வியாழன், 23 ஆகஸ்ட், 2018

திருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்! இப்பவும் அப்படிதான்!



இந்து தமிழ் செய்தித்தாளில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு மூன்று தொடர் கட்டுரைகளை சுவாரஸ்யமாய்ப் படிப்பேன்.  ஒன்று காலச்சக்கரம் நரசிம்மா எழுதும் சிரித்ராலயா தொடர்.   அவர் தந்தை சித்ராலயா கோபுவுக்கும் ஸ்ரீதருக்கும் இடையே உள்ள நட்பு, அப்போதைய ஸ்ரீதர் பட, தந்தை கோபு அவர்களின் நாடக அனுபவங்கள் குறித்த தொடர். 




இன்னொன்று டாக்டர் ஆர்  ராமானுஜம் எழுதும் 'ராகயாத்ரா' தொடர்.  எந்தெந்த ராகத்தில் என்னென்ன (தமிழ்த்திரைப்) பாடல்கள் என்பது பற்றி சுவாரஸ்யமாய்ச் சொல்லும் தொடர்.




மோகன ராகம் என்று எடுத்துக் கொண்டால் அந்த ராகத்தில் தமிழ்த் திரைப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பற்றிக் குறிப்பிடுவார் - அதிகமாய் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள்.  

கட்டுரையின் இறுதியில் ஒரு கேள்வியும் கேட்பார்.  



ஓரிரு முறைகள் நானும் அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறேன்.  இந்தமுறை என் பெயரையும் விடை சொன்னவர்கள் பட்டியலில் அவர் சொல்லி இருக்கிறார்...  (ஒரு சின்ன பெருமைதான்!) 

'எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்' என்று சொல்லும்படி கேட்டுக்கொண்டிருந்தேன்.  அவர் சென்னை ஸ்ரீராம் என்று சொல்லி விட்டார்.




===================================================================================================================================


அப்பவே இப்படிதான்!  இப்பவும் அப்படிதான்!





================================================================================================================================


திருட்டுப் படையல் ...

எங்கள் ஊர் அம்மன் திருவிழா.  ஆடி முடிந்து ஆவணி தொடங்கிய பின்னும் தீமிதி, கூழ் என்று கொண்டாடுகிறார்கள்.  சென்ற வருடம் கோவில் விசேஷத்துக்கு வசூல் எட்டு லட்சமாம்.  ஊர்க்கார நண்பர் ஒருவர் சொன்னார்.  இந்த வருடம் அதில் 540 ரூபாய் மிச்சம் என்று கணக்கு எழுதி இருந்தார்களாம்! 

அம்மனுக்குக் கூழ் காய்ச்சும்போது சிலர் வந்து "கொஞ்சம் முருங்கைக் கீரை பறித்துக் கொள்கிறேன்" என்று கேட்டு பறித்துக்கொண்டு போவதுண்டு.

சென்ற ஞாயிறு காலை ஆறரை மணி சுமாருக்கு மொட்டை மாடியில் மோட்டார் ஆன் செய்து விட்டு தண்ணீர் வழிவதற்காகக் காத்து நின்றிருந்தபோது நடந்த திருட்டு இது.  காம்பவுண்டுக்கு வெளியிலிருந்து நடந்த திருட்டு.



மேலேயிருந்தே நான் அவருக்குக் குரல் கொடுத்ததை அலறிக்கொண்டிருந்த சீர்காழியும், எல் ஆர் ஈஸ்வரியும் அவர் காதில் விழாமல் தடை செய்து விட்டார்கள் போலும்.  அலைபேசியில் நான் படம் எடுப்பது கவனிக்காமல் கவனமான திருட்டு.    கையில் இருக்கும் அந்த நீண்ட கம்பு இதற்காக வீட்டிலிருந்து (?) கொண்டு வந்திருக்கிறார்கள்.  

"கள்?"  

ஆம், இன்னொருவரும் உண்டு.  இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள்.  கோவிலுக்கு கைங்கர்யமாம்!


ஆமாம், அம்மன் திருட்டு முருங்கைக் கீரைக்கு அருள் செய்வாளோ?  அதில் ஒருவர் கோவிலுக்கு மாலை வேறு அணிந்திருக்கிறார்.  அடுத்த வீட்டு காம்பவுண்டில் அவர்கள் அறியாமல் திருட, அதுவும் கோவில் விஷயத்துக்கு, இவர்களுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ....!


=============================================================================================================


"வீடு ஒட்டடையா இருக்கேன்னு நீ கவலைப்படறே...  ஒட்டடையே வீடா இருக்கேன்னு எப்பவாவது சிலந்தி கவலைப் பட்டிருக்கா?"

பார்த்துக்கொண்டிருந்த திரைப்படக் காட்சியில் சட்டெனப் புன்னகைக்க வைத்த வசனம்.

"நீ விடும் ஒருதுளி கண்ணீர் எறும்பு குளிக்கும் படித்துறை  ஆகிவிடுகிறது" - கவியரசர்.

படித்ததில் மனதில் நின்றது.





========================================================================================================


அனுஷ்கா, தமன்னா ஏன், கண்ணாம்பான்னு லேடீஸ் படமாய் போடறாங்கன்னு குற்றம் சொல்றாங்களாம்..  நாகேஷ், சிவாஜி, எம் ஜி ஆர்,  படம் போட்டதை எல்லாம் மறந்துட்டாங்களான்னு தெரியலை..  அதனால்தான் உங்கள் படம்..  தெரியுமா?




மீதி?    அடுத்த வாரம்தான்...   அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது....

91 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அடடே..... காலை வணக்கம் கீதாக்கா... இப்பதான் எண்ணங்கள் தளத்தில் பின்னூட்டங்களை மட்டறுத்துக் கொண்டிருந்தீர்கள்... வேகமா வந்துட்டீங்களே...!

      நீக்கு
    2. ஆமாம், வேகமாத் தான் வந்தேன். அப்புறமாக் கொஞ்சம் வெளியே போகணும். நேத்திக்கு முக்கொம்பில் மதகுகள் உடைஞ்சதாலே தண்ணீரைக் கொள்ளிடத்திலேயும் காவிரியிலேயும் திருப்பி விட்டிருக்காங்க. என்ன ஆச்சுனு தெரியலை. ஒண்ணும் பயப்படறாப்போல் இல்லைனு ரங்க்ஸ் சொன்னார். அம்மாமண்டபம் பக்கம் போய்ப் பார்க்கணும்னு இருக்கேன். உள்ளே விடமாட்டாங்க! வெளியே இருந்து பார்க்கலாமேனு!

      நீக்கு
    3. எங்கள் அலுவலகத்தில் ஒருவர் கொள்ளிடம் கிளம்பி இருக்கிறார். அவர் வீட்டுக்கு ஆபத்து என்று தகவல் வந்ததாம்...

      நீக்கு
  2. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய்ய பதிவு இல்லை கீதாக்கா... படங்கள்தான் பெரிசு... பதிவு சிறிசே!!

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் நல்லா இருக்கு, பாரதியின் கவிதையை உல்டா செய்தது உள்பட. அர்விந்த்சாமி எங்கே நடிப்பார்? சும்ம்ம்ம்மா வந்து போவார்! :) எங்க வீட்டு வேப்பமரத்திலும் வெளியே இருந்து வேப்பிலை பறிப்பார்கள். முருங்கை மரத்திலும் கீரை பறிப்பார்கள். நாங்க ஒண்ணும் சொன்னதில்லை. அதே போல் வாசலில் இருந்த விருட்சி மரத்தில் பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் சமயம் எங்களுக்கே பூ கிடைக்காது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த்சாமி இப்போ நடிக்கிறார் தெரியாதா கீதாக்கா? தனி ஒருவன் போன்ற படங்கள்... விருட்சி மரமா? நான் பார்த்ததில்லை. எல்லாம் நல்லா இருக்கு என்று சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. விருட்சி தெரியாதா? இட்லிப்பூனு சொல்வாங்க. எல்லா நிறங்களிலும் பூக்கும். முருகனுக்குப் பிடித்தது. வெட்சிப்பூ என்றும் சொல்வாங்க! எங்க வீட்டில் சிவப்பு நிற விருட்சி இருந்தது. பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அர்விந்த்சாமி எங்கே நடிக்கிறார்னு நான் சொன்னது வேறே அர்த்தத்தில்! இஃகி, இஃகி, மற்றபடி அவர் இப்போதும் திரைப்படங்களில் தலை காட்டுவது தெரியும்.

      நீக்கு
    3. ஓ... இட்லிப்பூவா? இப்படி புரியற மாதிரி சொன்னால் தெரியும்!!!!

      //அர்விந்த்சாமி எங்கே நடிக்கிறார்னு நான் சொன்னது வேறே அர்த்தத்தில்! //

      நானும் அதே அர்த்தத்தில்தான் சொன்னேன். தனி ஒருவன் படத்தில் அவர் நன்றாகவே பெர்ஃபார்ம் செய்துள்ளார்.

      நீக்கு
    4. ஆடியில் அம்மன் படையல் செய்ய முடியாதவர்கள் ஆவணி ஞாயிறுகளில் செய்வார்கள். ஆடியில் ஆரம்பித்து ஆவணி முடிய ஒன்பது வெள்ளிக்கிழமை சிலர் படையல் போடுவார்கள். ஆடி மாதம் தீமிதி நடக்கலைனா ஆவணியில் நடத்துவதும் உண்டு.

      நீக்கு
  5. எனக்கு ராகம்லாம் கண்டு பிடிக்கத் தெரியாது."ராகம்"னு எழுதி இருந்தா கண்டு பிடிப்பேன். அப்பா ஒரு ஔரங்கசீபாக இருந்ததன் விளைவு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு ராகம்லாம் கண்டு பிடிக்கத் தெரியாது.//

      எனக்கும்! சும்மா குண்ட்ஸா சொல்வேன்... சில சமயங்களில் சரியா இருக்கும்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பாடல் அருமை. ஆமாம் பதிவுகளைக் கடக்க முடியாது. முக்கியமாக நட்புகளின் பதிவுகளை.
      எனக்குப் பாடல்கள் பிடித்த வகையில் ராகங்கள் தெரியாது.

      இத்தனைக்கும் அம்மா எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

      அரவிந்த் சாமி. அலை பாயுதேவில் நன்றாக நடித்திருப்பார்.
      எங்கள் வீட்டில் இலை,பூ,காய் எல்லாம் திருடு போகும்.
      எஜமானர் வந்து சொல்வார். பூவை எடுத்துக் கொள்ளுங்கள் செடிய உடைக்காதீர்கள் என்பார். இவர்கள் அதிகாலைத் திருடர்கள்.

      நீக்கு
    3. அலை பாயுதேவில் மாதவன் -ஷாலினி ஜோடி இல்லையோ? அர்விந்த்சாமி வேறே உண்டா? படம் பார்க்கலை. அதனால் தெரியாது! ஆங்காஙே சில பாடல் காட்சிகள் பார்த்தது தான். பச்சை நிறமெனு ஒரு பாட்டு கூட உண்டுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. கீதாமா. அலை பாயுதேவில் , ஷாலினியின் மேல் குஷ்பு கார் மோதிவிடும்.
      அரவிந்த்சாமி குஷ்புவின் கணவர்.
      மோதின பழியைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்வார்.
      ஐஏஎஸ் அதிகாரியாக வருவதாக் நினைவு..

      நீக்கு
  6. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    சுவையான கதம்பம். சிரித்ராலயா தொடர் படித்ததில்லை.

    உங்கள் கவிதைகள் சிறப்பு.

    தொடரட்டும் அயராத உங்கள் உழைப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு அவர்களே சித்ராலயாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கல்கியில் தொடராக எழுதி இருந்தார். என்னிடம் இருந்தது. பேப்பர் பேப்பராக! இப்போக் காணாமல் போனவர்கள் லிஸ்டில் உள்ளது.

      நீக்கு
    2. மதுரை மேலாவணி மூல வீதியில் சித்ராலயா கம்பெனிக்கு வீடு வாடகைக்கு விட்டிருந்த வீட்டுக்காரர் குடும்பத்து மாப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்னர் தான் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்! விந்தையாக இருந்தது. எத்தனை வருடங்கள் கழிச்சுத் தொடர்பு என நினைத்துக் கொண்டேன்.

      நீக்கு
  7. கதம்பம் நன்றாக இருந்தது.

    சிரித்ராலயா தொடர் கண்டிப்பா படிக்கணுமே... இல்லைனா புத்தகமா வரும்போது வாங்கணும்.

    நேற்று யதேச்சயா மாயா தொடர் சில நிமிடங்கள் பார்க்க நேர்ந்தது. தமிழ் சீரியல்கள் லோ கிளாஸ் என்பது மீண்டும் நிரூபணமாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்.

      நான் கொடுத்திருக்கும் லிங்க்கில் சென்று ஹிந்து பேப்பரின் ஹோம் பேஜ் சென்று மேலே இருக்கும் தொடர்கள் என்பதை க்ளிக் செய்து அதில் தேவையான தொடரை க்ளிக் செய்தால் ஒன்றாம் நம்பரிலிருந்து வாசிக்கலாம்.

      மாயாவா? அப்படி ஒரு தொடர் வருகிறதா என்ன!

      நீக்கு
    2. விளையாட்டாச் சொல்லியிருக்கீங்களா ஸ்ரீராம்? நரசிம்மா அவர்கள் சொல்லியிருந்தாரே.... மாயா சுந்தர் குஷ்பு கதையில் அவர் வசனம் எழுதுவதாக. அந்த மாயாதான்.

      நீக்கு
  8. முருங்க இலை பறித்ததற்காக பிளாக்கில் வந்து அசிங்கப்பட்டு நிற்கிறார்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தப்பில்லைன்னு அக்காக்கள் எல்லாம் சொல்லி இருக்காங்களே...

      நீக்கு
  9. மாந்தோரணம் போல அழகிய தொகுப்பு...

    எங்கள் மனையில் காய்த்த புளியை இப்படித்தான் அழித்தார்கள்...

    நல்லா இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார்.. சில வாரங்களாக இந்தப் பாடல் ஷேர் செய்வதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன். நினைவு படுத்துகிறீர்கள்!

      நீக்கு
  10. சிக்ஸ் அடித்ததற்கு வாழ்த்துகள்...

    நம் மனநிலைப் பொறுத்து அனைத்து பாடல்களும் இனிமையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன். ஏழு ஸ்வரங்களுக்குள்தானே எல்லாப் பாடல்களும்!

      நீக்கு
  11. சில நேரங்களில் ஸ்ரீராம் பாடல்களின் ராகங்கள் பற்றி பெரிதாக ஆலாபனை செய்வதில் ஒன்றுமே புரிவதில்லை அதை யெல்லாம்கேட்டு ரசித்து கை தட்டும் கீதாவைஇப்போதெல்லாம் காண்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்.. ஆலாபனை எங்கே செய்கிறேன்? ரசித்ததை பகிர்கிறேன்.

      //அதை யெல்லாம்கேட்டு ரசித்து கை தட்டும் கீதாவைஇப்போதெல்லாம் காண்பதில்லை//

      சீக்கிரமே வரவேண்டும் என்று மருதமலை முருகனை வேண்டுவோம். அது சரி, இது....

      நீக்கு
  12. முருங்கைக்கீரையை கணக்கில் எழுதி, மிச்சமிருக்கும் 540ரூபாயை ஆட்டைய போட்டுட போறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி... அவங்க கணக்கு எழுதினது சென்ற வருடத்துக்கு.. இந்த வருடம் வசூல் எவ்வளவு என்றே தெரியாதே...!!!!!

      நீக்கு
  13. சுவாரஸ்யமான பதிவு. பெயர் பெற்றமைக்கு பாராட்டுகள்.
    எனக்கும் ராகம் கண்டுபிடிக்கணும்னு ஆசை உண்டு.....
    எங்கள் பழைய வீட்டில் பூக்களைத் திருடாதீர்கள் எனக் கூறப் போய் அந்த மாமா தினமும் ஒரு டப்பா எங்கள் வீட்டுக் காம்பவுண்ட் சுவரில் காலையில் வைத்து விடுவார் - என் கணவர் அதை சின்சியராக் ஃபில் செய்து வைப்பார்! :))
    வேடிக்கை மனிதரின் உல்டா கவிதை ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி..

      டிடி சிக்ஸ் அடித்ததற்கு பாராட்டுகள் என்று சொல்லி இருந்தாலும் உங்கள் பதில் கண்டுதான் என் பெயர் பேப்பரில் வந்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா என்று வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடிகிறது!!!

      அப்படித்தானே? நன்றி.

      எங்கே, யாரும் கவனிக்கவில்லையோ என்று பார்த்தேன். டப்பா வைத்து பூ நிரம்பிச் செல்லும் மாமா புன்னகைக்க வைக்கிறார்!

      நீக்கு
  14. சிரித்ராலயா தொடரில் கோபு அவர்கள் சொன்னதை ஏதோ சேனலில் (தொலைக்காட்சியில்) கேட்டு இருக்கிறேன்.
    படிக்க நன்றாக இருக்கிறது.
    சென்னை ஸ்ரீராம் திறமையானவர் என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை.

    இது திருட்டு இல்லை ஸ்ரீராம் உரிமை. முருங்கை இலை தெருவில் வைத்தால் நன்றாக காய்க்குமாம், அது போல் அவர் பறித்து போவதால் குறைந்து போய்விடாது முருங்கைமரம். கேட்டு பறித்து இருந்தால் இன்னும் கூடுதலாக கிடைத்து இருக்கும். அது தெரியவில்லை அவருக்கு.
    மாதவி சொல்லியது போல் கேட்டு பறித்து இருந்தால் நீங்களும் நிறைய முருங்கைகீரை உடைத்து கொடுத்து இருப்பீர்கள். அது தொடர்ந்தாலும் தொடர்ந்து இருக்கும் அடிக்கடி.

    கவிதையும் நன்றாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.

      //சென்னை ஸ்ரீராம் திறமையானவர் என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை.//

      நன்றி அக்கா.

      //இது திருட்டு இல்லை ஸ்ரீராம் உரிமை.//

      உரிமையா? அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அதுமட்டுமில்லை, அது எங்கள் மரமும் இல்லை. பக்கத்து வீட்டு மரம்!

      கவிதையையும் ரசித்ததற்கு நன்றி அக்கா.

      நீக்கு
    2. அடப்....வீ.... பக்கத்து வீட்டு மரத்துக்க இத்தனை ஆவலாதி.....

      நீக்கு
  15. //..அதுமட்டுமில்லை, அது எங்கள் மரமும் இல்லை. பக்கத்து வீட்டு மரம்!//

    பக்கத்து வீட்டு மரத்துக்கா இப்படி மணியடித்திருக்கிறீர்கள்.. நல்லாயிருக்கு. உங்களை படோஸன்-ஆகப் பெற்ற பக்கத்துவீட்டுப் பரந்தாமன் யோகக்காரர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்... இன்னொரு தகவலும் சொல்லவா? அவர்களுக்கும் எங்களுக்கும் ஓரிரு வருடங்களாக பேச்சு வார்த்தையே கிடையாது!!!

      நீக்கு
    2. ஆங்ங்ங் அதனாலதான் பறிச்சால் பறிக்கட்டுமே என ஐ ஜாடையா:) விட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  16. ஆவ்வ்வ்வ் முத்துராமன் மாமாவும் சிவாஜி அங்கிளும் ஒன்றாக ஒரே அழகாகச் சிரிக்கினம்...

    //'எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்' என்று சொல்லும்படி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சென்னை ஸ்ரீராம் என்று சொல்லி விட்டார்.//

    ஆவ்வ்வ்வ்வ் அப்போ எங்கள் புளொக்கை விட சென்னையில்தான் அதிகம் கலக்கிக்கொண்டிருக்கிறீங்கள் போல:) கெள அண்ணன் நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... அப்போ மூன்றாவது நடிகர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லை!

      நீக்கு
    2. என் ராஜா என ஒருவர் போல இருக்கே அவரையும் எனக்குப் பிடிக்கும்..

      நீக்கு
  17. //அப்பவே இப்படிதான்! இப்பவும் அப்படிதான்!///
    தற்பெருமை தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:))..

    //சென்ற வருடம் கோவில் விசேஷத்துக்கு வசூல் எட்டு லட்சமாம். ஊர்க்கார நண்பர் ஒருவர் சொன்னார். இந்த வருடம் அதில் 540 ரூபாய் மிச்சம் என்று கணக்கு எழுதி இருந்தார்களாம்! //

    ஆவ்வ்வ்வ் ஹா ஹா ஹா என்னா ஒரு சின்சியரிட்டி:)).. பாருங்கோ ரூபாயில கூட கரீட்டாக் கணக்குச் சொல்லியிருக்கினம்.. சதம் வந்திருக்கோணுமே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தற்பெருமை தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:))..
      ​//

      கடமையைச் செய்வதில் - நண்பர்களை விசாரிப்பதில் - தற்பெருமை இருந்தால் நல்லதுதானே அதிரா...

      நீக்கு
  18. //சென்ற ஞாயிறு காலை ஆறரை மணி சுமாருக்கு மொட்டை மாடியில் மோட்டார் ஆன் செய்து விட்டு தண்ணீர் வழிவதற்காகக் காத்து நின்றிருந்தபோது நடந்த திருட்டு இது. காம்பவுண்டுக்கு வெளியிலிருந்து நடந்த திருட்டு.
    //

    இருப்பினும் ஸ்ரீராம் நீங்க அலுப்புப் பஞ்சி பார்க்காமல் இறங்கி ஓடிப்போய்ச் சொல்லியிருக்கோணும்.. என்னவாஅயினும் கேட்டு விட்டுச் செய்யப் பழகுங்கோ.. அம்மன் சொன்னாவா களவாகப் பிடுங்கி வந்து கூழ் காச்சிப் படையுங்கோ? என...

    ஆனா அந்த முருங்கி இலைகளைப் பார்க்க எனக்கே பறிச்சுச் சுண்டோணும் போல வருதே:).. பபபபபச்சைப்பசேலென இருக்கு...

    அது சரி அந்த எல் ஆர்..ஈ உம் ரி எம்மும் பாடிய பாடல் என்னவெனச் சொல்லவேயில்லை.. எனக்கும் இருவரின் குரலும் ரொம்பப் பிடிக்கும்.. அவரின் பக்திப் பாடல்கள் கேட்கக் கேட்க இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறங்கி போனால் காம்பவுண்டு சுவருக்கு மேல் எம்பி எம்பி குதிக்கணும்! நேரமும் இல்லை! எஸ் ஆர் ஈ "அம்பிகையைக் கொண்டாடுவோம்... கரு...மா...ரி அம்பிகையைக் கொண்டாடுவோம்" என்று பயாடிக் கொண்டிருந்தார்!​

      நீக்கு
  19. //"வீடு ஒட்டடையா இருக்கேன்னு நீ கவலைப்படறே... ஒட்டடையே வீடா இருக்கேன்னு எப்பவாவது சிலந்தி கவலைப் பட்டிருக்கா?"//

    நானும் முன்பு எங்கோ படித்து ரசித்த வரிகள்..

    //"நீ விடும் ஒருதுளி கண்ணீர் எறும்பு குளிக்கும் படித்துறை ஆகிவிடுகிறது"//
    ஆவ்வ் சூப்பர்ர் அங்கிள் வாய் திறந்தாலே அத்தனையும் முத்துக்கள் தான்.. மனிசன் அநியாயமாய் இடையில போயிட்டார்ர்:(.

    உங்கள் கவிதையும் இந்த இரு வரிகளோடு போட்டி போடுது ஸ்ரீராம்.. உண்மையில் நிஜமான கற்பனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா...

      வீடு - ஒட்டடை வரிகள் படித்தது அல்ல. கேட்டது!. ஜேஜே திரைப்படத்தில் டெல்லி கணேஷ் பேசும் வசனம்!!!

      கண்ணதாசனுக்கென்ன... ம்ம்ம்...

      நீக்கு
  20. ஹை சித்தப்பா :) ஹையா அ .சாமீ :)
    அது சரி பிரித்விராஜ் சுகுமாரன் ,நிவின் பாலிலாம் எப்போ வருவாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... யார்? ஏஞ்சலா? நல்லா இருக்கீங்களாம்மா? ஆளையே காணோ.........மே.... (சிவாஜி குரலில் இழுக்கவும்!)\\

      நீக்கு
    2. https://c1.staticflickr.com/3/2401/2508246015_26621b4ffb_b.jpg

      நலமே நலமே மே மே :)

      நீக்கு
    3. ஆடு கத்துதே:)) ஆடு மேய்க்கும் வேலை கிடைச்சிருக்குமோ?:)).. விக்..விக்..விக்... இது பிக் சவுண்ட்டாக்கும்:))

      நீக்கு
  21. அதானே பார்த்தேன் எங்கள் பிளாக் ஒரு பக்கமா சாயுதே :) மியாவ் இங்கேதான் இருக்காங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... நைஸா பேசி வச்சுக்கிட்டுதானே ஒண்ணா வந்திருக்கீங்க..!!!

      நீக்கு
    2. aல்லோஓஓஓஓஓஓஒ இதாரிது ஒரே நேரத்தில.. இல்ல ஸ்ரீராம் அந்த உங்க முருங்கி மேல ஜத்தியமா.. நேக்குத் தெரியாது... ஆனா கை ஒருமாதிரி நடுங்கும்போதே நினைச்சேன் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுது என.. நடந்திடுச்சூஊஊஊஊஊஊஊ:))

      நீக்கு
    3. noooo :) https://assets3.thrillist.com/v1/image/2546162/size/tmg-article_tall.jpg

      நீக்கு
    4. ஜத்தியமா :)

      https://cdn.thinglink.me/api/image/724302880919519233/1240/10/scaletowidth

      நீக்கு
    5. //noooo :) https://assets3.thrillist.com/v1/image/2546162/size/tmg-article_tall.jpg//

      இது என்ன? நாங்கள் இடையில் வளர்த்த ஒரு செல்லம் போல இருக்கு... அதே இடம் போலவும் இருக்கு! ஞாயிறில் பகிர்கிறேன் பாருங்கள்!

      நீக்கு
    6. ஞாயிற்றுக் கிசமை:) நாங்க வரமாட்டமே:)) ஓஓஓ.. லலல்லாஆஆஆஆஆஆஆ:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  22. // நாகேஷ், சிவாஜி, எம் ஜி ஆர், படம் போட்டதை எல்லாம் மறந்துட்டாங்களான்னு தெரியலை..///

    அல்லோஓஓஓஓஒ.. உங்களுக்கு மட்டும் அனுஸ்ஸ்ஸ் தமன்ஸ்ஸ்ஸ்.. எங்களுக்கு எனில் சிவாஜி எம் ஜி ஆரா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைப் போய் எந்தக் கோட்டில ஜொள்ளி வாதாடுவேன் நான்ன்ன்?:))

    // அதனால்தான் உங்கள் படம்.. தெரியுமா?
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பகூட தனியே போட மனம் வராமல் அந்த அக்காவை அருகினில் போட்டு.. எங்களைப் பார்க்க விடாமல், அவவைப் பார்க்கப் பண்ணிட்டீங்க அ.சாமியை:)) ஹா ஹா ஹா.

    சமீபத்திலும் அவரின் ஒரு படம் வந்திருக்கே.. நல்லா நடிக்கிறார்ர்.. “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”.. பேபி நைனிகாவுடன்..

    https://www.youtube.com/watch?v=Y_QtJE9qYvU

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அனுஷ், தமன்ஸ் எல்லாம் எனக்கு...//

      சேச்சே... அப்படி எல்லாம் பாரபட்சம் பார்ப்பதில்லை நான். எல்லோருக்கும் அனுஷ்தான்! நெல்லையைப் பாருங்கள். வெங்கட் தளத்தில் அனுஷை கிராபிக்ஸ் என்கிறார்.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் அனுஸ் ஐ.. கள்ளமாக சைட் அடிக்கிறாரோ?:) ஹையோ இது தமனாக்காவுக்கு தெரியுமோ?:) பத்த வச்சிட்டால் போச்ச்ச்ச்:)) நாரதர் வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்:))

      நீக்கு
    3. அல்லல்ல்ல்ல்ல்லோ அதிரா.... என்னைக்காவது ஸ்காடிஷ் காரங்க, லண்டன்காரங்களை தலைக்கு மேல தூக்கிவச்சு ஆடுவாங்கன்னு எதிர்பார்க்கமுடியுமா? நாங்கள் எல்லாம் கற்புக்கரசர்கள். 'த'வைத் தவிர இன்னொரு மாதரை..சேச்சே.. இன்னொரு கொடி இடையாளைச் சிந்தையாலும் தொடோம்... ஹாஹாஹா.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா டங்கு இப்பூடிச் ஸ்லிப்பாகும்போதே நினைச்சேன்ன்:)).. அதுதானே பார்த்தேன்ன்ன்:)) எங்கே தமனாக்காவுக்கு இப்போ மவுசு குறைஞ்சிட்டுது என நினைச்சுக் கட்சி மாறிட்டீங்களோ என:).. தெரியும் நீங்க மாறமாட்டீங்க என இருப்பினும் சிரீராம்:)) கொயப்பிட்டார் என்னை:)) ஹா ஹா ஹா:)).. அதுசரி கற்புக்கு அரசன் என்றால் என்ன?:)).. எங்கட மட்ஸ் ரீச்சரின் பெயர் கற்பகம் ரீச்சர்:) ஹா ஹா ஹா ஹையோ நேக்கு ஒரே கொஸ்ஸன் கொஸ்ஸனா வருதே இண்டைக்கு:))

      நீக்கு
  23. ஹாய் கீதாக்கா அப்புறம் என் ரெசிப்பிசை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் நெல்லை தமிழனுக்கும் மற்றும் அனைவருக்கும் ஒரு ஹாய் :)
    சும்மா எட்டிப்பார்த்தேன் வரேன் மீண்டும்

    பதிலளிநீக்கு
  24. நேற்றே கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தேன்... நேரம் சரியாக அமையவில்லை... பதில்களை விட கேள்விகள் கேட்பது மிகவும் சிரமம்... அதைவிட முதலில் கேள்வி பிறப்பதே அதிக சிரமம்...(!) ஏனென்றால் பதில்கள் தெரிந்து விட்டால் பல கேள்விகள் எளிதாக பிறக்கும்... ஆனால், இங்கு கேள்விகள் மட்டும் தான் என்னில் பிறந்தவை... பதில்கள் கூறியவர் வேறு ஒருத்தர்... அது யாரென அனைவருக்கும் தெரியும்...! அதை விடுங்க, இப்போ :-

    கீழே பத்து கேள்விகள் கேட்டுள்ளேன்... ஒவ்வொரு கேள்விற்கும், "பதில் இவ்வாறு இருக்கலாம்" என்று நினைத்து அடுத்த கேள்வி கேட்டுள்ளேன்... (இதை சிந்தித்து பதில் வேண்டாம்) "உங்களை பொறுத்தவரை" என்று அனைத்திற்கும் பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்...

    இதே கேள்விகளை உங்கள் தளத்தில் வரும் அனைத்து கருத்துரையாளர்களிடம் (புதன் அன்று ?) முன் வைக்கிறேன்...

    (01) தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...?
    (02) நல்ல சிந்தனைகள் வாழ்க... சிந்தித்தால் மட்டும் போதுமா...?
    (03) அடேடே...! சரி, நல்லவரா மட்டும் இருந்தால் போதுமா...?
    (04) ஓஹோ, அப்படியா...! இந்த நல்லதையெல்லாம் மத்தவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது...?
    (05) அட, அருமைங்க... சரி, கூடவே இருக்கிறவர்கள் எப்படி இருக்கணும்...?
    (06) ஆகா...! ஆனாலும் இதை கெடுக்கவே சூழ்ச்சி நடக்குமே...?
    (07) எல்லாம் தெரியுமா...? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா...?
    (08) சரிங்க, சொல்புத்தியும் கேட்காம, சுயபுத்தியும் இல்லாம செயல்பட்டா...?
    (09) ம்... சுயநலம் தான் பிரதானம்ன்னு ஆயிட்டா...?
    (10) அற்புதம்ங்க... வாயிலே வடை சுட்ற ஆட்கள் இப்போ பெருகிகிட்டு வர்றாங்க... முதல் கேள்விற்கு இப்போ என்ன பதில் சொல்லப் சொல்றீங்க...?

    எந்த புதனில் உங்களின் பகிர்வை எதிர்ப்பார்க்கலாம்...? நன்றி...

    பதிலளிநீக்கு
  25. கவிதைகளும், பெரிய புத்தகத்தை தூக்க முடியாமல் தூக்கி, பெரிய மனிதன் போல கண்ணாடி அணிந்து கொண்டு புத்தகம் படிக்கும் சிறுவனின் படம் சூ..ப்..ப..ர் !
    காம்பவுண்ட் சுவருக்கு அப்பால இருப்பது பொது சொத்து என்று நினைத்து நாலு இலை பறித்து கொள்பவர்களை படம் பிடித்து போட்டாலும், அவர்கள் முகம் தெரியாத வண்ணம் இலைகளால் மறைத்தும், பின் புறத்தை மட்டும் படம் எடுத்ததில் உங்களின் நாள் மனம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  26. //அது சரி பிரித்விராஜ் சுகுமாரன் ,நிவின் பாலிலாம் எப்போ வருவாங்க :)//
    ஏஞ்சல் இவங்களையெல்லாம் ரசிக்கும் பொழுது உங்கள் உரிமைக்காக போராடி அதை பெற்றுத் தந்த தியாகியை மறந்து விடாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. haahaa :) http://www.dgreetings.com/newimages/thankgen/cute-thanks-wishes.jpg

      நீக்கு
    2. //அப்பா ஒரு ஔரங்கசீபாக இருந்ததன் விளைவு. :(//
      உங்கள் பாஷையில் இ ஃகி, இ ஃகி.. எங்கள் வீட்டில் தாத்தா, அப்பா, அக்காக்கள், அண்ணா என்று எல்லோருமே நன்றாக பாடுவார்கள். என்னைத்தான் அவுரங்கசீப் என்பார்கள்.
      எனக்கு ரசனை உண்டு. ஞானம் கொஞ்சம் குறைவு. சங்கீதத்தை ரசிக்க ரசனை வேண்டுமா? ஞானம் வேண்டுமா? இசைக்கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன் சிலர் பாடகர்/பாடகி நன்றாக பாடிக்கொண்டிருக்கும் பொழுது அதை ரசிக்காமல் என்ன ராகம்? என்ன ராகம்? என்று அதை கண்டுபிடிக்க மண்டையை உடைத்துக் கொண்டிருப்பார்கள். அதாவது அவர்களுடைய அறிவை பறைசாற்றிக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், ரசிப்பதில் இல்லை.

      நீக்கு
  27. //அர்விந்த்சாமி எங்கே நடிப்பார்? சும்ம்ம்ம்மா வந்து போவார்!//
    அரவிந்த்சாமி நன்றாகத்தான் நடிப்பார். யாரையும் பின்பற்றாத தனி பாணி அவருடையது.
    நீங்கள் ஆனாலும் மோசம், உலகமே, ஓகே ஓகே, இந்தியாவே ஒப்புக் கொள்ளும் சிவாஜியையும், கமல்ஹாசனையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அரவிந்சாமியையும் ஒப்புக் கொள்வதில்லை. ஒன்றுமில்லாத தத்தி ஸ்ரீகாந்தை கொண்டாடுகிறீர்கள்... புரியவில்லையே??

    பதிலளிநீக்கு
  28. ஒரு ராணுவ வீரனை கதாநாயகனாகி கதை எழுதி, அதற்கு நெஞ்சிருக்கும்வரை என்று டைட்டில் கொடுத்து, சிவாஜியிடம் கதை சொன்ன பொழுது, இப்பொழுதுதான் இதே பின்னணியில் ரத்தத்திலகம் படம் வெளியாகியுள்ளது,எனவே இந்த கதை வேண்டாம் என்று சிவாஜி நிராகரித்ததால் வேலையில்லா பட்டதாரிகள் மூன்று பேர் என்று கதையை மாற்றினாலும், டைட்டிலை மட்டும் மாற்றாமல் வைத்துக் கொண்டாராம் ஸ்ரீதர். இது கல்கியில் நெஞ்சிருக்கும் வரை என்னும் தொடரில் இயக்குனர் ஸ்ரீதர் எழுதியிருந்தது.

    பதிலளிநீக்கு
  29. உங்கள் இசை பற்றிய கேள்விக்கு விடை ராகம் பிலஹரி, பாடல் "கூந்தலில்லே மேகம் வந்து"

    பதிலளிநீக்கு
  30. @ Sriram :

    //..அவர்களுக்கும் எங்களுக்கும் ஓரிரு வருடங்களாக பேச்சு வார்த்தையே கிடையாது!!!/

    ஓ, நிலைமை அவ்வளவு மோசமா! ஒங்கள மாதிரி வெள்ளைமனம் கொண்ட மனிதரிடம் ஒருவர் வருஷக்கணக்கில் பேசவில்லை என்றால்.. ம்ஹூம், உங்கள் படோஸன் சரியில்லை.. ஆத்மி டீக் நஹி ஹை(ன்)!

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    இந்த வாரத் தொகுப்பு நன்றாக உள்ளது. ராகங்களின் பெயர்களை கண்டுபிடித்து பாராட்டுக்கள் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

    தங்கள் கவிதைகள் சூப்பராக இருந்தது. "இப்பவும் இப்படித்தான்" கவிதையை மிகவும் ரசித்தேன்.

    திருட்டுகள் இயல்புதானே! நம் எல்லையை தாண்டி எதுவும் மீறும் போது.. திருட்டின் கை மீறுவதும் இயல்புதானே..

    வித்தியாசமாக அரவிந்தசாமி படம் போட்டதினால் அவரை பிடித்தவர்கள் எப்போதும் ரசிப்பார்கள்..அவரின் நடிப்பும் நன்றாக இருக்கும்.

    எல்லாமே நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. தி இந்து தொடர்கள் சுவாரஸ்யம்.

    பார்த்ததில்.. படித்ததில்.. பிடித்தவை அருமை.

    முருங்கைக் கீரை.. இதிலென்ன தவறென்ற ரீதியில் செய்திருப்பதாகத் தெரிகிறது. பலரும் இப்படிப் பறிப்பதை நானும் பார்த்திருக்கிறேன். போகட்டுமென விட வேண்டியதுதான்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  33. திரட்டு படையல் என்று சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!