்பு
“பொதுவாக தாய் யானை குட்டி ஈன்றால், அந்தக் குட்டியை விட்டு சிறிதுதூரம் கூட நகராது. குட்டி ஓரளவுக்கு நடந்து செல்லும் பக்குவத்துக்கு வந்த பின்னரே, குட்டியையும் அழைத்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லும். அதற்கு 10 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகலாம்.
தன் குட்டிக்கு மற்ற விலங்குகளாலோ, மனிதர்களாலோ துன்பம் நேரிடுவது தெரிந்தாலும், குட்டியுடன் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகரும். அப்படி நகரும்போது, குட்டி யானைக்கு ஆபத்து நேர்வதும்உண்டு. எனவே, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகிறோம். மேலும், தாய் யானை இருக்கும் பகுதி, யானைக் கூட்டம் நிற்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் வனத் துறையினர்.
இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (என்.சி.எஃப்) நிர்வாகியும், வன விலங்குகள் ஆய்வாளருமான ஆனந்தகுமார் கூறியது:
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் வால்பாறையில் யானைகள் இடம்பெயர்வது அதிகமாக இருக்கும். இதே சமயங்களில்தான், காட்டு யானைகள் குட்டி போடுவதும் சகஜம்.
பசுமையான வனப் பகுதி
பெரும்பாலும் அடர்ந்த வனப் பகுதியில், தண்ணீரும், பசுமையான உணவும் கிடைக்கும் பகுதியில்தான் யானைகள் குட்டி ஈனும். இந்த யானையும் பக்கத்தில் உள்ள காட்டில்தான் குட்டி ஈன்றுள்ளது. இப்பகுதியில் உணவும், நீரும் நிறைய இருப்பதால், அங்கிருந்து இங்கு வந்துள்ளது.
மேலும், குட்டி ஈன்ற யானையை, அதற்கு நெருக்கமான உறவு முறையுள்ள யானைகள்தான் காவல் காக்கும்.
அந்த வகையில், இந்த யானைக்கு அருகில் நின்று கண்காணிக்கும் மற்றொரு பெண் யானை, இதன் சகோதரியாக இருக்கக்கூடும்.
மேலும், அதனுடன் இருக்கும் ஆண் யானைக்கு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். இந்த யானையும் உடன் நிற்பதைப் பார்க்கும்போது, குட்டி ஈன்ற யானையின் பிள்ளையாக இருக்கும். அல்லது அதனுடன் நிற்கும் சகோதரியின் குட்டியாகவும் இருக்கலாம்.
பொதுவாக, ஆண் யானைகள் குறிப்பிட்ட பருவத்துக்குமேல் கூட்டத்தில் இருக்காது. அதற்கு பெண் யானைகளை விட கூடுதலான உணவு, நீர் தேவை. எனவே, அது தனியாகச் சென்று உணவு தேடி, சாப்பிடும். இந்த சிறிய ஆண் யானை, பெரிய யானையுடன் இருப்பதற்கு, அந்த 2 யானைகளில் ஒன்றின் குட்டியாக இருக்கலாம் என்று கருதவாய்ப்புள்ளது என்றார்.
ஆபத்தும் அதிகம்...
இதுகுறித்து வன விலங்கு ஆய்வாளர்கள் கூறும்போது, “யானைகள் பெரும்பாலும் காட்டுக்குள்தான் குட்டி ஈனும். மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, குட்டி ஈனாது. இங்கு தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனத்துக்குள் குட்டியுடன், தாய் யானையும் வந்துள்ளதற்கு, உணவும், நீரும் இங்கு கிடைப்பதே காரணம். இது மிகவும் ஆபத்தானது.
சில ஆண்டுகளுக்கு முன் சோலையாறு பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை, ஆற்றைக் கடக்கும்போது குட்டியைத் தவறவிட்டுவிட்டது. ஆற்று வெள்ளத்தில் குட்டி அடித்துச் சென்றதால், தாய் யானையுடன் வந்த யானைக் கூட்டம் குட்டியைத் தேடி அலைந்தன. அவற்றின் பிளிறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றினர். யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத் துறையினர் முயன்றனர். ஆனால், யானைகள் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. பின்னர், அவற்றின் வழித்தடத்தைக் கண்டறிந்து, குட்டி யானையை வனப் பகுதிக்குள் கொண்டுசென்று, யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிட்டனர். குட்டியும் அந்த கூட்டத்துக்குள் சென்று, தாயுடன் சேர்ந்துகொண்டது.
ஆனால், என்ன காரணத்தாலோ, யானையே குட்டியை சேர்க்காமல் துரத்தியடித்தது தாய் யானை. இதில், அந்த குட்டி யானை இறந்தே விட்டது. எனவே, தாய் யானை, குட்டியுடன் காட்டை விட்டு ஊருக்குள் வருவதால், அதைச் சார்ந்த யானைக் கூட்டத்தால் மக்களுக்கு மட்டுமல்ல; இயற்கை இடர்கள், வன விலங்குகளால் யானைக் குட்டிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, இவற்றின் அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது” என்றனர்.
- தி இந்து (தமிழ்) - நாளிதழிலிருந்து...

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயிலில் பர்லியாறு அருகில் குட்டி யானை ரயில்வே லைனைக் கடக்கும்போது ரயில் மோதியதில் குட்டிக்கு காயம். காலை 8-30 க்கு நடந்த இந்த சம்பவம்.... மாலை 5-00 மணிக்கு அதே ரயில் பர்லியாறு பக்கம் வரும்போது ரயில் ஓட்டுநர் ரயிலை தூரத்தில் நிறுத்தி விட்டார்.அவர் கண்ட காட்சி: காலையில் குட்டி அடிபட்ட இடத்தில் 5 யானைகளுக்குமேல் கூடி......வரட்டும் ரயில் நம்மைத் தாண்டி எப்படிப் போகிறது எனப் பார்ப்போம் என்ற பாணியில் நின்றுகோண்டிருந்ததுதான்.


===============================================================================================

இதற்கு வந்த விடைகளையும் எடுத்து வைத்திருந்தேன்.  மிஸ் செய்து விட்டேன்!!


=======================================================================================

தெரியுமா ஜீவி ஸார்...   பசுபதி ஐயா மறைந்து விட்டார்.பேராசிரியர் பசுபதி மறைந்த செய்தி கொஞ்சம் திடுக்கிட வைத்தது. பைபாஸ் சர்ஜரி என்று சொல்லி இருந்தார், ஆனால் பதிவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. இதோ வந்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

பார்த்ததில்லை, பேசியதில்லை, இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனாலும் மிகவும் வருத்தம் தந்த செய்தி. சஹிருதயர் என்றே உணர்ந்திருந்தேன். இருபது வருஷம் முன்னால் பிறந்திருந்தால் என் ரசனை ஏறக்குறைய அவரைப் போலத்தான் இருந்திருக்கும். இருபது வருஷம் பிந்திப் பிறந்திருந்தால் அவர் ரசனை என்னைப் போலத்தான் இருந்திருக்கும்.

அவரது தளத்தைப் படிப்பது எப்போதும் ஆர்வம் ஊட்டும் ஒன்று. பழைய பத்திரிகைகளின் சிறந்த ஆவணம். எங்கிருந்துதான் இத்தனை பத்திரிகைகளை பிடிக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன்.

கவிதை இயற்றிக் கலக்கு, சங்கச் சுரங்கம் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

என் போன்றவர்களுக்கு இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனால் அவருக்கு வேறு ஒரு பக்கமும் உண்டு. பசுபதி கிண்டி பொறியியல் கல்லூரி ஆரம்பித்து பிறகு சென்னை ஐஐடி, பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர். பிறகு டோரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். Professor Emeritus என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இந்த இழப்பிலிருந்து மீள ஆண்டவன் அவர் குடும்பத்துக்கு பலத்தை அருளட்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

சிலிகான் ஷெல்ஃப்

===================================================================================================


பொக்கிஷம்...  

கேள்விகள் இங்கே...   விடைகள்..

உஷார் பா(ர்)ட்டி...!

தாதா..

இழப்பதற்கு இடமா இல்லை?!

வித்தியாச வில்லன்!

இங்கே....

ஓவியரை கண்டு பிடிப்பது எளிதுதான்!125 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. ஸிம்ஹா என்று தெரிந்து கொண்டேன்.
   கோபுலு சேவற்கொடியோன் கதைக்கு வரைந்தது போலவே இருந்தது.

   நீக்கு
 3. இன்றைய பதிவு ரசனை.. நிழற்படங்கள் அத்தனையும் அழகு...

  பதிலளிநீக்கு
 4. பசுபதி ஐயா அவர்களது மறைவு வருத்தமான செய்தி..

  இறைவனுடன் இனிது இருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 5. சனிக்கிழமை மதியம் ஒரு வேளை வெளியில் சாப்பிடலாம் என்று குடும்பத்துடன் கிளம்பினோம். //

  குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டது மகிழ்ச்சி. உணவு எப்படி இருந்தாலும் சேர்ந்து இருந்து உணவைபற்றி பேசி உண்டது மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.

  //ரெகுலராக விரும்பி சாப்பிடக்கூடிய தோசை, இட்லி சப்பாத்தி வகையறாக்களை வைக்க மாட்டார்கள் போலும்.//

  பஃபே ஸிஸ்டத்தில் சூடாக, தோசை, சப்பாத்தி, பூரி செய்து தருவார்களே!

  //நண்பர்களோடு பேசிக்கொண்டே சாப்பிடும் அனுபவமும் ரசிக்கலாம். உணவை அல்ல!//

  ஆமாம். ஓட்டலுக்கு வருவது அதற்குதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உணவு எப்படி இருந்தாலும் சேர்ந்து இருந்து உணவைபற்றி பேசி உண்டது மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.//

   உண்மைதான்.  வெளியில் சென்று வந்ததது மகிழ்ச்சி.  பெரும்பாலும் (இப்போது பத்து நாட்கள் நீங்கலாக)  மதியம் அனைவரும் சேர்ந்தே உண்போம்.  என் வேலை நேரமும் அப்படி அமைந்தது!  இப்போதல்ல!

   //பஃபே ஸிஸ்டத்தில் சூடாக, தோசை, சப்பாத்தி, பூரி செய்து தருவார்களே!//

   இல்லையே..  தந்திருந்தால் மகிழ்ந்திருப்போமே....

   நீக்கு
 6. பெசன்ட் நகர் பீச் போய் கடலை ரசித்து படங்கள் எடுத்து வந்தது மகிழ்ச்சி.கடல் பார்ப்பது மகிழ்ச்சி.

  கடற்கரை ஓரம் நின்றதும்,//

  கடற்கரை ஓரம் நின்றது மட்டுமா? கால் நனைக்கவில்லையா?
  கடகற்கரை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது, போகும் வழி படங்களும் நன்றாக இருக்கிறது. நிழல் தரும் மரங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கால் நனையாமல் நிற்க முடியுமா?  ரசித்த்தற்கு நன்றி கோமதி அக்கா. அலைகளின் சிறு காணொளி ஒன்று இருந்தது. இணைக்கவில்லை!

   நீக்கு
 7. யானை பற்றிய விவரங்கள் அருமை. யானை எங்களை நிம்மதியாக வாழவிடுங்க என்று கேட்பது போல இருக்கிறது.
  கேள்விகள் சிவாஜி கேட்பது போல படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானை விவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யம்.  யு டியூபில் கூட நிறைய யானை வீடியோ பார்ப்பேன்.

   நீக்கு
 8. பசுபதி சார் பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன், அவர் மறைவு வருத்தமாக இருக்கிறது. அவருக்கு அஞ்சலிகள், வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகப்பட்ட கலெக்ஷன்ஸ் வைத்த்திருந்தவர்.  திறமையான, சுவாரஸ்யமான  ஒருவர் மறைந்து விட்டார்.

   நீக்கு

 9. நீங்கள் இப்போல்லாம் வெளியில் சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. 50 வருடங்களுக்கு முன் 'ஹோட்டலில் சாப்பிட்டேன்' என்றாலே அம்மா "உனக்கு காசு கொழுத்து போய் கிடக்குது " என்று சொல்வார்கள். தற்போது ஹோட்டலுக்கு போவது கிடையாது. வேண்டும் என்றால் ஸ்விக்கி. தெருவில் விற்கும் பாணி பூரியையே வீட்டில செய்து சாப்பிடுகிறோம். 

  இங்கு என் வீட்டுக்கு 2 கி மீ தூரத்தில் தான் பீச்.. ஆனாலும் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. 

  போட்டோ எடுத்தல், என்ன முயன்றாலும் வெங்கட்ஜியை ஜெயிக்க முடியாது. அவருடைய கமெரா அப்படி. 

  யானை செய்திகள் புதியது. வீரப்பன் இருந்த வரை யானைகள் ஊருக்குள் புகுந்ததில்லை. அவனைப் பார்த்தாலே யானைகள் காட்டுக்குள் ஓடிவிடும். 

  கேட்ட கேள்விகளை புதன் கேள்விகளாக்கி இருக்கலாம். உச்சரிப்பு எப்படி இருந்தால் என்ன. கேட்பவருக்கு புரிந்தால் போதும். குழந்தையின் மழலையைப் புரிந்து கொள்கிறோம் அல்லவா? 

  பசுபதிவுகள் ஆசிரியருக்கு  அஞ்சலி. 

  மைத்துனன் ஜோக் சிரிப்பு மூட்டியது. மற்றவை எல்லாம் வெறும் புன்னகை தான். 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் JKC ஸார்...   வெளியில் சாப்பிடுவது மிக அதிகமாகி விட்டது.  ஸ்விக்கியும் அலுத்து (எக்ஸ்டரா காசு, மடங்கி சுருங்கி வருவது, ஆறிப்போய் வருவது) நேரில் செல்வது ஆரம்பமாகி இருக்கிறது!

   நானும் பீச் சென்று பலவருடங்கள்தான் ஆயின.  சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
   வெங்கட் எடுப்பது கேமிராவில்.  நான் எடுப்பது என் ஆறு வருஷ பழைய ஒன் ப்ளஸ் 5 ல் 

   வீரப்பன் இல்லாத ஊர்களில் இருந்த யானைகள் என்ன செய்தன?!

   கேள்விகள் புரிவது வேறு.  எது சரி என்பதே கேள்வி.  நிறைய விடைகள் வந்திருந்தன.  எடுத்து வைத்திருந்தேன்.  காணோம்.  மறுபடி தேடிச்செல்ல சோம்பேறித்தனம்!

   நன்றி JKC ஸார்.

   நீக்கு
 10. கேள்விகள் மேலே விடை கீழே.
  பொக்கிஷபகிர்வுகள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதி அக்கா.  அதற்கான விடை அந்த பைண்டிங்கிலேயே கிடைத்தது!  அதையும் எடுத்து வைத்திருந்தேன்.

   நீக்கு
 11. கிசுகிசு பாணியில் இல்லாமல் ஹோட்டல் பெயரைச் சொல்லியிருக்கலாம்.

  இப்போதெல்லாம் பயனாளர்கள் அவர்களின் விமர்சனத்தை எழுதுவது சகஜம். விமர்சனம் பார்த்துத்தான் நாங்கள் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதை, அல்லது நுகர்வது வழக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தசாவதாரங்களில் ஒன்று அந்த ஹோட்டலின் பெயர்!

   நீக்கு
  2. நான் ஹம்ஸாவோ கைலாஷ் பர்வதமோ என நினைத்தேன். மகள்டதான் கேட்கணும். மகள் சிஏ முடித்ததற்காக உறவினர்களுக்கு அடுத்த முறை ஜிஆரடியில் மதிய உணவு கொடுக்கலாம் என நினைத்துள்ளேன் (எனக்கு நார்த் இன்டியன் உணவு, பல வேளைகளில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது, கைலாஷ் பர்வத் உட்பட. அதனால் என்னால் சாப்பிட முடிவதில்லை. சமீபத்தைய ரிசப்ஷன்களில் இஸ்கான் நார்த் இண்டிய உணவு ஒன்றும் செய்யவில்லை. அடுத்த நாள் ரிசப்ஷனில் இன்னொரு கேடர்ர் உணவு அலர்ஜி ஏற்படுத்தி 800ரூ செலவு ஏற்படுத்தியது)

   நீக்கு
  3. எந்த ஓட்டல் என்று கண்டுபிடித்து விட்டேர்களா?!!

   நீக்கு
  4. எந்த ஓட்டல் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?!!

   நீக்கு
  5. ஸ்ரீராம் அந்த ஹோட்டல், மத்ஸ்யா....கீழே சொல்லியிருக்கிறேன்....

   கீதா

   நீக்கு
 12. பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு அஞ்சலி

  பதிலளிநீக்கு
 13. வடமொழியில் ba தமிழில் ப. பெயரை ஒரிஜினல் மொழியில் கூப்பிடுவது சரி. இலக்கியத்தில் சுத்தத் தமிழில் உச்சரிக்கணும். இன்துணை பதுமத்து. என்று இலக்கியத்தில் வரும்.
  லாவகம், பூரி, பூரித்தான் (இதுவும் வடமொழி மருவூ), இரண்டுமே வழக் உரைஞர் அறிஞர் சரி. இந்தியாவில் ஒருவரே இரு வேலையையும் செய்கிறார்கள், பிரிட்டனில் வெவ்வேறு இருவர். நாகஸ்வரம் ஒரிஜினல் பெயர். நாதம் வழங்குவதால் நாதஸ்வரம் சரிதான். பரோட்டா. ;பராந்தா என்று சிலர் பறந்து வருவார்கள்), இல்லோலகல்லோலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செங்கோட்டை ஸ்ரீராம் , கேஜிஜி உட்பட பதில் கொடுத்திருந்தனர்.  இலகுவாக செய்வதால் லாகவும் என்றார்.  நான் என்னவோ லாவகம் என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன்!

   நீக்கு
  2. லாவகம் சரி என்றே தோன்றுகிறது. உண்மையில் மரதகம் என்பதே சரி. நாம் மரகதம் எனப் பழகிவிட்டோம்.

   நீக்கு
  3. இன்றைக்குக் கற்றுக்கொண்டேன். ஆலாஹல விஷம். நாம் சொல்வது ஆலஹாலம்

   நீக்கு
  4. இல்லை. பெரும்பாலும் எல்லோரும் சொல்வது ஆலகால விஷம்!

   நீக்கு
  5. அப்போ சமஸ்கிருதத்தில் ஹ சவுண்ட் வருமாயிருக்கும். ஆலாகல விஷம்..நாம் சொல்வது ஆலகால விஷம்

   நீக்கு
 14. பீச் படங்கள் அழகு. ஆனாலும் அங்கு செல்லும்போது கசகச என்ற உணர்வைத் தவிர்க்க முடிவதில்லை. மற்ற நாடுகளில் பெரும்பாலும் கடற்கரையை அனுபவிக்க முடியும் (ஒரு ஞாயிறு பதிவு ரெடி). நம்மூரில் சுத்தமில்லாமை, ஒழுங்கீனம், இஷ்டப்படி பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் தன்மை அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குப்பைகளை எடுக்க டிராக்டர் ஒன்று சுற்றி வருகிறது.  அதன் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் இயந்திரம் குப்பைகளை சேகரித்து உள்ளே தள்ள வேண்டும்.  இயந்திரத்தில் கோளாறா என்னவென்று தெரியாயவில்லை.  ஓட்டுநர் மட்டும் டியூட்டிக்கு சரியாய் வந்து விட்டார்போலும்.  பத்து சதவிகித குப்பைகளைக் கூட அது உள்ளே இழுக்கவில்லை!

   நீக்கு
 15. ஓவியர்கள் படங்கள் பெரும்பாலும் அப்போது மாடர்னாக (அவ்வளவாக எல்லோரும் உபயோகிக்காத) இருப்பவரையே வரைவர். இவற்றைத் தொகுத்தாலே காலத்தின் போக்கு பிடிபடும்.

  கிழிசல் ஜீன்ஸ் அணிவது என்ன மாதிரியான ரசனையோ என எனக்குத் தோன்றும். பெரும் காசு கொடுத்து பிச்சைக்காரன் உடையணிவது என்ன ரசனையோ (அதுபோல ஹோட்டலில் 200ரூ கொடுத்து பழையசோறு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஜீன்ஸ் வாங்கி கிழித்து வீட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்களே...  பழைய சோறு பழமையே மாடர்னாகும் அவலங்கள்...

   நீக்கு
  2. உங்களுக்கு சின்ன வயதில் சொல்லும் கதை நினைவிருக்கிறதா? ஒரு முட்டாள் ராஜா, அவனுக்கு உடை அணிவியாமல், அணிவித்ததாகக் கூறி, அவனும் அதை நம்பி, தான் அழகிய உடை அணிந்திருக்கிறோம் என ஊர்வலம் வந்து, உடையே அணியவில்லையே என்று சொன்ன குடிமக்களைத் தண்டித்து என்று கதை போகும். அதுபோல இந்தப் பைத்தியங்கள், புது ஜீன்ஸை கிழித்துக்கொண்டு, அதையும் நல்ல நாகரீக உடை என்று அணிகிறார்களே... ஆச்சர்யம்தான்

   நீக்கு
  3. கோவணாண்டிகளை பைத்தியமாகப் பார்க்கும் திகம்பரர்கள்!

   நீக்கு
 16. பசு பதிவுகள் பசுபதி மறைந்துவிட்டாரா? அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். சிலிகான் ஆர்வி பதிவு பார்த்து நேற்றுதான் எனக்கும் தெரியும்.

   நீக்கு
 17. பல இடங்களில் வியாபாரம் தான் எடுத்திருந்த பெயரை வைத்தே காலத்தை ஓட்டுகிறது.

  இரண்டும் (ரு, று) போட்டு வ---த்து இருக்கிறார்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  எப்படி பேமஸ் ஆனது என்பதே புதிராகக் கூட இருக்கும்!

   ஆம் அதை சொல்லி இருக்கிறேனே..!

   நீக்கு
 18. தற்போது வசிக்கும் ஊரில் சுற்றுலா...! 15GB அனைத்தையும் சொல்லி விட்டது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரியவில்லையே ...   என்ன மறைபொருளாக சொல்ல வருகிறீர்கள்?

   நீக்கு
 19. காணாம் காணாம்... கவிதை காணாம்... அதனால் :

  // சூரியனின் தங்க நிற கதிர்கள்
  நடுவே அலைகள்
  அவசர ஆவேசமாகக் கிளம்பி ஓடிவந்து மதிப்பிழந்தன... //

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸூப்பர்.  நான் கூட கடல், அலை பற்றிதான் எழுத யோசித்திருந்தேன்.  ஆனால் செய்யவில்லை!

   நீக்கு
  2. பசுபதி ஐயா - கனடா - அவரது தளம் வாசித்ததுண்டு. பல நிறைய பழைய சுவாரசியமான தகவல்கள் எழுதியிருப்பார்.

   அவர் மறைவுக்கு அஞ்சலிகள்.

   கீதா

   நீக்கு
  3. 1. குதிரை - ஆமாம் அதே
   2. குயில் காக்கையின் கூட்டில் அல்லவா முட்டையிடும் காக்கை பாவம்..அதுதானே அப்பாவியா பொரிக்கும்..
   3. ஆமாம் நல்லா நீஞ்சுமே நேரிலும் பார்த்திருக்கிறேன்
   4. நரி நல்லாவே ஊளையிடுமே நிறைய
   5. எனக்குத் தெரிந்து மானை விட சிறுத்தை/ப்லாக் பாந்தர் செம ஸ்பீட் - ஒரு பைக் விளம்பரம் கூட வருமே...
   6. இது புச்சாருக்கே... அது இறந்திருப்பதையும் தின்னும்...என்றுதான் வாசித்திருக்கிறேன்
   7. ஆ! தீக்கோழி செம வீரம்...அது போடும் சண்டையை பார்த்திருக்கிறேனே....
   8. உடான்ஸ்
   9. இது தெரியலை. ஆனால் ஆந்தை பகலிலும் வரும் நு சமீபத்தில் அறிந்தேன்...அது ரெகுலராவே அப்படித்தானான்னு தெரியலை
   10. முயல் - ஆமா ஒரு தடவைக்கு 6 கூடப் போடும். பார்த்திருக்கிறேன்

   கொடுங்கோள் - ஹாஹாஹா வார்த்தை விளையாட்டு!!

   சீட்டுக்கட்டும் அதே போல!!

   கீதா

   நீக்கு
  4. ஹிஹிஹி.. விடைகள் கீழேயே இருக்கு!

   நீக்கு
  5. அது அப்புறம் தானே பார்த்தேன்...ஹிஹீஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 20. கடல் பார்க்கும் போது அழகுதான் . படங்கள் நன்று.
  இப்போது நாம் இருப்பது வீட்டில் இருந்தே கடலை பார்க்கலாம் எப்பொழுது பார்த்தாலும் .சலிப்பதில்லை.

  பேராசிரியர் பசுபதி அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள்..

  யானைகள் பற்றி நல்ல பகிர்வு. யானைகள் தாய் வழி சமூகமாகவே வாழும் என படித்திருக்கிறேன்.

  ஜோக்ஸ் ரசித்தேன். தாதா, கொடுங்கோள் சிர்ப்பை வரவழைத்தது.

  பதிலளிநீக்கு
 21. ஏகாதசியும் அதுவுமாக - நெல்லை கூட போஜனாம்ச ப்ரிய விவாதத்தில் இருக்கின்றார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஏகாத்சி விரதம் இருப்பதில்லை துரை செல்வராஜு சார். என்றைக்கு ஏதேனும் விரதம் அல்லது லேட்டாக காலை உணவு சாப்பிடலாம் என்று நினைக்கிறேனோ அன்றைக்கு அதிகமாகப் பசிப்பதுபோலவே இருக்கிறது. கவனம் உணவிலேயே இருக்கிறது.

   நீக்கு
  2. நான் சற்று கலகலப்புக்காகவே சொன்னேன்.. தவறாகக் கொள்ள வேண்டாம்..

   நீக்கு
  3. நானும் ஏகாதசி விரதம் இருப்பதில்லை.  சொல்லப்போனால் எந்த விரதமும் இருப்பதில்லை!  துரை செல்வராஜூ அண்ணா சொன்னது ஜாலியாகத்தான் என்று படிக்கும்போதே தெரிகிறதே...

   நீக்கு
  4. துரை சார்...எதையும் சீரியஸா எடுத்துக்கொள்வதில்லை. அதிலும் தெரிந்தவர்கள் எழுதுவது எல்லாம் ஜாலிக்கு இல்லை கலாய்க்க. அவ்ளோதான். சீரியஸா எடுக்க ஆரம்பிச்சிருந்தாங்கன்னா, கீதா ரங்கன்(க்கா), கீசா மேடம்லாம் என்னைக் கண்டாலே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்லியிருப்பாங்க

   நீக்கு
  5. ஹாஹாஹாஹா....நெல்லை...அதானே நாங்கள்லாம் கூல் பார்ட்டிங்க!!! (கவனம்..பாத்து வாசிங்க கண்ணாடி போட்டு.....பாட்டி இல்லை பார்ட்டிங்க அப்புறம் இங்க வந்து அதெப்படி கரெக்ட்டா உண்மைய சொல்லிட்டீங்களேன்னு கேட்கப்படாது!!!)

   கீதா

   நீக்கு
  6. ஸ்ரீராம், நெல்லை மீயும் அந்த லிஸ்ட்தான் நோ விரதம் எந்த விரதமும் இருப்பதில்லை...

   துரை அண்ணா நாங்க எல்லாம் எதையும் தப்பா எடுத்துக்க மாட்டோம்...ஜாலியா கலாய்ங்க

   கீதா

   நீக்கு
 22. ஸ்ரீராம், ஹோட்ட மத்ஸ்யாவா? (உங்க அடையார் குறிப்பு!!!) தி நகர், அடையாறில் உண்டு. திநகருக்குச் சென்றிருக்கிறேன். பல பல வருடங்களுக்கு முன்ன.

  பாருங்க இப்பல்லாம் ஹோட்டல்லயும் துண்டு போடனுமா இருக்கு!!!! முன்ன எல்லாம் பேருந்து, சினிமா தியேட்டர்லதான் இருக்கும் யாராச்சும் ஒருவர் எல்லாருக்கும் புக் பண்ணி போய் இடம் போட்டு வைக்கறதுன்னு....

  இப்ப சாப்பாடு அலை கடல் அலையை விட ரொம்ப பெரிசா இருக்கு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் அமர்ந்து சாப்பிட்டு முடிக்கும்போது ஹோட்டல் ஹால் காலியாகி விட்டது. அந்த நேரம் கூட்ட்டட்டம்.. அவ்வளவுதான்!+

   நீக்கு
  2. 87-90களில் சரவணபவனில் நம்மைச் சாப்பிட விடமாட்டாங்க. இலைக்குப் பக்கத்துலேயே எப்படா கிளம்பறோம்னு ஒருத்தர் நின்னுக்கிட்டிருப்பாரு. அதனாலேயே நான் 10:40க்கே போய் மதிய உணவு முதல் ஆளா சாப்பிட்டுடுவேன். காலம் மாறிவிட்டது. இப்போது சரவணபவன் உணவு...ஐயஹோ

   நீக்கு
  3. ஆம்.  அப்போதுதான் அப்படியான தொடக்கம் என்பதால் நமக்கு புதுமையாய் இருந்தது அல்லது நிஜமாகவே சுவை நன்றாக இருந்தது.  அதிலும் பச்சரிசியா, புழுங்கலரிசியா என்று கேட்டு கேட்பதைத் தருவார்கள்!

   நீக்கு
 23. கடல் எப்ப பார்த்தாலும் அழகுதான் அலுக்காத அழகு!! நானும் திருவான்மியூர் பீச் படங்கள் வைச்சிருக்கேன்....போன வருஷம் சென்னை போனப்ப அங்குதான் தங்கினேன்...உங்க வீட்டுக்குக் கூட வந்தேனே...அந்த வீட்டிலிருந்து இரண்டே நிமிடத்தில் கடல்!!!! ..நடைப்பயிற்சி அங்குதான் திருவான்மியூரில் தங்கிய போது....பெசன்ட் நகரை விட இது ஓகே கடைகள் கிடையாது. காக்கையின் விளையாட்டையும் வீடியோ எடுத்திருக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடலழகு, மலையழகு, ரயிலழகு, யானையழகு, பிளேனழகு!

   நீக்கு
  2. ஆஹா!!!!! ஆஹா...அதே அதே....நதியழகு, அருவியழகு, உலகமே அழகு!

   கீதா

   நீக்கு
 24. அங்கு போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லை ஸ்ரீராம்.

  //சூரியனின் தங்க நிற கதிர்கள் நடுவே அலைகள் அவசர ஆவேசமாகக் கிளம்பி ஓடிவந்து மதிப்பிழந்தன.//

  கவிதை எழுதியிருக்கலாமே ஸ்ரீராம்...

  அலைகள் பத்திய ஒரு வரியை (மதிப்பிழந்தன ) வேறு விதமாக வேறு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். உள்ளாற இருக்கு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதையே கவிதை போல நினைத்துக் கொள்ளவும்! 

   கவிதை எழுத மனமி(வரவி)ல்லை.. 

   கடலே பெரிய கவிதையாய்

   கண்முன்னே விரிந்தபோது!

   நீக்கு
 25. பேராசிரியர் பசுபதி அவர்களுக்குத் தெரிந்திருக்குமா? இத்தனைபேர் தன்னுடைய பதிவுகளை ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்று? இதுதான் எழுத்தாளர்களின் வலிமை (அவர் மற்ற பத்திரிகையிலிருந்து வெளியிட்டிருந்தாலும், அவர் வியந்த, ரசித்தவைகளையே பகிர்ந்திருக்கிறார்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தபோது அருமை தெரிவதில்லை.  இறந்தபின் சொல்லிப் பயனில்லை!

   நீக்கு
 26. விலை உயர்ந்த பெர்சியன் பூனையுடன் வந்திருந்த ஒருவரிடம் இருந்த பூனையைக் கொஞ்சுவதில் சில இளைஞிகள் ஆர்வமாக இருந்தனர். //

  ஆஹா அது கொஞ்ச அனுமதித்ததா?

  பைரவர்கள் யாரும் வரலையோ? பொதுவா அவங்க வருவாங்களே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பைரவர்கள் இருந்தாங்க..  கொஞ்சம் பயந்த பைரவர்கள்.  மேலும் எஜமான் மடியிலேயே அமர்ந்திருந்த பூனையை அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது.

   நீக்கு
  2. மேலும் எஜமான் மடியிலேயே அமர்ந்திருந்த பூனையை அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது.//

   ஹாஹாஹாஹா...ஆமாம்....பயந்தவங்களா...நான் கை பிடிச்சு அழைச்சுட்டு வருவாங்களே அந்த பைரவர்களும்னு...கேட்டது,..

   கீதா

   நீக்கு
 27. சூரியனின் தங்க நிற கதிர்கள் நடுவே அலைகள் அவசர ஆவேசமாகக் கிளம்பி ஓடிவந்து மதிப்பிழந்தன. //

  இதுக்கான படங்கள் பிரமாதம் ஸ்ரீராம் செம...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடியோ இருந்தது கீதா.. இணைக்கவில்லை.

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எடுத்துட்டு எதுக்கு எதுக்குன்னு கேட்கறேன்!!!!!!!!!!!!!இங்க கீதா மாதிரி ஆட்கள் ரசிப்பாங்களேன்னு போடணுமாக்கும்!!! இனிமே எதையும் மிஸ் பண்ணக் கூடாது வேற வியாழன் பதிவுல பொருத்தமா போட்டுடங்க ஒரு கவிதையோடு!!

   கீதா

   நீக்கு
  3. அப்போது தோன்றவில்லை.  இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று நினைத்து விட்டு விட்டேன்.  மிகச்சிறிய வீடியோ!

   நீக்கு
 28. தூரத்துப் படகு...அழகு

  இதை நானும் மெரினாவில் எடுத்திருக்கிறேன்... ஆனா இப்ப அதெல்லாம் எங்கே இருக்......சரி விடுங்க வேண்டாம்...புலம்பல்!!

  நான் வியப்பதுண்டு எப்படி மொபைல்ல எல்லாரும் ஃபோட்டோஸ் சேர்த்து வைச்சுக்கறாங்கன்னு. அதுவும் காட்டிட்டே இருப்பாங்க எனக்கு ஆச்சரியமா இருக்கும். என் மொபைல்ல....ஹிஹிஹி....எடுப்பது அபூர்வம் எடுத்தாலும் உடனே வாட்சப்பில் போட்டு கணினியில் போட்டு வைச்சிருவேன்...

  முருகன் இட்லி நிச்சயமா தவறான சாய்ஸ்!! அது ரிட்டையர்ட் அவுட்!! இல்லைனா அவுட் ஆஃப் த சாய்ஸ்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  நிறையபேர் மொபைலிலும் கூகுள் டிரைவிலும் படங்கள் வைத்திருப்பார்கள்.  முருகன் இட்லி கடை காலம் கடந்த ஞானோதயம்!

   நீக்கு
 29. பெயரினால் ஓடுபவைதான் அதிகம் ஸ்ரீராம்...காலி பெருங்காயடப்பா!!!

  அந்த மாதா சர்ச் அழகு. நான் பல முறை சென்றிருக்கிறேன்.

  தேங்காய்ப்பூ ரொம்பப் பிடிக்கும்!!! கொய்யா படம் தேங்காய்ப்பூ படம் எங்கே?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...  கொய்யா பாடமெடுத்து போட்டிருக்கலாமோ...   தேங்காய்ப்பூவும் எடுக்கவில்லை!  பெசன்ட் நகர் சர்ச் ரொம்ப பேமஸ்.

   நீக்கு
  2. இங்கயும் அந்த தாய்லாந்து கொய்யா (இங்கேயே விளைகிறதாம்) நிறைய வந்தது. 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் கிலோ வரை. அதில் ஒருநாள் கொஞ்சம் சைஸ் பெரிய கொய்யா (எக்ஸ்போர்ட் வெரைட்டியாம்) கிலோ 60 ரூபாய்னு எனக்கு 1.6 கிலோ 100 ரூபாய்க்கு வாங்கினேன். உள்ளே இளம்சிவப்பு. அதைப்போன்ற கொய்யா என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. கொய்யா பிடிக்காத பையனும் சாப்பிட்டான். மறுநாள் கிடைக்கவில்லை. இங்க பெங்களூர்ல எல்லா விதமான பழங்களும் கிடைக்கிறது, அதிக விலை இல்லாமல். இப்போது சீட்லெஸ் பச்சை திராட்சை 60-70 ரூபாய்க்கும், கறுப்பு 100 ரூபாய்க்கும், கறுப்பிலேயே ரொம்ப நல்லா இருக்கும் திராட்சை 180க்கும் விற்கறாங்க.

   நீக்கு
  3. தாய்லாந்து கொய்யா ரொம்ப சுவைதான்.  ஆனால் ஒரிஜினல் கொய்யா போல இல்லை.  பேரிக்காயோடு கலப்புமணம் புரிந்தது போல இருக்கிறது.

   நீக்கு
  4. ஆமா இந்தக் கொய்யா செம சுவை...இங்கும் வாங்குவதுண்டு. நெல்லை சொல்லியிருப்பது போல் 60ரு- சிலப்போ 50க்குக் கிடைச்சது...100 வரையும் போகும். இளம் சிவப்பு....கொய்யா மணம் கொஞ்சம் குறைவோ என்று தோன்றியது.

   ஸ்ரீராம் ஆமாம் அது கலப்புதான்....கொய்யா என்றால் கொல்லிமலை கொய்யா சாப்பிடணும்...

   கீதா

   நீக்கு
  5. இப்பதான் வந்து செக் பண்ண முடிந்தது....என் கருத்து நான் போடாதது ஏதாச்சும் வந்திருக்கோ என்று!!!!!!!! கூடவே பதில்களும் இப்பதான் பார்க்க முடிந்தது

   கீதா

   நீக்கு
  6. //கொய்யா என்றால் கொல்லிமலை கொய்யா சாப்பிடணும்...//

   கொல்லிமலைக்கொய்யா!  நல்ல ரைமிங்கா இருக்கு.  சாப்பிட்டதில்லை.  ஆனால் உடனே ஒரு பாட்டு நினைவுக்கு வருது...  

   "கொல்லிமலை மான்குட்டி எங்கே போறே..."

   நீக்கு
 30. தெய்வத்தின் குரல் - அதே அதே...எனக்கு இந்த விளக்கம் மிகவும் பிடிக்கும். மாபெரும் சக்தி ஒன்றே!!

  //மேலும், குட்டி ஈன்ற யானையை, அதற்கு நெருக்கமான உறவு முறையுள்ள யானைகள்தான் காவல் காக்கும்.//

  எவ்வளவு ஒரு நல்ல விஷயம் இல்லையா....அதற்கு அடுத்த வரிகளும் ரசனை...

  அவற்றின் பிளிறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றினர். யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத் துறையினர் முயன்றனர். ஆனால், யானைகள் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. பின்னர், அவற்றின் வழித்தடத்தைக் கண்டறிந்து, குட்டி யானையை வனப் பகுதிக்குள் கொண்டுசென்று, யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிட்டனர். குட்டியும் அந்த கூட்டத்துக்குள் சென்று, தாயுடன் சேர்ந்துகொண்டது. ஆனால், என்ன காரணத்தாலோ, யானையே குட்டியை சேர்க்காமல் துரத்தியடித்தது தாய் யானை. இதில், அந்த குட்டி யானை இறந்தே விட்டது. //

  மனதை நெகிழ வைத்துவிட்டது, ஸ்ரீராம்....ஒரு திரைப்படம் போல இருக்கு!!!! பாவம் அந்தக் குட்டியானை. வாசிக்கும் போது கண்ணில் நீர் வந்துவிட்டது...மனித வாடை பட்டிருச்சுனா அதுங்க சேர்த்துக் கொள்வது சிரமம்....

  கீதா  பதிலளிநீக்கு
 31. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயிலில் பர்லியாறு அருகில் குட்டி யானை ரயில்வே லைனைக் கடக்கும்போது ரயில் மோதியதில் குட்டிக்கு காயம். காலை 8-30 க்கு நடந்த இந்த சம்பவம்.... மாலை 5-00 மணிக்கு அதே ரயில் பர்லியாறு பக்கம் வரும்போது ரயில் ஓட்டுநர் ரயிலை தூரத்தில் நிறுத்தி விட்டார்.அவர் கண்ட காட்சி: காலையில் குட்டி அடிபட்ட இடத்தில் 5 யானைகளுக்குமேல் கூடி......வரட்டும் ரயில் நம்மைத் தாண்டி எப்படிப் போகிறது எனப் பார்ப்போம் என்ற பாணியில் நின்றுகோண்டிருந்ததுதான்.//

  அதானே!!! எங்க ஏரியாக்குள்ள வந்து எங்களையே அடிக்கிறியான்னு!!! ரசித்து வாசித்தேன்...யானைப்பகுதியை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த சம்பவம் மறைந்த எங்கள் மாமா பேஸ்புக்கில் சொல்லியிருந்த சம்பவம்.

   நீக்கு
 32. யானைகளை நிம்மதியாக வாழ விடுங்க!! //

  ஆமாம் பின்ன...கடைசி லைன் டிட்டோ டிட்டோ......என் கோஷமும் இதோடு சேர்த்துக்கலாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே.. அதே... வாழவிடுங்க... அதன் வழியில் குறுக்கிடாதீங்க...

   நீக்கு
 33. 1. லாகவம் தான் சரி. நான் இப்படித்தான் சொல்வதுண்டு. ஆனால் சரி என்று சொல்வது அதனால் அல்ல....நான் வலையில் தேடினேன் இந்தச் சுட்டி கிடைத்தது
  https://old.thinnai.com/?p=60706214

  2. பத்மா, பூரி - நானும் நினைத்ததுண்டு....யோசித்ததுண்டு....ஏன் இப்படி பத்மா இரண்டும் ஓகே ஆனால் எனக்கு ப - தமிழ்தான் வரும், BHA வருவதில்லை. அது போலத்தான் பூரி....ஆனால் எல்லாரும் BOORI என்றே சொல்றாங்க.

  4. கறிஞர், குரைஞர் வித்தியசம் - அட்வகேட், லாயர் என்பது போல. ஒன்றுதான் என்றாலும் சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவரை வழக்கறிஞர் எனவும் கோர்ட்டில் வாதாடும் வழக்கறிஞர்களை வழக்குரைஞர்களாகவும் அர்த்தப்படுத்திக் கொள்வதாக நான் சொல்லலை...இணையத்தில் அறிந்தது.

  5. நாதஸ்வரம் என்பதே சரி என்பது என் சின்ன அறிவு சொல்கிறது நாதம் எழுவதால்....நாகஸ்வரம் - இச்சொல் அதிகம் கேட்டதில்லை

  6. மைதாவில் லேயர் லேயராகச்செய்வது பரோட்டா என்றாலும் புரோட்டான்னு பெரும்பாலும் எழுதியிருக்காங்க ஹோட்டல்களில் மலையாளத்தில் புரோட்டான்னுதான்....பராத்தா கோதுமை மாவில் செய்வது...அதாவது வடக்கில் பராத்தா/பராந்தா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. - செங்கோட்டை ஸ்ரீராம் நாகஸ்வரமே சரி என்று சொல்லி இருந்தார்.  

   - மதுரையில் நாங்கள் அதை புரோட்டா என்போம்!

   நீக்கு
 34. //அவர்களிடம் இருக்கும் உணவு வகைகள் அனைத்தும் பஃபே ஸிஸ்டத்தில் நாம் எடுத்துக்கொள்ள முடியும் என்று. // - 225 ரூபாய்க்கு எப்படி எல்லா உணவையும் எடுத்துக்க விடுவாங்க? இங்க 850 ரூபாய்க்கு ஒரு பஃப்ஃபே இருக்கிறது. அதில் ஸ்டார்டர்கள், ஜூஸ் அவர்களே கொண்டுவந்து கொடுப்பாங்க (எவ்வளவு கேட்டாலும் கொண்டுவருவாங்க). மற்ற ஐட்டங்கள் ஏகப்பட்டது பஃபே முறையில். காசு இவ்வளவு கொடுக்கறோமே என்று பனீர் ஸ்டார்ட்டரை கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டதால், கால் சாப்பாட்டிலேயே நிறுத்திக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. அப்புறம் எதையும் நான் சுவைக்கவில்லை. என் பெண்ணோ, எல்லோரும் ஜாலியா எஞ்சாய் பண்ணத்தான் இந்த மாதிரி இடத்துக்கு வருகிறோம். சும்மா ஒன்றிரண்டு ஐட்டம் அல்லது எல்லாவற்றிலும் 1/4 அல்லது 1 ஸ்பூன் என்றுதான் சுவைத்துப்பார்க்கணும் என்றாள். (நான் எப்போதுமே அவங்களைப் பற்றிச் சொல்வேன், 50 ரூபாய் கொடுத்துவிட்டு 5 ரூபாய்க்கு சாப்பிடறீங்கப்பா என்று)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் சென்றது  625 ரூபாய்.  இங்கும் பன்னீர் ஸ்டார்ட்டர்ஸ், நகெட்ஸ் எல்லாம் உண்டு.  வெல்கம் ட்ரிங்க் உண்டு.காய்கறி, பழ வகை சாலட் உண்டு.  கடைசியாக பாயசம், ஐஸ்க்ரீம், கேக் உண்டு...   என்ன இருந்து என்ன...   எதிலும் சுவை இல்லையே!

   நீக்கு
  2. 625 ரூபாய்க்கு குழம்பு ரசம் சாதமா? (ஜனவரி 1 அன்று சென்னையில் ஒரு மண்டபத்தில் சாப்பிட்ட 750 ரூ சாப்பாடு நினைவுக்கு வருது). சுவை இல்லைனா எத்தனை கொடுத்தும் வேஸ்ட்தான். நல்லவேளை ரெஸ்டாரண்ட் பெயர் தெரிந்துவிட்டது. நம் காசு மிச்சம்

   நீக்கு
  3. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கும் ஐட்டங்கள் தவிர நூடுல்ஸ், வெண்டைக்காய் மசாலா, ரசம், சாம்பார், வெள்ளை சாதம், தயிர் சாதம் ஏதோ ஒரு பொரியல், ஏதோ ஒரு கூட்டு ஆகியவை இருந்தன!!

   நீக்கு
 35. உங்கள் கருத்தை வெளியிடும் பொழுது பிழை ஏற்பட்டது என்று மட்டுறுத்தல் அடம் பிடிக்கிறது. என்ன செய்ய? சரி, நாளை ஸ்ரீராமிற்கு சொல்லிக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துகள் வெற்றிகரமாக வந்திருக்கின்றன.  ஏதாவது விடுபட்டிருக்கிறதா என்று நீங்கள்தான் சோதித்துக்கொள்ள வேண்டும்!

   நீக்கு

 36. பசுபதி ஸார் தளம் அதிர்ஷ்ட வசமாய் வாசிக்கக் கிடைத்ததிலிருந்து அவரின் வாசகனாய் இருந்திருக்கிறேன். என் சந்தேகங்களைக் கேட்டு விவரங்களைப் பெற்றுமிருக்கிறேன்.

  70 வருஷத்திற்கு முன்னர் கல்கி பத்திரிகையில் வெளிவந்த ஒன்றை வெளியிட்டிருந்தார் என்றால் அந்த இதழ், கல்கி அலுவலகத்திலேயே அவர்கள் சேமிப்பில் இருக்குமா என்பதே சந்தேகம். இது தான் ஐயா அவர்களின் பெருமை.

  அன்னார் மறைவுச் செய்தி எதிர்பாராதது. ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். பேரிழப்பு. அவர் தளத்தில் கமெண்ட்ஸ் என்று நான் பார்த்ததில்லை. நான் இட்ட ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் வெளியானதில்லை.

   நீக்கு
 37. தெய்வத்தின் குரலை எபியில் கேட்டதில் ரொம்ப சந்தோஷம்.
  தொடரட்டும் உங்களது இப்படியான பணிகள்.

  பதிலளிநீக்கு
 38. சமீபத்திய 'றெக்கை கட்டிப் பறக்குதையா' மாதிரி, குட்டி யானை பற்றிய தகவல் வாசித்ததும், யானை டாக்டர் நினைவு யாருக்கும் வரவில்லை என்று யோசிக்கிறேன்.
  பின்னூட்டங்களில் ஒரே மாதிரியான சவசவத்த போக்குகள் மாறினால் நன்றாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானை டாக்டர் மட்டுமல்ல, இன்னும் சில யான தகவல்களும் நினைவுக்கு வந்தன.

   நீக்கு
  2. அப்பப்போ அது அது தொடர்ச்சியாய் வரும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது தான் எழுத்தின் சிறப்பு. என்பதால் இதைச் சொல்லத் தோம்றியது.

   நீக்கு
  3. பின்னூட்டங்களைப் போடுவதில் அவர் ஒரு பாலிஸி வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்.
   என் பின்னூட்டங்களைப் போட்டிருக்கிறார். அதே மாதிரி திருப்பூர் ஜோதிஸ்ரீ பின்னூட்டங்களையும் பார்த்த நினைவு.

   நீக்கு
  4. ஓஹோ...  சுத்தானந்த பாரதி பற்றி அவர் எழுதி இருந்தபோதும் வேறு இரண்டு சமயங்களிலும் பின்னூட்டமிட்ட நினைவு.

   நீக்கு
 39. / முக்கியமான இடத்தில கடை வைத்திருப்பதால் எப்படியும் கூட்டம் வரும் என்கிற நம்பிக்கை போலும்./ உலகெங்கும் மெக்டொனால்ட் வியாபார உத்தி இதுதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய கடைகள் இதை பின்பற்ற ஆரம்பித்து விட்டன.  அல்லது முக்கியமான இடங்களில் கடை அமைந்திருப்பவர்கள் பெரும்பாலும் தரம் பற்றிக் கவலைப் படுவதில்லை!

   நீக்கு
 40. ஊர் சுற்றிய அனுபவங்கள் சுவாரசியம். யானைகளைப் பற்றிய தகவல்கள் நன்று. பேராசிரியருக்கு அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!