Monday, May 12, 2014

திங்க கிழமை 140512:: பெசரட்


ஐநூறு கிராம் பயறு எடுத்துக்கொண்டு, சுத்தமான தண்ணீரில் மூன்று மணி நேரங்களுக்கு குறையாமல் ஊற விடவும். 

ஊறுகின்ற  நேரத்தில் கே டி வி யில் ஒரு படம் வேண்டுமானாலும் பார்த்துக்குங்க. 

பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, பயறை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 

தேவைக்கேற்ப உப்பு, இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி இருபது மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் இவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 

ஏழெட்டுப் பச்சைமிளகாய், சிறிது கொத்தமல்லித் தழை, கொஞ்சம் இஞ்சி இவைகளை நன்கு கழுவி, பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

சிறு சுண்டைக்காய் அளவு பெருங்காயம் சேர்த்து எல்லாவற்றையும் அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும். 

மாவில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கொண்டுவரவும். 

அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டு, நீங்கள் கலந்துள்ள மாவை, தோசை போல் வார்க்கவும். 

தோசை ஒரு பக்கம் வெந்ததும், சிறிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி, தோசை மீது பரவலாகத் தூவவும். சிறிது நேரத்தில், கல்லிலிருந்து பெசரட்டை எடுத்து, தட்டில் போடவும். 
   
  
சுவையான பெசரட்டு தயார். சுவைத்து மகிழுங்கள். 
   

16 comments:

Geetha Sambasivam said...

தோசை வெந்ததும் வெங்காயத்தைப் போட்டால் எல்லா வெங்காயமும் கொட்டிடும். ஹிஹிஹி!

மிளகு, ஜீரகத்தையும் பயறு நனைக்கும் போதே நனைச்சு வைக்கலாம். வேண்டுமானால் அதோடு கொஞ்சம் லவங்கப்பட்டை, சோம்பு, பெரிய ஏலக்காய் சேர்க்கலாம். நான் கொஞ்சம் போல் அரிசியும் சேர்ப்பேன். அதாவது ஒரு கிண்ணம் பயறுன்னா சின்னக் கரண்டியாலே அரிசி.

Geetha Sambasivam said...

இஞ்சி, பச்சைமிளகாய் வாயில் கடிபடும்னு நினைச்சால் அரைக்கும்போது போட்டு சேர்த்தும் அரைக்கலாம்.

வெங்காய வத்தக்குழம்போட நல்லா இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

குறிப்பு அருமை. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை இது போல் செய்ததில்லை... செய்து பார்க்கிறோம்... + Geetha Sambasivam அம்மா - இஞ்சி, பச்சைமிளகாய் வாயில் கடிபடும்னு நினைச்சால் அரைக்கும்போது போட்டு சேர்த்தும் அரைக்கலாம்...

நன்றி...

Geetha Sambasivam said...

http://geetha-sambasivam.blogspot.in/2012/08/blog-post.html

DD,இங்கே போய்ப் பாருங்க, எம்.எல்.ஏ. பெசரட் பத்தித் தெரிஞ்சுக்கலாம். :)))

இராஜராஜேஸ்வரி said...

ஸ்பெசல் பெசரட் =அருமை..!

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Marias Nalapog said...
This comment has been removed by the author.
சாய்ராம் கோபாலன் said...

// இருபது மிளகு //

கரீட்டா இருபது மிளகு தான் போடணுமா ?

இதை படித்தவுடன் நகைச்சுவை அரசர் நாகேஷ் கே.ஆர். விஜயாவுக்கு நினைவில் நின்றவள் படத்தில் சமையல் புத்தகத்தை வைத்துக்கொண்டு பத்து பத்து பக்கமாய் திருப்பி எல்லா உணவு வகைகளின் procedure சொல்லிக்கொண்டு போவதுதான் நினைவில் வந்தது.

கிழே உள்ள வீடியோவில் 1 hour 12 நிமிடத்தில் வரும். கட்டாயம் பாருங்கள். கிளாஸ், நாகேஷ் நாகேஷ் தான்.

தாயுமானவனாய் என் இரண்டாவது மகனை பார்த்துக்கொள்ளும் எனக்கு ரொம்பவே தேவை படும். இதை மாதிரி எவ்வளவு குறிப்புகள் இருக்கு ? எளிதாய் டிபன் செய்ய போடுங்கள். பார்த்து பார்த்து செய்யும் எனக்கு உதவும். வரும் சண்டே பெரியவன் வேறு வருகின்றான் அமெரிக்காவில் இருந்து. வாயும் வயிறும் செத்து போயிருக்கும்.

https://www.youtube.com/watch?v=JABQCkhPpcw

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Anonymous said...

வணக்கம்
ஐயா.

நல்ல செய்முறை விளக்கம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

‘தளிர்’ சுரேஷ் said...

அசத்தல் சமையல் குறிப்புக்கு நன்றி!

ஸ்கூல் பையன் said...

எல்லாம் ஓ.கே. கே டிவியில் படம் மட்டும் பார்க்க முடியாது... ஹிஹி...

வெங்கட் நாகராஜ் said...

ஆந்திராவில் மிகப் பிரபலமான உணவு. வெங்காயம் சிலர் சேர்ப்பதில்லை....

நானும் சில சமயங்கள் செய்வதுண்டு.

கோமதி அரசு said...

பெசரட் தோசை மிக அருமை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!