திங்கள், 20 ஆகஸ்ட், 2018

"திங்க"க்கிழமை 180820 : டோக்ளா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

தேவையான பொருள்கள்:

கடலை மாவு --  1 கப் 
புளித்த தயிர்  --  1 கப் 

பச்சை மிளகாய்  -- 4
உப்பு                 -- 1/2 டீ ஸ்பூன் 
எலுமிச்சம் பழம் -- 1 மூடி(பாதி)
சர்க்கரை -- ஒரு சிட்டிகை 
தாளிக்க: 
எண்ணெய் -- இரண்டு டீ ஸ்பூன் 
கடுகு 1/2 டீ ஸ்பூன் 
தேங்காய் துருவல்  --  ஒரு டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

மாலை ஆறு மணிக்கு டோக்ளா செய்ய வேண்டுமென்றால் மதியம் 12 மணிக்கு கடலை மாவையும், தயிரையும் உப்பு போட்டு நன்றாக குழைத்து வைத்து விடவும். குழைக்கும் பொழுது ஒரே டைரக்க்ஷனில் குழைக்க வேண்டும். காரம் தேவைப்படுகிறவர்கள் அப்போதே ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். மாவு அதிகம் கெட்டியாகவும் இல்லாமல்,அதிகம் நீர்க்கவும் இல்லாமல் இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். 

Add caption


ஐந்தரை மணி நேரத்திற்கு குறையாமல் ஊறிய பிறகு, இரண்டு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து கலந்து, அந்த கலவையை ஒரு குக்கரில் வைக்கும் பாத்திரத்தில், அல்லது, தட்டையான பாத்திரத்தில் சமையலுக்கு பயன் படுத்தும் எண்ணையை நன்றாக தடவிய பிறகு ஊற்றி, குக்கரில் வைத்து அடுப்பில் வைக்கவும். அடுப்பு மீடியம் ஃபிலேமில் எரியட்டும். வெயிட் போட வேண்டாம். 
பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரை திறந்து, ஒரு சிறு குச்சியால் கடலை மாவு கலவையை குத்திப் பார்த்தால், குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால், வெந்து விட்டது என்று பொருள். 
அடுப்பை நிறுத்தி, பாத்திரத்தை வெளியே எடுத்து, ஐந்து நிமிடம் கழித்து, வெந்த டோக்ளாவின் ஓரத்தை லேசாக ஒரு கத்தியால் கீறி விட்டு,அந்த பாத்திரத்தை வேறு ஒரு தட்டில் கவிழ்த்து, லேசாக தட்டினால், தட்டில் விழுந்து விடும். அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.பின்னர் எலுமிச்சம் பழத்தை டோக்லாவின் மீது பரவலாக பிழியுங்கள். பச்சை மிளகாயை நீளமாக கீறிக்கொள்ளவும்.  ஒரு சிறு கடாயில் எண்ணெய்  விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு அது வெடித்த பிறகு கீறிய பச்சை மிளகாய், தேங்காய், ஒரு டீ ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அதையும் டோக்ளா மீது பரவலாக கொட்டவும். இப்போது டோக்ளா சாப்பிட ரெடி. க்ரீன் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். நான் அப்படியே சாப்பிட்டு விடுவேன். குறிப்பு:

குக்கரில் வைக்கும் பொழுது அடியில் ஒரு ஸ்டாண்ட் அல்லது வேறு ஒரு பாத்திரம் வைத்து அதன் மீது டோக்ளா கலவையை வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தண்ணீர் தெளித்து வீணாகி விடும்.

அதே போல் ஒரு கப் என்பது கொஞ்சம் குறைந்த அளவு என்பதால் குக்கர் பாத்திரத்தில் ஒரு இலையை வட்டமாக கத்தரித்து போட்டு அதன்மீது ஊற்றினால், சுலபமாக எடுக்க வரும்.

76 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா அக்கா... முதல் ஆளாக...!

   //இன்னிக்கு யாரு சமையல்?//

   பானு அக்காதான்!

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை வணக்கம். அடடா!

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 4. நான் எ.பியை திறந்த பொழுது யாரும் இல்லை. முடித்துவிட்டு பார்த்தால்...நான் தர்ட்... ஓ.கே! டோக்ளா எப்படி என்று கூறுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. தட்டில் இரண்டு துண்டுகள் மட்டுமே இருப்பதால் -

  விரைந்து வரும்படி (!) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தட்டில் இரண்டு துண்டுகள் மட்டுமே இருப்பதால் -
   விரைந்து வரும்படி (!) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்... //

   ஹா.... ஹா... ஹா.....

   நீக்கு
  2. ஹாஹாஹா! பந்திக்கு முந்திக் கொள்ள சொல்கிறீர்களா?

   நீக்கு
 6. காஃபி எல்லாம் குடித்து விட்டு ஆர அமர வருபவர்கள் இன்றைக்கு முதல் ஆளாக வந்ததன் மர்மம் என்ன?...

  வேண்டும்.. வேண்டும்..
  கமிஷன் வேண்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டோக்ளாவில்தான் கமிஷன் தரமுடியும் துரை ஸார்... ஒரு துண்டு முழுசா எடுத்துக்கோங்க!

   நீக்கு
  2. துரை, எனக்கு ரொம்பப் பிடிச்சது டோக்ளா, கமன் டோக்ளா இரண்டுமே! அதான் முதல்லே வந்துட்டேன். கடலைமாவுடன் சிலர் கொஞ்சம் ரவையும் சேர்ப்பார்கள். ஸ்பாஞ்ச் மாதிரி வரணும்னு!

   நீக்கு
  3. காஃபி இன்னிக்கு ஐந்து மணிக்கு முன்னாலேயே குடிச்சாச்சு! :) ஆற அமரத் தான் வந்தேன் டோக்ளா சாப்பிட!

   நீக்கு
 7. ஸூப்பர் இரண்டில் ஒரு துண்டு எடுத்துக்கொண்டேன் மேடம்.

  பதிலளிநீக்கு
 8. இஃகி, இஃகி, இஃகி, பஜ்ஜி மாவு கரைச்சது மீந்து விட்டால் செய்வேன். ஆனால் ரங்க்ஸுக்கும் டோக்ளாவுக்கும் அலர்ஜி! தொடவே மாட்டார். எனக்கு ரொம்பப்பிடிக்கும்! அவருக்குப் பிடித்தால் எனக்குப் பிடிக்காது! எனக்குப் பிடித்தால் அவருக்குப் பிடிக்காது. இந்த டோக்ளா செய்யும்போது ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்ப்பார்கள். அதோடு கடுகு, ஜீரகம் தாளித்துக் கொஞ்சம் நீர் விட்டுக் கொதிக்கை வைக்கையில் அதில் சர்க்கரை சேர்த்து எலுமிச்சை பிழிந்து அந்த நீரைப் பரவலாக டோக்ளா மீந்து ஊற்றுவார்கள். இது குஜராத்தியர் செய்யும் முறை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இதுவரை டோக்ளாவைப் பார்த்ததும் இல்லை, சுவைத்ததும் இல்லை.

   நீக்கு
  2. அம்பேரிக்காவில் ஸ்வாமி நாராயண் கோவில் போனால் பையர் கட்டாயமாய் வாங்கி வருவார். :) தேங்காய்த் துருவல் மேலே போட்டுக்கலாம். காரட் கூடத் துருவிச் சேர்க்கிறார்கள் இப்போல்லாம்.

   நீக்கு
  3. நான் குக்கரில் எதையும் வைப்பதில்லை. டோக்ளாவும்! சட்டியில் நீர் வைச்சு ஒத்தைத் தட்டுப் போட்டு இலையிலே எண்ணெய் தடவிக் கொழுக்கட்டை போன்றவற்றை வைப்பேன். டோக்ளாவுக்கென ஒரு குழிவுத் தட்டு இருக்கு! அதில் எண்ணெயைப் பரவலாகத் தடவிட்டு வைப்பேன்.

   நீக்கு
  4. ஶ்ரீராம், சென்னையில் டோக்ளா கிடைப்பதில்லை. யாரேனும் வீட்டில் செய்து கொடுத்தால் தான்! :))))

   நீக்கு
  5. அம்பத்தூர் மட்டுமே சென்னை இல்லைனு எப்படித்தான் மதுரைக்காரங்களுக்கு புரிய வைக்கிறதோ. (ஆமாம் அவங்கதான் கோபு ஐயங்கார் கடையை ஒருதடவைசுத்திட்டு மதுரைக்கே போய் வந்துவிட்டேன்னு இடுகை போடறவங்களாச்சே ஹாஹ்ஹா).

   காண்ட்வி, டோக்ளா எல்லாம் சென்னைல கிடைக்குது. ரொம்ப திருப்தியாச் சாப்பிடணும்னா யானைக் கவுனி ஏரியா. வித விதமா ருசி ருசியாக கிடைக்கும்.

   நீக்கு
  6. //அம்பத்தூர் மட்டுமே சென்னை இல்லைனு எப்படித்தான் மதுரைக்காரங்களுக்கு புரிய வைக்கிறதோ.//
   அதேதான்..! ஹெஹெ!

   நீக்கு
  7. //தேங்காய்த் துருவல் மேலே போட்டுக்கலாம்.//
   நானும் தேங்காய் சேர்த்திருக்கிறேன் அக்கா! தாளிக்கும் பொழுது அந்த சட்டியிலேயே போட்டு ஒரு பிரட்டு பிரட்டி போட்டேன். காரட் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

   நீக்கு
  8. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சென்னையில் டோக்ளா கிடைக்கும்னு தெரியாது. பார்த்ததில்லை. அண்ணா நகர் சுக் சாகரில் ஒரு முறை கேட்டப்போ வரவேற்பு இல்லாததால் நிறுத்திட்டோம்னு சொன்னாங்க! மற்றபடி அவங்க உணவு எல்லாமே தரம், நிரந்தரம்! அதுவும் அந்தக் குல்ஃபி!

   நீக்கு
 9. ஹிஹிஹி, வேறொரு வேலை செய்து கொண்டே தட்டச்சியதில் "கொதிக்கை" என வந்து விட்டது. "கொதிக்க" வைக்கையில் எனப் படிக்கவும். :)))))

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம்

  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் செய்திருக்கும் டோக்ளா மிகவும் அருமையாக இருக்கிறது. கேள்வி பட்டிருக்கிறேன்.இங்குள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடடிருக்கிறேன். ஆனால் வீட்டில் செய்ததில்லை. இந்த செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. அதுபோல் செய்து பார்க்கிறேன். கொஞ்சம்தான் இருக்கிறது என்பதால் நானும் விரைவில் வந்து அவசரமாக எடுத்துக்கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. முயற்சி செய்யுங்கள். சுலபம்தான்.

   நீக்கு
 11. சுவைத்துப் பார்க்கத் தூண்டுகிறது
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 12. காலை வணக்கம்.

  குஜராத்திலும் சுவைத்திருக்கிறேன். இங்கேயும் நிறையவே கிடைக்கும். பச்சை மிளகாயுடன் சாப்பிட சுவை அதிகம். இதிலே இப்போது வேரியேஷன்களுடன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
 13. ஸ்பாஞ்சியாக நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். குறிப்பாக பச்சை மிளகாய் காரத்துடன் சாப்பிட சுவை! வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாப்பிடலாம். தமிழகத்தில் சில இனிப்பகங்களில் கிடைக்கிறது. நிச்சயம் சென்னை இனிப்பகங்களில் கிடைக்கலாம். முயற்சி செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு
 14. நமக்கு இட்லி மாதிரி குஜராத்திகளுக்கு இந்த டோக்ளா! காலையில் இரண்டு மூன்று பீஸ் சாபிடுவதுண்டு அவர்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாருங்க... டெல்லிக்கார்ராய்ப் போய், அங்க உள்ள உணவுவகைகளைப் போட்டால் பலமுறை பின்னூட்டம் போட்டிருக்காங்க. இட்லி செய்முறை போட்டிருந்தா வெங்கட் இத்தனை முறை வந்திருப்பாரா? ஹாஹா

   நீக்கு
  2. நெல்லைத் தமிழன் - ஹாஹா.... சில நாட்கள் இப்படி அமைந்து விடுவதுண்டு - ஒரே முறையில் அனைத்தும்... இப்போது உங்களுக்காகவே இரண்டாம் முறை!

   இன்னிக்கு என் பக்கத்திலும் உணவு தான் - நீங்க இது வரைக்கும் வரல!

   நீக்கு
  3. வாங்க வெங்கட். இட்டிலி மாதிரியே அரிசியிலும் குஜராத்தியர் டோக்ளா செய்வார்கள்.

   நீக்கு
  4. நமக்கெல்லாம் இரண்டு, மூணு பத்தாது! :) ஒரு தட்டு போதும்! (அரை மனசா!) :)))))

   நீக்கு
 15. @ஸ்ரீராம்:
  ..நான் இதுவரை டோக்ளாவைப் பார்த்ததும் இல்லை, சுவைத்ததும் இல்லை.//

  பார்த்ததும் இல்லை, சுவைத்ததும் இல்லையா? உங்களிடம் ஆதார் கார்டு இருக்கிறதா? இருந்தால், அதை உடனே வாபஸ் வாங்கிக்கொள்ளும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மும்பைல, டோக்ளா காண்ட்வி விற்கிற கடைல, நம்ம ஊர் இட்லியை இன்னும் மிருதுவா செய்து, கட் பண்ணி தாளித்து அதையும் விற்றுக்கொண்டிருந்தாங்க. (ஆனா இட்லியை டோக்ளா செய்வதுபோல் பெரிய தட்டில் பண்ணி கட் பண்ணியிருக்காங்க. எண்ணெயும் நிறைய விட்டிருக்காங்க). அதுவும் ரொம்ப நல்லா இருந்தது.

   அது சரி.. ஏகாந்தன் சார். நீங்க பிகானிர்வாலா? மதிய உணவு சாப்பிட்டிருக்கீங்களா? தில்லில சில வருடங்களுக்கு முன்னால் நான் சாப்பிட்டது இன்னும் என் நினைவில். கொல்கத்தா இனிப்புகள் அங்க மிக நன்றாக இருக்கும். இதுபோல் ஹால்திராம் (?) கடைகள்ல சென்னா பட்டூராவும்...

   நீக்கு
  2. //(ஆனா இட்லியை டோக்ளா செய்வதுபோல் பெரிய தட்டில் பண்ணி கட் பண்ணியிருக்காங்க. எண்ணெயும் நிறைய விட்டிருக்காங்க).// இதை தட்டு இட்லி என்று கூறுகிறார்கள்.

   நீக்கு
  3. சில்லி இட்லி என்னும் பெயரில் மிளகாய்ப்பொடி எண்ணெய் தடவிய இட்லியைத் துண்டங்களாக்கி ஃப்ரை செய்து ஓட்டல்களில் கொடுக்கிறாங்க. ஒரு முறை பெண், மாப்பிள்ளையோடு நாங்க போனப்போ மாப்பிள்ளை ஆசைப்பட்டு வாங்கினார். சாப்பிட்டுப் பார்த்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வீட்டிலேயே செய்து கொடுத்துடறேன், இனிமே வாங்காதீங்கனு சொன்னேன். :)

   நீக்கு
  4. கீசா மேடம்.... இட்லி ஃப்ரை, கொத்து பரோட்டா.... சமயத்துல தயிர்வடை, ரசவடை, சாம்பார் வடை - இதெல்லாம் மிஞ்சினதை திப்பிச வேலை செய்யறது என்று என் மனதில் எப்போதும் எண்ணம் உண்டு. அதனால் இவைகளை எப்போதும் வாங்க மாட்டேன், அதிலும் வடை வகையறாவை odd சமயத்துல வாங்கமாட்டேன் (இரவு, மதியம் போன்று). இனிமே சினிமா, ஹோட்டல், வெளி உணவுலாம் எங்கிட்ட கேட்டுக்கோங்க.. ஹாஹாஹா

   நீக்கு
 16. டாக்ளா மேல இவ்வளவு மிளகாய் தூவ மாட்டாங்க. ரவைல பண்ணற டோக்ளாலதான் மிளகாயும் இஞ்சியும் சேர்ப்பாங்க. எனக்கு ரொம்பப் பிடித்தது. எ.பி க்காக ஒரு முறை கொஞ்சம் படங்களோட செய்தேன், அனுப்பலை.

  கடலைமா டோக்ளாவுக்கு (இதை பீலா டோக்ளான்னும் ரவை டோக்ளாவை சஃ்பேத்னும் சொல்லி வாங்குவேன்) வாட்டின மிளகாய் தொட்டுக்கக் கொடுப்பாங்க. கடலைமா டோக்ளா மென்னியைப் பிடிக்கக்கூடாதுன்னு சர்க்கரைத் தண்ணீர் தெளித்து தாளிப்பாங்க.

  விரைவில் ரவை டோக்ளா செய்து எ பிக்கு அனுப்பறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விரைவில் ரவை டோக்ளா செய்து எ பிக்கு அனுப்பறேன்.//
   காத்திருக்கிறோம்.

   நீக்கு
  2. அந்த மிளகாயும் நன்கு கழுவி இரண்டாகப் பிளந்து கொண்டு எலுமிச்சை, மஞ்சள் பொடி, உப்புக் கலந்த நீரில் ஊற வைச்சுப் பின் எடுத்து எண்ணெயில் வதக்கி வைப்பாங்க! சமோசா, கசோடி,பாவ் பாஜி, கட்லெட் போன்ற எது வாங்கினாலும் அதனுடன் இந்த மிளகாயும் ஒன்றோ இரண்டோ கொடுப்பாங்க!

   நீக்கு
  3. இட்லிமாவுடன் கடலை மாவு கலந்தும் டோக்ளா செய்யலாம். கடலைமாவு டோக்ளா செய்கையில் கொஞ்சம் ரவை சேர்ப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஸ்பாஞ்ச் மாதிரி வரும். இதைப் புளிச்சட்னி, பச்சைச் சட்னியுடன் சாப்பிடலாம். புளிச் சட்னி உடனே செய்ய முடியலைனால் பேரிச்சம்பழம் நான்கோடு கொஞ்சம், மி.தூள், உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொண்டு அதில் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து போட்டுக் கலந்து கொண்டு தேவையான சட்னியைத் தனியாக எடுத்துக் கொண்டு நீர் விட்டுக்கலந்து உபயோகிக்கலாம். தயிர்வடைக்குக்கூட நான் இந்தச் சட்னியோடு தான் கொடுப்பேன். சாப்பிடுவேன்.

   நீக்கு
 17. டோக்ளா என்பதை இன்று தான் அறிந்தேன்... செய்து பார்ப்போம்...!

  பதிலளிநீக்கு
 18. அட டோக்ளா...


  நிறைய தடவை ரெசிப்பி பார்த்துருக்கேன் ஆன செஞ்சது இல்ல ...எப்படி இருக்குமோ ன்னு பயம் தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா உங்கது நல்லா இருக்கு கா...

   நீக்கு
  2. நன்றி அனுராதா. முயற்சி செய்யுங்கள். சுலபம்தான்.

   நீக்கு
 19. டோக்ளா மிக்ஸ் கிடைக்கிறது . அதை வைத்து அடிக்கடி செய்து இருக்கிறேன்.என் கணவருக்கு மிகவும் பிடிக்கும்.
  பானு சொன்ன முறை மிக எளிதாக இருக்கிறது. சோடாப்பூ போடாமல் செய்து பார்க்கிறேன்.
  சோடாப்பூ சேர்த்துக் கொள்வது இல்லை.
  டெல்லியில் இனிப்பும் புளிப்பும் கலந்த பச்சைமிளாய் (ஊறியது ) போட்டு தருவார்கள்.
  ஸ்ரீராம், ராமலக்ஷ்மி மஞ்சள் வண்ணத்திற்கு டோக்ளா படம் போட்டு இருந்தார்கள் ஒரு முறை பார்த்து இருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சோடாப்பூ சேர்த்துக் கொள்வது இல்லை.//
   ஈனோ சால்ட் சேர்க்கலாம்.

   நீக்கு
 20. பாசிப்பருப்பிலும் செய்யலாம் டோக்ளா

  பதிலளிநீக்கு
 21. படத்தில் கடுகா அந்தக் கலரில் இருக்கு? ஒரு பிளேட்டுல 2 பீஸ்தானா? குறைந்தது 5 பீஸ் சாப்பிடாட்டா எப்படி சாப்பிட்ட மாதிரி இருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படத்தில் கடுகா அந்தக் கலரில் இருக்கு?//
   நிறத்தில் என்ன குறை கண்டீர்கள்?
   நான் கொஞ்சமாக செய்ததால், சைஸ், எண்ணிக்கை இரண்டுமே கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. அடுத்த முறை செய்யும் பொழுது பெரிதாக, நிறைய செய்கிறேன், வாருங்கள், ஒரு கட்டு கட்டலாம்.

   நீக்கு
  2. பாசிப்பருப்பை ஊற வைச்சு உப்புக்காரம் போட்டு அரைச்சுப் புளிக்க வைச்சு இம்மாதிரி செய்யலாம் பானுமதி. நாங்க அதைப் பாசிப்பருப்பு பன் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். அதையும் டோக்ளா என்று சொல்ல வேண்டியது தான்! :)))))

   நீக்கு
  3. கீதா அம்மா சொல்வது போல் செய்ய வேண்டியது தான்... நன்றி அம்மா...

   நீக்கு
 22. //நான் இதுவரை டோக்ளாவைப் பார்த்ததும் இல்லை, சுவைத்ததும் இல்லை.// சென்னையில் டோக்ளா அடையாறு ஆனந்த பவனிலேயே கிடைக்கிறது. எல்லா வட இந்திய உணவகங்களிலும் கிடைக்கும்.
  வட பழனி கோவில் சன்னிதி தெருவில் இருக்கும் மிட்டாய் மந்திரில் வட இந்திய உணவுகள் நன்றாக இருக்கும். ஸ்ரீ மிட்டாய், சுக் சாகர் இங்கெல்லாம் நீங்கள் சாப்பிட்டதில்லையா?

  பதிலளிநீக்கு
 23. @நெல்லைத்தமிழன்:

  ..நீங்க பிகானிர்வாலா மதிய உணவு சாப்பிட்டிருக்கீங்களா? தில்லில சில வருடங்களுக்கு முன்னால் நான் சாப்பிட்டது இன்னும் என் நினைவில். கொல்கத்தா இனிப்புகள் அங்க மிக நன்றாக இருக்கும். இதுபோல் ஹால்திராம் (?) கடைகள்ல சென்னா பட்டூராவும்...//

  30+ வருடங்களாக டெல்லிவாசிதான் நான். (இடையிடையே வெளிநாடுகளில் வசித்திருப்பினும்). டெல்லி/நோய்டாவில் ஹல்திராம், பிகானீர் ரெஸ்ட்டாரண்ட்டுகளில் வழக்கமான சாப்பாட்டைத் தவிர்த்து, விதவிதமாக சாப்பிட்டதுண்டு. இரண்டு வருடம் முன்பு எங்கள் குடும்பத்தினருக்கு (3 சகோதரர் குடும்பங்கள் டெல்லியில்) என் பிறந்தநாள் ட்ரீட் கேட்டதால், நோய்டாவிலுள்ள ஒரு பிகானீர் ரெஸ்ட்டாரண்ட்டில் லஞ்ச் கொடுத்தேன். மேலும் சில தடவை அங்கேயும், சரோஜினிநகரிலுள்ள ஹல்திராம் அவுட்லெட்டுக்கும் போய் வெரெய்ட்டியாக வெட்டியிருக்கிறேன்/றோம், குறிப்பாகக் குளிர்காலங்களில். ஹல்திராமின் பாதாம்பால், ஜிலேபி, பட்டூரே-(ச்)சோலே, குல்ச்சா-(ச்)சோலே போன்ற சங்கதிகள் டேஸ்ட்டியாக இருக்கும்.

  அதேபோல் டெல்லியின் போஷ் ஏரியாக்களில் ஒன்றான கனாட்ப்ளேஸிற்கருகில் இருக்கிறது பெங்காலி மார்க்கெட். பெங்காலி ஸ்வீட்ஸ்களுக்குப் பேர்போனது. ரஸகுல்லா, ரஸமலாய், காலாஜாமூன், காஜுகட்லி, காரட் ஹல்வா இதெல்லாம் ஜோராக இருக்கும் அங்கே. நல்ல ரெஸ்ட்டாரண்ட்டுகள் சில அங்குண்டு. அங்கும் சில சமயங்களில் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்கு இரண்டு, மூன்று வித்தியாசமான ஸ்வீட்டுகள், நம்கீன்கள் வாங்கிவருவதுண்டு.

  காங்கோவில் இருந்தபோது சில குஜராத்தி நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு டின்னருக்கு வருகையில், குஜராத்தி டோக்ளாவும் செய்வார் என் மனைவி. குலோப்ஜாமுன், டோக்ளா, காரட் ஹல்வா, பர்ஃபி, சமோஸா போன்ற ஐட்டம்களை டின்னர்களில் சேர்த்துவிடுவது அவர் வழக்கம். எனக்குப் பண்ணத்தெரியாதே தவிர, ரசித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு!

  பதிலளிநீக்கு
 24. இப்படிதான் ஜெனிவா மருமகள் அடிக்கடி செய்வாள். மேலே தாளித்துக்கொட்டும்போ
  து கொதிக்கும் வென்னீரையும்,துளி சர்க்கரையும் சேர்த்துப் பரவலாகக் கொட்டினால் டோக்ளா இன்னும் மிருதுவாக வரும். இட்டிலிதட்டை எடுக்கும்போது,தண்ணீர் தெளிக்கிறோமே அதுபோலதான். ரெடிமேட் மாவுகளில் நைலான் டோக்ளா என்றுகூட ஒருவகை சொல்லுவார்கள்.
  குறிப்புகள் நன்றாக உள்ளது.படங்களும். ஒரு வாரத்திற்குப்பின் கணினி. கட்டாயம் எழுதணும் என்று வந்தேன். பசுபதி தரிசனம் கிடைத்தது. டில்லி வந்துவிட்டேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 25. பஜ்ஜி மாவு கரைச்சது மீந்து விட்டால் வேண்டுமானால் செய்து பார்க்கலாம் பார்க்கும்போதுபிடிக்கும் என்று தோன்றவில்லை [

  பதிலளிநீக்கு
 26. ஓ இன்று பானுமதி அக்காவின் டொக்கினா?:) நோ நோ டங்கு ஸ்லிப்பாச்சூஊஊஊ டோக்கிளாவோ.. பெயர் எங்கோ கிளவிப்பட்டதாஅ.. வெரி சோரி கேள்விப்பட்டதா நினைவு.. ஆனா பார்த்ததுமில்லை சாப்பிட்டதும் இல்லை.

  பார்க்க சூப்பரா இருக்கு, காரமாக இருப்பதால் எனக்குப் பிடிக்குமென்றே நினைக்கிறேன். செய்து பார்ப்பேன்.

  எனக்கு இன்னொரு ஐடியாவும் வருது.. இதை கொஞ்சம் பிரட்டல் கறிபோல செய்தால் இன்னும் நல்லா இருக்குமோ என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. ///
  நெல்லைத் தமிழன்20 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:32
  படத்தில் கடுகா அந்தக் கலரில் இருக்கு? ஒரு பிளேட்டுல 2 பீஸ்தானா? குறைந்தது 5 பீஸ் சாப்பிடாட்டா எப்படி சாப்பிட்ட மாதிரி இருக்கும்?///

  ஆஆஆஆஆஆஆஆங்ங்ங் அதேதான்.. இன்னொன்றும் கேய்க்கப் போறேன்ன் தேசிக்காய் சேர்க்கோணும் எனப் போட்டிருக்கிறீங்க ஆனா படத்தில தேசிக்காய் இல்லியே:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா..

  இப்படிக்குக்
  :குடை... வெரி சோரி..
  குறை பிடிப்போர் சங்கம்:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா. என்ன டங்கு ரொம்ப ஸ்லிப்பாகுது? தேசிக்காய் என்றால் தேங்காயா? டோக்ளாவின் மேல் போட்டிருக்கிறேன். பச்சை தேங்காய் துருவலை அப்படியே தூவாமல், தாளித்த கரண்டியில் லேசாக வதக்கி விட்டு போட்டேன், அதனால் தெரியவில்லை போலிருக்கிறது. டோக்ளாவும் சுலபமாகத்தான் இருக்கிறதா? உங்களுக்காக கஷ்டமான ரெசிபி ஒன்றை யோசிக்கிறேன்;)

   நீக்கு
  2. என்னாதூஊஊஊஊஊஊஊஊ தேசிக்காய் என்றால் தேங்காயோஓஓஓ அவ்வ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழனிடன்ம் என் டிக்‌ஷனறி ஒன்றிருக்கு பானுமதி அக்கா:) கொஞ்சம் அதைக் கடன் கேட்டு வாங்கிப் படிச்சுப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. புளொக் ஓனர் எங்கே போயிட்டார்ர்?:) எதுக்கும் பதில் சொல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   நீக்கு
 28. டோக்ளா நானும் செய்வதுண்டு இயட்லி தட்டில் டோக்ளா மாவை ஊற்றி செய்துவிடுவேன் வெந்ததும் எடுத்து நான்கா வெட்டி எடுத்து அதில் மேல் நிறைய கடுகு நிறைய பச்சமிளகாய் போட்டு சாப்பிடுவேன் படமும் செய்முறையும் குட்

  பதிலளிநீக்கு
 29. அருமையாக வந்திருக்கிறது. இங்கே கிடைக்கும் டோக்ளா ஒரே
  இனிப்பு. நீங்கள் செய்திருக்கும் முறை நன்றக இருக்கும்.
  மனம் நிறை வாழ்த்துகள் பானு மா. என் பெண்ணிற்கு மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 30. இன்னிக்கு யாரோட கதை? தி/கீதா? நெ.த.?

  பதிலளிநீக்கு
 31. செய்ய ஈசியாதான் இருக்கும்போல!

  பதிலளிநீக்கு
 32. ருசியான ரெசிபி பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!