இந்த வார பாசிட்டிவ் நியூஸ் இல்லை! இல்லை என்றில்லை, எல்லோருக்கும் தெரிந்த
பிரேமா C A முதல் வகுப்புத் தேர்ச்சியும், பாண்டிசேரியையைச் சேர்ந்த ஹமீத்
மரைக்காயர் தண்ணீரை எரிபொருளாக உபயோகித்து, சமையல் உபயோகத்துக்கும்
வண்டியோட்டவும் உபயோகப் படுத்த முயற்சித்திருக்கிறார் என்றும் இரண்டே
நியூஸ். நிறைய இல்லையா, எங்கள் கண்ணில்தான் படவில்லையா தெரியவில்லை.
திருக்கடையூர் யானை அபிராமி நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் இறந்த செய்தி மனதுக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. 26 வயதாம். யானைகள் புத்துணர்வு முகாமுக்குச் சென்று வந்த அலைச்சல் ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. புத்துணர்வு முகாம் சென்ற இன்னும் இரண்டு யானைகள் கூட இறந்து போனதாகப் படித்த ஞாபகம். இன்னொரு யானைக்குத் திடீரென கண் தெரியாமல் போனது இன்னொரு வருத்தம். புத்துணர்வு முகாமில் ஏதாவது தவறா, புத்துணர்வு முகாமே தவறா என்று பார்க்க வேண்டிய நேரம். சமீபத்தில் அபிராமியை அருகிலேயே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
மும்பையில் சி ஏ வென்ற பிரேமாவுக்கு ஒரு கட்சி 1 லட்சமும், போட்டியோ இல்லை
தானாகவோ அரசு 10 லட்சமும் கொடுத்துள்ளது பாராட்டத் தக்கது.
குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் பாகிஸ்தானிடம் இனியும் பொறுமை காட்ட முடியாது என்ற ரீதியில் - "நட்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்" - சொல்லியிருக்கிறார். நல்லவேளை, பாகிஸ்தானின் அத்துமீறல் ஜனவரி 26 க்கு அப்புறம் நடந்திருந்தால், இந்த எச்சரிக்கை விட ஆகஸ்ட் 15 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஸ்ரீதேவிக்கும், பாடகி எஸ். ஜானகிக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்
பட்டிருந்தாலும் ஜானகியம்மா விருதைப் புறக்கணிப்பதாக தற்போது வந்த
செய்திகள் சொல்கின்றன.
வர்மா கமிஷன் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசாங்கமும், அப்படியே ஏற்க வேண்டும் தமிழகத் தலைவர் ஒருவரும் சொல்லியிருப்பது செய்திகளில்..
டீசல் விலையைக் கூட எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசு.
மக்களாட்சி தினம் இன்று...
* காதலிக்க மறுக்கும் பெண் மீது அமிலம் வீசாதிருப்போம்.

* டாஸ்மாக் 3 நாள் லீவு என்றால் வீட்டில் வாங்கிப் பதுக்காமலிருப்போம்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்களை மதிக்கவும் நல்ல பழக்கங்களையும், ஊழலற்ற சமுதாயம் அமைக்கவும் சொல்லிக் கொடுப்போம்.
* லஞ்சம் வாங்காதிருப்போம் / கொடுக்காதிருப்போம்.
* தினம் ஒரு நல்ல காரியமாவது செய்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.........
குடியரசு தின வாழ்த்துகள்.