திங்கள், 13 ஆகஸ்ட், 2018

"திங்க"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி




என் பையன் செமெஸ்டர் லீவுக்கு இங்க வந்திருக்கான். அதுனால அவனுக்குப் பிடித்ததுதான் வீட்டில் preference. அவன் ஹாஸ்டல்ல இருக்கறதுனால இப்படி.  எனக்கானா, நிறைய ஐட்டம் பிடிக்காது. கொஞ்சம் கஷ்டம்தான். ஆச்சு ஒரு மாதம் ஓடிடுத்து. அவனுக்கு கருவேப்பிலைத் துவையல் ரொம்ப இஷ்டம். நானும் பஹ்ரைன்ல இருக்கற நினைப்பிலேயே பழமுதிர்ச்சோலையில் காய்கறி வாங்கும்போது ஓசில கொடுக்கற கருவேப்பிலையை தேவையோ தேவையில்லயோ, கேட்டு வாங்கி வந்துவிடுவேன். அதைக் கிளியர் செய்யவும், என் மனைவி இந்தத் துவையல் செய்தாள். 

செய்முறை

1 டம்ளர் கருவேப்பிலைக்கான அளவு.

4 மிளகாய் வற்றல்,  ¼ ஸ்பூன் மிளகு, 2 தேக்கரண்டி கடுகு, 4-5 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 தேக்கரண்டி எள்
துருவின தேங்காய் ¼ டம்ளர்
புளி ½ எலுமிச்சை அளவு
தேவையான அளவு உப்பு

இலுப்புச் சட்டில தேங்காய் எண்ணை கொஞ்சம் தாராளமா விட்டு, கருவேப்பிலையை லைட்டா வதக்கிக்கோங்க.  எடுத்து ஆறவைக்கவும்.

வாணலில கொஞ்சம் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பின்பு, மிளகாய் வற்றல், மிளகு, கடுகு, உளுத்தம் பருப்பு என்ற வரிசையில் வறுத்துக்கொண்டு கடைசியில் எள் சேர்க்கவும். இதை தனித் தட்டில் போட்டு ஆறவைக்கவும்.








சூடான வாணலியில் புளியை ஒரு பிரட்டு பிரட்டிக்கொள்ளலாம். இல்லைனா பச்சைப் புளியையே உபயோகப்படுத்தலாம்.

மிக்சில, ஆறின மிளகாய் வற்றல் போன்ற வறுத்து ஆரவைத்ததைப் போட்டு கர கரவென அரைத்துக்கொண்டு, அதோட தேங்காயயும் அரைத்துக்கோங்க. பிறகு, கருவேப்பிலை இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீரும் தேவையான அளவு புளியும் சேர்த்து அரைச்சுக்கோங்க. இப்போ கருவேப்பிலைத் துவையல் ரெடி.

சூடான சாதத்தில் கருவேப்பிலைத் துவையலைப் பிசைந்து சாப்பிட, தொட்டுக்க வேறு எதுவும் வேண்டாம். அன்றைக்கு மனைவி, சிறிய உருளைக்கிழங்கு ரோஸ்டு செய்திருந்தாள்.

நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.


அன்புடன்

நெல்லைத்தமிழன்

88 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம் இதெல்லாமும் அனுப்பலாமா? கருகப்பிலைத் துவையல், பொடி எல்லாம் அடிக்கடி செய்வக்டு தான். ஆனால் எள், தேங்காய் வைத்து அரைத்ததில்லை. ஒரு முறை அரைத்துப் பார்க்கிறேன். புளியை முன்னெல்லாம் குமுட்டி அடுப்பில் சுடுவோம். இப்போல்லாம் நாரை நீக்கிவிட்டு எண்ணெயில் போட்டுத் தான் பிரட்ட வேண்டி இருக்கு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் TAMICON (Tamarind concentrate) வாங்கி வைத்திருக்கிறேன். எப்போ வேண்டும் என்றாலும், சுத்தத் தண்ணீரில் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் இட்டுக் கலக்கிக்கொண்டால் போதும்!

      நீக்கு
    2. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். இன்னைக்கு என்ன அதிசயமா 'முதல்'ல வந்திருக்கீங்க? அங்க 'காஃபி' கலக்க வேண்டாம்னு உத்தரவா? நான் முன்னால பச்சைப் புளியை துவையலுக்கு (கொத்தமல்லி, தேங்காய்த் துவையல் போன்று) உபயோகப்படுத்துவேன். இப்போல்லாம் வாட்டிக்கொள்கிறேன்.

      நீக்கு
    3. கேஜிஜி சார்... எனக்கு வெறும் புளியை உபயோகப்படுத்தவே பிடிக்காது. அவசரத்துக்கு புளி ஜலம் வேணும்னா, வெந்நீர்ல புளியைப்போட்டு... என்றெல்லாம் ப்ராசஸ். நான் பல வருடங்களாகவே ப்ரியா புளி பேஸ்ட் உபயோகப்படுத்துகிறேன். ஊருக்குப் போகும்போது 10 பாக்கெட் எடுத்துச் செல்வேன். இங்க வந்த பிறகும், நான் சமைக்க நேரும் சமயங்களில் ப்ரியா புளி பேஸ்ட்தான். (மற்ற பிராண்டுகளயும் உபயோகப்படுத்திப் பார்த்தேன். புளி கருப்பா இருக்கு)

      நீக்கு
    4. எனக்கு என்னமோ இந்தப் புளிப் பேஸ்ட் எல்லாம் பிடிக்கிறதில்லை. ஆகவே பயன்படுத்தவே மாட்டேன். அம்பேரிக்கா போனால் பையருக்கும் எனக்கும் சண்டை வரும். புளி வாங்கினால் தான் ஆச்சு என்பேன் நான். பேஸ்டைப் பயன்படுத்துனு அவர் சொல்வார். எனக்கென்னமோ அதில் நல்ல ருசி இருப்பதாய்த் தோணியது இல்லை. கொட்டை இருக்காது நாங்க வாங்கும் புளியில். சில சமயம் கோது இருக்கும். கோது நீக்கிவிட்டுப் பின்னர் முன்கூட்டியே நீரில் ஊற வைச்சுடுவேன். புளியை ஊற வைச்சுச் செய்கையில் குறைவாகவும் செலவு ஆகும்.

      நீக்கு
    5. //புளியை ஊற வைச்சுச் செய்கையில் குறைவாகவும் செலவு ஆகும்.// - இதைத்தான் என் மனைவியும் சொல்வார். எனக்கு புளி பேஸ்ட்தான் சுலபமாக இருக்கு. நல்லவேளை, அம்பேரிக்கா போய், வெங்கல உருளி இருந்தால்தான் வெந்நீர் வைப்பேன் என்று அடம் பிடிக்கலையே நீங்க....

      நீக்கு
  2. இஃகி, இஃகி, செய்வது தான், என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. இன்னிக்கு முதல் பந்தி!....

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வந்திருப்பீங்கனு நினைச்சேன். பார்த்தால் நான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :)))

      நீக்கு
    2. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    3. வாங்க துரை செல்வராஜு சார். 'பந்தி' என்ற வார்த்தையைப் படித்தவுடனே கல்யாண, விசேஷ பந்தி ஞாபகம் வந்துவிட்டது.

      நீக்கு
  4. பொதுவாக கறிவேப்பிலை குளிர்ச்சி...

    கண்களுக்கு நல்லது...
    கூந்தல் கருகரு என்று வளரும்....
    இளநரை ஏற்படாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீரக ரசம், மிளகு ரசம் போன்றவற்றிற்கு நான் கருகப்பிலையையும் அரைத்து விட்டு விடுவேன். தக்காளிச் சட்னி பண்ணினால் கருகப்பிலை, கொத்துமல்லியும் வதக்கிச் சேர்த்துடுவேன். :) வாய்க்கு ருசியாக இருக்கும்.

      நீக்கு
    2. வாங்க துரை செல்வராஜு சார். கொஞ்சம் பிஸியா இருக்கேன்.

      //...ஏற்படாது..// - என்றெல்லாம் சொல்வார்கள். நானும்தான் ஒரு தடவை கூட தூரப்போடாமல் உபயோகப்படுத்திப் பார்க்கிறேன். ம்.ம். என்ன சொல்ல.

      நீக்கு
    3. கீசா மேடம்... நான் அடைக்கு அரைக்கும்போது, பாக்கி உள்ள எல்லாக் கருவேப்பிலையையும் சேர்த்து அரைத்துவிடுவேன். சில சமயம், பச்சைக் கலர் ஜாஸ்தி ஆகிடும் (அடை மாவுல). சிலர், மைதா மாவு தோசைக்கு கொத்தமல்லியையும் சேர்த்துப் போடறாங்க. அது ஒரு வாசனை...

      நீக்கு
  5. தொகையல் பார்க்கப் பிரமாதம். நான் தேங்காய் சேர்ப்பதில்லை. ஒரிஜினல் வாசனை போய்விடும்.
    மிக நன்றி நெ.த.
    அனைவருக்கும் இனிய நாளுக்கான வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. தேங்காய் சேர்த்ததால்தான் எனக்கு சுவையாக இருந்ததுபோல் மனதில் பட்டது.

      நீக்கு
  6. மருத்துவ குணமுள்ளது பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி. ரொம்ப பிஸியா இருப்பதுபோல் தோணுது.

      நீக்கு
  7. தேங்காய், எள் சேர்த்து செய்தது இல்லை...செய்து பார்க்கிறேன்...பார்க்கும் போதே...நாவூருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி உமையாள் காயத்ரி. செய்துபாருங்கள்.

      நீக்கு
  8. கருவேப்பிலை போல் ஒதுக்குவதுதான்தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஜி.எம்.பி சார். நீங்கள் சொல்லியிருப்பது புரியலையே. உங்க வீட்டுல கருவேப்பிலை மரம் இருக்குமே.

      நீக்கு
    2. உணவில் கருவேப்பிலை இருந்தால் அதைத் தூக்கி போட்டு சாப்பிடுவதைக் குறிக்கும்மரமிருந்தது பட்டுப்போய் விட்டதுஇப்போதுசெடியாகவே சிலது இருக்கிறது

      நீக்கு
    3. உங்க வீட்டு மாமரம் இள காயாகக் காய்க்கும்போதாவது உங்கள் வீட்டுக்கு வரணும் ஜி.எம்.பி. சார். இந்தத் தடவை மெட்ரோவில் வந்து அங்கிருந்து ஓலா அல்லது ஆட்டோவில் வரலாம் என்று நினைத்தேன்.

      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். இளமை ரகசியம்னா எனக்கு 'மு.மு.பாக்யராஜ்'தான் ஞாபகம் வரும். இப்போல்லாம் யார் கருவேப்பிலையைத் தூரப் போடாமல் சாப்பிடுகிறார்கள். எல்லோரும் 'Dye' தானே...

      நீக்கு
  10. கறிவேப்பிலை துவையலில் நான் தேங்காய், எள் சேர்ப்பதில்லை. சேர்த்து செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம். செய்துபாருங்கள். உங்களுக்குத் தெரியாததா?

      நீக்கு
  11. பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்.

      நீக்கு
  12. நாங்களும் இப்படி செய்வோம்...இது பசங்களுக்கு இட்லி தோசை க்கு ரொம்ப பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  13. ஆவ்வ்வ்வ்வ் கறிவேப்பிலைத் துவையல் பார்க்கவே சாப்பிடச் சொல்லுதே.. இப்போ கறிவேப்பிலைக்கு எங்கு போவேன்.. தமிழ்க் கடையில மட்டும் கிடைக்குது அதுவும் ஒரு பக்கட்டில் 2 நெட்டுக்கள்தான் இருக்கும்.. பார்க்கவே வாங்கும் ஆசை போயிடும், எனக்கு நிறைய இருக்கோணும் அப்படியே அள்ளி வர ஆசை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, புதிய வாசகரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-) பிறகு வருகிறேன்.

      நீக்கு
    2. ////
      நெல்லைத் தமிழன்13 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:13
      வாங்க, புதிய வாசகரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-) பிறகு வருகிறேன்.///

      ஆஆஆஆஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) புதிய வாசகராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. நெ.தமிழனுக்கு டிமென்ஷியா ஆரம்பமாகிடுச்சூஊஊஊஊஊஊஊஊஊ.. அப்போ இவர் எனக்கு அண்ணாவா இல்ல அங்கிளாஆஆஆஆஆஆஆஆஆஆ?:)).. ஹையோ ஆண்டவா வந்ததும் வராததுமா மீக்கு என்னமோ ஆச்சூ:))

      நீக்கு
    3. //புதிய வாசகரே. // - புத்தம் புதிதாக வந்திருக்கீங்க என்பதை அப்படிச் சொன்னேன். இதைத் தவறாக எடுத்துட்டீங்களே. ஆமாம் இன்னொருவர் (கை விரல்களில் கட்டுப் போட்டுக்கொண்டிருந்தவர்) இருந்தாரே.. அவருக்கு இப்போ என்ன ஆச்சு.. ஆளையே காணோமே. ஏதேனும் புதிய செய்முறையைச் செய்துபார்த்து (ஒடியல் கூழ், குழை சாதம் இவற்றைச் சொல்லலை) ஏதேனும் பிரச்சனை ஆகிவிட்டதா? ஹா ஹா

      நீக்கு
  14. நானும் இப்படிதான் செய்வேன். இத்தோடு கொஞ்சூண்டு தனியா சேர்த்துக்கோங்க. இன்னமும் வாசமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி. நீங்கள் சொன்ன மாற்றத்தை அடுத்தமுறை செய்யும்போது பண்ணிப்பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
  15. ஆஆஆங்ங்ங் டொல்ல மறந்திட்டேன்ன்ன்ன்.. மீ வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்.. திரும்ப வந்திட்டேன்ன்ன்ன்ன்:) இனி எல்லோர் பாடும் கொஞ்சம் கஸ்டம்தான்:) எதுக்கும் உசாராகிடுங்கோ.. காவிரியில இப்போ தண்ணி ஓடுது.. குதிச்சால் கதை முடிஞ்சிடும்:))..

    அதுசரி.. நெல்லைத்தமிழன், ஸ்ரீராம் என்றெல்லாம் பெயரில இருக்கிறாங்க இங்கின.. புது வரவோ?:) எனக்குப் பழசெல்லாம் மறந்துபோச்ச்ச்:)).. ஆனா கெள அண்ணனை மட்டும் நல்லா நினைவில இருக்கே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா

      தங்கள் வரவினைதான் இத்தனை நாட்களாக அன்புடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். வந்து கலக்குங்கள். (காவிரி ஆற்றை அல்ல) தமிழினால் தங்கள் பதிவிலும், எங்கள் பதிவுகளிலும்..வரவு நல்வரவாகட்டும்.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. //
      kg gouthaman13 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:55
      ஆஹா ! நன்றி !!///

      ஆவ்வ்வ்வ்வ் இப்போ கெள அண்ணனுக்கு ஆரோ பூட்ஸ்.. சே..சே.. டங்கு ஸ்லிபாகத் தொடங்கிட்டுதே நேக்கு..:)) புஸ்ட் குடுத்திட்டினம்:)).. ஸ்ரீராமை விட வேகமா ஆக்டிவா இருக்கிறார்.. இது நாட்டுக்கு நல்லதில்லையே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. ஆஆஆஆஆஅ கமலா சிஸ்டர்.. உங்கள் முகம் இப்போ நினைவு வந்திடுச்சூஊஊஊஊஊஊ:)).. எல்லா இடமும் இனித்தான் புகுந்து வெளாடப்போறேன்ன்:)) ஆரும் கோச்சுக்கக்கூடாது அதிராவுடன்:).. செப்டெம்பர் வரை மீ ஓவர் டென்ஷன்.. கொஞ்சம் கவலை.. நிறைய சந்தோசம்.. கொஞ்சம் டிப்பிரஷன்:)) இப்படி நிலைமையில் இருப்பதால மன்னிச்சுக்கோங்க எல்லோரும்:) குறை ஏதும் எடுத்திடாதீங்கோ:)).. குறை எடுத்தால் தூக்கிக் காவிரியில[காவேரி என்றால் கீசாக்கா அடிக்க வருவா, ஆனா எனக்கு காவேரி எனச் சொல்லும்போதுதான் லவ் பெருக்கெடுக்குது.. அப்படி ஒரு ஆசை அந்த “காவேரி” எனச் சொல்லும்போது.. ஆனா அதே ஃபிலீங்.. காவிரி எனச் சொல்லும்போது வருகுதில்லை].. போட்டுடுவேன்ன்ன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:)) ஹையோ நான் சொல்ல வந்தது குறைகளைத் தூக்கி என:))..

      ஆ எண்டாலும் ஊ எண்டாலும் அதிராவை முறைப்பதே வேலையாப் போச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    4. ///Kamala Hariharan13 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:00
      வணக்கம் அதிரா///

      ஆவ்வ்வ்வ்வ்வ் கமலா சிஸ்டர், நான் கேட்டபடி “சகோதரியைத்” தூக்கிக் காவேரில போட்டிட்டா:)). காவிரில வெள்ளம் வந்ததால எவ்ளோ நன்மை பாருங்கோ.. இனிக் கட்சி மாறி மறுபடியும் அ நால இருந்து ஆரம்பிச்சிடாதீங்கோ கமலா சிஸ்டர்:).. ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. வணக்கம் அதிரா

      இது வரை ஒரு போதும் பார்க்காத என் முகம் தங்களுக்கு நினைவுக்கு வந்து விட்டதா? ஒரு வேளை என்னுடைய மற்றொரு முகமான மாற்று முகத்தை என் "சகோதரியை" நான் தங்கள் சொல்படி கேட்டு பொங்கும் காவேரியில் போட்டு விட்டபடியால், என் உண்மையான முகம் நினைவுக்கு வந்து விட்டதோ? ஆயினும் என் முகம் மறந்த அதிராவுக்கு உதவி செய்த ஆண்டவா உனக்கு நன்றி.
      நான் இன்னமும் அ. நாலயேதான் படித்துக் கொண்டிருக்கிறேன். முன்னேறவே இல்லையே! மேல்படி ஏற காலெடுத்து வைப்பது சரி...ஹா ஹா ஹா ஹா.
      செப்டம்பர் வரை அதற்கும் மேலாகவே சந்தோஷத்தை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். கவலை, டென்ஷன் போன்றவற்றை காவேரியில், நான் போட்ட மாதிரி போட்டு விட்டு ஹேப்பியாக இருங்கள்.

      நீக்கு
    6. //செப்டெம்பர் வரை மீ ஓவர் டென்ஷன்.. கொஞ்சம் கவலை.. நிறைய சந்தோசம்.. கொஞ்சம் டிப்பிரஷன்:)) // - பசங்க படிப்பு, அந்த பிராசஸ் எல்லாம் அதுவா நல்லா நடந்துடும். அதுக்காக ஓவர் டென்ஷன் எதுக்கு.

      ரொம்ப டென்ஷன் இருந்தால், உங்கள் பின்னூட்டங்கள் மூலம் அதை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடலாமே.. ஹா ஹா ஹா

      நீக்கு
    7. //ஸ்ரீராம் என்றெல்லாம் பெயரில இருக்கிறாங்க இங்கின.. புது வரவோ?:) எனக்குப் பழசெல்லாம் மறந்துபோச்ச்ச்:)).// - நீங்க சொன்னப்பறம்தான் அப்படி ஒருத்தர் இந்த பிளாக்கில் இருந்தாரே என்று எனக்கும் ஞாபகம் வருது. இன்றைக்கு பொறுப்பை கேஜிஜி சார் கிட்ட குடுத்துட்டு பிஸியாகிட்டாரோ? (இப்படி ஏதேனும் சொன்னால், தி.பதிவுலயும் அனுஷ்கா படத்தை நுழைத்துவிடுவாரோ?)

      நீக்கு
  16. ///என் பையன் செமெஸ்டர் லீவுக்கு இங்க வந்திருக்கான். அதுனால அவனுக்குப் பிடித்ததுதான் வீட்டில் preference. ///

    ஓஓஓஓஒ புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்:)) பாரைன் ல இருக்கும்வரைக்கும்தான் ஊருக்குப் போனா முன்னுரிமை:)).
    இப்போ ஊருக்கே போயிட்டதால மவுசு:).. ஹையோ இது வேற மவுஸ்ஸ்:)) குறைஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) அப்பூடின்னு மீ ஜொள்ளல்லே:)) ஹா ஹா ஹா மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊருக்குப் போனா முன்னுரிமை:)).// - அதிரா - இது உண்மைதான். பையன் இருந்த வரை, எனக்குப் பிடித்த சமையல் பெரும்பாலும் செய்வதில்லை (நாந்தான் காய் எல்லாம் வாங்குபவன் என்றாலும். கோவைக்காய் எனக்குப் பிடிக்காது. ஆனா, எனக்கு இதைச் செய், அவங்களுக்கு இதைச் செய் என்றால் அவளுக்கு வேலை அதிகமாகிடுமே என்பதால்..... தி யா க ம் செய்யவேண்டியிருந்தது.

      நீக்கு
    2. //பையன் இருந்த வரை, எனக்குப் பிடித்த சமையல் பெரும்பாலும் செய்வதில்லை //

      ஹா ஹா ஹா இலங்கையில மாறி, மருமகன் வீட்டுக்கு வந்திட்டால் அதாவது மகளுக்கு திருமணமானால் நம்மோடு தானே வந்திடுவார் மருமகன்.. அப்போ அவருக்குத்தான் நல்ல உபசரிப்பு.. ராஜ யோகம்:))

      நீக்கு
  17. ///இலுப்புச் சட்டில//

    ஆங்ங்ங்ங் அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)). விட மாட்டேன் இண்டைக்கு இதுக்கு எனக்கு வியக்கம்:)) சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே.. விளக்கம் ஜொள்ளியே ஆகோணும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி எல்லாம் கேள்வி பதில் பகுதியில் மட்டுமே கேட்கலாம்!

      நீக்கு
    2. இரும்புச் சட்டி மருவி, இலும்புச் சட்டியாகி, அதுவும் மழுங்கி, இலுப்புச்சட்டி என ஆனது என்கின்றனர் தமிழில் A+ பெற்ற மக்கள்!

      நீக்கு
    3. //
      kg gouthaman
      கேள்வி எல்லாம் கேள்வி பதில் பகுதியில் மட்டுமே கேட்கலாம்!//

      ஹையோ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இந்தக் கிளவியைத் தூக்கி லபக்கென வெனிஸ்கிழமையில போட்டிடப்போறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆசைக்கு ஒரு கிளவி கேய்க்க முடியுதா இங்கின?:) நாட்டில கேட்டா ஜெயில்ல போட்டு கேப்பங் களி தின்ன வைக்கினம்:)) புளொக்கில கேய்ட்டா:)) புதன் டே யில போட்டு விட்டிடுவேன் என மிரட்டுறார்:)).. ஹையோ கிளவிக்கு இப்போ ஓவர் மவுசூஊஊஊஊஊஊ:)).. கடவுளே முருகா.. பழனிமலை வைரவாஅ.. இப்போதான் பார்க்கிறேன் டங்கு ஸ்லிப்பாகி... கேள்வி கிளாவியா மருவிடுச்சூஊஊஊஊ.. இரும்புச் சட்டி இலுப்பஞ்சட்டியானதைப்போல:)).. ஹா ஹா ஹா..

      ஒரு டமில்:) புரொஃபிசருக்கே டங்கு ச்லிப்பாகும்போது:)).. மீ ஒரு அப்பாவி சுவீட் 16 க்கு ஸ்லிப்பாவது ஒண்ணும் பெரிய விசயமே இல்லைத்தானே?:)).. ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீங்க ச்சும்மா எல்லோரும், தலையை மேல கீழ ஆட்டுங்கோ பிளீஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
    4. //புரொஃபிசருக்கே டங்கு ச்லிப்பாகும்போது:)).// - இரும்பு வாணலி என்று எழுதினா, ஏதோ தனித் தமிழ்ல எழுதுவதுபோல இருப்பதால் வழக்கமாகச் சொல்லும் பெயரைச் சொன்னேன். இது டப்ப்ப்ப்ப்ப்பா.

      நீக்கு
    5. டப்பே இல்லை:) இலுப்பை மரத்தில செய்த சட்டி என நினைச்சுக் கொள்கிறோம்:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  18. கறிவேப்பிலைத் தொக்கு கரகரவென சூப்பரா இருக்கு, நான் எப்பவும், மிளகாயும் தேங்காயும் மட்டுமே சேர்த்ததுண்டு, இனி இப்படியும் முயற்சிக்கிறேன், வீட்டில பிரச்சனை என்னவெனில், இப்படி வாயில கரகரப்பா இருந்தால் சாப்பிடாமல் விட்டிடுவினமோ என, பயத்தில பசுந்தா அரைச்சு, நல்ல வெள்ளைச் சோற்றின் உள்ளே வச்ச்சு அப்படியே வாயில் வைத்து விட்டிடுவேன்.. இதுக்கு பழப்புளி சேர்த்தால் சுவை அதிகம் தான், ஆனா மருத்துவக் குணங்களை முறிச்சிடும் என அறிந்ததில் இருந்து தேசிக்காய்தான் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் (வெகு அபூர்வ) கருத்துக்கும் நன்றி. இன்றைக்கு என்னவோ உங்கள் பின்னூட்டங்கள் படித்த பின்பு, 'கெட்ட பின்பு ஞானி' என்ற பாடல் நினைவுக்கு வருது (வீடு வரை உறவு... பாடல், உங்க கண்ணதாசன் அண்ணன். எனக்கு அவர் தாத்தா ஹா ஹா ஹா)

      நீக்கு
    2. கரகரப்பா அரைக்கும்போது அது இன்னும் நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றும். ரொம்ப பேஸ்ட் மாதிரி இருந்தால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆனா, பசங்களுக்கு எப்படியோ நல்லதை ஊட்டணுமே. நீங்க நிறைய இடத்தில் புளிக்குப் பதில் எலுமிச்சை உபயோகப்படுத்துவதாகச் சொல்றீங்க. அது சூட்டில் கசந்துவிடாதோ? இது ஈழத் தமிழர்களின் வழக்கமா (ஒருவேளை அங்கு எலுமிச்சை மரங்கள் ஜாஸ்தி, புளிய மரங்கள் இல்லையோ?)

      நீக்கு
    3. சூட்டோடு விடுவதில்லை நெ.தமிழன்.. அடுப்பில் இருந்து இறக்கியபின்னர் விடுவோம்.. ஆனா சூட்டோடு சேர்த்தாலும் அப்படி பயப்படும் அளவுக்கு ஒன்றும் கசப்பதில்லை.

      சில கறிகளுக்கு மட்டுமே பழப்புளி சேர்ப்போம்ம், மற்றும்படி அனைத்துக்கும் தேசிக்காய்தான். அதுக்கு இன்னொரு காரணம், இலங்கையர்கள் தக்காளியை பாவிப்பது குறைவு.. அதாவது தக்களியை ஒரு கறியாக மட்டுமே செய்வோம்,.. எல்லாக் கறிக்கும் சேர்க்க மாட்டோம்.... இலங்கையில் புளியமரமும் இல்லை:) அதனால அதில் தொங்குவோரும் இல்லை[வெள்ளை ஆடையுடன்:)] ஹா ஹா ஹா:)

      நீக்கு
    4. // உங்க கண்ணதாசன் அண்ணன். எனக்கு அவர் தாத்தா ஹா ஹா ஹா)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    கறிவேப்பிலை துவையல் அருமை. செய்முறைகளும். படங்களும் கண்ணை கவர்ந்திழுத்தன. படிக்கும் போதே அதன் மணத்தை நாசி உணர்த்தி மனதை நிறைத்தது. நல்ல சுவையை நாவும் ஆமோதித்தது. நானும், தேங்காய். எள் சேர்த்து செய்ததில்லை. அதற்கு பதிலாக கொஞ்சம் பெருங்காய தூள் சேர்ப்பேன். அதனாலென்ன.! அடுத்த முறை கண்டிப்பாக இந்த மாதிரி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன். இப்போதுதான் நீங்கள் நெல்லையைச் சேர்ந்தவர் என்று தெரியும். எங்க இருக்கீங்க என்பது ரகசியமா (நெல்லையில்)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  20. தேங்காய் சேர்க்காமல்தான் கறிவேப்பிலைத் துவையல் அரைப்பது வழக்கம். சிலஸமயம் பிரண்டைத் துவையலுக்குப் பதிலாக சிராத்தத்தில் இந்தத் துவையலும் அரைப்பதுண்டு. அச்சமயம் சிறியதாக ஒரு எள்ளுருண்டையையும் சேர்த்து அரைப்பார்கள். நல்ல காரம் வைத்து அரைக்கும் போது இந்தச் சுவையும் சேர்ந்து மணமாக இருக்கும்துவையல். புளி எல்லாம் சுத்தமானதாக இருக்கும் ஆதலால் அப்படியே வைத்துதான் அரைப்பார்கள். கறிவேப்பிலையிலும், காட்டு கறிவேப்பிலை நல்ல வாஸனையாக இருக்கும். காமாட்சியம்மா கதை சொல்லலை. மணக்க,மணக்க உள்ளது துவையல். இஞ்சி கூட சேர்ப்பதுண்டு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா. நலமா? தில்லி குளிர்காலம் நெருங்குகிறதே...

      ச்ராத்தத்தில் கருவேப்பிலைத் துவையல் அரைத்ததில்லை. காட்டு கறிவேப்பிலை-நான் 3வது-5வது படித்துக்கொண்டிருந்தபோது, பொன்னமராவதி பக்கத்தில் ஒரு ஊரில் இருந்தேன். அங்கு ஒரு அக்ரஹாரம் உண்டு. அங்குதான் நிறைய கறிவேப்பிலை மரங்கள் (செடிகள் இல்லை. அடர்த்தியா கிளைகள் விட்டுக்கொண்டு மரங்கள்) பார்த்திருக்கிறேன். அதுபோல் எங்கும் நான் கறிவேப்பிலை மரங்கள் கண்டதில்லை.

      நாம தூரப்போட்டாலும், கறிவேப்பிலைக்கு உள்ள வாசனையே தனி (அதை நினைத்தால் அரிசி உப்புமா, கரைத்த மாவு தோசை எல்லாம் ஞாபகம் வருது)

      இன்னும் நிறைய இடுகைகள் நீங்க எழுதவேண்டியிருக்கே. எழுதுங்க.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. தேங்காய், எள் சேர்த்து செய்ததது இல்லை, செய்து பார்க்கிறேன்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு, மனைவி எள் சேர்த்ததுதான் வித்தியாசமாகத் தெரிந்தது. எள் நல்லெண்ணெய், தேங்காய் வேறு எண்ணெய். எப்படி இரண்டையும் ஒன்று சேர்க்கும் ஐடியா (இதனைக் கண்டுபிடித்தவருக்கு) வந்தது என்று தெரியலை.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. அதிரா நலமா? ஊருக்கு போய் இருந்தீர்களா என்று கேட்கலாம் என்று நினைத்தேன். சகோ கமலாவிற்கு நீங்கள் சொன்ன பதிலை கேட்டதும் அதிராவிற்கா என்று ஆச்சிரியமாய் இருக்கிறது.

    செப்டெம்பர் வரை மீ ஓவர் டென்ஷன்.. கொஞ்சம் கவலை.. நிறைய சந்தோசம்.. கொஞ்சம் டிப்பிரஷன்:))

    ஏன்? ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கோமதி அக்கா.. அது ஒரு ஃபுளோல வந்திட்டுது:).. ஞானிகளுக்கு இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் எப்பூடி வரும் ஜொள்ளுங்கோ?:).. அதனாலதான் நெல்லைத்தமிழன் காக்கா போயிட்டார்ர்:).. ஆ அதிரா என்னாச்சு எண்டெல்லாம் கேய்க்கவே இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)).. இல்ல கோமதி அக்கா ஏனோ பயங்கர ரைம் இல்லாமல் இருக்கு.. புளொக்குக்கு வந்தால் , கொமெண்ட்ஸ் போட்டால் பின்பு பதில் வந்திருக்கோ எனப் பார்க்க.. இப்படியே ரைம் நமக்குத் தெரியாமலே முடிஞ்சு போயிடுது:)).. இருப்பினும் ஓவர் ஹொலிடே எடுக்கக்கூடாது என களம் குதிச்சிட்டேன்ன்ன்:))..

      நீக்கு
  23. அதிராவின் மீள்வருகை எபி-யை ரீசார்ஜ் செய்திருப்பது தெரிகிறது!
    இன்னும் இரண்டு மிஸ்ஸிங் ஆட்களைத் தேடி டீம் போயிருக்கிறதோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆ ஏ அண்ணனையும் காணல்லியே என ஓசிச்சேன்ன் இருக்கிறார்ர்:)..

      //இன்னும் இரண்டு மிஸ்ஸிங் ஆட்களைத் தேடி டீம் போயிருக்கிறதோ?!//

      இருக்கும் இருக்கும் அதனாலதான் ச்ஸ்ரீராம் ஐக் காணம்:))..

      ஹையோ அவசரப்பட்டு கொஸ்சன் சிம்போல் போட்டிட்டீங்களே:)) இப்போ கிளவியைத்தூக்கி புதன் கிழமையில போட்டிடப்போறார் கெள அண்ணன் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  24. அதிரா வாங்க வாங்க. அப்படியே எங்க ஏரியாவுக்கு போய் சு.டோ.கு.விற்காக நான் எழுதியிருக்கும் கதையை படித்து விட்டு கருத்திடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ விரைவில் படித்துப் பதில் சொல்லிடுறேன் பானுமதி அக்கா.

      நீக்கு
  25. கருவேப்பிலை துகையல் மூளையைப் பாதுகாக்கும் முடிக்கு நல்லது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  26. கருவேப்பிலை மரம் போலவே நம்ம வீட்ல வளர்ந்திருக்கு,
    நாளைக்கே செய்ய வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
  27. எனக்கும் அதிகம் பிடித்த துவையல் பகிர்தமைக்கு நன்றி இனி நானே செய்ய முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சார்... வருகைக்கு நன்றி. நாமே செய்தால் மிக நன்றாக இருக்கும். செய்துபாருங்கள்.

      நீக்கு
  28. தேங்காய் இல்லாமல் செய்து தான் பார்த்திருக்கிறேன். செய்திருக்கிறேன். தேங்காய் சேர்த்து செய்து பார்க்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க காணவில்லையே என்று நினைத்தேன் (பயணத்தில் இருக்கிறீர்களோ என்று). செய்துபாருங்கள். அங்க கோவை2தில்லி அட்டஹாசமான உணவுப்படங்கள் போட்டுக் கலக்கறாங்க. பார்க்கவே ரொம்ப யம்மியா இருக்கு.

      நீக்கு
  29. வாவ்வ்வ்வ்வ் கருவேப்பிலைத் துவையல் இன்னும் முன்பக்கத்தில் இருக்கிறது.. அதிக பார்வையாளர் பட்டியலில்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!