சனி, 2 பிப்ரவரி, 2013

இந்த வாரத்து பாசிட்டிவ் செய்திகள்

         

இந்த வாரத்து பாசிட்டிவ் செய்திகள் எங்கே என்று தேடாதீர்கள். 
          
பா செ ஆசிரியர் வெளியூர் செல்ல வேண்டிய தவிர்க்க முடியாத சூழ் நிலை. அவர் எங்களை (மற்ற ஆசிரியர்களை) கண்ணில் பட்ட பா செ எல்லாவற்றையும் தேடி, பாசிடிவாக சேமிக்கச் சொன்னார். 
          
ஆனால் பாருங்க! 
            
அவர் கண்ணில் படுகின்ற பாசிடிவ் செய்திகள் எதுவும் எங்கள் கண்களில் படவில்லை. 
             
பேப்பர்களிலும், செய்தி சானல்களிலும், வழக்கு, வம்பு, குற்றம் சுமத்துதல், குமைதல், நாடு கடத்துவோம், நானே போவேன், போகமாட்டேன், சரியா, தவறா? என்று லாவணி பாடிக் கொண்டிருந்தார்கள். தொலைக் காட்சி பேச்சு காட்சிகளில் (talk - show) பங்கு பெற்றோர், பகிர்ந்தளித்தவர், விவாதித்தவர்கள், எஸ் எம் எஸ் அனுப்பி செல் கம்பெனிக்காரர்களுக்கு லாபம் கொடுத்தவர்கள் என்று எல்லோருக்கும் அவல் கிடைத்து, எல்லோரும் நன்றாக மென்றார்கள்! 

ட்விட்டரில் யாரோ ஒருவர், இதோ பாசிடிவ் செய்தி என்று சுட்டியிருந்தார். வேகமாக அங்கே போய்ப் பார்த்தால் அதுவும் விஸ்வரூபம் ஆந்திர எல்லையில் தமிழில் வெளியாகியுள்ளது என்னும் செய்திதான்! 

எனவே, இந்த வாரம் பாசிடிவ் நெகடிவ் என்றெல்லாம்  அலையாமல், நியூட்ரலாக இருந்து கொள்கிறோம்! 
            
வாசகர்கள் கண்ணில் சென்ற வாரம் ஏதேனும் பாசிடிவ் சமாச்சாரங்கள் பட்டிருந்தால், பின்னூட்டமாகப் பதியுங்கள்.  மற்ற வாசகர்களுக்கு அது பயன் படும். 
     

7 கருத்துகள்:

  1. ஆவலோடு வந்தேன்
    பந்தை எங்கள் பக்கமே தள்ளிவிட்டீர்களே ?

    பதிலளிநீக்கு
  2. எங்கும் விஸ்வரூபம் தான்...

    சில நாட்கள் இணையம் கிடைத்ததே என்று, பாசிடிவ் செய்திகள் படிக்க வந்தால்...

    பதிலளிநீக்கு
  3. அட??? டிடி வந்திருக்காரே, இதுவே ஒரு பாசிடிவ் செய்தி தானே. எங்கே காணோமேனு நினைச்சேன். உங்க பாசிடிவ் செய்தி ஆசிரியரையும் தான். காணோமேனு நினைச்சேன். :))))

    எனக்குப் பாசிடிவாக் கண்ணில் பட்டால் பகிர்ந்துக்கறேன். அது என்னமோ தெரியலை, ஸ்ரீராம் எழுதினால் அட, இந்தச் செய்தியைப் படிச்சோமேனு தோணும். யோசிச்சு எழுத வந்தால் பாசிடிவா எதுவுமே தோணலை. :)))))))

    பதிலளிநீக்கு
  4. தினமலரில் இந்த வாரம் இரண்டு மூன்று செய்திகள் படித்தேன்! நீங்க பதிவிடுவீர்கள் என்று விட்டு விட்டேன்! அதில் ஒன்றுதான் நான் நேற்று பதிவிட்ட மகேந்திரன் என்னும் மாமனிதர். ரோட்டோரம் அனாதையாக விடப்படும் பலரை காப்பகங்களில் சேர்த்து மருத்துவ உதவியும் உணவும் வழங்கி வருகிறார்.தியாக துருகத்தில் ஓர் ஆசிரியர் ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார். இன்னுமொரு ஆசிரியை சசிகலா விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு சென்று வருகிறார். குடிப்பழக்கத்தினை நிறுத்த மருந்து கண்டுபிடித்துள்ளனர்சிலி நாட்டைசேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். நகரியில் தண்டவாள விரிசலை பார்த்து சொன்ன சிறுவனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது! இவை என் கண்ணில் பட்டவை! தினமலர் இத படிங்க முதல்ல! பகுதியில் வாசித்தவை! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சுரேஷுக்கு நன்றி.

    பா செ ஆசிரியர் ஊருக்குப் போய்விட்டால் தேடிப்பிடிக்க சிரமப்பட வேண்டியிருக்கிறதா? இத்தனை வாரங்களும் தொகுத்தளித்த அவருக்கு சிறப்பு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி சுரேஷ். பாசிடிவ் செய்திகளை பாசிடிவாகப் பகிர்ந்ததற்கு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!