முன்குறிப்பு : பயப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம். வொய்ஜா போர்ட் கதைகளின் இறுதிப் பகுதி இன்று. அடுத்த வாரம் தொடராது என்று உறுதி அளிக்கிறேன்!
ஆவிகள் வரும். நம்பிக்கை வையுங்கள்.. - சித்தர் பீடம் , தமிழ்
ஓஜா போர்டானது ஒரு பலகை/மரபலகையில் ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரையும், எண்கள் 0 முதல் 1 வரையும் எழுத பட்டிருக்கும் மற்றும் சூரியன் ,சந்திரன் ஆகியவற்றின் படங்களுடம் Yes, No, Goodbye போன்ற வாா்த்தைகளும் எழுதபட்டிருக்கும்.
இது கி.பி 1100 காலகட்டங்களில் முதன்முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் விளையாட்டாக எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் முயற்சித்தால் மட்டுமே உங்களால் ஆத்மாக்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
ஓஜா போர்டு (Ouija Board) பயன்படுத்தும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியவை..
- மொட்டை மாடியிலோ அல்லது திறந்த நிலப்பரப்பு உள்ள இடங்களிலோ கண்டிப்பாக இதை பயன்படுத்தகூடாது.
- முதலில் நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த போகிறீர்களோ அந்த அறையை சுத்தமாக வைக்கவும். துடைப்பம் , செருப்பு ஆகியவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி சிலைகளோ, படங்களோ இருந்தால் அவற்றையும் நீக்கவும்.
அதேபோல் கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை துணியால் மூடிவிடவும்.. கண்ணாடிகள் ஆவி உலகிற்கும் நம் உலகிற்கும் பாலமாக நம்பப்படுகிறது எனவே கண்ணாடிகளை கண்டிப்பாக மூடி வைக்கவும்.
- நீங்கள் தனியாகவே இதை பயன்படுத்தலாம்.. இருந்தாலும் ஒரு நண்பருடன் நீங்கள் இதை பயன்படுத்துவது நல்லது .
- இரவு நேரமே இதை பயன்படுத்த உகந்த நேரம். உங்கள் அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவா்த்தி வெளிச்சதை மட்டும் பயன்படுத்தவும் , அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துகொள்வது.
தரையில் அமர்ந்து உபயோகிப்பதே சிறந்தது. முதலில் ஒரு நாணயத்தை போர்டின் மீது வைத்து அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும் . இதை உபயோகிக்கும் பொழுது அருகில் உங்கள் நண்பா்கள் இருந்தால் அவர்களும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை நாணயத்தை சுற்றவும்.. சுற்றியபின் " இங்கே யாரவது இருகிறீர்களா? " என்று கேட்கவும் .
இதுதான் முதல் அடி நீங்கள் அவற்றுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் .
- சில நேரம் நாணயம் நகராது. ஒரு வேலை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல் இருக்கலாம், இல்லையென்றால் இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . "Yes ", "S" என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால் ஆத்மா அந்த அறையில் இருக்கிறது என்றும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள தயார் என்றும் அர்த்தம் ..
- உங்கள் முதல் கேள்வி "நீங்க MOONல் இருந்து வரீங்களா? இல்லை SUNல் இருந்து வரீங்களா? ", என்று கேட்கவும். நாணயமானது மூன் படம் பக்கமோ அல்லது மூன் என்ற எழுத்துக்களையோ நெருங்கினால் அந்த ஆத்மா பொய்களை அதிகமாக கூறக்கூடியது, தீய ஆத்மா என்று அர்த்தம் .. சன் என்றால் அது உண்மையை பேசும் நல்ல ஆத்மாவாகும்.
- அவற்றிடம் வழக்கமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் . முக்கியமாக அவற்றிடம் பேசும் பொழுது சிரிக்கவோ, இல்லை பயமோ கூடாது. உங்களது சில்லறை தனமான கேள்விகள் அவற்றை எரிச்சல் அடைய செய்யலாம்.
அது சரி.. அவைகளிடம் என்ன கேள்விகளை கேட்கலாம்..!
* உங்கள் பெயர் ?
* எந்த வயதில் இறந்தீர்கள் ? எந்த ஆண்டு இறந்தீர்கள் ?
* இந்த அறையில் வேறு ஏதேனும் ஆத்மா உள்ளதா ?
இது போன்ற கேள்விகளை நீங்கள் அவற்றிடம் கேட்கலாம்.
உங்கள் கேள்விகளுக்கு நாணயம் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து பதில் சொல்லும் . அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்துகொள்ளலாம் .
- நாணயம் Z-A அல்லது 9-0 என்று வரிசையாக நகர்ந்தால் அவை தொடர்பை முடித்துக்கொள்ள முயல்கிறது என்று அர்த்தம், அந்த நிலையில் நீங்கள் "Goodbye" என்று சொல்லி முடித்துக்கொள்ளவும்.
நாணயம் Goodbye நகர்ந்தபிறகே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்கள் விரலை நாணயத்தில் இருந்து எடுக்க கூடாது.
நீங்க உண்மையாகவே ஓஜா போர்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் ஓஜா போர்டின் மூலம் உங்களை துன்புறுத்தும் துஷ்ட சக்தியான "ZOZO" பற்றி கண்டிப்பாக தொிந்திருக்க வேண்டும். "ZOZO"வைப் பற்றி அறியாமல் நீங்கள் ஓஜா போா்டினை பயன்படுத்தினால் பொிய ஆபத்தை சந்திக்க நோிடும்.
யாா் இந்த "ZOZO"? அது என்ன செய்யும் என்பதை கீழே பாா்ப்போம்.
"ZOZO" என்பது அமானுஷ்ய ஆத்மாவாகும் (துா் ஆத்மா).
நீங்கள் ஓஜா போர்டின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்ததும் ஆவியின் பெயரை முதலில் கேட்பீர்கள். அது Z இல் இருந்து O என்று மாறி மாறி குறித்தால் அது அந்த அமானுஷ்ய ஆத்மா "ZOZO" தான். மேலும் அதனிடம் கேள்விகள் கேட்காமல் உடனே Goodbye சொல்லி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.
இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் ஒரு சில நேரத்தில் இணைப்பின் பொழுது Z-O தானாகவே தம்மை அறியாமல் நகர்த்தியதும் உண்டு . அது நம் ஆழ்மனத்தின் விளையாட்டு .
சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள நினைக்கும் பொழுதும், அதாவது நம் நண்பா்அல்லது உறவினா் ஒருவாின் ஆத்மாவுடன் தொடா்பு கொள்ள நினைக்கும் பொழுது இந்த "ZOZO" அரக்கன் நாம் யாரிடம் பேச நினைக்கிறோமோ அவர்களை போல் அழகாக நடித்து நம்மை ஏமாற்றி விடும். ஒரு சில நேரத்தில் நாணயம் இடது வலதாக வேகமாக நகர்த்தும்.
விளையாட்டுத்தனமாக இருப்பவர்களே இந்த ஆத்மாவின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர் .
பொதுவாக "ZOZO"விற்கு பெண்கள் மீதே அதீத நாட்டம் உள்ளதாக தெரிகிறது. பலர் தங்களது "ZOZO" அனுபவத்தை பகிரும் பொழுது, அந்த துா்ஆத்மா தங்களிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை கவா்ந்து அவர்களை நரகத்திற்கு அழைத்து போவதாக குறிப்பிட்டு கூறுகின்றனர் . மேலும் தொடர்பின் பொழுது இந்த "ZOZO" அதிகமாக பெண்களையே தாக்குகிறது என சிலா் ஆராய்ந்து கூறியுள்ளனா் .
இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.
எனவே முடித்த அளவு ஆவி உலகத்தை தகுந்த அனுபவசாலியின் உதவியுடன் தொடர்புகொள்வதே நல்லது . விளையாட்டிற்காக இதை எக்காரணத்தை கொண்டும் உபயோகப்படுத்தாதீா்கள், விளையாட நமக்கு எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கிறது. இந்த ஓஜா போர்டைப் பற்றி முழுமையாக அறியாமல் பயன்படுத்தாதீா்கள்
இந்த போர்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 19 ஆம் நூற்றாண்டில். 1848 இல் நியூ யார்க் நகரத்தை சேர்ந்த “ஃபாக்ஸ் சிஸ்டர்ஸ் (fox sisters)" என்று அழைக்கப்பட்ட Leah Margret மற்றும் kate தங்களால் ஆவிகளுடன் பேச முடியும் என்றும் ஆவிகள் இவர்களிடம் சுவற்றில் அடித்து பதில் கூறும் என்றும் கூறியிருக்கின்றனர். இதற்கு பிறகுதான் இறந்தவர்களிடம் பேசப்படும் "seances " அமெரிக்கா முழுவதும் வலம்வர ஆரம்பித்தது. 1862 இல் ஆபிரகாம் லிங்கன் மனைவி தனது இறந்துபோன 11 வயது மகனுடன் seances நடத்தியிருக்கின்றனர். இருந்தாலும் இப்படி ஆமை வேகத்தில் பதில் வருவதை கேட்க பொறுமையில்லாமல் மக்கள் எளிய வழியை தேடும் போதுதான் ஆன்மீகவாதிகள் பேசும் பலகையை கண்டுபிடித்துள்ளனர்.
வித்தை காட்ட வித்தைக்காரன் தான் தேவை என்பதை இந்த போர்டு முறியடித்தது. ஆன்மீகவாதிகள் மட்டுமே நடத்த முடிந்த "seances " பிறகு யார்வேண்டுமானாலும் நடத்த முடியும் என்றானது.
Planchette என்ற கருவியின் மேல் விரல்களை வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்க, அது அந்த பலகையின் மேலுள்ள எழுத்துக்களுக்கு நகர்ந்து பதிலை சுட்டிக்காட்டும். இந்த போர்டு-ஐ தான் பால்டிமோர் ஐ சேர்ந்த சார்லஸ் கென்னர்ட் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து “ஓயிஜா போர்டு" என்ற பெயரில் தயாரித்து விற்றனர். இதற்குக் காப்புரிமையும் பெறப்பட்டது. இதன் பேருக்கு பின்னாலும் ஒரு பெரிய கதை இருக்கிறது. இதற்கு பெயர் வைத்தது ஓர் ஆவி. இந்த போர்டு-ஐ சோதித்து பார்க்க நினைத்தவர்கள், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அந்த போர்டிடம் வினவிய போது "OUIJA " என்று காட்டியிருக்கிறது. “ஓயிஜா” என்றால் என்ன என்று கேட்ட போது “குட் லக் " என்று காட்டிவிட்டு , உடனே குட் பைக்கு Planchette நகர்ந்திருக்கிறது. அதனால் வந்த ஆவி “ouida" என்ற எழுத்தாளர் உடையது என்றும் அதனை மாற்றி உச்சரித்து OUIJA என்றானதும் பெயரின் கதையாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ராபர்ட் பார்ச் என்பவர் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்.
ஓயிஜா போர்டை கண்டறிய பல நாட்கள் ஆகியிருந்தாலும் ஓயிஜா போர்டு-ஆல் கண்டறியப்பட்டவை ஏராளம். உதாரணமாக 1978 ஆம் வருடம் இத்தாலியின் 38 வது பிரதம மந்திரியான "ஆல்டோ மோரோ" தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது போலோக்னா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இந்த போர்டை பயன்படுத்தி அவர் கடத்தப்பட்ட பகுதியை கண்டறிந்துள்ளனர். இதை வைத்து பேய் வந்ததை விட படங்கள் வந்தது தான் அதிகம். தி எக்ஸார்சிட் போன்ற பல படங்கள் வெளியாகி இருக்கின்றன
கடவுளுக்கு மட்டும் தெரிந்த பிறப்பு, இறப்பு ஆகிய பல விஷயங்களை ஓயிஜா கணித்தது. கடவுளுக்கே அறிவியல் விளக்கம் அளித்த இவ்வுலகம் இந்த அமானுஷ்யம் நிறைந்த போர்டுக்கும் அளித்திருக்கிறது. அதாவது இந்த planchette கருவி தானாக இயங்குவதற்கு காரணம் ideomotor effect என்ற கொள்கை தான் என போட்டுடைத்தனர்.அதாவது நம்மை அறியாமலே நாம் unconcious mind எனப்படும் அடிமனதில் நமது உடலில் அசைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த போர்டின் பெயர் கூட ஹெலன் பீட்டர்ஸ் மனதில் ஆழமாக இருந்த பிரபல எழுத்தாளருடைய பெயர் "ouida" என்றும் அவரின் அடிமனதில் இருந்த அந்தப் பெயரை எழுதி "OUIJA " என்று தவறாக படித்ததாக சொல்லப்படுகிறது.
ஓயிஜா போர்டு பொய் என்று நிரூபிக்க பல ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தாலும் மக்கள் அதை நம்புவதும், அனுபவித்ததாக கூறப்படும் கதைகளும் செவிப்பறையில் விழுவதை தடுக்க முடியவில்லை. நிச்சயம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இந்த உலகில் இருக்க முடியாது.
- "அவ்ளோதான்..." -
===================================================================================

Ohh My Dog - NetFlix - ஹிந்தியில் கிடைக்கிறது. மொழி பிரச்னையில்லை.

Saibal Chatterjee writing for NDTV gave a rating of 3/5, and added, “Watch the film if you love dogs and especially if you don't.”[10] Sana Farzeen, writing for India Today gave it 3/5 stars and added “For animal lovers, especially dog people, there are enough moments to leave you teary-eyed one minute and smiling the next.”[11] Renuka Vyavahare writing for The Times of India rated it at 3/5 and remarked, “You don't need to be a dog parent or even a pet lover to empathise with animals. Compassion and kindness are universal. That's what makes Ohh My Dog a film made for everyone, even if it doesn't fully realise the potential of its heartfelt premise.”[12]
Rahul Desai of The Hollywood Reporter India writes that “It is Cute in parts, but almost a ruff day”.[13] Nandini Ramnath of Scroll.in said that “Ohh My Dog spells out every move that proves how a kid can make instant sense of a complex kidnapping operation and how a dog can sniff out the truth about its owner entirely by itself.”[14] Bollywood Hungama gave it 3 stars out of 5 and said that “OHH MY DOG is an endearing and unusual entertainer that scores with its adorable canine hero, engaging performances and several thrilling, clapworthy moments.”[15]
எஸ்பி.முத்துராமனை அழைத்து, 'நீங்க பஞ்சு அண்ணன்கிட்ட எங்களைவெச்சு தனித்தனியா படம் பண்ணச் சொல்லுங்க, பண்றோம்' எனச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். முத்துராமன் வந்து விஷயத்தைச் சொன்னபோது நான் வருத்தப்படவில்லை. 'ரெண்டு பேருமே கெட்டிக்காரங்க. ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுத்தான் எனக்கு கதை எழுதத் தெரியுமா... தனித் தனியா நடிக்கணும்னாலும் கதை எழுதத் தெரியும்' என்றேன்.
ரஜினி அப்படியே நேர் எதிர். 60 பைசா டிக்கெட் பிளாக்கில் கிடைக்கும். 2 ரூபாய் 25 பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும். காரணம், அப்போது அவர் படங்களுக்கு குடும்பங்களும் பெண் ரசிகைகளும் வருவது குறைவு. ஆயிரம் பேர் வந்தால், அதில் 50 பெண்கள் வருவதே அபூர்வம்.
‘கையைச் சுத்துறது, சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறது... இதெல்லாம் பத்து பதினைஞ்சு படங்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும். அப்புறம் அவ்வளவுதான்ப்பா' என ரஜினி படங்களைப் பற்றி பேசுவார்கள். ஆனால், அவருக்குள் மிகச் சிறந்த ஒரு நடிகன் இருக்கிறான் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். சண்டையோ, இரட்டை அர்த்த வசனங்களோ, பிரமாண்டமான அரங்குகளோ, எந்தவித ஸ்டைலும் இல்லாமல், குடும்பப்பாங்கான ஒரு கதையை எழுதினேன்.
ரஜினி படத்துக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன்; கமல் படத்தை இயக்குவது அவரின் உதவி இயக்குநர் ரெங்கராஜன். ‘பஞ்சு அண்ணன், சீனியர் எஸ்பி.முத்துராமனை ரஜினி படம் பண்ண அனுப்புறார். நமக்கு புது ஆளை அனுப்புறாரே. சரியா வருமா?' என கமல் ஒரு நிமிஷம்கூட யோசிக்கவில்லை. சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.எளிமையான ஆர்ட்டிஸ்ட், சிம்பிள் புரொடக்ஷன் என ஒரு பக்கம் ரஜினி படம், டபுள் ஆக்ஷன் ஹீரோ, ஸ்ரீதேவி, செந்தாமரை, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், விஸ்.எஸ்.ராகவன் என பெரிய ஆர்ட்டிஸ்ட் பட்டாளத்துடன் இன்னொரு பக்கம் கமல் படம் என பரபரப்பாக ஷூட்டிங் முடித்து வெளியிட்டோம். இரண்டுமே சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ். அந்த கமல் படம் 'கல்யாணராமன்', ரஜினி படம், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’.
‘கதை படிப்பதே காவாலித்தனம்' என நினைத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், பின்நாட்களில் என் சித்தப்பாவும் பிரபல கவிஞருமான கண்ணதாசனிடமே உதவியாளராகச் சேர்வேன் என்றோ, கதாசிரியன் ஆவேன் என்றோ, இந்திய சினிமாவே வியக்கும் கமல், ரஜினியுடன் அதிகப் படங்கள் பணியாற்றுவேன் என்றோ, ஆயிரம் படங்களைக் கடந்துள்ள இசைஞானி இளையராஜாவை அன்று 'அன்னக்கிளி'யில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றோ நினைத்துகூடப் பார்த்தது இல்லை.

















அனைவரின் நலத்துக்கும் பிரார்த்தனைகள். ஔஜா போர்ட் விவரங்கள் சுவாராஸ்யம். 1961 இல் திண்டுக்கலில் இது ஒரு ரௌண்ட் வந்தது. என் விரல் வைத்தபோது நகரவில்லை:) ஃபாசினேட்டிங்!!!!! அடுத்த வீட்டு மாமிக்கு நகர்ந்தது. யெஸ் ஆர் நோ தான்.
பதிலளிநீக்குவிகடன் நகைச்சுவையை விட அந்தப் படங்கள் சூப்பர்.
பதிலளிநீக்கு