கேள்வி பதில்கள் :
கீதா சாம்பசிவம் :
1. கோடிக்கணக்கில் ஊழல்கள் நடப்பதாக எப்படிக் கணக்கிடுகின்றனர்? நம் போன்ற சாமானியருக்கெல்லாம் திடீரெனப் பணம் வந்தால் பல கேள்விகள் கேட்கும் வருமான வரித்துறை இப்படி ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருவோரைக் கேட்காமல் இருப்பதன் காரணம் என்ன?
# பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடப்பதற்கான சில தடயங்கள் அரசுக்கு எளிதில் கிடைக்கும்.அதுபோக, தகவல் தந்து வெகுமதி பெறுவோரும் நிறைய உண்டு. வரி+அபராதம் சப்தம் இன்றிக் கட்டிவிட்டால் வருமான வரித்துறை வேறு நடவடிக்கை எடுப்பதில்லையாம்.
2. மனைவி என்பவள் அனைத்து ஆண்களுக்கும் தேவைதான். பலரும் கல்யாணத்துக்கு ஆசைப்பட்டே திருமணம் செய்துக்கறாங்க. அப்படி இருக்கையில் பலரும் மனைவியே அதிக அதிகாரம் படைத்தவராக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அவங்களுக்குப் பயப்பட வேண்டி இருக்கே எனச் சொல்லிக் கொண்டு இருப்பது சரியா?
# இந்த மனைவி மாமியார் , மற்றும் பெண்டாட்டிக்கு பயப்படும் புருஷன் விஷயங்கள் நன்கு விரும்பப்படும் மிகை.
3. மனைவி உட்கார்ந்து கொண்டு கணவனை வேலை வாங்குவதாக எழுதுகிறார்களே? அதெல்லாம் உண்மையாகவே நடப்பதா? (நான் விரும்பி மனைவிக்கு உதவுகிறவர்களைச் சொல்லலை. பெரும்பாலான ஆண்கள் மனைவி அதிகாரம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவங்களை)
# இதுவும் ஒரு விலை போகும் தமாஷ்தான்.
4. இக்காலத்துக் குழந்தைகள் எதையும் தாங்கும் மனோபலம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் உடனே உணர்ச்சிவசப்பட்டுத் தங்களை இழப்பது ஏன்?
# அதீத செல்லம், என்ன விரும்பினாலும் கிடைக்கும் சௌகரியம்.
5. பெரும்பாலான இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் மூழ்கித் தங்கள் எதிர்காலம் பற்றிக் கூடக் கவலைப் படாமல் திரைப்பட நடிகர்கள் பின்னே போவதின் உளவியல் காரணங்கள் என்ன?
# தங்களால் இயலாததை திரையில் நடிகர் சாதிப்பது அளிக்கும் போலியான திருப்தி.
6. இப்போதைய தலைமுறையை ஜென் ஜி என்பதன் காரணம் என்ன? அதன் பொருள் என்ன?
# Gen Z கடைசியாக (latest) வந்துள்ள தலைமுறை என்பதாக இருக்கும்.
& எனக்கு ஒரு டவுட் .. இப்போதைய Gen Z அதற்கடுத்த தலைமுறையை எப்படி அழைப்பார்கள்? Gen ZA என்றா?
இப்போதைய ஒரே குழந்தை கோட்பாட்டினால் வரும் விளைவுகள் பத்தி யாருமே யோசிப்பதாய்த் தெரியலையே?
# ஒரு குழந்தை என்பது கோட்பாடல்ல. விரும்பினாலும் பிறப்பதில்லை என்பதே பலகாலும் உண்மை.
ஒரே குழந்தை என்பதால் குழந்தை வளர, வளர, பிடிவாதம், விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பது, எல்லாமும் தனக்கே வேண்டும், தான் தான் முன்னிலை என்னும் குணம் எல்லாமும் வந்துவிடும். அப்போ அந்தக் குழந்தைக்கு ஏமாற்றங்களைத் தாங்கும் வலிமை இல்லாமல் போய் விடாதா?
# ஒரே குழந்தை என்பதால் அதிக செல்லம் தேவையற்றது என உணரும் பக்குவம் பெற்றோர்களுக்குத் தேவை.
அதோடு ஒரே குழந்தை என்பதால் ஆணோ, பெண்ணோ விகிதாசாரம் அதிகம் ஆகி இன்னொன்று குறையவும் வாய்ப்பு இருக்கு. அப்போ திருமண உறவெல்லாம் என்ன ஆகும்?
# ஒற்றைக் குழந்தை என்பதால் ஏற்படும் சிக்கல்கள் நிறையவே உண்டு. எனினும் எல்லா மாற்றங்களும் ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு இயற்கை இயல்பாக தீர்வைக் கொண்டுவரும். நம்மை மீறிய சக்தியின் இருப்பை அது உறுதி செய்கிறது.
திருமணம் என்னும் கலாசாரமே முற்றிலும் நின்னு போயிடுமோ? ஏற்கெனவே பல உறவு முறைகளும், பெயர்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. இது நம் நாட்டை எங்கே கொண்டு செல்லும்?
# ஜப்பானிய இளைய தலைமுறை விவாகம் குழந்தை இவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள். அதுக்கு இது பரவாயில்லைதானே !
நெல்லைத்தமிழன் :
1. தற்காலத்தில் அவசியமில்லாத பல போர்களைப் பற்றிப் படிக்கும்போது, அப்படித்தான் நம் தமிழக மன்னர்களும் தேவையில்லாத போர்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறதா?
# ஆம். நாட்டை விஸ்தரிக்கவும், எல்லா பிற மன்னர்களை அடக்கி ஆளவும் விருப்பம் கொண்டதால்தான் பல போர்கள் நடந்தன.
2. நமக்குத் தோதான மன்னர் இந்த நாட்டில் இருந்தால்தான், அங்கிருந்து வளங்களை நம் நாட்டுக்குக் கடத்தலாம் என்று தற்கால நாடுகள் எண்ணுவது போல, அப்போதும் நம் மன்னர்கள் நினைத்திருப்பார்களோ? எதனால் எல்லோரும் அமைதியாக இருக்கட்டும் என்று பல மன்னர்கள் நினைத்ததில்லை, நினைப்பதில்லை?
# போரின்றி அமைதியாக வாழ ஆசைப்பட்ட மன்னர்கள் பிறர் படையெடுப்புக்கு ஆளாகி அடையாளம் தொலைத்ததும் உண்டு.
3. சரித்திர காலத்தில் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்பட்டிருக்கும்? ஒரு அரசனால் எப்படி நீதி வழங்க முடியும்?
# அந்தக் காலத்தில் இருந்த மிக சொற்பமான ஜனத்தொகையும், பயணத்துக்கு ஆகும் சிரமம் செலவு இவற்றை முன்னிட்டு நீதி வழங்கல் அந்தந்த பிரதேச அதிகாரிகள் கைவசமே இருந்தது என்று தெரியவருகிறது அல்லவா ? தீர விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்ற நியதி பெரும்பாலும் இருந்ததாகத்தான் தெரிகிறது.
4. ஜனநாயகம் நல்லதா இல்லை அரசர் கீழ் இருக்கும் நாடுகள் மனிதர்கள் வாழ நல்லதா?
# அரசரோ ஜனநாயகமோ நீதி நேர்மையாக செயல்பட்டால் சரியாகவே இருக்கும். எனினும் பிறப்பால் மட்டுமே தகுதி பெற்றவர் அரசராகி தவறுகள் செய்யும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஜனநாயகத்திலும் இந்த குறைகள் வர வாய்ப்பு உண்டு எனினும் அதை சரி செய்வதற்கான வழிமுறை ஜனநாயகத்தில் சற்று எளிதானது என்று நினைக்கத் தோன்றுகிறது. இது நன்கு செயல்பட வாக்காளர்கள் அறிவுத் திறன் பெற்றவராகவும் நீதி நேர்மையை விரும்புவோர்களாகவும் இருக்க வேண்டும். இது எந்தக் காலத்தில் சாத்தியம் ?
5. அந்தக் காலத்தில், இந்த அரசனின் நாடு பிடிக்கவில்லை, இன்னொரு அரசன் இருக்கும் நாட்டிற்குச் சென்றுவிடுவோம் என்று புலம் பெயர்ந்திருப்பார்களா?
# புலவர்கள் மட்டும்தான் அப்படி வேறு அரசர்களை நாடிச் சென்றதாக வரலாறு சொல்கிறது.
= = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
நம்ம கௌதமன் சார் மீது பல வாசகர்கள் குற்றச்சாட்டுகளை மனதுக்குள் வைத்திருப்பது எனக்குத் தெரியவந்துவிட்டது. எப்போப் பாத்தாலும் இத்துப்போன நடிகைகள் படம்தானா? அதிலும் புதிய படங்கள் எதுவும் கிடையாதா? ஏன் இப்படி நல்ல அழகிய நடிகைகள், அதிலும் புதிது புதிதாக செலெக்ட் பண்ணி புதன் பகுதியில் வெளியிடுவது கிடையாது? ரசனையே இல்லையே என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பொதுவா கான்ஃபரன்ஸ்களில் அல்லது எலெக்டிரானிக் எக்ஸிபிஷன் என்று சொல்லப்படும் நிகழ்வுகளில் தங்கள் ப்ராடக்டுகள், செர்வீஸ் இருக்கும் சிறிய பகுதிகளில் அழகிய பெண்களை நிற்கச் செய்வது வழக்கம். அதைச் சாக்கிட்டாவது உள்ள நுழைந்து பார்க்கட்டுமே என்பதா இல்லை பெண்கள், கடைக்கு ஒரு கவர்ச்சி என்ற எண்ணமா என்று தெரியவில்லை. (இதைப் படித்தவுடன் ஸ்ரீராமுக்கு, புத்தகக் கண்காட்சியில் இந்த மாதிரிச் செய்யலாமே என்ற ஆலோசனையை எழுதி அனுப்பலாமா என்று தோன்றலாம். நம் ஊருக்கு இது சரிப்படாது. நமக்கு மண்ணெண்ணெயில் பொரித்த பஜ்ஜி, ஆங்காங்கே துப்பிக்கொண்டு, அப்படியே எண்ணெய் கையுடன் புத்தகக் கடைகளுக்கு நுழைவதுதான் சரிப்படும்) ஆனால் அத்தகைய பெண்களிடம் கடலை போட முடியாது. ஏதாவது கேட்க முனைந்தால் உடனே கடையில் உள்ள டெக்னீஷியன் நமக்கு உதவ வந்துவிடுவார். சரி... இவ்வளவு எழுதும்போது, உதாரணமா படங்கள் போடாமல் இருக்கலாமோ?
ஆமாம்... யாரோடும் படம்லாம் எடுத்துக்கலையா என்ற சந்தேகம் வரலாம். நான் போடும் சரித்திர, பாசுர பதிவுகள்லாம் படித்துவிட்டு ஏதோ இந்தப் பையன் நல்லவனாத்தான் தெரிகிறான் என்று கீதா சாம்பசிவம் மேடம் நினைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை நானே கெடுத்துக்கொள்ளலாமா? அதான் அவற்றைப் பகிரலை.
( நெ த சூப்பர் கில்லாடி - தான் எடுத்த படங்களை வீணாக்காமல் ஏதோ ஒரு சாக்கு சொல்லி நமக்கு அனுப்பிவிட்டார்!)
= = == = = = = = = = = = =
கொளுத்துதுப்பா வெய்யில்.. அட, எங்க சின்னவனைக் காணோம்.. விஷமக்காரனாச்சே....
=== === === === === === === === === === === === === ===
குரோம்பேட்டையில் பார்க்க வேண்டிய ஆட்களைப் பார்த்து, பேசிய பின், ஊரப்பாக்கம் சென்று சேர இரவு எட்டு மணிக்கு மேலே ஆகிவிட்டது.
ராஜம் ஹோம் ஸ்டே வாசலில் சற்று தாமதித்த பின் அலைபேசியில் நண்பரை அழைத்து நான் வந்து சேர்ந்த விவரத்தைக் கூறினேன்.
உடனடியாக அவர் வந்து, எங்களை உள்ளே அனுமதித்தார். நான் தங்கும் இடத்தை என்னை அழைத்துச் சென்று காட்டினார்.
ராஜம் ஹோம் ஸ்டே மேல் மாடியிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்கள். (அருகிலேயே ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்)

Gen Zலயும் சந்தேகமா? இளம் தலைமுறை என அழைக்கப்படுபவர்கள், அடுத்த தலைமுறை வந்தபின் மூத்த தலைமுறை ஆகிவிடுவதில்லையா? Gen Z எப்போதும் இருக்கும் டைட்டில். விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு வயதாகி Gen Z என்றால் 2020க்குப் பிற்பட்டவர்கள்னு ஆயிடும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகீதா அக்காவின் கேள்வி மழையில் குடும்ப அமைப்பு சிதைந்து விடுமோ என்ற அவருடைய கவலை தெரிகிறது. அதற்கு # கொடுத்துள்ள பதில்கள் சிறப்பு. கூட்டுக் குடும்பம் சிதந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே சிதையும் என்றுதான் தோன்றுகிறது. என்னடா இவள் காலங்கார்த்தால அபசகுனமாக பேசுகிறாளே என்று எண்ண வேண்டாம். திருமணம் செய்து கொண்டு குடும்பம் என்னும் அமைப்பிற்குள் வருகிறவர்கள் குறைவாக இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅப்படி இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. கூட்டுக் குடும்பமோ இல்லை பெற்றோரின் எதிர்பார்ப்புகளோ இருக்காது. பெற்றோர்கள் அக்கறை (பசங்க குடும்பம் நல்லா இருக்கணும், வளரணும் என்ற ஆசையில்) அதிகமாகலாம். பெற்றோர்களுக்குமே தன்னை யார் கவனித்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பே இருக்காது..
நீக்குஇன்னும் 20 வருடங்கள் கழித்து பார்ப்போம். இப்போது உள்ள
நீக்குஒரே குழந்தை குடும்பங்கள் என்ன ஆகின்றன என்று...
அந்தக் காலத்தில் போர்கள் அதிகம்தான். போர் வீரர்களுக்கு வேலை கொடுக்காவிட்டால் வீரர்களுக்கு யுத்தம் செய்வதே மறந்து விடும், அவர்கள் வேலையில்லாமல் இருந்தால் அனாவசிய கலாட்டாக்களில் ஈடுபடுவார்கள் என்பதால் வேலை கொடுப்பதற்காகவும், ராஜாங்கம் நடத்தவும் அரசன் நினைத்த சாதனைகளை செய்யவும்(கோவில் கட்டுவது மாதிரி) செய்யத் தேவையான செல்வத்தை ஈட்டவும் போர்களில் ஈடுபட்டார்கள்.
பதிலளிநீக்குபிரும்மாண்டமாக இருந்த மௌரிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் அசோகர் யுத்தத்தை கை விட்டதுதான்.
போர் இல்லாத வீரர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக வெட்டப்பட்டதுதான் வீராணம் ஏரி.
குடும்பம், ஒரு குழந்தை, வாரிசு - மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று இருந்து விட்ட எல்லாம் சுகமே என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குபடங்களும் அதற்கான விளக்கங்களும் ரசித்தேன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குஇன்றைய கல்வி வேலை வாய்ப்பு முறையின் அடிப்படையே
பதிலளிநீக்குபாரத குடும்ப கலாச்சார முறையைத் தகர்ப்பது தான்...
கீதாக்காவின் gen Z - zoomers - அதாவது 1997-2012 க்குள் பிறந்த குழந்தைகள் அவர்களுக்கு முன்னான Millennials களுக்கும் இப்போதைய generation alpha அதாவது 2010 மற்றும் 2024-க்கு இடையில் பிறந்த குழந்தைகள்- இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் தலைமுறையினராம் அதனால் gen z 20 ஆம் நூற்றாண்டின் கடைசி தலைமுறையாம்.
பதிலளிநீக்குகீதா
இக்காலத்துக் குழந்தைகள் எதையும் தாங்கும் மனோபலம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் உடனே உணர்ச்சிவசப்பட்டுத் தங்களை இழப்பது ஏன்?//
பதிலளிநீக்குஅக்கா இது நிச்சயமாக வளர்ப்பு முறையில் உள்ளது என்பேன். அப்போதே என் குடுமபத் தேவைக்காக உளவியல் கற்ற காரணத்தால், ஒரே குழந்தையைக் கூட நல்ல தைரியமாக வளர்க்க முடியும் என்று சொல்ல முடியும்.
பார்க்கப் போனால் நிறைய குழந்தைகள் உள்ள குடும்பங்களில் அல்லது கூட்டுக் குடும்பங்களில் ஒரு சில குழந்தைகளின் emotional intelligence ஆட்டம் காண்பதும் உண்டு.
என்னைப் பொருத்தவரை ஒரு குழந்தையோ இரு குழந்தைகளோ இல்லை நிறைய குழந்தைகளோ எல்லாமே பெற்றோரின் வளர்ப்பில்.
நான் இது பற்றி நிறைய சொல்லலாம் பதிவு போல் பெரிதாகிவிடும் என்பதால்...சொல்லலை
கீதா