Thursday, September 8, 2011

ஜே கே -19 உணர்வுகள்.

                              
"....ஒரு சிறு அவமதிப்பும் நம்மை சினம் கொள்ளச் செய்து விடுகிறது. யாராவது நம்மைப் புகழ்ந்தால் கர்வம் தலைக்கேறி விடுகிறது. எதிராளி பாராட்டப்படும்போது இனம் தெரியாத பொறாமை கொண்டு விடுகிறோம்.
      
சில உணர்வுகள் இனிமையானவை. அவற்றை விரும்புகிறோம். 

சில உணர்வுகள் விரும்பத் தகாதவை. அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்கிறோம். எனினும் எது எளிதானது எது கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படியே தெரிந்து கொண்டாலும் அவற்றின் தாக்கத்தை எளிதில் உதற முடிவதில்லை.

காரணம் பழக்கம்தான். அது எல்லாவற்றிலும் ஒரு கிரமத்தை உண்டு பண்ணி விடுகிறது. நேற்று மாதிரி இன்றும், இன்று மாதிரி நாளையும் என்று ஒரே மாதிரி பார்வையை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது.

நீங்கள் உண்மையில் எப்படி இருப்பீர்களோ அபபடி இருங்கள்.

எதையும் உள்ளபடிப் பாருங்கள்.
      
ஒரு குறிப்பிட்ட கணத்தில் அலுத்துப் போனதாகவோ, பொறாமை வசப்பட்டதாகவோ, கற்பனை செய்து கொள்ளுங்கள். வலி தரக்கூடிய உணர்வுகள் இவை. நீங்கள் இவற்றை விரும்ப மாட்டீர்கள். எனவே, தவிர்க்க முயல்வீர்கள். இது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கும், எப்படி இருக்க விரும்புகிறோம் என்பதற்கும் இடையில் ஒரு பேதத்தை, சச்சரவை ஏற்படுத்துகிறது. பொறாமைக்கும், பொறாமை அற்ற நிலைக்கும், சலிப்பிற்கும் உத்வேகத்துக்கும் இடையிலான பேதம்!
      
இதன் விளைவாக நாம் பொறாமையிலே உழல்வதால் நம் மீதே நமக்கு வெறுப்பு வந்து விடுகிறது. இதே பொறாமையை ஒரு சாத்வீகத்துடனும், சம புத்தியோடும் கவனித்தால் காரணங்கள் புலப்படும். பிறகு அபிப்ராய பேதம் இருக்காது.

பொறாமை என்றில்லை. கோபம், வெறுப்பு, சலிப்பு, பயன் போன்ற எல்லாவற்றிற்கும் வேறு வடிவம் கொடுத்துப் பாருங்கள். அது ஆக்கத் திறன் கொண்டதாகி விடும்.
     
முழுமையான உணர்நிலை மட்டுமே எப்போதும் பயனளிக்கக் கூடியது.
                

13 comments:

மஞ்சுபாஷிணி said...

இன்றைய நாளே மிக அழகாய் விடிந்தது போல் இருக்கிறது ஜே க்ருஷ்ணமூர்த்தி உணர்வுகளாக இங்க தரப்பட்டுள்ள மிக அருமையான இந்த பகிர்வை படிக்கும்போது...

அன்பு நன்றிகள் ஸ்ரீராம் இன்றைய நாளை நல்லவிதமாக புலர வைத்த அருமையான பகிர்வுக்கு.

தமிழ் உதயம் said...

தேவையற்றதை நீக்க சொல்கிறார். நலம் பெற சொல்கிறார். சிறப்பான பகிர்வு.

ஜீவி said...

//இது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கும், எப்படி இருக்க விரும்புகிறோம் என்பதற்கும் இடையில்...//

இரண்டிற்கும் வித்தியாயம் காணும் அளவுக்கு, மூன்றாவது மனிதனாக நம்மை நாமே பார்க்கும் பார்வை சித்திக்க...

வெறுமனே படித்துக் கொண்டு போகும் வரிகளாகத் தெரியவில்லை...

suryajeeva said...

கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்க்கு தக.. வள்ளுவனை காப்பி அடிக்க வேண்டியதாக போய் விட்டது பின்னூட்டம் இட..

middleclassmadhavi said...

நல்ல அறிவுரைகள்! நன்றி

ராமலக்ஷ்மி said...

/அது ஆக்கத் திறன் கொண்டதாகி விடும்./

இது சிறப்பு.

நல்ல பகிர்வு. தொடருங்கள்.

அமைதிச்சாரல் said...

ரொம்பவும் நல்ல பயனுள்ள தொகுப்பு.

பத்மநாபன் said...

எளிமையும் இனிமையுமான பதிவு...ஆக்கத்திறனை மேம்படுத்துதலே சீரும் சிறப்பும் மிக்க வழி என்பதை ஜே.கே அழகாக வலியுறுத்துகிறார்...

shanmugavel said...

நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.இப்போதும் சுகம்.

meenakshi said...

மிகவும் அருமையான பதிவு.

அப்பாதுரை said...

உனகென்ன மேலே நின்றாய்...

Jawahar said...

//"....ஒரு சிறு அவமதிப்பும் நம்மை சினம் கொள்ளச் செய்து விடுகிறது. யாராவது நம்மைப் புகழ்ந்தால் கர்வம் தலைக்கேறி விடுகிறது. எதிராளி பாராட்டப்படும்போது இனம் தெரியாத பொறாமை கொண்டு விடுகிறோம்.//

பல சமயங்களில் நான் ஜே.கே இடமிருந்து வேறுபடுகிறேன். அவமதிப்பு நம்மை ஏமாற்றம் கொள்ளச் செய்யும். பாராட்டு நம்மை சந்தோஷப் படுத்தும். ஆத்திரமும் கர்வமும் வந்தால் நம்மிடம் தப்பு என்று அர்த்தம்

http://kgjawarlal.wordpress.com

HVL said...

இது வரை அவர் புத்தகங்களைத் தேடி படித்ததில்லை. இன்று நூலகம் செல்லும் போது தேடிப் பார்க்க வேண்டும்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!