நாகை மாவட்டம் சீர்காழியில் லுத்தரன் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் முதுநிலைத் தமிழாசிரியர் ஒருவருக்கு சென்ற வருடம் திடீரென கண் பார்வை பறி போய் விட, மருத்துவச் சான்றிதழ் பெற்று அவரை வேலையை விட்டே தூக்கியதாம் பள்ளி நிர்வாகம். கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர் முறையிட, கோர்ட் தலையிட்டு பார்வை பறி போனதால் பயிற்றுவிக்கும் திறமை பறி போனதாக அர்த்தமில்லை, கடைசி வருடமும் அவர் திறமையில் தேர்ச்சி விகிதம் நன்றாகவே இருக்கிறது, மேலும் அரசு மாற்றுத் திறனாளிகளுக்குக் காட்டும் பரிவையும் மனதில் வைத்து வேலை நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது. ஒரு உதவியாளர் உதவியுடன் அவர் நன்றாகவே பாடம் நடத்துகிறாராம். இது செய்தி.
எனக்குத் தெரிந்த நண்பரின் பையனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை கிடையாது. அவர் பெற்றோர்கள் கவனிப்பிலும் பரிவிலும் படித்து முன்னேறியவர் தான் படித்த பள்ளியிலேயே சில காலம் ஆசிரியராக இருந்தவர் (குரோம்பேட்டை சுந்தரவல்லி) தற்சமயம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். இந்தச் செய்தி படித்ததும் அவர் நினைவு வந்தது. அவர் தனக்குப் பார்வை தெரியாததை ஒரு குறையாகவே உணர்ந்ததில்லை. பார்ப்பவர்களையும் உணர வைத்ததில்லை.
=========================================
பாகிஸ்தான் நோயாளிக்கு மூளையில் பேஸ் மக்கர்....செய்தி.
பாகிஸ்தான் என்று இல்லை உலக மக்கள் அனைவரின் இதயத்திலுமே பீஸ் (peace) மேக்கர் என்று பொருத்தப் படும்..?
=========================================
வெளிச்சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை விட இலவசப் பொருட்களின் தரம் மேம்பட்டு இருக்கிறதாம். செய்தி.மிக்சியில் 550 வாட்ஸ் மோட்டார், டேபிள் டாப் கிரைண்டரில் 150 வாட்ஸ் மோட்டாரும் பொருத்தப் பட்டுள்ளதாம். கிரைண்டரில் வெளிச்சந்தையில் 80 முதல் 120 வாட்ஸ் வரைதான் மோட்டார் பொருத்தப் பட்டிருக்குமாம். மேலும் வெளிச்சந்தை க்ரைண்டர்களில் 0.5% நிக்கல் இருக்க, இலவச க்ரைண்டர்களில் 4% நிக்கல் இருக்கிறதாம். செய்தி சொல்கிறது.
கூடவே மற்றொரு செய்தி பயனாளிகளுக்கு வழங்கப் பட்ட இலவச ஆடுகளில் நான்கு இறந்து விட்ட னவாம்.
==============================================
ரயில் விபத்து விசாரணை ஆரம்பம். டிரைவர் தவறா, சிக்னல் கோளாறா...?
பயணம் செய்தவர்களின் ஜாதகக் கோளாறு!
===============================================
இரண்டு சூரியன்களைச் சுற்றும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அந்த கிரகம் இரண்டு சூரியனையும் சுற்ற 229 நாள் எடுக்கிறதாம். இரண்டு சூரியன்களும் தன்னைத் தானேயும் சுற்றுவதால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் வருகிறதாம். இரண்டு சூரியனும் ஒரே திசையில் இருப்பதால் வழக்கம் போல பகலிரவாம். தூரத்தைக் கேட்டால் ஸ்பெக்ட்ரம் ஞாபகம் வருகிறது! . 200 ஒளி வருடங்கள். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி ஒளி வருடங்களாம்.
=================================================
பத்மநாபசுவாமி கோவில் ஆறாவது அறையை இப்போது திறக்க வேண்டாம் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. தேவப்ப்ரச்னம் சொல்லிய இயற்கைக்கு மீறிய காரணங்களால் இல்லாமல், தேவையின்றி இப்போது திறக்க வேண்டாம் என்பதாலேயே இந்தத் தீர்ப்பு என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.
=================================================
பைக் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் பதினெட்டு வயது மகன் மரணமடைந்தது ஒரு சோகம்.
====================================================
இந்தியாவின் சுவர் என்று அழைக்கப் படும் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் அழகிய ஆட்டம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது.
==================================================
பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரத்துக்கும் இடமில்லை - பிரதமர்.
ஒவ்வொரு விபரீதமும் நடந்த பிறகு இந்த பதில் ஆட்டோ ஜெனேரெட் ஆகும் வண்ணம் செட் செய்து வைத்திருப்பார்கள் போலும்.
=============================================
பீகாரில் (என்று ஞாபகம்) போலீஸ் ஸ்டேஷன் எதிரே போராட்டம் நடத்திய பெண்களை போலீஸ்காரர்கள் துரத்தித் துரத்தி லத்தியால் அடித்துத் துவைத்ததை சில செய்திச் சேனல்களில் பார்க்க முடிந்தது. கொடுமை.
=============================
பார்வையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத அந்த ஆசிரியரை வணங்குவோம். ம்.
பதிலளிநீக்குகலவையாய் அனைத்து செய்திகளும் சிறப்பான முறையில்........... வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஇந்த வார செய்திகளும் அதை வாரிய விதமும் நேர்த்தி...
பதிலளிநீக்குபீஸ் மேக்கர்.... பீஸ் பீஸாக்கிட்டீங்க போங்க... :-))
பதிலளிநீக்குஆஹா கலக்கிட்டிங்க நண்பரே . ஒரு செய்தித்தாள் வாசித்து முடித்த அனுபவம் பதிவில் கிடைத்தது . பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
பதிலளிநீக்குஆசிரியருக்கு நல்ல தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்தைப் பாராட்ட வேண்டும். கூடவே தன்னம்பிக்கையின் போராடி ஜெயித்தவரைப் போற்ற வேண்டும்.
பதிலளிநீக்குசெய்திகளுக்கு நன்றி.
மிக்ஸி மற்றும் ஆடு - தானம் கொடுத்த மாடு- நல்லா வேலை செஞ்சா சந்தோஷம்!
பதிலளிநீக்குசெய்தித்தாள் படித்த நிறைவு.
பதிலளிநீக்குஇனிமேல் ஹிண்டு வை நிறுத்திடலாம்னு நினைகிறேன்.
பதிலளிநீக்குதேவையான செய்தி கிடைத்துவிடுகிறது எங்கள் ப்ளாகில்.
arumai
பதிலளிநீக்குநல்ல செய்திகள், நல்ல அரட்டை.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
எல்லாமே சுவாரஸ்யமான செய்திகள். சில நான் குறித்து வைத்திருந்தவை (2 சூரியன், ஆடுமாடு இறந்தது..)
பதிலளிநீக்குமிக்ஸி, கிரைண்டர்களில் (கார் இஞ்சின் நம்பர்போல) மோட்டாரில் unique ID no வச்சிருக்காங்களாம், விற்பதைத் தடுக்க. ஆடு, மாடுக்கு என்ன வச்சிருப்பாங்க?
//பாகிஸ்தான் நோயாளிக்கு மூளையில் பேஸ் மக்கர்//
பேஸ் மேக்கர்தான் தெரியும். அதென்ன மக்கர்?? ;-))))
அஸாருதீன் மகன் - 1000சிசி பைக்காம் அது!! 13 லட்சம் விலை. அப்படியொரு பைக் வாங்கிக் கொடுத்ததன் விளைவு?? :-((((((
பதிலளிநீக்கு, படிப்பது செய்தி...
பதிலளிநீக்குஅடிப்பது அரட்டை...
அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.
நன்றி தமிழ் உதயம்.
பதிலளிநீக்குநன்றி மாதவன்.
நன்றி பத்மநாபன்.
ஹி...ஹி...நன்றி ஆர் வி எஸ்.
நன்றி பனித்துளி சங்கர்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி HVL.
நன்றி meenakshi.
நன்றி suryajeeva.
நன்றி ஹுஸைனம்மா...பேஸ் மக்கர்....ஹி...ஹி...
நன்றி இராஜராஜேஸ்வரி.
சுவாரசியம். காபி சாப்பிட முடிந்தது :)
பதிலளிநீக்கு