கொன்று வருக -
மு. கருணாநிதி
கற்பின் திருவுருவாம் கண்ணகியின் காற்சிலம்பை விற்க கடைவீதி வருகிறான் கோவலன். அங்கே ஒரு பெரியவரிடம் காட்டுகிறான்.
"ஏ அப்பா.. விலை மதிக்க முடியாத சிலம்பு. என் சொத்து முழுவதும் விற்றால் கூட இதை வாங்க பொருள் போதாது. நீ இதை எடுத்துக் கொண்டு அரண்மனைப் பொற்கொல்லரிடமே போ... அவர் விற்றுத்தருவார்" என்கிறார். பிறகு வீதியைப் பார்த்து "அடேடே.. அதோ அவரே வருகிறாரே..பொற்கொல்லரே.. பொற்கொல்லரே,, நில்லும்" என்று கூறிய அந்தப் பெரியவர் தலைமைப் பொற்கொல்லரைத்த தடுத்து நிறுத்துகிறார். தலைமைப் போர்கோலளருடன் வந்த நூறு பொற்கொல்லர்கள் நிற்கிறார்கள். பின்னர் தம்மை அழைத்த பெரியாரைப் பார்த்து "என்ன? ஏன்?" - என்று கேட்கிறார் தலைமைப் பொற்கொல்லர்.
"இதோ இவரிடம் ஒரு அழகான சிலம்பு இருக்கிறது" - என்கிறார் பெரியவர்.
"சிலம்பா?"
"ஆமாம். விலை மதிப்பில்லா சிலம்பு. அதை விற்றுத் தரவேண்டுமாம்" என்று கூறிய பெரியவர் கோவலனை நோக்கி "கொடுப்பா அவரிடம்" என்கிறார்.
கோவலனும் தன் சிலம்பை தலைமைப் பொற்கொல்லரிடம் தர,
"இனி என் வேலை தீர்ந்தது. நான் வருகிறேன்" என்று கூறிக்கொண்டே பெரியவர் போகிறார். சிலம்பைப் பார்த்தவாறு பொற்கோளாலே நடக்கிறார். கோவலனும் அவர் பின்னால் நடக்கிறான். நூறு பொற்கொல்லர்களும் தொடர்கிறார்கள். ஒரு மண்டபத்தினருகே சென்றதும் பொற்கொல்லர் நின்று, "நீ எந்த ஊர்?" என .கோவலனைக் கேட்கிறார்.
"பூம்புகார்..."
"பெயர்?..."
"மனைவியின் சிலம்பை விற்கும் அளவிற்கு தாழ்ந்துவிட்டேன்... என் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. மன்னிக்கவும்...."
"நீ எப்படி என்னிடமே சிலம்பை விற்க வந்துவிட்டாய்?"
கேள்விக்குப் பொருள் புரியாமல் கோவலன் விழிக்கிறான்.
"பரவாயில்லை, அந்தப் பெரியவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எல்லாம் நல்லதுக்கே! பாண்டியமாதேவியாருக்கு ஒற்றைச் சிலம்பு தேவை. அவர்கள் விரும்பும் அந்த ஒப்பற்ற சிலம்பு இதுவாகவே இருக்க முடியும். தேடி அலைந்தது தானாகவே கிடைத்துவிட்டது. நீ சிலம்போடு இந்த மண்டபத்திலேயே இரு. நான் மன்னரிடம் செய்தியை அறிவித்து உன்னை அழைத்துச் போகிறேன்," என்கிறார் தலைமைப் பொற்கொல்லர்.
"மிகவும் நன்றி" என்கிறான் கோவலன். தலைமைப் பொற்கொல்லர் நூற்றுவரைப் பார்த்து நீங்களும் இவருக்குத் துணையாக இங்கேயே இருங்கள். நான் விரைவில் வந்துவிடுகிறேன்,"—கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போகிறார்.
ஆரியப்படை கடந்தநெடுஞ்செழியனின் பள்ளியறை. அவைக்களம் செல்லுதற்குரிய உடை புனைந்து புறப்படத் தயாராகிவிட்ட பாண்டியன், அரசியை நோக்கி "நேரமாகிறது!... நீ புறப்படவில்லையா நீதிமன்றத்திற்கு?"
"நான் வரவில்லை சிலம்பில்லாத காலோடு!"
"இன்று நீதிமன்றத்தில் சிலம்புத் திருடனையுந் தான் கண்டு பிடிக்கப் போகிறேனே!..."
"ஆகா!... எவ்வளவு அக்கறை! உங்களுக்குப் புறப்பாட்டு எழுதவும், போர்த்தளவாடம் சேகரிக்கவும், பொழுதெல்லாம் பாண்டி மண்டலத்துச் செய்தி கேட்கவும் நேரமிருக்குமே தவிர, பொலிவிழந்து கிடக்கிறதே துணைவியின் பாதம் என்ற கவலை வேறா இருக்கிறது?..."
"உன்னையும் என்னையும் விட நாடு பெரியது என்பதை மறந்துவிடாதே! அற்பச் சிலம்புக்காக ஒரு அரசி இவ்வளவு கவலைப்படுவதா?"
"அற்பச் சிலம்பாகத்தானிருக்கும் தங்களுக்கு! நானே அற்பமாகி விட்டேனல்லவா அதனால்..."
"சரி... சரி...நீ வருகிறாயா இல்லையா; நீதிமன்றத்துக்கு?"
"சிலம்பில்லாமல் இங்கிருந்து ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டேன்."
"...ம்... சரி... வருகிறேன்"— என்று கூறிவிட்டு வேகமாகப் போகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன். வெளியே அதிகாரி (சிலம்புத் திருடி) தயாராக இருக்கிறான். அரசனைக்கண்டதும் வணங்கிப் பின்னால் செல்கிறான். தாழ்வாரத்தில் நெடுஞ்செழியன் வந்தபோது தலைதாழ்த்தி வணங்குகிறான், தலைமைப் பொற்கொல்லர்
"என்ன?..."
"சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டு விட்டான் மன்னா?..."
"எங்கே அவன்?"
உண்மையிலேயே சிலம்பைத் திருடிய அதிகாரி திடுக்கிடுகிறான்.
"சிலம்பைப் பழுது பார்த்து விற்பதற்கு முயன்றுகொண்டிருந்தான். அவனைப் பிடித்து பத்திரப்படுத்திவிட்டு ச் செய்தி சொல்ல ஓடி வந்தேன்"—பொற்கொல்லன்.
"அப்படியா?"—என்று கேட்ட நெடுஞ்செழியன் அதிகாரியை நோக்கி "பாண்டிய நாட்டில் கள்வனா? அவனைக் கொன்று வருக!" என்கிறான்.
கோயில் மண்டபத்தில் கோவலன் உலவிக்கொண்டிருக்கிறான். பலிபீடம் போன்ற ஒரு மேடை அங்கே இருக்க அதனருகே 100 கொல்லர்களும் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தூரத்தில் தலைமைப் பொற்கொல்லரும் அதிகாரியும் வருகிறார்கள். அவர்களைக் கண்ட கொல்லர்கள் எழுந்து நிற்கிறார்கள்.
"பொற்கொல்லரே! போன காரியம் வெற்றி தானே?"—என்று ஆவலுடன் கேட்டான் கோவலன்.
"நான் போன காரியம் வெற்றிதான்! நீ வந்த காரியம்தான் தோல்வியில் முடிந்துவிட்டது!" என்றான் பொற்கொல்லன்.
"அப்படியானால் மன்னருக்குச் சிலம்பு தேவையில்லையா?"
"மன்னருக்கு ஏன் சிலம்பு?... மகாராணிக்கு அல்லவா வேண்டும்..."
"பொற்கொல்லரே!..." கேலி கண்டு ஆத்திரப்பட்டான் கோவலன்.
"சிலம்பை அவரிடம் கொடு,"—என்று அதிகாரியைக் காட்டினான் பொற்கொல்லன்.
அதிகாரி கைநீட்ட சிலம்பை அவனிடம் தருகிறான் கோவலன்.
"உனக்கேது இந்தச்சிலம்பு?" கேட்டான் அதிகாரி.
"என் மனைவியின் சிலம்பு..."
"இதை விற்க வேண்டிய காரணம்..."
"வாங்குவோருக்குத் தேவையில்லாத கேள்வி..."
"ம்,,.. ஒற்றைச் சிலம்பை விற்கிறாயே! அதற்குவதாவது விளக்கம் கூறு!..."
"விலை கூறுவேன் சிலம்புக்கு!... விளக்கம் கூற மாட்டேன் விற்பதற்கு!"
"திறமையான திருடன்!"
"என்ன?" அதிர்ச்சியடைந்தான் கோவலன்.
"ஆமாம், இல்லாவிட்டால் தோலிருக்கச் சுளை விழுங்கியதுபோல் பூட்டிய பெட்டிபூட்டியவாறிருக்க திறவுகோலோ என்னிடமிருக்க, திருட முடியுமா இந்தச் சிலம்பை...?"—என்று கூறினான் தலைமைப் பொற்கொல்லர்.
"ஆ!... சிலம்பைத் திருடினேனா? பொற்கொல்லரே!... ஏனிந்தப் பழி என்மீது? இது என்ன அநியாயம்?"—என்று துடித்துக் கேட்டான் கோவலன்.
"அரசியின் சிலம்பைத் திருடியது மட்டும் நியாயமோ!..."
"யார் திருடியது உங்கள் அரசியின் சிலம்பை?... அதைக் கண்டு பிடிக்க வகையற்றவர்கள்—திறனற்றவர்கள்... வழியிலே போகிறவன்மீது பழியைப் போடுவதா?..."
அதிகாரி துடித்தெழுந்து "அடக்கடா! வாயை மூடு... பஞ்ச பாதகங்களின் நிழல்கூட நுழையமுடியாத பாண்டி மண்டலத்தில் ஒரு பாதகம் உன்னுருவில் நுழைந்திருக்கிறது என்பதைக் கேட்டு மன்னர் பதைக்கிறார்... துடிக்கிறார்!..." என்றான்.
"அந்த மன்னரை நான் காணுகிறேன்... கள்வனல்ல காவலனே நான்... ...கருத்தழிந்த காரணத்தால் கை பிடித்த மனைவியினைக் கண்ணீரில் மிதக்கவிட்டுக்
கனகமலை...
வைரமலை...
கணக்கிடவே முடியாத வெள்ளிமலை ...
அத்தனையும் அழித்துவிட்டுப் பிழைப்புக்கு வழிதேடிப் பிறநாடு வந்திட்ட மாபாலி!...
என் சீதனச் செந்தமிழாள்...
சிந்தைக்குப் பெருவிருந்து..
அவள் செந்தாமரைக் கால்களிலே அணிந்திருந்த சிலம்புதனை விற்பதற்கும் துணிந்து விட்ட கொடுமையாளன்!—என விளக்குகின்றேன்!...... தமிழ் படித்த நெஞ்சமிது! தமிழ் தாயின் வயிற்றினிலே கருவாகி உருவாகித் திரு நாட்டின் மண்மீது தவழ்ந்தவன் நான்... இருட்டுமதி படைக்கவில்லை - திருட்டுத் தொழில் நடத்துவதற்கு—என்பதனைக் கூறுகின்றேன்!... எந் நாடும் புகழ்கின்ற பெரு வேந்தன் நெடுஞ்செழியன் அவைக்களத்தில் நீதிதனைப் பெறுகிற உறுதி எனக்குண்டு!... உடன் அழைத்துச் செல்லீர் வேந்தரிடம்!..."
"வேந்தரென்ன; உன் வீட்டுக்காவலனோ நினைத்தபோது சந்திக்க?..."
"நாட்டுக்குக் காவலன்!... நீதிக்கு நேர்மைக்கு அறத்துக்கு அன்புக்குத் தமிழுக்குக் காவலன் நெடுஞ்செழியன்...! அநீதி... அணுவிலோர் பாதி அவன் ஆட்சியில் நடைபெறவும் அனுமதிக்கமாட்டான்... என அகிலம் புகழக் கேட்டிருக்கிறேன். அந்தப்பாண்டியத்துப் பெருவேந்தன் பார்க்கட்டும் என் முகத்தை!... கள்வனுக்குரிய இலக்கணத்தைக் காண்பானா?... களங்கத்தின் சாயல்தனை எடுத்துக் காட்டும்என் முகத்தை கள்வனுக்குரிய முகத்தைக் காண்பானா? கலிங்கத்தின் சாயல்தானை எடுத்துக் காட்டுவானா? ... முகக்குறியால் நீதி சொல்லும் முடிவேந்தன் நெடுஞ்செழியன் முன்னிலையில் நிற்கின்றேன்!... அவன் முடிவு தனை ஏற்கின்றேன்!... இட்டுச் செல்லீர் என்னை!..."
"மன்னரை ஏமாற்றலாமென நம்புகின்றாய்... கைகாரக் கள்வனே!... உன் போன்ற பாவிகள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் எமது பாண்டியர்!"......
"ஏன்!... உன்னைக் காண்பவர் என்னைக் காணமாட்டாரா?..."
"திமிர் பிடித்தவனே!... ஒப்புக்கொள் உன் குற்றத்தை.... இல்லையேல் தப்பாது உன் உயிர்!"...
"மானம்போய் உயிர்வாழும் மரபிலே பிறக்கவில்லை நான்... மறத் தமிழர் குடியிலே பிறந்தவன்!..."
"நானும் தமிழ்க்குலம்தான்!" திமிராகக் கூறினான் அதிகாரி.
"நீ... குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு! கொள்கையற்றவன்!... குள்ளநரி! வீரபரம்பரையின் விதிவிலக்கு!..."
"நாக்குத் துண்டாகிவிடும் நடுத்தெருவில் நாய் போல் இழுத்துச் செல்லப்படுவாய்!"...
"உங்கள் நாட்டின் புகழ் நாலாதிக்கும் பரவும்!... செய்யுங்கள் அந்த நல்ல காரியத்தை!..."
இடையிலே தலைமைப் பொற்கொல்லர் தலையிட்டு "ஏனப்பா உனக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு!... திருடியதுமில்லாமல் திமிராகவும் பேசுவதா?... கொழுப்பெடுத்தவனே!....... எதிர்த்துப் பேசாமல் உண்மையைக் கூறிவிடு!... என்றார்.
"பொற்கொல்லரே" உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான் கோவலன். பொற்கொல்லன் "நீ கள்வனே தான்!..." என, நூறு பொற்கொல்லர்களும் சேர்ந்து கொண்டு "கள்வனே தான்! கள்வனேதான்!!" என கோவலனை நோக்கிக் கத்துகிறார்கள்.
கோவலன் உணர்ச்சிப் பெருக்குகோடு "கள்வன்! நான் கள்வன்! கண்ணகி!... உன் கணவன் கள்வன்! என் பத்தரை மாற்றுத் தங்கமே!... பாண்டியநாடு தீர்ப்பளிக்கிறது அப்படி! நான் கள்வனா கண்ணே!... கண்ணீர் ததும்பி விடை கொடுத்தாயே கண்ணகி; இப்படி ஒரு களங்கம் எனக்கு வருமென்று தெரிந்துதானோ, கண்மணி!
"தித்திக்கும் செந்தேனே!... தெருப்புழுதியில் வீணை என உன்னை வீசிவிட்ட கயவனுக்குச் சரியான தண்டனை! சரியான பரிசு!... கள்வன்! கள்வன்!!... கள்வன்!!!... ஐயோ! ஏற்கனவே ஏக்கத்தால் வாடி விட்ட உன் இதயம்... இந்த இழிசொல் எனக்குக் கிடைத்த செய்தியை எப்படித்தான் தாங்குமோ!... எனை மணந்தாய்! இன்பம் பெறலாம் என இருந்தாய்!... எரிமலையாய் ஆக்கி விட்டேன் உன் வாழ்வை!... அது போதாதென்று கள்வனின் மனைவியடி கண்ணகி யென்று ஊரார் தூற்றுவதற்கு உனை ஆளாக்கி விட்டேன்! உதய தாரகையே! ஒப்பிலா மாணிக்கமே! மாடமாளிகை சுட கோபுரத்தில் அமர்ந்து, மகரயாழ் நீ மீட்ட...
மந்தமாருதம் தாலாட்ட உன் மடியினிலே உறங்க வேண்டிய நான்... மதுரைமா நகரத்து வீதியிலே... கள்வன் எனும் கணை தாக்கக் கதறுகின்றேன்! புலம்புகின்றேன்!... நான் கள்வனாம் கண்ணகி, கள்வனாம்!...
நீ சொல்...
நான் கள்வனா...?
நான் கள்வனா?...
இதோ கள்வன்!!
இவன் கள்வன்!!...
இவன் கள்வன்!!!
"என அதிகாரியிடம் அணுகி அவனைச் சுட்டிக் காட்டினான்
அதிகாரி வாளை ஓங்கி, "என்ன சொன்னாய்?" என தலையைத் துண்டிக்க வீசுகிறான். கழுத்தில் வெட்டு விழுந்தது.
"ஆ... கண்ணகி!" ...எனத் துடித்து விழுகிறான் கோவலன்.
============================== ============================== ===========================
அதே இதழில் அறிஞர் அண்ணாவின் தேர்தல் வாசகங்கள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கின்றன... அவற்றில் சில...
1950-51ல் இந்திய ரயில்வேயினால் கிடைத்த மொத்த வருவாய்
52, 64, 61,00,000
52, 64, 61,00,000
1960 இறுதிவரை கிடைத்த மொத்தவருவாய் ரூ 4, 24, 06, 00, 000 அதாவது -பத்து ஆண்டுகளில் வருவாய் இரட்டித்திருக்கிறது
ஆனால் மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளே! வருவாய் இரட்டித்தது போல உங்களுக்குக் கிடைத்த வசதிகள் இரட்டித்திருக்கின்றனவா?
424,06,00,000
வாக்காளரே
பதில்
சொல்லுங்கள் *
============================== ==================
அண்ணாவின் தேர்தல் உவமை
கர்ப்பவதி குழந்தை பெறுவாள். மருத்துவச்சி உதவிதான் புரிவாள். அவரையும் பிள்ளை பெறச் சொன்னால் முடியுமா?
ஆளும் கட்சிதான் சாதனை புரிய முடியும்.. எதிர்க்கட்சி குறைகளை எடுத்துச் சொல்ல முடியும் சாதனை புரிய முடியுமா? வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
============================== ============================== ======================
வெட்டுங்கள்! வெட்டுங்கள்!)
அண்ணாவின் தேர்தல் உவமை
காங்கிரஸ் கட்சி ஒரு முருங்கை மரம், அதில் தியாகிகள் எனும் முருங்கைக் கீரையையும், முருங்சைக்காயையும் பறித்து குழம்புவைத்துத் துவட்டியாகிவிட்டது.
இப்போது அங்கு கம்பளிப் பூச்சிகள் இருக்கின்றன. மரத்தில் இருக்கிறதே என்பதற்காக அதையுமா பிடித்துக் கறி சமைப்பார்கள்?
============================== ============================== ==================
அண்ணாவின் தேர்தல் உவமை
கிழவன் ஒருவனுக்கு 16 வயதுடைய அழகுப் பாவையை நிச்சயம் தருவார்கள் என்ற தைரியத்தில் இருக்கி றான். அவனுக்கு எப்படி அந்தத் தைரியம் வந்தது? அவன் பெட்டியிலிருக்கும் பணம் தான் அந்தத் தைரியத்தைத் தந்தது.
அதுபோல பணத்தின் பலத்தை நம்பி காங்கிரஸ் எனும் கிழம். நாட்டின் எதிர்காலம் எனும் இளம்பெண்ணை அடைய விரும்புகிறது.
============================== ==========
அந்த முரசொலி இதழின் தலையங்கம் என்று சொல்லலாமா?
புகுமுன் - 1962
பேரன்புடையீர்
அண்ணனின் வாழ்த்தோடு துவங்கும் இந்த ஆண்டு முரசொலி பொங்கல் மலரை தஞ்சையிலிருந்து கண்டு மகிழ்கிறேன்.
வாய்க்கால் வரப்பு வழிகள்!
கல்லும் முள்ளும் கலை பதம் பார்க்கும்
பாதைகள்
சேற்றிலும் சகதியிலும் சென்று
சேரிவாழ் மக்களைச் சந்தித்தல்
இப்படித் தஞ்சைத் தொகுதியிலே வாக்காளர்களை சந்திக்கச் சுற்றிக் கொண்டிருக்கும் நான் இடையிலே இரண்டு நாள் சென்னை சென்றேன்.
*இந்த ஆண்டு பொங்கல் மலர் வேலை துவங்க வேண்டாமா?" கேள்வியெழுப்பியது தம்பி மாறன்.
தேர்தல் காலம் நோக்கிச் செல்கின்ற வேளையிலே மலர்கொய்ய நேரமுண்டா?" மழுப்பியது நான்.
"கழகம் வெற்றிமாலை சுடுவதற்கு மலர் பறிக்க வேண்டாமோ?"
இந்தப் பதில் சகோதரர் சத்தியினுடையது முரசொலி அலுவலகத்தில் நடந்த இந்த உரையாடலுக்குப் பிறகு முகிழ்த்த முயற்சியில் விளைந்ததே உங்கள் கைகளில் தவழும் இந்தப் பொன்மலர்.
தமிழ் மணம் கமழ் தங்க இதழ்களைச் சுவைத்துப் பாருங்கள்!
பொருளாளர் பொறுப்பு - தலைமைக் கழகத் தேர்தல் அலுவல்கள் - ஆட்சி மன்றக்குழு வேலைகள் - மூவர் குழுப் பணிகள் - பல்வேறு தொகுதிச் சுற்றுப்பயணங்கள் - நிற்கும் தொகுதியில் நிற்காத அலைச்சல்!
இத்தனை பணிகளுக்கிடையே மலர் வெளியிடுவதிலும் முழுக்கவனத்தை செலுத்துவது எங்கனம்?
அதனால் இயன்றதைச் செய்திருக்கிறர்கள். எழில் குறைந்திருக்கலாம்! ஆயினும், ஏற்றம் குறையவில்லை என்ற நிம்மதி எனக்கு! வண்ணப் பொலிவு, வழக்கம் போல் இல்லாதிருக்கலாம்! எண்ண பொலிவு மிகுந்திருக்கிறதென்று இறும்பூய்துகிறேன்.
பொங்கல் கொண்டாடுகிறோம்.
விழா எடுக்கிறோம்
கவிதை புனைகிறோம்.
களி நடனமாடுகிறோம்.
ஆயினும்.
கரும்பு கசக்கிறது!
வெல்லம் துவர்க்கிறது!
பொங்கல் புளிப்படிக்கிறது!
ஏன்? ஏன்" ஏன்"
ஏழை வீட்டில் இன்பம் இல்லை.
பொங்கல இல்லை!
பூசிப்பு இல்லை!
ஆகவே, நாம் எடுக்கும் விழாவில் சிறப்பு இல்லை. நமக்கே அதனால் உற்சாகம் இல்லை.
ஏழை வீட்டில் இன்பம் பொங்குவதே உண்மைப் பொங்கல்!
இத்தகைய கருத்தினை அடிப்படையாக அமையத்தான் எழுத்தோவியங்களும் சித்திரங்களும் இந்த மலரில் தீட்டப்பட் டிருக்கின்றன.
மலரைக் காணுகிறேன். இதற்கென உழைத்த மாறன், சத்தி, பம்பரம்போல்பணி யாற்றிய மல்லி, மோகன், ஆற்றில் மிகு அடியார், அயராது பாடுபட்ட அமிர்தம், செல்வம், அலுவலகத்தோழர்கள் அளைவரையும் மனக்கண்ணால் கண்டு பாராட்டுகிறேன். செல்லப்பனின் உயிர் ஓவியங்கள் மலருக்கு நிறைந்த மணத்தை தருகிறது. நல்ல வருங்காலம் உடைய அவரையும் பாராட்டுகிறேன். மாதவன் முகப்பிற்குத்தான் என் பாராட் டோடு உங்கள் பாராட்டும் உண்டே! மலர்கண்டு தாங்கள் புரியும் புள்ளகை. எமக்குக் களைப்பாற்றும் தேன்துளி!
அன்பு,
அறிஞர் அண்ணாவும் பெரு முன்னுரை தந்திருக்கிறார். பின்னர் எடிட் செய்ய பொறுமை இருக்கும்போது அதைப் பகிர்கிறேன். இதில் பெரியார் பற்றி வந்திருக்கும் மூன்று நான்கு கார்ட்டூன்களைத் தவிர்க்கிறேன்!









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!