புதன், 28 செப்டம்பர், 2016

புதன் 160928.


சென்ற வாரப் புதிர்க்  கேள்விகளுக்கு, முதல்  கேள்விக்கும், மூன்றாவது கேள்விக்கும், அநேகமாக  எல்லோரும் சரியான பதில் சொல்லியிருந்தார்கள்.

முதல் கேள்வியை நான் எழுதும்பொழுது, வி என் ஜானகி மற்றும் எங்கவீட்டுப்பிள்ளை, தொழிலாளி  படங்களில்  எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ரத்னா ஆகியோரை நினைத்துக் கேட்டிருந்தேன்.

கீதா சாம்பசிவம், நெல்லைத்தமிழன், பானுமதி வெங்கடேஸ்வரன், கணக்குத் தணிக்கை, துளசிதரன் எல்லோருமே  அசத்திட்டாங்க! வாழ்த்துகள்.

மூன்றாம் கேள்விக்கு, ஆங்கில அகராதியில் என்பது சரியான விடை. முதல் ஆளாக அதை கூறிய மாதவனுக்கு பாராட்டுகள். அந்த பதிலை சொன்ன எல்லோருக்கும் வாழ்த்துகள்.

இரண்டாவது கேள்விக்கு, மிகச் சிலரே பதில் கூற முயன்றிருக்கிறார்கள்.
ஒரே ஒரு க்ளூ தருகிறேன். அதை வைத்துக்கொண்டு பதில் கண்டுபிடியுங்கள். ஆங்கில உயிரெழுத்துகள் ... எண்களாக ......

============================

1) What is the missing number? Why / How?

1. 6 _ 8 0 3

2)  தமிழ் நடிகர்களில் உண்மையான டாக்டர் யார்?


3)  ஒரு சீட்டுக்கட்டில் ஒரே குறியீடு (டயமண்ட் / கிளாவர் / ஹார்ட்ஸ்  / ஸ்பேட் ) உள்ள  அத்தனை சீட்டுகளிலும் இருக்கின்ற எண்களைக் கூட்டினால், என்ன கூட்டுத்தொகை  வரும்?  

===========================
              

21 கருத்துகள்:

 1. டாக்டர் ராஜசேகர், பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன், கௌதமி (முடிச்சாங்களான்னு தெரியலை)

  பதிலளிநீக்கு
 2. டாக்டர் ராஜசேகர் உண்மையான மருத்துவர்னு தெரியும். கௌதமி நான் அறிந்தவரையில் பொறியியல் படிச்சுட்டு இருந்ததாய்த் தான் கேள்விப் பட்டிருக்கேன். பவர் ஸ்டார் பத்தித் தெரியலை. இப்படி அசட்டுத்தனமாய் நடந்துக்கறவர் மருத்துவரா என்று ஆச்சரியமே ஏற்படுகிறது! :)

  பதிலளிநீக்கு
 3. முதல் கேள்விக்கு பதில் தெரியலை! :)

  பதிலளிநீக்கு
 4. 1.

  2. பவர் ஸ்டார்....ஸ்ரீனிவாசன். டாக்டர் ராஜசேகர்...ஒரு சந்தேகம் இவர் ஆந்திரக்காரரோ..தமீழில் நடித்திருந்தாலும்...அப்புரம், அஜ்மல், சேது, (கண்ணா லட்டு தின்ன ஆசையா) இவர் டெர்மட்டாலாஜிஸ்ட், ராம் எனும் நடிகர் இவரும் டாக்டர்....-இன்னும் இருப்பாங்க...

  3. 54

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கீதா மேடம்... இதையும் (கௌதமி) ஞாபகத்துல வச்சுருக்கீங்களா? எஞ்சினீயரிங்காக இருக்கலாம். ஞாபகமில்லை. அவருடைய அப்பா 'பிரிட்ஜ்' விளையாட்டில் இன்டெரெஸ்ட் உள்ளவர் (அடிக்ட்?) மேட்டூரில் நடக்கும் போட்டிக்கெல்லாம் வந்திருக்கிறார். அப்போ நினைச்சுக்குவேன்.. யாரோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க.. யாரோ அனுபவிக்கிறாங்க என்று.

  பதிலளிநீக்கு
 6. //இரண்டாவது கேள்விக்கு, மிகச் சிலரே பதில் கூற முயன்றிருக்கிறார்கள்.
  ஒரே ஒரு க்ளூ தருகிறேன். அதை வைத்துக்கொண்டு பதில் கண்டுபிடியுங்கள். ஆங்கில உயிரெழுத்துகள் ... எண்களாக ......
  // Education is the word. :) So, next one is "O" (if alphabet) or "4" (in number)

  பதிலளிநீக்கு
 7. பெசொவி, முதல்லே அப்படித் தான் நினைச்சேன். ஆனால் மாதவன் எழுதி இருக்கிறதைப் பார்த்ததும் கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்குனு, வெளியேறிட்டேன். :)

  பதிலளிநீக்கு
 8. ஹிஹிஹி, அது போனவாரப் புதிருக்கா? அவசி, அவசி! :)

  பதிலளிநீக்கு
 9. @நெல்லைத் தமிழன்,கௌதமியே ஒரு முறை ஏதோ ஒரு பேட்டியில் சொன்னதாகப் படித்த நினைவு. அநேகமாய்ப் படிப்பது மறந்து போவதில்லை என்பதால் நினைவில் இருக்கு! :)

  பதிலளிநீக்கு
 10. பெசொவி, நீங்க சொல்வது சரியே. education சரியே. இப்போத் தான் போய் மறுபடி பார்த்துட்டு வரேன்.

  இதிலே முதல் கேள்விக்கு பதில் 6 "1" 803 சரியா கேஜிஜி?

  பதிலளிநீக்கு
 11. // 1) What is the missing number? Why / How?
  1. 6 _ 8 0 3
  2) தமிழ் நடிகர்களில் உண்மையான டாக்டர் யார்?
  3) ஒரு சீட்டுக்கட்டில் ஒரே குறியீடு ( //

  Knowingly or unknowing a trick is played. One may mis-judge the '1' in the first question to be question number. Remember the first line of the question is distinctly written above ie "1) What is the missing number? Why / How?". Also, as whitespace is given between each numbers it further makes the reader to assumed the '1' in '1. 6 _ 8 0 3' to represent question number, and may start thinking the series of the form ' 6,?,8,0,3'. This is what happened with me in the begining.

  பதிலளிநீக்கு
 12. 3. சீட்டுக்கட்டின் எண்கள் என்று குறிப்பிட்டிருப்பதால் 1+2+3+4+5+6+7+8+9=45x4=180

  பதிலளிநீக்கு
 13. 3. சீட்டுக்கட்டின் எண்கள் என்று குறிப்பிட்டிருப்பதால் 1+2+3+4+5+6+7+8+9=45x4=180

  பதிலளிநீக்கு
 14. சீட்டுக்கட்டில் நாலையும் எடுத்துக்கணுமா? இல்லைனு நினைச்சேனே!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 15. // ஒரே குறியீடு (டயமண்ட் / கிளாவர் / ஹார்ட்ஸ் / ஸ்பேட் ) உள்ள அத்தனை சீட்டுகளிலும் //

  In my interpretation, only one of the 4 family cards are to be taken.

  And also my previous answer is wrong, as I included '10' for Jack. Let me revise my answer to this. Remember 'A' is represented as '1', hence '1' is to be excluded.
  For 1 family 2+3+..+9 or [9*(9+1)/2] -1 = 90.0/2 - 1 = 45 -1 = 44

  44 is the answer.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!