Puzzles லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Puzzles லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.5.13

அலேக் அனுபவங்கள் 20:: புதிர் மனிதர்கள்!


அலேக் அனுபவங்கள் தொடரை படிப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு: இது தொடர் அல்ல, அதனால்தான் நான் ஒவ்வொரு பதிவின் கடைசியிலும் 'தொடரும்' என்று எல்லாம் எதுவும் போடுவது கிடையாது. ஆனால் தொடர்ந்து அடிக்கடி வரும். 
யார் எந்தப் பகுதியையும் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம், அல்லலுறலாம்! 
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கட்டுரைகள். அப்படி தப்பித் தவறி முந்தைய கட்டுரை எதற்காவது தொடர்பு இருந்தால், அந்த இடத்திலேயே சுட்டி கொடுத்துவிடுவேன், முந்தைய கட்டுரைக்கு. 
*****************************************  
    
எனக்கு ஆரம்பப் பள்ளி நாட்களிலிருந்து மிகவும் பிடித்த விஷயம், புதிர் கணக்குகள், அறிவை தீட்டிப் பார்க்கின்ற வினோத கணக்குகள் போன்றவை. 

அதனால்தான் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவில் (முன்பு) கேட்கப்பட்ட புதிர்க் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடைகள் பதிந்தேன். 

என்னுடைய அப்பா நிறைய கேள்விகள் கேட்பார். எங்களை எல்லாம் சிந்திக்கத் தூண்டுவார். புகழ் பெற்ற காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் - என்றால் காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்ற கேள்வி, 

ஒரு குளத்தில் சில தாமரைப் பூக்கள் இருந்தன. சில குருவிகள் அங்கு பறந்து வந்தன, ஒவ்வொரு பூவிலும் ஒரு குருவி உட்கார்ந்தது. அப்போ ஒரு குருவிக்கு உட்கார பூ கிடைக்கவில்லை, எனவே ஒவ்வொரு பூவிலும் இரு குருவிகள் உட்கார்ந்தன, அப்படி உட்கார்ந்தால், ஒரு பூவிற்கு குருவி ஆசனம் ஆகின்ற பாக்கியம் இல்லை. எவ்வளவு பூ, எவ்வளவு குருவிகள் - என்பது போன்ற கேள்விகள் பல அவர் கேட்டு, நாங்கள் பதில் சொன்னது உண்டு. 

என்னுடைய நான்கு அண்ணன்களில் இருவர், புதிர் கேள்விகளுக்கு விடை காண்பதில் பயங்கரக் கில்லாடிகள். புதிர் கேள்விகளுக்கு விடை காண்பது மட்டும் இல்லை, அவர்கள் அந்த வகை கேள்விகளுக்கு, எக்ஸ் ஒய் எல்லாம் உபயோகித்து, விடையை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று உதாரணங்கள் மூலம் விளக்கிக் கூறுவார்கள். 
  
அசோக் லேலண்டில், கியர் ஷாப் என்ற இயந்திரப் பகுதி. வண்டியில் பொருத்தப் படுகின்ற பல்சக்கரங்களை உருவாக்குகின்ற எந்திரங்கள் உள்ள பகுதி. இந்தப் பகுதியில் இன்ஸ்பெக்ஷன் பகுதியில் பல இளைஞர்கள் அந்தப் பகுதி பல் சக்கர வேலை உட்பட மற்றும் பல் வேறு துறை ஆர்வம் மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பகுதியில் ஆர் முரளி என்ற ஒரு நண்பரை சந்தித்தேன். அவர் ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வீணை வித்வானாக பணிபுரிந்த திரு ராகவன் என்பவருடைய பையன். ஆர் முரளி, எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வாசிப்பது போலவே வயலின் வாசிக்கக் கூடியவர். 
    
அவர் அறிமுகப்படுத்தி, அவருடைய மற்ற நண்பர்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். 
   
அந்த நண்பர்களில் ஒருவர், ஐ ஏ எஸ் தேர்வுக் கேள்விகள் சில கேட்டார். என்னால் சிலவற்றிற்கு விடை கூற முடிந்தது. பல பதில்கள் தெரியவில்லை! 
   
அவர் ஒரு நாள் என்னிடம் கேட்ட கேள்வி : 

A is the father of B. But B is not A's son. Who is B? 

கொஞ்சம் யோசித்து, பி இஸ் டாட்டர் ஆப் ஏ. என்றேன். 
இந்த பதிலுக்காகவே காத்திருந்தவர் போல, அவர், ஒரு காகிதத்தில், 

Shivaji is father of Shambaji.
Shivaji is Shambaji's father's --------------------

என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். கோடிட்ட இடத்தில் ஒரே வார்த்தைதான் எழுதவேண்டும் என்று ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுவிட்டுப் போனார். 

என்னால் உடனே அதற்கு அப்பொழுது விடை எழுத முடியவில்லை. பல மணி நேரங்களுக்குப் பின் விடை கண்டு பிடித்தேன். 

********************************************
இண்டஸ்ட்ரியல் எஞ்சினீரிங் டிப்பார்ட்மெண்டில் எனக்கு பி ராஜேந்திரன் என்று ஒரு நண்பர். புதிர்க் கணக்கு என்று எதை சொன்னாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வார். கேள்வி கேட்டதும், சற்றும் தாமதியாமல், "விடையையும் நீயே சொல்லிடுப்பா" என்பார்! (சென்ற ஞாயிறு பதிவின் முதல் கருத்துரையைப் பார்த்ததும் எனக்கு நண்பர் பி ராஜேந்திரனின் ஞாபகம் வந்தது) 
**********************************************
     
புதிர்கள், விடுகதைகள் என்று எதைப் பார்த்தாலும் அவற்றை விடுவிக்கும் பெரு முயற்சியில் ஈடு படுகின்ற என்னை இடறி விழ வைத்தது, இந்தப் புதிர்:    
ஆனால் இதனுடைய விடையை. எனக்கு முன்பாக என்னுடைய திருமதி கண்டுபிடித்துவிட்டார்!  
                  

8.11.09

.சின்னப் புள்ளத் தனமா இருக்கு...

கீழே உள்ள வரிசையில் அடுத்தது என்னவாக இருக்கும்?
அரசபி, ஜிஜிரர, த்னித்கா, குகாகுஷ், மாந்மாரா, - - - -

அள்ள அள்ள அதிகமாகும், எடுக்க எடுக்கப் பெரிதாகும்......எது?

குழப்ப மேனேஜர் இந்த மாதம் பதினைந்தாம் தேதி காரியதரிசிக் குமுதாவை நினைவூட்டச் சொன்ன நாள்..." நாளை மறுநாளுக்கு அடுத்த மாதம் நான்கு நாள் முன்பு முந்தின வாரம் நினைவூட்டவும்" என்ன தேதி?

கீழே உள்ள வெற்றிடங்களை வரிசையில் உள்ள எண்களை ஒருமுறை மட்டும் உபயோகித்து விடை கொண்டு வரவும்... 3,7,8,9,12
( _ + _ - _ ) X _ Divided by _ = 1

எனக்கு நாலெழுத்து.
இலையில் முதலாக இருக்கும் நான் இல்லையிலும் இருக்கிறேன்.
சொந்தத்தில் இரண்டாவதாக இருந்தாலும் பந்தத்தில் இருக்கிறேன் பாசத்தில் இல்லை.
திருடனில் முதல்வன் மூன்றாவதானாலும் பொருளில் ஒன்றுமில்லை.
யார் என்று தெரிந்ததா முதல் நான்காவதாக, நியாயமாக இரண்டாவதாக!

'அபூர்வ'ப் புதிர் : "என்னுடைய மனைவி யாருக்கு மகளோ, அவருடைய மருமகனின் அப்பா இவருக்குத் தாத்தா. எனக்கும் அவருக்கும் என்ன உறவு?

விடைகள் பின்னூட்டமாக...