ஞாயிறு, 31 மார்ச், 2019

ஞாயிறு : தன்னைத்தானே தள்ளிக்கொண்டு செல்கிறாரோ....! - & தொடர்கதை 4




ஜெயின் காலனி கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு வரும் வழியில் அரசு அலுவலர் குடியிருப்பு சுவரில் இது மாதிரி நிறைய சித்திரங்களா சிற்பங்களா?



தனியாக சென்று கொண்டிருப்பவருடன்......


சட்டென ஒரு துணை...  வாழ்க்கைத்துணை!

தன்னைத்தானே தள்ளிக்கொண்டு செல்கிறாரோ....!


 என்ன குவாஹாத்தியிலிருந்து கிளம்பிட்டீங்களா?



 ஓட்டல் நிர்வாகம் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பினாங்களாக்கும்..


பூக்களே வண்ண வண்ணக் கவிதைகள் படிக்கும்....


=======================================================================================================







நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -




ஸ்ருதி :


இங்க! பாத்தியாமா ஸ்ருதி! சேலத்துல நீ பண்ணின கச்சேரி பத்தி ரொம்ப நல்ல விமர்சனம் வந்திருக்கு. விட்டல் அபாங் அப்படியே உணர்வு பூர்வமா பாடினியாமே. ஷ்ரவண் உன் கூட வந்த சந்தோஷம் எல்லாம் வெளிப்பட்டுருக்கு போல. பல்லவி பாடறதுல மட்டுமில்ல அபாங்க் பாடுறதிலயும் ஒரிஜினல் ஸ்டைல்ல பாடறேன்னுஎழுதியிருக்காம்மா. சந்தோஷமா இருக்கு. ப்ளெஸ் யுஎன்று மாமனார் சிலாகிக்க,

ஆமாம் நானும் பாத்தேன். ஹிந்துஸ்தானி கச்சேரி கூட பண்ணலாம் ஸ்ருதினு போட்டிருக்காளே. அம்மா அப்பா கிட்ட ஃபோன் பண்ணி சொல்லு ஸ்ருதிமாஎன்று மாமியார் குதூகலித்தார்.

இது ரொம்ப நாள் முன்னாடி ஃபிக்ஸ் ஆன கச்சேரிப்பா. இந்தக் கச்சேரிக்கு நிறைய ஐடியாஸ் கொடுத்ததே ஷ்ரவண்தான்.

போ ஷ்ரவண்கிட்ட காமிம்மா…  அவன் ரொம்ப சந்தோஷப்படுவான்.என்று மாமனார் சொல்ல நான் சந்தோஷத்தோடு ஷ்ரவணிடம் சென்று காட்டினேன்.

ஓகே. இப்ப அதுக்கு என்னன்ற?”

ஹேய்! ஷ்ரவண்! என்னாச்சு? நீதானே இதுக்குக் காரணம். எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா! இப்படி ஒரு நல்ல ஹஸ்பன்ட் எனக்குக் கிடைச்சுருக்கான்னு!என்று சொல்லிக் கொண்டே, லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரவணை பின்னால் சென்று அணைத்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து மகிழ்க்சியோடும் அவன் மீதான காதலோடும் நான் பேச,

நல்ல ஹஸ்பென்ட்!! ஏன் உன் பின்னாடி வந்ததுக்கா?” என்று நக்கலாகச் சொல்லிச் சிரித்ததும் என் மனம் மிகவும் நொறுங்கித்தான் போனது. 

சமீபகாலமாக அவன் வார்த்தைகளில், செயல்களில் கொஞ்சம் மாற்றங்கள் இருந்தாலும் நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

ஏன் இப்படியான வார்த்தைகள்? என்ன காரணமாக இருக்கும்? எங்கு ஸ்ருதியும், நாதமும் பிசகியது என்று தெரியவில்லையே....

ரிசப்ஷன் அன்று பல விஐபிக்கள், டிவியில் பேசப்பட்டது, ஆரம்பம் முதலே என் மீதான வெளியுலகு வெளிச்சம் எல்லாம் ஒரு வேளை அவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்திருக்குமோ? ஆனால் என்னைப் பற்றித் தெரிந்துதானே எல்லாம் ஓகே என்றான். கல்யாணத்திற்குப் பிறகும் அப்படித் தெரியவில்லையே அவன் செயல்களிலோ, பேச்சிலோ! எல்லாம் நல்லபடியாகத்தானே போய்க் கொண்டிருந்தது.

எத்தனை இனிமையான நாட்கள்! அவன் என் மடியில் படுத்துக் கொண்டு சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா என்று அவன் பாடினானே, அப்போது அவன் குரலில் என்ன ஒரு வசீகரம்!

எவ்வளவு நல்லா பாடற ஷ்ரவண்! உனக்கு இருக்கற வித்வத்துக்கு நீயும் கச்சேரி பண்ணலாமே."

இப்ப என்னைப் பாட விடறியா.அவன் நல்ல மூடில் இருந்தான்.

நான் எழுந்து அபிநயம் பிடிக்க அவனோ அட உனக்குப் பரதநாட்டியம் கூடத் தெரியுமாஎன்று கேட்க நான் வெட்கத்தில் கொஞ்சம்….ஆனா பாட்டுல கான்சென்ட்ரேட் பண்ணினதுல அது தொடர முடியலை என்று சொல்ல, அவன் அருகில் வந்து என்னை அணைத்து என் கண்களைக் காதலுடன் பார்த்தபடியே

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி……..கன்னத்தில் முத்தமிட்டால் என்று பாடியபடியே முத்தமிட்டு, உள்ளம் கள்வெறி கொண்டு, மேனி தழுவி, உன்மத்தமாகி……  கல்யாண வசந்தமாய், ஹம்சநாதமாய்.... சுகமான ரிதத்துடன், லயத்துடன், தாளத்துடன் தானே தொடர்ந்தது!

என் சக பாடகர், பாடகிகளின் கச்சேரிகளை நான் குறை சொல்லக் கூடாது என்பது என் எண்ணம். ஷ்ரவண் மற்ற கச்சேரிகளை விமர்சித்த போது நானும் விவாதம் செய்திருக்கிறேன். அதெல்லாம் நல்ல ஆரோக்கியமான விவாதங்கள்தான். அவனும் அவர்கள் கச்சேரியில் இருந்த நுண்ணிய தவறுகளைச் சொல்லி எனக்கு நிறைய நல்ல புதிய யோசனைகள் கொடுத்து ஆதரவாகத்தானே இருந்தான்.

நானும் கச்சேரிகள் என்று பயணித்துக் கொண்டிருந்தேன். ஷ்ரவணும் ஆபீஸ் வேலையாக அடிக்கடி பயணம். நான் உள்ளூரில் கச்சேரி என்றிருந்தால், அவனில்லை. அவன் ஊரில் இருந்தால் எனக்கு வேறு ஊரில் கச்சேரி என்று போனது. ஒருவேளை ஆரோகணமாய்த் தொடங்கிய ராகம் வேகமாகப் பயணித்ததால், நேரமின்மையால் அவரோகணமாகியதோ?

ஆனால், மாமனாரும் மாமியாரும் மிகவுமே ஆதரவாக இருந்தார்கள். அபூர்வ ராகக் கிருதிகள், அதிகம் பாடப்படாத தில்லானாக்கள் என்று தேடித் தேடிக் கொடுத்தார்கள்.

ஒரு நாள் நான் இசைக்கான மூச்சுப் பயிற்சி, ப்ராக்டீஸ் என்று செய்து கொண்டிருந்த போது ஷ்ரவண் தன் முக்கியமான ஃபைல்களைக் காணவில்லை, தன் சாமான்கள் எல்லாம் இடம் மாறிப் போகிறதுநான் எங்கு வைத்தேன் என்றும் கொஞ்சம் கோபமாகச் சத்தம் போட்டான். 

தம்புராவை வைத்துவிட்டுப் போவதற்குள் மாமியார்ஏண்டா ஷ்ரவண், இதோதானே இருக்கு எல்லாம் உன் கண் முன்னால. கோபம் கண்ணை மறைக்கறது பாரு. உன் கண்ணை மட்டுமில்ல, உன் மனசுக் கண்ணையும் மறைக்கிறது. நானும் பாத்துண்டுதான் வரேன். நீ இப்பல்லாம் ஸ்ருதி மேல ரொம்ப எரிஞ்சு விழற. அப்படி என்னடா நடந்துது? விமர்சனம் கூட, இப்படிப் பாடிப் பாரேன், நன்னாருக்குமோனு அவகிட்ட பாந்தமா அன்பா சொல்றத விட்டுப்ட்டு, அது சரியில்லை இது சரியில்லைனு ஓவரா குத்தம் சொல்லிக் காட்டற. அவ தன் ம்யூஸிக் நாலெட்ஜை வெளில காட்டிக்கறாளா? சொல்லு? அவ முன்னுக்கு வரது உனக்கு ஆகலியோ? ஏண்டா நீயுமா இப்படி? நீ அவ திறமைய விரும்பி, தெரிஞ்சுதானே ஓகே சொன்னஸ்ருதி இத்தனை நேரம் சமையல் வேலை முடிச்சு எனக்கு ஒத்தாசையா இருந்துட்டு இப்பத்தான் ப்ராக்டீஸ்கு உக்காந்தா. கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமோல்லியோ. கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாருடா உன் கோபம் நியாயமானதான்னுஎன்று எனக்கு ஆதரவாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஸ்ருதி போட்டு முடிஞ்சுதா? ரொம்ப நல்லாவே ஸ்ருதி போடறேம்மா

ஒரு வேளை எனது புகழ் அவனுக்கு உறுத்தலாக இருக்கிறதோ? அந்த மேகசினின் அட்டைப்படம்? இவன்தான் துலா என்று ஏன் அந்தக் கட்டுரையாளர் வெளிப்படுத்தினாரோ? அதன் பின் அவன் விமர்சனம் எழுதுவதில்லை. அது எல்லாம் அவனைப் பாதித்திருக்கும் போல! மிகவும் கடுமையான வார்த்தைகள் அவ்வப்போது வெளிப்படத் தொடங்கியது அதனால் இருக்குமோ?

இடையிடையில் அவனது வார்த்தைகள் ஷார்ப்பாக வந்தாலும், ஏற்காட்டில் கூட முதல் நாள் எரிச்சலுடன் பேசியவன் மறுநாள் நாங்கள் இருவரும் மட்டும் பெடல் போட்டில் சென்ற போது, ஆஹா இன்ப நிலாவினிலே பாடலைத் தொடங்கினானே! 

அடுத்து, நிலவும் மலரும் ஆடுது என்று இசையிலும், இயற்கையிலும் மெய்மறந்திருந்தோமே. நிலை மறந்தேங்கும் நேரமும், காதல் படகிலே காணும் இன்ப அனுராகமும் படகோடு போய்விட்டதோ

நிலை மயங்கி மயங்கிக் காலமெல்லாம் கானம் பாடுவோம் என்று அவன் பாடியதையும் மறந்து போனானோ? ஊருக்குத் திரும்பியதும் வார்த்தைகள் மீண்டும் ஷார்ப்பாகத்தான் வந்துகொண்டிருந்தது.

அவன் அடி மனதில் ஏதோ கனன்று கொண்டிருந்தது போலும். அவ்வப்போது அள்ளித் தெளித்தது. கேட்டதற்குக் காரணம் எதுவும் சொல்லாமல் விட்டேத்தியாகப் பதில் அளித்தான். நானும் குழம்பித் தவித்தேன். 



------மீட்டல் தொடரும்...

(இதன் தொடர்ச்சி வரும் புதன் கிழமை - 3-4-2019 அன்று வெளியாகும்)

171 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அதிரா அதிகாலை கூட வெங்கட் தளம் உள்ளிட்ட இடங்களில் கண்ணில் தட்டுப்பட்டதால் இங்கும் காலையே வருவாரோ என்கிற சம்சயம்...

      நீக்கு
    2. ஓ அதிரா வாங்க...வெங்கட்ஜி தளத்திலுமமா ஆ என் கண்ணில் படலியே..

      இங்க வந்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரி போனா போகுது இன்னிக்கு ஒரு நாள் தனஏ!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. அவர் பழைய பதிவில் கமெண்ட்..

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இல்ல வெங்கட் பக்கம் ஒரு 3,4 மணித்தியாலம் முன்பு போனேன்:)

      நீக்கு
    5. ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த சம்சயத்த எனக்கு ரகசியமா..சொல்...சரி விடுங்க நானும் பழைய பதிவுக்குப் போயும் பார்க்காம விட்டுப்புட்டேன்! !! ஹிஹிஹி..

      கீதா

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்.

    முதல் படம் அட்டகாசமா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஹலோ நாங்களும் உள்ள வந்தாச்சு பூஸாரே!!! செகண்டு வா...

      நோ சத்தம் மூச்!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. ஓ... பூஸார்... வந்தது வந்தாச்சு!...
      அப்புறம் எதுக்கு சத்தம்?...

      நீக்கு
    3. ஆஆ துரை அண்ணனும் கம்பி மேலே:)...

      நீக்கு
    4. கீதா ரெம்ம்ம்ம்ப லேட்டூஊஊ:)

      உங்களுக்கு யாருக்கும் தெரிய ஞாயமில்லை ஏனெனில் நீங்க நித்திரையாகியிருப்பீங்க:)
      புறுணம் என்னெண்டால் ஶ்ரீராம் கைமாறி இப்போஸ்ட்டை நேற்று நைட்டே பப்ளிஸ் பண்ணிட்டார்ர்ர்:)...
      நான் அடிச்சுப் பிடிச்சு ஓடிவந்தால் டக்கென ஹைட் பண்ணிட்டார்ர்ர் கர்ர்ர்ர்ர்:) ஹாஆ ஹா ஹா...

      நீக்கு
    5. அதைத்தான் அடுத்து வரப்போகும் கேள்விக்கு பதில் கிடையாது என்று நேற்றே சொல்லி இருந்தேன்!!!

      நீக்கு
    6. அது மீக்கும் தெரியுமாக்கும்!! பூஸார்! ஹா ஹா ஹா ஹா...

      சரி சரி இப்ப உங்களுக்குக் கண்ணைக் கட்டுமே!!

      கீதா

      நீக்கு
  4. படங்கள் அருமை, அதிலும் முதல் படம். . இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    2. வாங்க நெல்லை தம்பி! அன்னிக்கு என்னைக் கலாய்ச்சு (என்னை பொண்ணு பார்க்கற படலம் பற்றி) அதை வாசித்து சிரித்து..!! அன்னிக்கு மட்டும் நெல்லை அண்ணன அங்கிட்டு பார்த்திருந்தேன்னு வைங்க கடுப்புல செமையா....சரி சரி விடுங்க...ஆனா நீங்க அந்த நேரத்துல வெளிநாட்டுல இருந்தீங்க!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. பெண் பாவம் பொல்லாதது. இதைத்தான் நான் பலர் வீட்டில் கண்டிருக்கிறேன்...

      நீக்கு
    4. ஆமா ஆமா பெண் பாவம் பொல்லாதது:)) அதனாலதான் அதிராவுக்கு ஆரும் ஏசிடாதீங்கோ:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம்...

    அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா , புதிதாய் வந்த பூஸார் மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாய் வந்த பூஸார்... ஹா.. ஹா... ஹா... இப்போது பூனைக்கு தூக்கம் கண்ணைச் சுற்றஆரம்பித்து விடும். இரவு ஒருமணிக்கு அவர் தளத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். பின்ன மூன்று மணி வாக்கில் வெங்கட் தளம்... தூங்க வேண்டாமா!

      நீக்கு
    2. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அது உங்களுக்குத்தானே நைட் ஶ்ரீராம் எங்களுக்கு 9 க்கு முன்:).. நாங்க எப்பவும் 10-11 ஆகும்.

      இன்று எங்களுக்கு நேரம் மாத்துகிறார்கள் தெரியுமோ:)

      நீக்கு
    4. நான் எங்க நேரத்தைதான் சொன்னேன்... இப்போ நீங்க ஒரு கேள்வி கேக்கோணும்! நீங்க ஏன் தூங்காம இருந்தீங்கன்னு!

      நீக்கு
    5. அதே அதே பூஸார் ஸ்ரீராமின் கமென்ட் பார்த்துட்டுச் சொல்ல வந்தால்...

      ஆமாம் இன்னிக்கு உங்க நேரம் மாறுது..இப்ப உங்க டைம் மிட்னைட் தாண்டி அரை மணி ஆகுது!

      கீதா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா கேட்க நினைச்சு கேட்கல்ல ஏன் தெரியுமோ?:)... கேட்டிட்டால் இனிமேல் தூங்காம கொமெண்ட்ஸ் படிச்சாலும் இங்கின சொல்ல மாட்டீங்க:).. கேள்வி வரும் எனும் பயத்தில:)... ஹா ஹா ஹா..
      கதை எழுத்தாசிரியர் எப்படித் தூங்க முடியும்:)....ஹையோ ஹையோ

      நீக்கு
    7. நான் எங்க நேரத்தைதான் சொன்னேன்... இப்போ நீங்க ஒரு கேள்வி கேக்கோணும்! நீங்க ஏன் தூங்காம இருந்தீங்கன்னு!//

      நானும் கேட்க நினைத்து....கேட்கலை...பதிவு வாசித்துவிட்டு இங்க வரும் போது அதிரா ..

      ..நேத்து நீங்க சரியா தூங்கலைனு தெரியுது...

      கீதா

      நீக்கு
    8. வரவேற்ற துரைக்கும் ஊருக்கு முன்னாலே வந்துட்ட பூசாருக்கும் மற்றும் வந்திருக்கும் எல்லோருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    9. ஸ்ரீராமுக்கு இண்டைகும் நித்திரை வருகுதிலை:)) என பிபிசில சொல்லிச்சினம்:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

      நீக்கு
    10. நான் அரைமணி முன்னாலேயே தூங்கிட்டேன்!

      நீக்கு
    11. ///நான் அரைமணி முன்னாலேயே தூங்கிட்டேன்!///

      ஆவ்வ்வ்வ் ஹா ஹா ஹா கர்ர்:) அப்போ கனவில கொமெண்ட்ஸ் போடுறாரோ:)).. காலைக் காட்டுங்கோ இருக்குதோ எனப் பார்க்கோணும் நேக்குப் பயம்மாக்கிடக்கூஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  6. பூக்கள் படமும் அழகு..

    தன்னையே தள்ளிக் கொண்டு// ஹா ஹா ஹா கேப்ஷன் ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஒரு பெண்ணுக்கே இந்தக் கதி என்றால், பாடகி சகோதரிகள், பாடகர் சகோதர்ர்கள் வீட்டில் எவ்வளவு அட்ஜஸ்ட்மென்ட் வேணும்.... சிறுகதை எழுத்தாளர் சுபா வீட்டிலும்தான்.... ஈகோவைத் தூண்டிவிட எத்தனை வாய்ப்பு கிடைத்திருக்கும்?

    கதையில் மாமியார் பேச்சு ஆதரவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான மாமியார்! மாமியார் குலத்துக்கே கோடரிக்காம்பு!!!!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம், கோடரிக் காம்புனா??!!!

      புரியலையே

      கீதா

      நீக்கு
    3. குலத்துரோகின்னு சொல்லலாம்!!!!!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா...

      ஹூம் பாருங்க மாமியார் னாலே அப்படி ஆகிப் போச்சு!

      கீதா

      நீக்கு
    5. எல்லா மாமியார்களும் இப்படிப் புரிந்து கொண்டு மாட்டுப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். ஆகையால் விரைவில் ஷ்ரவண் மனம் மாறுவதை எதிர்பார்க்கலாம்.

      நீக்கு
    6. //எழுத்தாளர் சுபா வீட்டிலும்தான் // உண்மைதான் நெல்லை. அவர்களுடைய புரிதல் போற்றுதலுக்குரியது.

      நீக்கு
    7. சுபா நம்ம ராயசெல்லப்பா சாருக்கு நல்ல தெரிஞ்சவங்க தொடர்புல இருக்கறவங்க...அவங்களைப் பத்தி சார் எனக்கு நிறைய சொல்லிருக்கார். முன்னாடி சென்னைல இருந்த வரை செல்லப்பா சார் எனக்கு அத்தனை தகவல்கள் கொடுப்பார். எழுத்தாளர்கள் பற்றி எழுத்துலகம் பற்றி பப்ளிஷர்ஸ் அப்படி நிறைய நிறைய தகவல்கள் அவருக்கு நிறைய நட்புகள்.

      கீதா

      நீக்கு
    8. ஸ்ரீராம் எனக்கு இன்னைக்கு பார்ட்ல மாமியார் மாமனார் பத்தி வாசித்ததும் வல்லிம்மா கதை மாமியார் மாமனார் நினைவுக்கு வந்துட்டாங்க. !!!

      கீதா

      நீக்கு
    9. ஆமாம் கீதா .... ஒன்றோடொன்று ஒத்து வருகிறது!

      நீக்கு
  8. >>> என்ன குவாஹாத்தியிலிருந்து கிளம்பிட்டீங்களா?...<<<<

    எதையும் மறந்துடலையே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்கவில்லை என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள்!

      நீக்கு
  9. அனைவருக்கும் அன்பான அதிகாலை வணக்கம்... ஹப்பி மதேர்ஸ் டே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாலை வணக்கம். 'தாயார் தின' வாழ்த்துகள்!

      நீக்கு
    2. ஓ! தாயர் தின வாழ்த்துகள் எல்லோருக்கும்! ஆண்களுக்கும் சேர்த்துத்தான். தாயுமானவர்களாக இருப்பவர்கள் எத்தனை பேர்!!

      கீதா

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர் கீதா.... எதிர்ப்பாலாருக்குத்தான் தந்தையர் தினம் வருமே:)... அது போதும்:)...இதில பங்கு குடுக்க மாட்டோஒம்ம்ம்ம்ம்:)..

      நீக்கு
    4. ஓ தந்தையர் தினம்னு ஒன்று உண்டோ!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதெல்லாம் நினைவு இல்லையே ஹா ஹா

      சரி அப்ப தந்தையர் தினத்துல அவங்களும் பங்கு கொடுக்கட்டும்னு சொல்லிடலாம் !!

      அப்படியும் உண்டு தானே!!

      கீதா

      நீக்கு
    5. @கீதா ரங்கன் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவேண்டியவர் திருப்பதிசாரத்தில் இருக்கிறார்... ஹாஹா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா..நெல்லை....ஆனா என் அப்பா எனக்கு அம்மா போலவும். அம்மா இல்லை ஆனால் அவர் எனக்கு அத்தனை உதவிகள்...அதுவும் நான் சொல்ல வேண்டியதே இல்லை. அவரே கேட்டு கேட்டு பார்த்து நான் வேண்டாம் என்று மறுத்தாலும் செய்வார். அதனால்தான் தாயுமானவர்களுக்கும்னு சொன்னேன்....என் மாமியாருக்கும் மாமனாருக்கும் மிகவும் பிடிக்கும். மாமியாரையும் மாமனாரையும் நான் இல்லாதப்ப கவனித்துக் கொண்டவர். டிபன் எல்லாம் செஞ்சு பக்கத்துல கொண்டு கொடுப்பார் அதுவும் சரியா நான் சொல்லியிருக்கும் டயத்துக்கு. காஃபி போட்டுக் கொடுப்பார். நான் இல்லாதப்ப இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தால் போதும் அவங்க தேவைகளை எல்லாம் கவனித்துக் கொள்வார்.

      எனக்கு நிஜமாவே அன்னையர் தினம், தந்தையர் தினம் பற்றி எதுவும் தெரியாது. இங்க யாராவது விஷ் பண்ணினா கூடவே நானும் அவ்வளவுதான். இன்று அதிரா சொன்னதால்...

      இப்ப திருக்குறுங்குடி போய்டு வந்திருப்பார். அங்கு திருவிழா. 5 நாள் கருடசேர்வை க்குப் போய்டு தங்கிட்டு வந்திருப்பார்..

      கீதா

      நீக்கு
    7. இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம், பாட்டியர் தினம் எல்லாம் இப்போ ஒரு பத்துப்பதினைந்து வருடங்களாகத்தான் பிரபலம்!

      நீக்கு
  10. அட! பரவாயில்லையே! ஸ்ருதிக்கு மாமியார் மாமனார் சப்போர்ட் இருக்கிறதே! நல்ல விஷயம் தான்.

    அப்ப பிரச்சனை எளிதாகச் சால்வ் ஆகிவிடுமோ என்றும் நினைக்க வைக்கிறது.

    தாயார் தினத்தன்று கரெக்ட்டாக கதையில் மாமியார் சப்போர்ட் தாயாக.....!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இன்றைய கதாசிரியர் நம்பாலைச் சேர்ந்தவர் என எண்ணுகிறேன்:).... பாலை மட்டுமாவது சொல்லலாமே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த பால் வித்தியாசம் எல்லாம் பிடிப்பதில்லை அதிரா...!! எழுத்தில் என்ன பால்? என்ன சொல்கிறீர்கள்?!!

      நீக்கு
    2. எழுத்தில் என்ன பால்? என்ன சொல்கிறீர்கள்?!!
      பல பெண் எழுத்தாளர்கள் உங்கள் கட்சிதான் ஸ்ரீராம். பெண் எழுத்தாளர் என்னும் அடைமொழியே அவர்களுக்கு பிடிக்காது. கவிதாயினி என்று குறிப்பிடப்படுவதையும் விரும்ப மாட்டார்கள்.

      நீக்கு
    3. ஹையோ ஶ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்:) நான் ஒரு குளூவுக்காகத்தானே அப்படிக் கேட்டேன்ன்ன்... எழுத்தாளரைக் கண்டுபிடிப்க்கோ எனச் சொல்லிட்டு குளூவே தராமல் இருந்தா எப்பூடியாம் கண்டைப் பிடிப்பது ஹையோ கண்டு பிடிப்பது:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
    4. க்ளூவா? அப்புறம் இவ்வளவு நாட்களாக என்ன நம் நண்பர்கள் கதையைப் படித்து வருகிறீர்கள்? கோமதி அக்காவைப் பாருங்கள்... தினமும் இரண்டு பேரை லிஸ்ட்டில் சேர்த்து வைத்துக்கொண்டே வருகிறார்!

      நீக்கு
    5. இதுவரை எனக்கு வந்த டவுட்:).. கீதா,ஸ்ரீராம், நெல்லைத்தமிழன், , பானுமதி அக்கா:)). ஹா ஹா ஹா முழு பல்ப்பூஊஊஊஊ வாங்கப்போறேனோ தெரியல்ல:)) இருப்பினும் காசா பணமா சொல்லிட்டால் போச்ச்ச்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? கடைசியில் முடிவு தெரியாத்தானே போகிறது? ஆமாம், கதை எப்போது முடியும்?

      நீக்கு
    7. கதை போகிற போக்கைப் பார்த்தால் சித்திரைப் புத்தாண்டு வந்தாலும் முடியாது போலிருக்கே:)).. இன்னும் துரை அண்ணன் எழுதல்ல:))

      நீக்கு
    8. // இன்னும் துரை அண்ணன் எழுதல்ல:))
      ​//

      ஹா... ஹா... ஹா...

      அது எப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள்?​

      நீக்கு
    9. நீங்க எப்பூடிக் கொயப்பினாலும் நாங்க கொயம்ப மாட்டோம்ம்ம் ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      நீக்கு
    10. "//பாலை மட்டுமாவது சொல்லலாமே:)..//"

      எனக்கு தெரிந்த பால் - வெறும் பால், மைலோ(milo) பால் தான், நீங்கள் எந்த எந்த பாலை கேட்கிறீர்கள் சகோ?

      நீக்கு
  12. சாமந்திப்பூக்கள் அழகு... இவைதான் இப்போ எங்கள் வீட்டிலும் வாங்கி வச்சிருக்கு...வன் வீக்குக்கு மேலே இருக்கும் அப்படியே.

    பதிலளிநீக்கு
  13. கதை எழுதிய எழுத்தாளர்கள் சார்பிலும் நானே ; படங்கள் சார்பிலும் நானே! இரண்டு சொந்தமில்லாத விஷயங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறேன் நான்!

    பதிலளிநீக்கு
  14. அதுக்குள்ளே ஐம்பது தாண்டிடுச்சா? நான் கருத்துக்களைச் சொன்னேன். :)))) படங்கள் அழகு. அதிலும் முதல் படம்! கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. இனி புதனன்று பார்க்கலாம். அப்புறமா எப்போ எப்படி என்ன நடந்து இருவரும் ஒன்று சேரப் போறாங்க! இந்தக் கதையின் கருவை ஆசிரியர்கள் அனைவருமாகச் சேர்ந்து பேசி முடிவு செய்து எழுதினார்களா? அல்லது அவ்வப்போது முதல் அத்தியாயத்துக்கு ஏற்பக் கதையை நகர்த்துகிறார்களா? எனக்கென்னமோ இரண்டாவது தான் நடப்பதாய்த் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்புறமா எப்போ எப்படி என்ன நடந்து இருவரும் ஒன்று சேரப் போறாங்க! //

      சேர்ந்துடுவாங்கங்கறீங்களா?

      // இந்தக் கதையின் கருவை ஆசிரியர்கள் அனைவருமாகச் சேர்ந்து பேசி முடிவு செய்து எழுதினார்களா? அல்லது அவ்வப்போது முதல் அத்தியாயத்துக்கு ஏற்பக் கதையை நகர்த்துகிறார்களா? //

      அட்டென்ஷன் ஆசிரியர்ஸ்....!

      நீக்கு
    2. நான் ஜொன்னனே.. நழுவுற மீனேதான்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)).. பெயர் போடாமல் கொமெண்ட் போடுறேன்ன் ஓடி ஓடிக் கண்டுபிடிங்கோ எங்கிட்டயேவா?:).. குளூ சொல்ல மாட்டாராம்ம்:))

      நீக்கு
    3. க்ளூ...

      க்ளூ...

      என்ன க்ளூ தரலாம்? ம்ம்ம்....

      அவர் நேற்றும் கமெண்ட் போட்டிருக்கிறார். இது ஓகேயா?

      நீக்கு
    4. ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஊஊ ஓடிக்கமோன்ன்.. ஒரு குட்டிக் குளூக் கிடைச்சிருக்கூஊஉ:)) கீதா இப்போ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  15. பதிவு நேற்றிரவே வந்திருப்பதைப் பார்த்தேன். ஆனால் கருத்து இடவில்லை. படுக்கப் போயிட்டேன். காலம்பரயும், பதிவில் வந்த கருத்துக்களுக்குப் பதில் சொல்லுவதில் முனைந்து விட்டேன். அப்புறமா முடியறதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றிரவு வரவில்லை அக்கா.. சும்மா அதிரடி படம்தானே என்று வராமல் போய்விடுவாரோ என்று அவருக்குபேய்க்காட்ட ஒருமுறை பப்ளிஷ் பட்டனை அழுத்திவிட்டு உடனே ரிவர்ட் செய்துவிட்டேன்!!!!

      நீக்கு
    2. ///சும்மா அதிரடி படம்தானே என்று வராமல் போய்விடுவாரோ என்று அவருக்குபேய்க்காட்ட ஒருமுறை பப்ளிஷ் பட்டனை அழுத்திவிட்டு உடனே ரிவர்ட் செய்துவிட்டேன்!!!!//

      ஹா ஹா ஹா சத்தியமா? உண்மைதான் சனி ஞாயிறு நான் தலைப்பை என் பக்கத்தில் வைத்துப் பார்ப்பதோடு சரி:)) திறந்து பார்ப்பதில்லை.

      இண்டைக்கு கீதாவும் துரை அண்ணனும் அலேர்ட்டா.. ஃபுல் ஸ்றெந் ல இருப்பினம் மோனிங்:)) ஆனா நான் ஜம்ப் பண்ண மாட்டனே:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. அப்பாடி... எங்கே நான் சமாளித்ததை நீங்கள் கண்டு பிடித்து விடுவார்களோ என்று பார்த்தேன்!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க கதையிலேயே பேய்க்காட்டுறீங்க என எனக்குத்தான் தெரியுமே:))

      நீக்கு
  16. அனைவருக்கும் காலை வணக்கம்.
    சாதாரணமாக வீக் எண்ட் என்றால் எல்லோரும் அதிகம் தூங்குவார்கள், அதிராதான் வித்தியாசமானவராயிற்றே?அதனால் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறார் போல..எப்படியோ காலையிலேயே கலகலப்பு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவுக்குக் காலை இல்லையே! இரவு தானே! இரவு தாமதமாய்த் தூங்குவார் போல!

      நீக்கு
    2. அடுத்தநாள் விடுமுறை நாள் எனில் இங்கு யாரும் ரைம்முக்கு படுப்பதில்லை பானுமதி அக்கா கீசாக்கா.... ரொம்ம்ம்ம்ம்ப லேட்டாகும்...

      நீக்கு
    3. // அடுத்தநாள் விடுமுறை நாள் எனில் இங்கு யாரும் ரைம்முக்கு படுப்பதில்லை //

      தப்பு... நெம்பத் தப்புங்க அம்மிணி... உடம்பு கெட்டுப்போகும்!

      நீக்கு
    4. சாம்பலாகிறப்போகிற உடம்புதானே:)) ஹா ஹா ஹா ஹையோ.. ஒரே டத்துவமா வரப்பார்க்குதே:))

      நீக்கு
  17. ஷ்ரவணுக்கும் சங்கீத உலகம் தெரிந்த ஒன்றுதான். ஸ்ருதியைப் பற்றி தெரிந்தும் தான் மணம் முடிக்கிறான். இருந்தாலும் யதார்த்தம் என்று வரும் போது அதை எதிர்கொள்வதில் தடுமாற்றம்.

    பரவாயில்லை மாமியார் மாமனார் சப்போர்ட் இருப்பதால் சரியாக வாய்ப்பிருக்குமோ என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷ்ரவண் திருவோண நட்சத்திரத்தில் பிறந்திருப்பாரோ...

      நீக்கு
  18. கதையில் இன்னொரு புதிய நபர் வந்தால்.....?

    மாற்றம் வருமா...? பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ருதியின் கூடவே பாட்டுக் கச்சேரிகளில் வயலின் வாசிப்பவர் ஸ்ருதியின் வீட்டின் ஸ்ருதி பேத்த்தை அறிந்து ஆறுதலா இருக்கார் (இதை எப்படிக் கண்டுபிடிக்கறார்னு ஒரு அத்யாயம் எழுதிடலாம்). ஷ்ராவண் ஸ்ருதியின் புகழ் உயர்வதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் குடியில் இறங்கிவிடுகிறான். கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ருதியை ஒருதடவை ஆத்திரத்தில் எட்டி உதைக்க, மிஸ்கேரியேஜ் ஆகிவிடுகிறது. ஸ்ருதியின் பாடகி வாழ்க்கை அடிவாங்கத் தொடங்குகிறது. ........

      1. ஷ்ராவண் ஸ்ருதியை விட்டு விலகுகிறான். ஸ்ருதியின் மாமனார் மாமியார் அவனுடனே இருந்து அவளின் பாடகி வாழ்க்கையை உயரச் செய்கிறார்கள்... என்றாவது ஷ்ராவண் திருந்தி தன் வாழ்க்கையில் மீண்டும் சேர்வான் என்ற நம்பிக்கையோடு ஸ்ருத வாழ்க்கை நகர்கிறது.

      2. ஒரு சமயத்தில் கணவனின் சிதைந்த மனநிலை கண்டு, பாட்டு, வாழ்க்கை இரண்டையுமே இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஷ்ராவணைப் பிரிகிறாள்......பல்வேறு சம்பவங்களுக்குப் பிறகு தனக்கு ஆறுதலாக இருந்த தன்னைவிட பதினைந்து வயது பெரிய வயலின்கார்ரை மணந்துகொண்டு இழந்த சுருதியை மீட்டெடுத்து வாழ்க்கை தளிர்விடுவதைக் காண்கிறாள்

      இதுமாதிரி பலவிதங்களில் கதையை நகர்த்தலாம்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா

      நெல்லை குடிகாரக் கணவன் தண்ணீ தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் நு பாடலியா!! ஹா ஹா ஹ

      இன்ஃபேக்ட் மேண்டலின் ஸ்ரீநிவாஸ் க்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. மனைவி பிரிந்து போனபிறகு. பழக்கம் தொற்றிக் கொண்ட போதிலும் வகுப்பு எடுத்திருக்கிறார். கச்சேரி செய்து வந்தார். வீட்டில் தான் பழக்கம். ஆனால் வகுப்பு மிகவும் அருமையாக எடுப்பாராம். என் உறவுகாரின் குழந்தைகள் அவரிடம் தான் கற்றுக் கொண்டன. அப்புறம் அவர் போயும் விட்டார்.

      எனக்கு மிக மிகப் பிடித்த இசைக்கலைஞர். நிறைய சங்கீத அறிவு. வாசிப்பும் அபாரம்.

      கீதா

      நீக்கு
    3. //கதையில் இன்னொரு புதிய நபர் வந்தால்.....? //

      வந்துடுவாரோ?

      நீக்கு
    4. நெல்லை.. இப்படி எல்லா வழியையும் யோசித்து விட்டால் வேறு வழி தேட வேண்டியதுதான்! ஆனாலும் மிக முக்கியமான ஒரு விஷயம் விட்டு விட்டீர்கள்!

      நீக்கு
    5. நோ நோ..நெல்லைத்தமிழன்:)) கல்யாணத்தை நினைச்சபடி இருவருக்கும் நடத்தி வச்சிடுங்கோ:)). பின்பு பெருஞ் சண்டையை மூட்டி:), ஸ்ருதி இப்போ எனக்கு குழந்தை பெற முடியாது கச்சேரிதான் முக்கியம் என அடம்பிடிக்க:)).. ஸ்வரண் பைத்தியமாக,

      அவருக்கு ஆறுதல் ஜொள்ளி:)) ஒரு அக்கா [வருணிக்கா எனவும் கூப்பிடலாம் அவவை:))] அவ வந்து தடவிக் குடுக்க, இதைப் பார்த்து சுருதி விவாகரத்து வேணும் என ஓட.. விதிப்படம் போல 3,4 பார்ட் கோர்ட் கேஸ் சீனை உருவாக்கிடலாம்ம்ம்ம் ஹா ஹா ஹா:))...

      எல்லாக் கதையையும் சொல்லி வழியை அடைச்சால்தான் எழுத்தாளர்கள் குப்புறக்கிடந்து, மல்லாக்கப் படுத்து வானம் பார்த்து பூமி பார்த்து ஓசிப்பினம்:)) ச்ச்சும்மா விட்டிடக்கூடாது:)) நாங்க ஆரு என்பதைக் காட்டோணுமாக்கும் ஹா ஹா ஹா ஹையோ ஆரோ கலைக்கினம் போல இருக்கே இது கனவோ?:)

      நீக்கு
    6. எத்தனை பக்கம் அடைத்தாலும் எலி இன்னொரு புதிய பக்கம் வளை பறித்து ஓடிவிடும் தெரியுமா?

      நீக்கு
    7. அப்போ கதை எழுதுவோரை எலி என்கிறீங்க:)) ஜி எம் பி ஐயா ஓடிக்கமோன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா

      அதுக்காகத்தானே பூனை வளர்க்கிறோம்ம்:)

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  20. தேயிலை பறிக்கும் பெண்கள் சித்திரம்/ சிற்பம் ஏதுவாக இருந்தாலும் அழகு.
    மற்ற படங்களும் வாசகங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  21. //தன்னைத்தானே தள்ளிக்கொண்டு நடக்கிறாரோ?// ரசிக்கவைத்த கேப்ஷன்!

    பதிலளிநீக்கு
  22. மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிறுதானே மதர்ஸ் டே? அதற்குள் என்ன அவசரம்?

    பதிலளிநீக்கு
  23. //ஸ்ருதி இத்தனை நேரம் சமையல் வேலை முடிச்சு எனக்கு ஒத்தாசையா இருந்துட்டு இப்பத்தான் ப்ராக்டீஸ்கு உக்காந்தா. கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமோல்லியோ. கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாருடா உன் கோபம் நியாயமானதான்னு” என்று எனக்கு ஆதரவாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.//

    ஸ்ருதிக்கு இப்படி மாமியார் ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி, ஆறுதல்.

    //ஏற்காட்டில் கூட முதல் நாள் எரிச்சலுடன் பேசியவன் மறுநாள் நாங்கள் இருவரும் மட்டும் பெடல் போட்டில் சென்ற போது, “ஆஹா இன்ப நிலாவினிலே” பாடலைத் தொடங்கினானே! //

    தாய் , தந்தை முன்பு கண்டிப்பாய் இருப்பது போல
    ஷ்ரவண் நடிக்கிறானோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அட! வித்தியாசமான கோணம்!

      ஏற்காட்டிலும் முதல் நாள் எரிச்சல் படுகிறானே! போன பார்ட்டில் அந்த நண்பரின் வார்த்தைகள் அவனைச் சலனப்படுத்தியதால் இருக்கும் என்றும் தோன்றுகிறது.

      அக்கா சூப்பரா வாசித்து யோசித்தும் கருத்து சொல்லறீங்க....ஆசிரியர்கள் இதைப் பார்த்து கதைய மாத்திடுவாங்களோ!!!!! ஹா ஹா ஹா ஹா

      இதுல அவங்க வீட்டில தனியா இருக்கும் போதும் அவனுக்கு எரிச்சல் வருதே...அவ சந்தோஷமா அவன் கிட்ட விமர்சனத்தைக் காட்டப் போகும் போது!

      கீதா

      நீக்கு
    2. //இதுல அவங்க வீட்டில தனியா இருக்கும் போதும் அவனுக்கு எரிச்சல் வருதே...அவ சந்தோஷமா அவன் கிட்ட விமர்சனத்தைக் காட்டப் போகும் போது!//
      கீதா தனியாக எல்லோரும் வசிக்கும் வீட்டில்தானே இருக்கிறான் !

      சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை வரும்
      சிந்தனை, செயலும் மாறி மாறிவரும் மானிட வாழ்க்கையிலே பாடல்தான் நினைவு வருது.

      மனம் திறந்து பேசினால் எல்லாம் சரியாகும்.
      மனதுக்குள் மூடி வைத்துக் கொண்டால் இப்படி வாய்வழியாக வார்த்தைகள் கன்னாபின்னா என்று வெடிக்கத்தான் செய்யும்.

      நீக்கு
    3. ஆமாம் கோமதிக்கா மனம் திறந்து சிலர் பேசுவதில்லை அங்குதான் பிரச்சனைகள் அதிகமாகிவரும்...

      கீதா

      நீக்கு
    4. கோமதி அக்கா... எழுதும் லிஸ்ட்டில் நீங்களும் இருக்கிறீர்களோ என்கிற சந்தேகம் வருகிறது எனக்கு!

      சிந்தித்தால் சிரிப்பு வரும் - நல்ல பாடல் ஒன்றை நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா இதுவரை லிஸ்ட்டில் கோமதி அக்கா இல்லை:))

      ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)) ஸ்ரீராம் வீரவாகுதேவர்போல ஓடி ஓடி நம்மை திசை திருப்பப்பார்க்கிறார்ர்:)) ஆனா நாங்களெல்லாம் ஸ்ரெடியாகவே இருக்கிறோமாக்கும்:))

      நீக்கு
    6. //ஸ்ரீராம் வீரவாகுதேவர்போல ஓடி ஓடி நம்மை திசை திருப்பப்பார்க்கிறார்ர்:)) ஆனா நாங்களெல்லாம் ஸ்ரெடியாகவே இருக்கிறோமாக்கும்:))//

      குற்றச்சாட்டை மறுக்கிறேன். என் நிலையிலிருந்து பார்த்தல் தெரியும்... கஷ்டம்ங்க....!

      நீக்கு
    7. //குற்றச்சாட்டை மறுக்கிறேன். என் நிலையிலிருந்து பார்த்தல் தெரியும்... கஷ்டம்ங்க....!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) எழுத்தாளராகவும் இருந்துகொண்டு.. அதை விமர்சிப்பவராகவும் நடிச்சு:) நம்மையும் கொயப்புவது ரொம்ம்ம்ம்ம்பக் குஸ்டம் ஹையோ டங்கு ஸ்லிப்பாகத் தொடங்குதே:) கஸ்டம் தேன்ன்ன்ன்:))

      நீக்கு
  24. // கேட்டதற்குக் காரணம் எதுவும் சொல்லாமல் விட்டேத்தியாகப் பதில் அளித்தான். நானும் குழம்பித் தவித்தேன்.//

    ஸ்ருதி மட்டும் குழம்பி தவித்தால் போதாது, கதை படிக்கும் வாசகர்களும் குழம்பி தவிக்கட்டும் என்று எழுத்தாளர் நினைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... அது எப்படி உங்களுக்குத் தெரியும்? ஆனால் ஒன்று அக்கா... அவர்கள் வாழ்க்கையே ஒரு குழப்பத்தில் இருக்கிறது!

      நீக்கு
    2. //ஆனால் ஒன்று அக்கா... அவர்கள் வாழ்க்கையே ஒரு குழப்பத்தில் இருக்கிறது!//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது எப்பூடி ஸ்ரீராமுக்குத் தெரியும் ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. உங்களுக்கும் தெரிகிறதே... எனக்கும் தெரிகிறது!

      படிக்கிறோமே...

      நீக்கு
  25. தொடர்கதையின் முதல் பாகத்திலிருந்தே தொடர்கதையை ஊன்றி படித்து நுணுக்கமாக கருத்துகள் இடுகிறார் கோமதி அரசு. அவருடைய பின்னூட்டத்தை படித்து விட்டு,மீண்டும் ஒரு முறை கதையைப் படித்து, "இது நமக்கு தோன்றவேயில்லையே?" என்று நினைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! பானு, நீங்களும் இந்த தொடரில் இருக்கிறீர்களா?இரண்டு மூன்று கதாசிரியர்களை நினைத்து வைத்து இருக்கிறேன், அதில் நீங்களும் ஒன்று.
      என்னைப்பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.
      ஏதோ எனக்கு தெரிந்தவரை சொல்லி வருகிறேன்.

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ் பார்த்தீங்களோ கோமதி அக்காவும் அதிராவும் ஒரே ட்ரக் இல் ஏறிட்டோம்ம்:)) எனக்கு இன்றைய எழுத்து பானுமதி அக்கா எழுத்தைப்போலவே இருக்கூஊஊஊஊஊஊ:))

      நீக்கு
  26. படங்கள் அழகு. தன்னைத் தானே தள்ளிக்கொண்டு போகிறாரோ? :))))

    தொடர்கதை - விறுவிறுப்பாகச் செல்கிறது! இரண்டு நாள் இடைவெளி!!!! காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். இரண்டு நாள் இடைவெளி நீண்ட இடைவெளியோ?!!

      நீக்கு
  27. இதில் ஏதோ சஸ்பென்ஸ் முடிவில் தெரிய வரும்...

    பதிலளிநீக்கு
  28. தன்னைத் தானே தள்ளிக்கொண்டு செல்பவர்? ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  29. வாசகர்களும் குழம்பி தவிக்கட்டும் என்று எழுத்தாளர் நினைக்கிறார்//

    ஹா ஹா ஹா கோமதிக்கா இதை வாசித்து நெல்லையின் டிப்ஸும் வாசித்து எனக்கு சிரிப்பு...இப்ப எழுத்தாளர்கள் நெல்லையின் டிப்ஸ் பார்த்தா, ஒருவேளை கதை அப்படிப் போகுமோனு தோண ஆரம்பிக்குது!! ஹா ஹா ஹா

    ஸ்ருதி ஷ்ரவணிடம் நேர பார்த்து சாஃப்டா கேக்காம... கோபமா ..என்னை பத்தி தெரிஞ்சு நாம பேசித்தானே கல்யாணம் பண்ணிக்கொண்டாய்னு அப்புறம் ஏன் இப்படி உனக்கு எரிச்சல் வருதுனு.....கேட்டிருக்கலாமோனு...ஆனால் ஸ்ருதிக்கு ஷ்ரவண் மேல் இருந்த காதலோ இல்லை அவனுக்கு என்னா அபரிதமான நாலெட்ஜ் என்ற ஒரு மரியாதையும் கலந்திருக்கோ சண்டை போடத் தயங்குகிறாளோனு தோணுது...

    நாம என்ன சொன்னாலும் கதாசிரியர்கள் கொண்டு போவது போலத்தானே இல்லை கதை அவங்களைக் கொண்டு போவதுபடித்தானே போகும்...பார்ப்போம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசாமல் ஷ்ரவண் ஸ்ருதியை டிவோர்ஸ் செய்து விடலாம். எனக்கு ஸ்ருதி என்கிற பெயர் பிடிக்கவில்லை. கமல் பொண்ணு முகம் நினைவுக்கு வருகிறது!!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா...செமையா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்..

      .டிவோர்ஸ் பண்ண வைப்பதும் ஆசிரியர்கள்...சேர்த்து வைப்பதும் ஆசிரியர்கள்!! இப்ப இங்க ரெண்டு கட்சியா பிரிஞ்சுருமோ ஸ்ரீராம்!! ஹா ஹா ஹா ஹா..

      யாருப்பா அங்க!! ஆசிரியர் யார்னு கண்டு பிடிச்சு ஒரு ஃபோன் போடுங்கப்பா அனுஷ்னு ஏன் போடலைனு!!! எபில ஸ்ருதிக்கு எல்லம இடம் இல்லைனு!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ///பேசாமல் ஷ்ரவண் ஸ்ருதியை டிவோர்ஸ் செய்து விடலாம்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைத்தான் மேலே சொல்லிப்போட்டு வந்தேன்ன்ன்:))...

      கீதா கதையின் தொடரில் வில்லியாக அனுஸ் உம் ஒரு வில்லனாக ஸ்ரீராமும் நுழையலாம்ம்:)) எதுக்கும் பொறுத்துப் பார்ப்போம்ம்:))

      நீக்கு
  30. கீதா , ஸ்ருதி பேதம் என்ற தலைப்பு இருந்தால் நெல்லை சொல்வது பொருத்தமாய் இருக்கும்.

    ஆனால் கதை தலைப்பு "நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே" என்று இருப்பதால் தான் வேறு மாதிரி கொண்டு போய் அவள் பாடவும், அவர் விமர்சனமும் தொடருமோ என்ற எண்ணம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம் - கடைசியில் (பிரிவுக்குப் பின் ஒன்று சேர்ந்தபிறகு), 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' என்று மகிழ்ச்சியோடு பாடினர். அவர்கள் வாழ்வில், புயலுக்குப் பின், தென்றல் அடிக்க ஆரம்பித்தது என்பதற்கான கட்டியம் கூறுவதுபோல், மாமரத்திலிருந்து குளிர்ந்த காற்று வீசியது - என்று எழுதி தொடர்கதையை நிறைவு செய்தால்?

      நீக்கு
    2. நெல்லை நீங்கள் சொல்வது போல் நிறைவு பெற்றால் நல்லாதான்இருக்கும். கொஞ்சம் ஸ்ருதி பேதம் ஏற்பட்டாலும் மீண்டும் சரியாக வாய்ப்பு இருக்கிறது


      நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே என்ற தலைப்பு சேர்ந்து பயணிக்கவும் விலகி ஒரே தடத்தில் பயணிக்கவும் சாத்தியம் உள்ளது.
      கதை ஆசிரியர் கையில் இருக்கு.

      நீக்கு
    3. ஆஹா... நண்பர்கள் சுப முடிவை எதிர்பார்க்கிறார்கள்போலவே... இந்த எழுத்தாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ... அடிவாங்காமல் எஸ்கேப் ஆயிடுறா ஆறுமுகம்.... அவ்வளவுதான் சொல்வேன்!​

      நீக்கு
    4. அடிவாங்காமல் எஸ்கேப் ஆயிடுறா ஆறுமுகம்..//

      ஹா ஹா ஹா கடவுள் இருக்கான் கொமாரு!!!

      //ஆஹா... நண்பர்கள் சுப முடிவை எதிர்பார்க்கிறார்கள்போலவே... இந்த எழுத்தாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ.//

      கண்ணா லட்டு திங்க ஆசையானு லட்டு கொடுக்காம இருந்தா சரி!!!!!!!!

      கீதா

      நீக்கு
  31. ///தன்னைத்தானே தள்ளிக்கொண்டு செல்கிறாரோ....!///
    பிரெக்னெண்ட்டாக இருப்பாரோ:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நான் இடுப்பு வலியா இருக்குமோன்னு நினைச்சேன்....நீங்க போட்டதும் என் கமென்டையும் போட்டேன் அழுங்கின முட்டைவந்தா ஓடிடுவோம்!! ரெடியா இருங்க!!!!!!!!!!

      மீயும் ரொம்ப நல்ல பொண்ணாக்கும் அதான் ஓடிப் போயிட்டேனாக்கும்!!

      கீதா

      நீக்கு
    2. அதிரா... தூங்கி எழுந்து வந்து விட்டீர்களா?

      நீக்கு
    3. அதெல்லாம் என்னில ஒரு பழக்கம் எத்தனை மணிக்குப் படுத்தாலும் டாண் என முழிப்பு வந்திடும் காலையில் நோர்மல் நேரத்துக்கு... பின்பு ஈவினிங் தூக்கி அடிக்கும்.. நித்திரை கொண்டால் திரும்ப நைட் முழிப்பிருக்கலாம்:)).. ஹொலிடே நாட்களில் இப்படித்தான் என்சோய் பண்ண முடியும்:))

      நீக்கு
  32. நான் நல்ல மூட்டில இருந்தபோது கேள்வி கேட்டேன் அதுக்கு உடனே பதில் தரல்ல கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்:) இப்போதான் பதில் போட்டிருக்கிறார், என் கேள்வி கேய்க்கும் மூட் போனபின்பு :)... இது அங்கின பேசுற மற்றர்:) ஆக்கும் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா புதன் மேட்டர் அல்லது நம்ம ஏரியா மேட்டர்?!!!!!

      கீதா

      நீக்கு
    2. "நேக்கு ஒண்ணும் புரியலை" காமேஸ்வரன் குரலில் படிக்கவும்!

      நீக்கு
    3. ஸ்ரீராம், காமேஸ்வரன் னா "கேட்டேளா" நு சேர்த்துக்கணுமாக்கும்! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. இல்லை கீதா... இந்த ஸீனில் இது மட்டும்தான். முதலிரவு அறையில் நாகேஷ் சொல்லும் கதையைக் கேட்டுவிட்டு காமேஸ்வரன் சற்று உரக்கக் கத்துவது!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா காமேஸ்வரன்.. புதுசா இருக்கே:)).. இது கேள்வி கேட்கும் மூட்டில இருந்தபோது எனச் சொல்ல வந்தேன் கீதா:) புதன்கிழமை:))

      நீக்கு
  33. இன்னிக்கு இட்லி தினமாம்!! அதிரா அண்ட் ஏஞ்சல் உங்க வீட்டுல இட்லி தினமாம்! கொண்டாட்டம் உண்டா!

    யார் வீட்டுல எல்லாம் இன்னிக்கு பிள்ளைங்க இட்லி செஞ்சு அம்மாக்கு கொடுத்தீங்க/ கொடுத்தாங்க!?? ரெண்டு டேயும் செலிப்ரேட் செஞ்சு!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லியா... ஆட்டோ... ஆட்டோ...

      "எங்கே போகணும் ஸார்?"

      "எங்கேயாவது போப்பா... முதல்ல இந்த இடத்தைக் காலி பண்ணி ஓடணும்"

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில..ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. இண்டைக்கு எங்கட வீட்டில ஓசைசைசை.. அதுவும் பிசுக்கங்காய் ஓசை:)) விரைவில் எதிர்பாருங்கள்.. இதோ வந்து கொண்டிருக்கிறது படங்களோடு:)) ஹா ஹா ஹா:).

      நீக்கு
    4. என் பக்கத்தில் பூஸார் பிசுக்கங்காய் ஓசை ன்னு சொன்னா அதை பார்த்து... ஆ என்ன பிசுக்கு தோசையா ந்னு நினைச்சு ஓடிப் போயிடாதீங்க அது வேற ஒன்னுமில்ல பீர்க்கங்காய் தோசைதான்...கைல பிசுக்குனு ஒட்டினாலும் எல்லாரும் சாப்பிட்டுருங்க!

      பூஸார் ஒரு எச்சரிக்கை மணி அடிச்சு வைச்சுட்டேன்....பாருங்க!! ஹா ஹா ஹா ஹா


      கீதா

      நீக்கு
    5. அது சரி நாங்க தூங்கற நேரத்துல தோசை போட்டா சாப்பிடவா முடியும்...ஒயிங்கா நாளைக்கு காலைல எங்க எல்லாருக்கும் சுட்டு தரணும் சூடா சொல்லிப் போட்டேன்

      கீதா

      நீக்கு
    6. அல்லோஓஓ கீதா.. தூங்குறீங்களா?:) அலோஓஓ என் ஓசைக் குறிபுப் போடப்போறேன்ன்ன்ன்:)).. ஆனா இப்போ ஸ்ரீராம் முழிச்சிருப்பார்ர் ஏனெனில் அங்கு ஒரு மணியாகுதெல்லோ:)) ஜன்னல் கேட்டின் லேசா ஆடுமே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    குவாஹாத்தி படங்கள் இன்றுடன் முடிவடைகிறதா ? பையை தூக்கிக் கொண்டு பூங்கொத்துடன் கிளம்பி விட்டார்களே... படங்கள் அனைத்தும் அருமை. அதற்கேற்ற விமர்சனமும் அதை விட அருமை.

    தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் சித்திரங்கள், அல்லது சிற்பங்கள் அழகாக உள்ளன

    வாழ்க்கைத் துணையின் தீடீர் பிரவேசம் அதற்கு பொருத்தமான படங்கள் நன்றாக இருந்தது. ஆரம்ப எஸ்.கே.சி செலவிலிருந்து கல்யாண செலவு வரை அனைத்தும் மிச்சம். ஹா ஹா ஹா.

    "தன்னை தள்ளிக் கொண்டு போகிறவர்" படத்துக்கு பொருத்தமான வாசகம் மிகவும் நன்றாக உள்ளது. ரசித்தேன்.

    தொடர்கதை விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. மாமனார், அதிலும் மாமியார் மெச்சும் மருமகளாக ஸ்ருதி நடந்து கொள்கிறார். ஷ்ரவண் முன்பு மாதிரி பாடும் யாரையும் விமர்சிக்காமல் தன்னுள் இருக்கும் இசை ஞானத்தை எதற்காக பூட்டி வைக்க வேண்டும்? விமர்சகராய் முதல் அத்தியாயத்தில் அறிமுகம் ஆன போது, புனைப்பெயருடன் சந்தோஷித்த வேளைகளை ஏன் மறக்க கற்றுக் கொள்ள வேண்டும்? தான்தான் "துலா" என்பதை பெண் பார்க்கும் படலத்திலேயே மறைக்காமல் நேர்மையாக ஒத்துக்கொண்ட ஷ்ரவண் திருமணத்திற்குப் பின் உன்னை மட்டும் விமர்சிக்கமாட்டேன் என்று கூறி விட்டு சிறிது காலம் மற்றவர்களை விமர்சித்து விட்டு பின் ஏன் விமர்சனத்தின் மேல் ஈடுபாடில்லாமல் இருக்க வேண்டும். தன் போக்கில் தன் வேலைகளை எப்போதும் போல் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தால், தன் மனைவியின் புகழ் மனதை உறுத்தாமல் இருக்க மனது ஒத்துழைத்து போகுமில்லையா? வீண் மனஸ்தாபங்களை புகைய விடாமல் இசை பயணத்தில் ஜோடியாக, இன்பமாக பயணிக்கலாமில்லையா?
    இத்தனையும் சொல்லி இடைப்பட்ட இரு நாட்களில் ஷ்ரவணுக்கு யார் புரிய வைப்பது? ஆரம்ப பகுதியிலோ, ஏதோ ஒரு பகுதியிலோ, இல்லை, முடிவில் சுபமாக இணைக்க வழி வகுக்கும் தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

    இந்த கதையை எழுதுபவர்களில் தாங்களும் இருக்கிறீர்கள் என நானும் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறேன். என்னுடன் சகோதரி அதிராவும் கூறி வருகிறார்.. பார்ப்போம்.! ஆரம்பமென்று ஒன்றிருந்தால் முடிவும் அவசியம் ஒரு நாள் தலைக்காட்டத்தானே செய்யும். நல்ல முடிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா...

      ஆஹா...

      அசத்திட்டீங்க...

      தினமலரில் பிரச்னைக்கு கடிதங்களுக்கு பதில் எழுதலாம் நீங்கள். உண்மையிலேயே அருமையான தீர்ப்பு, அருமையான அலசல். துலா தன் பெருமையைத் தானே தொலைத்துக் கொண்டு ஸ்ருதியிடம் அசூயைப்படுவது நியாயமல்ல... தன்னைத் திருத்திக்கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்பு...

      நீக்கு
    2. வணக்கம்

      நீண்ட கருத்துரை கண்டும், பொறுமையாக படித்து பதில் தந்து பாராட்டியமைக்கு நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  35. கதைகளைப் படிக்கும் யாராவது கதாசிரியர்களை யூகித்துஇருக்கிறார்களாஎனக்கு முடிய வில்லை அப்படி தனித்துவமாய் வித்தியாசமாய் தெர்யவும் இல்லை

    பதிலளிநீக்கு
  36. படங்கள் அருமை.

    தாழ்வு மனப்பான்மை, ஈகோவினால் தடுமாறும் ஷ்ரவணின் மனம் மாறுமா? காத்திருக்கிறோம். தொடர்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வீட்டிற்கு எதிர்பாராத விருந்தாளிகள். அதனால் கொஞ்சம் பிசி. வேலையெல்லாம் முடித்துவிட்டு கணினியைத் திறந்தால், ஒரே கும்மி! எல்லாம் அதிரா உபயம். நான் ஏதாவது கடை தொடங்கினால் முதல் போணி அதிராதான் செய்ய வேண்டும்.

      நீக்கு
    2. பானுக்கா வந்ததோ வந்தீங்க பூஸார் பிசுக்கு தோசை போடப் போறாங்களாம்

      கீதா

      நீக்கு
    3. ///ஒரே கும்மி! எல்லாம் அதிரா உபயம். நான் ஏதாவது கடை தொடங்கினால் முதல் போணி அதிராதான் செய்ய வேண்டும்.///

      ஆவ்வ்வ்வ்வ் பானுமதி அக்கா நீங்க ஸ்ரீராமுக்கு அக்காவேதேன்ன்ன்ன்:)).. என்னை இருவரும் திசை திருப்பப் பார்க்கிறீங்க:)) நான் ஸ்ரெடியா புளியமரத்தைப் பிடிச்சுக் கொண்டு நிற்கிறேன்ன்ன்ன்:)).. இன்று பானுமதி அக்காவின் கதை என்றுதான் முதலாவதா ஜம்ப்பினேனாக்கும்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஉ:))...

      கீதா பிசுக்கு ஓசைக்கு ரெடியோ?:)..

      நீக்கு
  37. பாவம் இடுப்பு வலி பிடித்தவரை போய், இப்படி சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  38. குவாஹாத்தி படங்கள் படு ஜோர்.
    அதற்குக் கொடுக்கும் காப்ஷங்களும் சூப்பர்.

    கதை வளைஞ்சு வளைந்து போகிறது புன்னாக வராளி போல.
    ரியல் லைஃப் சிடுவேஷன் மாதிரி.
    யாராக இருந்தாலும் பாராட்டுகள்.

    நல்ல மனம் கொண்டவர்கள் மாமியாரும்.மாமனாரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!