9.8.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள்:: அத்தாளநல்லூர் - திருநெல்வேலி:: நெல்லைத்தமிழன்

 

கஜேந்திர மோக்ஷம் நடந்த இடமான அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயிலைப் பற்றித்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு அழகிய கோயில், புராதானமான கோயில்.. ஆனால் அப்போதிருந்த ஊர் மக்கள் இப்போது இல்லையே, பெரும்பாலானவர்கள் புலம் பெயர்ந்துவிட்டார்களே என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

செல்வத்தைத் தேடிச் சென்று, பிறகு அது தரும் வசதிகளைக் கண்டு, பிறகு வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று, கடைசியில் நமக்கு வசதியான ஒரு நகரத்தில் வாழ்வின் இறுதியில் இருப்பது என்ற நிலை வந்துவிட்ட து. மனது கேட்காத போது நம் முன்னோர்கள் இருந்த ஊர் கோயிலை   ஒரு நாள் அவசர அவசரமாக தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுகிறோம்.

இந்த ஆதங்கம் ரொம்ப வருடங்களாகவே என் மனதில் இருந்து வருகிறது. சின்ன வயதில் வாழ்ந்த ஊர், அந்த ஊரில் உள்ள கோயில் நம் மனதில் பதிந்திருக்கும். தமிழகத்தில் 80 வைணவ திவ்யதேசங்கள் (மற்றும் சைவ பாடல் பெற்ற தலங்கள்) உண்டு. இவை எல்லாவாற்றிர்க்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நெடிய வரலாறு உண்டு. அரசர்கள் கோயில் நன்றாக இருக்கவேண்டும் என்று திருப்பணி செய்தது மட்டுமன்றி, புதிதாக கோயில் கட்டினாலும் அதனைச் சுற்றி வேதம் ஓதும் நல்லோர்களைக் குடியமர்த்தி, சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் பெயரிட்டு, நிவந்தங்கள் வழங்கி, இறையிலி நிலங்கள் கொடுத்து தங்களால் முடிந்த அளவு ஊர்களை வளர்த்திருக்கின்றனர். கடந்த நூறு வருடங்களில் நம் தலைமுறை, அந்த அந்த ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து, அப்படிக் கிளம்பும்போது, பண ஆசை மாத்திரம் குறையாமல், யார் அதிகப் பணத்திற்கு வீட்டை வாங்கிக் கொள்வார்களோ அவர்களுக்கு விற்றுவிட்டு, பிறகு குற்ற உணர்ச்சியால் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஊரை வந்து பார்த்துவிட்டு, நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம் என்று போலியாக திருப்திப்பட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு தலைமுறையும், (நான்கு தலைமுறைகளுக்கும் மேல் முன்னாலிருந்து), ஏதோ காரணத்தால் புலம் பெயர்ந்து, பிறகு அரசு வேலை என்று ஒன்று வந்த பிறகு, தனிக் குடித்தனம் என்று சென்று, பிறகு அடுத்த தலைமுறை சௌகரியங்களுக்காக, ஓரிரண்டு குழந்தைகளுடன் நிறுத்தி, அதற்கு அடுத்த தலைமுறை வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்து, மேற்கத்தைய நாடுகள் என்றால் முற்றிலும் புலம் பெயர்ந்து என்று நம் வாழ்க்கை முறை மாறிவிட்டது. இதற்கிடையில் சிலர், தங்களை தங்கள் வாரிசுகள் கைவிட்டுவிட்டார்களே என்று எண்ணுகின்றனர்.  ஒரு தலைமுறை தங்கள் சௌகரியம் என்று நினைத்துச் செய்ததை, அடுத்த தலைமுறை அவர்களுடைய சௌகரியம் என்று எதை நினைக்கிறார்களோ அதைச் செய்கின்றனர். நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்ள, கணியன் பூங்குன்றனார் துணையை நாடி,

யாதும் ஊரே யாவரும் கேளிர்  என்று சொல்லி திருப்திப்பட்டுக்-கொள்கிறோம். சரி இது கிடக்கட்டும்.

கஜேந்திர மோக்ஷம் கதை, ஸ்ரீமத் பாகவத த்தில் வருகிறது என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன்.  கஜேந்திர மோட்சத்தை திவ்யப் பிரபந்தத்தில் பல இடங்களில் ஆழ்வார்கள் குறிப்பிட்டுள்ளனர். அதில் இரண்டு பாசுரங்கள்.

முதலாவது, தொண்டரடிப்பொடி ஆழ்வாய் இயற்றிய திருமாலையில் வரும் பாசுரம் (28வது பாசுரம்)

உம்பரால் அறியலாகா* ஒளியுளார் ஆனைக்காகி,*

செம்புலால் உண்டு வாழும்* முதலைமேல் சீறி வந்தார்,*

நம்பரமாயதுண்டே?* நாய்களோம் சிறுமை யோரா,*

எம்பிராற்கு ஆட்செய்யாதே* எஞ்செய்வான் தோன்றினேனே

பொருள்: பிரம்மா, சிவன் போன்ற தேவர்களாலும் முழுமையாக அறிய முடியாத, பிரகாசமான பரமபதத்தை தன் வாசஸ்தலமாகக் கொண்ட எம்பெருமான்,  கஜேந்திர ஆழ்வானுக்காக,  செந்நிற மாமிசத்தை உண்டு வாழும் முதலை மீது கோபத்துடன் விரைந்து வந்து காப்பாற்றினார். நாய் போன்ற அற்பமான சிறுமைக் குணங்களை ஆராயாமல் தன் அடியவர்களைக் காப்பாற்றும் தன்மை அவனிடம் உள்ளபோது , நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு நமக்கு உண்டோ? கிடையாது. இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்யாமல், நான் இருப்பதை எண்ணும்போது, நான் எதற்காக இந்த மானுடப் பிறவி எடுத்தேன் என்ற வருத்தம் வருகிறது.

விளக்கம்: உம்பரால் அறியலாகா – தேவர்களாலும் அறிய இயலாத,  ஒளியுளார் – பிரகாசத்தைக் கொண்ட இடத்தை இருப்பிடமாகக் கொண்டவன், இப்படிப்பட்ட மேன்மை பொருந்தியவன், யாருக்காக கோபத்துடன் வெகு வேகமாக வந்தான்? சாதாரண முதலைக்காக. தன்னுடைய அடியவர்களுக்கு ஏதேனும் கெடுதல் என்றால் அவர்கள் தன்னை அழைக்கும்போது வெகு வேகமாக வந்து காப்பாற்றுவான். தன் சங்கல்பத்தாலேயே ஒருவரை அழிக்கும் வல்லமை பெற்றவன், பிரகலாதனின் வாக்கு பொய்யாமல் இருக்க நேரிலே வந்தது மட்டுமன்றி, கோபத்தினால் இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தான். அதுபோல, இங்கும், தன்னுடைய வாகனமான கருட பக்ஷியின் மீது ஏறி, கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்தான்.  நம்பரமாயது உண்டோ? – நம்மைக் காத்துக்கொள்ளும் பொறுப்பு நம் கைகளில் இல்லை. அது அந்த எம்பெருமானின் பொறுப்பு.

 அடுத்தது, பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியில் 99ம் பாசுரம்.

##தொட்ட படை ட்டும், தோலாத வென்றியான்,*

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,** - குட்டத்துக்

கோள் முதலை துஞ்சக், குறித்தெறிந்த சக்கரத்தான்*

தாள் முதலே நங்கட்குச் சார்வு.                                                                              

பொருள்: சங்கு, வில், கதை, கேடயம், சக்கரம், ,  வாள், மலர், அம்பு என  எட்டு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் திருமால், எப்போதும் தோல்வியையே அறியாத, வெற்றித் திருமகளைத் தன் மார்பில் கொண்டவர். காஞ்சீபுரம் அட்டபுயகரத்தில் எழுந்தருளியிருக்கும் அந்த எம்பெருமான், ஆழமான நீரையுடைய குளத்தில், யானையைப் பிடித்துக்கொண்டிருந்த முதலையை அழிப்பதற்காக, இலக்கு தப்பாமல் தன்னுடைய சக்கரத்தை ஏவினான். அந்த எம்பெருமானின் திருவடிகளே எங்களுக்குப் பற்றுக்கோடு என்று ஆழ்வார் திருமாலைச் சரணம் புகுகிறார்.

விளக்கம்: அட்டபுயகரத்தான் -  சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் அட்டபுயகரம் என்ற வைணவ திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் அட்டபுயகரத்தான் என்று அழைக்கப்படுகிறார். வலது புறமுள்ள கைகளில் சக்கரம், வாள், மலர், அம்பு என்று நான்கு ஆயுதங்களையும், இட து புறமுள்ள கைகளில் சங்கு, வில், கதை, கேடயம் என்ற நான்கு ஆயுதங்களையும் கொண்டிருக்கிறான்.  இந்தக் கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் எழுந்தருளியிருந்ததாகவும், காளியை அடக்குவதற்காக எட்டுக் கரங்களுடன் தோன்றியதால், திருமங்கையாழ்வார் அட்டபுயகரத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமைதான் பாசுர விளக்கம் என்றால், ஞாயிறு கோயில் புகைப்படங்களுக்கான பகுதியிலும் பாசுர விளக்கமா என்று நினைக்கவேண்டாம். அந்தத் தலத்தின் புராண நிகழ்வைக் குறிப்பிடும் பாசுரங்கள் என்பதால் பகிர்ந்தேன்.  முதலில் இன்றைய பகுதியில், பாண்டிய அரசனாக ஆன சோழ வாரிசுகள் பற்றித்தான் எழுத நினைத்திருந்தேன். அதனை அடுத்த வாரம் எழுதுகிறேன்.

 

அட்டபுயகர கோவில், காஞ்சீபுரம்.

இது நான் 2019ல் இந்தக் கோயிலுக்குச் சென்றபோது எடுத்த படம். நான் பல முறை இந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.

 

அட்டபுயகரப் பெருமாள் மூலவர்

இப்போது அத்தாளநல்லூர் கோவில் படங்களைக் காண்போம்.

 

 

 

 

 

 

 

 

Be On The Road | Live your Travel Dream!: Athalanallur ...

இணையத்தில் பெற்ற இந்தப் படத்தில் மூலவர் மிக நன்றாகக் காட்சியளிப்பதாகத் தோன்றியதால் இந்தப் படத்தைப் பகிர்கிறேன்.

 

 

 

 

 

 

 

கோயில் பின்புறம் தாமிரவருணி நதி

 

கோயிலின் பின்புறம் உள்ள நரசிம்மர் சன்னிதி.

 

 

 

 

 

கோயிலை ஒட்டி இடது புறத்தில் இருக்கும் மண்டபம் மற்றும் அதன் சுற்றுச் சுவர்கள். பாழடைந்து இருக்கிறது. ஆனால் முழுவதும் கல்வெட்டுகள்.

இந்தக் கல்வெட்டுகளையெல்லாம் படியெடுத்தார்களா, அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் என்ன என்ன, நிலங்களை யார் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க யாருக்கு நேரம் இருக்கும்?

இன்னும் சிறிது வருடங்களில் இந்த மண்டபமும், கல்வெட்டுகளும் இருக்குமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

அருமையான, பழைமை வாய்ந்த கோயில் ஒன்றைப் பற்றி அறிந்துகொண்டீர்களா? திருநெல்வேலிச் சீமைக்குச் சென்றால் இந்தக் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். நாங்கள் பொதுவாக, காலையில் வெகுசீக்கிரம் மன்னார்கோயிலுக்குச் சென்றுவிட்டு, பிறகு அத்தாளநல்லூர், அதன் பிறகு கல்லிடைக்குறிச்சி (முடிந்தால் அதன் அருகிலுள்ள பிரம்மதேசம்) என்று எங்கள் பயணத்தை அமைத்துக்கொள்வோம்.

இப்படி எழுதும்போது எனக்கு, நாம் ஏன் பிரம்மதேசம் கோயிலையும் இந்தத் தொடரிலேயே எழுதிவிடக்கூடாது என்று தோன்றுகிறது. சில கோயில்களுக்குச் சென்றாலே, அதன் புராதானப் பழைமை நம் முகத்தில் அறைவதுபோலப் புலப்படும்.  எல்லாக் கோயில்களிலும் அப்படித் தோன்றுவதில்லை (பலப் பல பழைய கோயில்களுக்குச் சென்றிருந்தபோதும் சில கோயில்களில்தான் அப்படிப்பட்ட உணர்வு வரும். அதில் ஒன்று பிரம்மதேசம் கோயில்)

அடுத்த வாரம் வேறு ஒரு கோயிலைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  

(தொடரும்) 

69 கருத்துகள்:

  1. புலம் பெயர்வதால் நம்முடைய புராதன பெருமை வாய்ந்த கோவில்களை பராமரிக்க முடியாமல் போவது சோகம்தான். கையறு நிலைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். வேறு எந்த வகையிலும் இதனை ஈடு செய்ய இயலாது

      நீக்கு
  2. பதில்கள்
    1. சரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜ் சார்

      நீக்கு
  3. கோவில் படங்கள் மற்றும் விளக்கங்கள் எப்போதும் போல் சிறப்பாக இருக்கின்றன.
    கோவில் சிற்பங்களில் இருக்கும் ஆண்களின் காதுகள் நீண்டு தோள் வரை தொங்குகிறதே? காதுகளில் அணிந்திருக்கும் குண்டலங்களா அல்லது காதை வளர்த்திருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குண்டலங்கள் காரணமாக. இயல்பாக காது வளர்க்கும் வழக்கம் உண்டு

      நீக்கு
  4. தாமிரவருணி மாசுபாடமல் சுத்தமாக இருப்பது பார்க்க மகிழ்ச்கியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் அப்படி இல்லை. கீழநத்தத்தில் தினமும் ஆற்றுக் குளியல். இப்போ அடையாளமே தெரியவில்லை

      நீக்கு
  5. அத்தாள நல்லூர் பெருமாள் தரிசனம் அருமை..உண்மை

    பதிலளிநீக்கு
  6. கலைப் பொக்கிஷங்களைத் துறந்து விட்டு மக்கள்
    புலம் பெயர்ந்த சோகம் நெஞ்சை வருத்துகின்றது..

    நல்ல வேளை மதம் மாறி விட்டு கையில் கடப்பாரையை எடுக்காமல் இருந்தனரே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலம் பெயர்ந்துவிட்டாலே அடுத்தடுத்த தலைமுறை மாறித்தானாகும்

      நீக்கு
  7. இங்கு அமெரிக்காவில் முன்பிருந்த மாநிலத்திலிருந்து வேறோரு மா நிலத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறோம். முன்பிருந்த மாநிலத்தில் இருந்தது போலவே இங்கும் நிறைய கோவில்கள். மனத்திற்கு நிறைவான தரிசனம். தமிழ் பேசும் குருக்கள் நிறைய. இடங்கள் தாம் மாறுகின்றனவே தவிர
    அதே தெய்வ தரிசனம். கற்றளிகளில் செதுக்கப்பட்ட தெய்வ சிலைகள்..
    அதே மாதிரியான குதையேதும் இல்லாத அலங்காரங்கள். அர்ச்சனைகள்.
    சமஸ்கிருத தெளிவான உச்சரிப்பில் அர்ச்சனை. திருமந்திரங்கள் ஓதுகிறார்கள். அர்ச்சனைக்குத் தேவையான அத்தனை பொருள்களும் கோயிலிலேயே கிடைக்கின்றன. ஒரு திருநாளை விட்டு விடாமல் அத்தனையையும் கொண்டாடுகிறார்கள்..
    ஊர் விட்டு ஊர் வந்தால்... என்று நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து இதைச் சொல்லத் தோன்றியது நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்.எல்லா நாடுகளிலும் நடப்பதுதான் ஆனால் காலப்போக்கில் நீர்த்துவிடும் இல்லாமலிருந்தால் ரொம்ப நல்லது

      நீக்கு
    2. ஃப்ரான்சில் எஞ்சிய இந்துக்கள் சரஸ்வதி பூஜை மற்றும் சரஸ்வதி வழிப்ட்டை சிதைந்த வடிவத்தில் கொண்டாடுகிறார்கள். தாய்லாந்து இந்தௌநேஷியாவிலும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மூன்றாம் நான்காம் தலைமுறைகளும் வழிபாட்டைத் தொடர்ந்தால் நல்லது

      நீக்கு
    3. ஒரு இஸ்லாமியர் (சுல்தானா?) நினைவில் இல்லை. சரஸ்வதியை வழிபட்டுப் புத்தகம் எழுதியதையும் வணங்குவதற்கு வரைந்திருந்த சரஸ்வதி உருவையும் நேத்திக்கோ/இன்னிக்கோ முகநூலில் பார்த்தேன். சரியாக் குறிச்சுக்கலை என்பதால் நினைவில் வரலை. தேடிப் பார்க்கணும். சரஸ்வதி வழிபாடு தொன்மையானது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  8. தமிழகத்தில் சிவன், பெருமாள், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் போன்ற தெய்வத்திருவுருக்களை தரிசிக்கும் பொழுது ஒவ்வொரு தெய்வத்திற்கும் மனதில் கோர்த்து வைத்து பழக்கப்பட்ட ஸ்லோகங்கள் போன்ற வரிகளால்
    அமெரிக்காவிலும் வழிபடுவேன். தமிழகக் கோயில்களிலும் அமெரிக்க கோயில் திருத்தலங்கள் பெயர்களைத் தவறாமல் சேர்த்துக் கொண்டு மனம் ஒன்றி வழிபடுவேன்.
    இந்த மாதிரியான வழிபாடு என் மனதில் ஒன்றி பழக்கப்பட்டு விட்டதால்
    தேசத்திற்கு தேசம் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் தெய்வத்திருவுருங்கள் எந்த வித வேறுபாடும் கொள்ளாமல் அப்படி அப்படியே மனதில் படிந்து விட்டது.
    நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார் தெய்வம் ஒன்றே நம் மனதில் பக்தி உணர்வுடன் எங்கு வழிபட்டாலும் பலன் நமக்கு. இதில் சந்தேகமே வேண்டாம்

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. , வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயில் பற்றிய விவரங்களும், படங்களும் அருமை. பழைய கால மண்டபம்,மற்றும் கோயிலின் பக்கம் தமிரபரணி ஆறு ஓடும் படமும் அருமை.

    நிறைய கல்வெட்டுக்கள் இருக்கே! ஆராய்ச்சியாளர்கள் இதை படித்து அதில் உள்ளதை பற்றி சொல்லவில்லையா?
    கல்வெட்டுகள் உள்ள சுவர் பக்கம் செடிகள் அடர்ந்து கிடக்கே! அந்த பக்கம் யாரும் போக மாட்டார்கள் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவை என்ன மாதிரியான கல்வெட்டுகள் என்று தெரியலை இதுபோல ஸ்ரீரங்கத்தில் பல ஓலைச்சுவடிகள்

      நீக்கு
  12. மூலவர் தரிசனம் கிடைத்தது, நன்றி.
    திருநெல்வேலி , பிரம்ம தேசம், கல்லிடைகுறிச்சி எல்லாம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சொந்தங்கள் இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல எல்லோரும் வேலை நிமித்தம் வேறு வேறு ஊர்களில் வசிப்பதால் தூரத்து சொந்தங்களை பார்க்க முடியாமல் போகிறது.

    சொந்த ஊர் கோயிலுக்கு முடிந்த போது போய் வந்தால் நல்லதுதான்.

    மூலவர் படத்துக்கு கீழ் இருக்கும் படம் கொடிமரம்,மற்றும் தூண்கள் உள்ள அந்த மண்டபம், தூணில் ல் உள்ள சிற்பங்கள் எல்லாம் அருமை. அவை ஏதோ கதைகள் சொல்ல காத்து இருப்பது போல ஒரு பிரமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையான கருத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்

      நீக்கு
  13. ஒன்று என் கவனத்தில் கிடைத்தது. திருமாலின் வடிவங்கள, அவதாரங்கள் என பல சிலைகள் இருக்க, சைவத்தில் லிங்கம் அல்லது நடராஜர் என்ற இரண்டு, சில சமயம் சோமாஸ்கந்தர், என குறைந்த வடிவங்களே வழிபடப்படுகின்றன.
    ஒரு காலத்தில் திருமால் நின்ற கோலத்தில் உள்ள சிலைகள் யாவும் முருகனுடையது, திருப்பதி வெங்கடேசன் உட்பட, என்று வாதிட்டோரும் உண்டு.

    கற்றளிகளாய், பெரும் கோயில்களாய் அந்நியர் படையெடுப்புகளை மீறி காலம் காலமாக வழிபாடுகளோடு உள்ள தென் நாட்டு கோயில்களை பாதுகாக்கவாவது செய்வோம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://aanmiga-payanam.blogspot.com/2010/05/blog-post.html

      இதைத் தொடர்ந்து 64 சிவ வடிவங்களையும் தொகுத்திருக்கேன். இதிலேயே தொடராக வரும். இதே பெயரிலேயே. இது இங்கே புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடம் வெளியிடும் புத்தக்த்திலும் சில ஆண்டுகள் முன்னர் தொடராக வந்து கொண்டிருந்தது. தற்சமயம் அவங்களோடு தொடர்பு இல்லை. விஷ்ணுவுக்கு உள்ள மாதிரி வடிவங்கள் சிவனுக்கு இல்லை என நீங்க சொல்லி இருப்பதைப் படிச்சதும் இது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. வாங்க ஜெயகுமார் சார். கொஞ்சம் யோசிக்க வைக்கும் கேள்வி. விரைவில் பதிலளிக்கிறேன்

      நீக்கு
    3. இதுக்கு என் பார்வையில் வேறே ஒரு பதில் இருக்கு. பின்னர் வரேன். இப்போ மூன்றரையில் இருந்து பிசி.

      நீக்கு
    4. ஜேகேசி சார், நெல்லையிடம் நீங்கள் கேட்டது திருமாலுக்குப் பத்து அவதாரங்கள் தவிர்த்து இம்மாதிரி மற்றத் திருவிளையாடல்களுக்கும் சிலைகள், வடிவங்கள் உண்டு. ஆனால் ஈசனுக்கு இல்லை என்பது தான் இல்லையா? இல்லை. இந்த ஊர் கஜேந்திர மோக்ஷம் நடைபெற்ற ஊராதலால் இங்கே பெருமாளே அந்தப் பெயர் தாங்கி மூலவராக வீற்றிருக்கிறார். இதே போல் கல்யாணக்கோலத்திலும் பெருமாள் சில ஊர்களில் காணப்படுவார். திருமாலுக்கும் முருகனுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்போர்களும் உண்டு. ஆனால் சிவ வடிவங்கள் பலவற்றில் கோயில் மூலவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதே உங்கள் கருத்து. அப்படிச் சொல்ல முடியாது. அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் திருச்செங்கோட்டில் மூலவராக இருக்கார். ஒவ்வொரு கார்த்திகை அன்றும் திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வர ரூபத்தில் வந்து ஆடிக் கொண்டு போவார். இதைத் தவிரவும் பிக்ஷாடனர், பைரவர், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் இல்லாத கோயிலே இருக்காது. முன்னெல்லாம் எல்லாக் கோயில்களும் (குறிப்பாக சிவன் கோயில்) பூட்டி விட்டுச் சாவியை பைரவர் சந்நிதியில் வைப்பார்களாம். சாவி பத்திரமாகவே இருக்குமாம். சீர்காழியில் பைரவர் சட்டைநாதராக, தோணியப்பராகக் காட்சி தருவார். இவை தினசரி வணங்கும் வடிவங்களே. இன்னும் நிறைய இருக்கு. இங்கே எழுத நேரமோ, அல்லது பதிவிவின் உட்கருத்து பாதிக்கப்படும் என்பதாலும் நிறுத்திக்கிறேன்.

      நீக்கு
    5. நான் அறிந்தவரையில் பத்து அவதாரங்களில் பரசுராமர், நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் ஆகியோருக்குக் கோயில்கள் கட்டாயமாய் இருக்கின்றன. மற்றவர்களுக்குக் கொஞ்சம் தேடித்தான் பார்க்கணும். ஆகவே நீங்க சொல்லும் கருத்தில் எதுவும் இல்லை என்பதே உண்மை. சோமாஸ்கந்தர் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்தாலும் மலை உருவிலேயே சோமாஸ்கந்தர் தரிசனமும் உண்டு. அதுக்குப் பின்னால் வரேன். இப்போ விளக்கேத்தணும். நேரம் ஆச்சு. :)

      நீக்கு
    6. கூர்ம அவதாரம் ஸ்ரீகூர்மம் வராக அவதாரம் பல ஊர்களில் திருப்பதி ஸ்ரீமுஷ்ணம் கும்பகோணம் மற்றும் பல, வாமன அவதாரமும் பல இடங்களில். மத்ஸ்யமும்

      நீக்கு
  14. பாசுர பகிர்வும் அதன் விளக்கமும் அட்டபுயகரப் பெருமாள் மூலவர் தரிசனமும் அருமை. சோழ வாரிசுகளை பற்றி தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசன பதிவு மிக அருமையாக உள்ளது. பதிவில் தங்கள் எண்ணங்களின் விளக்கங்கள் சிறப்பு. காஞ்சிபுரம் அட்டபுயகர கோவில் கோபுர தரிசனமும், மூலவர், உற்சவர் என பெருமாளின் தரிசனமும் கிடைத்து மகிழ்வடைந்தேன். பாசுரங்களும் , அதன் விளக்கங்களும் மிக அருமையாக உள்ளது.

    அத்தாள நல்லூர் கோவிலின் படங்களும், பார்த்துக் கொண்டேன். - இனி ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்த்து ரசித்து விட்டு வருகிறேன்.) அங்கிருக்கும் பெருமாள் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். அடுத்த தடவை நாங்கள் தி. லி க்கு செல்லும் வாய்ப்பு இறைவன் அருளால் கிடைத்தால், இக் கோவிலுக்குச் சென்று வர ஆசை வருகிறது. அங்கிருக்கும் போது இங்கெல்லாம் சென்று வர வாய்ப்புக்கள் ஏனோ அமையவில்லை. உங்கள் தயவால், இதுவரை அறியாத, செல்ல முடியாத ஆலயங்களைப்பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே தங்களின் அருமையான இப்பணிகள் சிறந்திட மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக இந்தக் கோயில் பிரம்மதேசம் போன்ற கோயில்களுக்கும் போய்வாருங்கள்

      நீக்கு
  16. தாமிரவருணி நதியின் அழகு என்னை எப்போதுமே கவர்ந்திருக்கு. அதிலும் இந்த மாதிரிக் கரையோரம் கோயில் இருக்கும் இடங்கள் பார்க்கப் பார்க்க அருமை. தாமிரவருணி தரையில் இறங்கும் பாபநாசமும் அழகு எனினும் கோயில் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்காது. மனதை வருத்தம் கொள்ளச் செய்யும். இங்கே கோயிலும் ஒரு சில இடங்களில் பாழடைந்து இருந்தாலும் பொதுவாக சுத்தமான பராமரிப்பு. அந்த நதிக்கரையிலே போய் உட்கார்ந்துக்கணும் போல ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ ரொம்பவே மாறிவிட்டது.ம்ம்ம். வருத்தம்தான்

      நீக்கு
  17. இதே போல் நதிக்கரையோருமாய் இருக்கும் கோயில்களில் நான் பார்த்தவை அப்பா ஊரான மேல்மங்கலத்தில் வராஹ நதிக்கரையிலும், சின்னமனூரில் சிவன் கோயில் பூலா நந்தீ/ஸ்வரர் கோயிலும் சுரபி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பாண்டியர்களால் அடிக்கடி திருப்பணி செய்யப்பட்டது. பல பழைய கல்வெட்டுக்கள் உண்டு. மிகப் பழைமை வாய்ந்த கோயில். ஆயிரம் வருஷங்களுக்கும் மேல் ஆகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வெட்டுகள் மேல பெயின்ட் அடிக்கறாங்க இல்லைனா உடைத்துவிடுகிறார்கள்

      நீக்கு
  18. மூலவர் தரிசனம் கிடைத்தது. சுற்று வட்டாரமும் அழகு கொஞ்சுகிறது. கல்வெட்டுக்களைப் படி எடுத்தார்களானு தெரியலையே! இங்கே அதன் அருமை தெரியாத கிராமத்தார் அவற்றை எல்லாம் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துண்டு போகாமல் இருக்கணும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அம்பத்தூர் வீட்டில் அப்படி ஓரிரு கல்வெட்டு கல்லைப் பார்த்தால் பல்லவர்களுக்குச் சொந்தமான இடம்னு சொல்லியிருப்பேன் ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹூம், அதன் பாதிப்புப் புரியாமல் வேடிக்கையாகப் பேசறீங்க. எங்க ஊர்ப் பெருமாள் கோயில் கட்டும்போது சுற்றுச் சுவரை இடிக்க வேண்டாம்னு சொல்லி இருந்தோம். ஏனெனில் கல்வெட்டுக்கள். முதலில் "ரீச் ஃபவுன்டேஷன்" மூலம் கட்ட முயற்சி பண்ணிட்டு இருந்தோம். அவங்க ஏகப்பட்ட நிபந்தனைகள். கல்வெட்டுக்களைத் தனியா எடுக்கச் சொல்லிக் கேட்டோம். திரு சத்தியமூர்த்தி வேண்டாம் அங்கேயே இருக்கட்டும். அதை எடுக்காமலேயே கட்டலாம்னு சொன்னார். கடைசியில் சத்தியமூர்த்தியும் அவரோட குழுவும் ஊருக்கு வந்து பார்த்தப்போ உள்ளூர் ஆதரவு கிடைக்கலை. ஆளும் கட்சிக்காரங்க ஒத்துக்கலை. போயிட்டாங்க. இல்லைனா மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்திருக்கலாம். கடைசியிலே நானும் மாமாவும் அங்கே போய், இங்கே போய் இணையத்தில் விளம்பரமெல்லாம் போட்டு, அந்தச் சமயம் பார்த்துப் பெருமாளை யாரோ தூக்கிண்டு போகச் சித்தப்பா மூலம் திலகவதியைப் பிடிச்சுப் பெருமாளை மீட்டு (சக்கரம் ஏந்தும் கை ஒடிஞ்சிருந்தது. :) பின்னர் 2011 ஜூனில் ஒரு மாதிரியாகக் கும்பாபிஷேஹம் சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் நிறைவேற்ற முடிந்தது. எங்களோட கண்காணிப்பிலேயே பட்டாசாரியாரை எல்லாம் நியமிச்சு அவருக்குச் சம்பளமெல்லாம் பேசி தினப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கோம். இப்போப் போன வருஷம் மறுபடியும் 12 வருடங்கள் ஆகிவிட்டபடியால் திருப்பணி செய்தார்கள். மாம தான் ஆரம்பிச்சு வைச்சார். முதல்லே தண்ணீர் வேண்டும் என்றதால் அதற்கு ஏற்பாடு செய்தோம். எங்க குடும்பத்தில் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தோம். அரசும் ஏதோ அவங்க பங்குக்குக் கொடுத்திருக்கு. பின்னர் ஊர்க்காரங்களுக்கு வரி போட்டுப் பணம் வசூல் செய்து போன செப்டெம்பரில் மறுபடி கும்பாபிஷேஹம் செய்து அன்னிக்கே சாயந்திரம் உற்சவர் கையைச் சரிசெய்து கருட வாஹனமும் நடந்திருக்கு. நாங்கல்லாம் தோஹாவில். வீடியோக்கள் வந்தன. இப்போது கோயிலைப் பற்றிக் கவலை இல்லை என்றலும் சம்பளம் பட்டாசாரியாருக்கு நாங்க தான் கொடுத்துட்டு இருக்கோம். அதை நிறுத்தறதாக இல்லை.

      நீக்கு
    3. தப்பா எடுத்துக்காதீங்க. வேடிக்கையாச் சொன்னேன். கல்வெட்டு வரலாறு. அதை பத்திரமா பாதுகாக்கத் தெரியலை முக்கியத்துவம் புரியலை. என் அப்பா பல ஓலைச்சுவடிஆநூல்களைத்ஆதொவைத்ததே எனக்கு வருத்தம். எனக்கு அவற்றில் ஆர்வம் என அப்பாக்குத் தெரியலையே

      நீக்கு
    4. எங்க வீட்டில் சொல்லணும்னா இன்னும் மோசம். எல்லாமே தாத்தாவின் வைத்திய ஓலைச்சுவடிகள். தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் பண்ணும் விதம் அதற்கான கலுவை, குழவினு எல்லாமும் வீட்டில் உண்டு. அப்பா மதுரையை விட்டுட்டு வரச்சே அப்படியே தூக்கி ரீகல் டாக்கீஸ்னு மாலையிலும் விக்டோரியா எட்வர்ட் ஹால் எனப் பகலிலும் வேலை செய்யும் நூலக/சினிமா தியேட்டரில் கொடுத்துட்டார். அதே போல் என்னோட தாத்தா வீட்டிலும். ஆனந்த ரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள், வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், வ.வே.சுவின் குளத்தங்கரை அரசமரம்னு பல அரிய பொக்கிஷங்கள். நான் அப்போல்லாம் ராஜஸ்தானில் இருந்தேன். :(
      ஹூம், அதே போல் அந்தக் கல்வெட்டுக்களின் அருமை தெரியாமல் அதன் மேலேயே கான்க்ரீட் கலவையைப் போட்டு மூடி இருக்காங்க. எனக்குக் கோயிலுக்குப் படிகள் ஏறிப் போக முடியலை. அதனால் உள்பக்கச் சுவரில் இருக்கானும் பார்க்க முடியலை. சொல்லப் போனால் பரவாக்கரைக்குப் போயே 3 வருஷங்களுக்கும் மேல் ஆகிறது.

      நீக்கு
    5. அது சரி தங்க பஸ்பம் வெள்ளி பஸ்பம் உபயோகம் என்ன? தங்க பஸ்பத்தினால் எம்ஜிஆர் கிட்னி அவுட் என்று அப்போது சொன்னாங்க

      நீக்கு
  19. கல்லிடைக்குறிச்சி என்னோட ஒரு மாமி, மற்றும் என் தம்பி மனைவி ஆகியோரின் ஊர். என்னோட ஆரம்ப கால நண்பர் அம்பியின் ஊர் இது தான். அவங்க அம்மா இப்போவும் கல்லிடையில் தான் தனியா இருக்காங்க. அவ்வப்போது இங்கே தோஹா வந்து அம்பியின் தம்பி தக்குடுவுடன் இருந்துட்டுப் போவாங்க. நான் கல்லிடைக்குறிச்சி போயிருக்கேன். மஹா ஸ்வாமிகள் எழுதி இருந்த கனடியன் வாய்க்காலைக் கேட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்தோம்.ரொம்பப் பிடிச்சது ஊர். இதை விடக் கடையநல்லூர் நல்லா இருக்கும்னு எல்லோரும் சொல்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையநல்லூரைவிட கல்லிடைக்குறிச்சி நல்லா இருக்கும்னு என் அபிப்பிராயம்

      நீக்கு
    2. நான் கல்லிடைக்குறிச்சி மட்டும் தானே போனேன். ஆனால் கடையநல்லூர் அதைவிட அழகு எனப் போனவங்க சொன்னாங்க. எங்க தூரத்துச் சொந்தம் ஒருத்தருக்குக் கடையநல்லூர், இன்னொருத்தருக்குக் கடையம். இப்போ யாரும் இல்லை. என் அம்மாவின் மாமாவுக்குத் திருநெல்வேலி தான். பாட்டியும் அவங்களோட எல்லா மருமகள்களும் திருநெல்வேலியைச் சார்ந்தவர்கள். தாத்தா ராமநாதபுரம் தென்னவராயன் புதுக்கோட்டை. பரமக்குடியில் இருந்தார். உலக்கையோட அப்பாவெல்லாம் தெரிஞ்சவர்னு சொல்வாங்க.

      நீக்கு
    3. நல்ல பெயரெல்லாம் "உலக்கை" என மாறுவது உலகத்தில் கொஞ்சம் சங்கடபட வேண்டிய விஷயந்தான்.:))))

      நீக்கு
    4. உலக நாயகன் என்று அவரே விளம்பரப்படுத்திக் கொள்வதால் எங்களுக்கு உலக்கை நாயகன். கமல தாசர் என்ற பெயரும் உண்டு

      நீக்கு
  20. பாசுரங்கள் பகிர்வு நன்றாக இருக்கு. ஒரு சில எழுத்துப்பிழைகள், தட்டச்சுப் பிழையாக இருக்கும். ராஜேந்திர சோழன் காலத்தில் ஆரம்பித்தது இல்லையா சோழ/பாண்டிய வம்சம். அது பற்றி நீங்கள் விரிவாக எழுதக் காத்துட்டு இருக்கேன். கேரளத்தில் கோட்டக்கல்லுக்கு அருமே ஒரு பழமையான பிள்ளையார் கோயிலும் (ஆயிரம் வருஷங்களுக்கும் மேலாம்) மூவாயிரம் வருஷப் பழமையான முருகன் கோயிலும் போயிட்டு வந்ததாகப் பையர் சொல்லுவார். என்னையும் தான் கூப்பிட்டிருந்தார். என்னால் முடியாது. நடப்பது பிரச்னை என்பதால் நான் போகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். நிச்சயமாக தவறுகளைக் குறிப்பிடுங்கள்.தவறே கிடையாது திருத்திக்கறேன் அல்லது விளக்கமளிக்கிறேன்

      நீக்கு
  21. பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரும் காலத்தால் மூத்தவர், முற்காலப்பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பார்கள். அதே போல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் குடவரைக்கோயில் தான். இம்மாதிரி நிறையக் கோயில்கள் இருக்கின்றன. தனித்தமிழர்களோ, பிள்ளையார் நரசிம்ம பல்லவன் காலத்தில் தான் பரஞ்சோதியால் வாதாபியில் இருந்து வந்தார் எனச் சொல்லுவார்கள். அதே போல் முருகன் கடவுளே இல்லை எனவும் முருகன் வழிபாடு கிடையாது எனவும் சொல்லுவார்கள். ஆறுபடை வீட்டில் முதலாம் இடம் பெற்றிருக்கும் திருப்பரங்குன்றம் நக்கீரர் காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரஞ்சோதி, வாதாபி கணபதி அவர் கொண்டு வந்திருப்பார் ஆனால் அதற்கு முன் பிள்ளையார் வழிபாடு கிடையாது எனச் சொல்வது அதீதம் கல்கி எதை வைத்துச் சொன்னார்னு தெரியவில்லை

      நீக்கு
    2. கல்கி சொன்னார்னு எங்கே சொல்லி இருக்கேன்? நான் சொல்லுவது நமது தீராவிடய பக்தர்களை.கருத்தை மறுபடி படிங்க. தனித்தமிழர்கள்னு சொல்லி இருக்கேன். :)

      நீக்கு
    3. கல்கிதான் முதல்ல சொன்னார். மதுரை மீனாட்சி இப்போ சொல்றாங்க ஹா ஹா ஹா

      நீக்கு
    4. நீங்கள் கேட்கும் கேள்வி புரியலை. சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி எழுதியிருக்கார்

      நீக்கு
  22. Geetha Sambasivam
    ​நீங்கள் குறிப்பிடுவது 64 திருவிளையாடல்களா? திருவிளையாடல் சிவன்களை வழிபடுவதில்லை. அதே சமயம் திருமால் அவதாரங்களாக ராமர், கிருஷ்ணர், பரசுராமர், நரசிம்மர், போன்ற அவதாரங்கள் வழிப்பாட்டுக்கு உரியவை ஆகின்றன.
    64 வகை சிலைகள் வழிப்பாட்டுக்குரியது என்றால் அவற்றை வரிசைப்படுத்தலாமே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகுமார் சார்... திரிபுரம் எரித்தது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்திருப்பினும் பெரும்பாலும் வழிபாடு என்று வரும்போது சிவலிங்கம் அல்வது நடராஜர்தான். விதிவிவக்காக சயன கோல சிவன் போன்று கோயில்கள் உள்ளன

      நீக்கு
    2. @ஜேகேசி ஐயா, திருவிளையாடல்கள் முற்றிலும் வேறு. அது கிட்டத்தட்ட மதுரை/(கடம்பவனம்னு பெயரில் இருந்திருக்கு) பாண்டியர்கள் வரலாறுனும் சொல்லலாம். இது நான் சொல்லுவது சிவனுடைய பல்வேறு வடிவங்கள். அவற்றைத் தான் நான் தொகுத்து 64 சிவ வடிவங்களையும் பற்றி எழுதி இருக்கேன். இதை ஏற்கெனவே உங்கள் கருத்தில் பதிலாகவும் கொடுத்திருக்கேன். கொடுத்திருக்கும் சுட்டியைப் பார்த்தீர்களானால் இதே பெயரில் எல்லாப் பதிவுகளும் கிடைக்கும். எல்லாவற்றையும் மீண்டும் இங்கே குறிப்பிடுவது நேரம் எடுக்கும். இதில் ஈசனின் எந்தத் திருவிளையாடலும் வராது. இப்போ நடராஜர் எப்படி ஒரு சிவ வடிவமோ அதே போல் பிக்ஷாடனர், அர்த்தநாரீஸ்வரர், கங்காளர், பைரவர் என வடிவங்கள் வரும். அவற்றைக் குறித்தே எழுதி இருக்கேன்.

      நீக்கு
  23. அந்தாளநல்லூர் புராதன கோவில் அழகிய படங்களுடன் அறிந்தோம். கல்வெட்டுகள் பழைய கட்டிடங்கள் சிதிலம் அடைவது வேதனைக்கு உரியது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!