அன்னி பெஸண்ட் அம்மையாரால் உலகை உய்விக்க வரப்போகும் ஆசிரியர் World Teacher என முன்னரே அறியப் பட்டு, அவரால் எடுத்து வளர்க்கப் பட்டு, ஆரம்ப கல்லூரி கல்வி வரை கொடுக்கப் பட்டு, ஒரு ஆன்மிக ஸ்தாபனத்தின் தலைவராய்த் தொடங்கிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (JK) (மே 12 - 1895 to பெப்ரவரி 17 - 1986) பிறப்பால் ஆந்திராவைச் சேர்ந்தவர். பின் காலங்களில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி தவிர இதர மொழிகள் ஏதும் அறியாதவரானார்.
தான் தலைமை ஏற்ற ஸ்தாபனத்தைக் கலைத்ததுடன், “ சத்தியம் என்பது வழித்தடங்கள் இல்லாத பாதை. அங்கு எவரும் எதுவும் யாரையும் இட்டுச் செல்ல இயலாது “ என்று அறிவித்து அதுவரை நன்கொடையாகப் பெறப் பட்ட மதிப்பு மிக்க சொத்துக்களையும் பணத்தையும் மிகச் சரியாக திருப்பித் தந்தது அவரது தனித் தன்மைக்கு மேன்மை சேர்த்தது.
அதன் பின் ஆங்காங்கு சென்று சொற்பொழிவு செய்வதும் எழுதுவதும், நேரடி சம்பாஷணைகளில் ஈடுபடுவதுமாக அவர் வாழ் நாள் கழிந்தது. அவருக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் சில மர்மமானவை ஆனாலும் அவை குறித்து அவர் அதிகம் பேச முனையவில்லை. “ அவை எல்லாம் கடந்து போனவை. மறந்துவிடப் பட்டவை “ என்று சொல்லி இருக்கிறார்.
யாராலும் மறுக்க முடியாத ஸ்தூலமாகிய உண்மையைப் பற்றி வாழ்வின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே விவாதிப்பது / அலசுவது அவரது இயல்பு. வாழ்க்கையின் பல அம்சங்கள் குறித்து அவர் விளக்கியுள்ளது நம் அனைவருக்கும் பயன்படக் கூடும். உங்கள் பதில் பதிவுகளை ஆராய்ந்தபின் என்ன மாதிரியான பதிவுகள் தரலாம் அல்லது தராமலே இருக்கலாமா (!) என முடிவு செய்வோம்!
(ஜே கே அவர்கள் பற்றியும், அவருடைய விவாதங்கள் மற்றும் கருத்துகள் குறித்தும் தமிழில் அறிய விரும்புவோர், இங்கே பின்னூட்டமிட்டால், எங்களுக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும்.)
இங்கேயே இடது பக்கம் மேலே ஒரு வோட்டு சாவடி உள்ளது. உடனே வோட்டுப் போடுங்க!
இங்கேயே இடது பக்கம் மேலே ஒரு வோட்டு சாவடி உள்ளது. உடனே வோட்டுப் போடுங்க!

