செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஜே கே - 20. சமூக சேவையும் தன்னை அறிதலும்.

                    
உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதனே உண்மையில் புரட்சியாளன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனிதனோ அல்லது தன்னுடைய உண்மையான நிலையிலிருந்து தப்பிக்க விரும்பும், இதயத்தில் துயரம் நிறைந்த மனிதனோ புரட்சியாளன் அல்ல. தமக்கென்று பல உடைமைகளைக் கொண்டவனை இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதன் என்று நான் கூறவில்லை. உள்ளத்திலும், இதயத்திலும் மகிழ்ச்சியும், களிப்பும் நிறைந்த மனிதனே உண்மையில் சமய உணர்வுள்ள மனிதன். இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த இப்படிப்பட்ட சமய உணர்வுள்ள மனிதன் வாழும் முறையே சமூகத்திற்கு அவன் செய்யும் சேவையாகும். 

ஆனால் உலகில் உள்ள பல ஆயிரக்கணக்கான சமூக சேவகர்களைப் போல நீங்களும் மாறினால் உங்கள் இதயத்தில் களிப்பு இருக்காது. உங்களிடம் உள்ள பணத்தை ஏழை எளியோருக்கு தானமாக அளிக்கலாம், மற்றவர்களையும் அவர்களுடைய பணத்தையும் செல்வத்தையும் உங்களுடைய தூண்டுதலினால் ஏழை, எளியோருக்குத் தருமாறு வற்புறுத்தலாம். இந்த சமூகத்தில் பல பிரமிக்கத் தக்க, அற்புதமான சீர்திருத்தங்களை நீங்கள் கொண்டு வரலாம். ஆனால் உங்கள் இதயம் சாரமில்லாமல், வெறுமையாக இருக்கும் வரை, உங்கள் மனதில் கோட்பாடுகளும், அர்த்தமற்ற கருத்துகளும் நிறைந்திருக்கும்வரை, உங்கள் வாழ்வு மந்தமாகவும், தளர்ச்சியைடைந்தும், களிப்பில்லாமலும் இருக்கும். ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்.   




                            

13 கருத்துகள்:

  1. // நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும். //
    மிக அருமையான கருத்து. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமை!
    'உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்' பாடல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  3. jk கூறியதாக போட்டிருக்கிறீர்கள், அவர் கூறியதை முழு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவரே குறிப்பிட்டுள்ளார்... ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்... என்னை பொறுத்தவரை தன்னை உணர்தல் என்பது தன கொள்கை எது என்று வரை அறுப்பதே ஆகும்... நீ எதற்க்காக பிறந்தாய் என்று நீயே முடிவு செய்து எந்த சூழ்நிலை வந்தாலும் அதை மீறி நடக்காமல் பார்த்துக் கொள்வதே வாழ்வில் மகிழ்ச்சி தரும்... இது போல் ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனை படி சுயமாய் முடிவு எடுக்கலாம் என்பதே jk கூற்று...

    பதிலளிநீக்கு
  4. /*இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த இப்படிப்பட்ட சமய உணர்வுள்ள மனிதன் வாழும் முறையே சமூகத்திற்கு அவன் செய்யும் சேவையாகும்.

    *அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்./

    அருமையான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  5. மனதிலுள்ள வெறுமையை - கடமையை கடனுக்கு செய்வதால் மட்டும் விரட்டி விட முடியாது. விரும்பி செய்வதன் மூலமே நம்மை உணர முடியும். அதுவே முழுமையை தரும்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்//

    true..

    பதிலளிநீக்கு
  8. 'relative' என்னும் வாழைப் பழத்தோலில் கால் வைத்துப் பார்ப்பதால் புரிவதற்கு நாளெடுக்கும் கருத்து.

    'நான் சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம்' எனும் பேச்சு , பெரும்பாலான சிந்தனையாளர்களின் போலிச்சரண்/கவசம். தமிழ் உதயம், suryajeevaவின் கருத்துக்கள், better than jk போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. // இதயம் சாரமில்லாமல், வெறுமையாக இருக்கும் வரை, // இந்த அடிப்படை அம்சத்தை தாண்டினால் தான் எவ்வளவு செய்தாலும் உண்மையான மகிழ்ச்சி வரும்...

    பதிலளிநீக்கு
  10. ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்.


    நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  11. ரசித்ததற்கு நன்றி RAMVI.

    middleclassmadhavi -நல்ல ஒரு பாடலை நினைவு படுத்தினீங்க...

    suryajeeva...தமிழ் உதயம், உங்கள் பின்னூட்டம் சரி. எங்கள் கருத்தையே பின்னால் அப்பாதுரையும் முன்மொழிந்திருக்கிறார்!

    நன்றி ராமலக்ஷ்மி

    நன்றி Rathnavel, meenakshi, அஹமது இர்ஷாத், வைரை சதிஷ், அப்பாதுரை, பத்மநாபன், Lakshmi,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!