திங்கள், 6 பிப்ரவரி, 2023

லெட்யூஸ் (Lettuce) வடை : சியாமளா வெங்கட்ராமன் ரெஸிபி

 

லெட்யூஸ் வடை

இன்று எங்கள் வீட்டில் சாலட் செய்வதற்காக லெட்யூஸ் வாங்கி வந்தார்கள்.  சாலட் போக மீதி நிறைய லெட் யூஸ் மிகுந்து விட்டது.

'என்ன செய்யலாம்' என்று என்னிடம் கேட்க, உடனே நான் அதை வைத்து வடை செய்யலாம் என்றேன் ஓகே எல்லோரும் கூறினார்கள் அதைப் பற்றி இப்போது பார்ப்போம்

 வடை செய்வதற்கு தேவையான பொருட்கள்

 கடலைப்பருப்பு ஒரு கப்
 துவரம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் ( அவரவர்கள் காரத்திற்கு தகுந்தார் போல்)
 உப்பு தேவையான அளவு
 பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லி தழை கொஞ்சம்
 லெட்யூஸ் தேவையான அளவு பொடிப்பொடியாக நறுக்கியது


 செய்முறை

கடலைப்பருப்பு துவரம்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்தேன். அதை நன்றாக வடிகட்டி அத்துடன் மற்ற பொருள்களை சேர்த்து கரகரவென்று அரைத்தேன். ஒரு வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடானதும் வடை தட்டி போட்டு பொன்னிறமானதும் இரண்டு பக்கம் திருப்பி போட்டு எடுத்தேன். இந்த வடை மொறு மொறுவென்று மிகவும் ருசியாக இருந்தது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி நன்றாக இருந்தது. 


= = = = = =


  

11 கருத்துகள்:

 1. இந்த நாளும் இனிய நாளே..

  எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. லெட்யூஸ் நீர்ச்சத்து மிகுந்தது.. பச்சையாக பசுமை மாறாமல் உண்பதற்காகவே இது..

  இருபதாண்டுகள் அரேபிய சமையல் கூடங்களில் பணி புரிந்திருக்கின்றேன்..

  மூன்று வேளையிலும் உணவின் போது லெட்யூஸ் பலவகையான சாலட்களில் பயன் படுத்தப்படும்..

  அங்கேயெல்லாம் இல்லாத செய்முறை!..

  பதிலளிநீக்கு
 3. ரெசிப்பி நல்ல ரெசிப்பி....நன்றாக வந்திருக்கிறது.

  லெட்யூஸ் அருமையான கீரை. சத்துள்ள கீரை. அதை வாங்கி வந்ததும் செய்துவிடுவது நல்லது. இல்லை என்றால் வாடினால் அதன் நீர்ச்சத்து போய்விடும். குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதும் நல்லதில்லைதான்.

  கீதா

  நல்ல ரெசிப்பி.

  பதிலளிநீக்கு
 4. லெட்யூஸ் வடை அருமை.
  செய்முறையும் படமும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. பச்சையாக சலாட்களில் பயன்படுத்தப் படும் இலை .
  எமது சமையல் வடையுடன் கலந்து தந்துள்ளீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
 6. என். ரெசிபியை பாராட்டிய அனைவருக்கும். நன்றி..

  பதிலளிநீக்கு
 7. என்ரெசிபியை பாராட்டிய அனைவருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!