நவம்பர் மாதம் வந்துவிட்டது. இந்த மாதத்தில், தீபாவளி மட்டும் அல்ல, குழந்தைகள் தினமும் வருகிறது. வாசகர்களின் இல்லங்களில், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் (மழலையர் வகுப்பு தொடங்கி, பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள் எல்லோரும் 'குழந்தைகள்' கணக்கில் வருவார்கள்) எவ்வளவோ திறமைகள் உள்ளவர்கள் இருப்பார்கள்.
படம் வரைபவர்கள், பாட்டு பாடுபவர்கள், கதை, கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், மிமிக்ரி, புகைப்படம் எடுப்பவர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள் இன்னும் எவ்வளவோ திறமைகள் அவர்களிடம் இருக்கும். உங்கள் குழந்தையின் படைப்பாற்றல் மிக்க படைப்புகள் எதுவாக இருந்தாலும், அதை நவம்பர் பதினான்காம் தேதிக்குள், எங்களுக்கு engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு, படைப்பாளியின் பெயர், வயது விவரங்களுடன் அனுப்பி வையுங்கள்.
எங்களுக்கு வருகின்ற படைப்புகளை, 'இது நம்ம ஏரியா' வலைப பக்கத்தில் வெளியிடுவோம். எங்களுக்கு வந்து சேரும் படைப்புகளின் விவரங்களை, எங்கள் ப்ளாக் சைடு பாரில் நாள்தோறும் பட்டியல் இடுகின்றோம். பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு, எங்கள் வாழ்த்துகள்.
(முக்கிய குறிப்பு: இது போட்டி அல்ல. குழந்தைகளின் திறமைகளை, வெளிக் கொண்டு வரும், உலகிற்கு தெரியப் படுத்தும் ஒரு முயற்சியே. பங்கு பெறுகின்றவர்களின் எல்லோருடைய படைப்புகளும், வெளியிடப்படும்.)
