திங்கள், 20 ஏப்ரல், 2015

'திங்க'க்கிழமை : சுண்டை வத்தல்



எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ( !!! ) காய்க்கும் சுண்டைக்காயைப் பறித்துப் பறித்து,  சாம்பாரும், அரைத்து விட்டோ, விடாமலோ, காரக்குழம்பும் செய்து செய்து அலுத்துப் போய், பாசிப்பருப்புக் கூட்டு செய்து,  அது பிடிக்காமல்...
 
 

 
நண்பர்களுக்கெல்லாம் அவ்வப்போது கொடுத்தும்,  காய்த்துக் கொண்டே இருந்த சுண்டைக்காயை இந்தமுறை வத்தல் போடுவது என்று தீர்மானித்தேன்.  பாஸுக்கு அதில் விருப்பமில்லை.  "சரியா வராது... அது வேற சுண்டக்காய்... மதுரச் சுண்டக்காய்.."
 
 

 
மதுரைச் சுண்டைக்காய்ப் போட்டுச் செய்யும் வத்தல் வேறு மாதிரி.  மோரில் ஊறிக்கொண்டிருக்கும் சுண்டைக்காயை அப்படியே எண்ணெயில் வதக்கி எடுத்து மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்வோம்!
 



 
வேறு சில நண்பர்களும் அப்படியே சொன்னாலும்,  விடாமல் சுண்டைக்காயைப் பறித்து, லேசாகக் கீறி,  உப்புப் போட்டு ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை தயிர் விட்டு குலுக்கி மூடி வைத்து விட்டு, அவ்வப்போது குலுக்கி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து வெயிலில் காய வைக்கத் தொடங்கி, நன்றாகக் காய வைத்து எடுத்து வைத்திருந்தோம்.
 
 

 
அதைப் போட்டு வத்தக்குழம்பு வைக்கச் சொல்லியும் அந்த நிகழ்ச்சியை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்த பாஸ், அதை இன்று செய்தார்.
 
 


வத்தக்குழம்பு செய்யத் தெரியும்தானே?


என்ன வாசனை, என்ன ருசி!  அருமை போங்க!






 
படங்கள் :  "சொந்தப் படங்கள்ங்கோ..."

20 கருத்துகள்:


  1. சுண்டக்காய் அபுதாபிக்கு கொஞ்சம் அனுப்பி வைத்தால் நல்லாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. எங்க வீட்டுலேயும் இன்னிக்கு சுண்டைக்காய் வத்தக் குழம்புதான்! அதோட டேஸ்டே தனிதான்!

    பதிலளிநீக்கு
  3. எங்கூரில் இப்பத்தான் விதை போட்ருக்கேன் எப்போ வளருமோ !

    பதிலளிநீக்கு
  4. 'தளிர்; சுரேஷ்... சுண்டைக்காய் வத்தக்குழம்பு வேற, சுண்டைவத்தல் குழம்பு வேறதானே? :))))

    கில்லர்ஜீ... அனுப்பிடுவோம்! :))))

    ஏஞ்சலின்.. சீக்கிரமே மரம் வளர்ந்து காய்க்கட்டும்! :))))

    பதிலளிநீக்கு
  5. வீட்டுச் சுண்டைக்காய் ருசியே தனி தான்!!
    இன்னொரு சமையல் முறையை இந்த லிங்க்கில்பாருங்கள்!! - http://middleclassmadhavi.blogspot.in/2012/04/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  6. நன்றி middleclassmadhavi... அங்கு என்னுடைய பின்னூட்டமும் இருந்தாலும், இப்போது மறுபடி படித்ததில் அதை ஒருமுறை செய்து பார்க்கலாம்னு தோன்றுகிறது. வீட்டிலேயே காய் கிடைக்குது பாருங்க...!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    இதுதானா சுண்டக்காய்.....சொல்வார்கள்

    சுண்டக்காய் காப்பணம் சுமகூலி முக்கப்பணம்
    என்பார்கள்....ஆகா...ஆகா....
    த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே.!

    தங்கள் பதிவும் படங்களும் படிக்க, பார்க்க வெகு சுவாரஸ்யமாக இருந்தன.சுண்டைக்காய் வத்தல் குழம்பு வயிற்று கடுப்புக்கு நல்லதொரு மருந்து. சாதாரணமாக அந்த வத்தக் குழம்புக்கு ஜோடி, பருப்பு துவையலும், சுட்ட அப்பளமும் அருமையாக இருக்கும்.சுண்டைக்காய் வத்தலை சிறிது நெய் விட்டு வறுத்து தேவையான வறுத்த மிளகாயுடன் பொடி செய்து தேவையான உப்பு பெருங்காயம் கலந்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட நல்ல ஜீரணத்திற்கும் வழிவகுக்கும். நினைவுகளை பங்கெடுக்க செய்தமைக்கு நன்றிகள்.விரைவில் அந்த சுவையான சமையலை செய்து விடுகிறேன். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வர வர ரொம்ப லேட்டாப் போடறீங்க. காலம்பரயே சாப்பிட வேண்டியதை இப்படி தாமதமாக் கொடுத்தால் நான் எப்படிச் சாப்பிடுவதாம்? அதான் போன வாரம் அம்மிணிக்கொழக்கட்டைக்கும் வரலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  10. ரெண்டு நாளா வீட்டில் சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வேப்பம்பூ, சுக்கு, ஓமம், பெருங்காயம், இந்துப்பு கலந்த அங்காயப் பொடிதான் பிசைந்து சாப்பிட. தொட்டுக்க நேத்திக்கு மோர்க்குழம்பு வைச்சேன். முந்தாநாள் வற்றலையே போட்டுக் குழம்பு! இன்னிக்கும் உண்டு. சென்னையிலும் எங்க வீட்டில் காய்ச்ச சுண்டைக்காயில் வற்றல் போட்டிருக்கோம். நல்லாவே இருக்கோம். போன வருட மாவடு ஜலம் இருந்தால் கீழே கொட்டாமல் அதிலே சுண்டைக்காயைக் கீறிப் போட்டு ஊற வைச்சுக் காய வையுங்க. அருமையா இருக்கும். உப்பு தனியாகச் சேர்க்க வேண்டாம். மாவடு ஜலத்தில் இருக்கும் உப்பே போதும்.

    பதிலளிநீக்கு
  11. மரத்துல இருக்கற ஃப்ரெஷ் சுண்டைக்காயை, சுண்டைக்காய் பருப்புசிலி செய்து, சாத்துமது சாதத்தோடோ அல்லது, மோர்குழம்பு சாதத்தோடோ சாப்பிட்டுப்பாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும். உசிலி நீங்கள் எழுதாததால் நான் எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  12. அடடா .... எனக்குப் பிடிக்காத இந்த சுண்டைக்காய்க்கு இருக்கும் மவுசை பாருங்களேன்

    பதிலளிநீக்கு
  13. சுண்டைக்காய் வத்தல் போட்டு செய்யும் வத்தக்குழம்பு எனக்கும் பிடிக்கும். கொஞ்சம் வெல்லம் சேர்ப்பார் என் மாமியார். காலையில் பண்ணிய குழம்பை இரவில் சாப்பிட்டால் அபார ருசியாக இருக்கும்!
    நெல்லைத் தமிழன் சொல்லியிருக்கும் பச்சை சுண்டைக்காய் பருப்புசிலி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். செய்து பார்த்துவிட வேண்டியதுதான்!
    'திங்க' கிழமைக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  14. எனக்குப் பிடித்தமான ஒன்று. சொந்தமாக எடுத்தப் படங்கள் எல்லாமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  15. சுண்டைக்காய் வத்தல்.....

    அவ்வப்போது சுண்டைக்காய் வத்தல் பயன்படுத்துவதுண்டு.....

    பச்சையாய் இங்கே கிடைப்பதில்லை என்பதில் வருத்தம்! தில்லிக்குக் கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  16. பச்சைச் சுண்டைக்காய் பருப்புசிலி மிகவும் நன்றாக இருக்கும்......

    இவ்வளவு சொன்னவர் அந்த சுண்டை வற்றல் குழம்பு ரிசிப்பியும் சொல்லிருக்கலாம்ல....நாங்க செய்வோம்னாலும்...உங்க பாணி கத்துக்கத்தான்.......

    -கீதா

    பதிலளிநீக்கு
  17. நன்றி ரூபன்


    நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

    நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    நன்றி DD.

    நன்றி கீதா மேடம். ஏதோ சில காரணங்களால் சில வாரங்களாக, மாலை நேரங்களில்தான் பதிவு வெளியிட முடிகிறது! அம்மினிக் கொழுக்கட்டையில் உங்கள் கமெண்ட் இல்லையா? பார்த்த ஞாபகமாய் இருக்கிறதே... பார்க்கிறேன்!

    மாவடு போட்டு வருடங்களாகின்றன மேடம்!

    வாங்க நெல்லைத்தமிழன். பருப்புசிலி விட்டு விட்டேன்! ஆனால் எனக்கு பருப்புசிலி வகையறாவில் வாழைப்பூ பருப்புசிலி தவிர வேறெதுவும் பிடிக்காது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :)))))

    வாங்க ஜி எம் பி ஸார்... உங்களுக்கு சுண்டைக்காய்ப் பிடிக்காதா? என்னைத் தவிர வீட்டில் யாருக்கும் பிடிக்காது!

    வாங்க ரஞ்சனி மேடம். நலம்தானே?

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி வெங்கட்.

    நன்றி சகோதரி கீதா. வத்தக்குழம்பு எப்பவும் செய்யறா மாதிரிதானே? நாம் எல்லோரும் செய்வதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. அதில் சுண்டைக்காய் வத்தல்! அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  18. சுண்டைக்காய் வற்றலை மொச்சைக்கொட்டை காரக்குழம்புக்குத் தாளிக்கப் பயன்படுத்துவோம். வாசனையாயிருக்கும். சுண்டைக்காயை வதக்கிவைத்து மிளகாய், புளி வைத்து அரைத்து இட்லி தோசைக்குச் சட்னி செய்வோம்.நன்றாயிருக்கும். நாட்டு மூலிகை மருத்துவத்தில் சுண்டைக்காயும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!