எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பு....
நட்பு என்பது
இணைப்பது எளிது.
பிரிப்பதுதான்
கடினம்.
பிரித்து எடுத்தாலும்
அது
தன் தடத்தை விட்டே செல்கிறது...
------------------------------ ----------------------
நண்பனே
என் அக்கறை
இதயத்தில் இருக்கும்.
வார்த்தைகளில் அல்ல.
என் கோபம் வார்த்தைகளில் இருக்கும்
இதயத்தில் அல்ல!
------------------------------ ------------------
அப்பாவி இதயத்தின் அல்ப ஆசை.......
ஒவ்வொரு உறவும்
ஜான்சன் பேபி ஷாம்பூ
விளம்பரம் போல
'இனி கண்ணீரில்லை'
என்ற உறுதி மொழியுடனே
வந்தால்
எவ்வளவு இனிமையாயிருக்கும்?
------------------------------ --------------
கடவுள் அமைத்து வைத்த மேடை!
ஆறு வயதுச் சிறுவனொருவன் அழகிய மூன்று வயதுச் சிறுமியின் புகைப் படம் ஒன்றைத் தெருவில் கண்டெடுத்து அவளைச் சந்திக்கத் துடித்துத் தோற்றான்.
வருடங்கள் சென்றன.
திருமணமானது. ஒருநாள் அவனிடம் இருந்த புகைப் படத்தைப் பார்த்த மனைவி கேட்டாள்.
"எங்கிருந்து கிடைத்தது இது?"
"ஏன்?"
"எனக்குச் சுமார் மூன்று வயதிருக்கும்போது நான் தொலைத்த என் போட்டோ.."
என்ன தோன்றுகிறது...திருமணங்கள் சொர்க்......... ம்..ஹூம்...
சனி பிடிக்கணும்னு விதி இருந்தால் பிடிச்சே தீரும்!
------------------------------ ---------------------------------------------------
கீழ கீழ எழுதினா கவிதையாயிடுமா...?
நீங்கள் பார்க்கும்
அல்லது
கேட்கும்
எல்லாவற்றையும்
அப்படியே
நம்பி விடாதீர்கள்.
எல்லாக் கதைகளுக்கும்
எப்போதுமே
மூன்று பக்கங்கள் உண்டு.
அவர்கள் பார்வை..
மற்றும் உண்மை நிலவரம்.!
உள்பெட்டி தொகுப்பு - சிறப்பு.
பதிலளிநீக்குநண்பனே என் அக்கறை இதயத்தில் இருக்கும். வார்த்தைகளில் அல்ல. என் கோபம் வார்த்தைகளில் இருக்கும் இதயத்தில் அல்ல!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை. . .
ஸ்டேப்ளர் பின், நண்பனுக்கு சொன்னது, ஜான்சன்ஸ் பேபி, கவிதை . . . எல்லாமே நன்றாய் இருந்தது!
பதிலளிநீக்கு//என்ன தோன்றுகிறது...திருமணங்கள் சொர்க்......... ம்..ஹூம்...
பதிலளிநீக்குசனி பிடிக்கணும்னு விதி இருந்தால் பிடிச்சே தீரும்!/
விதி வலியது
தொகுப்பு மிகச்சிறப்பாக இருக்கு.
பதிலளிநீக்கு//நண்பனே
என் அக்கறை
இதயத்தில் இருக்கும்.
வார்த்தைகளில் அல்ல.
என் கோபம் வார்த்தைகளில் இருக்கும்
இதயத்தில் அல்ல!//
இந்த வரிகள் அருமை...
நண்பன் பற்றிய இரண்டுமே அருமை.
பதிலளிநீக்குஎங்கே என் தானை தலைவன், பெங்களூர் பேராசிரியன் அகில உலக அண்ணா கேஜி.ஜி? காந்திஜி நேருஜி நேதாஜி வழியில் எங்கள் கேஜி.ஜி
பதிலளிநீக்குஉண்மை தொண்டன்,
கேஜிஜி பிரியன் :))
KGG annaa.. please read our blog
பதிலளிநீக்குhttp://paadhasaary.blogspot.com/
// எங்கே என் தானை தலைவன், பெங்களூர் பேராசிரியன் அகில உலக அண்ணா கேஜி.ஜி? காந்திஜி நேருஜி நேதாஜி வழியில் எங்கள் கேஜி.ஜி //
பதிலளிநீக்குஐயோ கொஞ்சம் அசந்தா ஆட்டோ அனுப்பிவிடுவார் போலிருக்கே - இந்த பாரதசாரி - புனை பெயரா? நன்றாக இருக்கின்றது!
:-)))
பதிலளிநீக்குஎல்லா யோசிப்பும் அருமை....ஜான்சன் டாப்பில் இருக்கிறார்..
பதிலளிநீக்குரசித்தேன். ஸ்டேப்ளர் பின் உவமை நட்பின் பெருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி தலைவா.
superb!
பதிலளிநீக்குசனி பிடிக்கணும்னு இருந்தா பிடிக்கும்னு சொன்னதா வூட்ல சொல்லிரவா?
பதிலளிநீக்குஎல்லாமே அருமை. கடைசி இன்னும் அருமை.
பதிலளிநீக்கு