சென்ற வாரப் புதிர்க் கேள்விகளுக்கு, முதல் கேள்விக்கும், மூன்றாவது கேள்விக்கும், அநேகமாக எல்லோரும் சரியான பதில் சொல்லியிருந்தார்கள்.
முதல் கேள்வியை நான் எழுதும்பொழுது, வி என் ஜானகி மற்றும் எங்கவீட்டுப்பிள்ளை, தொழிலாளி படங்களில் எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ரத்னா ஆகியோரை நினைத்துக் கேட்டிருந்தேன்.
கீதா சாம்பசிவம், நெல்லைத்தமிழன், பானுமதி வெங்கடேஸ்வரன், கணக்குத் தணிக்கை, துளசிதரன் எல்லோருமே அசத்திட்டாங்க! வாழ்த்துகள்.
மூன்றாம் கேள்விக்கு, ஆங்கில அகராதியில் என்பது சரியான விடை. முதல் ஆளாக அதை கூறிய மாதவனுக்கு பாராட்டுகள். அந்த பதிலை சொன்ன எல்லோருக்கும் வாழ்த்துகள்.
இரண்டாவது கேள்விக்கு, மிகச் சிலரே பதில் கூற முயன்றிருக்கிறார்கள்.
ஒரே ஒரு க்ளூ தருகிறேன். அதை வைத்துக்கொண்டு பதில் கண்டுபிடியுங்கள். ஆங்கில உயிரெழுத்துகள் ... எண்களாக ......
============================
1) What is the missing number? Why / How?
1. 6 _ 8 0 3
2) தமிழ் நடிகர்களில் உண்மையான டாக்டர் யார்?
3) ஒரு சீட்டுக்கட்டில் ஒரே குறியீடு (டயமண்ட் / கிளாவர் / ஹார்ட்ஸ் / ஸ்பேட் ) உள்ள அத்தனை சீட்டுகளிலும் இருக்கின்ற எண்களைக் கூட்டினால், என்ன கூட்டுத்தொகை வரும்?
===========================