செவ்வாய், 13 செப்டம்பர், 2011

3 3 3 :: 16 X 3 X 3 = 144.




முன்னுரை மூன்று..!!!

தொடர்பதிவிற்கு அழைத்த தமிழ் உதயம் ரமேஷுக்கு நன்றி.

முதலில் இதைத் தொடங்கியது யாராயிருக்கும்?

மூன்று, மூன்று, மூன்று என்பதால் எங்கள் ஆசிரியர்களில் மூன்று பேரை சீட்டு குலுக்கிப் போட்டு மூன்று பேரும் மூன்று மூன்று பதில்கள் சொல்லியிருக்கோம்!

இனி தொடர் பதிவு...

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
  
அ) மழைச்சாரல், மனதுக்குப் பிடித்த இசை, அமைதி.  
ஆ) சந்தோஷத்தில் தன்னிறைவு, சுற்றியிருக்கும் மக்கள், நாமும் நாம் சார்ந்திருக்கும் ஊர், நாடு உட்பட உலகம் ஒரு உயர் நிலையை அடைய வேண்டும்.
இ) கர்நாடக இசை. நல்ல சிறுகதை, புதுக் கவிதை அல்லாத நல்ல பழைய புரியக் கூடிய செய்யுள்


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.   
அ) கோபம், மத, ஜாதி அரசியல், போலித்தனம்.
ஆ) மக்களிடையே வேறுபாடு, ஜாதி காரணமாக தகுதி இருந்தும் மறுக்கப்படும் வசதிகள், நம் விருப்பு வெறுப்புகளை அடுத்தவர் மீது திணித்தல்.
இ) அளவுக்கு மீறிய திரைப்பட அல்லது திரை இசை ஈடுபாடு
வாயில் ஈ மொய்க்க தெருவில் கிடக்கும் அழுக்கு நபர்.
மோட்டார் சைக்கிளில் பயங்கர வேகத்தில் தப்பான பக்கத்தில் முந்திச் செல்லும் இளைஞர்.


3) பயப்படும் மூன்று விஷயங்கள்.
  
அ) வளரும் மக்கள் தொகையும் அதனால் விளையும் விபரீதங்களும், போக்குவரத்தில் எங்கு பார்த்தாலும் நெரியும் ஜனக் கூட்டம், உயர்ந்து கொண்டே போகும் விலை வாசி.  
ஆ) அணுகுண்டின் கட்டுப் பாட்டுப் பொத்தான் மத வெறியர்கள் கையிலிருப்பது, விவசாய விளைநிலங்களும் , விவசாய ஆர்வமும் குறைந்துகொண்டே வருவது, எல்லாவற்றிற்கும் விஞ்ஞான வளர்ச்சியால் இயந்திரங்களின் துணையை நம்புவது.  
இ) காவல் துறையில் கட்டுப்பாடற்ற ஊழல், ஆசிரியர்களின் வியத்தகு தரத் தாழ்வு, இளைய தலைமுறையின் வரம்பு மீறிய 'கவர்ச்சி' ஆர்வம். 
                      
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.   
அ) நிலையற்ற உலகில் நிலைக்கும் என்று சேர்க்கும் பொருட்கள், நண்பர்கள் எப்போது, ஏன் எதிரிகளாகிறார்கள், அறிவு சார்ந்த விஷயங்கள்.   
ஆ) ஒரே வகையான மருந்துகளை மருத்துவர்கள் ஏன் குறிப்பிட்ட கம்பெனி வகைதான் வாங்க வேண்டும் என்கிறார்கள், ஜாதி சார்ந்த ஒதுக்கீடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குக் குறையத் தொடங்காமல் வளர்ந்து கொண்டேயிருக்கும், உலகில் ஆயுதங்களின் தேவையே இல்லாவிட்டால் யு.எஸ் எப்படிப் பிழைக்கும்.     
இ) தவறென்ன செய்தாலும் தான் துதிபாடும் நபரை கண்டிக்க முன்வராத மனப்பான்மை. 
எவ்வளவு லட்சக்கணக்கான வாகனங்கள் ஆனாலும் அவற்றுக்கு அளவின்றி கிடைக்கும் பெட்ரோல். 
இலவசங்களை அல்லது ஒதுக்கீடுகளை அறிந்தே எதிர்க்காமல் காலம் கழிக்கும் தலைமைகள். 


5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
  
அ) கம்பியூட்டர் தவிர பாலமுரளியின் பத்ராசலர் கீர்த்தனைகள் சிடியும், கார்ட் ரீடரும், கை பேசியும்.
ஆ) கம்பியூட்டர், பேனா, பேப்பர்.
இ) காலியான தேநீர் கோப்பை.
படிக்க எண்ணி வைத்துள்ள புத்தகம்.
வானொலி பெட்டி.  

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.  
அ) சிரிக்க மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கும் நாகேஷ், காரணமின்றி வரும் மற்றவர்களின் கோபம், அரசியல் வசனங்கள்.   
ஆ) காணாதது எல்லாம் கடவுள், கடவுளுக்கு செய்யும் முகஸ்துதிகள், என் போன்ற மனிதர்கள் தன்னைத் திருத்திக் கொள்ளாமலேயே உலகத்தைத் திருத்த நினைப்பது.  
இ) பெரிய மனிதத் தன்மையில் நடந்து கொள்ளும் மழலைகள்.
ஓசியில் கிடைப்பதில் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டும் பெரிசுகள்.
வரம்பு மீறிய ஜரிகை பட்டு வெள்ளி சிம்மாசனம், தங்க கோப்பை என்று பளபளக்கும் ஆன்மீகத் தலைகள்.


7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:   
அ) காதில் இசை, கையில் கீ போர்ட், கண்ணில் கடிகாரம்.   
ஆ) இந்த ஏழாவது கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே பங்குச் சந்தை மீது ஒரு கண் வைத்து, 'வாசலில் மணி அடிப்பது யார்?'    
இ) ஊக வணிகம்.   
கணினி ஆணைகள் சரிசெய்தல்.  
இசை கேட்டல்.  


8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.   
அ) வைத்திருக்கும் அத்தனை புத்தகங்களையும் இரண்டு அல்லது மூன்று முறை படித்து விட வேண்டும்(!!), விரும்பும் புத்தகங்களையும், விரும்பும் இசையையும் ஒரு இடத்தில் தரம் பிரித்துச் சேர்த்து, நினைத்த நேரத்தில் நினைத்ததை படிக்க, கேட்க வேண்டும், மூன்றாவது காரியமாக என்ன பொய் சொல்லலாம் என்று கண்டு பிடித்து விட வேண்டும்.        
ஆ) எவ்வளவு அதிக நாட்கள் மூச்சு விட முடியுமோ அவ்வளவு அதிக நாட்கள் மூச்சு விட வேண்டும், பாக்கி இரண்டும் அவ்வப்போது அல்ப ஆசைகளாக மாறிக் கொண்டே இருக்கும்..(நம் வாழ்வு முடிவதற்குள் நம் சாலைகள் ஒரு முறையாவது குண்டு குழி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது போல...!)    
இ) நல்ல ஆள் போய் விட்டார் என்று பெயர் எடுப்பது.
வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்வதை வழக்கப் படுத்திக் கொள்தல்.
எடை குறைப்பது.


9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.   
அ) இந்த தொடர் பதிவை இன்னும் ஏழு கேள்விகளில் முடித்து விட முடியும், அடுத்தவர் மனம் புண்படாமல் பேச, பழக முடியும், முன் கேள்விக்கு சொன்ன பதிலில் முப்பத்தைந்து சதவிகிதமாவது முடிக்க முடியும்.   
ஆ) இந்தக் கேள்விக்கு மற்றவர்கள் சொல்லும் பதிலை வைத்து அதை டெவெலப் செய்ய முடியும்!    
இ) கடன் வாங்குவது.
நம்பும் வகையில் பொய் சொல்வது.
வேண்டாத இடத்தில் ஜோக் அடிப்பது.


10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:   
அ) அலைபேசியில் அறுவை விளம்பரங்கள், 'இந்த மாசமும் கரண்ட் பில் எகிறிடிச்சு..' அனாவசியப் பொய்கள்.     
ஆ) நான் சொன்ன ஏதாவது கெட்ட விஷயம் 'சார் நீங்க சொன்ன மாதிரியே நடந்து விட்டது..'. இந்தியா மண்ணைக் கவ்வியது, உங்கள் கம்பியூட்டர் பூட் ஆகாததற்குக் காரணம், உங்கள் பைல் எதையும் ரெகவர் செய்ய முடியாது.     
இ) மனைவி அல்லது கணவர் பற்றிய புகார்கள்.
அரசியல் தலைவர்களை நியாயப் படுத்தும் முயற்சிகள்.
தனது நோய் பற்றிய மிக்க விவரமான தகவல்கள்.


11. பிடிச்ச மூன்று உணவு வகை? 

அ) மாகாளிக் கிழங்கு, மோர் மிளகாய், மாவடு, வத்தக் குழம்புடன் தயிர் சாதம், பரோட்டா, ரவா தோசை.   
ஆ) தோசை, வெஜிடேபிள் சாலட், மோர் உப்பு சேர்த்து அரிசி, ரவைக் கஞ்சி.   
இ) பஜ்ஜி, மைதா தோசை, அவல் உப்புமா.


12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?    
அ) அன்று காலை கேட்கும் பாடல்களில் பிடித்தது, அவப்போது காதில் விழும் வார்த்தைகளிலிருந்து மனதில் உதிக்கும் பாடல்கள், பழைய பாடல்கள்.     
ஆ) மோகனம், மோகன கல்யாணி, ஹிந்தோளத்தில் ஏதாவது ஒரு பாடல்.   
இ) நாராயணன் திவ்ய நாமம் எனும் கர்நாடக பாடல்.
சிற்றஞ்சிறு காலே எனும் திருப்பாவை.
எம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் திருப்புகழ். 


13) பிடித்த மூன்று படங்கள்?    
அ) முதலில் பார்த்த படம், சில நேரங்களில் சில மனிதர்கள், நடுநடுவே ரசிக்கும் அவ்வப்போதைய ரசனைக்குத் தக்க படி ரசிக்கும் படங்கள்.    
ஆ) Sound of Music, அந்த நாள், மூன்றாவது வரக் காத்திருக்கிறேன்.   
இ) இரும்புத் திரை. மைக்கேல் மதன காம ராஜன், மலைக்கள்ளன்.

14. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?    
அ) மூச்சு, பேச்சு, உணவு.  
ஆ) மற்றவர்களுடன் எப்போதும் தொடர்பு, புத்தகங்கள், பிரச்னைகள்.   
இ) கம்ப்யூட்டர், மொபைல், மின் விசிறி. 



15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?   
அ) தயக்கமின்றி பேச, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள, ஒழுங்காக வேலை செய்ய.
ஆ) இசை, இயற்பியல், தலைமைப் பண்பு.
இ) சமஸ்க்ரிதம், சிக்கனம், வேதாந்த அறிவு.


16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?   
அ) மாதவன், சாய்ராம் கோபாலன், வல்லிசிம்ஹன்.
ஆ) எழுத விரும்புபவர்கள், இது வரை எழுதாதவர்கள் யார் வேண்டுமானாலும். 
இ) மீதியுள்ள இரண்டு ஆசிரியர்கள், தினமும் எங்கள் ப்ளாக் விரும்பிப் படிக்கும் எந்த வாசகராக இருந்தாலும் - வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்விகளுக்கும் பதில்கள் எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்!
                              

24 கருத்துகள்:

  1. தொடர் பதிவுன்னு தலைப்பிலே போட்டிருந்தா வந்தே இருக்க மாட்டேன், இப்படி கணக்கு எல்லாம் போட்டு உள்ள வர வச்சிட்டீங்களே பாஸ்..

    பதிலளிநீக்கு
  2. அந்த 144 ku அது தான் அர்த்தமா, புரிஞ்சுக்காம வந்து பல்பு வேற வாங்கிட்டேனோ

    பதிலளிநீக்கு
  3. ஒருத்தரோட ஆசைகளைப் படிக்கவே மூச்சுவாங்கும். இதுலே மூணுபேரோடது, அதுவும் ஒரே பதிவுல!! அவ்வ்வ்வ்வ்.... அப்படி என்ன கோபம் ’எங்களுக்கு’ எங்க மேலே??

    இருந்தாலும் விடமாட்டோம்ல... இருங்க படிச்சுட்டு வந்து கேள்வி கேக்கிறேன் உங்களை!! பழிக்குப் பழி!! :-)))))

    பதிலளிநீக்கு
  4. //உலகில் ஆயுதங்களின் தேவையே இல்லாவிட்டால் யு.எஸ் எப்படிப் பிழைக்கும். //
    அப்படியொரு நிலைமை வர விட்டாத்தானே!! :-)))))

    //கண்ணில் கடிகாரம்.//
    அதெப்படி? வித்தையைச் சொல்லிக்கொடுங்க, ப்ளீஸ்!!

    //நல்ல ஆள் போய் விட்டார் என்று பெயர் எடுப்பது//
    இதை வாழ்நாள் முடிந்தபின்தானே செய்ய முடியும்? இருக்கும்போதே எப்படி? (லாஜிக்கா யோசிக்கணும். நோ சமாளிஃபிகேஷன்ஸ்!!) ;-)))))

    //வாழ்வு முடிவதற்குள் நம் சாலைகள் ஒரு முறையாவது குண்டு குழி இல்லாமல்//
    வேற நாட்டுல சிட்டிசன்ஷிப் வாங்கப் போறீங்களா? சொல்லவே இல்லை?

    //இது இல்லாம வாழ முடியாதுனு ..
    மின் விசிறி//
    ஏஸின்னு சொல்லாம மின்விசிறியே போதுனு நினைக்கிற உங்க பொன்னான மனசு... சான்ஸேயில்லை!! :-)))))

    பதிலளிநீக்கு
  5. நானும் பலபேரோட பதிவ (ஆவலா) படிச்சேன்..
    யாருமே என்ன தொடர அழைக்கல ...
    தப்பிச்சிட்டேனு நெனைச்சேன்.. விடமாட்டீங்களே.. .?

    (ஹி.. ஹி.. ஒரு பதிவு எழுத உதவி செய்தமைக்கு நன்றி.. )

    பதிலளிநீக்கு
  6. // 16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
    அ) மாதவன், சாய்ராம் கோபாலன், வல்லிசிம்ஹன். //

    இது ஸ்ரீராம் சாரோட பதில் மாதிரி இருக்கு..

    ..

    //......
    வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்விகளுக்கும் பதில்கள் எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்! //

    இது கௌதமன் சாரோட பதில் மாதிரி இருக்கு

    ---------------------
    "அ) ஆ) இ)" எல்லாம் யார் சொன்ன பதில்னு ஒரு போட்டி வெச்சிருக்கலாமோ ?

    பதிலளிநீக்கு
  7. "3 3 3 :: 16 X 3 X 3 = 144."

    அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.

    புதுமையான கணக்கு!!

    பதிலளிநீக்கு
  8. ஏதாவது போட்டியோன்னு நினைச்சு வந்தேன்!
    144- பொறுமை!

    பதிலளிநீக்கு
  9. 3...3...3...
    இது தான் உண்யையான 3.
    3 பேர்களின் 3.
    தனித்துவம் வாய்ந்த மூன்றுகள். சிறப்பான மூன்றுகள்.
    பல மூன்றுகள் சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  10. //வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்விகளுக்கும் பதில்கள் எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்! //
    விடமாட்டீங்க போல் இருக்கே.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அனைத்து பதில்களும் அருமையாகவே உள்ளன. கூட்டணியின் ஒட்டுமொத்தக் கருத்துக்களோ! பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  13. அட ராமச்சந்திரா.
    என்னையும் அழைச்சுட்டிங்களா:)
    ஏற்கனவே ஒரு அழைப்பு பெண்டிங்.
    இரண்டு பேருக்கும் சேர்த்து இப்ப போட்டால்தான் உண்டு.

    16 கேள்வியா !!!!!
    நன்றிங்கோவ். மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்ததுக்கு.:)

    பதிலளிநீக்கு
  14. மூச்சு முட்டிப்போகிறது. ஆனாலும் வித்யாசமான ஒன்று. சுவாரசியமாகவும் இருகிறதே! பல காரணங்களால் நெட் இணைப்பு தாமதமாகி இப்போது வந்து சேர்ந்துவிட்டேன் . இனி வழக்கம் போல வருவேன். விட்டுப்போன பழைய இடுகைகள் அணைத்தும் இனிமேல் தான் படிக்க வேண்டும் ஸ்ரீ ராம்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தொடர் பதிவிலும் தனி முத்திரை... அதுவும் மூன்று தனித்தனி முத்திரைகள்....

    பதிலளிநீக்கு
  16. // 16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
    அ) மாதவன், சாய்ராம் கோபாலன், வல்லிசிம்ஹன். //
    Here it goes --
    பாகம் - 1

    பதிலளிநீக்கு
  17. தொடர்பதிவுன்னா படிக்க பொறுமை இல்லையா suryajeevaa...

    பொறுமையாகப் படித்ததற்கு நன்றி ஹுஸைனம்மா...'கண்ணில் கடிகாரம்...கடிகாரத்தில் கண் என்று எழுதியிருக்கலாம் இல்லையா...நன்றி.
    இப்போ நல்ல ஆளா இருந்தாதானே 'போன பிறகு' அப்படிப் பேர் வாங்க முடியும்? மூணாவது கமெண்ட் பாராட்டா எடுத்துக்கறோம்..தேங்க்ஸ்!

    வாங்க மாதவன்..உங்களை விட முடியுமா எங்களால....! எங்கள் பற்றி உங்கள் யூகங்களை ரசித்தோம். நீங்க சொன்ன மாதிரி போட்டி வச்சிருக்கலாம்தான்! மிஸ் ஆயிடிச்சி.

    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...இந்தப் பதிவில் கிட்டத்தட்ட உங்கள் பதிவின் நீளத்தைத் தொட்டு உள்ளோம்!

    வாங்க HVL.....பொறுமையாகப் படித்தீர்களோ...!

    நன்றி தமிழ் உதயம்

    நன்றி RAMVI... வலைப் பதிவு இல்லாதோர்க்கு ஒரு சான்ஸ்...முகப் புத்தகத்தில் படிக்கும் யாராவது முயற்சி செய்ய மாட்டார்களா என்ன...!

    நன்றி மாலதி.

    நன்றி வைகோ சார்...நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

    வாங்க வல்லிம்மா...ஆமாம் உங்களையும் சந்தோஷமா மாட்டி விட்டுட்டோம்...

    நன்றி அமைதிசாரல்,

    வருக கக்கு-மாணிக்கம் நீண்ட நாள் நெட் பிரச்னையா...பொன்மாலைப் பொழுதில் 'ஒரு பாடல் ஐந்து மொழிகளிலேயே' நிற்கிறதே...

    வாங்க பத்துஜி...உங்களைச் சொல்ல விட்டு விட்டோமே...ஏன் நீங்களும் தொடரக் கூடாது?

    முதல் பகுதி போட்டு விட்டீர்கள் என்று அறிந்தோம் மாதவன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. மாகாளி கிழங்கு, மோர் மிளகாய், மாவடு, வத்தகுழம்பு ....... அட யாருங்க இது! எனக்கு பிடிச்சத அப்படியே எழுதி இருக்கறது!
    சிறப்பாகவும், சுவாரசியமாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தது பதிவு.

    பதிலளிநீக்கு
  19. //ஏன் நீங்களும் தொடரக் கூடாது?//

    அழைப்பிற்கு நன்றி ..தொடரலாம்.

    பதிலளிநீக்கு
  20. http://naachiyaar.blogspot.com/2011/09/blog-post_15.html
    பதிவு எழுதிவிட்டேன். பக்கோடா,முறுக்கு, மசாலா டீ,இல்லாவிட்டால் நல்ல பாட்டு ஏதாவது கேட்டுக் கொண்டு படிக்கவும்.:)

    பதிலளிநீக்கு
  21. ஊக வணிகம் என்றால் என்ன?

    வாங்கி வைத்தை புத்தகங்களை ஒரு முறையாவது படிக்க வேண்டும்... மூன்று முறையா? நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  22. ஊக வணிகம் = Futures and Options.

    பதிலளிநீக்கு
  23. நல்ல ஆள் போய் விட்டார் என்ற பெயர் எடுக்க நடவடிக்கை இப்போதே தேவை அல்லவா? இல்லாவிட்டால் நல்ல வேளையாக ஆள் போய்விட்டார் என்று சொல்வார்களே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!