புதன், 15 மே, 2019

புதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்!


சென்ற வாரப் பின்னூட்டங்களில் அதிகம் பேசப்பட்டது, 'நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமானவை எவையெவை' என்ற கேள்வியும், அதன் பதில்களும். 


அடுத்தபடியாக ஹோட்டல் உணவுகள் / MTR மாவு வகைகள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள். 


ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் கருத்துகளைக் கூறி, சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட எல்லோருக்கும் நன்றி. 

இந்த வாரம் எல்லோருக்கும் ஒரு சிறப்புப் பயிற்சி கொடுத்துள்ளேன். பதிவின் கடைசியில் பார்க்கவும். படித்து, பங்கு பெறவும். 


ஏஞ்சல் : 


ஒருவரை அதிகபட்சம் கோபப்படுத்தவைப்பது கோபப்படுத்துவது எது ?


a.  விளையாட்டு சீண்டல்கள் எல்லைமீறும்போது ?
b.  ஒருவரின் மனநிலையை உணராமல் எதிரிடத்தில் உள்ளவர் பேசும் பேச்சு ?
c.  உணவு, சூழல், மருந்துகள் ?
d.  புரிதலின்மை ?


# எதிரிலுள்ளவர் புரிதலின்றி அசந்தர்ப்பமாகப் பேசுவது.

& கோபப்படுபவரைப் பொறுத்த விஷயம்தான் இது. 
என்னைப் பொறுத்தவரை, a என்று சொல்வேன். யுக்தி /குயுக்தி எப்படி வேறுபடுகிறது ?
முகப்புத்தகத்தில் ஒரு பழக்கமில்லா மியூச்சுவல் நட்பு புகைப்படத்தை இன்பாக்ஸ் செய்தார் .பின்பு உடனே அச்சசோ இது வேறொருவருக்கு அனுப்ப வேண்டியது தெரியாமல் உங்களுக்கு அனுப்பிட்டேன் என்று சொன்னார் .இது யுக்தியா குயுக்தியா ?  இப்படிப்பட்ட சில குள்ளநரி யுக்தியுள்ள குயுக்தியுள்ள மனிதர்களை இனம் காணுவது எப்படி ? # யுக்தி பிரச்சினைக்கு எளிய தீர்வுக்கான வழி. குயுக்தி வரம்பு மீறிய திருப்திக்காகச் செய்யப் படுவது.

நீங்கள் குறிப்பிடும் படம் அனுப்புதல் உண்மையான தவறாகவும் இருக்கலாம். அப்படி இல்லாதபோது தொடரும் "வழிச்சல்"கள் அதை இனம் காட்டிவிடும்.

& அந்த படத்தை டவுன்லோட் செய்து, அதை ஃபோட்டோஷாப் மூலம் கன்னா பின்னாவென்று உருமாற்றி - அலங்கோலப்படுத்தி, திருப்ப அவருக்கே அனுப்பி வைத்து, உள்பெட்டியில் - சாரி - இதை வேறு ஒருவருக்கு அனுப்பவேண்டியது - தவறிப்போய் உங்களுக்கு அனுப்பிவிட்டேன் என்று நீங்களும் சொல்லலாமே! பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம், சேதத்திற்கு சேதம்!                                                    (அதிரா பாஷையில் இதுதான் பேய்க்காட்டுறதா ?)

(சாரி சார்! - அழகான ஃபோட்டோ ஒன்று இணையத்தில் தேடினேன். இடது பக்கம் உள்ளது கிடைத்தது. ஒரு நிமிட paint வேலை - எப்படி இருந்த நான் ...... இப்படி ......ஆயிடுச்சு!)
                  
அதிரா :

திருப்பதிக்குப் போய் அங்கு அம்மா அரோகரா என்றாவாம்... மாமா சொன்னாராம் இல்ல இங்கு கோவிந்தா எனத்தான் சொல்லோணும் என:)...  எனக்கும் ஏனெனப் புரியேல்லை:)...  உங்கள் பதில் என்ன? 


# இடம் பொருள் ஏவல் என்று இருக்கிறதல்லவா ? அதுவும் விஷ்ணு பக்தர்கள் அவருக்கு மிஞ்சி பிறிதோர் தெய்வம் இல்லை என திடமாக நம்புபவர்கள். அங்கு அரோகரா அரோகரா ஆகித்தான் இருக்கும்.

& நான் எந்தக் கோயிலில் கும்பிட்டாலும் முன்பெல்லாம் 'முருகா' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன். பெரிதாக வாய் விட்டு சொல்வது இல்லை என்பதால் பிரச்னை எதுவும் வரவில்லை. அத்வைதிகளுக்கு எல்லாம் ஒன்றே! 


ஏன் பறவை விலங்குகளில் மட்டும் ஆண்தான் அழகு...  உதாரணம்..  மான், மயில், சிங்கம், காகம்...


# எல்லாம் அழகானால் அழகென்று ஒன்று இராது !

& பாவம் - வாயில்லாப் பிராணிகள் (மனிதர்களில் ஆண்களைப்போல்) அழகாக இருந்துவிட்டுப்போகட்டுமே - விட்டுடுங்க!  (ஆ ! எதையோ உளறிவிட்டேனோ? பா வெ மேடம் வந்தாங்க என்றால் என் பாடு திண்டாட்டம்.   ஸ்ரீராம் -  எங்கே அந்தக் கட்டில்?   ஓடிப்போய் கீழே ஒளிந்துகொள்ளவேண்டும் !) 

சில மனிதர்கள், சக மனிதர்கள் துன்பப்பட்டால் பெரிதாக கவனிக்க மாட்டினம் ஆனால் ஒரு விலங்கோ பறவையோ எனில் துடிப்பார்கள், பணம்கூடச்  செலவழிப்பார்கள்...  இந்த மைண்ட் செட்டப் உள்ள மனிதர் பற்றி என்ன நினைக்கிறீங்க?


# உதவி செய்வோர் செய்வதும் செய்யாததும் அவர் இஷ்டம்.  இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்ல நமக்கு அதிகாரமில்லை.
ஜம்பத்துக்காக உதவினாலும் உதவி உதவிதானே.

& சகமனிதனை வாழ்க்கையில் போட்டியாளனாகப் பார்க்கிற சில மனிதர்கள், விலங்குகள், பறவைகளை அப்படிப் பார்ப்பதில்லை. அதனால் அவைகள் துன்பப்படும்போது இவர்கள் துடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 


வாட்ஸ் அப் கேள்விகள் :  


நெல்லைத்தமிழன்: 

நாத்தனார்,மன்னி/தம்பி மனைவிக்கு இடையே எழும் சிறு பூசலில் குழந்தைகள் தலையிடக் கூடாது என்பதையும் தாயோ தந்தையோ குழந்தைகளுக்கு புரிய வைத்தால்//  - கேள்வி - குடும்பத்தில் பெரியவர்களிடையே கருத்து வேறுபாடு வந்து உறவு பாதிக்கப்படும்போது அவர்கள், அதனால் குழந்தைகளின் உறவும் பாதிக்கப்படுமே என்பதை அறியாதிருப்பதன் காரணம் என்ன?  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குழந்தைகள் இந்தச் சுழலில் சிக்கும் இல்லையா? அதற்கான தீர்வு என்ன?


# பெரியவர்கள் வயதுக்கேற்ற விவேகத்துடன் நடந்து கொள்வது தவிர வேறு தீர்வு இல்லை. 

" நாங்கள் சச்சரவு செய்வதைக் கண்டு கொள்ளாதே" என்று சொல்வது எப்படி எடுபடும் ?

& குழந்தைகள், குழந்தைகளாக இருக்கும்போது பெரியவர்களின் கருத்து வேறுபாடு பிரச்னைகளில் சிக்குவார்கள் என்பது உண்மை. ஆனால், அந்தக் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகி, அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த நிலையில், சிறு வயது பூசல், சச்சரவுகளை அவர்கள் மறந்து, எல்லோருடனும் சுமுகமாக உள்ளனர். இதை  என் நாற்பத்தைந்து ஆண்டு கால ஆய்வின் அடிப்படையில் கூறுகின்றேன். 


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

படித்து விட்டு வேலை கிடைக்காத பதட்டம், எல்லா தகுதிகளும் இருந்தாலும் திருமணம் தகையாத  வருத்தம், இரண்டில் எது பெரியது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?


#  இரண்டுமே கொடுமைதான் எனினும் வேலையின்மை தன்மானப் பிரச்சினை எனவே கொடுமை ++

& இந்தக் கால ஆண்களோ பெண்களோ திருமணம் தகையவில்லை என்றால் அதிகம் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அல்லது அதை அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. படித்துவிட்டு அதற்கேற்ற வேலை கிடைக்காவிட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதுதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

என்னதான் ஆண்களுக்கு இணையாக ஏன் அவர்களை விட மேலாக சில துறைகளில் செயல் பட்டாலும் அரசியல், விளையாட்டு போன்றவற்றை பற்றி பெண்கள் அவ்வளவாக பேசுவதோ, எழுதுவதோ இல்லையே ஏன்?

# பெண்களுக்கு வீட்டுச் சுமை பொறுப்பு அதிகம் என்பதால் விளையாட்டு அரசியல் எல்லாம் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.

& அரசியலில் decency காணாமல்போய் ரொம்பக் காலம் ஆகிவிட்டது. அதனால் பெண்கள் அந்தப்பக்கம் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை என்று நினைக்கிறேன். விளையாட்டுத்துறையில் consistency ஏனோ பல பெண்களுக்கு வாய்ப்பது இல்லை. அதனால் அதுவும் பேசப்படுவது, எழுதப்படுவது இல்லை.


 ===========================================

இந்த வாரம், கேள்விக்கு மாற்றாக ஒரு சிறிய பயிற்சி. 

எல்லோரும் தவறாமல் பங்கு பெறுங்கள். 

கவனமாகப் படிக்கவும். சில விஷயங்கள் உங்கள் அனுமானத்திற்கு விடப்பட்டுள்ளன. 

Image result for Plain paper

1. ஒரே அளவுள்ள இரண்டு பக்கமும் காலியாக உள்ள, இரண்டு வெள்ளைத் தாள்களை எடுத்துக்கொள்ளவும். 

2. ஒரு வெள்ளைத்தாளில், முதலாவதாக உங்கள் பெயரை எழுதுங்கள். 

3. பெயருக்குக் கீழே, மற்ற வெள்ளைத் தாளின் உத்தேசமான விலை / மதிப்பு என்ன என்று எழுதுங்கள். 

அடுத்த நடவடிக்கைதான் முக்கியமானது. அந்த, மற்ற வெள்ளைத்தாளின் விலை / மதிப்பை இப்போ  நீங்கள் உயர்த்தவேண்டும். 

என்ன செய்வீர்கள், எப்படி செய்வீர்கள் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. 

என்ன செய்தீர்கள் என்பதை பின்னூட்டத்தில் விளக்கலாம் - அல்லது பெயர் எழுதிய தாள், மதிப்பு கூட்டப்பட்ட தாள் இரண்டையும் படம் எடுத்து, kggouthaman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது 9902281582 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம். 

கவனியுங்கள் : இந்த பயிற்சியில் ட்ரிக் எதுவும் கிடையாது. வெற்றுத்தாளின் மதிப்பை யார் அவருடைய முயற்சியால் அதிகம் மதிப்பு கூட்டுகிறார்கள் என்று பார்த்து, அடுத்தவாரம் விவரங்களை வெளியிடுகிறேன். 

பயிற்சியில் பங்கு பெற்று, படம் அனுப்புவோர், இங்கே பின்னூட்டத்தில் படம் அனுப்பிய விவரம் பதியுங்கள். 

==============================================

உங்கள் பேராதரவால், எங்கள் ப்ளாக் நேற்று 16,00,000 பக்கப்பார்வைகளைக் கடந்துள்ளது. எல்லோருக்கும் எங்கள் ஆசிரியர்கள் சார்பில் நன்றி. நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

==============================================

190 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.

  முதலில் வாழ்த்துகள் சொல்லிவிடுகிறேன். பின் பதிவிற்கு வருகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா.

   நீக்கு
  2. பக்கப் பார்வைகள் கூடியதற்கு வாழ்த்துகள்! அதான் அந்த முதல் வாழ்த்துகள் ஹிஹிஹிஹி!!! சொல்லாம சொல்லிட்டேனோ!! மேலும் வாசகர்கள்/பார்வையாளர்கள் கூடிட வாழ்த்துகள்!

   மனதையே வெற்றிடமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மதிப்பு ஞானி லெவலுக்கு எங்கேயோ போய்விடும். (அதான் நம்ம அப்பாவி புலியூர் பூஸானந்தா ஞானி போல!! ஹா ஹா ஹா ஹா) என்றுதானே சொல்லப்படுகிறது!! ஹிஹிஹிஹி...ஆனால் வெற்றுத் தாளின் மதிப்பு அப்படி இல்லையே!

   ஒன்னும் எழுதாம இருந்தா குப்பைக்குக் கூடப் போக சான்ஸ் உண்டு! ஹையோ தத்துப் பித்தானந்தாவா ஆகிட்டேனே...வரேன் மதிப்பு கூட்டறது எப்படினு...சமீபத்தில் நடந்த ஒன்று சொல்லுகிறேன்...

   கீதா

   நீக்கு
  3. சொல்லுங்க, சொல்லுங்க.

   நீக்கு
  4. வெற்றுத்தாளின் மதிப்பு அதிலுள்ள கன்டென்ட் பொருத்து மாறும்.

   சமீபத்தில் பெற்றோர் இருக்கும் போதே (இருவருமே படுத்த நிலையில்) சொத்து பிரிக்க வேண்டும் என்று முதலில் ஒரு வெற்றுத் தாளில் அவர்களைக் கொண்டே எழுத வைத்து கையெழுத்து, சாட்சிகள் வைத்து அவர்களும் கையெழுத்து போட்டு எல்லாம் வாங்கிக் கொண்டார்களாம். (இங்கு பெற்றோர்களின் கதி என்ன என்று கேட்கக் கூடாது!!)

   அந்த வெற்றுத்தாளில் எழுதப்பட்ட சொத்துக்களின் விலை 10கோடி

   கீதா

   நீக்கு
  5. கீதா ரங்கன்.... வருந்தத்தக்க நிகழ்ச்சியை எழுதியிருக்கீங்க. பிறரிடமிருந்து வரும் எதுவும் நமக்குக் கடனே.. இந்தப் பிறவியிலோ மற்றைய பிறவியிலோ அதனைத் தீர்த்தாக வேண்டும். அதனால்தான் பெற்ற கடன், வளர்த்த கடன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

   அப்பாவிடம் இருந்து, நாம் வளர்ந்த பிறகு எது பெற்றாலும் தவறு... அதிலும் வற்புறுத்தி?

   நீக்கு
  6. அப்பா அம்மாவின் சொத்து அவர்களின் குழந்தைகளுக்குத்தானே செல்லும். இதில் எழுதி வாங்கிக்கொள்ள என்ன அவசியம்?

   நீக்கு
  7. பலருக்கு சகோதரியுடன் சொத்தைப் பிரித்துக்கொள்ள மனது வருவதில்லை. வேற உயில் எழுதியிருப்பாங்களா, அவங்க போனதுக்கப்புறம் என்ன வில்லங்கம் வரும் என்றெல்லாம் தெரியாது. ஒருவன் வெளிநாட்டில் இருந்தால் இல்லை நல்ல நிலைமையில் இருந்தால், தாங்கள்தானே பார்த்துக்கொண்டது என சொத்து எழுதி வாங்குவது என்று பல பிரச்சனைகள் இருக்கில்லையா? அரசாங்க சட்டக் குழப்பங்கள் வேறு இருக்கிறது.

   நீக்கு
  8. வெற்றுத் தாளில் உள்ள கன்டெண்டைப் பொருத்து மாறும் மதிப்பு ஒவொருவரின் பார்வையில் பெர்செப்ஷனில் மாறும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

   இன்னும் யோசிக்கணும்.

   கீதா

   நீக்கு
  9. யோசிங்க, பங்கு பெறுங்க !

   நீக்கு
  10. பிறரிடமிருந்து வரும் எதுவும் நமக்குக் கடனே..//
   யெஸ் யெஸ் யெஸ் நெல்லை அப்படியே வழி மொழிகிறேன் இதைப் பற்றியுமம் எழுத வந்தேன் அதற்குள் ஒரிரு போன் அழைப்புகள்...

   அப்படியே நெல்லை. சிலர் இருக்காங்க நெல்லை அவங்க ஒழுந்த ஃபினான்ஸியல் மேனேஜ்மென்ட் செய்து தன் வாழ்க்கையை வாழாமம் தவறான முடிவுகளால் கடனாளியாகி, அல்லது ஒழுங்காக தங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்துக்கு அதாவது படிப்பு, கல்யாணம் என்பதற்குச் சேர்த்துக்காம, அதீதமாகச் செலவழித்து வாழ்ந்து, கடன் வாங்கித்தான் கல்யாணம், படிப்பு என்பதாக, ஆனால் அதை அடைக்க முடியாமல் சரியாகக் கேல்குலேட் செய்யாமல், தாங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று, கடன் ப்ரெஷரைஸ் பண்ண அடுத்து அதைக் கட்ட அப்பா அம்மாவின் பணத்தில் பங்கு கேட்டு அதை வைத்து கல்யாண்ம, படிப்பு, அல்லது தன் கடனை அடைத்தல் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது, கல்யாணம் செய்வது தங்கள் வாழ்க்கையை அழகாக வாழ்வது என்பது அவரவர் பொறுப்பு என்பது என் தனிப்பட்டக் கருத்து.

   கௌ அண்ணா அது தானாக வந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதுவரும் முன்னே யே எழுதி வாங்குவது என்பதும் நடக்கிறது...இப்போது மேலே சொன்ன காரனங்களால்..அல்லது...பரம்பரைச் சொத்து...யாருக்கேனும் அதிகமாகவோ அல்லது சிலர் நெல்லை சொல்லியிருப்பது போல் சகோதரிகளுடனோ பங்கிட்டுக் கொள்வது பிடிக்காமல் செய்வது

   கீதா

   நீக்கு
  11. ஒழுந்த - ஒழுங்காக என்று வந்திருக்க வேண்டும்
   கீதா

   நீக்கு
  12. நெல்லை உங்களின் இரண்டாவது கருத்தையும் அப்படியே டிட்டோ செய்கிறேன்...(சகோதரி நு சொன்ன கருத்து)

   கீதா

   நீக்கு
  13. அப்பாவிடம் இருந்து, நாம் வளர்ந்த பிறகு எது பெற்றாலும் தவறு. அதுவும் வற்புறுத்தி//

   நெல்லை நான் இதைக் கன்னா பின்னானு ஆதரிக்கிறேன். அதேதான்.

   கீதா

   நீக்கு
  14. ////நெல்லை உங்களின் இரண்டாவது கருத்தையும் அப்படியே டிட்டோ செய்கிறேன்...(சகோதரி நு சொன்ன கருத்து)

   கீதா////

   ஆஆஆஅ நெல்லைத்தமிழன், கீதா வை , அக்கா எனக் கூப்பிட்டதை .... கீதா படுபயங்கரமாக ஒத்துக் கொண்டிட்டாவோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இனி நீங்க பயப்பிடாமல் கீதா வீட்டுக்குப் போகலாம் நெல்லைத் தனிழன்:)...

   நீக்கு
  15. @அப்பாவி அதிரா..... கீதா ரங்கன் எங்க ஊர்க் காரர். அதுனால நான் தவறுதலா ஏதேனும் சொல்லிட்டாலும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க என்று எழுத எனக்கு ஆசைதான். ஆனால் இந்த கீதா ரங்கனை நம்பி எழுத முடியாது. அவங்க, எல்லார் கிட்டேயும் 'அவங்க ஊர்தான்' என்று சொல்றாங்க, இலங்கை, திருவனந்தபுரம், நாகர்கோவில், நெல்லை, பெங்களூர்....... என்று லிஸ்ட் ரொம்பவும் நீள்கிறது

   நீக்கு
  16. ஹா ஹா ஹா இலங்கை எண்டும் சொல்லுறா இடைக்கிடை ஹா ஹா ஹா:))

   நீக்கு
  17. ஹா ஹா ஹா ஹா வரேன் இருங்க ரெண்டு பேரும் வரேன். பதிவே இன்னும் முடிக்கலை....ஏன்னா கரன்ட் போய்ட்டு வந்த கரண்டு மீண்டும் போய் இப்பத்தான் வந்துச்சு. பதிவு இன்னும் முழுக்க பார்க்கவே இல்லை....

   கீதா

   நீக்கு
  18. கோட் இஸ் கிரேட் யா:)).. கரெக்ட்டான நேரத்தில கரெண்ட்டைக் கட்டாக்கி நம்மைக் காப்பாத்திட்டார்ர்:))

   நீக்கு
 2. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் மற்றும் வரும் நம் நட்புறவுகளுக்கும் நல்வரவு...

   நீக்கு
  2. வந்திருக்கும் அனைவருக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும், வரவேற்ற துரைக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. நல்வரவு, வாழ்த்துகள்

   நீக்கு
 3. 16,00,000 பக்கப் பார்வைகளைக் கடந்தது நமது தளம்..

  இன்னும் கடக்க வேண்டியவை ஏராளம்..

  வாழ்க.. வாழ்க!...

  பதிலளிநீக்கு
 4. பதிவு அழகான செய்திகளைத் தாங்கி வருகின்றது..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 5. வாத்யாரே!... அதென்னங்க ரெண்டு வெள்ளைத் தாள் இருக்கு.. என்னா அர்த்தம்?..

  ஒன்னு மனம்... ஒன்னு குணம்!...

  நீங்க வேற... எதையாவது சொல்லிக்கிட்டு!... அதுக்கு மதிப்பைக் கூட்டணுமாமே!...

  ஆமாம்... மனமும் குணமும் ஒரே புள்ளியில சேர்ந்தால் வேறொரு கார்யம்... வியாக்யானம்....

  அப்போ நீங்க ஒன்னும் செய்யலையா?...

  நம்மால ஆனது வேடிக்கை பார்க்குறது தான்... அதை ஒழுங்காச் செய்வோம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஒப்பீடு. ஆனால் .... வேடிக்கை பார்க்காமல் இறங்கி, அடித்து ஆடுங்கள்.

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 7. பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டு வருவது குறித்து மகிழ்ச்சி. ஆ"சிரி"யர்கள் அனைவரின் முயற்சியும், ஊக்கமும், ஒருங்கிணைப்புமே அதற்கு முக்கியக் காரணம். அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. நன்றி. நன்றி, நன்றி ....... நன்றி (கா சோ நீ கம்முனு கிட!)

   நீக்கு
 8. இனிய காலைப் பொழுத்துக்கான வணக்கம் .இந்த நாள் இனிய
  நாளாகட்டும். கேள்வி பதில்கள் சுவாரஸ்யம்.
  திருவண்ணாமலையானுக்கு உரித்தானது அரோகரா.
  திருப்பதியானுக்கு உள்ளது கோவிந்தா.

  கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போனால் அப்பனே கபாலி
  அம்பிகே கற்பகம்., அதே போல சுப்ரமண்யர் சன்னிதியில்

  முருகா, பிள்ளையாரைப் பார்த்தவுடன் தோப்புக்கரணம்.
  இதெல்லாம் நாங்கள் செய்வது.😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா.. என்னைப்பொறுத்து எந்தக் கடவுளும் என்னை இப்படிக் கூப்பிடு அப்படிக் கும்பிடு எனச் சொன்னது கிடையாது:).. அனைத்தையும் உருவாக்கி நம்மைக் கொயப்புவதும் நம் மக்கள்தானே:))

   நீக்கு
  2. உண்மைதான் அதிரா.
   வடிவங்களை வழிபடுவதால் அந்தப் பெயரை வைத்துக் கூப்பிடுகிறோம் என்று சொல்ல வந்தேன் மா.

   நீக்கு
  3. //வடிவங்களை வழிபடுவதால் அந்தப் பெயரை வைத்துக் கூப்பிடுகிறோம்//
   இது உண்மைதான் வல்லிம்மா.. இல்லை எனில் நமக்கே வேறுபாடு தெரியாதே..

   நீக்கு
 9. கேஜிஜி சார் மறுபடியும் மதிப்புக்கூட்டு வரியைத் தான் விதிச்சுட்டாரோனு நினைச்சேன். கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்றாக இருக்கின்றன. அதுக்குப் பின்னர் வரேன். இப்போது மதிப்புக் கூட்டல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். நான் என் போக்கில் மதிப்பைக் கூட்டிட்டேன் எனச் சொன்னால் அது இங்கே கேஜிஜி சார் வைத்திருக்கும் விடைகளோடு அல்லது அவர் நினைத்திருக்கும் விடையோடு ஒத்துப் போகுமா? பேப்பரின் மதிப்பைக் கூட்டுவது எனில் அது எப்படிப் பட்ட மதிப்பு என்பதும் தெரியணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கே ஜி ஜி சார் எந்த விடையையும் வைத்துக்கொள்ளவில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் பதில்கள் இருக்கும். எதையும் தவறு தப்பு என்றெல்லாம் நாங்கள் எதையும் சொல்லமாட்டோம். எனவே, தயங்காமல் பங்கேற்கலாம்.

   நீக்கு
 10. எனக்குத் தான் புரியலையோனு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம்.

  ஒரு வெற்றுத்தாளின் மதிப்பை இரண்டுவிதமாக மதிப்பு கூட்டலாம்.

  ஒன்று, மிக நல்ல ஓவியம் வரைவதன்மூலம். சாதாரண போர்டு, அதன்மீது வரைந்த ஓவியத்தினால் பல மில்லியன் டாலர் மதிப்பைப் பெறுவதுபோல.

  இன்னொன்று அதன் மீது எழுதப்பட்ட கன்டென்ட் மூலம். உதாரணமாக அபூர்வ ஆட்டோகிராப் ஆக இருக்கலாம். இல்லை.. நம் குழந்தைகளோ, இல்லை நாமோ சிறிய வயதில் எழுதியதாக இருக்கலாம்.

  என் பசங்க, அவங்க சிறிய வயதில், நான் வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பும்போது எனக்கு "We missed you. Welcome" என்பனபோன்று எழுதித்தந்த பேப்பர்களும், சில சமயம் புதிதாக வாட்ச், ஷூ போன்றவைகளைக் கேட்டபோது, போனமுறை வாங்கித்தந்ததை கொஞ்ச மாத்த்திலேயே உடைத்துவிட்டாய், வீணாக்கிவிட்டாய், நான் புதிதாக வாங்கித் தருவதை எத்தனை வருடங்கள் வைத்திருப்பாய் என்று கமிட் செய்து எழுதித்தா என சின்ன வயதில் அவங்கள்ட சொல்லி, அவங்க கையெழுத்துப் போட்டு எழுதித் தந்தவை.... இவையெல்லாம் பொக்கிஷங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொக்கிஷங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாமே சரிதான். நான் கூறியுள்ளது, பழைய பொக்கிஷங்களைத் தோண்டி எடுப்பதற்கு அல்ல. இன்று, இங்கே, இப்போ இரண்டு வெள்ளைத்தாள்கள் எடுத்து, ஒன்றின் ஆரம்ப மதிப்பை எழுதி, அதன் மதிப்பைக் கூட்டி, (value addition) பிறகு, அதை வெளியிடவேண்டும். நிற்க. நீங்கள் மற்றவர்களுக்கு நிறைய க்ளூ கொடுத்துவிட்டீர்கள்.

   நீக்கு
  2. இதைவிட ஒன்று உண்டு... சாதாரண 50 ரூபாய் தாளில், இந்தச் சொத்தை உங்களுக்குத் தருகிறேன் என்றோ, நான் உங்களுக்கு 50 லட்சம் தரவேண்டி உள்ளது என்ற கடன் பத்திரமோ எழுதினால் அந்தப் பேப்பரின் மதிப்பு ஏகப்பட்டது கூடிவிடாதா?

   நீக்கு
  3. அதனால்தான் முன்னெச்சரிக்கையாக வெற்றுத்தாள் என்று சொல்லிவிட்டேன்!

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆ ஒண்ணுமே பிரியல்லே உலகத்திலே என நினைச்சுக் கொமெண்ட்ஸ் படிச்சேன்ன்னாஆஆ:)....
   பொய் சொல்ல மாட்டேன்ன் நெல்லைத்தமிழனால எனக்கு குளூக் கிடைச்சிருக்கூஊஊஊஊ ஹா ஹா ஹா:)...

   நீக்கு
  5. பரிசு என்னெண்டு சொல்லுங்கோ:)... பிறகு பரிசு நெல்லைத்தமிழனுக்கு:)... அதிராவுக்கு ஆ தோ அ வ ... இப்பூடிச் சொன்னாலும் சொல்லுவீங்க கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா

   நீக்கு
  6. ஆஹா நெல்லை அதைத்தான் நான் அங்கு சொல்லியிருக்கிறேன்...ஹா ஹா ஹா

   பத்திரம் எல்லாம் கூட வேண்டாம் வெற்றுத்தாளில் எழுதினாலே சாட்சிகளோடு கையெழுத்திட்டு (இப்ப ஆதார் கார்டு நம்பருடன்!!!) வைச்சாலே போதும்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. ஹலோ அப்பாவி உங்க கேள்வி பரிசு பற்றி ..அப்பாவியா இல்லையே!! ஹா ஹா ஹா ஹா
   நாங்களும் இருக்கோம் லிஸ்ட்ல ஹூக்கும்!!

   கௌ அண்ணா மாட்டிக்காதீங்க!! பரிசு எல்லாம் சொல்லி. அப்புறம் நானும் நெல்லையும் சண்டைக்கு ரெடியா இருக்கோம்! அதுவும் உங்க வெற்றுத் தாள்லயே எழுதி சைன் போட்டுக் கேட்போமாக்கும்!! ஹா ஹா ஹாஹ்

   கீதா

   நீக்கு
  8. வைரவா ! என்னைக் காப்பாத்து!

   நீக்கு
  9. வைரவா காப்பாத்துங்கோ ... என்னையும் தேன்ன்ன்ன்ன்:))

   நீக்கு
 12. பக்கப்பார்வைகள் கூடுவதில் ஆச்சர்யம் இல்லை. தளத்தின் இன்டெரெஸ்டிங் கன்டன்ட் எழுதும் ஆசிரியர்களுக்கும், புதிய பகுதிகளை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கும், தொடர்ந்து ஆதரிக்கும் வாசகர்களுக்கும் அந்தப் பாராட்டு போய்ச்சேரவேண்டும்.

  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே, உங்கள் பேராதரவுதான் காரணம்.

   நீக்கு
  2. ஆஆஆஆங்ங்ங் முக்கியமா அதிராவாலதான் எண்டு சொல்லோணும்:)... ஹையோ எதுக்கு இப்போ கெள அண்ணன் குனியுறார்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஒ கல்லெல்லாம் தேடாதீங்க.... பேசித் தீர்த்திடலாம்:)... ஹா ஹா ஹா

   நீக்கு
  3. குனிஞ்சு கட்டிலைதான் தேடுகிறேன், ஒளிந்துகொள்ள !

   நீக்கு
 13. காகிதம் மட்டுமல்ல, எந்தப் பொருளும் அதன் சேர்க்கை (சேருமிடம்), உபயோகம் ஆகியவற்றைப் பொறுத்து மதிப்புப் பெறும். மலர் வாடி மறையலாம், ஆடுமாடுகள் அழிக்கலாம், மாலையாகலாம், மதிப்புக் கூட்டிய மாலையானாலும் இறைவனுக்குச் சேர்ந்து உயர்வு பெறலாம். ஒவ்வொரு பொருள், உயிருக்கும் இதுபோன்று விதியுண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! கவிதையாக வடித்துவிட்டீர்கள்!

   நீக்கு
  2. நெல்லைத் தமிழன் , வெற்றுப் பேப்பரில்
   தமனாக்கா வந்தாலே ..... அது விலைமதிப்பற்றதாகிடும் ஹா ஹா ஹா:)..

   நீக்கு
  3. // தமனாக்கா வந்தாலே ..... அது விலைமதிப்பற்றதாகிடும்// அவருக்கு சரி - எல்லோருக்கும் அது ஏற்புடையதாக இருப்பினமோ?

   நீக்கு
  4. ஹா ஹா ஹா அப்போ சொத்தை வைத்தெல்லாம் மதிப்பிட முடியாதோ:)... இதைவிட இண்டைக்கு நான் ஸ்கூலுக்குப் போயிருக்கலாம் போல இருக்கே வைரவா:)...கொயப்புறார் என்னைக் கெள அண்ணன் :)

   நீக்கு
  5. // அப்போ சொத்தை வைத்தெல்லாம் மதிப்பிட முடியாதோ:// தமன்னாக்கு சொத்தைப் பல்லா!

   நீக்கு
  6. ஹா ஹா ஹா ஹா வெற்றுப் பேப்பரில் தமனாக்காவா!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்ப ஸ்ரீராம் அனுஷ் நு சொல்லுவார் நாங்க அரம இருக்கோமாக்கும் கேர்ஃபுல்!!

   கௌ அண்ணா தமன்னாக்குச் சொத்தைப் பல் வந்தா தங்கப் பல் மாட்டிக்குவாரே! அப்ப மதிப்பு இன்னும் கூடிடுமே!

   கீதா

   நீக்கு
  7. மதிப்புக் கூட்டிய மாலையானாலும் இறைவனுக்குச் சேர்ந்து உயர்வு பெறலாம்.//

   பாயின்டு?!! ஹா ஹா அப்ப வெத்துப் பேப்பர்ல சாமி பெயரை ஃபுல்லும் எழுதி மாலை மாதிரி செஞ்சுடலாம்
   ..அப்படியும் செய்யறாங்களே!! ஸ்ரீராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயருக்கு மாலையாவே போடுறாங்க!!!

   கீதா

   நீக்கு
  8. //

   கௌதமன்15 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:37
   // அப்போ சொத்தை வைத்தெல்லாம் மதிப்பிட முடியாதோ:// தமன்னாக்கு சொத்தைப் பல்லா!///

   ஆவ்வ்வ்வ்வ் ஏன் நெல்லைத்தமிழன் இன்னும் பொயிங்கவில்லை?:))...

   நீக்கு
  9. நெ த ஓடிட்டார் .... காணோம்!

   நீக்கு
  10. கொஞ்சம் பிஸியா இருக்கேன். தமன்னா கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ண, எங்க பசும்பால் கிடைக்கும்னு தேடிக்கிட்டிருக்கேன்.

   நீக்கு
  11. ஆ ---- தமன்னா கட் அவுட்டுக்கு .... ஒரு கப் பால் போதுமே! ஆட்டுப்பால் இருந்தா கூடப் போதும்!

   நீக்கு
 14. பதில்கள்
  1. ஹா ! நான் எங்கே மதிப்பு சொல்லியிருக்கேன்? குழப்புறீங்களே !

   நீக்கு
 15. சுவாரஸ்யமாக இருந்தது அலசிய விதம்.

  16,00,000 பார்வைகள் இன்னும் கடந்து செல்ல வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 16. கேள்வி பதில்கள் அருமை...

  பக்கப் பார்வைகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 17. ////உங்கள் பேராதரவால், எங்கள் ப்ளாக் நேற்று 16,00,000 பக்கப்பார்வைகளைக் கடந்துள்ளது. எல்லோருக்கும் எங்கள் ஆசிரியர்கள் சார்பில் நன்றி. ////

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ... இன்னும் பலகோடி காண வாழ்த்துக்கள்.

  எனக்கொரு டவுட்டு:)... கெள அண்ணன் கு கு வாக இருப்பாரோ( இது கெள அண்ணனின் குகு அல்ல:), அதிரா சொல்லும் குகு:))) ஏன் தெரியுமோ பொதுவா எதையும் அறிவிக்கும்போது, ரவுண்ட் பிகராக இருக்கும்போதுதானே சொல்லுவினம்... ஒரு கோடி, ஒன்றாரை... ரெண்டு இப்படி:)... இவர் 1.60 இல் சொல்லிட்டார்ர்ர்ர் ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்து வருடங்களில் பதினாறு இலட்சம் என்றால், ஒரு கோடி பக்கப்பார்வைகளுக்கு, அறுபது வருடங்கள் ஆகிவிடுமே அதிரா! நான் இன்னும் ஒரு ராமானுஜராக இருந்தால்தான் அவ்வளவு வருடங்கள் வாழ முடியும்!

   நீக்கு
  2. என்ன என்னைக் குழப்பிறீங்க கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு எப்பவுமே இந்த கோடி, லட்சத்தில குழப்பம் உண்டு....
   இப்போ உங்கள் பக்கப் பார்வைகள் ஒரு கோடியே அறுபது லட்டம் தாண்டுது... இப்படி நினைச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா ஆனாலும் எனக்கு டபிள் மட்ஸ் ல ஏ ஆக்கும் ஹா ஹா ஹாஅ

   நீக்கு
  3. ஹாஹா பூனை வசமா சிக்கி ..A பெருசா இல்ல D பெரிசா ???

   நீக்கு
  4. @ஏஞ்சலின்.... அதிரா சரியாத்தான் சொல்லியிருக்காங்க. அவங்க டபிள் மேத்ஸ் எக்சாமுக்கு A(Absent). பின்ன... அட்டெண்ட் பண்ணினா மட்டும் ஒற்றை இலக்க மதிப்பெண்ணைத் தாண்டுவாங்களான்னு கேட்டீங்கன்னா, அதுக்கு பதில் சொல்லி அவங்க கோபத்தை நான் சம்பாதித்துக்கொள்ள மாட்டேன்.

   நீக்கு
  5. அந்த பதிலையும் சொல்லிடுங்க நெல்லை. என்ன ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் (எங்கெங்கே வீங்கியிருக்குன்னு !)

   நீக்கு
  6. ஹாஹா பூனை வசமா சிக்கி ..A பெருசா இல்ல D பெரிசா ???//

   ஹா ஹா ஹா ஹா அவங்க சிங்கிள் டிஜிட் நு சொல்ல வந்தா நெல்லை சொல்லி மாட்டிக்கிட்டார் நான் அவர் பின்னாடி ஒளிஞ்சுக்கறேன்.

   கீதா

   நீக்கு
  7. கெள அண்ணன் கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ.. பிறகு மாறிக்கீறி கல்லு உங்களுக்குப் பட்டிடப்போகுதே:)).. என்னிடம் இன்சூரன்ஸ்சும் இல்லையே வைரவா:)).. கீதா என்னைவிட டபிள்.. நெல்லைத்தமிழன் ரிபிள்:) சைஸ்ல இருப்பதால இம்முறை குறி தப்பாது:)).. அதாரது என் கையை இழுப்பது.. அஞ்சு விடுங்கோ.. நான் முன் வச்ச வாலை பின்னே வைக்க மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

   என் செக்:) இன் கொமெண்ட் பார்த்ததும்தான் நான் நினைச்சேன்ன் பிள்ளை எவ்ளோ உசாரா கொமெண்ட் போட்டிருக்கிறா:)) நான் தான் வாயைக் குடுத்து மாட்டிட்டேன் என:).. இங்க பாருங்கோ.. இதில ஆயிரமா.. லட்சமா.. கோடியா எனப் போடாமல் வாழ்த்திட்டா:)) ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ..
   ///congratulations .this is for 16,00,000 page views :)
   ///

   நீக்கு
  8. ஹையோ ஹையோ எங்கட நாட்டுக் கல்வி முறை மிக நல்ல முறை ஆனா இந்த றிசல்ட் போடும் சிஸ்டம்தான் கொஞ்சம் பன்னி:)) [ஹா ஹா ஹா ஃபனி யை இப்பூடித்தான் டமில்ல எழுதோணுமாம் நெல்லைத்தமிழன் புரொபிஸர் சொல்லித்தந்தவர்:)]..

   அதாவது ஒ லெவல் ரிசல்ட் உங்கட பிளஸ் வன்... றிசல்ட் எல்லாம் டி, சி, எஸ், ஃபெயில்.. இப்படி வரும்..

   ஏ லெவல்.. அதாவது பிளஸ் 2 ரிசல்ட் முடிவுகள்.. ஏ, பி, சி, எஸ், ஃபெயில்.. இப்படி வரும். ஆனா இப்போ கடந்த சில வருடங்களாக அனைத்து முடிவுகளையும் ஏ பி சி ஸ்டைல்லுக்கே மாற்றி விட்டார்களாம் எனக் கேள்விப்பட்டேன்.

   நீக்கு
  9. நாடு மாறி இருப்பதால் எனக்கு இந்த லட்சம் கோடியில் எப்பவுமே தகராறு வருது.. ஏனெனில் லட்சம் எனும் கணக்கு நம் நாடுகளில் மட்டுமே பாவிக்கப்படுது.. இங்கெல்லாம் லட்சம் எனும் சொல் வார்த்தை இல்லை.... இங்கு ஆயிரத்தில்தான் பேசுவார்கள். அதாவது.. தவுசன், 10தவுசன், 100 தவுசன்.. 200 தவுசன்.. இப்படி.. இப்போ இங்கு ஒரு வீட்டைக் காட்டி என்ன விலை போகும் எனக் கேட்டால்ல் 2 ஹன்றட் தவுசன்.. 3 ஹன்ரட் தவுசன் இப்படித்தான் சொல்லுவோம்ம்.. 3 லக்ஸ் எனச் சொல்லும் பழக்கம் இல்லை.

   சில வார்த்தைகள் நம் நாட்டில் மட்டுமே உருவாக்கப்பட்ட ஆங்கில வார்த்தையாக இருக்குமோ என எண்ண வைக்கும்... இந்தியாவில்.. தமிழனை.. ஆங்கிலத்தில் தமிழியன் எனச் சொல்கின்றனராம்.. என் கணவரோடு வேர்க் பண்ணும் ஒரு ஆந்திராவைச் சேர்ந்தவர் முன்ன முன்னம் பேசும்போது தமிழியன்ஸ் என ஏதோ சொல்லிக் கொண்டு போனார்ர்.. எனக்குப் புரியவில்லை, பின்புதான் என் ஆத்துக்காரர்... ஜொன்னார்ர்:))..

   இதில ஏதும் டப்பு இருக்கோ?:))

   நீக்கு
  10. இன்னுமொரு உண்மை இங்கின ஜொள்ளியே ஆகோணும்.. கீதாவில் ஆரம்பிச்சு.. அனைவருமே.. இலக்கத்தை மட்டுமே போட்டு வாழ்த்தியிருக்கினமே தவிர.. லட்சமோ கோடியோ எனச் சொல்லவில்லை.. நான் அதையும் தேடிப்பார்த்தேன் ஆராவது சொல்லியிருக்கினமோ என ம்ஹூம்ம்.. எல்லோருமே படு ஷார்ப்பூஊஊஊஉ என்பதால.. அது கோடியேதான் எனும் முடிவுக்கு வந்திருந்தேன்ன் ஹா ஹா ஹா..

   கீழே காமாட்சி அம்மா தான் கரெக்ட்டா லட்சம் எனச் சொல்லி வாழ்த்தி இருக்கிறா:))..

   நீக்கு
  11. @நெல்லைத்தமிழன் உங்களுக்கு நினைவிருக்கா ஒருமுறை சீராளன் சொன்னார் இந்த D சிஸ்டம் இலங்கையில் 1960 க்கு முன்னாடிதான் இருந்ததாம் :) இந்த ஸ்வீட் 16 லாம் சும்மா நம்மை ஏமாத்த

   நீக்கு
  12. @அதிரா - ஆம்...ஆங்கிலத்தில் TAMILIANS தமிலியன்ஸ் என்பதுதான் தமிழர்களுக்கு. வட இந்தியர்கள் இன்றும் 'மதராசி' என்பார்கள். கேரளத்தவர், கிண்டலாக 'பாண்டி' என்பார்கள். அதுனால தமிலியன்ஸ் என்பதில் தவறு இல்லை.

   @ஏஞ்சலின்... அது சீராளன் சொன்னது இல்லை. நான் சொன்னது. அதற்கு உதவியது, நீங்கள் கொடுத்த Hint. (அதாவது அதிராவுக்கு வயசு எழுதும்போது மட்டும் 'கண்ணாடியில் தெரிவதுபோல்' மாற்றி எழுதுவாங்கன்னு நீங்க சொன்னது). அப்புறம்தான் எப்போ டமிள்ல 'டி' கொடுத்தாங்கன்னு பார்த்தா அது 1959வரை அந்த மாதிரி சிஸ்டம்னு தெரிஞ்சது. ஹாஹா. நம்ம கூட்டணிக்குப் பயந்து சிலர் இடுகைலாம் போடறதில்லைனு, அதிலும் சமையல் இடுகை, உங்களுக்குத் தெரியுமல்லவா?

   நீக்கு
  13. அது ஒண்டுமில்லைக் கெள அண்ணன்:) இந்தக் கொமெண்ட்ஸை எல்லாம் படிச்சுப் பயந்து நீங்க தலைமறைவா இருந்திடாதீங்க ஶ்ரீராமைப்போல:)...

   அது என்ணெண்டால் நேக்கு செல்லக்குட்டித் தம்பி ஆச்சி பிறந்ததாலயும்:) குயின் அம்மம்மா எனக்கும் வைர அட்டியல் போடுவேன் எனச் சொல்லிட்டா என்பதாலும்:)... அல்வா ஊர்ப் பக்கத்தாலயும்:)... தேம்ஸ்ட மற்றப் பக்கத்திலிருந்தும் புகையோ புகை எனப் புகைக்குது:)... ஒரு கப் நொங்கு கிடைச்சால் இப்போ இருவரையும் கூல் பண்ணி விட்டிடுவேன்.... இடக்கிடை பெங்களூரில் இருந்தும் சவுண்டு விட்டு விட்டுக் கேய்க்குது ஹா ஹா ஹா கரண்டுக்கே பொறுக்க முடியாமல் கட்டாகிடுதோ என்னமோ:)..

   அதிலயும் இப்போ அனுக்காவுக்குப் போட்டியா தானும் இஞ்சி க் கழுத்தழகியாமே:)... ஶ்ரீராம் இதை எல்லாம் படிச்சிட்டும் எப்படி டின்னர் சாப்பிடுறார் நிம்மதியா:)...

   ஆஆஆ கடவுளே இந்த வெக்கையிலும் நேக்கு வேர்த்துக் கொட்டுதே:)

   நீக்கு
  14. ஆஹா சூப்பர் அன்னிக்கு சீராளனும் நீங்களும் மாற்றி மாற்றி கமெண்ட்ஸ் நோட்டிபிகேஷனுக்கு மெயிலில் வந்தததா அதில் கவனிக்கலை :) நமக்கு எங்கே ஸ்ரீலங்கன் சிஸ்டம் தெரியபோதுன்னு என்னமா அடிச்சி விட்டிருக்கு பாருங்க :)

   நீக்கு
  15. யெஸ் யெஸ் :) இப்போல்லாம் சமையல் செய்றதேயில்லையே மேடம் ஹாஹாஆ

   நீக்கு
  16. அதிராவ் தமிழன் ன்னு தமிழ் பேசும்போதுதான் சொல்வாங்க வேற ஸ்டேட்காரங்க மதராஸி இல்லைன்னா tamilian என்றே சொல்வாங்க ..
   எங்க டமிலியன்ஸும் சும்மா இருந்ததில்லை ஆந்திர/கேரள கன்னடக்காரங்களை நிக் நேம் வச்சி கூப்பிட்டதுண்டு
   ழ உச்சரிப்பு சில மொழியில் கிடையாது

   நீக்கு
  17. ஓ அப்போ அது ஒரு விதத்தில் பட்டப் பெயர் போல வருமோ?:).. அப்போ நானும் எல்லோருக்கும் பட்டம் வைக்கப் போறேன்ன்... :)) ஹா ஹா ஹா

   நீக்கு
 18. ஆஆஆ பெயர் சொல்லாமல் ஶ்ரீராம் போட்டோவா போட்டிருக்கிறீங்க:).... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சூ ஓடிக் கமோன்ன்ன்ன்ன்ன் ஶ்ரீராமின் படத்தைப் போட்டிட்டார் கெள அண்ணன்:)... இன்று ஏகாதசி என்பதால நாள் பார்த்து வெளியிட்டிருப்பார்ர்ர்ர்ர்ர்:)...
  நெல்லைத்தமிழன் சொன்னாரே... ஶ்ரீராம் ரெம்ம்ம்ப யங்கூஊஉன்னு:)... கீதா சொன்ன குட்டித் தாடியும் இருக்குதூஊஊஊ ஐரண்டையும் வச்சுப் பார்க்கும்போது கொன்போமாச்சூஊஊ:)... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடிப் பார்க்குறேன், தாடியைத்தான் காணோம்! அதிரா உங்க மூக்குக்கண்ணாடி எங்கே?

   நீக்கு
  2. ஹையோ 2ம் படத்தில ஒரேஞ் கலர் தாடி இருக்கே ஹா ஹ ஹா ...

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  4. கீதா என்னைவிட டபிள்.. நெல்லைத்தமிழன் ரிபிள்:) சைஸ்ல இருப்பதால//

   ஆ இதென்ன இங்கே நியாயம் கேக்க யாருமே இல்லையா!! நெல்லை எங்க போனீங்க? இங்கதான் கரன்ட் போய் இப்பத்தான் வந்துச்சுன்னா நீங்களும் பஞ்சாயத்த கூட்டவே இல்லை இப்படி சைஸ் எல்ல்லாம் சொல்லிருக்காங்க...நான் இஞ்சி இடுப்பழகியாக்கும் பூஸாரே!! ஹா ஹா ஹா ஹா

   ஹையோ இப்படி கும்மி அடிக்கிறேன் பதிவு ஃபுல்லும் வாசிக்கவே இல்லை ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  5. @கீதா ரங்கன் - //நான் இஞ்சி இடுப்பழகியாக்கும் பூஸாரே!! // - அதுனாலதான் உங்களை டபிள் 'அதிரா' என்று சொல்லியிருக்காங்க போலிருக்கு. அந்தப் பட அனுஷ்கா நினைவில் எழுதியிருப்பாங்க அதிரா. என்னைப் பற்றிச் சொன்னதில் தவறில்லை...உண்மைதானே (அப்போ அப்போ இப்படி பம்மிடணும். அட நல்ல பையன் போலிருக்கேன்னு அதிரா நினைத்து, நம்பிக்கையா ஒரு சமையல் இடுகை எபிலயோ அவங்க தளத்திலயோ போடுவாங்க. அப்போ இதெல்லாம் மனசுல வச்சு நல்லா கலாய்ச்சிவிட்டுடணும். அதைப் படித்தபிறகு கனடா போறேன்னு ரெண்டு மாசம் லீவு எடுத்துடுவாங்க ஹாஹா)

   நீக்கு
  6. நெல்லை உங்களையே நீங்க அப்பூடியெல்லாம் கூட்டிக்கப்ப்டாது!! நீங்க ஒன்னும் குண்டு கிடையாது!! அதிராவுக்கு என்ன சொன்னாலும் தெரியப் போறதில்லை அதனால நாம் அடிச்சுவிட்டுக்குவோம்!!

   டபிள் அதிரா வா!ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!! ஓ மை காட்!! இது அடுக்காது!! !!! சொல்லிப்புட்டேன் ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. கௌ அண்ணா நான் சும்மானாலும் ஸ்ரீராமை இப்படி இருப்பார்னு சொல்லிட பூசார் அதை நம்பி ரொம்பவே குழம்பிப் போயிருக்காங்க!! ஹா ஹா ஹா ஹா...தாடி வைச்சா ஸ்ரீராம்னு ஹா ஹா ஹா ஹா...

   ஸ்ரீராமுக்கு நாலு பல்லல்லவா நீட்டிருக்கும்!! நீங்களும் நல்லாவே குழப்பியிருக்கீங்க பூசாரை!!

   கீதா

   நீக்கு
  8. நெல்லைத் தமிழனை ஆர் குண்டு எண்டது:)... 90 கிலோ எல்லாம் குண்டில்லையாக்கும் ஹா ஹா ஹா:)...
   ஹையோ நான் புதுப் போஸ்ட் போடப் போறேன் அதற்குள் நெல்லைத்தமிழனுக்கு ஐஸ் வைக்கோணும்:)...

   நீக்கு
  9. தொண்ணூறு கிலோவா ! யம்மாடி! அது இங்கே 2g !! இரண்டு கௌ எடை!

   நீக்கு
  10. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கெள அண்ணன்:)) எல்லோரும் எண்ணெயோடயேதான் உலா வாறீங்க:)).. எரியுற நெருப்பை அணைச்சு எங்களை ஒற்றுமை ஆக்குவதை விட்டுப்போட்டூ எண்ணெய் ஊத்தி எரிய விடுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்க 70-75 கிலோ இருப்பீங்க கெள அண்ணன்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  11. ஊஹூம் அவ்வளவு கிடையாது. 55 மட்டுமே.

   நீக்கு
 19. எங்கட பெயருக்குக் கீழே எழுதப்பட வேண்டியது அந்த பக்கத்து வெற்றுத்தாளின் மதிப்போ? நான் நினைச்சேன் எங்கள் பெயரின் விலைமதிப்பாக்கும் என...
  வெற்றுத் தாளுக்கான விலையை நாம் எப்படியும் தீர்மானிக்கலாம்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கட உறவில் ஒரு பெண் இருக்கிறா, அவவிடம் என்ன கேள்வி கேட்டாலும் பெரிசா.. சத்தமா ஒரு சிரிப்புச் சிரிப்பா:)).. அவ்ளோதான்.. அதை நினைவு படுத்துறார் கெள அண்ணன் ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. இதுவும் ஒரு தக்கினிக்குதேன்ன்ன்ன்:)) புவஹா... புவஹா...புவஹா... மீயும் சிரிக்கிறேன்ன்:))

   நீக்கு
 20. //ஏஞ்சல் :

  ஒருவரை அதிகபட்சம் கோபப்படுத்தவைப்பது கோபப்படுத்துவது எது ?///
  என்னைக் கேட்டால் அனைத்தும் வரும் (abcd).... சந்தர்ப்பம் சூழ்நிலையப் பொறுத்து...

  பதிலளிநீக்கு
 21. ////அதிரா பாஷையில் இதுதான் பேய்க்காட்டுறதா ?)///

  ஹா ஹா ஹா அதேதான்:) ஒரு அப்பாவியை:)... பொய்யைச் சொல்லி நம்ப வைப்பது:)..

  பதிலளிநீக்கு
 22. எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :) அந்த குயுக்திக்கு செம ஐடியா :)
  கொம்பு மட்டும் மிஸ்ஸிங் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஆஆஆஆ கெள அண்ணன் எட்டிப் பக்கத்துச் சுவரை இறுக்கிப் பிடியுங்கோ.. புளொக் ஆடுதெல்லோ.. அது பூகம்பம் எல்லாம் இல்லையாக்கும் என் செக்.. லாண்டிங்.. பயந்திடாதீங்கோ:)).

   //எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :) //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா ஒரு சுயநலம்:).. அதிராவுடையதுக்கும் எனவும் சொல்லல்ல:))

   நீக்கு
  2. சரி சரீ சாரி :) ஸ்கொட்டிஷ் ஆச்சிக்கும் நந்த்ரீ :)

   நீக்கு
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு ஆரம்பமே டங்கு ஸ்லிப்பாகுதே அஞ்சுவுக்கு:)).. ஆச்சிக்கு வைரச் சங்கிலி போடும்போது அதிராவுக்கும் வைர அட்டியல் போடுவேன் என குயின் அம்மம்மா சொல்லிட்டா தெரியுமோ?:)..

   நீக்கு
  4. அ, ஏ - சண்டை முடிந்ததா இல்லையா?

   நீக்கு
  5. அது இந்த ஜென்மத்தில முடிஞ்சிடாதென்றுதான் நினைக்கிறேன் ஹா ஹா ஹா:)...

   நீக்கு
  6. ஸ்கொட் கேட் :)cat அது நந்த்ரி :) பிரிட்டிஷ்காரன் தமிழில் சொல்லறாப்போல் சொன்னேன் :) டங் ஸ்லிப்பாகலா

   நீக்கு
 23. கொஞ்சம் பிசியா இருப்பதால் கேள்விகள் பார்ட் பை பார்த்தா வரலாம் :)
  இப்போதைக்கு
  ஆண் சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துக்கும் , பைரவர் பூனை புலி எல்லாத்துக்கும் whiskers இருக்கு ஆனா மனிதரில் பெண்களுக்கு மீசை இல்லையேன்னு யோசிச்சதுண்டா ??

  முதல் உதவி அவசர உதவி இங்கே வெளிநாட்டில் அனைவருக்கும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும் .நம்ம ஊரில் அப்படி இப்போ வசதி வந்திருக்கா ?

  ( நான் cpr ட்ரெயினிங் போயிட்டு வந்துட்டேனே அதை எல்லாருக்கும் சொல்லியாகணுமில்ல :))))))))))


  பரீட்சைக்கு போற ஸ்டூடன்சுக்கு , ஸ்கூலுக்கு போற குட்டீஸ் அப்புறம் வேலைக்கு போற எல்லாருக்கும் டிப்ரெஷன் ஸ்ட்ரெஸ் வருது இது மாதிரி அரசியல்வாதிகளுக்கும் வருமா ?? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்லோ மிஸ்டர் அஞ்சு:).... டிப்பிரஸன் வந்தால்தான் அரசியலுக்குள்ளேயே போவினமாக்கும் ஹா ஹா ஹா:)...

   நீக்கு
  2. சேவல் தானே தினமும் கொக்கரக்கோன்னு கூவுது அப்போ எதுக்கு கோழி கூவும் நேரம்னு சொல்றாங்க ???
   அது சரி எதுக்கு சேவல் அதிகாலையில் கூவுகின்றது ?இதன் பின்னணி என்ன ??
   எனக்கு ஒரு கதை தெரியும் அதை நீங்களும் சொல்றிங்களானு பாப்போம்

   நீக்கு
  3. ///எனக்கு ஒரு கதை தெரியும் அதை நீங்களும் சொல்றிங்களானு பாப்போம்//

   இதென்ன இது வரவர டிடி மாதிரிப் பேசுறா அஞ்சு:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:))

   நீக்கு
 24. ///& நான் எந்தக் கோயிலில் கும்பிட்டாலும் முன்பெல்லாம் 'முருகா' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன். ///

  ஹா ஹா ஹா நாங்கள் இப்பவும் இடைக்கிடை சேர்ஜ் க்கும் போவொம்ம்.. அங்கு போயும் அப்பனே முருகா பிள்ளையாரப்பா.. வைரவா .. இப்படித்தான் கும்பிடுவேன் :)).. ஆனாலும் ஜீஸஸ் என்னுடன் கோபிச்சதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தக் கடவுள் பெயர் சொல்லி வணங்கினாலும், ஜீஸஸும் ஸரி, மற்றவர்களும் தன்னைத்தான் செல்லமாக அழைக்கிரார்கள் என்று மனதார ஏற்றுக் கொள்வார்கள். நான் இப்படி நினைக்கிறேன் அப்பாவி அதிரா. அன்புடன்

   நீக்கு
  2. நன்றி காமாட்ஷி அம்மா... விளக்கமாக சொல்லிட்டீங்க....
   நீங்க ஏனைய கடவுள்கள் பற்றி கருத்தெல்லாம் சொல்ல மாட்டீங்க என நினைச்சிருந்தேன்ன்ன்

   நீக்கு
  3. காமாட்சி அம்மா சூப்பர் சூப்பர் உங்கள் பதிலை நான் மிகவும் மிகவும் ரசித்தேன்!!! அழகான பதில்...

   கீதா

   நீக்கு
  4. அதிரா நானும் அதே ! சர்ச்சுக்கும் போவேன்...

   கீதா

   நீக்கு
  5. நாங்கள் விகாரைக்குள்ளும் போய்க்கும்பிட்டிருக்கிறோம்ம் கீதா... எனக்கு கண்ணை மூடிக்கொண்டு கும்பிட்டால் எல்லாம் ஒன்றாகவே தெரியுது...

   நீக்கு
  6. எனக்கு கண்களைத் திறந்து வைத்துக்கொண்டாலும் எல்லாம் ஒன்றாகத்தான் தெரியும். நாகப்பட்டினத்தில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். நாகூர் தர்கா சென்றுள்ளேன். வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும் சென்றுள்ளேன்.

   நீக்கு
 25. எங்கள் ப்ளாக் பதினாறு லக்ஷம் பக்கப்பார்வைகளைக் கடந்துள்ளது.எவ்வளவு ஸந்தோஷமான விஷயம். எல்லோரும் நினைப்பது தங்கள் ப்ளாக் அது. இன்னும் அதிக அளவிலான,பார்வையாளர்களைப் பெறும். வாழ்த்துகள் ஆசிரியர் குழுவினருக்கும்,எங்கள் ப்ளாகிற்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 26. https://sf.tac-cdn.net/images/products/large/BF52-11KM.jpg?auto=webp&quality=80

  congratulations .this is for 16,00,000 page views :)  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://media.tenor.com/images/cfa9a181649e3f554f9165c3db2716fa/tenor.gif

   ஓகே நேரமாச்சூ.. வெயில் சுட்டெரிக்குது.. பின்பு வாறேன்ன்ன்

   நீக்கு
 27. //& பாவம் - வாயில்லாப் பிராணிகள் (மனிதர்களில் ஆண்களைப்போல்) அழகாக இருந்துவிட்டுப்போகட்டுமே - விட்டுடுங்க! (ஆ ! எதையோ உளறிவிட்டேனோ? பா வெ மேடம் வந்தாங்க என்றால் என் பாடு திண்டாட்டம். ஸ்ரீராம் - எங்கே அந்தக் கட்டில்? ஓடிப்போய் கீழே ஒளிந்துகொள்ளவேண்டும் !) ///

  ஆஆஆஆஆஆ இல்ல இல்ல அங்கின ஏற்கனவே ஸ்ரீராம் ஒளிச்சிருக்கிறார்ர்:) நீங்க ஓடிபோய் மேசைக்குக் கீழ பூருங்கோ கெள அண்ணன்:)) ஹா ஹா ஹா.

  என் நண்பியின் தங்கைக்கு அப்போ ஒரு 9,10 வயசிருக்கும்.. அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு 26,27 வயது அண்ணா ஒருவர் இருந்தார்.. எங்களுக்கும் அவரைத்தெரியும் அப்போ.

  நல்ல குணமானவர்தான்.. அப்படித்தான் நினைச்சிருந்தோம்ம்.. இந்த தங்கை அவரை அண்ணா அண்ணா என அழைத்துப் பேசுவார்ர்.. ஒருநாள் தனிமையில் இக்குழந்தையை சந்தித்த போது, இந்த தங்கையை தொடவில்லை ... ஆனா ஒரு அசிங்கமான செயல் செய்திட்டார் அவர்... உடனே அக்குழந்தை.. பெரிதாக கத்திக் கொண்டு ஓடி வந்தாவாம்ம்... “இனிமேல் எந்த annaavaiyum alazhu ena solla maadden" enru haa haa haa athuthaan ninaivuku vanthuthu...

  My Nhm writer has stopped:(, have to restart now...

  பதிலளிநீக்கு
 28. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு தமிழ் ஸ்ரொப்பான அந்த பிளேன் ஹப் ல, கெள அண்ணனுக்கு அடிச்சது 100:)... congrats:)

  பதிலளிநீக்கு
 29. //நாத்தனார்,மன்னி/தம்பி மனைவிக்கு இடையே எழும் சிறு பூசலில் குழந்தைகள் தலையிடக் கூடாது என்பதையும் தாயோ தந்தையோ குழந்தைகளுக்கு புரிய வைத்தால்// - என்னுடைய இந்த பதிலை நெ.த. கேள்வியாக்கியிருக்கிறார். அதற்கு # மற்றும் & கொடுத்த பதிலகள் எனக்கு பிடித்திருந்தன.

  சென்ற தலைமுறை வரை பெரியவர்கள் விவகாரத்தில் குழந்தைகள் தலையிடுவதை பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்போதைய பெரியவர்கள், குழந்தைகளை," பெரியவர்கள் விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? உனக்கு ஒன்றும் தெரியாது வாயை மூடிக்கொள்" என்று அதட்டுப் போடுவார்கள். சம்பந்தப்பட்டவர்களே "குட்டி குலைத்து தாய் தலையில் வைத்தது போல் ஆகி விடும், பேசாமல் இரு," என்று அடக்குவார்கள். மேலும் அந்தக் கால பெரியவர்களில் பெரும்பாலோர்க்கு தங்கள் விரோதத்தை குழந்தைகளின் மண்டையில் இறக்காமல் இருக்கத் தெரிந்திருந்தது. பெரிய குடும்பத்தில் அது சாத்தியமானது. இப்போதைய நியூகிளீயர் குடும்பங்களில் இது சாத்தியமில்லாமல் போகிறது.

  பதிலளிநீக்கு
 30. சென்ற வாரம் கௌதமன் சார் நான் படித்த தலையங்கங்களில் ஏதாவது எனக்கு நினைவில் இருக்கிறதா?என்று கேட்டிருந்தார்.
  1973 அல்லது 74ஆம் வருடமும் சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. அந்த வருடம்தான் ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உபயோகிக்கலாம் என்று நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்தோம். கோடை முடிந்து, பருவ மழை பொழிந்ததும், குமுதத்தில் பூமித்தாயிடமிருந்து கடன் வாங்கினோமே, கடனை முழுவதும் திருப்பி கொடுக்காவிட்டாலும், வட்டியாவது கட்ட வேண்டாமா? என்று கேட்டிருந்தார்கள். நீர் மேலாண்மையை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்த அந்த தலையங்கத்தை ஒவ்வொரு வருடமும் மழை நீர் முறையாக சேமிக்கப்படாமல் வீணடிக்கப்படும் பொழுதும் நினைத்துக் கொள்வேன்.

  ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது குமுதத்தில் வந்த 'ராஜீவ் எங்கள் ராஜீவ்' என்று குமுதத்தில் தீட்டப்பட்ட தலையங்கம். துக்ளக்கின் பல தலையங்கங்கள், குறிப்பாக ஜெயலலிதா முதல்முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது, புதிய முதலமைச்சர் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்று எழுதியிருந்த தலையங்கம் இவைகள் இன்னும் நினைவில் நிற்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெரி குட். நல்ல ஞாபக சக்தி. அதனால, நீங்க இன்னமும் இளைய சமுதாயம்தான்.

   நீக்கு
 31. கேள்வி பதில்கள் ரசிக்கும்படியும், வித்தியாசமாகவும் உள்ளன.

  பதிலளிநீக்கு
 32. //1. ஒரே அளவுள்ள இரண்டு பக்கமும் காலியாக உள்ள, இரண்டு வெள்ளைத் தாள்களை எடுத்துக்கொள்ளவும்.

  2. ஒரு வெள்ளைத்தாளில், முதலாவதாக உங்கள் பெயரை எழுதுங்கள்.

  3. பெயருக்குக் கீழே, மற்ற வெள்ளைத் தாளின் உத்தேசமான விலை / மதிப்பு என்ன என்று எழுதுங்கள்.//

  அந்த இரண்டு வெற்றுத்தாள்களுக்கும் என்ன சம்பந்தம்? அதை சொல்லுங்கள் முதலில். அது தெரியாமல் எப்படி அதன் மதிப்பை கூட்ட முடியும்?
  ஒரு வேலை ரெஸ்யும் ஆக இருக்குமோ? முதல் தாளில் எண்களின் தற்சமய சம்பளம்+பெர்க்ஸ், அடுத்த தாளில் எதிர் பார்க்கும் சம்பளம் + பெர்க்ஸ் குறிப்பிடப் பட வேண்டுமோ? கேள்வி சரியாக விளங்கவில்லை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்த இரண்டு வெற்றுத்தாள்களுக்கும் என்ன சம்பந்தம்?//

   அது பானுமதி அக்கா.. இருவரும் சம்பந்திகளாம்:)) ஹா ஹா ஹா..

   //கேள்வி சரியாக விளங்கவில்லை.
   //
   அப்பாடா என்னை எதிர்த்து நிற்பா என நினைச்ச ஒரு போட்டியாளர் அவுட்:)) ஆஆஆஆஆஅ பரிசு அதிராவுக்கே:))... ஆனா மீ இன்னும் அனுப்பவில்லை..

   கெள அண்ணன்.. முடிஞ்சால் அனுப்பி வைக்கிறேன் படமெடுத்து... இப்போ வாக்கெல்லாம் தர மாட்டேன்ன்...:))

   நீக்கு
  2. மே 20 க்குள் அனுப்பிவைங்க .

   நீக்கு
 33. ஐ காட் இட்.!
  முதல் தாளில் என் பெயருக்கு கீழே 129,820(பார்வையாளர்கள்)

  அடுத்த தாளில் இன்னும் ஒரு வருடத்தில் இன்னும் ஒரு சீரோ சேர்த்து 1298200 என்று குறிப்பிட ஆசை. அது பேராசை, எனவே 150,8200 என்று இறங்கி வருகிறேன்.
  ஆனால் அதற்கே ரொ...ம்...ப... மெனக்கெட வேண்டும். மேலும், பிசினஸ் ரகசியங்களை வெளியே சொல்ல முடியாதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவாக இருந்தேன், இதைப் படிக்கும் வரை. நான் சொல்லவந்தது என்ன என்றால், ஒரு வெற்றுத்தாளின் ஆரம்ப மதிப்பு பதிந்து, பிறகு அந்த வெற்றுத்தாளை, உங்கள் முயற்சியால் மதிப்பு கூட்டவேண்டும். என்ன செய்வீர்கள், எப்படி செய்வீர்கள் என்பது உங்கள் சாய்ஸ். அம்புட்டுதேன்!

   நீக்கு
  2. //தெளிவாக இருந்தேன், இதைப் படிக்கும் வரை//

   ஹையோ மீயும் தேன்ன்:) பானுமதி அக்கா ரோட்டலி ஃபுரூட்டலி கொன்பியுஸ்ட்:))

   நீக்கு
 34. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் எப்போதும் போல் நன்றாக போட்டி போட்டுக் கொண்டு மிகவும் அற்புதமாக இருக்கின்றன.

  பக்கப்பார்வைகள் நிறைய பெற்ற எ.பி இதே போன்று எந்நாளும் சிறப்புடன் சிறக்க பிரார்த்திக்கிறேன்.

  வெற்றுத் தாளின் மதிப்பே மிகவும் சிறந்ததுதான். அதில் எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும், அதன் மதிப்பை மேலும் மெருகூட்டும். இதை எழுதுவதற்குள் இங்கு மழை வந்து நெட் பயன்பாடு தடங்கல் காரணமாக முடிக்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.

  மழையும், அதனை தருவிக்கும் மரங்களும், மரங்களில் உருவான வெற்றுத் (வெட்டியாகப் போகாத) தாள்களும், எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தென, எந்நாளும் இயற்கையை இயற்கையாக நேசிக்கத் சொல்லி, போற்றிப்பாதுகாக்கச் சொல்லி, சின்ன கட்டுரையாக அவரவர்களுக்கு தெரிந்த பாரம்பரிய மொழிகளில் அந்த தாளில் எழுதி, பிரேம் செய்து அவரவர் சந்ததியினர் படித்துணறுமாறு செய்யலாம். அப்போது அந்த தாளின் மதிப்பு பணத்தினால் பெறும் மதிப்பை விட சிறப்பாக அமையும் என நினைக்கிறேன். ( தப்பாக இருப்பின் தவறாக நினைக்க வேண்டாம். மழை வந்த பொழுதில் என் மனதில் இக்கருத்து மின்னலாக தோன்றியதோ என்னவோ.!) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல சிந்தனை. தவறாக நினைக்க இதில் எதுவும் இல்லை.

   நீக்கு
  2. ///( தப்பாக இருப்பின் தவறாக நினைக்க வேண்டாம். //

   கமலாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தப்பெனில் தப்பாத்தான் நினைப்பினம்:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  3. வணக்கம் அதிரா சகோதரி

   /தப்பெனில் தப்பாத்தான் நினைப்பினம்:)) ஹா ஹா ஹா:))/

   ஹா ஹா ஹா. அது சகோதரி.. ஒரு செயலை ஒருவர் தெரிந்து செய்வது தப்பு.. அவரே தெரியாமல் செய்து விடுவது தவறு. ஹயோ சாமி.!ஒரு வார்த்தை "தப்பும், தவறுமாய்" எழுதி விட்டால், எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது..ஹா.ஹா.ஹா. என் கமெண்ட்ஸை (ஒரு வரி) விடாமல் படித்ததற்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. இல்லையே கமலாக்கா முதல் வரியை கெள அண்ணன் படிப்பாருக்கும் என விட்டுவிட்டு மிகுதியைத்தான் படிச்சேனாக்கும்:)

   நீக்கு
 35. கோபப்படுவதற்கு எல்லா காரணமுமே சொல்லலாம் ..

  குயுக்தி.....& பதில் ஹா ஹா ஹா ஹா ஹாஅ....ஆனா முதலில் சொல்லப்பட்ட பதில் உண்மையாகவே தவறாகவும் வாய்ப்பு இருக்குதான்...

  கௌ அண்ணா அதுக்காக இப்படி ஒரு படமா! ஹா ஹா ஹா ஹ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் ஒரு நடிகரின் படத்தை அவ்வாறு மாற்றிப் போட்டு படங்கள் போட்டிருந்தேன். நேற்றைக்கு மமதா பிரியங்கா (சோப்ரா) விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நான் வெளியிட இருந்த படம், என்னை சிறையில் தள்ளி, களி தின்ன வைத்துவிடுமோ என்ற பயத்தில், படத்தை பெயர் தெரியாத ஒருவரின் படமாக மாற்றிவிட்டேன்!

   நீக்கு
 36. கௌ அண்ணா நல்ல காலம் நீங்க கட்டிலுக்கடியில் இருப்பது பா வெ அக்காவுக்குக் கண்ணுல படல தப்பிச்சுட்டீங்க!! இன்னிக்கு உங்க ராசிக்கு என்ன போட்டிருக்குனு கொஞ்சம் பாருங்க தினசரி கேலண்டரை!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினசரி காலண்டர் ஜோசியத்தில் இன்றைக்கு என் ராசிக்கு : 'வெற்றி'

   நீக்கு
 37. நெல்லைக்கும், பானுக்காவுக்கும் கொடுத்த பதில்கள் நன்றாக இருக்கின்றன.

  அனைத்தும் அருமை!

  கீதா

  பதிலளிநீக்கு
 38. வெற்றுப்பேப்பருக்கு மதிப்புக் கூட்டுவது உதாரணம், ஆதிமூலம்,மருது அவர்களின் காரிகேச்சர்.
  ஒரு மதிப்புக்குறியவரின் கையெழுத்தாகவும் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முயற்சியால் வெற்றுப்பேப்பரின் மதிப்பு கூட்டவேண்டும் என்பதுதான் முக்கியம்.

   நீக்கு
  2. என் முயற்சியாலயா. கௌதமன் ஜி. நானும் துரை மாதிரி
   பார்வையாளரா இருக்கேன்.

   நீக்கு
  3. பயந்துட்டீங்களா! நான் பேய்க்காட்டவில்லை. பயப்படாதீங்க. முயற்சி திருவினையாக்கும்.

   நீக்கு
 39. முதல் வெள்ளைத் தாளில் பெயர் மற்றும் அதன் கீழே மற்ற வெள்ளைத்தாளின் மதிப்பு..ம்ம்ம்ம் ஒரு ஏ4 சைஸ் பேப்பரின் விலை என்னவா இருக்கும்?!!???? சரி அதை எழுதியாச்சுனு வைச்சுக்கங்க...மற்ற வெள்ளைத் தாளில் இந்திய தேசியக் கொடியை வரைந்துவிட்டால்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ஒளிஞ்சுட்டுருக்கற கௌ அண்ணா வை வெளிய வரவசைச்சுட்டேன் என்னைய அடிக்க வரதுக்குள்ள நான் ஓடிப் போயிடறேன்!! ஹா ஹா ஹாஹ் ஆ

   கீதா

   நீக்கு
 40. ஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர் விசாளக்கிழமைப் போஸ்ட் தட்டுப் பட்டு விட்டதே ஹா ஹா ஹா எதுக்கு அடிக்கடி காண்ட் ஸ்லிப்பாகுது:)..

  பதிலளிநீக்கு
 41. பக்கப் பார்வைகள் கூடியதற்கு வாழ்த்துகள்!
  பக்கப் பார்வையாளர்களை எண்ணிக்கை அதிகமாய் வருவதற்கு காரணமாய் இருக்கும் எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. கேள்விகளும் பதிலகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 43. @ Gowthaman sir :)

  1,ஆண் சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துக்கும் , பைரவர் பூனை புலி எல்லாத்துக்கும் whiskers இருக்கு ஆனா மனிதரில் பெண்களுக்கு மீசை இல்லையேன்னு யோசிச்சதுண்டா ??

  2,முதல் உதவி அவசர உதவி இங்கே வெளிநாட்டில் அனைவருக்கும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும் .நம்ம ஊரில் அப்படி இப்போ வசதி வந்திருக்கா ?

  ( நான் cpr ட்ரெயினிங் போயிட்டு வந்துட்டேனே அதை எல்லாருக்கும் சொல்லியாகணுமில்ல :))))))))))


  3,பரீட்சைக்கு போற ஸ்டூடன்சுக்கு , ஸ்கூலுக்கு போற குட்டீஸ் அப்புறம் வேலைக்கு போற எல்லாருக்கும் டிப்ரெஷன் ஸ்ட்ரெஸ் வருது இது மாதிரி அரசியல்வாதிகளுக்கும் வருமா ?? :)


  4,சேவல் தானே தினமும் கொக்கரக்கோன்னு கூவுது அப்போ எதுக்கு கோழி கூவும் நேரம்னு சொல்றாங்க ???
  அது சரி எதுக்கு சேவல் அதிகாலையில் கூவுகின்றது ?இதன் பின்னணி என்ன ??
  எனக்கு ஒரு கதை தெரியும் அதை நீங்களும் சொல்றிங்களானு பாப்போம்

  5,இந்த பாசிட்டிவ் vibe /சாதக அதிர்வு பற்றி கொஞ்சம் விளக்குங்களேன் ?
  சிலருடன் பார்த்த உடன் மனசுக்குள் பூக்கள் மலர்ந்து பட்டாம்பூச்சி பறக்கின்றது அதே சிலரை சந்தித்த மாத்திரத்தில் உள் மனம் //கவனம் கவனம் //என்று அலெர்ட் செய்கிறது இதன் காரணமென்ன ? நன்கு பழகியும் சிலரை விட்டு விலகி இருக்கிறேன் :) என்னை பொறுத்தவரை உள்ளுக்குள் வைத்து புழுங்குவதை விட விட்டு விலகிடுவது மேல் இந்த குணம் தவறா ??

  6,பெற்றோர் பிள்ளைகளுக்குள் குறைந்த வயது இடைவெளி புரிதலை ஏற்படுத்துமா ?

  7,பொதுவா மனுஷங்களுக்கு மென்டல் ஹெல்த் well-being மிக அவசியம்.ஆனா அதுக்கு சம்பந்தமில்லாத வன்முறை தீ -வீரவாத வாதங்கள் :) வன்முறை தூண்டும் நிகழ்ச்சிகள் ,திரைப்படங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற விவாதங்களே பெரும்பாலும் தொலைக்காட்சி பத்திரிகை போன்றவற்றில் பிரதானமாக்கி காட்டுகிறார்கள் .இதற்கு ஒரு தடைச்சட்டம் வருமா ??

  8,ஒரு சினிமா கேள்வி
  உங்கள் மனதில் அதிர்வலைகள் ஏற்படுத்திய சமீபத்திய தமிழ்ப்படம் எது ??
  எனக்கு// பூ// படம் அப்படி ஒரு உணர்வை உண்டாக்கியது

  9,வாடிய பயிர் பசு வாயில்லா ஜீவராசி (நாலு கால் ஜீவன் :) இதை தெளிவா சொல்லாட்டி நெல்லைத்தமிழன் கணவர்கள் எல்லாம் வாயில்லா ஜீவன்கள்னு சொல்லிடுவார் )
  எந்த ஜீவராசியாக இருந்தாலும் கடவுளுக்கு செய்வதாக இருந்தாலும் எதிர்பார்ப்பில்லாம உதவனும் என்பதுதானே சரி ?

  10, 25 வயது மணமகன் மணமகள் /55 வயது மணமகன் மணமகள்
  இதில் முதலாமவரை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனம் இரண்டாமவரை ஏற்க தயங்குவதேன் ??


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 11, மனதுக்கு ஒப்பாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை யாராவது செய்திருந்தால் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுவீர்கள் ?
   எது சிறந்த காரியமாக இருக்கும் ?
   * அந்த இடத்தை விட்டு அகலுதல்
   * அந்த செய்தவரை அங்கேயே எதிர்த்து கேள்வி கேட்டல்
   * மொத்தமாக சம்பந்தப்பட்டவரை புறக்கணித்தல்
   இதில் எது சிறந்தது ?

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!