வியாழன், 1 மார்ச், 2018

"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... உண்மையா?" என்றாள் மாலினி.

முகில் சிவா முக நூலில் இப்படிப் போட்டிருந்தார்.  எனக்கு முகில் சிவாவின் சில நூல்கள் (வைத்திருக்கிறேன்) பிடிக்கும்.  எனவே அவர் சொன்னதை நம்பி தேடிப்பிடித்து அந்தக் கதை படித்தேன்.  ஒருவேளை யாராவது பாராட்டிச் சொன்னால் படிப்பவர் மனதில் ஒரு எதிர்ப்புணர்ச்சி தோன்றி விடும் போலும்!  சரி,  அவருக்கு அவர் சுவை ; எனக்கு என் சுவை.

முன்னர் ஜெயமோகன் கதை ஒன்றை "படித்தபோது அல்லது படிக்கும்போது ஏற்படும் உணர்வாக ஒரு வாசகனின் பார்வையில் அலசியிருந்தேன்!  அந்த வரிசையில் இது இரண்டாவது.

ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா?   அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம்.  

     இம்மாதிரி வாசகர்களை ஏமாற்றுவதில் இருக்கிறது படைப்பாளியின் சாமர்த்தியம்.  சில பெரிய எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது 'என்ன இருக்கிறது இதில்?' என்று சில சமயம் தோன்றும்.  வெளியில் சொன்னால் 'உனக்குத்தான் புரியவில்லை.  பெரிய தத்துவம் அதில் மறைபொருளாக விளக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்வோரும் உண்டு.  (அதனால் இப்படிப்பட்ட கருத்துகளை வெளியில் சொல்வதில்லை!!) 

     ஆனாலும் கண்கள் படிப்பதை நம் மனம் முந்திச் செல்வதை நிறுத்துவதில்லை.  இந்த வகையில் ஒரு புது முயற்சியாக சமீபத்தில் ஆனந்த விகடனில் வந்த ஜெயமோகன் சிறுகதை படித்தபோது மனதுடன் ஏற்பட்ட அனுபவத்தைக் கீழே தருகிறேன்.  படிக்கப் படிக்க மனதில் தோன்றிய எண்ணங்கள்.  -  இது நான் அக்டோபர் 5, 2017 இல் எழுதிய பதிவிலிருந்து.....  ]


​​"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே...  உண்மையா?" என்றாள் மாலினி. -  கதையை ஷங்கர்பாபு  இப்படித்தான் தொடங்கி இருக்கிறார்.

ஒரு கதையை முதல் வரியிலேயே படிக்க வைக்கத் தேவையான தாக்குதல் இருக்க வேண்டும் என்பார் சுஜாதா. 

அது இந்தக் கதையில் இருக்கிறது.  தினமணிக் கதிரோ, விகடனோ, கல்கியோ....   சிறுகதைகளைத் தாண்டும்போது அவை என்னைப் படிக்க ஈர்த்தால்தான் படிக்கச் செல்வேன்.   என் பழக்கம் அது.   நிறைய கதைகளைக் கடப்பதால் வடிகட்டும் மனோபாவம்!  சில சமயங்களில் இந்த காரணத்தினால் சில நல்ல கதைகளைக் கூட இழந்திருக்கக் கூடும்.  தினமணிக் கதிரில் அடிக்கடி எழுதும் எங்கள் (அப்பாவின்) நண்பர் உஷாதீபன் கதைகளைக் கூட - அதாவது தெரிந்த எழுத்தாளர் படைப்பைக் கூட - அப்படித் தாண்டிச் சென்று விடுவதுண்டு.  இது என் கருத்து.  மாற்றுக்கருத்து(ம்)  இருக்கலாம்.  அந்த வகையில் இந்தக் கதை ஒரு கணம் என் கண்களை நிறுத்தியது.  இந்த சாமர்த்தியத்தை இந்தக் கதாசிரியரும் உணர்ந்திருக்கவேண்டும் என்று மனதில் தோன்றியது.  சரி, அடுத்து என்ன சொல்கிறார் என்று கண்களால் தொடர்ந்தேன்.  கொஞ்ச நேரத்துக்கு இந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லாமல், என்ன சூழ்நிலை என்றும் சொல்லாமல் அங்குமிங்கும்  இழுத்தடிக்கிறார்.  
ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்ட பெண் பற்றி ஒரு வர்ணனை சொல்கிறார் பாருங்கள்..  பெண் என்றாலே ஒரு கவர்ச்சி, ஒரு அழகு மட்டுமே தோன்றும் வாசகர் மனதில் இவள் தோற்றத்தைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்.  ஓவியரும் சோடை போகாமல் தன் பங்கை நிறைவேற்றியிருக்கிறார்.  

குடியிருக்க அந்த வீட்டுக்கு வரும் அவனை அப்ரூவ் செய்யப்போகிறவள் அவள்தான்.   அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் ரத்தினசாமியின் மனைவி.  அவர் மனைவியைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை.  ஏன்?  அவள் இவரைவிட அறிவாளி.

"மாலினி மிஞ்சிப்போனால் 40 கிலோவில் இருந்தாள்..  பின்னாளில் ராதா கூட (கதையைச் சொல்லும் சுந்தரின் மனைவி) கேட்டிருக்கிறாள் "இவள்  சைஸுக்கு ப்ரா கிடைக்குமாங்க?"  வறட்சியான புன்னகை, கண்களில் வெறுமை.  இவ்வளவு ஒல்லியான கையை இதுவரை பார்த்ததில்லை.  நரைக்க துவங்கிய முடி, சோடா புட்டிக் கண்ணாடி...."

ஆனால் பேசப்பேச அவள் திறமைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன.  இவன் சொல்லும் பதிலை சமத்காரமான பேச்சால் மடக்குகிறாள்.   அவளுக்கு மருத்துவம் தெரிந்திருக்கிறது.  ஹோமியோபதி படித்த அவள், அலோபதி மருந்தகத்தில் வேலை பார்த்திருக்கிறாள்.   ஒரு நாள் கார் ஓட்டும்போது அவளின் கார் ஓட்டும் (மிக மிக லாவகமாக, மிக மிக வேகமாக)  திறனும், அவளுக்கு ஃபிரென்ச் தெரியும் என்பதும் வெளிப்படுகிறது.  முன்னர் பட்டிமன்றங்களிலும், கவியரங்கங்களிலும் கலந்து கலக்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.  தன் உருவம் பற்றி அறிந்தவள்.  "என்னை யாரும் தப்பான எண்ணத்தோட பார்க்கவே மாட்டாங்க...அதனால்தான் கத்துகிட்ட கராத்தே கலையைக் கடைசிவரை பயன்படுத்த முடியாமலேயே போயிடுச்சு" என்று அடுத்த குண்டை வீசுகிறாள்.  பின்னர் செஸ் விளையாட்டிலும் வித்தகி என்பதும் தெரிய வருகிறது!

இளவயதில் நல்ல கணவன் கிடைக்கவேண்டும் தானும் கோவிலில் விளக்கு வைத்ததாகச் சொல்பவள் ("நானும் சாதாரண பெண்கள் போல!")  கணவன் தன்னை மதிப்பதில்லை என்கிறாள்.  இதை மட்டும் இந்தக் கணவன் - மனைவியால் நம்ப முடியவில்லை.  கணவர் அவ்வளவு மதிக்கிறார் அவளை.  அவளுக்கு சோதிடமும் தெரிந்திருக்கிறது.  


சில பொய்களும் தெரிகிறது.   சமையல் நல்லா வராது என்று அவள் சொல்வது பொய், நல்லா சமைப்பாங்க என்கிறாள் மனைவி.  'கணவன் மதிப்பதில்லை என்பதும் பொய், இப்போது கூட கணவனுக்காக கோவிலில் விளக்கேற்றினாள்' என்கிறாள் மனைவி.   பொய்கள் ஏன் சொல்கிறாள் என்பது புரியவில்லை.

இந்த அவளின் பன்முகத்திறமையைப் படித்துக் கொண்டே வரும்போது கதையின் போக்கு நம் மனதில் மாறுகிறது.  முதலில் கேட்கப்பட்ட  அந்தக் கேள்வியை கிட்டத்தட்ட மறக்க ஆரம்பிக்கிறேன்.  இவள் திறமைகள் இவள் அழகற்றவள் என்பதை மறைக்க கற்றுக்கொண்டதா, போடும் வேஷமா, என்ன காரணம் என்று மனதில் எண்ணம் ஓடும்போது, மீண்டும் அந்தக் கேள்வி வந்து, அதற்கான பதிலை இவன் ஜாக்கிரதையாகச் சொல்கிறான்.  இருவரும் அண்டை வீட்டுக்காரர்கள்.   அடுத்தவர் மனைவி அவள்.  இவனோ வயதில் சிறியவன் ஆயினும் இன்னொரு பெண்ணின் கணவன்.  ஆண்.    இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள். 

கேள்விக்கான பதில் சாதாரணமாகச் சொல்லப்பட்டு காட்சி தாண்டப்படுகிறது.  இப்போது கோணம் மாறுகிறது.  அவள் கோணத்தில், 'தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது' என்றும், 'அவன் தன்னைத் தவறாக நினைத்திருப்பான்' என்கிற எண்ணமும் அவளை வாட்டுகிறது.  அந்த கணத்தை மாற்ற விரும்புகிறாள் அவள்.  அவள் புத்திசாலி.   எவ்வெப்போது முட்டாளாக மாறவேண்டும், அல்லது காட்டிக்கொள்ளவேண்டும்  என்று தெரியும் அளவு புத்திசாலி.  எனவே திட்டமிட்டு,  லிப்டில் தனியாக சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அவள் பிளேட்டையே மாற்றுகிறாள்.   அதிர்கிறான் அவன்.

இப்போது அவனை தன்னைவிட்டு விலகிப்போகச் சொல்கிறாள் அவள்.  விலகிப்போவது என்றால் வீட்டைக் காலிசெய்துகொண்டு...   திகைத்து மறுக்கும் அவனை என்னென்ன செய்கிறாள் என்பது கதை.   திசை மாறிப் பயணித்தாலும் - அதுதானே சுவாரஸ்யமான கதைக்கும் தேவை? -  என்ன ஆகப்போகிறது என்கிற ஆர்வம் வருகிறது.  

ஆனால் ஒன்று.  என் தீர்மானமான அபிப்ராயம் கதையானது கதாசிரியர் முடிந்திருக்கும் கதையில் கடைசி மூன்று பாராக்களுக்கு முன்னரே முடிந்துவிடுகிறது. 

நெல்லை...  அட்டையில் இருப்பது யார்?

'என்ன கதை என்று நான் படிக்கவில்லை, படிக்காமல் நீங்கள் சொல்வது புரியவில்லை' என்று சொல்பர்களுக்கு கதையைச் சொல்லி விடலாமா என்றால் அது நியாயமாகாதே!  (கிட்டத்தட்ட சொல்லி விட்டேன்.  கடைசியில் தோற்றுப்போய் வீட்டைக் காலி செய்துகொண்டு சென்று விடுகிறான் அவன்.  இவர்கள் சண்டை கடைசிவரை அவன் மனைவிக்கோ, அவள் கணவனுக்கோ தெரிவதில்லை.  அவரிடம் அவளின் 'ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி'யைச் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறான் அவன்.)


======================================================================================================

நேற்றைய புதிரின் விடைகள் :

அந்தப் பாடல் வல்லிம்மா மட்டுமே மிகச்சரியாக சொல்லி இருக்கிறார்.  எம் கே டி பாகவதர் படம்.  சிவகாமி.  அதில் டி எம் எஸ் பாடிய பாடல்!  சுஜாதா கதைகள் பற்றி பாலகணேஷ் 98% சரியாகச் சொல்லி விட்டார்.(அ) 'நில்லுங்கள் ராசாவே' - ஒரு குறிப்பிட்ட நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும்போது ஹிப்னடைஸ் செய்யப்பட்ட ஹீரோ அந்த அதிபரைக் கொலை செய்ய டியூன் செய்யப் பட்டிருப்பான். 

மற்றும் 'மூன்று நிமிஷம் கணேஷ்'.  'நிமிஷ நிமிஷ நிமிஷ' என்று மூன்று முறை ஒலி வந்ததும் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் குண்டு வெடிக்கும்.  

(ஆ) நிர்வாண நகரம் - நகரில் நடந்த குற்றங்களை உபயோகித்துக் கொண்டு தான் செய்தது போல நாடகமாடும் கதாநாயகன்!  'சிவராஜ்' என்கிற தனது பெயரை ஜம்பிள் செய்து 'ஜீவராசி' என்று வைத்துக்கொண்டிருப்பான்.

(இ) சினிமாவுக்காகவே அவர் எழுதிய முதல் கதை 'நினைத்தாலே இனிக்கும்'. 'ப்ரியா' திரைப்படம் எடுக்கப் பட்ட விதத்தில் அதிருப்தியுற்று, 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்', 'மேற்கே ஒரு குற்றம்' என்று எல்லாம் கதைகள் எழுதினார் ('இதை எப்படி திரைப்படமாக எடுக்கிறார்கள்...  பார்ப்போம்!') . அந்த வசனம் இரண்டாவது கதையில் வரும்.  பின்னர் அவர் சினிமாவிலேயே ஐக்கியமானது வேறு கதை!


===============================================================================================================


பின்குறிப்பு :  இன்று வேறெந்த விஷமமும் இல்லை!  தலைமுடி கதையை பின்னர் சொல்லவா அதிரா?!!

109 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. தலைப்பு!!! ஆஆஆஆ!!!!!!! ஹா ஹா ஹா ஹா....மீண்டும் மாலை வருகிறேன் வாசிக்க....இப்போது விடை பெறுகிறேன்....அதிரா பார்த்து மயங்கிடாமா நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. // தலைப்பு!!! ஆஆஆஆ!!!!!!! // // .மீண்டும் மாலை வருகிறேன் வாசிக்க.... //

  வாங்க... வாங்க... மெதுவா வாங்க.. பயப்பட ஒன்றுமில்லை.

  பதிலளிநீக்கு
 4. துரை அண்ணா என்னாச்சு?? காணலையே!!???? நலமா...வேலைப்பளுவா...இல்லை எபி பூங்கதவு திறக்க மாட்டேன் என்கிறதா......இல்லை ஸ்ரீராமின் பெட்டிக்குள் ஒளிந்து கொண்டிருக்கோ....ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. துரை செல்வராஜூ ஸார் காணோமே... "கைக்குழந்தையை" கையில் எடுத்துச் செல்ல மறந்து விட்டாரோ...

  பதிலளிநீக்கு
 6. அடடா. என் பாடல் தெரிவாகிவிட்டதா. இனிய காலைதான். நன்றி ஸ்ரீராம். மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
  ஜெமோ கதை விகடனில் வந்திருக்கிறதா.
  படிக்க வேண்டியதுதான்.

  நல்ல சித்திரம் வரைந்தது யாரோ. மிக யதார்த்தமான கதை.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 7. பாடலை நன்றாக ரசித்தேன்,அருமையான பாடல். ..!!

  பதிலளிநீக்கு
 8. அருமையான பாடல் பகிர்வு.
  வல்லி அக்காவிற்கும் உங்களுக்கும் நன்றி.

  //எம் கே டி பாகவதர் படம். சிவகாமி. அதில் டி எம் எஸ் பாடிய பாடல்! //
  ஆனால் இலங்கையை சேர்ந்த நடிகர், நடிகை போல் இருக்கே! பாடல் பின்னனி, படத்தில் வந்த காட்டிசி தானா?

  கதை படித்தது இல்லை.
  நெல்லைத் தமிழனுக்கு தெரியாதா அட்டைப்படத்தில் இருப்பவர் யார் என்று?

  சுஜாதா கதை விவரம் தெரிந்து கொண்டேன்.


  பதிலளிநீக்கு
 9. தலைப்பை பார்த்ததும் என்னடா இது எங்கள் ப்ளாகிற்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டேன். விகடன் வாங்க கிளம்பி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 10. விடையளித்தவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. //விகடன் வாங்க கிளம்பி விட்டேன்.//
  விகடனைத் தேடிக் கடைக்குப் போக வேண்டாம். விகடனை நெட்டிலேயே படிக்கக் கூடிய காலம் வந்தாச்சு. ஹார்ட் காப்பி தான் வேண்டும் என்றால் போன் செய்தால் விகடன் வீட்டுக்கு வரக் கூடிய காலமும் வரப்போகிறது.

  பதிலளிநீக்கு
 12. //ஆனந்த விகடனில் வந்த ஜெயமோகன் சிறுகதை படித்தபோது மனதுடன் ஏற்பட்ட அனுபவத்தைக் கீழே தருகிறேன். படிக்கப் படிக்க மனதில் தோன்றிய எண்ணங்கள். ]//

  இந்த இடத்தில் ஏதாவது விட்டுப் போய் விட்டதா?.. கண்ட்டினியூட்டி இல்லாத போல உணர்வு.

  தொடர்ந்து வரும் 'ருசி' ஷ்ங்கர்பாபுவின் கதையாச்சே?..

  பதிலளிநீக்கு
 13. //​​"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... உண்மையா?" //

  நல்லா இருக்கும் தான். இதில் என்ன கேள்வி வேண்டிக்கிடக்கிறது?..
  இப்படி நம் மொபைலுக்கு மாலினி என்ற பெண்ணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தால் எப்படியிருக்கும்? அடுத்து என்ன செய்வோம்?.. என்னடா இது வம்பா போச்சு; ஏதாவது சிக்கலில் மாட்ட இது ஒரு சுருக்குக் கயிறோ என்று மெசேஜை டெலிட் பண்ணுவோமில்லையா?
  குடும்பப் பத்திரிகைன்னு அந்தக் காலத்தில் சொல்வாங்க. அந்த வரிசையில் ஒன்றான விகடனிலேயே இந்த மாதிரி ஒரு மாதிரியான தொடக்கத்துடன் கதைகள் வெளிவர ஆரம்பிச்சாச்சு. எப்படியாவது பத்திரிகைகள் விற்பனை ஆக வேண்டும். அவ்வளவு தான்.

  பதிலளிநீக்கு
 14. ஒரு சிறுகதை எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நாம அந்த்ச் சிறுகதை மூலமாக அறிந்துகொள்வதும், நம் அனுபவத்தை ரிலேட் செய்வதும், ஒரு குறிப்பிட்ட சிறுகதை நம்மை ஈர்க்கும் காரணங்களில் சில.

  ஜெ.மோ. கதையை நான் பார்க்க நேர்ந்தால், அந்த ஓவியத்துக்காகவே வாசிக்க நினைத்திருப்பேன். அந்தப் பெண்ணின் ஓவியம், ஏதோ செய்தி சொல்வதாகவே தோன்றுகிறது. ஓவியர் ஸ்யாம் ரொம்ப நன்றாக வரைந்துள்ளார் (கதைக்குப் பொருத்தமாக). சிறுகதையில் வருவதுபோல, உலகில் எல்லோருக்கும் நிறையத் திறமைகள் இருக்கும். பெரிதும் மதிக்கப்படுகிறவர்களிடமும் அவர்களுக்கான வருத்தங்கள், தோல்விகள் இருக்கும்.

  அட்டையில் ஜோதிகாவின் ('நாச்சியார்) படம் பார்த்தேன். இப்போது எப்படி இவர் நடிப்பில் இறங்க ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றியது.

  ஸ்ரீராம் - ஜெயகாந்தன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். தன்னோடு பழகினவர்களுடைய இறப்புக்கு நான் செல்லமாட்டேன். அவர்களின் உயிரற்ற சடலத்தைக் காணுவதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை என்பார். நான் ஸ்ரீதேவியின் அழகின் ரசிகன் என்று 40+ ஸ்ரீதேவியை யாராவது குறிப்பிட்டால் எனக்குச் சிரிப்புத்தான் வரும்.

  பதிலளிநீக்கு
 15. தலைப்பு & கதைச் சுருக்கம் , இரண்டிற்கும் ஏற்ற முன்னுரை (பிரமாதம்)

  பதிலளிநீக்கு
 16. நேற்று பின்னிரவில் net ஹோகயா!..

  இப்போது தான் recharge ...
  க்டைக்காரனுக்கு தூக்கமாம்...

  நலம் விசாரித்த நல்மனங்களுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 17. ஜெயமோகன் சிறுகதை படித்தபோது மனதுடன் ஏற்பட்ட அனுபவத்தைக் கீழே தருகிறேன். - இதுவும், சிறுகதையில் கதாசிரியர் ஷங்கர் பாபு என்பதும் ஒத்துப்போகவில்லையே.

  பதிலளிநீக்கு
 18. தலைப்பு///

  ஆஆஆஆஆஆஆஆஆஆ நேக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:) பெண்ணைப்பற்றியும் நிலவைப்பற்றியும் எழுதினால்தானே திட்டுவீங்க?:) இப்போ என்ன பண்ணுவீங்க என ஸ்ரீராம் களம் இறங்கிட்டார்ர் ஹா ஹா ஹா... ஏகாந்தன் அண்ணன் ஓடியாங்கோ:))..

  பதிலளிநீக்கு
 19. //[ ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா? அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம். //

  ஹா ஹா ஹா இது முன்பும் சொல்லியிருக்கிறீங்க... முதல்வரியை வச்சே.. முடிவுதான் எனக்குத்தெரியுமே என மனம் முந்திக் கொள்கிறது ஆனா சிலதடவை சரியாவரும் பல தடவை பிழைச்சுப் போகும்:)..

  பதிலளிநீக்கு
 20. கதை நீங்க சொன்னவரை படித்ததில் அப்பெண்ணின் படமும் பார்த்ததும் முன்பு நான் படித்த அம்புலி மாமாவில் இருந்த ஒரு வசனம் , மனதில் ஆழமாகப் பதிந்த வசனம் நினைவுக்கு வருகிறது...

  “ஆடையைப் பார்த்து ஒருவரை எடை போடாதீர்கள்.. சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது”.

  பதிலளிநீக்கு
 21. தலைப்பு ப்ளஸ் ஓவியத்தை பார்த்ததும் கதையின் போக்கு புரிபட்டது ..இப்போ மிச்சத்தை நான் எப்படி படிக்கிறது ???

  கோவைக்காய் சாம்பாரும் வாழைக்காய் பொரியலும் சமைச்சிட்டு அப்புறம் வரேன்

  பதிலளிநீக்கு
 22. ///நெல்லை... அட்டையில் இருப்பது யார்?///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடி ஒரு கேள்வியக் கேட்டு நெல்லைத்தமிழனை மான பங்கப் படுத்திட்டார் ஸ்ரீராம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா.. இதை சுப்பையா அங்கிள் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லோணும் என பிரித்தானிய நிதிபதி ஆணையிடுகிறார்:))..

  அனுக்கா படம் போட்டால் இப்பூடிக் கிளவி ஹையோ டங்கு ஸ்லிப்பாகத் தொடங்கிட்டுதே இனி யக்க்க்ர்தையாத்தான் பேசோணும் நல்ல வேளை சந்திரஷ்டமம் நேற்றொடு ஃபினிஸ்ட்:)... அனுக்கா படம் போட்டால் இப்பூடி, இது ஆர் எனக் கேய்க்கவே மாட்டார்:) ஏனெனில் அவவை உலகத்துக்கே தெரியுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 23. ///Angel said...
  தலைப்பு ப்ளஸ் ஓவியத்தை பார்த்ததும் கதையின் போக்கு புரிபட்டது ..இப்போ மிச்சத்தை நான் எப்படி படிக்கிறது ???//

  ஆஆஆஆஆ எங்கள் புளொக் ஒரு ஆட்டம் ஆடிச்சுது பாருங்கோ.. நேக்குப் பிரிஞ்சுபோச்ச்ச்:) மை செக்:) லாண்டட்ட்ட்ட்ட்..

  //Angel said...
  தலைப்பு ப்ளஸ் ஓவியத்தை பார்த்ததும் கதையின் போக்கு புரிபட்டது ..இப்போ மிச்சத்தை நான் எப்படி படிக்கிறது ???///
  ஆஆஆஆஆஆவ்வ் புரிஞ்சுபோச்சாமே:) அஞ்சூஊஊஊஊஊஊ அதைக் கொஞ்சம் சொல்லிட்டுப் போய் ஆவக்காய் ஆம்பாறு வையுங்கோ:)).. காதைக் கொண்டு வாங்கோ நான் நேற்று கோவைக்காய் பிரட்டல் வச்சனே:) என்னா பொறு:)த்தம் நமக்குள்.. புல்லாஆஆஆஆஆஆஆரிக்குதே:).

  பதிலளிநீக்கு
 24. ///Thulasidharan V Thillaiakathu said...
  தலைப்பு!!! ஆஆஆஆ!!!!!!! ஹா ஹா ஹா ஹா....மீண்டும் மாலை வருகிறேன் வாசிக்க//

  ஆஆஆஆஆஆ கீதா கிரேட் எஸ்கேப்பூஊஊஊ... கீசாக்கா குரல் கேட்டுதே:) அப்போ இன்னமும் காவெரியில் குதிக்கலயோ ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

  ///ஸ்ரீராம். said...
  துரை செல்வராஜூ ஸார் காணோமே... "கைக்குழந்தையை" கையில் எடுத்துச் செல்ல மறந்து விட்டாரோ...///
  அச்சச்சோ இது என்ன புயுக்கதை:)) இது எப்போ பிறந்துதூஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)) இதைப் பார்த்து துரை அண்ணனுக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பாகிடப்போறாரே:)) ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:))

  பதிலளிநீக்கு
 25. //நேற்றைய புதிரின் விடைகள் :

  அந்தப் பாடல் வல்லிம்மா மட்டுமே மிகச்சரியாக சொல்லி இருக்கிறார். எம் கே டி பாகவதர் படம். சிவகாமி. அதில் டி எம் எஸ் பாடிய பாடல்! ///

  நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ கீதாவும் மீயும் சொன்ன பாடலும் சூப்பரா பொருந்துதே:) பரிசை ரெண்டாப் பிரிங்கோ:)).. இப்பாடல் கேட்டதே இல்லை.. வாழ்த்துக்கள் வல்லிம்மா கரெக்ட்டா சொல்லியிருக்கிறீங்க ஸ்ரீராம் நினைச்ச பாடலை.

  பதிலளிநீக்கு
 26. @நெல்லைத்தமிழன்///
  ஸ்ரீராம் - ஜெயகாந்தன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். தன்னோடு பழகினவர்களுடைய இறப்புக்கு நான் செல்லமாட்டேன். அவர்களின் உயிரற்ற சடலத்தைக் காணுவதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை என்பார். ///

  இப்படித்தான் நானும் நினைப்பதுண்டு, ஏனெனில் கடசியாக ஒருவரை எக் கோலத்தில் பார்க்கிறோமே அதுவே நம் மனதில் நிலைத்து விடுகிறது, எனவே கடசி நேரம் பார்க்காமல் விட்டால், பழைய முகமே கண்ணில நிக்கும் என்பது என் கருத்து.

  ///நான் ஸ்ரீதேவியின் அழகின் ரசிகன் என்று 40+ ஸ்ரீதேவியை யாராவது குறிப்பிட்டால் எனக்குச் சிரிப்புத்தான் வரும்.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் வன்மையான கண்டனங்கள்.. அழகுக்கு வயசேது... ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு அழகு.. அதை ரசிக்கத் தெரியோணும் ஜொள்ளிட்டேன்ன்:)... ஏன் நேற்றைய மரண ஊர்வலத்தில் கூட என்ன ஒரு அழகாக இருந்தா தெரியுமோ.. எல்லொரிலும் அப்படி அழகு வராதே.. சரி சரி விடுங்கோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.

  உங்களுக்குப் புறுணம் தெரியுமோ.. எங்களுக்கு ரெண்டு நாளா பனிப்புஅயல் புகார்ர்.. தொடருது ஸ்கூல்ஸ் இல்லை இன்று வேர்க்குகளும் இல்லை... ரோட்டில் போகக்கூடாது என கேர்வியூபோல அறிவிச்சிருக்கினம்.. அவ்ளோ மோசமா இருக்கு டோர் திறக்க முடியவில்லை,காற்றோடு ஸ்னோ.. வாசல் படிக்கு மேல எல்லாம் ஸ்னோ.. டெய்சிப்பிள்ளை அடம்பிடிச்சா திறந்தவுடன் உள்ளே பாய்ந்து தூக்கிட்டோம்ம்.. அப்படியே புதைஞ்சு போகத்தொடங்கிட்டா ஓ மை வைரவரே:))... நாளைக்கும் ஸ்கூல் இருக்காது என்றே ஒரு நம்பிக்கை.. ஓஓஓஓஓ லலலாஆஆஆஆஆஆ :))

  பதிலளிநீக்கு
 27. ///அட்டையில் ஜோதிகாவின் ('நாச்சியார்) படம் பார்த்தேன். இப்போது எப்படி இவர் நடிப்பில் இறங்க ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றியது.///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேடித்தேடிக் களைச்சு முடிவிலதானே கண்டுபிடிச்சேன் கர்ர்ர்:)) இருங்கோ சிவகுமார் அங்கிளுக்கு இன்ஃபோம் பண்ணுறேன்:)..

  பதிலளிநீக்கு
 28. ஹலோவ் மியாவ் எங்களுக்கும் இங்கே பனி புயல் ஆனா உங்க அளவில்லை .இருங்க கதை விவரம் சொல்றேன்

  பதிலளிநீக்கு
 29. ஸ்ரீராம் - இது அவள் அல்ல. நான் அவன் இல்லை.

  பதிலளிநீக்கு
 30. ///Angel said...
  ஹலோவ் மியாவ் எங்களுக்கும் இங்கே பனி புயல் ஆனா உங்க அளவில்லை .இருங்க கதை விவரம் சொல்றேன் ///

  ஆங்ங்ங் என் செக்:) என்னைவிட ரெண்டடி உயரத்தில குறைவு:)) அதேபோலவேதான் ஸ்னோவும் ஹையோ இண்டைக்கு அந்த முருகன், வள்ளி தெய்வானையோடு வந்தால்கூட என்னைக் காப்பாத்த முடியாமல் போகப்போகுதே:))

  பதிலளிநீக்கு
 31. அம்மாடியோவ் !!! வாசிச்சிட்டேனே வாசிச்சிட்டேனே .நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 32. //தேவைப்படும்போது அடி முட்டாளாகவும் மாறத்தயங்காத ஆபத்தான அறிவாளி //

  அறிவாளியா இருக்கலாம் இல்லை அடிமுட்டாளா இருக்கலாம் ஆனா ரெண்டும் சேர்ந்த கலவை என்றால் ரொம்பவே கஷ்டம் ..

  பாதி கதைவரைக்கும் மாலினி நாசா வரைக்கும் உயர பயணித்தார் பிறகு ஹாலுசினேஷன் effect ஆல் செய்யும் கூத்துக்கள் டெரர் ரகம் ...

  பதிலளிநீக்கு
 33. உண்மையில் சுந்தர் அந்த கேள்வியில் நிலைகுலைந்தாலும் சகஜ மாகிட்டார் ஆனால் மாலினி தான் குற்றவுணர்வில் விழுந்து கூடாத காரியங்களை செய்திருக்கிறார் .நட்பு எடுத்திக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் கேள்வி தொண்டையில் இருந்து புறப்பட்டிருக்கும் ..மாலினிக்கு மனக்குறை அது இப்படி ஸ்ப்ளிட் பெர்சனாக்கிட்டது.

  பதிலளிநீக்கு
 34. //இன்று வேறெந்த விஷமமும் இல்லை! தலைமுடி கதையை பின்னர் சொல்லவா அதிரா?!!//ஒண்ணுமே புரியலை! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாப் போல்! :)

  பதிலளிநீக்கு
 35. நேத்திக்கு இந்த விகடனைக் கொடுத்து ஒருத்தர் படிக்கச் சொன்னார். வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்படி ஒரு பதிவு வரும்னு தெரிஞ்சாப் படிச்சிருக்கலாமோ!

  பதிலளிநீக்கு
 36. மாலினி மாதிரி ஆபத்தான அறிவாளிகள் நம்ம கூடவே இருப்பாங்க நாம் தான் கவனமா இருக்கணும் .அவர்களிடம் சீ பைத்தியம் என்ற வார்த்தை கூட சொல்ல முடியாது .எனக்கும் இப்படிப்பட்ட ஒரு மாலினியை தெரியும் என்னைவிட இளையவர் விளையாடும்போது விழும் யார் அருகில் இருக்காங்களோ அவங்க பேரை தள்ளியதாக சொல்லி விடும் ..ஆனால் அறிவறிவு அவ்ளோ ப்ரில்லியண்ட் வீணை கிட்டார் ஆர்கன் பியானோ எல்லாம் அத்துப்படி முதுகலை அறிவியல் வரலாறு சோஷியாலஜி இன்னும் பல துறைகளில் வாங்கியிருக்கார் .ஒருமுறை சைக்கிளில் என்னை துரத்தோ துரத்தென்று முட்டுசந்தெல்லாம் துரத்தினார் அப்பெண் .
  நானும் சைக்கிளில் இப்போ நினைச்சாலும் நெஞ்சு படபடக்கும் .கடைசியிலிசைக்கிளை விட்டிறங்கி அழுதுகிட்டே தள்ளிக்கிட்டு போனேன் .எனக்கு முன்னே வீட்டுக்கு போய் அம்மா கிட்ட சொல்றா என்ன பெண்ணை வளர்த்திருக்கிங்க? ஒழுங்கா சைக்கிள் ஓட்ட தெரியலை உங்க மகளுக்கு தைரியத்தை நான் இப்போ கற்றுக்கொடுத்திட்டு வரேன்னு !!!

  பதிலளிநீக்கு
 37. //பின்குறிப்பு : இன்று வேறெந்த விஷமமும் இல்லை! தலைமுடி கதையை பின்னர் சொல்லவா அதிரா?!!
  //
  ஹா ஹா ஹா இதுகுப் பதில் போடல்லியே மீ:).. இன்று எதிர்பார்த்தேன்.. அதுதான் சொல்லாமல் விட்டிட்டீங்களே:) பிறகென்ன பின்பு ஜொள்ளவோ என?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா அப்போ கீதா சொன்னதை விட இது வேறை போலவேதான் இருக்கு ஹையோஓஓஓஓஒ எனக்கு கியூரியசிட்டி ஓவராகுதேஏஏஏஏஏஏ:))....

  பதிலளிநீக்கு
 38. @ அஞ்சு..

  //நானும் சைக்கிளில் இப்போ நினைச்சாலும் நெஞ்சு படபடக்கும் .கடைசியிலிசைக்கிளை விட்டிறங்கி அழுதுகிட்டே தள்ளிக்கிட்டு போனேன் .எனக்கு முன்னே வீட்டுக்கு போய் அம்மா கிட்ட சொல்றா என்ன பெண்ணை வளர்த்திருக்கிங்க? ஒழுங்கா சைக்கிள் ஓட்ட தெரியலை உங்க மகளுக்கு தைரியத்தை நான் இப்போ கற்றுக்கொடுத்திட்டு வரேன்னு !!!///

  ஹா ஹா ஹா இதுவும் சைக்கிள் ஓடக் கற்றுக் குடுக்கும் தெக்கினிக்கு போல:))

  பதிலளிநீக்கு
 39. அமைதி அமைதி.. ஸ்ரீராம் எல்லோருக்கும் பதில் எழுதி சேஃப் பண்ணிக் கொண்டிருக்கிறார்:).. சற்று நேரத்தில கொண்டு வந்து பேஸ்ட் பண்ணிட்டு ஓடிடுவார்:)).. ஆனா அஞ்சூஊஊஊஊஉ இண்டைக்கு விடக்கூடாது:) கம்பிமேலயே நித்திரை கொள்ளுங்கோ:) நேரடி அட்டாக்தேன்:).. நமக்குத்தான் டோர் ஏ திறக்க முடியாதே:).. வீட்டுக்குள்ளயே திருவிளாதேன்:))

  பதிலளிநீக்கு
 40. ஏஞ்சல், பார்த்துட்டேன். உங்க பக்கத்துக்கு நாளை தான் வரணும்! :) இன்னிக்குக் கணினி கோட்டா ஓவர்! :)

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் சகோதரரே

  நேற்றைய பாடல் புதிருக்கும் கதைகள் புதிருக்கும் இன்று விடை அறிவித்திருந்தது பார்த்தேன்.மகிழ்ச்சி! புதிர்களின் விடைகளை தெரிவாக்கியவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இன்று கதைகளின் சுருக்கமும், தங்கள் முன்னுரையும் அதை வெளிப்படுத்திய விதமும் அழகு. விரிவாக தாங்கள் குறிப்பிட்டுள்ள கதைகளை படிக்கிறேன். (நேரம் அமையும் போது)பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 42. @ Geethaa akkaav நோ ப்ரோப்ளம் மெதுவா வாங்க

  பதிலளிநீக்கு
 43. @மியாவ் :) இன்னிக்கு சென்னையா இல்லைன்னா லண்டனா னு பார்த்திடுவோம் :)

  பதிலளிநீக்கு
 44. ஆமா யாரது 40 வயசில் அழகு இல்லைன்னது :)) 60 மேலேயும் எங்க மியாவ் என்ன அழகு ஏன்னா தேஜஸ் என்னே கன கன கம்பீரம் :))

  பதிலளிநீக்கு
 45. ஷங்கர் பாபு அப்பாவித்தனமாக ருசின்னு கதைக்குப் பெயர் வைத்து, கதையின் முதல்வரியில் கொடுத்தார் ஷாக். (ஆவி-யின் இப்போதைய வியாபார மூடிற்கேற்றபடி). நீங்கள் அவர் உள்ளே போட்ட வரியை, எபியின் நெற்றியில் ஒட்டித் தலைப்பாக்கியிருக்கிறீர்கள். யார் பாவி இதில்! அல்லது உங்களது தந்திரம், ஆவி-யையும் தூக்கி சாப்பிட்டுவிட்டதே…

  ஆவி-யின் எடிட்டோரியல் போர்டிலிருந்து அழைப்புவர வாய்ப்பிருக்கிறது !

  பதிலளிநீக்கு
 46. நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கதை மிக வித்தியாசமானது. நிறையபேர்களின் கவனிப்புக்கு வந்திருக்கும். அதற்கு ஸ்யாமின் படம் சூப்பர்க்ளாஸ். நான் உங்கள் வர்ணனையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, கண்ணைப் படத்தில் ஓடவிட்டிருந்தேன். இத்தகைய ஓவியர்களுக்கு ஆண்டு இறுதியில் பரிசு கொடுக்கவேண்டும். ’திறமைக்கு மரியாதை’ என்று பிரபலங்களைக்கூட்டி அலட்டிக்கொள்கிறதே ஆவி? ஓவியரின் திறமை திறமையாக அதற்குத் தெரியவில்லையோ..

  பதிலளிநீக்கு
 47. @ அதிரா:

  //..நிலவைப்பற்றியும் எழுதினால்தானே திட்டுவீங்க?:) இப்போ என்ன பண்ணுவீங்க .. ஓடியாங்கோ:))..

  வந்தேன். போட்டேன் மேலே ஒன்னுக்கு ரெண்டா !

  பதிலளிநீக்கு
 48. @ அதிரா: //... அழகுக்கு வயசேது..//

  ஐயோ! தத்துவம் தாங்கமுடில...

  பதிலளிநீக்கு
 49. முகில் சிவாவின் போஸ்ட்டைப் பார்த்தபின், கணேசகுமாரனின் கதையைப் படிக்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 50. அழ்கு என்பது அவரவர் மன நிலை பொறுத்தது எனக்குத் தெரிந்த நண்பரின்மனைவி காண சகிக்காது ஆனால் அவரிடம் ஏன் இப்படி என்றால் அவர் கூலாக எனக்குப் பிடித்தது கட்டிக்கிட்டேன் என்பார்

  பதிலளிநீக்கு
 51. ///AngelMarch 1, 2018 at 6:06 PM
  @மியாவ் :) இன்னிக்கு சென்னையா இல்லைன்னா லண்டனா னு பார்த்திடுவோம் :)///

  மீ விளக்கெண்ணெயோடுதான் சுத்துறேன் அஞ்டு:).. நில்லுங்கோ முறுக்குச் சுட்டு முடிச்சிட்டு வாறேன்:)

  பதிலளிநீக்கு
 52. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் ஏகாந்தன் அண்ணன் கம்பி மேலயோ..... ஹையோ மீ ஒரே ஜம்பில கம்பியை விட்டுக் குதிக்கிறேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்:))))

  பதிலளிநீக்கு
 53. வாங்க கீதா அக்கா... மதியானமும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 54. வாங்க வல்லிம்மா.. நீங்கதான் கரெக்ட்டா பாட்டைச் சொன்னீங்க... நிலவுன்னு வந்தாலே பாட்டைச் சொன்னதா ஆயிடுமா என்ன! ஜெமோ கதை பற்றி முன்னர்தான் பேசினேன் வல்லிம்மா.. இது ஷ்ங்கர்பாபு எழுதிய கதை.

  பதிலளிநீக்கு
 55. நன்றி கோமதி அக்கா.. பாடல் படத்தில் வந்த காட்சிதான் (என்று நினைக்கிறேன்!) கதை படிக்கா விட்டாலும் கதை பற்றிய விமர்சனம் படிக்கலாமே அக்கா...!

  பதிலளிநீக்கு
 56. பானு அக்கா... விகடன் வாங்கியாச்சா? படிச்சாச்சா? உங்கள் அபிப் என்ன?!

  பதிலளிநீக்கு
 57. வாங்க ஜீவி ஸார்... விகடன் இணையத்திலேயே கிடைக்கிறதுதான். விட்டுப்போய் விட்டதா என்று நீங்கள் கேட்டிருக்கும் வரிகள் நான் அக்டோபர் 2017 இல் எழுதிய பதிவின் வரிகள். அதற்குத்தான் நிறம் மாற்றி அப்போது எழுதி இருந்த அறிமுகத்தைக் கொடுத்திருந்தேன். இப்போது அலசி இருக்கும் கதை ஷங்கர்பாபு எழுதி இருக்கும் கதைதான். விளக்கம் சொல்லாமலேயே புரியும் என்று நினைத்து நான்தான் சரியாய்ச் சொல்லாமல் விட்டேன் போல...

  //இப்படி நம் மொபைலுக்கு மாலினி என்ற பெண்ணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தால் எப்படியிருக்கும்? அடுத்து என்ன செய்வோம்?.. என்னடா இது வம்பா போச்சு; ஏதாவது சிக்கலில் மாட்ட இது ஒரு சுருக்குக் கயிறோ என்று மெசேஜை டெலிட் பண்ணுவோமில்லையா?//

  இதுதான்... இந்த ஆர்வம்தான் அல்லது என்ன இது என்கிற புருவச்சுளிப்புதான் கதைக்கான ஆர்வக்கோடு. அதிலிருந்து கதை என்ன ஆகிறது என்று படிக்கத் தோன்றுகிறது. அவர் ஆபாசமாக எங்கேயுமே கொண்டு செல்லவில்லை என்பது சொல்லப்பட வேண்டிய விஷயம். வித்தியாசமாக இருந்தது. அதைப்படிக்க ஆரம்பிக்கும்போதே மனதில் அடுத்த (சிறு)கதை விமர்சனம் ரெடி என்று தோன்றியது. முதல் விமர்சனம் எழுதிய பிறகு அப்படித் தோன்றவில்லை பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 58. வாங்க நெல்லைத்தமிழன்..
  நெல்லைத்தமிழன் என்பதைச் சுருக்கி நெ.த என்று வைத்துக் கொள்ள வேண்டிய அளவு நேரமில்லையா? ஒருமுறை வைத்துவிட்டால் போதுமே... அப்படியே முழுசும் வருமே!!!!!! ஆனா நான் நெ த என்று சுரக்காமல் நெல்லைத்தமிழன் என்றே அழைக்கிறேன்!

  //ஒரு சிறுகதை எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்கவேண்டும் என்ற அவசியமில்லை.//

  கண்டிப்பாக.

  பாதிக்கவும் பாதிக்காது. அவரவர் பார்வை, மனம், அனுபவம் ஒட்டி மாறுபடும்.

  //ஜெ.மோ. கதையை நான் பார்க்க நேர்ந்தால், அந்த ஓவியத்துக்காகவே வாசிக்க நினைத்திருப்பேன்.//

  அது ஜெமோ கதை அல்ல. ஜெமோ கதை சென்ற வருடம்.

  //அட்டையில் ஜோதிகாவின் ('நாச்சியார்) படம் பார்த்தேன். //

  அட... விகடன் லோகோ உங்கள் கண்ணில் படவில்லையா? நான் அதைத்தான் கேட்டேன்! ஜெயகாந்தன் சொல்வது படிக்க நன்றாயிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 59. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலையில் காணோமே என்று பார்த்தேன் -தோம். நெட்பேக் தீர்ந்து விட்டதா? ஓ....

  பதிலளிநீக்கு
 60. நெல்லைத்தமிழன்...

  // இதுவும், சிறுகதையில் கதாசிரியர் ஷங்கர் பாபு என்பதும் ஒத்துப்போகவில்லையே. //

  என்ன சொல்ல என்று தெரியவில்லை. :))

  பதிலளிநீக்கு
 61. வாங்க அதிரா... கம்பி மேல நின்னுக்கிட்டுருக்கீங்களான்னு ஜாக்கிரதையா பார்த்துகிட்டே வர்றேன். வர்ற மாதிரி தெரிந்தால் ஓடிடணும்! அப்பாடி... தலைப்பு பற்றி சொல்பவர்களுக்கு ஜாக்கிரதையாக ஒரு பதில் யோசித்து வைத்திருந்தேன். எழுதி வைத்திருக்க வேண்டும். இப்போது மறந்து விட்டது! ஹிஹிஹி..

  முந்திரிக்கொட்டை மனம் - நீங்கதான் சரியா கணிச்சுருக்கீங்க.. அப்பாடி. ஆமாம், அது பழைய பதிவு! அம்புலிமாமாவில் இதெல்லாமே போடுகிறார்கள்? அட!

  பதிலளிநீக்கு
 62. வாங்க ஏஞ்சல்... //தலைப்பு, படம் பார்த்து // சட்டெனப் புரிந்து கொண்டீர்கள் போலும். மிச்சத்தை எங்கேயோ படித்து விட்டீர்கள் பலவே...

  //கோவைக்காய் சாம்பாரும் வாழைக்காய் பொரியலும் சமைச்சிட்டு அப்புறம் வரேன்//

  இது யாருக்கோ தகவல் சொல்வது போல இருக்கேன்னு யோசிச்சா பதிலும் வந்து விட்டதே!

  பதிலளிநீக்கு


 63. /இப்பூடி ஒரு கேள்வியக் கேட்டு நெல்லைத்தமிழனை மான பங்கப் படுத்திட்டார் ஸ்ரீராம்ம்ம்ம்ம்//

  அப்படியும் நெல்லையில் பதிலைப் பார்த்தீங்க இல்லே?

  //காதைக் கொண்டு வாங்கோ நான் நேற்று கோவைக்காய் பிரட்டல் வச்சனே:) என்னா பொறு:)த்தம் நமக்குள்.. புல்லாஆஆஆஆஆஆஆரிக்குதே:).//

  அடக்கமாட்டாமல் சிரித்து விட்டேன்! நிலவு, பெண் என்று வந்தால் சரியான பாடலாகி விடுமா? வல்லிம்மாதான் சரி! பனிப்புயலா? பார்த்து ஜாக்கிரதையா இருங்க எல்லோரும்.

  பதிலளிநீக்கு
 64. நெல்லைத்தமிழன்..

  // இது அவள் அல்ல.//

  அப்போ யார்?

  பதிலளிநீக்கு
 65. ஏஞ்சல்..

  //வாசிச்சிட்டேனே வாசிச்சிட்டேனே .நன்றி ஸ்ரீராம் //

  எங்கே வாசித்தீர்கள்? வானுயர பரந்த மாலினி சட்டெனக் கீழே விழுந்ததை அழகாகச் சொன்னீர்கள். அடுத்தடுத்த பின்னூட்டங்களில் அழகாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்கள் அனுபவம் டெரரா இருக்கு! ஆபத்தான நட்புகள்!

  பதிலளிநீக்கு
 66. கீதா அக்கா.. விகடன் கிடைச்சா படியுங்க... தலைமுடி பற்றி அறிய அதிரா பிளாக் சென்று படித்துத் தெரி(ளி)ந்திருப்பீர்கள்!

  பதிலளிநீக்கு
 67. அதிரா..

  //அப்போ கீதா சொன்னதை விட இது வேறை போலவேதான் இருக்கு ஹையோஓஓஓஓஒ எனக்கு கியூரியசிட்டி ஓவராகுதேஏஏஏஏஏஏ//

  ரொம்ப எல்லாம் எதிர்பார்க்காதீங்க அதிரா.. ஏமாந்து போயிடுவீங்க. பெரிய விஷயம் எல்லாம் ஒன்றுமில்லை.

  ////அமைதி அமைதி.. ஸ்ரீராம் எல்லோருக்கும் பதில் எழுதி சேஃப் பண்ணிக் கொண்டிருக்கிறார்:).. சற்று நேரத்தில கொண்டு வந்து பேஸ்ட் பண்ணிட்டு ஓடிடுவார்:))..////

  கூண்டுக்கிளியிடம் ஒரு சீட்டு எடுத்துக் போடச் சொல்லி ஜோசியம் கேட்டிருக்கேன். இப்பவே பேஸ்ட் பண்ணலாமா...ராத்திரி பதினோரு மணிக்கு மேல பேஸ்ட் பண்ணலாமா... நல்லதா நாலு வார்த்தைச் சொல்லு கிளி! இல்லாட்டா அதிரா கிட்டயும் அவங்க செக் கிட்டயும் மாடிப்பேனா? (சேச்சே... செக் ரொம்ப நல்லவங்க.. அவங்க இதில் கூட்டு சேர மாட்டாங்க!!)

  பதிலளிநீக்கு
 68. வாங்க ஏகாந்தன் ஸார்...

  //யார் பாவி இதில்! //

  பாவி என்கிற வார்த்தையை நான் உபயோகிக்கவே இல்லையே...!! இந்த வரி வாசகர்கள் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்கத்தான் நெற்றியில் ஒட்டினேன். "என்றாள் மாலின்" யும் சேர்த்திருக்கிறேன் பாருங்கள்!

  ஆம், ஓவியர்களுக்கு யாரும் மரியாதை செய்வதில்லை போலும்! கதை வித்தியாசமாய் இருந்ததால்தான் உடனே இப்படி (இரண்டாவதாய்) எழுதத் தோன்றியது.

  கணேசகுமாரனின் கதை மீண்டும் பார்த்து விட்டு அறிமுகம் தருகிறேன். என்ன பிரச்னை என்றால் வாராந்தரிகளை நான் படித்த உடனே என் அக்கா எடுத்துக் கொண்டு போய்விடுவார்!

  பதிலளிநீக்கு
 69. வாங்க ஜி எம் பி ஸார்.. அழகு என்பது உருவத்தில் அல்ல, காண்போர் மனதில் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 70. அதிரா... ஏகாந்தன் அண்ணனைக் கண்டால் இவ்வளவு பயமா!

  பதிலளிநீக்கு
 71. ///Angel said...
  ஆமா யாரது 40 வயசில் அழகு இல்லைன்னது :)) 60 மேலேயும் எங்க மியாவ் என்ன அழகு ஏன்னா தேஜஸ் என்னே கன கன கம்பீரம் :))///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹலோ மிஸ்டர்:) அது வேற கன:) இது வேற கன:) ஆக்கும்:)) ஹையோ ஜி எம் பி ஐயா எவ்ளோ அயகாச் சொல்லியிருக்கிறார் மீ பற்றி:))

  சரி அது போகட்டும்:).. நாடு போகிற சிரியஸ் ஏ புரியாமல் இருக்கிறீங்க நீங்க கர்:)).. நெ.த அவர்கள்:).. ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊ மாட்டைக் கடிச்சூஊஊஊஊ இண்டைக்கு ஸ்ரீதேவியைக் கடிச்சிட்டார்ர்:)) அப்போ ருமோறோ[இது இங்கிலீஸ்:)] ஆரூஊஊஊஊஉ நாமதானே?:) அப்போ முளையிலயே கிள்ளிடோணும்:) இல்லாட்டில் நம்மட நிலைமை என்ன ஆவுறதாம்ம்:).. நாம ஆரூஊஊஉ வருமுன் காப்போனாக்கும்..க்கும்..க்கும்:)) ஹா ஹா ஹா...:).

  பதிலளிநீக்கு
 72. https://www.vikatan.com/anandavikatan/2018-feb-28/stories/138799-short-story.html

  பதிலளிநீக்கு
 73. ஓ.. கதையின் லிங்க்குக்கு நன்றி ஏஞ்சல். படிக்க விரும்புபவர்கள் லிங்க் க்ளிக் செய்து படிக்கலாம். ஏகாந்தன் ஸார்.. அதிரா.. பானு அக்கா...

  பதிலளிநீக்கு
 74. ///அவங்க செக் கிட்டயும் மாடிப்பேனா? (சேச்சே... செக் ரொம்ப நல்லவங்க.. அவங்க இதில் கூட்டு சேர மாட்டாங்க!!)///
  ஸ்ரீராம் என் செக்:) ஐப் பார்த்து.. “நீங்க ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்” எனச் சொல்லிட்டீங்களே:) மதில்மேல் பூனைபோல இருந்தவ:) அப்பூடியே சென்னைக்குள் ஜம்ப் ஆகிட்டா கர்ர்ர்ர்:)).. எப்படியும் நாளைக்கு மோனிங் தேம்ஸ்க்கு வந்துதானே ஆகோணும் அப்போ பாத்துக்கிறேன்ன்:)..

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டிசுரேப்பு மீஈஈஈஈ.... கதை படிக்கப் போறென்.....

  பதிலளிநீக்கு
 75. https://www.vikatan.com/anandavikatan/2018-feb-28/stories/138799-short-story.html

  பதிலளிநீக்கு
 76. எனக்கு படிக்க முடியவில்லையே.. சப்ஸ்கிரைப் பண்ணு எனச் சொல்லுதே கர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 77. // எனக்கு படிக்க முடியவில்லையே.. //

  அதிரா... எனக்குப் படிக்க முடிகிறதே... முழுவதும் வருகிறதே...

  பதிலளிநீக்கு
 78. நன்றி ஸ்ரீராம்...
  எனக்கு ஓபின் ஆகுதில்லை, ஆனா அஞ்சு கொப்பி பண்ணி அனுப்பி முழுவதும் படிச்சிட்டேன்... அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீ மீளல்ல:).. மிக உயர்ந்த திறமைசாலிப் பெண்ணாகக் காட்டி முடிவில மோசமான... பிகேவியர் இருக்கும் பெண்போலவும் முடிக்கிறாரே ஆசிரியர்....

  பதிலளிநீக்கு
 79. அது மோசமான பிஹேவியர்னு சொல்ல முடியாது அதிரா . சில inferiority complex உள்ள மனுஷங்க பொதுவா தனக்கு நெருக்கமானவங்க கிட்ட சிம்பதி கிரியேட் பண்ண ரொம்ப பிரயத்தனப்படுவாங்க .அவங்க வாழ்க்கையில் உயரம் தொட்டிருந்தாலும் எதோ ஒரு முள் உறுத்தல் அது மாலினியை ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஆக்கியிருக்கு .அதனால் தனதுதவறை மறைக்க அவர் செய்த காரியங்கள் தான் இவை

  பதிலளிநீக்கு
 80. @ ஸ்ரீராம்:

  //..பாவி என்கிற வார்த்தையை நான் உபயோகிக்கவே இல்லையே...!! //

  ஆமாம். ஆனால், நான் சும்மா போட்டுப்பாக்கலாம் இல்லியா !

  பதிலளிநீக்கு
 81. ஷங்கர் பாபுவின் "ருசி" ஏதோ தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்ருசி ஊறுகாய் பாட்டில் மாதிரி குறுநாவல் போல் இருக்கிறது என்று பார்த்தால் "ஊறுகாய் போடப்பட்டிருப்பது" "ஃப்ராய்டிஸ" எழுத்துக்கள் தான்.மனித வக்கிரங்கள் அத்தனை "அறிவு ஜீவித்தனங்களிலா" புதைக்கப்பட்டிருக்கும்? விட்டால் "போடா லூஸு நான் "குவாண்டம் பற்றி" ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதி அது நோபல் பரிசுக்கும்சிபாரிசு செய்யப்பட்டது தெரியுமா? நான் தான் இந்த கரப்பாம்பூச்சி உருவத்தை ஃபோட்டோவாய் போட்டு "பெண்" எனும் கொஞ்ச நஞ்சம் இருக்கும் என் சதைப்பிடிப்பை கொச்சைப்படுத்தி விடுவார்களேஎன்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்"என்று கூட அந்த மாலினி சொல்லியிருப்பாள் போலும்.ஒரு பெண்ணின் மன ஆழத்தில் இப்படி ஒரு வக்கிரத்தை புதைப்பதற்காகவே எழுத்தாளர் அந்த பெண் பாத்திரத்தை அப்படி ஒரு சிகரத்தில் ஏற்றியிருக்கிறார்.எனக்கு என்னவோ ஆணின் வக்கிரத்துக்கு ஒரு பெண்வேடம் ஏற்றி இப்படி எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.இது ஒரு "உளவியல் கதை" என்று ஒரு போர்வையை போர்த்திக்கொண்டால் போயிற்று.இப்படி ஒரு வக்கிரத்தை மையாய் ஊற்றி கதைகள் படைப்பதில்
  ஜெயமோகன் அவர்கள் முன்னே நிற்கிறார்.அவர் நிழலில் இந்த
  ஷங்கர் பாபு.அவ்வளவு தான்.விறு விறுப்புக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விளம்பர கார்ப்பரேட்டுகள்
  டிவி களில் "சீரியல்களை" மிக மோசமான "க்ரிமினைலைசேஷன்"
  யுத்திகளை "குடும்பக்கதைகளில்" கூட தூண்டில் புழுவாக்கி
  வணிகம் செய்கிறார்களே அதைப்போன்றது தான் இதுவும்.

  =========================================ருத்ரா இ பரமசிவன்

  பதிலளிநீக்கு
 82. ஓவியம் மிக அருமையாகக் கதாநாயகியைப் படம் பிடித்துக் காட்டி உள்ளது. அவரின் தாழ்வு மனப்பான்மையே இம்மாதிரியான நடத்தைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. மற்றபடி அவர் இப்படி எல்லாம் செய்வாரா? என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் சில பெண்களின் நடத்தையைக் குறித்துச் செய்திகளில் பார்க்கும்போதும், தினசரிகளில் படிக்கும்போதும் நடக்கும், நடக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் சுந்தர் காலி செய்து போன பின்னராவது ரத்தினசாமியைத் தனியே சந்தித்து நிலைமையை விளக்கி இருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 83. துளசிதரன்: தலைப்பைப் பார்த்ததும் முதலில் அட! எங்கள் ப்ளாகிலும் தலைப்பு இப்படி வருதே என்ற வியப்பு. அதே சமயம் தெரிந்தும் விட்டது இது ஏதோ கதையில் வரும் வரிகள் இன்றைய கதம்பத்தில் உள்ளே இருக்கும் என்று. விமர்சனம் சட்டென்று புரியவில்லை...ஒரு வேளை கதையை வாசித்தால் புரியும் அல்லது மொபைலில் வாசித்ததால் இருக்குமோ?

  புதிர் பாடல் இதுவா....நல்ல பாடல். எனக்கும் அன்று ஸ்ட்ரைக் ஆகவில்லை.

  அனைத்தையும் ரசித்தேன்


  கீதா: ஸ்ரீராம் தலைப்பு இப்போதைய பத்திரைகளுக்கு இணையாக இருக்கே!!! ஹா ஹா ஹா ஹா....வாசகர்களைக் கவர்ந்திழுக்க தக்கினிக்கு!!! ஹா ஹாஹா ஹா...

  கதையை இன்னும் வாசிக்கலை...னெட்டில் கிடைக்குமோ?!! உங்கள் விமர்சனத்தை வைத்துப் பார்க்கும் போது...அவள் கொஞ்சம் டேஞ்சர் பார்ட்டி போலத் தெரியுதே!! ரொம்ப அறிவாளியான காரெக்டர் போலத் தெரியுது...சகலகலாவல்லி போலத் தெரியுது...ஆனால் இப்படியான அறிவு ஜீவிகளிடம் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் ஒரு தாழ்வுமனப்பான்மை ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு வேளை அவர்களால் தங்கள் திறமைகளை வெளியில் வெளிப்படுத்த முடியாததால் அல்லது அதற்கான அங்கீகாரம் கிடைக்காததால்...இருக்கலாம்...அவர்களுக்குத் தன் தாழ்வு மனப்பான்மையை மறைக்க மற்றவர்களை மட்டம் தட்டும் பழக்கமும் கூடவே வரும்...இது நான் பார்க்கும் ஒரு காரெக்டர்...கதையைப் படித்தால் இன்னும் புரியும் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.....

  பதிலளிநீக்கு
 84. கதாபாத்திரத்தைப் பற்றிய கணிப்பு சரியென்றால் அந்தப் படம் வெகு பொருத்தம்...ரொம்ப அழகாக பொருந்திருக்கு...

  இதோ இன்னும் வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 85. ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா? அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம்.//

  ஹ ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஆமாம் சில சமயம் இப்படி மனம் முந்திரிக்கொட்டை போல கதையை விட ஓடும்...ஆனால் முடிவும் வேறாக இருக்கும் அல்லது நாம் நினைக்கும் ஆங்கிளில் இல்லாமல் கதையில் ட்விஸ்ட் டெர்ன்ஸ் என்று வந்துவிடும்...அப்படி வரும் போது ரசிக்கவும் வைக்கும் வரிகள் கிடைக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 86. அட! ஆவியின் அட்டைப்படத்தில் நெ தவின் ரசிகை! ஹையோ டங்க் ஸ்லிப்!! நெ த க்குப் பிடித்த தமன்னாஅ...ஆனால் நெத இந்தப் படத்தை ரசித்திருப்பாரா!!!!!! ஹிஹிஹிஹி....ஸ்ரீராம் ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே குறும்பு!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 87. ​​"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... உண்மையா?" என்றாள் மாலினி. - கதையை ஷங்கர்பாபு இப்படித்தான் தொடங்கி இருக்கிறார்.

  ஒரு கதையை முதல் வரியிலேயே படிக்க வைக்கத் தேவையான தாக்குதல் இருக்க வேண்டும் என்பார் சுஜாதா. //

  ஆமா ஸ்ரீராம்....இந்த வரியைத் தலைப்பில் வாசித்ததுமே ஆஹா கதை எப்படிப் போகும் என்று படிக்கும் ஆர்வம் தோன்றிவிட்டது!!! அதாவது கெட்ட எண்ணங்களில் அல்ல...கண்டிப்பாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்குமோ என்று எண்ண வைத்துவிட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
 88. அவரிடம் அவளின் 'ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி'யைச் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறான் அவன்.)//

  ஓ! அப்படி என்றால் உளவியல் ரீதியாகச் செல்லும் கதை..உங்கள் விமர்சனத்தில் கொஞ்சம் யூகிக்க முடிந்தது என்றாலும்...முழுவதும் வாசித்துவிட்டு வரணும்...அப்போதான் தெரியும்னு நினைக்கிறேன்...

  வாசிக்க முயற்சி செய்கிறேன்...

  நிறைய கும்மி நடந்திருக்கு போல இருக்கே...வாசிக்கணுமே!!! நேரம் இருகக்ணுமே!!! நெட்டுக்கு மூடு இருக்கணுமே!! முருகா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 89. அட!! வல்லிம்மா சரியா சொல்லிட்டாங்க!!!! அந்தப் பாடல் கேட்கவே இல்லை...காணொளி மட்டும் வந்தது. என் கணினிப் பிரச்சனையா?

  சுஜாதா ஆம் பிரியா கதையைச் சரியா எடுக்கலை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது....ஆனால் வேறு படமாக இருக்குமோ என்று நினைத்து அன்று புதிரில் சொல்லலை...மற்ற தகவல்கள் எல்லாமே தெரியாது தெரிந்து கொண்டேன் ஸ்ரீராம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 90. ஶ்ரீராம்... அவள் யார் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்... சிறுவயது பிம்பங்களுடன் தன் சிநேகிதியை ஒருவன் 50களில் சந்திக்கிறான்... பேசுகிறான்... முடிவில் இது அவள் இல்லை. நான் நினைத்திருந்தவள் எங்கோ கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டாள் என்று முடிக்கும்படியான சிறுகதையே எழுதிடலாம் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
 91. ஶ்ரீராம்... அவள் யார் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்... சிறுவயது பிம்பங்களுடன் தன் சிநேகிதியை ஒருவன் 50களில் சந்திக்கிறான்... பேசுகிறான்... முடிவில் இது அவள் இல்லை. நான் நினைத்திருந்தவள் எங்கோ கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டாள் என்று முடிக்கும்படியான சிறுகதையே எழுதிடலாம் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
 92. படத்தைப் பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்று தோணியது.,

  //இப்போது அவனை தன்னைவிட்டு விலகிப்போகச் சொல்கிறாள் அவள். விலகிப்போவது என்றால் வீட்டைக் காலிசெய்துகொண்டு... திகைத்து மறுக்கும் அவனை என்னென்ன செய்கிறாள் என்பது கதை. திசை மாறிப் பயணித்தாலும் - அதுதானே சுவாரஸ்யமான கதைக்கும் தேவை? - என்ன ஆகப்போகிறது என்கிற ஆர்வம் வருகிறது//

  உங்கள் இந்த வரிகளை படித்தவுடன் படிக்க ஆர்வம் ஏற்பட்டது  ஏஞ்சல் கொடுத்த சுட்டியால் படித்தேன், ஏன் படித்தேன் என்று இருக்கிறது. கதையின் கடைசி முடிவு சொன்ன விஷயம் பயங்கரமாய் இருக்கிறது.
  இப்போது தமிழ் நாடங்கள்( தொலைக்காட்சி ) எல்லாம் பெண்கள் வஞ்சம், பழிவாங்குதல் , சவால் விடுதல் என்று இருக்கிறது. பெண் என்பவள் மென்மையானவள் என்பதே மறந்து விடும் போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 93. // இது நான் அக்டோபர் 5, 2017 இல் எழுதிய பதிவிலிருந்து..... //

  இந்த வரி முந்தைய பதிவில் இருந்திருந்தால் புரிந்திருக்கும். ]

  பதிலளிநீக்கு
 94. //இப்படி நம் மொபைலுக்கு மாலினி என்ற பெண்ணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தால் எப்படியிருக்கும்? அடுத்து என்ன செய்வோம்?.. என்னடா இது வம்பா போச்சு; ஏதாவது சிக்கலில் மாட்ட இது ஒரு சுருக்குக் கயிறோ என்று மெசேஜை டெலிட் பண்ணுவோமில்லையா?//

  //இதுதான்... இந்த ஆர்வம்தான் அல்லது என்ன இது என்கிற புருவச்சுளிப்புதான் கதைக்கான ஆர்வக்கோடு. அதிலிருந்து கதை என்ன ஆகிறது என்று படிக்கத் தோன்றுகிறது.//

  இது என்ன ஆர்வ விஷயமா, ஸ்ரீராம்?..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!