நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
11.9.26
இருபதாயிரம் ரூபாய் கடன்காரர்கள்
ஓய்வு பெற்ற சில நாட்களில், நான் முன்பு வேலை செய்த நாட்களுக்கு ஆடிட் நடந்தது. என்னை எதிர்பார்த்தார்கள்.
அதாவது என் அலுவலக நண்பர்களும் எதிர்பார்த்தார்கள். ஆடிட்காரர்களும் எதிர்பார்த்தார்கள்!
ஆடிட் தொடங்கி இரண்டு நாள் கழித்து ஒருமுறை தலைகாட்டி, அறிமுகம் செய்துகொண்டு விட்டு "தேவைப்பட்டால் கூப்பிடுங்கள்" என்றேன். "சும்மாதானே இருக்கிறீர்கள்.. தினமும் இப்படி வாருங்களேன்" என்றார்கள் ஆடிட் கண்காணிப்பாளரும், பழைய அலுவலக அதிகாரியும்!
அடிமை போல அவர்களுக்கு இலவச வேலை செய்ய வைக்கலாம் என்கிற ஆசை. அப்படி செய்பவர்களும் அல்லது செய்தவர்களும் உண்டு.
ஓரளவு இந்த அழைப்பை எதிர்பார்த்திருந்ததால் மென்மையாக சாக்கு சொல்லி மறுத்து விட்டேன். எதிர்பார்த்தபடியே அதில் அவர்களுக்கு சின்ன கடுப்பு இருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததை முதல் நாளிலேயே தர எனக்கு சம்மதமில்லை. தராமல் இருக்கவும் முடியாது. தொல்லை.
அப்புறம் அவ்வப்போது போனில் அழைத்து பயமுறுத்தும் கேள்விகள் கேட்டார்கள். அதற்கெல்லாம் முடிந்தவரை போனிலேயே சமாளித்து வந்தேன். முடியாதவற்றை கடைசி நாளுக்கு முதல் நாள் வருவதாகச் சொன்னேன். கடைசி நாள் என்றால் அவர்கள் அறிக்கை தயார் செய்து அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி ஆதரைஸ் செய்து விட்டு கிளம்பி விடுவார்கள்.
எனவே தினமும் அங்கு இருந்த என் நண்பியிடம் - அதாவது அப்படி எண்ணிய பெண்ணிடம் - பேசி விவரம் அறிவேன். அவர் கொடுத்த விவரங்கள் அதிருப்தியைத் தந்தன. அவர்களே எளிதாக எடுத்து விடக்கூடிய ஆட்சேபணைகளை என்மேல் சுமத்தி இருந்தார்கள். அதன் தாத்பர்யம் புரிந்தது என்றாலும் நான் பழகிய என் அலுவலக நண்பர்களிடம் நான் எதிர்பார்க்காத அனுபவங்களும் கிடைத்து கசப்பூட்டின.
கடைசி நாளுக்கு முதல் நாள் சென்று அவர்களது ஆட்சேபணைகளை வாங்கி கணினியிலேயே ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி எல்லாவற்றையும் கேன்சல் செய்தேன். இதை அந்தப் பெண் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு ஒருபடி மேலே என்றாலும் எங்களிலிருந்து சென்றவர்தான்.
நான் நிறைய பெனால்டி கட்டுமளவு மாட்டிக் கொண்டேன் என்று நினைத்திருப்பார் போல. நான் ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டு வருகையில் 'ஆமாம்ல' என்பது போல தலையாட்டி ஆமோதித்துக் கொண்டே வந்தார். அதாவது கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், மனம்திருந்திருந்தால் அவரே செய்திருக்கலாம். அவர்கள் செலவை குறைக்க நினைத்திருப்பார்கள் போல.
அங்கு வேலைபார்த்த என் நண்பர்கள் எனக்காக நிற்கவில்லை என்பதோடு புரளியும் பேசினார்கள் என்பது என் வருத்தம். நன்றாகத்தான் பழகினேன் ; பழகினார்கள். மனதில் ஒட்டாததற்கு அரசு காரணங்கள் கூட சில இருந்தன.
தடைகள் எல்லாவற்றையும் நீக்கி விட்டு கிளம்பும்போது அவர்கள் எதிர்பார்ப்பை சிறிய அளவில் நிறைவேற்றி விட்டு வந்தேன்.
இதுபற்றி பின்னர் இன்னொரு சகாவிடம் பேசினேன். அவரும் பெண்தான். இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தப்பட்டார். அவர் அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்புறம் நடந்ததுதான் ஹைலைட். ஒரு அவசரத்தேவை என்று இருபதாயிரம் ரூபாய் கடன் கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் பென்ஷன் வந்துவிடும்,தந்து விடுகிறேன் என்றார். அவர்மேல் நான் வைத்திருந்த மதிப்பு காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் உடனே கொடுத்தேன்.
அவர் சொன்ன நாளில் அது வரவில்லை. அதை வாங்க நான் பட்ட பாடு இருக்கிறதே.... கூச்சமே இல்லாமல் தவணை வாங்கினார். கூசாமல் சாக்குகளை சொன்னார். வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எண்ணும்போதுதான் அவர்கள் குடும்பத்தில் இல்லாத முக்கிய செலவுகளும் அணிவகுத்தன.
இன்னும் கூட இதுபோன்ற சில உண்டு. ரொம்பத் தெரிந்தவர்கள்தான். மதிப்பானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் பண விஷயத்தில் ஊழலாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.
ஏற்கனவே இரண்டுபேரிடம் மாட்டிக் கொண்டு நான் பட்ட அவஸ்தைகளில் அந்தக் கோபத்தை அவரிடம் காட்டி திரும்ப வாங்கினேன். மிச்ச இரண்டுபேர் 'உங்க அப்பனுக்கும் பெப்பே' என்றுதான் இருக்கிறார்கள்.
அப்பாடி... எப்படி எல்லாம் இருக்கிறார்கள் மனிதர்கள்... என்னை பார்த்தாலே முகத்தில் 'புன்னகை மன்னன்' என்று எழுதி ஒட்டி இருக்கிறது போலும்...
கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. ‘‘யார்றாப்பா அது, ஜானகியாடா?'' என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
‘‘ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?''
‘‘சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே, அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?'' என்று கூறி நிறுத்தினாள், பாட்டி.
‘‘அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?'' என்றாள் பாட்டி.
‘‘எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!''
‘‘அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை... அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்காட்டாலும் போ & எனக்காவது
கொடுக்கலாமோல்லியோ நீ?''
பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான்.
சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன். காவேரி வண்டலில் செழித்த பயிர் கண்ணாடிப் பாட்டி.
பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, சுருக்சுருக்கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை & பாட்டி ரொம்பப் பெரியவள்.
மோகமுள் நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்.
நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்) கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடித்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை.
தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார். சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலி நிலத்துக்கு வாரிசாகி விட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம்.
தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்த மாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா' என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் பைசல் செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம்.
என்னை விட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.
இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.
எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒரு நாள் வாரப் பத்திரிகை ஒன்றிலிருந்து மூன்று பேர் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்' என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.
என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனோ, என்னவோ, யார் கண்டார்கள்?
(தி.ஜா. கல்கி (27.08.1961) இதழில் எழுதியதில் இருந்து)
புவியின் சராசரி வெப்பநிலையானது மிக மோசமான வரம்பான 1.5 டிகிரி செல்சியஸ் என்பதை நெருங்குவது பற்றி..
புவியின் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இயற்கைப் பேரிடர்களால் மனித குலம் பேரழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய வெப்பமயமாதலின் முக்கியமான வரம்புதான் 1.5 டிகிரி செல்சியஸ் அளவாகும். இது 1850 மற்றும் 1900-க்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை தொடர்ந்து அளவிட்டு வரும் விஞ்ஞானிகள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்பதை அடைவது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதனை வரம்பாக அறிவித்திருந்தனர். எப்போதும் சொல்வது போல இது ஏதோ வெப்பநிலை குறித்த சாதாரண எச்சரிக்கையல்ல, இந்த வரம்பு என்பது 20 ஆண்டுகால உலகளாவிய சராசரி அதிகரிப்பைக் குறிக்கிறது; மாறாக, வெப்பமான ஒரு மாதம் அல்லது ஆண்டு பற்றிய தகவல் அல்ல. அதோடு, வெறும் 1.5 டிகிரி செல்சியஸ்தானே என சாதாரண மக்களும் சரி படித்தவர்களும்கூட நினைக்கலாம். காரணம், இன்று சென்னையில் 30 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அடுத்த வாரம் 10 டிகிரி வரை கூடி 40 டிசிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தாலும்கூட நாம் தாங்கிக் கொள்கிறோம் என்று கணக்கிடுவோம். ஆனால், உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் நுழையப்போகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிப்பது அதற்கும் மேல். பூமி உருவாகி 400 கோடி ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. பூமி தோன்றியபோது இருந்த வெப்பநிலை, மழை அளவு என எதுவுமே இப்போது இல்லை. இதற்குக் காரணமாக படிப்படியாக மனிதன் செய்த மாற்றங்கள்தான். சரி, தற்போது புவியின் சராசரி வெப்பநிலை எவ்வளவு என்றால், 1.4 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. 2015ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகள் உலகின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்பதைத் தொடுவதற்குள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. ஆனால், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை தொட்டுவிடும், அதனை தடுக்கவியலாது என்பதே. சரி, பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்தால் என்னவாகும் என்ற கேள்விக்கு, அதனால் நிகழும் மாற்றங்களை மக்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது என்கிறார்கள். அதாவது, பூமி தன்னுடைய சராசரி வெப்ப நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். பூமியில் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன் வெப்ப நிலைக்கு ஏற்ப புயலை உருவாக்கும், சூறாவளிகள் உருவாகும், பனிப்பாறைகள் உருகும், இனி மழை என்றே பெய்யாது, அதி தீவிர கனமழை தான். மனிதன் இனி என்ன நினைத்தாலும் இந்த மாற்றங்களை தடுக்க முடியாது. சரி, இன்று 1.5 டிகிரி செல்சியஸை அடைந்துவிடுவோம், பிறகு அது நின்றுவிடப்போகிறதா, இல்லை அடுத்து 2 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து, அதே வேகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை மாறிவிடும். ஆனால் என்ன அதன் பிறகு மனிதன் கவலைப்பட எதுவும் இருக்காது, மனிதனும் இருக்க மாட்டான் என்றே கருதலாம்.
'படிக்காத மேதை' படத்தில் சிவாஜி அப்பாவியாக நடித்திருப்பார். சௌகார் ஜானகி அவரது அறிவுசார் மனைவி. இந்தப் பாடலில் சிவாஜி வழக்கமான டான்ஸ் போல இல்லாமல் செய்திருப்பார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் படத்தில் கமல் 'துள்ளித்துள்ளி நீ பாடம்மா' பாடலில் ஆடும் நடனம் கிட்டத்தட்ட இதே சாயலில் இருக்கும், கவனித்திருக்கிறீர்களா?
எலாலாவற்றையும் படித்துவிட்டு கருத்திடலாம் என்றால் இன்று வெளியில் செல்லும் வேலை இருக்கிறது. மதியம் வரை பிசி. பிறகு, ஆறிய கஞ்சி ஆகிவிடும் என்பதால்.....
பண விஷயத்தில் நாணயமாக நடந்துகொள்பவர்கள் அபூர்வம். பிள்ளைகளிடமே, தன் காலத்துக்குப் பிறகுதான் எல்லாம் என்ற நிலையைக் கடைபிடிக்க வேண்டிய காலம் எனும்போது, மற்றவர்கள் எம்மாத்திரம்?
இந்தப் பண விஷயத்தில் நான் நெருங்கிய சொந்தங்களிடமே ஏமாந்திருக்கேன் நிறைய. அதைப் பற்றிச் சொல்வதானால் நிறையச் சொல்லணும். வீணாக மன வருத்தங்கள் ஏற்படும். ஆகவே போனது போகட்டும் என எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணி ஓரளவு மறந்தும் ஆச்சு.
இன்று காலை நடைப்பயிற்சியின்போதுதான் நான் பணி புரிந்தபோது நடந்த சம்பவங்கள் சிலவற்றை மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன். தனியார், வெளிநாடு எனும்போது நிறையவே நம் துறையிலேயே சிக்கல்கள் வரும்.
நல்ல பாஸ் அல்லது பாஸுக்கு பாஸ் அமைந்துவிட்டால், நிறைய சம்பவங்களில் அலர்ட் ஆகிவிடுவோம், நம் தரப்பை சரியாகச் சொல்ல முடியும், நமக்கு ஆப்பு வைக்க நினைப்பவர்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட இயலும். அரசுப் பணி என்றால் சாத்தியமில்லை.
தமிழக அரசுப்பணியில் கட்சி சார்பு நிறைய இருப்பதால் சங்கடங்கள் ஏற்படலாம். மத்திய அரசுப் பணியில் அப்படி இருக்காது என நினைக்கிறேன். அங்கேயும் லஞ்ச லாவணியங்கள் இருந்தாலும் மாநிலங்களைப் பார்க்கையில் மத்தியில் ஓரளவுக்கு வேலைகள் தானாகவே நடக்க வாய்ப்பு இருக்கிறது.
கிட்டத்தட்ட பாரதியின் சாயலில் வந்திருக்கும் கவிதைகள். மிக அருமையாகச் சொல்லி இருக்கார். அந்த வயதில் வாழ்க்கை பற்றிய அவரின் கருத்துகள் மிகப் பண்பட்ட எழுத்தில் வடித்திருக்கார். நமஸ்காரங்கள் பாஹே.
பூமியின் வெப்பநிலை....கொஞ்சம் அதீதமான எச்சரிக்கைதான்.
வல்லரசு நாடுகள் கண்டுகொள்ளப் போவதில்லை. வளரும் நாடுகளை இதனைச் சொல்லி முடக்குவது நடக்கும். ஏன் கெமிக்கல் குண்டுகளை வீசணும், போரிடணும் என்றெல்லாம் யாரும் கேட்க இயலாது
ஆகக்கூடி அழிவு நிச்சயம்.. எப்போது என்பதுதான் கேள்வி. நம்முடைய எத்தனையாவது தலைமுறை பாதிக்கப்பபடுமோ... நாமே மறுபிறப்பு எடுத்து வந்தாலும் வந்திருக்கலாம்!!!
அணு ஆயுதம் போன்ற சமாச்சாரங்களை விடுங்கள்.. நம் வசதிகளான ஏஸி, ஆண்ட்ராயிட் போன், குளிர்சாதனப்பெட்டி இன்ன பிற சமாச்சாரங்களும் இருக்கின்றனவே ஓசோன் லேயரை ஓட்டை போட.. அவை இல்லாமல் நாம் இனி இருக்க முடியுமா? மன்னர் காலத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள்!
ஹிஹிஹி... பழகி விட்டது... இன்னும் சேர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதாவது இன்று பாரதியார் நினைவு தினம். அதற்காக ஒன்று வேலீடாக தேடிக்கொண்டிருந்தேன். நடுவில் வேலைமாறி விஷயம் மறந்து விட்டது!
ஸ்ரீராம் சொன்னதும் தான் என்னோட இன்னிக்குப் பதிவு இன்னமும் வெளியாகலையேனு நினைவு வந்தது. போய்ப் பார்த்தேன். அது நாளைக்கு ஷெட்யூல் ஆகி இருந்திருக்குத் தப்பாகப் போயிருக்கு. மறுபடி எல்லாத்தையும் சரி செய்து வெளியிட்டு விட்டு வந்தேன். :(
ஜானகிராமன் பதிவுக்கு யாரெல்லாம் பின்னூட்டமிடப்போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதுவும் பெயருக்கு தி.ஜா என்று ஆரம்பித்து அவரிடமிருந்து விலகிப் போய் விடாமல்.
சிவாஜி பதிவெல்லாம் வம்புக்கு இழுத்து கலகலப்பை ஏற்றுவதற்காக என்று தெரிகிறது.
வரலாற்றுக்கு இன்று மரியாதை இல்லை என்று ஆகிவிட்டது. அதற்கு மரியாதை கொடுத்தால் பலர் மரியாதை போய்விடும் என்பதால்.
கசடதபற என்ற வார்த்தையைப் பார்த்ததுமே ஏகாந்தன் ஸார் நினைவுக்கு வந்து விட்டார். அந்த வல்லின வார்த்தைத் தொடரை எபி ஆசாமிகளுக்கு முதன்முதல் அறிமுகப்படுத்தியதே அவர் தான். அதே மாதிரி கவிஞர் விக்ரமாதித்யன் பற்றியும்.
நெல்லைக்கண்ணன் பேச்சாளர் மட்டுமே தானா? அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்.
வாங்க ஜீவி ஸார்.. தி ஜானகிராமன் பற்றி படித்து சிலாகித்துக் கொள்வோர் உண்டு. என்ன பதில் சொல்லிவிட முடியும்! ராமன் என்னும் KGY மாமா அவரின் தீவிர ரசிகர். அவர் படித்தால் அவர் ஏதேனும் சொல்லக்கூடும். அவர் சொல்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். அர்த்தத்துடன் இருக்கும்.
நெல்லை கண்ணன் தமிழ் படித்து அதை வைத்து பிழைத்தவர். குசும்புப் பேச்செல்லாம் உண்டு என்றாலும் அவர் பேச்சை நான் ரசிக்கிறேன். என்னைப்போல் இன்னும் யாரேனும் ரசிக்கலாம் என்று இங்கு இணைக்கிறேன்.
அவர் மகன் எழுத்தாளர் சுகா என்னும் சுரேஷ் கண்ணன். 'மூங்கில் மூச்சு' உள்ளிட்ட சுவாரஸ்யமான புத்தகங்கள் எழுதி இருக்கிறார். திரைப்பட இயக்குனரும் கூட. அவர் வேணுவனம் என்று ஒரு வலப்பக்கமும் வைத்திருக்கிறார். திருநெல்வேலி காரர்களுக்கெல்லாம் அவர் தின்னவேலி என்பதாலேயுயே அவர்கள் மீது ஒரு பாசம் உண்டு.
அம்மா வந்தாள் வாசித்திருக்கிறீர்களா? மரப்பசு வாசித்திருக்கிறீர்களா? தி.ஜா.வாசிப்பில் எனக்குப் பிடித்தது எது!? -- என்ற தலைப்புகளிலெல்லாம் அலசலாம் ஸ்ரீராம். அப்படியான கட்டுரைகளெல்லாம் இல்லாமல் நாமும் தி.ஜா.வைப் பற்றி எழுதினோம் என்ற போக்கில் இப்படியே மேலோட்டமாக நம் வாசிப்பு இருந்தால் உள்ளார்ந்த வாசிப்பு என்ற அருமையே நமக்கு கிடைக்காமல் போய்விடும் ஸ்ரீராம். கொஞ்சம் கொஞ்சமாக வேறே லெவலுக்கு எபி-யை உயர்த்தப் பாருங்கள். 'ஹி..ஹி.. அதெல்லாம் எதுக்கு?எபி-யை நடத்துவதே சும்மா பொழுது போக்குக்குத் தான்' என்றால் இப்படியே இருக்கட்டும், ஸ்ரீராம்.
எனக்கு எழுத இருக்கும் அரிப்பையும் தீர்த்துக்கொள்ள வேண்டும். நான் ரசித்தவற்றை பகிர வேண்டும். உங்கள் விருப்பத்தை, ரசனையை பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.. நாம் நினைப்பது போல இவர்களெல்லாம் இப்படி இப்படி நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பொழுதுபோக்கு என்றால் ஆம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு! சிலருக்கு தூக்கமே பொழுதுபோக்கு இல்லையா ஜீவி ஸார்?!!
முதலில் "மோகமுள்" படிச்சப்போப் பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும். 65/66 வருஷத்தில் இருக்கலாம். மேலாவணி மூல வீதி பெரியப்பா வீட்டில் மாடிப்படிகளில் உட்கார்ந்து படித்தேன். ஏன்னா வாசலில் அப்பா வந்தால் தெரியும், புத்தகத்தை ஒளிச்சு வைச்சுடலாம் என்பது தான். ஆனால் கதை விறுவிறுப்பாகப் படிச்சேன் என்றாலும் ஒண்ணும் புரியலை என்பது தான் உண்மை. will come afterwards.
ஆமாம், மீனாக்ஷி பதிப்பகம் வெளியீடு என்பதாக நினைவு. கதை என்னமோ ஐம்பதுகளில் வந்ததாக என் அம்மா சொல்லுவார். ஏனெனில் இது சுதேசமித்திரனில் வந்திருக்கு. தாத்தா வீட்டில் சுதேசமித்திரன் வாங்குவார்கள் என்பதால் அதில் வெளிவந்த இந்த நாவலை அம்மா படிச்சிருக்கார்.
மலர் மஞ்சம் இதுக்கு எல்லாம் பின்னர் சுதேசமித்திரனில் தான் வந்திருக்கு. அதுவும் மோகமுள் அளவுக்குப் பெரிய நாவல். இதிலும் ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் தான் கதையின் முக்கியக் கரு. அதில் வரும் இளம்பெண் ஒருத்தி, அதாவது கதாநாயகி பாலாவோ, பாலியோ ஏதோ பெயர் பிறக்கையிலேயே உறவுக்காரப் பிள்ளையுடன் பெரியவர்கள் மட்டுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்க. அதை நோக்கியே செல்ல வேண்டிய கதை பாலிக்கு ஏற்படும் வேறொரு சிநேகிதத்தால் தடுமாறும். அவள் விரும்புவது வேற்று ஜாதிப் பையன். அவனும் அவளை விரும்புவான். ஆனால் முடிவு கொஞ்சம் தடுமாறிப் பின்னர் பாலி அதற்குக் காணும் தீர்வே இந்தக் கதையின் முக்கியக் கரு. பாலியின் கல்யாணத்துக்காகக் கட்டில் செய்வார்கள். பிரம்மாண்டமான நல்ல தேக்குக் கட்டில். பாலி அதில் மலர் மஞ்சம் விரித்துப் படுக்கப் போவது யாருடன்? இது தான் அந்த நாவலின் முக்கியக் கரு. அதனால் தான் கதைக்கு மலர் மஞ்சம்னு பெயரும் கூட. எனக்கு முடிவு அவ்வளவாய்ப் பிடிக்கலை. :(
ஏற்கெனவே சொல்லி இருக்கேன். "அம்மா வந்தாள்" நாவலை நான் சித்தப்பா வீட்டில் இருக்கையிலேயே கையெழுத்துப் பிரதியாகப் படிச்சேன். சித்தப்பா அந்த நாவலை என்னும் பெயரில் இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அதையும் படிச்சேன். அப்போவெல்லாம் அந்த நாவல் அவ்வளவாகப் பிடிக்கலை. புரியவும் இல்லை. பின்னால் தான் மரப்பசுவும் படிச்சப்புறமாப் புரிஞ்சது. அம்மா வந்தாள் சிவசுவைப் பார்த்தால் (கதையின் மூலமாகத் தான்) பாவமாக இருக்கும். ஆனால் கல்கியில் வந்தப்போவே தொடராகப் படிச்சது அன்பே, ஆரமுதே எனக்குப் பிடிச்சதும் கூட. ஆனால் முகநூலில் ஒருத்தர் அன்பே, ஆரமுதே நாவலைக் கிழி கிழினு கிழிச்சிருந்தார். தி.ஜா. எழுதியதிலேயே மோசமானது எனச் சொல்லி இருந்தார். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பார்வை. அம்பை அவர்கள் உயிர்த்தேன், செம்பருத்தி இரண்டும் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அநேகமாக அறுபதுகளின் கடைசி அல்லது எழுபதுகளில் வந்திருக்கலாம். ஏனெனில் எண்பதுகளிலேயே ஆனந்த விகடன் மாற ஆரம்பித்து விட்டது. அதிலும் ஸ்டெல்ல புரூஸ் ஒரு சகிக்க முடியாத நாவல் எழுதிக் கொண்டிருந்தார். அதுக்கப்புறமாவே நான் விகடனைத் தேடிப் போய்ப் படிக்கவில்லை.மரப்பசுவைத் திண்ணை இதழிலே கிழிச்சு உதறி இருப்பார்.
தி.ஜானகிராமனுக்கு சாகித்ய அகடமி பரிசு "சக்தி வைத்தியம்" சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைச்சது. மற்ற பிரபல நாவல்களுக்குக் கிடைக்கலை. ஆனால் சாகித்ய அகடமியில் உறுப்பினராக இருந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் இதைக் கடுமையாக ஆக்ஷேபித்துவிட்டுப் பதவியிலிருந்து விலகி விட்டார்.
திண்ணை/ மரப்பசு விமரிசனம்/அம்பை அவர்களுக்குப் பின்னர் வாக்கியம் விடுபட்டிருக்கிறது. பழைய திண்ணை இதழில் அதாவது தொண்ணூறுகளில் இருந்திருக்குமோ என்னமோ, அம்பை அவர்கள் மரப்பசு நாவலைக் கிழி கிழினு கிழிச்சு இருப்பார்.
ஜானகிராமன் என்றாலே ஆழ்ந்த நிதானம் தவறாத பார்வை, லேசான நகைச்சுவை, இயல்பான பேச்சு எல்லாமே நினைவில் முன் நிற்கும். அவர் என்ன சொன்னாலும் ஆர்வமாகக் கேட்பவன் நான். அன்பே ஆரமுதே, மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு இவற்றை வெகுவாக ரசித்துப் படித்திருக்கிறேன். அதேபோல் மலர் மஞ்சம் படித்து ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். அது எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அற்புதமான சிறு கதைகள். கண்ணாடிப் பாட்டி கற்பனைப் பாத்திரம் இல்லை என்று நம்புகிறேன். திஜா பற்றிப் படிப்பதில் ஒரு விசேஷமான சந்தோஷம் எனக்கு உண்டு. இன்றைய பதிவு எனக்கு நிறைவை அளித்தது.
ஜானகிராமன் அக்ரகாரத்து மொழியை (மட்டுமே) கையாள்கிறார் என்ற குற்றச் பாட்டு உண்டு. எழுத்தாளர் என்றால் எல்லாம் தெரிந்து எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நாம் செய்கிற பிழை. அக்கிரகாரத்து பாஷையிலும் நளினங்கள் இருக்கும். ரசனையாக இருக்கும். இதை ஒப்புக் கொள்வது சாதி வெறி என்று பார்க்கப்படும் ஆச்சரியம் நம்மிடையே உண்டு. " ஆமாம் எனக்கு அம்மாமி பாஷை தான் தெரியும் ஆத்தா பாஷை தெரியாது " என்று அவர் (வெறுத்துப் போய்) சொன்னது நினைவுக்கு வருகிறது. எல்லாம் சொன்ன பின்பு அன்பே ஆரமுதே கதையில் சந்திரா என்கிற பெண்ணைக் காதலித்த பையன் தற்கொலை செய்து கொள்வது மிகவும் முரணாக எனக்குப் பட்டது. அது பற்றி எல்லாம் அவரிடம் கேட்க முடியும் என்கிற விஷயம் எனக்கு அப்போது தெரியாது.
// ஆமாம் எனக்கு அம்மாமி பாஷை தான் தெரியும் ஆத்தா பாஷை தெரியாது " என்று அவர் (வெறுத்துப் போய்) சொன்னது நினைவுக்கு வருகிறது. //
இது நான் அறியாதது. அப்படி ஒரு குற்றச்சாட்டு வந்ததா? அவர் தன் பாணியில் எழுதினார். தனக்கென ஒரு பாணி. அவர் பாணியை சிலர் பின்பற்றினர். பின்பற்ற முயற்சித்தனர் - பாலகுமாரன் போல.
குற்றச்சாட்டு இருந்துவந்தது உண்மைதான். அதன் காரணமாக ஜானகிராமன் ஒரு லிமிடெட் ஜீனியஸ் என்று கூட விவாதம் நடந்தது உண்டு. பாலகுமாரன் எந்த அளவுக்கு ஜானகிராமன் பின்பற்றி எழுதி வெற்றி கண்டார் என்று எனக்கு தெரியவில்லை. நான் பாலகுமாரனை படித்தது உண்டு ஆனால் எதுவுமே என் நினைவில் இல்லை. இதற்கு அவர் தான் காரணம் என்று நான் அநியாயமாக சொல்லக்கூடாது.
//அன்பே ஆரமுதே கதையில் சந்திரா என்கிற பெண்ணைக் காதலித்த பையன் தற்கொலை செய்து கொள்வது மிகவும் முரணாக எனக்குப் பட்டது. // அன்பே, ஆரமுதே வில் அந்தச் சந்திரா கதாபாத்திரம் மிக உயர்ந்த ஒரு கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவளைக் காதலிக்கும் ரங்கனோ ஒரு போக்கிரி. பல பெண்களை ஏமாற்றியவன். அல்லது ஏமாற்றக் காத்திருப்பவன். அத்தகையவனைச் சந்திரா உண்மையாகக் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கும் தயாராவாள். ஆனால் அவனால் அதை ஏற்க முடியாமல் உள்ளம் உறுத்தும். ஓர் நல்ல பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றலாமா என்னும் எண்ணம் அவனைப் போட்டுத் துன்புறுத்தும். நடுவில் அவன் டொக்கியைப் பார்க்க நேர்கிறது. சினிமா நடிகன் அருண்குமாரால் ஏமாற்றப்பட்டு நொந்து போயிருந்த டொக்கிக்கும் சரி, சந்திராவைத் தன்னால் மணந்து கொண்டு நல்லபடியாய் வாழ்க்கை நடத்துவது என்பது நடக்காத காரியம் எனப் புரிந்த ரங்கனுக்கும் சரி ஒத்துப் போகிறது. ஆனாலும் சந்திராவின் மேல் உள்ள காதல் ரங்கனைத் தான் அவளை அடைய முடியாமல் போகிறதே என்னும் எண்ணம், அவனை டொக்கியுடனும் சேர்ந்து வாழ மனசில்லாமல் சந்திராவை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். இது தான் நான் புரிந்து கொண்டது.
இல்லை ஸ்ரீராம், கதாநாயகர் அனந்தராமன் என்னும் முதியவர். கதாநாயகி அவர் மணக்கவேண்டிய பெண்மணி. நாளை கல்யாணம் என்றால் இன்னிக்கு வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறார் அனந்த ராமன். அப்புறமாய் நடப்பது தான் கதையே. இதில் சந்திரா, டொக்கி, ரங்கன், அருண்குமார் எல்லோருமே அனந்தராமனால் நல்வழிப்படுத்தப்படும் குணாதிசயங்கள் உள்ளவர்கள்.
ரொம்ப நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷம் ஸார். ஸ்ரீராமிற்கு சொல்கிற மாதிரி மேலே மனசில் பட்ட சில கருத்துக்களை சொல்லியிருக்கிறேண், எதிர்கால எபியை எப்படியெல்லாம் சிறப்பு படுத்தலாம் என்ற கோணத்தில். அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தால் கோர்வையாக நாம் நிறைய விஷயங்களை நம் பார்வைகளில் அலச வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர் குழுவிலிருக்கும் தாங்களும் இதில் கவனம் செலுத்தலாம். ஃபேஸ் புக்கில் ஜானகுராமன் வாசிப்புக்காகவே தத்தம் பண்ணின ஒரு குழு இருக்கிறது. அதில் ஆக்கபூர்வமாக நான் கலந்து கொள்வதுண்டு முடிந்தால் தாங்களும் அந்த முக நூல் குழு பதிவுகளைப் பார்க்ஜலாம். கலந்து கொள்ளவும் செய்யலாம்.
எழுதும் பாணி என்பது ஒரு எழுத்தாளர் இயல்பாக எழுதும் போது தானாக வெளிப்படும் ஸ்டைல். எழுதி ஆக வேண்டும் என்று மனதில் ஒரு விதமான வெறி வரும்போது எழுத்தாளர் எழுதத் தொடங்கி விடுகிறார். பிழைப்பு காகவோ காசு வேண்டும் என்றோ எழுதுகிற எழுத்து ஃபேக்டரி உற்பத்தி செய்யும் வணிகப் பொருளாக இருப்பவற்றை பற்றி நாம் பேசவில்லை. ஒரு நிகழ்ச்சி அது பற்றி எழுதப்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஒரு சிறந்த எழுத்தாளருக்கு அளிக்கக்கூடும். அதை மதித்து அவர் எழுதும்போது அவருடைய உணர்வு நமக்கும் எளிதாக இயல்பாக தரப்படுகிறது. இதுதான் எழுத்தாளரின் வெற்றி என்று நான் நினைக்கிறேன். வேறு சில எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை பார்க்கும் போது அவர்கள் இயல்பாக அது பற்றி எழுத வேண்டும் என்கிற தூண்டுதல் காரணமாக எழுதுவதாக எனக்கு தோன்றுவதில்லை. துரதிஷ்டவசமாக திரு ஜெயகாந்தன் எழுதிய சில கதைகளுக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கிறது. இது நம் ஒவ்வொருடைய பண்பாட்டின் அல்லது புரிதலின் வெளிப்பாடு.
ஜெயகாந்தன் பிராமணர்களை உயர்த்தி ஒரு பக்கம் பேசினாலும் முடிந்தவரை அவர்களைத் தான் பிறழ்வது போலக் காட்டி இருப்பார். இது அவரால் தவிர்க்க முடியலைனு நினைச்சுப்பேன்.
@ஸ்ரீராம், எழுத்து, பாட்டு, ரசனை இதெல்லாம் ஒரு வரம். எல்லோருக்கும் லபிக்காது. உங்களுக்கு வாய்த்திருக்கு. அதை நீங்கள் உங்கள் மனப்போக்குப்படி தானாக எப்படி வருதோ/வருமோ அப்படித் தான் பகிரணும். இதெல்லாம் ஒருத்தர் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. ரா.கி.ரங்கராஜன் அவர்கள் "கதை" எழுதச் சொல்லிக் கொடுத்து அதைப் புத்தகமாகவும் போட்டார். சுஜாதா கூட ஆரம்ப எழுத்தாளர்களுக்குப் பல அறிவுரைகள் சொல்லி இருக்கார். ஆனால் அதைப் பூரணமாக எல்லாராலும் பின்பற்ற முடியாது என்பதோடு எல்லாம் அடி ஆழத்திலிருந்து தன்னிச்சையாக ஊற்றுப் போல் மேலே கொப்பளித்துக் கொண்டு வந்து பீறிட்டு அடிக்கணும். அது உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது.
இன்றைய வெள்ளி சிதறல்கள் பதிவு எப்போதும் போல் அருமையாக உள்ளது..
தங்கள் அலுவலக பணியில் தற்போதும் ஏற்படும் பணிச்சுமைகளைப்பற்றி அறிந்து கொண்டேன். தங்களுடன் கூடவே பணி செய்தவர்கள் உங்களின் இரக்க சுபாவத்தையும் அறிந்தவர்கள் அல்லவா? அதனால்தான் இந்த சங்கடங்கள்.
அவசரமாக தன் தேவையை அழாத குறையாக சொல்லி நம்மிடம் கடன் வாங்குபவர்கள் எப்படியாவது அதேபோல் உடனே தந்து விட வேண்டுமென ஒருபோதும் சிந்திப்பதில்லை. "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்." என்ற சொல்வழக்கு இலங்கை வேந்தனோடு போய் விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
எங்கள் அம்மா முன்பு அடிக்கடி எங்களுக்கு அறிவுரையாக சொல்லும் வரி நினைவுக்கு வருகிறது. "தாட்சண்யம் தன நாசம்" என்பார்கள்.. ஆனால், நம்மால் தாட்சண்யம் படாமல் இருக்க இயலவில்லை. அதன் விளைவுதான் நமக்கு வருகின்ற "புன்னகை மன்னன்" பட்டம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
அதில் ஒருவன் சொன்னான்,"அந்த பில்டர் கிட்ட லட்சம் லட்சமாய் ஏமாந்திருக்கான்.. நான் வாங்கினதை பெரிசா சொல்றான்.." இவர்களை என்ன சொல்ல.. என்னவோ நாம் பணம் வைத்திருப்பதே இவர்களுக்கு கொடுக்கத்தான் என்று நினைப்பு.
/அந்த பில்டர் கிட்ட லட்சம் லட்சமாய் ஏமாந்திருக்கான்.. நான் வாங்கினதை பெரிசா சொல்றான்.." இவர்களை என்ன சொல்ல.. /
ஆம். கஸ்டந்தான் இவர்கள் போன்றவர்களை என்ன சொல்ல...." தோழனோடும் ஏழ்மை பேசேல்" என்ற பழமொழியை அழித்து விட்டு," "தோழனாகியும் உண்மை பேசேல்" என்ற புது மொழியை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது இவர்கள் பேச்சு. கொடுத்ததை நன்றி மறவாமல் சொன்ன நேரத்தில் திருப்பித்தர முடியாதவர்கள் தோழனாக இருக்க அருகதையற்றவர்கள். இவர்களின் செயல்கள் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
கஹ மேடம் கருத்து நன்று. என் அப்பா, சின்ன வயதிலேயே, நண்பர்கள் யாரேனும் கடன் கேட்டால், அவர்களில் யாருக்காவது இரண்டு ரூபாய் கொடு. அது திரும்பி வராது. நமக்கு அனுபவம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கார். என் பையனிடமும் அந்த அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறேன்
ஶ்ரீராம்... அவங்கட்ட லட்ட லட்சமா ஏமாந்துட்டு.......... இப்படி, கடன் வாங்கியவர் சொல்லும் தைரியம் இருக்கிறது என்றால், நம் நல்ல குணத்தை வைத்து நமக்கு வேள்ளையடிக்கும் குணம் உள்ளவர் என்று புரிகிறது. அவர் எங்கோ யாரிடமோ பெருந்தனத்தை இழந்து அனுபவத்தை உணர்வார்..
இப்படி சொல்லிக் கொள்வதெல்லாம் நம் ஆறுதலுக்கு தான். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். 'முதலில் கொஞ்சம் ரூபாய் கொடு, அவர்கள் திருப்பி தர விட்டால் மேற்கொண்டு தர வேண்டாம்' என்கிற கொள்கை எல்லாம் நானும் வைத்திருந்தேன். இது எந்த வகையில் இவர்கள் நமக்கு அறிமுகம், என்ன நிலைமை, என்பதை பொறுத்து அமைந்தது. என்ன சொல்ல.... எல்லாம் விதி!
நெல்லை கண்ணன் பேச்சை நானும் ரசிப்பேன். அவருடைய மகனா சுகா?1 சுகாவின் வலை பக்கத்தை படித்த பொழுதுதான், எங்கள் பிளாக் என் கண்ணில் பட்டது. சரியாகச் சொன்னால் GMB - சுகா - எ.பி. இப்படித்தான் எ.பி.யில் இணைந்தேன்.
GMB சாரின் வலைப்பக்கத்தில் அவர் தொடரும் வலைப்பூக்கள் லிஸ்ட் இருந்தது,அதில் சுகாவின் வலைப்பக்கம், எ.பி. எல்லாம் கண்ணில் பட்டன. சுகாவை படித்து விட்டு, எ.பி.க்கு வந்தேன்.
ஓய்விற்குப்பிறகும் அலுவலக குடைச்சல் தொடர்வது வேதனை. மோசமான டெட் லைன், மோசமான எச்சரிக்கை! இனிமெல் மழை என்பஹு இருக்காது, cloud burst மாதிரி ஒரு வருட மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்று எங்கேயோ படித்தேன், அல்லது யாரோ சொன்னார்கள்.
நன்றி. கண்ணாடித்துண்டு என்ன சொல்கிறது என்று எனக்கும் விளங்கவில்லை. அங்கு இருந்தது, பழசாச்சேன்னு பகிர்ந்து விட்டேன். புரியாததால் ஏதோ பெரிய விஷயமா இருக்கும்னு நினைச்சேன்!
காணொளிகளில் மூன்று சிவாஜி படங்களா? உயர்ந்த மனிதன்! நல்ல படம். சிவாஜி அந்த ரோலில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். நீங்கள் பகிர்ந்திருக்கும் காட்சியில் சிவாஜியின் ஆக் ஷன், சௌகாரின் ரியாக்ஷன் இரண்டுமே சிறப்பு இல்லையா? என்னதான் கோடீஸ்வரி என்றாலும் தினசரி வைர நெக்லெஸ் போட்டுக் கொண்டு மினுக்குவாரா என்ன? "கணவன் கையால் அடி வாங்குவது சுகம்" ஹிஹி!
அது அப்போது என்பது மட்டுமில்லை. அதை அன்பின் அடையாளமாக பார்க்கப்பட்டிருக்கிறது. கண்டுகொள்ளாத கணவன் தன்னை மதித்து கேள்வி கேட்டு கோபப்பட்டு.... அதை டெலிபோனில் சொல்வார் சௌகார்.
தங்கள் தந்தையின் வாழ்க்கைப் பற்றிய கவிதையை ரசித்தேன். நன்றாக எழுதியுள்ளார்.
மற்ற இரு மொழி பெயர்ப்பு கவிதைகளும் நன்றாக உள்ளது. அவரின் நினைவுகள் புகைப்படத்தின் கண்ணாடியை உடைத்தவாறு வெளிவந்து கனவுகளின் ஊடே நடமாடியிருப்பதை அழகாக அந்தக் கவிதை எடுத்துக் காட்டுகிறது. வித்தியாசமான கவிதைகள். ரசித்தேன்.
சிவாஜி அவர்கள் மாபெரும் நடிகர். உணர்ச்சிகளை முகபாவத்தில் சுலபமாக காட்டக் கூடியவர். உயர்ந்த மனிதன் படத்தை நானும் பல முறை பார்த்துள்ளேன்.
மோகமுள் நாவல் நானும் படித்ததில்லை. கதையை வடித்த திரு ஜானகிராமன் அவர்களின் கட்டுரையை படித்த போது அந்த நாவலையும் படிக்க வேண்டும் போல இருக்கிறது. அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அது என்ன பஞ்சாபிக் கவிதைகளுக்குத் தாவிட்டீங்க? ஆனாலும் ஓகே. சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்ப்பில் விருதுகள் வாங்கினவர். நெல்லை கண்ணன் இந்தத் தரம் திறக்கத் தகராறு செய்யலை. ஆனாலும் நான் படிக்கவில்லை. சாண்டில்யனை மட்டும் இந்த வாரம் விட்டுட்டீங்க போல. அதுக்குப் பதிலாகத் தி.ஜானகிராமனா? இதை ஏற்கெனவே 2,3 தரம் படிச்சிருக்கேன்.
உங்கள் அலுவலக அனுபவங்கள் போல அநேகமாகப் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். உயர்ந்த மனிதன் சினிமாவை எத்தனை தரம் பார்க்கிறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மைகளை நான் பதிவு எழுத ஆரம்பிச்சப்போக் குறிப்பிட்டுவிட்டுச் சிலர் என்னுடன் வாக்குவாதஙகளில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட நூறு கருத்துக்களையும் தாண்டிச் சென்றது. அந்தப் பதிவைத் தேடினேன். கிடைக்க மாட்டேன் என்கிறது.
மின் தமிழில் எங்களுடன் வழிகாட்டி போல் இருந்த திருமதி சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் அம்மாள் அவர்கள் எட்டையபுரத்துக்காரர். அவர் எட்டையபுரம் அரண்மனைக்குச் சென்று ஒரு பேட்டியை எடுத்து மின் தமிழிலும் வெளியிட்டிருந்தார். அரண்மனைவாசிகள் அனைவரையும் தெரியும் என்பதோடு அந்த அம்மையார் சமூக நீதித் துறையின் செயலாளர். மு.மு. ஜெயலலிதாவுக்கு மிகவும் தெரிந்தவரும் கூட. அவர் பல விஷயங்களைச் சொல்லி அதெல்லாம் மின் தமிழில் மரபு விக்கியில் பதிவாக்கி இருக்கேன். ஆனால் இப்போதைய மின் தமிழின் பொறுப்பாளர் மரபு விக்கியை மூடி விட்டார். இப்போ மரபு விக்கி வலைப் பக்கமும் வருவதில்லை. வந்தாலும் திறப்பதில்லை. திரு மோகனரங்கன் முன் கூட்டியே தன்னோட எழுத்துக்களை எல்லாம் நீக்கித் தனியாகப் போட்டு விட்டார். நானும் இன்னும் சிலரும் எழுதியவை எல்லாம் நிறைய இருக்கின்றன. எதையும் போய்ப் பார்க்கக் கூட முடிவதில்லை.
வித்தியாசமான கவிதைகளை தர வேண்டும் என்ற எண்ணம் தான் சரஸ்வதி ராம்நாத் வேற ஏதோ புகழ்பெற்ற மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார் இல்லை எட்டயபுரம் அரண்மனையில் சென்று பேட்டி எடுத்து வெளியிட்டாரா ஆச்சரியம் தான் அப்போதைய அந்த மின் குழுமங்களை நான் மிஸ் செய்து இருக்கிறேன்
கடவுளே, எட்டையபுரம் அரண்மனைக்குப் போய்ப் பேட்டி எடுத்தது மின் தமிழ் சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் மேடம் அவர்கள். சரஸ்வதி ராம்நாத் அந்தச் சமயம் இருந்திருப்பாங்களாங்கறதே சந்தேகம். ஏனெனில் இவர் 2000 ஆம் ஆண்டு பிறக்கும் முன்னரே இறந்துவிட்டார் என நினைவு. சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் மாநில அரசுப் பணியில் சமூக நலத்துறை செயலாளர். ஐஏஎஸ் கிரேட் அலுவலர். இவர் தான் எட்டையபுரம் போனார்.
அப்போது பல குழுமங்களில் இருந்திருக்கேன். மின் தமிழ், முத்தமிழ், பண்புடன்(இப்போவும் இருக்கு), நம்பிக்கை, ரத்னமாலை எனப் பல குழுமங்கள். ஓம் நமசிவாய என ஒரு குழுவே இருந்தது. அநேகமாக எல்லாவற்றிலும் பங்கெடுத்திருந்தாலும் மின் தமிழ், முத்தமிழ், நம்பிக்கை, ரத்னமாலையில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபாட்டுடன் இருந்தேன். இவற்றில் மின் தமிழ், முத்தமிழில் மாடரேட்டராக அட்மினில் இருந்தேன். கதை, கட்டுரை, கவிதைப்போட்டி எல்லாம் நடத்தி நடுவராக இருந்திருக்கேன். அப்போல்லாம் எல்லாத்துக்கும் நேரம் என்னமோ நிறைய இருந்தது. இப்போ இங்கே எங்கள் ப்ளாகிலேயே காலையிலிருந்து இருக்கேன். ஆனாலும் இன்னமும் முடியலை. :(
இந்த பூமிப்பந்து குறித்த விஷயமும் எல்லோரும் சொல்லிட்டு இருக்காங்க. என்ன நடக்கப் போகுதோ?
ஜிவாஜியின் படிக்காத மேதை எல்லாம் தியேட்டரில் காசு கொடுத்துப் போய்ப் பார்த்த ஒரு சில படங்களில் ஒன்று. பின்னால் சென்னைத் தொலைக்காட்சி உபயத்திலும் பார்த்தாச்சு. :)
1970-களில் பல முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளோடு வெளிவந்த இலக்கிய இதழான கசடதபற , இப்போது அச்சுப் பிரதியாக வெளிவர இருக்கிறது. தொகுத்து , சரிபார்த்து, வெளியிடும் வேலையை சில மாதங்களாக மேற்கொண்டுள்ளார் விமலாதித்த மாமல்லன்.
ஜானகிராமன் மோகமுள், அம்மா வந்தாள் எண்பதுகளில் படித்திருக்கிறேன். கதைக்கான கரு பாட்டியம்மா , ஏனைய கதாபாத்திரங்கள் பற்றி இன்றைய பகிர்வில்தான் படித்து அறிந்தோம்.
எல்லாவற்றையும் படித்து சந்தோஷம். நான் படிக்கும் நேரம் உங்களுக்கு சனிக்கிழமையே பிறந்திருக்கும். தி ஜா அவர்களின் எல்லா நாவலையும் படித்தாச்சு. மீண்டும் மீண்டும் படிப்பது அன்பே ஆரமுதே. வெகு சகஜமான எழுத்து. மரப்பசு மட்டும் கொஞ்சம் நிரடும்.
உங்கள் தந்தையின் கவிதை மிக ரசிக்கும்படி. சரஸ்வதி ராம்னாத்ஹ் மொழிபெயர்ப்புகளைக் கலைமகளிலும் மஞ்சரியிலும் படித்த நினைவு. அருமையாக இருக்கிறது காண்ணாடிச் சிதறல்களின் கவிதை.
சு காவின்எழுத்தும்,அவர் அப்பாவின் பேச்சும் மிகப் பிடிக்கும். திருனெல்விருந்து எப்பொழுதும் என் மேஜையில். எங்கள் ஊர்க்காரரின் எழுத்து என்பதால். திரு நெல்வேலிக்கே சென்ற சுகம்.
எலாலாவற்றையும் படித்துவிட்டு கருத்திடலாம் என்றால் இன்று வெளியில் செல்லும் வேலை இருக்கிறது. மதியம் வரை பிசி. பிறகு, ஆறிய கஞ்சி ஆகிவிடும் என்பதால்.....
பதிலளிநீக்குபண விஷயத்தில் நாணயமாக நடந்துகொள்பவர்கள் அபூர்வம். பிள்ளைகளிடமே, தன் காலத்துக்குப் பிறகுதான் எல்லாம் என்ற நிலையைக் கடைபிடிக்க வேண்டிய காலம் எனும்போது, மற்றவர்கள் எம்மாத்திரம்?
வாங்க நெல்லை.. இன்று நானும் காலை பத்து மணிக்கு வெளியில் கிளம்பனும். ராமச்சந்திரா ரெவியூ. திரும்ப மாலை ஆகி விடும்.!
நீக்குசில நண்பர்களின் உண்மை முகம் கூட பண விஷயத்தில் பல்லிளித்து விடுகிறது. கடன் என்று சொல்லிதான் வாங்குகிறார்கள். கேட்கும்போது பணிவு...
இந்தப் பண விஷயத்தில் நான் நெருங்கிய சொந்தங்களிடமே ஏமாந்திருக்கேன் நிறைய. அதைப் பற்றிச் சொல்வதானால் நிறையச் சொல்லணும். வீணாக மன வருத்தங்கள் ஏற்படும். ஆகவே போனது போகட்டும் என எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணி ஓரளவு மறந்தும் ஆச்சு.
நீக்குநான் சொந்தங்களிடம் ஏமாற்றவில்லை. நட்புகளிடம்தான்...
நீக்குஇன்று காலை நடைப்பயிற்சியின்போதுதான் நான் பணி புரிந்தபோது நடந்த சம்பவங்கள் சிலவற்றை மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன். தனியார், வெளிநாடு எனும்போது நிறையவே நம் துறையிலேயே சிக்கல்கள் வரும்.
பதிலளிநீக்குநல்ல பாஸ் அல்லது பாஸுக்கு பாஸ் அமைந்துவிட்டால், நிறைய சம்பவங்களில் அலர்ட் ஆகிவிடுவோம், நம் தரப்பை சரியாகச் சொல்ல முடியும், நமக்கு ஆப்பு வைக்க நினைப்பவர்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட இயலும். அரசுப் பணி என்றால் சாத்தியமில்லை.
// இன்று காலை நடைப்பயிற்சியின்போதுதான் நான் பணி புரிந்தபோது நடந்த சம்பவங்கள் சிலவற்றை மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன்.//
நீக்குஇன்றைய பதிவு படித்த பாதிப்பா?
// அரசுப் பணி என்றால் சாத்தியமில்லை. //
ஆம். அங்கு என்னதான் நட்பாயிருந்தாலும் வேறொன்றும் குறுக்கிடுகிறது!
தமிழக அரசுப்பணியில் கட்சி சார்பு நிறைய இருப்பதால் சங்கடங்கள் ஏற்படலாம். மத்திய அரசுப் பணியில் அப்படி இருக்காது என நினைக்கிறேன். அங்கேயும் லஞ்ச லாவணியங்கள் இருந்தாலும் மாநிலங்களைப் பார்க்கையில் மத்தியில் ஓரளவுக்கு வேலைகள் தானாகவே நடக்க வாய்ப்பு இருக்கிறது.
நீக்குகட்சி சார்பு மட்டுமல்ல, சாதீய விஷ(ய)ங்களும் உண்டு!
நீக்குவாழ்க்கையைப் பற்றிய பாஹே கவிதை மிகவும் நன்று. சந்தத்துடன் எழுதப்பட்ட கவிதையை புதுக் கவிதை போல நான்கு வரிகளை எட்டு வரிகளாக வெளியிட்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎண்ணங்களை உருவாக்கும் கருத்துகளோடு கூடிய கவிதை
நன்றி பாஹே.. நன்றி நெல்லை!
நீக்குகிட்டத்தட்ட பாரதியின் சாயலில் வந்திருக்கும் கவிதைகள். மிக அருமையாகச் சொல்லி இருக்கார். அந்த வயதில் வாழ்க்கை பற்றிய அவரின் கருத்துகள் மிகப் பண்பட்ட எழுத்தில் வடித்திருக்கார். நமஸ்காரங்கள் பாஹே.
நீக்குஅப்பா இருந்திருந்தால் என்னருகே ஈஸிசேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். இந்த பாராட்டுதல்களை சொன்னால் மீசையைத் தடவியபடி புன்னகைத்துக் கொள்வார்.
நீக்குபூமியின் வெப்பநிலை....கொஞ்சம் அதீதமான எச்சரிக்கைதான்.
பதிலளிநீக்குவல்லரசு நாடுகள் கண்டுகொள்ளப் போவதில்லை. வளரும் நாடுகளை இதனைச் சொல்லி முடக்குவது நடக்கும். ஏன் கெமிக்கல் குண்டுகளை வீசணும், போரிடணும் என்றெல்லாம் யாரும் கேட்க இயலாது
ஆகக்கூடி அழிவு நிச்சயம்.. எப்போது என்பதுதான் கேள்வி. நம்முடைய எத்தனையாவது தலைமுறை பாதிக்கப்பபடுமோ... நாமே மறுபிறப்பு எடுத்து வந்தாலும் வந்திருக்கலாம்!!!
நீக்குmmmmmmm, இப்போதைய உலக நிலைமை இதைத் தான் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கு. ஆனாலும் பிரச்னைகள் முடிவில்லாமல் தொடர்கின்றன.
நீக்குஅணு ஆயுதம் போன்ற சமாச்சாரங்களை விடுங்கள்.. நம் வசதிகளான ஏஸி, ஆண்ட்ராயிட் போன், குளிர்சாதனப்பெட்டி இன்ன பிற சமாச்சாரங்களும் இருக்கின்றனவே ஓசோன் லேயரை ஓட்டை போட.. அவை இல்லாமல் நாம் இனி இருக்க முடியுமா? மன்னர் காலத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள்!
நீக்குமுழுதும் படிக்க நேரமில்லை. ஒரு கிணற்றில் இவ்வளவு தவளைகளை அடைத்திருக்கிறாரே பகவான்..... ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஹிஹிஹி... பழகி விட்டது... இன்னும் சேர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதாவது இன்று பாரதியார் நினைவு தினம். அதற்காக ஒன்று வேலீடாக தேடிக்கொண்டிருந்தேன். நடுவில் வேலைமாறி விஷயம் மறந்து விட்டது!
நீக்குஸ்ரீராம் சொன்னதும் தான் என்னோட இன்னிக்குப் பதிவு இன்னமும் வெளியாகலையேனு நினைவு வந்தது. போய்ப் பார்த்தேன். அது நாளைக்கு ஷெட்யூல் ஆகி இருந்திருக்குத் தப்பாகப் போயிருக்கு. மறுபடி எல்லாத்தையும் சரி செய்து வெளியிட்டு விட்டு வந்தேன். :(
நீக்குஅப்படியா.. பார்றா....
நீக்குமதியம் வரை வெளி வேலைகள் என்பதால் 3 1/2 க்கு எழுந்து தினப்படி நடைப்பயிற்சியை முடித்துவிட்டேன். 9.5 கிமீ, 11K Steps. இனி பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குவாங்க.. வாங்க.. நன்றி.
நீக்குஜானகிராமன் பதிவுக்கு யாரெல்லாம் பின்னூட்டமிடப்போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதுவும் பெயருக்கு தி.ஜா என்று ஆரம்பித்து அவரிடமிருந்து விலகிப் போய் விடாமல்.
பதிலளிநீக்குசிவாஜி பதிவெல்லாம் வம்புக்கு இழுத்து கலகலப்பை ஏற்றுவதற்காக என்று தெரிகிறது.
வரலாற்றுக்கு இன்று மரியாதை இல்லை என்று ஆகிவிட்டது. அதற்கு மரியாதை கொடுத்தால் பலர் மரியாதை போய்விடும் என்பதால்.
கசடதபற என்ற வார்த்தையைப் பார்த்ததுமே ஏகாந்தன் ஸார் நினைவுக்கு வந்து விட்டார். அந்த வல்லின வார்த்தைத் தொடரை எபி ஆசாமிகளுக்கு முதன்முதல் அறிமுகப்படுத்தியதே அவர் தான். அதே மாதிரி கவிஞர் விக்ரமாதித்யன் பற்றியும்.
நெல்லைக்கண்ணன் பேச்சாளர் மட்டுமே தானா? அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்.
வாங்க ஜீவி ஸார்.. தி ஜானகிராமன் பற்றி படித்து சிலாகித்துக் கொள்வோர் உண்டு. என்ன பதில் சொல்லிவிட முடியும்! ராமன் என்னும் KGY மாமா அவரின் தீவிர ரசிகர். அவர் படித்தால் அவர் ஏதேனும் சொல்லக்கூடும். அவர் சொல்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். அர்த்தத்துடன் இருக்கும்.
நீக்குநெல்லை கண்ணன் தமிழ் படித்து அதை வைத்து பிழைத்தவர். குசும்புப் பேச்செல்லாம் உண்டு என்றாலும் அவர் பேச்சை நான் ரசிக்கிறேன். என்னைப்போல் இன்னும் யாரேனும் ரசிக்கலாம் என்று இங்கு இணைக்கிறேன்.
அவர் மகன் எழுத்தாளர் சுகா என்னும் சுரேஷ் கண்ணன். 'மூங்கில் மூச்சு' உள்ளிட்ட சுவாரஸ்யமான புத்தகங்கள் எழுதி இருக்கிறார். திரைப்பட இயக்குனரும் கூட. அவர் வேணுவனம் என்று ஒரு வலப்பக்கமும் வைத்திருக்கிறார். திருநெல்வேலி காரர்களுக்கெல்லாம் அவர் தின்னவேலி என்பதாலேயுயே அவர்கள் மீது ஒரு பாசம் உண்டு.
அம்மா வந்தாள் வாசித்திருக்கிறீர்களா? மரப்பசு வாசித்திருக்கிறீர்களா? தி.ஜா.வாசிப்பில் எனக்குப் பிடித்தது எது!? -- என்ற தலைப்புகளிலெல்லாம் அலசலாம் ஸ்ரீராம். அப்படியான கட்டுரைகளெல்லாம் இல்லாமல் நாமும் தி.ஜா.வைப் பற்றி எழுதினோம் என்ற போக்கில் இப்படியே மேலோட்டமாக நம் வாசிப்பு இருந்தால் உள்ளார்ந்த வாசிப்பு என்ற அருமையே நமக்கு கிடைக்காமல் போய்விடும் ஸ்ரீராம்.
நீக்குகொஞ்சம் கொஞ்சமாக வேறே லெவலுக்கு எபி-யை உயர்த்தப் பாருங்கள்.
'ஹி..ஹி.. அதெல்லாம் எதுக்கு?எபி-யை நடத்துவதே சும்மா பொழுது போக்குக்குத் தான்' என்றால் இப்படியே இருக்கட்டும், ஸ்ரீராம்.
எனக்கு எழுத இருக்கும் அரிப்பையும் தீர்த்துக்கொள்ள வேண்டும். நான் ரசித்தவற்றை பகிர வேண்டும். உங்கள் விருப்பத்தை, ரசனையை பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.. நாம் நினைப்பது போல இவர்களெல்லாம் இப்படி இப்படி நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பொழுதுபோக்கு என்றால் ஆம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு! சிலருக்கு தூக்கமே பொழுதுபோக்கு இல்லையா ஜீவி ஸார்?!!
நீக்குமுதலில் "மோகமுள்" படிச்சப்போப் பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும். 65/66 வருஷத்தில் இருக்கலாம். மேலாவணி மூல வீதி பெரியப்பா வீட்டில் மாடிப்படிகளில் உட்கார்ந்து படித்தேன். ஏன்னா வாசலில் அப்பா வந்தால் தெரியும், புத்தகத்தை ஒளிச்சு வைச்சுடலாம் என்பது தான். ஆனால் கதை விறுவிறுப்பாகப் படிச்சேன் என்றாலும் ஒண்ணும் புரியலை என்பது தான் உண்மை. will come afterwards.
நீக்குஅப்போதே புத்தகமாக வந்து விட்டதா?
நீக்குஆமாம், மீனாக்ஷி பதிப்பகம் வெளியீடு என்பதாக நினைவு. கதை என்னமோ ஐம்பதுகளில் வந்ததாக என் அம்மா சொல்லுவார். ஏனெனில் இது சுதேசமித்திரனில் வந்திருக்கு. தாத்தா வீட்டில் சுதேசமித்திரன் வாங்குவார்கள் என்பதால் அதில் வெளிவந்த இந்த நாவலை அம்மா படிச்சிருக்கார்.
நீக்குமலர் மஞ்சம் இதுக்கு எல்லாம் பின்னர் சுதேசமித்திரனில் தான் வந்திருக்கு. அதுவும் மோகமுள் அளவுக்குப் பெரிய நாவல். இதிலும் ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் தான் கதையின் முக்கியக் கரு. அதில் வரும் இளம்பெண் ஒருத்தி, அதாவது கதாநாயகி பாலாவோ, பாலியோ ஏதோ பெயர் பிறக்கையிலேயே உறவுக்காரப் பிள்ளையுடன் பெரியவர்கள் மட்டுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்க. அதை நோக்கியே செல்ல வேண்டிய கதை பாலிக்கு ஏற்படும் வேறொரு சிநேகிதத்தால் தடுமாறும். அவள் விரும்புவது வேற்று ஜாதிப் பையன். அவனும் அவளை விரும்புவான். ஆனால் முடிவு கொஞ்சம் தடுமாறிப் பின்னர் பாலி அதற்குக் காணும் தீர்வே இந்தக் கதையின் முக்கியக் கரு. பாலியின் கல்யாணத்துக்காகக் கட்டில் செய்வார்கள். பிரம்மாண்டமான நல்ல தேக்குக் கட்டில். பாலி அதில் மலர் மஞ்சம் விரித்துப் படுக்கப் போவது யாருடன்? இது தான் அந்த நாவலின் முக்கியக் கரு. அதனால் தான் கதைக்கு மலர் மஞ்சம்னு பெயரும் கூட. எனக்கு முடிவு அவ்வளவாய்ப் பிடிக்கலை. :(
நீக்குஏற்கெனவே சொல்லி இருக்கேன். "அம்மா வந்தாள்" நாவலை நான் சித்தப்பா வீட்டில் இருக்கையிலேயே கையெழுத்துப் பிரதியாகப் படிச்சேன். சித்தப்பா அந்த நாவலை என்னும் பெயரில் இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அதையும் படிச்சேன். அப்போவெல்லாம் அந்த நாவல் அவ்வளவாகப் பிடிக்கலை. புரியவும் இல்லை. பின்னால் தான் மரப்பசுவும் படிச்சப்புறமாப் புரிஞ்சது. அம்மா வந்தாள் சிவசுவைப் பார்த்தால் (கதையின் மூலமாகத் தான்) பாவமாக இருக்கும். ஆனால் கல்கியில் வந்தப்போவே தொடராகப் படிச்சது அன்பே, ஆரமுதே எனக்குப் பிடிச்சதும் கூட. ஆனால் முகநூலில் ஒருத்தர் அன்பே, ஆரமுதே நாவலைக் கிழி கிழினு கிழிச்சிருந்தார். தி.ஜா. எழுதியதிலேயே மோசமானது எனச் சொல்லி இருந்தார். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பார்வை. அம்பை அவர்கள் உயிர்த்தேன், செம்பருத்தி இரண்டும் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அநேகமாக அறுபதுகளின் கடைசி அல்லது எழுபதுகளில் வந்திருக்கலாம். ஏனெனில் எண்பதுகளிலேயே ஆனந்த விகடன் மாற ஆரம்பித்து விட்டது. அதிலும் ஸ்டெல்ல புரூஸ் ஒரு சகிக்க முடியாத நாவல் எழுதிக் கொண்டிருந்தார். அதுக்கப்புறமாவே நான் விகடனைத் தேடிப் போய்ப் படிக்கவில்லை.மரப்பசுவைத் திண்ணை இதழிலே கிழிச்சு உதறி இருப்பார்.
நீக்குதி.ஜானகிராமனுக்கு சாகித்ய அகடமி பரிசு "சக்தி வைத்தியம்" சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைச்சது. மற்ற பிரபல நாவல்களுக்குக் கிடைக்கலை. ஆனால் சாகித்ய அகடமியில் உறுப்பினராக இருந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் இதைக் கடுமையாக ஆக்ஷேபித்துவிட்டுப் பதவியிலிருந்து விலகி விட்டார்.
நீக்குஅட கெரகமே....!!
நீக்கு// "அம்மா வந்தாள்" நாவலை நான் சித்தப்பா வீட்டில் இருக்கையிலேயே கையெழுத்துப் பிரதியாகப் படிச்சேன். //
நீக்குWow...
திண்ணை/ மரப்பசு விமரிசனம்/அம்பை அவர்களுக்குப் பின்னர் வாக்கியம் விடுபட்டிருக்கிறது. பழைய திண்ணை இதழில் அதாவது தொண்ணூறுகளில் இருந்திருக்குமோ என்னமோ, அம்பை அவர்கள் மரப்பசு நாவலைக் கிழி கிழினு கிழிச்சு இருப்பார்.
நீக்குஅம்பையா? மரப்பசுவையா? ஏன்?
நீக்குஓஓ, அப்போ நீங்க மரப்பசு படிச்சதில்லை? அப்போப் புரிஞ்சுக்கறது கஷ்டம். :(
நீக்குஅம்மா வந்தாள் "Appu's Mother" என்னும் பெயரில் வீக்லியில் வந்தது. அதுவும் படிச்சிருக்கேன்.
நீக்குதி ஜானகிராமன் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். நல்ல பகிர்வு. அவரது மோகமுள் நாவலை இன்னும் படிக்கவில்லையே என்ற எண்ணம் வருகிறது.
பதிலளிநீக்குஇப்போது கூட படிக்கலாமே..
நீக்குFree download is available
நீக்குஜானகிராமன் என்றாலே ஆழ்ந்த நிதானம் தவறாத பார்வை, லேசான நகைச்சுவை, இயல்பான பேச்சு எல்லாமே நினைவில் முன் நிற்கும். அவர் என்ன சொன்னாலும் ஆர்வமாகக் கேட்பவன் நான். அன்பே ஆரமுதே, மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு இவற்றை வெகுவாக ரசித்துப் படித்திருக்கிறேன். அதேபோல் மலர் மஞ்சம் படித்து ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். அது எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அற்புதமான சிறு கதைகள்.
பதிலளிநீக்குகண்ணாடிப் பாட்டி கற்பனைப் பாத்திரம் இல்லை என்று நம்புகிறேன். திஜா பற்றிப் படிப்பதில் ஒரு விசேஷமான சந்தோஷம் எனக்கு உண்டு. இன்றைய பதிவு எனக்கு நிறைவை அளித்தது.
நன்றி.. நன்றி.. நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க... பிரார்த்தனை செய்வோம்.
நீக்குஜானகிராமன் அக்ரகாரத்து மொழியை (மட்டுமே) கையாள்கிறார் என்ற குற்றச் பாட்டு உண்டு. எழுத்தாளர் என்றால் எல்லாம் தெரிந்து எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நாம் செய்கிற பிழை. அக்கிரகாரத்து பாஷையிலும் நளினங்கள் இருக்கும். ரசனையாக இருக்கும். இதை ஒப்புக் கொள்வது சாதி வெறி என்று பார்க்கப்படும் ஆச்சரியம் நம்மிடையே உண்டு. " ஆமாம் எனக்கு அம்மாமி பாஷை தான் தெரியும் ஆத்தா பாஷை தெரியாது " என்று அவர் (வெறுத்துப் போய்) சொன்னது நினைவுக்கு வருகிறது. எல்லாம் சொன்ன பின்பு அன்பே ஆரமுதே கதையில் சந்திரா என்கிற பெண்ணைக் காதலித்த பையன் தற்கொலை செய்து கொள்வது மிகவும் முரணாக எனக்குப் பட்டது. அது பற்றி எல்லாம் அவரிடம் கேட்க முடியும் என்கிற விஷயம் எனக்கு அப்போது தெரியாது.
பதிலளிநீக்கு// ஆமாம் எனக்கு அம்மாமி பாஷை தான் தெரியும் ஆத்தா பாஷை தெரியாது " என்று அவர் (வெறுத்துப் போய்) சொன்னது நினைவுக்கு வருகிறது. //
நீக்குஇது நான் அறியாதது. அப்படி ஒரு குற்றச்சாட்டு வந்ததா? அவர் தன் பாணியில் எழுதினார். தனக்கென ஒரு பாணி. அவர் பாணியை சிலர் பின்பற்றினர். பின்பற்ற முயற்சித்தனர் - பாலகுமாரன் போல.
குற்றச்சாட்டு இருந்துவந்தது உண்மைதான். அதன் காரணமாக ஜானகிராமன் ஒரு லிமிடெட் ஜீனியஸ் என்று கூட விவாதம் நடந்தது உண்டு. பாலகுமாரன் எந்த அளவுக்கு ஜானகிராமன் பின்பற்றி எழுதி வெற்றி கண்டார் என்று எனக்கு தெரியவில்லை. நான் பாலகுமாரனை படித்தது உண்டு ஆனால் எதுவுமே என் நினைவில் இல்லை. இதற்கு அவர் தான் காரணம் என்று நான் அநியாயமாக சொல்லக்கூடாது.
நீக்குமுழுதுமல்ல. ஓரளவு முயன்றார். அப்புறம் அவர் தன் பாணிக்கு சென்று விட்டார்! பாலகுமாரன் பக்தர்கள் பாரினில் நிறைய உண்டு!
நீக்குஐயையோ.... Barஆ இல்லை உலகத்திலா?
நீக்குஹிஹிஹி... சோக்கு.. சோக்கு....
நீக்கு//அன்பே ஆரமுதே கதையில் சந்திரா என்கிற பெண்ணைக் காதலித்த பையன் தற்கொலை செய்து கொள்வது மிகவும் முரணாக எனக்குப் பட்டது. // அன்பே, ஆரமுதே வில் அந்தச் சந்திரா கதாபாத்திரம் மிக உயர்ந்த ஒரு கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவளைக் காதலிக்கும் ரங்கனோ ஒரு போக்கிரி. பல பெண்களை ஏமாற்றியவன். அல்லது ஏமாற்றக் காத்திருப்பவன். அத்தகையவனைச் சந்திரா உண்மையாகக் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கும் தயாராவாள். ஆனால் அவனால் அதை ஏற்க முடியாமல் உள்ளம் உறுத்தும். ஓர் நல்ல பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றலாமா என்னும் எண்ணம் அவனைப் போட்டுத் துன்புறுத்தும். நடுவில் அவன் டொக்கியைப் பார்க்க நேர்கிறது. சினிமா நடிகன் அருண்குமாரால் ஏமாற்றப்பட்டு நொந்து போயிருந்த டொக்கிக்கும் சரி, சந்திராவைத் தன்னால் மணந்து கொண்டு நல்லபடியாய் வாழ்க்கை நடத்துவது என்பது நடக்காத காரியம் எனப் புரிந்த ரங்கனுக்கும் சரி ஒத்துப் போகிறது. ஆனாலும் சந்திராவின் மேல் உள்ள காதல் ரங்கனைத் தான் அவளை அடைய முடியாமல் போகிறதே என்னும் எண்ணம், அவனை டொக்கியுடனும் சேர்ந்து வாழ மனசில்லாமல் சந்திராவை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். இது தான் நான் புரிந்து கொண்டது.
நீக்குகதைச்சுருக்கத்தையே சொல்லி விட்டீர்கள்! நான் படித்ததில்லை.
நீக்குஇல்லை ஸ்ரீராம், கதாநாயகர் அனந்தராமன் என்னும் முதியவர். கதாநாயகி அவர் மணக்கவேண்டிய பெண்மணி. நாளை கல்யாணம் என்றால் இன்னிக்கு வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறார் அனந்த ராமன். அப்புறமாய் நடப்பது தான் கதையே. இதில் சந்திரா, டொக்கி, ரங்கன், அருண்குமார் எல்லோருமே அனந்தராமனால் நல்வழிப்படுத்தப்படும் குணாதிசயங்கள் உள்ளவர்கள்.
நீக்குஎன் கருத்து(?)களுக்கு நண்பர் ஜீவி என்ன அபிப்பிராயம் சொல்வார் என்று சற்று எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறேன் !
பதிலளிநீக்குரொம்ப நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷம் ஸார்.
நீக்குஸ்ரீராமிற்கு சொல்கிற மாதிரி மேலே மனசில் பட்ட சில கருத்துக்களை சொல்லியிருக்கிறேண், எதிர்கால எபியை எப்படியெல்லாம் சிறப்பு படுத்தலாம் என்ற கோணத்தில்.
அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தால் கோர்வையாக நாம் நிறைய விஷயங்களை நம் பார்வைகளில் அலச வாய்ப்பு கிடைக்கும்.
ஆசிரியர் குழுவிலிருக்கும் தாங்களும் இதில் கவனம் செலுத்தலாம்.
ஃபேஸ் புக்கில் ஜானகுராமன் வாசிப்புக்காகவே தத்தம் பண்ணின ஒரு குழு இருக்கிறது. அதில் ஆக்கபூர்வமாக நான் கலந்து கொள்வதுண்டு
முடிந்தால் தாங்களும் அந்த முக நூல் குழு பதிவுகளைப் பார்க்ஜலாம். கலந்து கொள்ளவும் செய்யலாம்.
எழுதும் பாணி என்பது ஒரு எழுத்தாளர் இயல்பாக எழுதும் போது தானாக வெளிப்படும் ஸ்டைல். எழுதி ஆக வேண்டும் என்று மனதில் ஒரு விதமான வெறி வரும்போது எழுத்தாளர் எழுதத் தொடங்கி விடுகிறார். பிழைப்பு காகவோ காசு வேண்டும் என்றோ எழுதுகிற எழுத்து ஃபேக்டரி உற்பத்தி செய்யும் வணிகப் பொருளாக இருப்பவற்றை பற்றி நாம் பேசவில்லை. ஒரு நிகழ்ச்சி அது பற்றி எழுதப்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஒரு சிறந்த எழுத்தாளருக்கு அளிக்கக்கூடும். அதை மதித்து அவர் எழுதும்போது அவருடைய உணர்வு நமக்கும் எளிதாக இயல்பாக தரப்படுகிறது. இதுதான் எழுத்தாளரின் வெற்றி என்று நான் நினைக்கிறேன். வேறு சில எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை பார்க்கும் போது அவர்கள் இயல்பாக அது பற்றி எழுத வேண்டும் என்கிற தூண்டுதல் காரணமாக எழுதுவதாக எனக்கு தோன்றுவதில்லை. துரதிஷ்டவசமாக திரு ஜெயகாந்தன் எழுதிய சில கதைகளுக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கிறது. இது நம் ஒவ்வொருடைய பண்பாட்டின் அல்லது புரிதலின் வெளிப்பாடு.
பதிலளிநீக்குஎன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏதாவது எழுத வேண்டுமே என்று எழுதுவதல்லாமல்,, இதை எழுத வேண்டும் என்று தொடங்கினால் தன் பாணி தானே அமையும்.
நீக்குஜெயகாந்தன் பிராமணர்களை உயர்த்தி ஒரு பக்கம் பேசினாலும் முடிந்தவரை அவர்களைத் தான் பிறழ்வது போலக் காட்டி இருப்பார். இது அவரால் தவிர்க்க முடியலைனு நினைச்சுப்பேன்.
நீக்குஅது ஒரு 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா'டெக்னிக்கோ என்னவோ!!
நீக்கு@ஸ்ரீராம், எழுத்து, பாட்டு, ரசனை இதெல்லாம் ஒரு வரம். எல்லோருக்கும் லபிக்காது. உங்களுக்கு வாய்த்திருக்கு. அதை நீங்கள் உங்கள் மனப்போக்குப்படி தானாக எப்படி வருதோ/வருமோ அப்படித் தான் பகிரணும். இதெல்லாம் ஒருத்தர் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. ரா.கி.ரங்கராஜன் அவர்கள் "கதை" எழுதச் சொல்லிக் கொடுத்து அதைப் புத்தகமாகவும் போட்டார். சுஜாதா கூட ஆரம்ப எழுத்தாளர்களுக்குப் பல அறிவுரைகள் சொல்லி இருக்கார். ஆனால் அதைப் பூரணமாக எல்லாராலும் பின்பற்ற முடியாது என்பதோடு எல்லாம் அடி ஆழத்திலிருந்து தன்னிச்சையாக ஊற்றுப் போல் மேலே கொப்பளித்துக் கொண்டு வந்து பீறிட்டு அடிக்கணும். அது உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி சிதறல்கள் பதிவு எப்போதும் போல் அருமையாக உள்ளது..
தங்கள் அலுவலக பணியில் தற்போதும் ஏற்படும் பணிச்சுமைகளைப்பற்றி அறிந்து கொண்டேன். தங்களுடன் கூடவே பணி செய்தவர்கள் உங்களின் இரக்க சுபாவத்தையும் அறிந்தவர்கள் அல்லவா? அதனால்தான் இந்த சங்கடங்கள்.
அவசரமாக தன் தேவையை அழாத குறையாக சொல்லி நம்மிடம் கடன் வாங்குபவர்கள் எப்படியாவது அதேபோல் உடனே தந்து விட வேண்டுமென ஒருபோதும் சிந்திப்பதில்லை. "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்." என்ற சொல்வழக்கு இலங்கை வேந்தனோடு போய் விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
எங்கள் அம்மா முன்பு அடிக்கடி எங்களுக்கு அறிவுரையாக சொல்லும் வரி நினைவுக்கு வருகிறது. "தாட்சண்யம் தன நாசம்" என்பார்கள்.. ஆனால், நம்மால் தாட்சண்யம் படாமல் இருக்க இயலவில்லை. அதன் விளைவுதான் நமக்கு வருகின்ற "புன்னகை மன்னன்" பட்டம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதில் ஒருவன் சொன்னான்,"அந்த பில்டர் கிட்ட லட்சம் லட்சமாய் ஏமாந்திருக்கான்.. நான் வாங்கினதை பெரிசா சொல்றான்.." இவர்களை என்ன சொல்ல.. என்னவோ நாம் பணம் வைத்திருப்பதே இவர்களுக்கு கொடுக்கத்தான் என்று நினைப்பு.
நீக்கு/அந்த பில்டர் கிட்ட லட்சம் லட்சமாய் ஏமாந்திருக்கான்.. நான் வாங்கினதை பெரிசா சொல்றான்.." இவர்களை என்ன சொல்ல.. /
நீக்குஆம். கஸ்டந்தான் இவர்கள் போன்றவர்களை என்ன சொல்ல...." தோழனோடும் ஏழ்மை பேசேல்" என்ற பழமொழியை அழித்து விட்டு," "தோழனாகியும் உண்மை பேசேல்" என்ற புது மொழியை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது இவர்கள் பேச்சு. கொடுத்ததை நன்றி மறவாமல் சொன்ன நேரத்தில் திருப்பித்தர முடியாதவர்கள் தோழனாக இருக்க அருகதையற்றவர்கள். இவர்களின் செயல்கள் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் என்று பாடி விடலாம் கமலா அக்கா.
நீக்குகஹ மேடம் கருத்து நன்று. என் அப்பா, சின்ன வயதிலேயே, நண்பர்கள் யாரேனும் கடன் கேட்டால், அவர்களில் யாருக்காவது இரண்டு ரூபாய் கொடு. அது திரும்பி வராது. நமக்கு அனுபவம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கார். என் பையனிடமும் அந்த அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறேன்
நீக்குஶ்ரீராம்... அவங்கட்ட லட்ட லட்சமா ஏமாந்துட்டு.......... இப்படி, கடன் வாங்கியவர் சொல்லும் தைரியம் இருக்கிறது என்றால், நம் நல்ல குணத்தை வைத்து நமக்கு வேள்ளையடிக்கும் குணம் உள்ளவர் என்று புரிகிறது. அவர் எங்கோ யாரிடமோ பெருந்தனத்தை இழந்து அனுபவத்தை உணர்வார்..
இப்படி சொல்லிக் கொள்வதெல்லாம் நம் ஆறுதலுக்கு தான். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். 'முதலில் கொஞ்சம் ரூபாய் கொடு, அவர்கள் திருப்பி தர விட்டால் மேற்கொண்டு தர வேண்டாம்' என்கிற கொள்கை எல்லாம் நானும் வைத்திருந்தேன். இது எந்த வகையில் இவர்கள் நமக்கு அறிமுகம், என்ன நிலைமை, என்பதை பொறுத்து அமைந்தது. என்ன சொல்ல.... எல்லாம் விதி!
நீக்குஒரு பக்கம் ஸ்ரீராம் சொல்லுவது உண்மை என்றாலும் இன்னொரு பக்கம் நமக்குத் துரோகம் செய்தவர்கள் வேறே விதமாக ஏமாற்றப்படுவதையும் பார்க்கத் தான் செய்கிறோம்.
நீக்குஅதெல்லாம் உட்டாலக்கடி கீதா அக்கா.
நீக்குஇதைப் பொதுவெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கேன். நான் பார்க்கச் சிலது நடந்திருக்கு. முதல்லே புரியலைனாலும் பின்னர் புரிந்தது. :(
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குநலமே நாடுவோம்.
நீக்குஇன்றைய பதிவு எப்போதும் போல் சிறப்பாக
பதிலளிநீக்குஉள்ளது.....
நன்றி செல்வாண்ணா.
நீக்கு
பதிலளிநீக்கு///தாட்சண்யம் தன நாசம்" .. ஆனால், நம்மால் தாட்சண்யம் படாமல் இருக்க இயலவில்லை. ///
கமலா ஹரிஹரன் அவர்களது கருத்து அருமை...
பதிலளிநீக்கு///தாட்சண்யம் தன நாசம்" .. ஆனால், நம்மால் தாட்சண்யம் படாமல் இருக்க இயலவில்லை. ///
கமலா ஹரிஹரன் அவர்களது கருத்து அருமை...
நடிகர் திலகம் தனித்துவமானவர்...
பதிலளிநீக்குஅவரது பாணியே தனி...
உண்மை. தெரிந்ததுதானே...
நீக்கு
நீக்கு/கமலா ஹரிஹரன் அவர்களது கருத்து அருமை/
நன்றி சகோதரரே. நம் பெற்றோர்களின் அறிவுரைகளில் அர்த்தம் உள்ளது. மாறி வரும் காலகட்டங்களில், நாம்தான் அதை கடைப்பிடிக்காமல் தவற விட்டு விட்டோம்.
உலகம் அழிவதில் நவீன விஞ்ஞானத்துக்கு நிச்சயம் பங்கு உண்டு..
பதிலளிநீக்குஅதுவும் இறைவன் வகுத்த விதி!
நீக்குஇன்றைய பதிவு நிறைவாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. நன்றி.
நீக்குநெல்லை கண்ணன் பேச்சை நானும் ரசிப்பேன். அவருடைய மகனா சுகா?1 சுகாவின் வலை பக்கத்தை படித்த பொழுதுதான், எங்கள் பிளாக் என் கண்ணில் பட்டது. சரியாகச் சொன்னால் GMB - சுகா - எ.பி. இப்படித்தான் எ.பி.யில் இணைந்தேன்.
பதிலளிநீக்குசுகாவின் வலைப்பக்கத்தில் எங்கள் பிளாக் எப்படி கண்ணில் பட்டது? ஆசார்யமாய் இருக்கே... விளக்கவும்.
நீக்குGMB சாரின் வலைப்பக்கத்தில் அவர் தொடரும் வலைப்பூக்கள் லிஸ்ட் இருந்தது,அதில் சுகாவின் வலைப்பக்கம், எ.பி. எல்லாம் கண்ணில் பட்டன. சுகாவை படித்து விட்டு, எ.பி.க்கு வந்தேன்.
நீக்குஓ...இவ்வளவுதானா? நான் கூட சுகா ஏதோ எங்கள் பிளாக் வலைப்பக்க லிங்க் எல்லாம் வைத்திருக்கிறார் என்று நினைத்து விட்டேன்!!!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குமோக முள் உருவாக காரணகர்த்தாக்களைப் பற்றி எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் தி.ஜா!
பதிலளிநீக்குஇல்லை?
நீக்குஓய்விற்குப்பிறகும் அலுவலக குடைச்சல் தொடர்வது வேதனை.
பதிலளிநீக்குமோசமான டெட் லைன், மோசமான எச்சரிக்கை! இனிமெல் மழை என்பஹு இருக்காது, cloud burst மாதிரி ஒரு வருட மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்று எங்கேயோ படித்தேன், அல்லது யாரோ சொன்னார்கள்.
குடைச்சல் தொடர்ந்தாலும் சிலரின் உண்மை முகம் தெரிந்தது. இந்த வருடம் எல் நினோ விளைவையே தாங்க முடியவில்லை!
நீக்குRead just now also in FB about the rain, I mean.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். நம்மை ஏமாற்றுபவர்களுக்கு நாம் 'புன்னகை மன்னன்' தான்.
பதிலளிநீக்கு//அந்த பில்டர் கிட்ட லட்சம் லட்சமாய் ஏமாந்திருக்கான்.. நான் வாங்கினதை பெரிசா சொல்றான்.."//
பிறர் கிட்ட ஏமாந்த கதையை சொல்லக்கூடாது போலவே! ஏமாற்றி விட்டு இப்படி வேறு சொல்லி கொள்கிறார்களே!
எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. மேலும் நான் அவருடன்தான் அலைந்தேன்.
நீக்குவழக்கம் போல பாஹேயின் கவிதை அருமை! மொழிபெயர்ப்பு கவிதையில் கண்ணாடித் துண்டு என்ன சொல்கிறது என்பது விளங்கவில்லை.
பதிலளிநீக்குநன்றி. கண்ணாடித்துண்டு என்ன சொல்கிறது என்று எனக்கும் விளங்கவில்லை. அங்கு இருந்தது, பழசாச்சேன்னு பகிர்ந்து விட்டேன். புரியாததால் ஏதோ பெரிய விஷயமா இருக்கும்னு நினைச்சேன்!
நீக்குகாணொளிகளில் மூன்று சிவாஜி படங்களா? உயர்ந்த மனிதன்! நல்ல படம். சிவாஜி அந்த ரோலில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். நீங்கள் பகிர்ந்திருக்கும் காட்சியில் சிவாஜியின் ஆக் ஷன், சௌகாரின் ரியாக்ஷன் இரண்டுமே சிறப்பு இல்லையா?
பதிலளிநீக்குஎன்னதான் கோடீஸ்வரி என்றாலும் தினசரி வைர நெக்லெஸ் போட்டுக் கொண்டு மினுக்குவாரா என்ன? "கணவன் கையால் அடி வாங்குவது சுகம்" ஹிஹி!
// "கணவன் கையால் அடி வாங்குவது சுகம்" ஹிஹி! //
நீக்குஅது அப்போது என்பது மட்டுமில்லை. அதை அன்பின் அடையாளமாக பார்க்கப்பட்டிருக்கிறது. கண்டுகொள்ளாத கணவன் தன்னை மதித்து கேள்வி கேட்டு கோபப்பட்டு.... அதை டெலிபோனில் சொல்வார் சௌகார்.
அட.. உங்களுக்கு காணொளி தெரிந்திருக்கிறது!
நீக்குஅப்பா எழுதிய வாழ்க்கை கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநெல்லை கண்ணன் வ வு சி பற்றி சொன்னதை சில நாட்கள் முன் படித்தேன்.
குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் அவரின் தியாகம்.
சரஸ்வதி ராம்நாத் அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதைகளில் ஒரு சோகம் இருக்கிறது.
உயர்ந்த மனிதன் காட்சி அருமை
தி.ஜானகிராமன் தான் பார்த்த மனிதர்களை மோகமுள் கதாபாத்திரம் ஆக்கிவிட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய ஒரு உண்மையை படித்தேன்.
மிக மோசமான டெட் லைனை பற்றி படித்தேன் வெப்பநிலை அதிகமாகி வருகிறது, மழை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிறைய பேர் இதைபற்றி சொல்லி வருகிறார்கள்.
அனைத்தையும் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கோமதி அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் தந்தையின் வாழ்க்கைப் பற்றிய கவிதையை ரசித்தேன். நன்றாக எழுதியுள்ளார்.
மற்ற இரு மொழி பெயர்ப்பு கவிதைகளும் நன்றாக உள்ளது. அவரின் நினைவுகள் புகைப்படத்தின் கண்ணாடியை உடைத்தவாறு வெளிவந்து கனவுகளின் ஊடே நடமாடியிருப்பதை அழகாக அந்தக் கவிதை எடுத்துக் காட்டுகிறது. வித்தியாசமான கவிதைகள். ரசித்தேன்.
சிவாஜி அவர்கள் மாபெரும் நடிகர். உணர்ச்சிகளை முகபாவத்தில் சுலபமாக காட்டக் கூடியவர். உயர்ந்த மனிதன் படத்தை நானும் பல முறை பார்த்துள்ளேன்.
மோகமுள் நாவல் நானும் படித்ததில்லை. கதையை வடித்த திரு ஜானகிராமன் அவர்களின் கட்டுரையை படித்த போது அந்த நாவலையும் படிக்க வேண்டும் போல இருக்கிறது. அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மொழிபெயர்ப்பு கவிதையையும் புரிந்து கொண்டு பதில் சொன்னதற்கு நன்றி கமலா அக்கா.
நீக்குஅது என்ன பஞ்சாபிக் கவிதைகளுக்குத் தாவிட்டீங்க? ஆனாலும் ஓகே. சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்ப்பில் விருதுகள் வாங்கினவர்.
பதிலளிநீக்குநெல்லை கண்ணன் இந்தத் தரம் திறக்கத் தகராறு செய்யலை. ஆனாலும் நான் படிக்கவில்லை. சாண்டில்யனை மட்டும் இந்த வாரம் விட்டுட்டீங்க போல. அதுக்குப் பதிலாகத் தி.ஜானகிராமனா? இதை ஏற்கெனவே 2,3 தரம் படிச்சிருக்கேன்.
உங்கள் அலுவலக அனுபவங்கள் போல அநேகமாகப் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
உயர்ந்த மனிதன் சினிமாவை எத்தனை தரம் பார்க்கிறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மைகளை நான் பதிவு எழுத ஆரம்பிச்சப்போக் குறிப்பிட்டுவிட்டுச் சிலர் என்னுடன் வாக்குவாதஙகளில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட நூறு கருத்துக்களையும் தாண்டிச் சென்றது. அந்தப் பதிவைத் தேடினேன். கிடைக்க மாட்டேன் என்கிறது.
மின் தமிழில் எங்களுடன் வழிகாட்டி போல் இருந்த திருமதி சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் அம்மாள் அவர்கள் எட்டையபுரத்துக்காரர். அவர் எட்டையபுரம் அரண்மனைக்குச் சென்று ஒரு பேட்டியை எடுத்து மின் தமிழிலும் வெளியிட்டிருந்தார். அரண்மனைவாசிகள் அனைவரையும் தெரியும் என்பதோடு அந்த அம்மையார் சமூக நீதித் துறையின் செயலாளர். மு.மு. ஜெயலலிதாவுக்கு மிகவும் தெரிந்தவரும் கூட. அவர் பல விஷயங்களைச் சொல்லி அதெல்லாம் மின் தமிழில் மரபு விக்கியில் பதிவாக்கி இருக்கேன். ஆனால் இப்போதைய மின் தமிழின் பொறுப்பாளர் மரபு விக்கியை மூடி விட்டார். இப்போ மரபு விக்கி வலைப் பக்கமும் வருவதில்லை. வந்தாலும் திறப்பதில்லை. திரு மோகனரங்கன் முன் கூட்டியே தன்னோட எழுத்துக்களை எல்லாம் நீக்கித் தனியாகப் போட்டு விட்டார். நானும் இன்னும் சிலரும் எழுதியவை எல்லாம் நிறைய இருக்கின்றன. எதையும் போய்ப் பார்க்கக் கூட முடிவதில்லை.
வித்தியாசமான கவிதைகளை தர வேண்டும் என்ற எண்ணம் தான் சரஸ்வதி ராம்நாத் வேற ஏதோ புகழ்பெற்ற மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார் இல்லை எட்டயபுரம் அரண்மனையில் சென்று பேட்டி எடுத்து வெளியிட்டாரா ஆச்சரியம் தான் அப்போதைய அந்த மின் குழுமங்களை நான் மிஸ் செய்து இருக்கிறேன்
நீக்குகடவுளே, எட்டையபுரம் அரண்மனைக்குப் போய்ப் பேட்டி எடுத்தது மின் தமிழ் சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் மேடம் அவர்கள். சரஸ்வதி ராம்நாத் அந்தச் சமயம் இருந்திருப்பாங்களாங்கறதே சந்தேகம். ஏனெனில் இவர் 2000 ஆம் ஆண்டு பிறக்கும் முன்னரே இறந்துவிட்டார் என நினைவு. சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் மாநில அரசுப் பணியில் சமூக நலத்துறை செயலாளர். ஐஏஎஸ் கிரேட் அலுவலர். இவர் தான் எட்டையபுரம் போனார்.
நீக்குஅது புரிந்தது. சரஸ்வதி ராம்நாத் என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து அவசரமாக வாய்ஸ் டைப்பிங்கில் பதில் கொடுத்ததில் குழப்பம்! மன்னிக்கவும்.
நீக்குஅப்போது பல குழுமங்களில் இருந்திருக்கேன். மின் தமிழ், முத்தமிழ், பண்புடன்(இப்போவும் இருக்கு), நம்பிக்கை, ரத்னமாலை எனப் பல குழுமங்கள். ஓம் நமசிவாய என ஒரு குழுவே இருந்தது. அநேகமாக எல்லாவற்றிலும் பங்கெடுத்திருந்தாலும் மின் தமிழ், முத்தமிழ், நம்பிக்கை, ரத்னமாலையில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபாட்டுடன் இருந்தேன். இவற்றில் மின் தமிழ், முத்தமிழில் மாடரேட்டராக அட்மினில் இருந்தேன். கதை, கட்டுரை, கவிதைப்போட்டி எல்லாம் நடத்தி நடுவராக இருந்திருக்கேன். அப்போல்லாம் எல்லாத்துக்கும் நேரம் என்னமோ நிறைய இருந்தது. இப்போ இங்கே எங்கள் ப்ளாகிலேயே காலையிலிருந்து இருக்கேன். ஆனாலும் இன்னமும் முடியலை. :(
நீக்குஇந்த பூமிப்பந்து குறித்த விஷயமும் எல்லோரும் சொல்லிட்டு இருக்காங்க. என்ன நடக்கப் போகுதோ?
பதிலளிநீக்குஜிவாஜியின் படிக்காத மேதை எல்லாம் தியேட்டரில் காசு கொடுத்துப் போய்ப் பார்த்த ஒரு சில படங்களில் ஒன்று. பின்னால் சென்னைத் தொலைக்காட்சி உபயத்திலும் பார்த்தாச்சு. :)
படிக்காத மேதையிலிருந்து ஒரு பாடல்தான் பகிர்ந்திருக்கிறேன்!
நீக்கு1970-களில் பல முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளோடு வெளிவந்த இலக்கிய இதழான கசடதபற , இப்போது அச்சுப் பிரதியாக வெளிவர இருக்கிறது. தொகுத்து , சரிபார்த்து, வெளியிடும் வேலையை சில மாதங்களாக மேற்கொண்டுள்ளார் விமலாதித்த மாமல்லன்.
பதிலளிநீக்குஆமாம், இணையத்தில் எங்கோ படித்தேன்.
நீக்குஅமேஸானில் மின்னூல்களாக வெளிவந்திருக்கிறது என்கிறது ‘சொல்வனம்’ ஆகஸ்ட் 2021 கட்டுரை. அப்போதே சில இதழ்கள் கிடைக்கவில்லையாம்!
பதிலளிநீக்குவெளியீடே குறைவாகத்தான் இருந்திருக்கும் இல்லையா?
நீக்குபாஹே
பதிலளிநீக்குயின் கவிதை வருகையில், அவரது வயதென்ன?
28 வயசுன்னு அவரே சொல்லி இருக்கார் பாருங்க.
நீக்குஅவர் இருபது வயதிலிருந்து கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார்., இன்றைய கவிதை எழுதப்படும்போது அவருக்கு 70 இருக்கும்.
நீக்கு@Sriram, அவரே அடைப்புக்குறிக்குள் தனது 28 ஆவது வயதில் இதை எழுதினதாய்க் குறிப்பிட்டிருக்காரே!
நீக்குநான் தூறல்கள் புத்தகம் கொண்டு வந்த வயத்தைச் சொல்லி இருக்கிறேன் கீதா அக்கா.
நீக்குOK
நீக்குஜானகிராமன் மோகமுள், அம்மா வந்தாள் எண்பதுகளில் படித்திருக்கிறேன். கதைக்கான கரு பாட்டியம்மா , ஏனைய கதாபாத்திரங்கள் பற்றி இன்றைய பகிர்வில்தான் படித்து அறிந்தோம்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குகுமுதம் 'தீராநதி'/தொடங்கிய மாதிரி இலக்கிய அலசல்களுக்காக இன்னொரு பதிவு களம் தொடங்கிப் பாருங்களேன்.
பதிலளிநீக்குஒரு பக்கத்துக்கே ஆளைக்காணோம்... இன்னொன்றா...
நீக்குஎல்லாவற்றையும் படித்து சந்தோஷம். நான் படிக்கும் நேரம் உங்களுக்கு சனிக்கிழமையே பிறந்திருக்கும். தி ஜா அவர்களின் எல்லா நாவலையும் படித்தாச்சு. மீண்டும் மீண்டும் படிப்பது அன்பே ஆரமுதே. வெகு சகஜமான எழுத்து. மரப்பசு மட்டும் கொஞ்சம் நிரடும்.
பதிலளிநீக்குவாங்கம்மா.. ஆமாம்... சனிக்கிழமை பிறந்து விட்டதுதான்.
நீக்குஉங்கள் தந்தையின் கவிதை மிக ரசிக்கும்படி. சரஸ்வதி ராம்னாத்ஹ் மொழிபெயர்ப்புகளைக் கலைமகளிலும் மஞ்சரியிலும் படித்த நினைவு. அருமையாக இருக்கிறது காண்ணாடிச் சிதறல்களின் கவிதை.
பதிலளிநீக்குரசித்ததற்கு நன்றி அம்மா.
நீக்குஉங்கள் பண இழப்புக்கு வருந்துகிறேன்.கர்மா விடாது அவர்களைத் துரத்தும்.
பதிலளிநீக்குஅப்படிதானே நாம் நம்மை சமாதானப்பபடுத்திக் கொள்ளவேண்டும்!
நீக்குஉயர்ந்த மனிதன் நான் மிக ரசிக்கும் படம்.நன்றி,
பதிலளிநீக்குஆமாம் அம்மா.. நானும்!
நீக்குசு காவின்எழுத்தும்,அவர் அப்பாவின் பேச்சும் மிகப் பிடிக்கும். திருனெல்விருந்து எப்பொழுதும் என் மேஜையில். எங்கள் ஊர்க்காரரின் எழுத்து என்பதால். திரு நெல்வேலிக்கே சென்ற சுகம்.
பதிலளிநீக்குஅப்பாடி... என்னுடன் சேர்ந்து ரசிப்பதற்கு இன்னொரு ஆள் கிடைத்தார்!
நீக்கு