புதன், 13 ஜூன், 2018

ஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே! புதன் 180613


மஞ்சள் பூசிய பதில்கள் பற்றிய ஊசிக் குறிப்பு, பதிவின் இறுதியில் உள்ளது! 



கீதா ரெங்கன் :

பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ?!!! அதுதான் ஸ்பெஷலோ..? 

ப: ஹேமாவின் முதல் திரைத் தோற்றமே அந்தப் பாடல் காட்சிதான்! அடுத்து பாண்டவர் வனவாசம். அதற்கப்புறம் தமிழ்த்திரை உலகுக்கு டாட்டா ! 
    


கீதா சாம்பசிவம் : 

கௌதமன் சார், நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க! அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும்! 

ப: எந்தப் பாவமும் இல்லை! என் பதிலின் முதல் பாராவிலேயே பதில் இருக்கு. 

திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? // இதை ஆரம்பிச்சதே நீங்க தான்! நினைவிருக்கா? உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் "திங்க"ப் போட்டு வந்தேன். அது நினைவில் இருக்கோ? ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை! இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? 



நெ த: 

கீசா மேடம்- நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்? சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா? 

ப: நான் ஸ்டிக்குலதான் பயங்கரமா, 'பச்சக்'குனு ஓட்டிகிட்டு, அடம் பிடிக்கும், அடியேன் வார்க்கும் தோசை. தோசைக்கல்லில் ஒட்டிகிட்டா, தோசைத் திருப்பியால், அடித்துத் துவைத்து ஹதம் பண்ணி அகற்றலாம். நான் ஸ்டிக் என்றால், அதற்கும் வழி இல்லை! 
        
 பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம், நிறைய பேருக்கு அல்லது கல்யாணம், காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன? 

ப : வீட்டில் சமைக்கும் பொழுது, அர்ச்சனை நிறைய நடக்கும். கல்யாண வீடுகளில் அதற்கு சந்தர்ப்பம் வாய்க்காதோ என்னவோ! 
கல்யாண சமையல், பெரிய டீம் வொர்க். அதை வெற்றிகரமாக நடத்த, அசாத்திய பொறுமையும், திறமையும் வேண்டும். அந்த இரண்டும் உள்ள பெண்கள், சமையல் வேலையை விட அதிகம் வருமானமுள்ள வேலை செய்யப்போய் விடுவார்கள்!

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா? நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ, புத்தகத்திலோ கேட்டாலோ, படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ? என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? 

ப: மனிதர்கள் எல்லோருமே Hypochandriac தான்! எந்த அளவுக்கு என்பதில்தான் வித்தியாசம்! கல்கியின் நகைச்சுவை கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தது : " ....... அந்தப் புத்தகத்தில் பல நோய்களின் அறிகுறிகள் பற்றிப் படித்ததிலிருந்து, எனக்கு குஷ்ட நோய், பைத்தியம் தவிர மீதி எல்லாவற்றின் அறிகுறிகளும் இருந்தன என்று தோன்றிற்று." (இந்தக் கருத்து, ஆனால் வாசகங்கள் இதுதானா என்று தெரியவில்லை.)

நோய் பற்றிப் படித்தால், "இது மட்டும் நம்மை கண்டுக்காம விட்டு விட்டது ஏன்?" என்று யோசனை வந்துவிடும் !

   
அசோகன் குப்புசாமி : 


புதிர்கள் அருமை

ப: அ கு அவர்கள், மார்ச் 21 க்குப் பிறகு புதன் பதிவுகள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்!  (அல்லது கேள்வி பதில் பகுதி அறுவை; புதிர்கள் அருமை என்கிறாரோ?)

அதிரா : 

1. கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா? இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்‌ஷன் என்ன?:). 

ப: உடனே ஒர்ரி பண்ணிக்க நான் என்ன தசரதனா! ஒரு ரியாக்ஷனும் இல்லை.  நைசா அதை பிடித்திழுத்து குப்பைக்கூடையில் போட்டதை எல்லாம் நான் சொல்லமாட்டேன்! 

முதல் நரை : இனிமே யாரும் என்ன பிடுங்*** என்று கேட்க முடியாது என்ற நிம்மதி. 

கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ? அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?: 

ப: கண்ணாடி பார்க்கும் பொழுதெல்லாம் இதே சிந்தனைதான்! 


சதா மென்றுகொண்டிருக்கும் போது யோசனை வலுக்கும்! 

படகும் மலரும் ஒன்றா? 

ப: இல்லை. படகில் ஏறிப்போய், மலரைப் பறிக்கலாம். ஆனால் மலரில்?  மனதால் மட்டுமே பயணிக்க இயலும்! 

ஏஞ்சல் : 

1,மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ??

ப: ஏலக்காய் மட்டுமா! 
மசாலாப் பால் தயாரிக்க, 
பால் - 2 கப், சர்க்கரை - 1 டீஸ்பூன், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - 1/2 இன்ச், ஏலக்காய் - 1 (தட்டிக் கொள்ளவும்), பாதாம் - 4, பிஸ்தா - 6, குங்குமப்பூ - சிறிது. எல்லாம் தேவை. 

அது போல மசாலா படம் தயாரிக்க, (பால்) பணம், (சர்க்கரை) சதை உள்ள நடிகைகள், (பனங்கற்கண்டு) பல்லிளிக்கும் வில்லன், (மிளகுத்தூள்) மிரட்டுகின்ற இசை, (கிராம்பு) கிராதகக் காட்சிகள், (பாதாம்) பாதகமான பாஷை கொண்ட பாடல்கள், (பட்டை, பிஸ்தா )  பேட்டை பிஸ்தா போன்ற அடியாள் கூட்டம், (குங்குமப்பூ) குங்ஃபூ சண்டைகள் இவற்றோடு,  (ஏலக்காய்) பல படங்களின் கதைகளைத் தட்டிப் போட்டுக் கலக்கினால், வருவது மசாலாப் படம்! 

2,உங்களுக்கு மிகவும் பிடித்த விலங்கினம் எது ? பதிலில் Homo sapiens வரக்கூடாது 

ப: man கூடாது  என்றால் maan. மான்! 



பொன் விலங்கு !            
          
3,ஒரு நாள் முழுதும் நீங்க கண்ணுக்கு தெரியாம மாயமாகிட்டா என்ன செய்வீங்க ?

ப: யார் கண்ணுக்கும் தெரியமாட்டேன் என்றால், டாஸ்மாக் கடை வாசலில் கியூவில் நிக்கிறவங்க ஒவ்வொருத்தரையும் பேய் அறைவது போல அறைந்து, அவர்கள் கையில், பையில் உள்ள பணத்தைப் பிடுங்கி, அனாதை ஆஸ்ரமங்களுக்குக் கொடுத்துவிடுவேன்! 


என்னைப் பற்றி, நான் இல்லாத இடத்தில் என்ன பேசப்படுகிறது என்றறிய முயல்வேன். 

4, உங்க LKG நர்சரி அனுபவங்களில் மறக்க முடியாத தோழி :) 

ப: நர்சரி எல்லாம் போனதில்லை. ஒன்றாம் வகுப்பில் தோழியோ தோழனோ கிடையாது. இரண்டாம் கிளாசில், எதிரே உட்கார்ந்திருந்த லட்சுமி என்னை தோழமையாகப் பார்த்த ஞாபகம். 


என் காலத்தில் எல் கே ஜி ஏது! ஒண்ணாப்பில் என்னை சதா கிள்ளிய ராட்சசி சரோஜா மறக்க முடியாத வில்லி! 

5, இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ?

ப: அடை, அரிசி மாவு உப்புமா. 


அரிசி, தயிர் 

6,கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் /இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு 
வரம் கொடுத்தா எந்த கேரக்டர் ஆவீங்க ஏன் ?

கால்வின். கனவுலக சஞ்சாரம் சுவாரசியம் 


7, வீட்டில் நீங்க தலைவரா அல்லது தொண்டரா ?

ப: இரண்டுமே! 

8, வாழ்க்கையில் நீங்கள் தைரியமாக செய்த ஒரு விஷயம் ?

கேள்விகளுக்கு பதில் சொல்ல முன் வந்தது! 


9, உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ??

பிடிக்காத மூன்று பேர்களை அனுப்பிவைப்பேன்! 

10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் எது ? 

ப: சந்தேகம் என்ன! புதன்தான் !

சனி! அதுதான் சளிக்கு ரொம்ப கிட்டத்தில் இருக்கிறது! 

11, முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ? 

ப: இதுவரை நான் பங்கேற்ற ஒரே ஏரி ப்ராஜெக்ட், பெங்கலூருவில் அகரா ஏரி கிளீனிங் ப்ராஜெக்ட். மற்றது மெரீனா க்ளீனிங் ப்ராஜெக்ட். செம்பரம்பாக்கம் ஏரி சுத்தப்படுத்துவது பற்றி முகநூலில் மட்டும் ஷேர் செய்திருந்தேன். 

12, இப்போல்லாம் fusion என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ? இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ?

நமக்குப் பிடிக்காவிட்டால் என்ன! மெஜாரிட்டிக்குப் பிடிக்காதபோது தானாக ஒழியும்! 

13, ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் / புளி imli candies இவற்றில் எது சுவை அதிகம் ?  


ப: எனக்கு சிறு வயதில் புளிப்பு மிட்டாய் பிடிக்காது. 
இனிய உளவாக (சீனி மிட்டாய்கள் செட்டியார் கடையில் இருக்கையில்) புளிப்பு, கசப்பு எல்லாம் வீண்! 

14,உங்க வீட்டு டாக்டரம்மா அடிக்கடி உங்களுக்கு கொடுக்கும் ஹோம் மேட் மெடிசின் ?

உதாரணம் ..நிலவேம்பு ஜூஸ் ,சூரணம் ,மிளகு பால் இவற்றை போல .

ப: சுக்கு மிளகு திப்பிலி பொடி.

15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க :))))) ?


ப: பாத் ரூம் போகும்போதெல்லாம்! (இந்த வீட்டில் அங்கே மட்டும்தான் கண்ணாடி இருக்கு!) 
16, இதுவரைக்கும் பதில் சொல்லவே முடியாத கேள்வி ? கேட்டது யார் ?


ப: விக்கிரமாதித்தன் கதையில், வேதாளம் கேட்ட இறுதிக் கேள்வி. 
17, அப்பளம் vs பப்படம் என்ன வித்யாசம் ?


ப: தமன்னா Vs அனுஷ்கா !

முதல் மற்றும் நான்காம் எழுத்துகள்! 
18, நள பாகம் ஆண்களுக்குரியது என்கிறார்களே why ? 


ப: நளன், ஆண் என்பதால் இருக்கும்! 

ஒரே ஒரு நளன் சமையல் செஞ்சதை வச்சி எப்படி ஆண்கள்தான் பெஸ்ட் குக்ஸ் என்று முடிவுக்கு வரலாம் ?  


ப: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ! 
       


19, அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய jewels ,க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ?  


ப: கோயில்களில், ராஜாக்கள் சிலைகளைப் பார்த்ததில்லையா! 



20, பாலசந்தர் படங்களில் உங்களது favourite படம் ?  

ப: அனுபவி ராஜா அனுபவி!

அவர்கள். 

மாதவன் : 

M1) மாதத்தில் பிடித்த 'வாரம்' எது ? 

ப: முதல் வாரம். மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள்! 

M2) ஓராண்டில்(காலெண்டர் இயர்) பிடித்த 'மாதம்' என்ன ? (தமிழ், ஆங்கில வருடம்) 

ப : மார்கழி, டிசம்பர். 


M3) தமிழ் வருடம் 60ல் (பிரபவ, விபவ, சுக்ல,....) பிடித்த வருடம் எது ? 


ப : சுக்ருத. 

M4) நீங்கள் பிறந்த தமிழ் வருடம் எது ?  


ப : கர. 

வாட்ஸ் அப்: 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

உங்கள் முன்னால் கனவுக் கன்னியை இன்று அம்மாவாக திரையில் பார்க்கும் பொழுது எப்படி உணர்வீர்கள்?

ப: மனசு ரொம்ப வேதனைப்படும். 'அடடா இவங்களுக்கு இவ்வளவு வயசாயிடுச்சே' என்று!


கனவுக்கன்னியிலிருந்து ஆதர்ச அம்மாவாக பிரமோஷன் கொடுத்திருக்கிறேன்.
இரண்டணா (12 பைசா) கொடுத்து போட்டோ வாங்கி வைத்திருந்தேன் ஒரு காலத்தில்.  யார் படம் ? அது ரகசியம். 

ஜோக் புரியாதவர்களிடம் ஜோக் சொல்லி, அவர்கள் அதற்கு விளக்கம் கொடுக்கும் கொடுமையை அனுபவித்திருக்கிறீர்களா ?

ப: என்னுடைய அக்கா பையர் ஒருவர் உண்டு. ஜோக் சொல்லி முடித்தவுடன், உதாரணத்திற்கு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் ஒரு ஜோக் என்று வைத்துக்கொள்வோம். A இப்படிக் கேட்டதும், B இப்படி ஜோக்காக  பதில் சொல்கிறார் என்று ஜோக் சொல்வோம். அதற்கு அவர் சிரிக்காமல், அதுக்கு A என்ன சொன்னார் / செய்தார் என்று கேட்பார். புரிந்துகொண்டே கேட்பார் போலிருக்கு! 



ஜோக் புரியாமல் அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை விட அதை விளங்க வைக்க நாம் விளக்குவது அதனினும் கொடுமை.

நல்லா விளக்குமாறு...



*** ஊசிக் குறிப்பு: மஞ்சள் பூசிய பதில்கள் அளித்திருப்பவர், சீனியர் கே ஜி! ( கே ஜி யக்ஞராமன் ) 

நல்லது ! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! 

    ____/\____

  

54 கருத்துகள்:

  1. அட, எல்லோரும் வந்திருப்பாங்கனு பார்த்தா இன்னுமா யாரும் வரலை

    பதிலளிநீக்கு
  2. அன்பின் KGg, கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ??? ஹிஹிஹி, மேலே போட வேண்டிய கேள்விக் குறி இங்கே வந்திருக்கு!

    பதிலளிநீக்கு
  4. இன்னுமா யாரும்....

    // கீதா..//

    அதான் நான் வந்திருக்கேனே!....

    பதிலளிநீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் பார்க்கறச்சே யாருமே இல்லை. ஆனால் துரை சாரோட கருத்து என்னோடதுக்கு 2 நிமிஷம் முன்னாடி காட்டுது! முதல்லேயே ஏன் காட்டலை? கேஜிஜி சார், பதில் சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  7. நல்லா சுவாரசியமா பதில் சொல்லி இருக்கீங்க! அடுத்த வாரமும் இரண்டு பேரும் பதில் சொல்வீங்களா?

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் கீதா அக்கா. கீதா ரெங்கன் இந்த வாரம் பெர்மிஷன் போட்டிருக்கிறார். அவ்வப்போது வந்து செல்வார். காலை போட்டி இருக்காது!

    பதிலளிநீக்கு
  9. அது என்னனு தெரியலை! கமென்ட் கொடுத்தாப் போகாம எரரும் காட்டாம சும்மா "Blogger" என்ற எழுத்தையே காட்டிட்டு இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  10. மசாலா பால் / மசாலா படம்...

    அதற்கான பதிலுடன் அனைத்தும் மனதைக் கொள்ளை கொண்டன...

    பதிலளிநீக்கு
  11. முதல்லேயே ஏன் காட்டலை?...
    (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...)

    // கீதா..//

    காஃபி குடித்துக் கொண்டு
    இருந்திருக்கும்!!...

    பதிலளிநீக்கு
  12. மசாலா பாலுக்கு மசாலா சேர்க்க வேண்டாமா ?

    பதிலளிநீக்கு
  13. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  14. //யார் கண்ணுக்கும் தெரியமாட்டேன் என்றால், டாஸ்மாக் கடை வாசலில் கியூவில் நிக்கிறவங்க ஒவ்வொருத்தரையும் பேய் அறைவது போல அறைந்து, அவர்கள் கையில், பையில் உள்ள பணத்தைப் பிடுங்கி, அனாதை ஆஸ்ரமங்களுக்குக் கொடுத்துவிடுவேன்!//

    அவர்கள் குடும்பத்திற்கே கொடுத்து விடுங்கள். குடிப்பவர் பலர் வீட்டில் மனைவி, பிள்ளைகள் கூலி வேலை செய்து அரைவயிற்றுக்கு சாப்பிடுகிறார்கள், சில வேலை அதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  15. எல்லாக் கேள்வியும் எல்லா பதிலும் சூப்பர். கௌதமன் ஜி. எனக்குத் தான் கேள்வியே இல்லை.

    ஆஹ்ம் தலைக்கு டை போடலாமா கூடாதா. அடுத்த வாரம் பதில் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. //அவர்கள் குடும்பத்திற்கே கொடுத்து விடுங்கள். குடிப்பவர் பலர் வீட்டில் மனைவி, பிள்ளைகள் கூலி வேலை செய்து அரைவயிற்றுக்கு சாப்பிடுகிறார்கள், சில வேலை அதுவும் இல்லை.//

    வாவ்.... கோமதி அக்கா.... ஸூப்பர்..

    பதிலளிநீக்கு
  17. //எனக்குத் தான் கேள்வியே இல்லை.//

    கொடுத்து வைத்தவர் மா நீங்க...

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம்.

    ஆஹா.... இந்த வாரம் பல கேள்விகளுக்கு இரு வித பதில்கள்! தொடரட்டும் சுவாரஸ்யமான பதில்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாவ்.... கோமதி அக்கா.... ஸூப்பர்..

    நன்றி ஸ்ரீராம்.
    என் வீட்டில் வேலை பார்க்கும் பெண் அடிக்கடி புலம்புவது என் கணவர் வேலைக்கு வாரத்தில் இரண்டு நாள் போகிறார் , சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் கொடுக்கிறார் மீதியை குடித்து அழிக்கிறார் என்பதுதான்.

    பதிலளிநீக்கு
  20. கேள்வி பதில் அருமை. "அடிமேல் அடிவைத்தால்" என்பதுபோல் கேஜிஒய் சாரும் பிளாக்ல எழுத ஆரம்பிச்சுட்டார். ஏற்கனவே ஒரு ஸ்லாட்தானே வாரத்துல என்று குறைபட்டுக் கொண்டிருந்த கேஜிஜி சார் இப்போ என்ன நினைக்கிறாரோ.. ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  21. பல்சுவையோடு இருந்த பதிவினை ரசித்தேன். விளக்கத்தை விளக்கமாக விளங்க வைக்க விளங்க வைத்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  22. ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் கீசாக்கா இண்டைக்கும் 2ண்ட்டாஆஆஆஆஆ ஹையோ நான் ஒண்ணுமே ஜொள்ளல்ல ஜாமீஈஈஈஈஈ நேக்கு செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊஊஊ:))..

    ///ஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே!///


    என்னாதூஊஊஊஊஊஊஉ இன்று ஒரே அடல்ட் கேள்விகளோ ? ஹையோ ஆண்டவா அபச்சாரம் அபச்சாரம்...:)

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மனசே றிலாக்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அது ஏஞ்சலின் கிளவிகளாக இருக்கும்:)[ஹையோ சத்து இருங்கோ உருண்டு பிரண்டு சிரிச்சிட்டு வாறேன்ன்.. டங்கு ஸ்லிப் எல்லாம் இல்லை:))]
    .. இப்படிக்குப் புத்தி:))

    ஹா ஹா ஹா அப்பூடியா நான் ஒரு கணம் ஷாக்ட்ட்ட்ட் ஆகிட்டேன்..
    இப்படிக்கு மனசு:)).. ஹா ஹா ஹா..:))

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  24. ///மஞ்சள் பூசிய பதில்கள் //

    மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்தவர் யாரொ?:)).

    //ப: பார்க்கவும் : புதன் கேள்வி பதில் பதிவு மே 16.///
    ஆவ்வ்வ்வ் கெள அண்ணனின் நியாஆஆபக ஜக்தி பார்த்து மீ வியக்கேன்:)).. கீசாக்காவுக்கு மறதி அதிகம்:)) கர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  25. ///நெ த:

    கீசா மேடம்- நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்? சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா? ///

    ஹையோ நாட்டுக்கு ரெம்ம்ம்ப முக்கியமான கேள்வி கேட்டிருக்கிறார் எங்கள் தமிழ் புரொஃபிஸர்:))

    ///ப: நான் ஸ்டிக்குலதான் பயங்கரமா, 'பச்சக்'குனு ஓட்டிகிட்டு,///

    தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈ இந்த ரேஎஞ்சிலயே போனால் மீ கீழ்ப்பாகத்துக்குப் போயிடுவேனோ இந்த சுவீட் 16 லயே எனப் பயம்மாக்கிடக்கூஊஊஊஊஉ:))..

    அது நானும் இல்ல ஸ்டிக்கும் இல்ல.. நொன்ஸ்ரிக்... எங்க ஜொள்ளுங்கோ?:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  26. ///ப: மனிதர்கள் எல்லோருமே Hypochandriac தான்! எந்த அளவுக்கு என்பதில்தான் வித்தியாசம்! கல்கியின் நகைச்சுவை கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தது : " ....... அந்தப் புத்தகத்தில் பல நோய்களின் அறிகுறிகள் பற்றிப் படித்ததிலிருந்து, எனக்கு குஷ்ட நோய், பைத்தியம் தவிர மீதி எல்லாவற்றின் அறிகுறிகளும் இருந்தன என்று தோன்றிற்று."///

    இது நானும் எங்கோ படிச்சிருக்கிறேன்.... இது மட்டுமில்ல..

    ஒரு திருமணத்துக்குப் போனால் அதில் நாமே மணப்பெண்ணாக மணமகனாக.. அப்படியே இறப்பு வீடு போனால் அதில் நாமே இறந்திருப்பவராக.. பேச்சுப் பார்க்கப் போனால் அங்கு நாமே மேடையில் பேசுபவராக.. இப்படியும்கூட மனம் கற்பனை பண்ணுமெல்லோ:))).. இதிலிருந்து உங்களுக்கு என்ன புரியுது கெள அண்ணன்?.... மனதுக்கு வேறு வேலையே கிடையாது எனப் புரியுதோ?:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  27. ///அசோகன் குப்புசாமி :


    புதிர்கள் அருமை///

    ஹா ஹா ஹா பாவம் அவர் எங்கும் போக மாட்டார்ர் ஆனா எங்கள் புளொக் மட்டும் வருவார்ர்.. அதனால அவரை விட்டிடுவோம்:))

    பதிலளிநீக்கு
  28. ///இனிமே யாரும் என்ன பிடுங்*** என்று கேட்க முடியாது என்ற நிம்மதி. ///

    ஹா ஹா ஹா...

    //ப: கண்ணாடி பார்க்கும் பொழுதெல்லாம் இதே சிந்தனைதான்! //
    ஹையோ ஒரு கிளவிதானே சே..சே... கேள்விதானே கேட்டேன்ன்???.. அதுக்குப் போய் இப்பூடி மிரட்டலாமோ?:)).. இந்தப் படத்தைக் காட்டிக் காட்டியே இனி நிறைய வீட்டில குழந்தைகளைச் சாப்பிடப்பண்ணிப்போடுவினம்:)).. ஹா ஹா ஹா ஹையோ ஜத்தியமா இண்டைக்கு எனக்கென்னமோ ஆச்சூஊஊஊஊ அடிதான் வாங்கப்போறேன்ன்.. என் செக்கும் இன்று பெரும்பாலும் வருவது கஸ்டம் என்றிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதாவும் இல்லையே.. மீ டனியா மாட்டிங்ங்ங்ங்:)).. இருப்பினும் ஜமாளிச்சிடுவோ பூஸோ கொக்கோ?:))

    கெள அண்ணன் இந்தப் பூஸோ கொக்கோ?:) எப்படி வந்ததெனத் தெரியுமோ உங்களுக்கு?:)

    பதிலளிநீக்கு
  29. ///படகும் மலரும் ஒன்றா?

    ப: இல்லை. படகில் ஏறிப்போய், மலரைப் பறிக்கலாம். ஆனால் மலரில்? மனதால் மட்டுமே பயணிக்க இயலும்!///

    ஆவ்வ்வ்வ் மறக்காமல் இணைச்சிட்டார்ர்ர்ர்.. மொத்தத்தில மலரைப் பறிக்கும் முடிவோடதான் இருக்கிறீங்க கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  30. //ப: ஏலக்காய் மட்டுமா!
    மசாலாப் பால் தயாரிக்க,///

    ஹையோ ஹையோ ரெண்டு காது கேய்க்காதவிங்க கதைச்சதைப்போல இருக்கே.. ஏற்கனவே ஜொள்ளிட்டேன் இதை இருந்தாலும் ஜொள்றேன்ன்..

    இருவர் காது கேளாதாம்.. ஒருவர் குளிக்கப் போனாராம்.

    ம: அண்ண எங்க குளிக்கவோ போறீங்க?
    ஒ: இல்ல தம்பி குளிக்கப் போறேன்..
    ம: ஆஆஆஆஆ நான் நினைச்சன் நீங்க குளிக்கப் போறீங்களாக்குமெண்டு..

    ஹா ஹா ஹா ஹையொ ஹையோ

    பதிலளிநீக்கு
  31. என் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்த இரண்டு ஹெட் டீச்சர்ஸுக்கும் நன்றீஸ் :)

    இன்னிக்கு எனக்கு பிஸி டே ஆனா மாலை வந்து இன்னும் எனது கேள்வியறிவை வளர்த்த முயல்கிறேன் :)

    மிகவும் ரசித்தவை மான் ,
    லட்சுமி சரோஜா :))))))))

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. ///ப: யார் கண்ணுக்கும் தெரியமாட்டேன் என்றால், டாஸ்மாக் கடை வாசலில் கியூவில் நிக்கிறவங்க ஒவ்வொருத்தரையும் பேய் அறைவது போல அறைந்து, அவர்கள் கையில், பையில் உள்ள பணத்தைப் பிடுங்கி, அனாதை ஆஸ்ரமங்களுக்குக் கொடுத்துவிடுவேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைவிட, அந்த ஷொப்ஸ் களை கன்னாபின்னா லெஃப்டூ ரைட்டூ என அடிச்சு நொருக்கலாமெல்லோ... தோலுக்கு மட்டும் மருந்து பூசினால் நோய் குணமாகாது:)).. உள்ளே என்ன காயம் எனக் கண்டுபிடிச்சு அடிக்கு மருந்து கொடுத்தால்தான் நோய் போகும்:)) அப்படித்தானே இதுவும்:)).

    //என்னைப் பற்றி, நான் இல்லாத இடத்தில் என்ன பேசப்படுகிறது என்றறிய முயல்வேன். ///

    ஹா ஹா ஹா கவுண்டமணி அங்கிள்:)) தான் இறந்தால் மனைவி பிள்ளைகள் என்ன பண்ணுவார்கள் என இறந்தவரைப்போல நடிச்சுப் பார்த்த கொமெடி நினைவுக்கு வந்துது:))

    பதிலளிநீக்கு
  34. //8, வாழ்க்கையில் நீங்கள் தைரியமாக செய்த ஒரு விஷயம் ?

    கேள்விகளுக்கு பதில் சொல்ல முன் வந்தது! //

    ஓ இங்கு 2 வது ஆசிரியரின் பதில் மட்டும்தேன் இருக்கு:))

    பதிலளிநீக்கு
  35. ///ஒரே ஒரு நளன் சமையல் செஞ்சதை வச்சி எப்படி ஆண்கள்தான் பெஸ்ட் குக்ஸ் என்று முடிவுக்கு வரலாம் ?

    ப: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ! //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன் அது சோற்றுக்கு மட்டும்தேன் பொருந்தும்:))..

    இப்போ எங்கள் புளொக்கில் அசோகன் குப்புசாமி அவர்களின் கொமெண்ட்டை மட்டும் வச்சு.. எங்கள் புளொக்கில் கொமெண்ட் போடுவோர் எல்லோருமே இப்படித்தான் எனும் முடிவுக்கு வரலாமோ?:)))

    எனக்கு இதுக்கு நீதீஈஈஈஈஈ வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. இல்லை எனில் தேம்ஸ் கரையில் டீக்குளிப்பேன்ன்ன்ன் அஞ்சுவை மறக்காமல் வலக்கையால ஸ்ரோங்காப் பிடிச்சுக் கொண்டுதான்:)) இல்லாட்டில் ஓடிடுவா:))

    பதிலளிநீக்கு
  36. உங்களுக்கு நடப்பது ... ஜிம் போவது சைக்கிள் ஓடுவது பிடிக்குமோ இல்ல... வீட்டிலிருந்து அரட்டை அடித்து ரீவி பார்ப்பது பிடிக்குமோ?:) [ஒரு சொல் பதில்களுக்குத் தடா:)]

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகள் அதற்கேற்ற இரு பதில்கள் வழக்கத்தை விட மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.சகோதர்கள் இருவருமே அருமையாக பதிலளித்து இருந்தார்கள். தலைப்பையும், கேன்வி பதில்களையும் மிகவே ரசித்தேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களும், சகோதரர் கே. ஜி கெளதமன் அவர்களும் என் பதிவுக்கு வந்து விளக்கமாக கருத்துரைகள் இட்டமைக்கு மிகவும் நன்றிகள்.. எனக்குதான் இன்றைக்கு பதிலளிக்க தாமதமாகிறது. இங்கும் இப்போதுதான் தாமதமாக வந்துள்ளேன். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. ///*** ஊசிக் குறிப்பு: ////
    ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் இது என் கொப்பி வலதாக்கும்ம்ம்ம் நோஓஓ விட மாட்டேன்ன்ன்ன்ன் இப்பவே போகிறேன் காண்ட் கோர்ட்டுக்கு .... நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:)))))))

    பதிலளிநீக்கு
  39. // அஞ்சுவை மறக்காமல் வலக்கையால ஸ்ரோங்காப் பிடிச்சுக் கொண்டுதான்:)) இல்லாட்டில் ஓடிடுவா:))//

    கர்ர்ர்ர்ர் :) இதுவா மெடிடேஷன் புத்தக்கா சொல்லித்தந்து உங்களுக்கு :)

    பதிலளிநீக்கு
  40. @கௌதமன் சார் அந்த செம்பரம்பாக்கம் ஏரி பற்றி நம்ம ஏரியால கூட போஸ்ட் போட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  41. இருங்க கேள்விகளுடன் வரேன்ன்ன்ன் :)

    பதிலளிநீக்கு
  42. 1,உங்களுக்கு மிகவும் பிடித்த அட்வெர்டைஸ்மென்ட் தொலைக்காட்சியில் ?
    2,இந்த வாரம் நீங்கள் பார்த்த அழகான ஒன்று ?
    3, சிலர் குழந்தைகளை கிள்ளி கொஞ்சுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து ?
    4,அடிக்கடி முணுமுணுக்கும் ஒரு பழைய பாடல்மற்றும் ஒரு புது பாடல் ?
    5,விலங்குகள் பேசினால் ? :) அதில் எந்த விலங்கு பேசினால் நன்றாக இருக்கும் :?
    6,இது வரை இந்த விஷயத்துக்கு யாருமே app கண்டுபிடிக்கலையென்று நீங்கள் நினைப்பது ?
    7,உங்களை மியூசியத்தில் ஓர் இரவு முழுதும் தனியே தங்க வைத்தால் என்ன செய்வீங்க ??
    8,புதிதாய் கற்க விரும்பும் வெளி நாட்டு மொழி ?
    9,சிறு வயதில் பப்ளிக் டெலிபோன் பூத்தில் காயின்ஸ் போட்டு தெரியாத நம்பருக்கு ராங் கால் செய்த அனுபவம் உண்டா ?
    அதன் விளைவுகளையும் கூறவும் .

    10,எரிச்சலூட்டும் ஒலி ?
    (எனக்கு செருப்பை தேச்சு பராக் பரக்னு நடந்தா பிடிக்காது )
    11,உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நல்ல ஒரு கெட்ட பழக்கம் குணம் ?
    12, டிக்கெட் வாங்காம பஸ்ஸில் பிரயாணம் செய்த அனுபவம் உண்டா ?
    13,அடிக்கடி misspell செய்யும் ஆங்கில /தமிழ் வார்த்தை ?
    14,உங்களிடம் இருக்கும் மிகவும் வயதான பொருள் ?
    15,புத்தகம் அல்லது பொருட்கள் கடன் வாங்கி திருப்பி தர்லைன்னா எப்படி அதை மீண்டும் பெறுவீர்கள் ?
    16,நீங்கள் சமீபத்தில் ஒட்டுக்கேட்ட வித்யாசமான சம்பாஷணை ?
    17,மணிக்கணக்காக நீங்கள் பேசக்கூடிய ஒரு topic ?
    18,கே ஜி யக்ஞராமன் சார் :) இப்போ அந்த வில்லி சரோஜா உங்க முன் வந்தா என்ன செய்வீங்க ??
    19,மந்தரை இலையில் கட்டிய மிக்ஸர் /பிளாஸ்டிக் பாக்கெட் மிக்ஸர் ..குறைந்தது மூன்று வித்யாசம் கூறவும் ?
    20, சின்ன சின்ன விஷயங்கள் சந்தோஷத்தை தரும் அப்படி இந்த வாரம் உங்களை ஹாப்பியாக்கிய குட்டி விஷயங்கள் ?



    பதிலளிநீக்கு
  43. //14,உங்களிடம் இருக்கும் மிகவும் வயதான பொருள் ?//

    ஹலோ மிஸ்டர் இதிலென்ன டவுட்டூஊஊஊஊ? அது [அவரே] கெள அண்ணனேதான்:).. ஹா ஹா ஹா.

    ஏடாகூடமாக ஏதும் கேட்டிடாதீங்க:) பிறகு அவர் திருப்பி அஞ்சு அதிராவிடம் ஒரு கொஸ்ஸன் என துவக்கை நம் பக்கம் நீட்டிடப்போறார்ர்.. என்னைக் கேட்டால் இப்போதைக்கு என்னிடம் இருக்கும் வயதான பொருள்.. அஞ்சுதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  44. //இப்போதைக்கு என்னிடம் இருக்கும் வயதான பொருள்.. அஞ்சுதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))//

    ஹலோ மியாவ் உங்களிடம் ஒரு அதாவது one year ஓல்ட் நாந்தேன் ஆனா என்னிடம் இருக்கும் 61 வயதான பொருள் நீங்க

    பதிலளிநீக்கு
  45. அ(ஞ்)ஞானி அதிரா - ஏஞ்சலின் ஒருவேளை கேள்விகளுக்குப் பிறந்திருப்பாரோ? எத்தனை எத்தனை கேள்விகள் அவரிடமிருந்து வருகிறது.

    ஏஞ்சலின் - மந்தரை - மண்+தரை = மந்தரை. நீங்கள் சொல்ல எண்ணியது மந்தாரை. அதுல அல்வா தானே கொடுப்பாங்க. மிக்சரும் அதுலயா கொடுப்பாங்க? எனக்குத் தெரிந்து (70கள்ல) நெல்லைல, இலைல அல்வாவும், நியூஸ் பேப்பர்ல மிக்சரும் தருவாங்க. இப்போல்லாம் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவதைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. அதிலும் ஹோட்டல்களில் சாம்பார், சட்னிக்கு பிளாஸ்டிக் பை (சிறியது) உபயோகப்படுத்துகிறார்கள். கொடுமை.

    பதிலளிநீக்கு
  46. //அதுல அல்வா தானே கொடுப்பாங்க. மிக்சரும் அதுலயா கொடுப்பாங்க? //

    நெல்லை... மதுரையில் பிரேமாவிலாஸ் கடையில் சூடான அல்வாவின் மேல் மிக்ஸர் தூவித் தருவார்கள்.

    பதிலளிநீக்கு
  47. மிக்ஸர் அல்லது காராபூந்தி.

    பதிலளிநீக்கு
  48. நெ.தமிழன்..
    இதிலிருந்து என்னா புரியுது ? அஞ்சுவுக்கு ராமாயணம் தெரியாது:).. மந்தரை ராமாயணக் கரெக்டர் ஆச்சே.. பார்த்தீங்களோ இப்பவாவது ஒத்துக் கொள்ளுங்கோ அதிராவுக்கு டமில்ல டி என:)).

    நாங்க இப்பவும் இண்டியன் ஸ்ரி ஈஈட் ஃபூட் பார்ப்பொம்.. அதில் பிரியாணி கூட நியூஸ் பேப்பரில் போட்டு ஸ்பூன் வச்சுக் குடுக்கினம் அங்கு நின்ற படியே சாப்பிட.

    இன்னொரு கொடுமை பரிசில் தமிழ்க்கடையில் ரீ ரேகெவே கேட்டால் சுடச்சுட பிளாஸ்ரிக் பாக் இல் கட்டித்தந்தார்கள்.. அதை எப்படிக் குடிப்பது என்ன பண்ணுவது இது தகுமாஅ இது அடுக்குமா.. ஆஆஆஆஆஆ எனக்கொரு ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  49. நெல்லைத்தமிழன் எனக்கு ஹே பீவர் .அதனால் ஆங்கானே ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய வரும் (இல்லன்னா மட்டும் மிஸ்டேக் போடாத ஆளான்னு சிரிக்கறீங்க கேக்குதே :)
    அதை நேற்றே கவனிச்சேன் டிலீட் பண்ணா காட்டும்னு விட்டுட்டேன் அது ஊரில் பொட்டல கடைகளில் மூணு இலையை பூந்துடைப்ப குச்சியால் தச்சி வைப்பாங்க யா got it .தையல் இல்லை னு சொல்வாங்க ..அந்த வாசனை செமையா இருக்கும் மிக்ஸரோட கலந்து

    பதிலளிநீக்கு
  50. //நெ.த. said...
    அ(ஞ்)ஞானி அதிரா - ஏஞ்சலின் ஒருவேளை கேள்விகளுக்குப் பிறந்திருப்பாரோ? எத்தனை எத்தனை கேள்விகள் அவரிடமிருந்து வருகிறது.//

    ஹாஹா :) நியூ ஆசிரியர் வேறே வந்திருக்கார் கேள்வியால் திணறடிக்கணுமே :)

    இன்னொன்று நெல்லைத்தமிழன் .கேள்வியால் ஞானம் வளரும் .இன்னும் நிறையா தோணிச்சி ரிசர்வ் பண்ணி வச்சிருக்கேன் :)
    என் பொண்ணு கேள்வியில் 16 அடி பாய்வா :)

    பதிலளிநீக்கு
  51. ஹலோவ் மியாவ் என் ப்ரோபைலை பாருங்க பாவம் மீ கண்ணாடி போட்டு திரிறேன் :) ஹே பீவர் .மன்னிச்சி விடணும் மெடிடேஷன் மியாவ்

    பதிலளிநீக்கு
  52. துளசி: ஸ்வாரஸ்யமாகத்தான் செல்கிறது புதன் கேள்வி பதில்கள். ஏஞ்சல் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். நான் ஆசிரியராக இருந்தும் கேள்விகள் கேட்கத் தெரியவில்லை. ஏனென்றால் இங்கும் ஆசிரியர்கள் பதில் சொல்வதால் இருக்கலாம். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

    கீதா: ஏஞ்சல் ரூம் போட்டு யோசிப்பீங்களோ ஹா ஹா ஹா ஹா ஹா....ஹப்பா எம்புட்டு கேள்விகள்.!!!! வழக்கம் போல் பதில்கள் ஸ்வாரஸ்யம் என்றால் கும்மியும் செம....அடுத்த வாரத்திலிருந்து புகுந்துருவோம்ல....இந்த புதனும் கூட ரொம்ப முடியலை...ஹே மா பற்றி தெரிந்து கொண்டேன்...கௌ அண்ணா...ஆ மணி ஆயிருச்சு எபி ல இன்னிக்கு ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊ சொல்லணும்...போறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!