marriages are made in Saturn லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
marriages are made in Saturn லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.8.11

உள் பெட்டியிலிருந்து... 8-2011


எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பு....

நட்பு என்பது
ஸ்டேப்ளர் பின் மாதிரி. 
இணைப்பது எளிது.
பிரிப்பதுதான்
கடினம்.


பிரித்து எடுத்தாலும்
அது
தன் தடத்தை விட்டே செல்கிறது...
----------------------------------------------------

அட, ஏற்கெனவே சொன்னதுதான்...

நண்பனே
என் அக்கறை
இதயத்தில் இருக்கும்.
வார்த்தைகளில் அல்ல.
என் கோபம் வார்த்தைகளில் இருக்கும்
இதயத்தில் அல்ல!

------------------------------------------------

அப்பாவி இதயத்தின் அல்ப ஆசை.......

ஒவ்வொரு உறவும்
ஜான்சன் பேபி ஷாம்பூ
விளம்பரம் போல
'இனி கண்ணீரில்லை'
என்ற உறுதி மொழியுடனே
வந்தால்
எவ்வளவு இனிமையாயிருக்கும்?
--------------------------------------------

கடவுள் அமைத்து வைத்த மேடை!

ஆறு வயதுச் சிறுவனொருவன் அழகிய மூன்று வயதுச் சிறுமியின் புகைப் படம் ஒன்றைத் தெருவில் கண்டெடுத்து அவளைச் சந்திக்கத் துடித்துத் தோற்றான்.
   
வருடங்கள் சென்றன.

திருமணமானது. ஒருநாள் அவனிடம் இருந்த புகைப் படத்தைப் பார்த்த மனைவி கேட்டாள்.  
"எங்கிருந்து கிடைத்தது இது?"     
"ஏன்?"    
"எனக்குச் சுமார் மூன்று வயதிருக்கும்போது நான் தொலைத்த என் போட்டோ.."    

என்ன தோன்றுகிறது...திருமணங்கள் சொர்க்......... ம்..ஹூம்...
                     
சனி பிடிக்கணும்னு விதி இருந்தால் பிடிச்சே தீரும்!
---------------------------------------------------------------------------------

கீழ கீழ எழுதினா கவிதையாயிடுமா...?
      
நீங்கள் பார்க்கும்
அல்லது
கேட்கும்
எல்லாவற்றையும்
அப்படியே
நம்பி விடாதீர்கள்.
எல்லாக் கதைகளுக்கும்
எப்போதுமே
மூன்று பக்கங்கள் உண்டு.
உங்கள் பார்வை...
அவர்கள் பார்வை..
மற்றும் உண்மை நிலவரம்.!