Wednesday, February 28, 2018

பாடல் புதிரும், கதைப்புதிரும்


     எங்கள் ப்ளாக் வாசக நண்பர்களின் வாட்ஸாப் குழுமத்திலும், எனக்கு தனி மெயிலிலும் கேஜிஜி இன்று புதிர் போட முடியா நிலைமைக்கு வருந்தி இருந்தார்.  எனவே ஒரு அவசரப்பதிவு!!!!

========================================================================================================     நேற்று சுஜாதா நினைவு தினம்.  அதை ஒட்டி ஓரிரு கேள்விகள்....Image result for sujatha s rengarajan images         


(அ).ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும் போது குண்டு வெடித்து குற்றம் நிகழ்வது போல இரண்டு கதைகள் (எனக்குத் தெரிந்து!)... என்னென்ன?    

(ஆ) சென்னையையே கலக்கிய அந்த மாபெரும் குற்றவாளியை, கொலைகாரனை கணேஷ் வசந்த் பிடித்தும் கூட 'நீ ஒன்றுமே செய்யவில்லை' என்று சொல்லி விட்டு விடுகிறார்கள். வசந்த்தே கூட எதிர் பாராத திருப்பம் அது... எந்தக் கதையில்?       Image result for sujatha s rengarajan images(இ) சுஜாதா சினிமாவுக்காகவே எழுதிய முதல் கதை எது? அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர்?!! அதில் ஒரு கதையில் வரும் வசனம் "ஆச்சாரியாருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்"    


Image result for sujatha s rengarajan images


=======================================================================================================

35 comments:

வெங்கட் நாகராஜ் said...

அவசரமாக போட்ட புதிர்கள் என்றாலும் நன்று. விடைகளைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா இன்னிக்கு நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்...... :) ஜாலி தான். இன்னுமா யாரும் எழுந்திருக்கல!

Too Bad!

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் வெங்கட்...

// இன்னுமா யாரும் எழுந்திருக்கல!//ஹா... ஹா... ஹா... எழுந்து வேறு வேலையைப் பார்க்கப் போயிட்டாங்க!

KILLERGEE Devakottai said...

நிலாப்பாட்டேதான் பாடணுமா ?

பால கணேஷ் said...

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ.... அப்டின்னு வாத்யார் எதுக்கு பாடி வெச்சுட்டுப் போயிருக்காராம்..? அதையே பாடிடுவான்.

பால கணேஷ் said...

அ) மூன்று நிமிஷம் கணேஷ், (ஆ) நிர்வாண நகரம், (இ) நினைத்தாலே இனிக்கும். கதை பெயர் / மேற்கே ஒரு குற்றம். -சட்னு நினைவுகளில் வந்தவை இவை. சரிதானா..?

துரை செல்வராஜூ said...

இந்த தளத்தில் ஐந்து பேர் சாமக் கோழிகள்...

இதில் ஒரு ஆளுக்கு இந்நேரத்தில் தூக்கம் என்பது கிடையாது (!)...

மற்ற நால்வரும் தூங்கினாலும்
எபி....எபி... என்று தான் நினைவு....

ஆக யாரும் எழுந்திருக்காமல் இல்லை..

இன்றைக்கு புதிர் கிழமை எப்போது வரும் என்பதே புதிர்...

அதனால தான் சூரியன் 45 டிகிரிக்கு வந்ததும் மெதுவா உள்ளே வந்து எட்டிப் பார்க்கிறது!!!..

Ardhanareeswarar paramasivam said...
This comment has been removed by the author.
Ardhanareeswarar paramasivam said...
This comment has been removed by a blog administrator.
துரை செல்வராஜூ said...

அர்த்தநாரீஸ்வரர் பரமசிவம்!..
கீதா..

அந்தர் கோன் ஹே!?..

ஏகாந்தன் Aekaanthan ! said...

நிலா-பெண், பெண்-நிலா. இதைத்தாண்டி சிந்திக்கமாட்டீர்களா தமிழ்நாட்டில்?
சரி, வானை நோக்கினீர், நிலவு கண்ணைப் பறித்தது..அப்படியே சொக்கிக்கிடக்கவேண்டியதுதானே. பெண்ணெதற்கு, தொட்டுக்கொள்ள?
இதற்கு முன்பே பார்த்துவிட்ட அவள் பேரழகி எனில், பின்னாடியே போயிருக்கவேண்டாமா? வானும் நிலவும் வந்ததெப்படி இடையில்?

சுஜாதா பிடித்தமான சப்ஜெக்ட் எனினும், புதிர்கள் விதிர்விதிர்க்கவைக்கின்றனவே?

Thulasidharan V Thillaiakathu said...

நேற்று உறவினர் அவர் மொபைல் வேலை செய்யாததால் என் மொபைலில்..கொஞ்சம் ஈமெயில் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்....அதை அவர் மூடாமல் விட்டு சென்றதை நான் கவனிக்க வில்லை...அதனால் நேர்ந்த தவறு...அதான் அழித்திட்டேன்...மீண்டும் எங்கள் பிளாகர் ஐடிக்குப் போகத் தெரியலை முயற்சி....கிடைத்து விட்டது...
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா மேலே கொடுத்தருக்கேன்....பாருங்க...உறவினர்
என் மொபைலில் அவர் மெயில் பார்த்துட்டு மூடாம போனதால்

நேர்ந்த தவறு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்னுறு கமெண்டை டெலிட் செய்ய முடியலை..ஸ்ரீராம் நீங்க தயவாய் டெலிட் பண்ணிடறீங்களா.. சாரி...நேர்ந்த தவறுக்கு மன்னிக்கவும்...இனி கவனமாக இருக்கிறேன்...

கீதா

துரை செல்வராஜூ said...

>>> அவர் மெயில் பார்த்துட்டு மூடாம போனதால்..<<<

ஆகா... இப்படித்தான் ஏதாவது ஏடாகூடம் ஆகியிருக்கும் என்று நினைத்தேன்...

Thulasidharan V Thillaiakathu said...

பெண்ணை பார்த்தேன் நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை....

அப்படினு ஒரு பாட்டுண்டுல்லையோ.ஸ்ரீராம்....வேர்ட்ஸ் சரியா..இருக்கா தெரிலே...தரூமி டயலாக்....ஒகேயா...தப்புக்குக் கம்மி பண்ணி டையமண்ட் கிழி இல்லைனா....கிரிஸ்டல் கிழி...இல்லைனா....இன்னுறு மெட்டல்..பேர் மறந்து போச்சு...சொல்லறேன்...அந்தக் கிழி....கொடுத்துருங்க..அதிரா வரத்துக்குள்ள..ஹிஹிஹி

கீதா

Bhanumathy Venkateswaran said...

அதில் என்ன விஷயம்னா, அவர், "நான் ஏன் மற்றவர்கள் பாடலை பாட வேண்டும்? என் மனம் கவர்ந்த பெண்ணிற்காக நானே சொந்தமாக ஒரு பாடலை எழுதி விட்டுப் போகிறேன்" என்று சொந்தமாக பாட்டு கட்டி விட்டார். கேட்டால் தர மாட்டாராம், பெர்சனலாம், ஹி ஹி

கோமதி அரசு said...

பால கணேஷ் சொல்லி விட்டார் பாடல், கதை இரண்டையும்.
புதிர் இந்தமுறை நீங்களா?
கெளதம் அண்ணா நெட் இல்லாத காட்டில் மாட்டிக் கொண்டதால் புதிர் இல்லை என்று நினைத்தேன்.

Bhanumathy Venkateswaran said...

அதில் என்ன விஷயம்னா, அவர், "நான் ஏன் மற்றவர்கள் பாடலை பாட வேண்டும்? என் மனம் கவர்ந்த பெண்ணிற்காக நானே சொந்தமாக ஒரு பாடலை எழுதி விட்டுப் போகிறேன்" என்று சொந்தமாக பாட்டு கட்டி விட்டார். கேட்டால் தர மாட்டாராம், பெர்சனலாம், ஹி ஹி

சுஜாதா புதிர்கள்
அ. ......

ஆ. நிர்வாணா நகரம். அதில் கதாநாயகன் செஸ் விளையாடுபவனாக வருவான்.
அவருடைய முதல் நாவலான நைலான் கயிறில் கூட கொலையாளி தப்பிப்பதாகத்தான் வரும். 'சிவந்த கைகள்' கதையிலும் கொலையாளி தப்பிப்பதாகத்தான் முடித்திருந்தார்,அதை வாசகர்கள் ஏற்றுக் கொள்ளாததால்,'கலைந்த பொய்கள்' என்று அதன் தொடர்ச்சியை எழுதி குற்றவாளியை பிடிபட வைத்தார். ஹர்ஷத் மேத்தா ஊழலை மையமாக வைத்து அவர் எழுதிய தொடர் ஒன்றில் கூட கதாநாயகனுக்கு தண்டனை எதுவும் கிடைக்காது. அவனிடம் கோபித்துக் கொண்டு போன கதாநாயகி,"உன்னை விட்டு போக மாட்டேன்டா" என்று அவனோடு இணைவது போல் முடித்திருப்பார். கல்கியில் ஒரு தொடர் எழுதினார். வெளிநாட்டிலிருந்து பெங்களூரில் செட்டில் ஆன ஒரு பேராசிரியர், அவருடைய இளம் மனைவியை நான்கு ரௌடிகள் கற்பழித்து விடுவார்கள். போலீஸ் அந்த குற்றவாளிகளை கண்டு பிடித்து அந்த இளம் பெண் முன் நிறுத்துவார்கள். அவள் அவர்களை லேசாக கன்னத்தில் அறைந்து, மன்னித்து விட்டு விடுவாள்.

இ. ஜன்னல் மலர் படமாக்கப்பட்ட விதம் அவருக்கு அதிருப்தி அளித்தது என்று நினைக்கிறேன். சினிமாவுக்காகவே அவர் எழுதிய முதல் கதை விக்ரம் என்று நினைக்கிறேன்.

athiraமியாவ் said...

ஆஆஆஆஆஆ மீ க்கே பரிசூஊஊஊஉ...

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை... அவ கண்ணைப் பார்த்து....... அந்தப் பாடல்.... பரிசை தாங்கோ... பரிசை தாங்கோ...

athiraமியாவ் said...

///அதிரா வரத்துக்குள்ள..ஹிஹிஹி
///
நோஓஒ கீதாவின் வடனம் தப்பூஊஊஉ அவசரமா பதிலைப் போட்டிட்டு பார்த்தேன்ன்ன்

athiraமியாவ் said...

////ஏகாந்தன் Aekaanthan !February 28, 2018 at 7:55 AM
நிலா-பெண், பெண்-நிலா. இதைத்தாண்டி சிந்திக்கமாட்டீர்களா தமிழ்நாட்டில்? ////
ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன் பொயிங்கிட்டார்ர்:)...

இப்போ எல்லோருக்கும் பிரியுதோ?:)... பெண்ணும் நிலவும் இல்லை எனில் இவ்வுலகமே இல்லை:)...

ஹையோ ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ... ஆஆஆஆ என் தேம்ஸ் எங்கே... இங்கினதானே இருந்துது:)...

athiraமியாவ் said...

///துரை செல்வராஜூFebruary 28, 2018 at 7:29 AM
இந்த தளத்தில் ஐந்து பேர் சாமக் கோழிகள்...////

இதில நானில்ல நானில்ல:)..

///இதில் ஒரு ஆளுக்கு இந்நேரத்தில் தூக்கம் என்பது கிடையாது (!)...////
ஹா ஹா ஹா நீங்க கீதாவைச் சொல்லலியே:)..

///மற்ற நால்வரும் தூங்கினாலும்
எபி....எபி... என்று தான் நினைவு..///

ஹா ஹா ஹா அது பி ..நாவா? லி நாவா என திரும்ப கேட்டுச் சொல்லுங்கோ திரை அண்ணன்:)..

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா நான் தான் ஃபர்ஸ்ட் அந்தப் பாட்டைச் சொன்னேன் நீங்களும் சொல்லுவீங்கனு தெரிஞ்சுதான் பாருங்க பரிசு எனக்கேனு சொல்லிட்டேன் ஹிஹிஹி மியாவ்மியாவ் மியாவ்....சரி சரி போனா போகுது நீங்க கமெட்ன் பாக்காம போட்டீங்க ஓகே அக்ரீட் ஸோ பரிசு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடிலதானே இருக்கும் நாம பிரிச்சுக்கலாம்...பரிசு என்னனு ...ஆ ஆ நினைவு வந்துருச்ச்ச்ச்க்ச்ச்சுசூஊஊஊஉ...ப்ளாட்டினம் கிழி!!! அதிரா ஓகேயா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா அந்த ஐந்து சாமக்கோழியில் ஒன்னு அதிரா தானே...மத்த நாலு தெரியுமே!!! ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ...

ஹையோ அதிரா நேத்து நான் மெய்யாலுமே சாமக்கோழிதான்....ராத்திரி ஒரு அம்பேரிக்கா வாட்சப் கால் வந்து என்னை எழுப்பிருச்சு....ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நிலா-பெண், பெண்-நிலா. இதைத்தாண்டி சிந்திக்கமாட்டீர்களா தமிழ்நாட்டில்?
சரி, வானை நோக்கினீர், நிலவு கண்ணைப் பறித்தது..அப்படியே சொக்கிக்கிடக்கவேண்டியதுதானே. பெண்ணெதற்கு, தொட்டுக்கொள்ள?
இதற்கு முன்பே பார்த்துவிட்ட அவள் பேரழகி எனில், பின்னாடியே போயிருக்கவேண்டாமா? வானும் நிலவும் வந்ததெப்படி இடையில்?//

ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா இப்படி நீங்க சொன்னீங்கனா......நிலா கோச்சுக்கப் போகுது..நிலா பெருமைப் படறதே நம்மை வைச்சு நாலு பேர் கவித கவித எழுதி நம்ம புகழையும் பரப்பி அவங்க புகழையும் பார்த்துக்கிட்ட்...பொழப்பை நடத்தறாங்கனு...இல்லைனா நம்மள ஆம்ஸ்ட்ராங்க் வந்து காலைப் பதித்தார்னும், சந்திரகிரகணம்னா என்னானும் சயின்ஸ் புக்கோடு போயிருப்பேனு நினைச்சுக்குதாம்...

கீதா

athiraமியாவ் said...

///hulasidharan V Thillaiakathu said...
அதிரா நான் தான் ஃபர்ஸ்ட் அந்தப் பாட்டைச் சொன்னேன் நீங்களும் சொல்லுவீங்கனு தெரிஞ்சுதான் பாருங்க பரிசு எனக்கேனு சொல்லிட்டேன்///

நோஓஓஓஓ கீதா இதை நா ஒத்துக்கவே மாய்ட்டேன்:) உங்கள் வசனத்தில் பொருட்பிழை இருக்கூஊஊஊஊஊ:) பரிசு மொத்தமும் நேக்குத்தேன்ன்ன்ன்ன்ன்:))

Madhavan Srinivasagopalan said...

இந்த, பலவிகற்ப இன்னிசை வெண்பா பாடுவான் :

சிலநேரத் திற்குமுன் சீராய்த் தெரிந்த
குலப்பெண், அழகாய் குறுநகை சிந்திய
இன்முகம், எப்படி ஏணியேறிச் சென்றதோ ?
விண்ணில் நடக்கும் வியப்பு !

ஜீவி said...

இப்படியெல்லாம் தன் கதைகள் கன்னாபின்னாவென்று கூறு போடப்படும் என்று அந்த ரங்கராஜனே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ கீதா: //..நிலா பெருமைப் படறதே நம்மை வைச்சு நாலு பேர் கவித..

ஓ! நிலாவுக்குப் பெருமை சேர்க்கத்தான் இப்படியெல்லாமா.. அப்பன்னா சரி, நடக்கட்டும்!

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ அதிரா://.. இப்போ எல்லோருக்கும் பிரியுதோ?... பெண்ணும் நிலவும் இல்லை எனில் இவ்வுலகமே இல்லை..

சரிதாங்க நீங்க சொல்றது. பெண்ணும் நெலவும் இல்லாம, கண்ண வச்சிக்கிட்டு என்னதான் பண்றது? ஸ்ரீராம்கிட்டயும் சொல்லிடுங்க. இன்னொன்னு எளுதிப்போட்டிருவாரு ..

athiraமியாவ் said...

///ஸ்ரீராம்கிட்டயும் சொல்லிடுங்க. இன்னொன்னு எளுதிப்போட்டிருவாரு ..///

ஹா ஹா ஹா இன்று ஸ்ரீராம் லாப் எலியாஆஆஆஆஆஆ?:))..

பெண்ணையும் நிலவையும் வச்சு எத்தனை கோடி பாடல்கள்.. எத்தனை கோடி கவிதைகளெல்லாம் வந்திருக்கு:)) ஆனா எதிர்ப்பாலாரை வச்சூஊஊஊஊஊஉ.. ஹையோ நேக்கு கால் காண்ட்ஸ் எல்லாம் ரைப் அடிக்குதே:) இதுக்கு மேலயும் இங்கின நிக்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈஈ ஹா ஹா ஹா:)..

வல்லிசிம்ஹன் said...

வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வான முழு மதியைப் போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்.

சுஜாதா சார், நாவல்கள் எல்லாம் மறந்துவிட்டது.
மன்னிக்கணும் வாத்தியார் சார்.

Geetha Sambasivam said...

யாரும் விடை சொல்லலை போல! :)

Asokan Kuppusamy said...

கலக்கல் புதிர் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!