புதன், 21 செப்டம்பர், 2011

உள் பெட்டியிலிருந்து ... 9 2011

                       

தத்துப்பித்துவம்...


    
சிறுவயதில்

பென்சில் உபயோகித்த நாம்

இப்போது பேனா

உபயோகிக்கிறோம்...

சிறுவயதில்(ன்)

தவறுகளை

அழிப்பது எளிது...
----------------------------------------
                 
நம்பிக் கெட்டவர் எவரையா? 

ஒருவனை நம்பினால் விளைவு எதுவாயினும் கடைசி வரை நம்புங்கள். கடைசியில் ஒன்று, உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் அல்லது ஒரு நல்ல பாடம் கிடைக்கும்!

---------------------------------------

அறிவுடைமை
     
ஒரு பிசினஸ்மேன் தன்னுடைய மனைவிக்கு ஒரு விலையுயர்ந்த வைர அட்டிகையைப் பரிசாக அளித்தான். அவன் மனைவி அப்புறம் ஆறு மாதத்துக்கு அவனுடன் பேசவில்லை.

ஏன்?

அதுதானே ஒப்பந்தமே...!

------------------------------------------

நட்பின் கோபம்: அன்பின் முகவரி

இனி உன்னுடன் பேசவே மாட்டேன் என்று கோபமாகச் சொல்லிச் சென்ற நண்பன், அவ்வப்போது வந்து சொல்லி விட்டுப் போகிறான்: 

"இன்னும் கோபமாகத்தான் இருக்கிறேன்"

--------------------------------------

என்ன வித்தியாசம்? 

"உனக்கு நீச்சல் தெரியுமா?"

"தெரியாது"

"உன்னை விட நாய் தேவலாம். நாய் கூட நீந்தும்"
   
"சரி, உனக்கு நீச்சல் தெரியுமா?

"தெரியும்"

"உனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?"

-----------------------------------------------

ஐயோ பத்திகிச்சு ...!

காதலில் விழுந்த பெண், காதலனை தந்தைக்கு அறிமுகப் படுத்த எண்ணி, மூன்று பேரை அழைத்துச் சென்று தந்தையைச் சந்திக்க வைத்தாள். அவர்கள் சென்றதும் இதில் யாரை அவள் விரும்புகிறாள் என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்டாள். 


தந்தை சொன்னார்: 

"அந்த ரெண்டாவதா இருந்தானே அவன்தானே..."

ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த பெண் கேட்டாள் "எப்படி கரெக்டாக் கண்டு பிடிச்சீங்க...?"

"சிம்பிள்... மூன்று பேர்ல அவனைப் பார்த்தாத்தான் எனக்கு அதிகமா பத்திகிட்டு வந்தது.."
    
-------------------------------------------

இதெல்லாம் சகஜமப்பா...

புதிதாய்த் திருமணம் ஆன பெண் தன் அம்மாவிடம் தொலைபேசியில்,

"அம்மா... இன்னிக்கி எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை ஆயிடிச்சிம்மா..."

"கண்மணி... புதுசா கல்யாணம் ஆனவங்க நடுல சண்டை சகஜம்தான் கண்ணம்மா... கவலைப் படாதே..."

"அது சரி, புரியுதும்மா...  பாடியை என்ன செய்ய...?"
    
---------------------------------------------
                          

24 கருத்துகள்:

  1. சிறுவயதில்(ன்)

    தவறுகளை

    அழிப்பது எளிது...//

    மனதைக்கவர்ந்தது.அனைத்தும்தான்.

    பதிலளிநீக்கு
  2. //சிறுவயதில்(ன்) தவறுகளை
    அழிப்பது எளிது...//

    நல்ல பாயின்ட்..

    //நம்பிக் கெட்டவர் எவரையா? //
    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்ப(து) இழுக்கு

    இதனை இவனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்

    //அறிவுடைமை//
    எங்கிட்ட அறிவு இருக்கு..
    அந்தளவுக்கு டப்பு லேதையா.. டப்பு லேது..

    //என்ன வித்தியாசம்? //
    ரெண்டாவது படத்தையும் கொடுத்திருந்தா.. ஆறு வித்தியாசம் சொல்லி இருப்பேனே..

    //ஐயோ பத்திகிச்சு ...!//
    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

    //அப்போ அவனுடைய குழந்தைகள்? மீண்டும் டென்ஷன் ... //
    எதுக்கு லிஃப்ட் கொடுக்கோணும்.. ?
    டெஸ்ட் எடுக்கோணும்.. ?
    டென்ஷனா இருக்கோணும்.. ?

    நா எல்லாத்தையும் படிச்சிட்டு கமெண்டு போட்டுடேனாக்கும், கணம் கோர்ட்டார் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. மிக நகைச் சுவையாக உள்ளது . வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் ரசிச்சுப் படிச்சுட்டே வந்தேன், ஆனா கடசி துணுக்... நல்லால்ல.. ‘எங்கள்’-ல் இந்த மாதிரி வந்ததில்லையேனு தோணுச்சு.

    பதிலளிநீக்கு
  5. கடைசி துணுக்கைத்தவிர மற்ற‌ அனைத்துமே சுவாரஸ்யமாக இருந்தது, முக்கியமாய், பென்சிலையும் பேனாவையும் ஒப்பிட்டு. சிறு வயதில் அழிக்க முடிந்த தவறுகள், வளர்ந்த நிலையில் செய்யும்போது அழிக்க முடியாததாகிறது என்கிற‌ கருத்து அருமை!!

    பதிலளிநீக்கு
  6. ஒன்றைத் தவிர, மற்றவை அருமை.
    தத்துபித்துவம் - உங்க அனுமதியோட யூஸ் பண்ணிக்கலாமா?
    நம்பிக்கையைப் பத்தின கருத்து உண்மை. அரைகுறை நம்பிக்கை ஆபத்து.

    பதிலளிநீக்கு
  7. ஒன்றைத் தவிர, மற்றவை அருமை.
    தத்துபித்துவம் - உங்க அனுமதியோட யூஸ் பண்ணிக்கலாமா?
    நம்பிக்கையைப் பத்தின கருத்து உண்மை. அரைகுறை நம்பிக்கை ஆபத்து.

    பதிலளிநீக்கு
  8. வாசகர்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடைசி துணுக்கை அகற்றிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  9. ஒருவனை நம்பினால் விளைவு எதுவாயினும் கடைசி வரை நம்புங்கள். கடைசியில் ஒன்று, உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் அல்லது ஒரு நல்ல பாடம் கிடைக்கும்!


    சரியாதானே சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  10. //சிறுவயதில்
    தவறுகளை
    அழிப்பது எளிது...//

    இது அருமை.

    //ஐயோ பத்திகிச்சு ...!//

    இது சூப்பர்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமை. . .சகா சிறு வயதில் செய்யும் தவறுகள் மூலமே நாம் அனேக விஷயங்களை கற்றுக்கொள்கின்றோம். . .

    பதிலளிநீக்கு
  12. நன்றி suryajeeva.
    நன்றி shanmugavel.
    நன்றி தமிழ் உதயம்.
    மிக நன்றி மாதவன்.
    நன்றி பத்மநாபன்.
    நன்றி கொவைகவி வேதா இலங்காதிலகம்.
    நன்றி ஹுஸைனம்மா.
    நன்றி மனோ சாமிநாதன்.(உங்கள் இருவரின் கருத்துரைக்கேற்ப கடைசித் துணுக்கு நீக்கப் பட்டது என்பதை ஏற்கெனவே தெரிவித்தோம்)
    எந்த ஒன்றைத் தவிர அப்பாதுரை? தத்துபித்துவம் தாராளமா யூஸ் பண்ணிக்கோங்க. உங்களுக்கில்லாததா...எங்களுக்கே 'வந்ததுதானே' நன்றி.
    நன்றி Lakshmi.
    நன்றி RAMVI.
    நன்றி பிரணவன்.
    நன்றி வைரை சதிஷ்.

    பதிலளிநீக்கு
  13. எல்லாமே சூப்பர் எனினும் எனக்கு நட்பின் கோபம் (!) ரொம்பப் பிடித்திருந்தது!

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்.பென்சிலோடயே இருந்திருக்கலாமோ.!

    எல்லா துணுக் விஷயங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  15. நாய்- நீச்சல் படித்து நன்றாகச் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி middleclassmadhavi
    நன்றி வல்லிசிம்ஹன்.
    நன்றி geetha santhanam.

    பதிலளிநீக்கு
  17. எல்லாமே நன்றாக இருக்கிறது. நட்பின் கோபம் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. எல்லாம் நல்லா இருக்கு!
    லேட்டா வந்ததால அந்தக் கடைசி வரி என்னென்னு தெரியலை. மண்டை வெடிச்சுடும் போல இருக்கு சார்! :-))

    பதிலளிநீக்கு
  19. நன்றி meenakshi, RVS

    அதுக்குதான் அவ்வப்போது வந்து படிச்சிடணும்கறது..!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!