வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத் தலை எழுத்தென்றால் உம்மைத் தாங்கிட நாதியுண்டோ



1976 இல் வெளிவந்த திரைப்படம்.  ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்.  முதலில் நாவலாக வந்து பின்னர் படமானது.  இந்த நாவலே விகடனில் வெளிவந்த'அக்னிப்ரவேசம்' கதையின் நீட்சிதான் என்று நினைவு.



இந்தப் படத்துக்கான இசை எம் எஸ் விஸ்வநாதன்.  படத்தில் இரண்டு பாடல்கள்.  ஒன்று வாணி ஜெயராம் பாடிய'வேறு இடம் தேடிப் போவாளோ...'



இரண்டாவது பாடல் "கண்டதைச் சொல்லுகிறேன்.." எம் எஸ் விஸ்வநாதன் பாடியது.



இரண்டு பாடல்களுமே ஜெயகாந்தன் அவர்களே எழுதி இருக்கிறார்.  இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள்.



வேறு இடம் தேடிப் போவாளோ - 
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ 
வேறு இடம் தேடிப் போவாளோ - 
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ

நூறு முறை இவள் புறப்பட்டாள்--
விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள் 

பருவமழை பொழியப் பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ
பருவமழை பொழியப் பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ
இவள் பருவமழையாலே வாழ்க்கை பாலைவனமாகியதே 
பருவமழையாலே வாழ்க்கை பாலைவனமாகியதே


தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்தியம் ஆகாதோ
தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்தியம் ஆகாதோ
இவள் தரவில்லை பெறவில்லை தனிமரமாய் ஆனாளே 
தரவில்லை பெறவில்லை தனிமரமாய் ஆனாளே
சிறுவயதில் செய்த பிழை சிலுவையென சுமக்கின்றாள் 
இவள்
மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ
மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ

வேறு இடம் தேடிப் போவாளோ ....
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ...
வேதனையில் இருந்து மீள்வாளோ...



இன்று நான் பகிர எண்ணிய பாடல் இதுதான்.  கண்டதைச் சொல்லுகிறேன்...  




எம் எஸ் வி குரலில் சில பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இக்கரைக்கு அக்கரைப் பச்சை பாடல்.  அப்புறம் இந்தப் பாடல்...  இன்னும் சில பாடல்கள்.



இந்தப் படத்துக்காக நடிகை லக்ஷ்மிக்கு தேசிய விருது கிடைத்தது.




கண்டதைச் சொல்லுகிறேன்  
உங்கள் கதையைச் சொல்லுகிறேன் 

இதைக் காணவும் கண்டு நாணவும்  
உமக்குக் காரணம் உண்டென்றால் 
அவமானம் எனக்குண்டோ  

கண்டதைச் சொல்லுகிறேன்  
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்  

நல்லதை சொல்லுகிறேன் 
இங்கு நடந்ததை சொல்லுகிறேன் 

நல்லதை சொல்லுகிறேன் 
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்  

இதற்கெனைக் கொல்வதும் கொன்று 
கோயிலில் வைப்பதும் 
கொள்கை உமக்கென்றால் 
உம்முடன் கூடி இருப்பதுண்டோ 
கூடி இருப்பதுண்டோ  

கண்டதைச் சொல்லுகிறேன்  
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்  
இதைக் காணவும் கண்டு 
நாணவும்  உமக்கு 
காரணம் உண்டென்றால் 
வமானம் எனக்குண்டோ  

வாழ்ந்திடச் சொல்லுகிறேன் 
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன் 
வாழ்ந்திடச் சொல்லுகிறேன் 
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன் 
இங்கு தாழ்வதும் தாழ்ந்து 
வீழ்வதும் உமக்குத் 
தலை எழுத்தென்றால் 
உம்மைத் தாங்கிட நாதியுண்டோ 
தாங்கிட நாதியுண்டோ  

கண்டதைச் சொல்லுகிறேன்  
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்  
இதைக் காணவும் கண்டு 
நாணவும்  உமக்குக் காரணம் உண்டென்றால் 
அவமானம் எனக்குண்டோ  

கும்பிடச் சொல்லுகிறேன் 
உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன் 
கும்பிடச் சொல்லுகிறேன் 
உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன் 
என்னை நம்பவும் நம்பி 
அன்பினில் தோயவும் 
நம்பிக்கை இல்லையென்றால் 
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ 
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ  

கண்டதைச் சொல்லுகிறேன்  
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்   
இதைக் காணவும் கண்டு நாணவும்  
உமக்குக் காரணம் உண்டென்றால் 
அவமானம் எனக்குண்டோ..



137 கருத்துகள்:

  1. மீண்டும் ஆசிகளும் வாழ்த்துகளும் இங்கேயும் தெரிவிச்சுக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா... வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பாடல் என்றால் ஒன்று மட்டும் என்று பொருள்!! பகிர்ந்திருக்கும் இரண்டில் எது பிடித்த பாடல் என்று சொல்லுங்கள் துரை ஸார்...

      நீக்கு
    2. கண்டதைச் சொல்லுகிறேன்....
      உங்கள் கதையைச் சொல்லுகிறேன்...

      நீக்கு
    3. இந்தப் பாடலை மட்டும் பகிர வந்து இதில் இருக்கும் இன்னும் ஒரு பாடலையும் - அதுவும் நல்ல பாடல் - ஏன் விடவேண்டும் என்றே அதையும் சேர்த்தே கொடுத்தேன். என் முதல் தெரிவும் இதை பாடல்தான் துரை ஸார்.

      நீக்கு
  4. விகடனில் (?) சிறு கதையாக வந்தது. பின்னர் சாவியிலோ அல்லது தினமணி கதிரிலோ தொடராக வந்தது. இரண்டுமே படிச்சிருக்கேன். திரைப்படமும் பார்த்திருக்கேன். கதையாக, நாவலாக மனதைக் கவர்ந்த அளவுக்குப் படம் கவரவில்லை. இத்தனைக்கும் ஜெயகாந்தன் நுணுக்கமாக எடுக்க வைத்திருந்தார். பொருத்தமான நடிகர்களும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கீதா அக்கா... நான் முதலில் சிறுகதை, பின்னர் படம்.. பிறகு நாவல்...

      நீக்கு
    2. நான் அறிந்தவரை படம் வெளிவரும் முன்னரே நாவல் தொடராக வந்துவிட்டது!ஏதோ ஒரு வாராந்தரியில். அதற்கு கோபுலுவின் ஓவியங்கள் இன்னமும் மனதில் நிற்கின்றன.

      நீக்கு
  5. நல்ல பாடல்கள். எதற்காகவோ கீதா அக்கா வாழ்த்தியிருக்கிறார். நானும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்(காரணம் பின்னர் முகநூலில் தெரிந்து கொள்கிறேன்). வாழிய நலம்.

    பதிலளிநீக்கு
  6. ஶ்ரீராமுக்கு இன்று திருமணநாள். அதுக்குத் தான் வாழ்த்து. முன் பதிவிலே கூடச் சொல்லி இருக்கேனே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதுக்கு முன்னரும் ஶ்ரீராமின் திருமண நாளுக்கு வாழ்த்தி இருக்கேன் போல! சொல்லப் போனால் எனக்கு நினைவில் இல்லை. முந்தாநாள் தான் 123Greetings.com வந்து நினைவூட்டியது. அப்போத் தான் நினைவிலேயும் வந்தது. ஶ்ரீராம் நான் என்னமோ ஏற்கெனவே தெரிஞ்சு வைச்சுண்டு இருந்ததா நினைப்பார். :)) ஆனால் நேற்றே வாழ்த்து மடலும் அனுப்பிட்டேன். ஶ்ரீராம் தான் இன்னமும் பார்க்கலை! :)))))

      நீக்கு
    2. க்ரீட்டிங்ஸ் வந்தது கீதாக்கா. நன்றி. அதற்கு அங்கு பதில் அனுப்ப முடியுமா என்று தெரியாததால் விட்டுவிட்டேன்!

      நீக்கு
    3. ஶ்ரீராம், நீங்க பார்த்தாச்சு என்பதை எனக்கு க்ரீட்டிங்க்ஸ்.காம் இன்னமும் தெரிவிக்கலை. அதான் பார்க்கலை என நினைத்தேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. விகடனில் வெளிவந்த'அக்னிப்ரவேசம்' கதையின் நீட்சிதான் என்று நினைவு.//

    விகடனில் முத்திரை கதையாக வந்தது.மாயாவின் படம் இன்னும் கண்களில்.

    பதிலளிநீக்கு
  10. "கங்கை எங்கே போகிறாள்" என்று தொடர்ந்து எழுதினார். அந்த கதை அவ்வளவு வரவேற்பு பெறவில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கை எங்கே போகிறாள் கதையும் படித்திருக்கிறேன். என்னிடம் தேடிப்பார்த்தால் பைண்டிங் கலெக்ஷனில் இருக்கும்.

      நீக்கு
  11. @ ஸ்ரீராம்: திருமணநாள் நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பாடலும் பிடிக்கும்.
    என் அம்மா விகடினில் வந்த முத்திரை கதைகளை தொகுத்து வைத்து இருந்தார்.
    அப்போது பிரபல எழுத்தாளர்கள் கதைகள் வார வாரம் முத்திரை கதையாக வந்தது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா... விகடன் பைண்டிங் தொகுப்பில் இப்போதும் அக்னிப்ரவேசம் என்னிடம் இருக்கிறது.

      நீக்கு
  13. எம்.எஸ்.வி.பாடியதில் எனக்கு பிடித்தது "பயணம்" பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.. பயணம் பாடலும் நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  14. சிறுகதையைப் படித்திருக்கிறேன். நாவலை அல்ல. படம்பற்றிப் படித்திருக்கிறேன். பார்க்கவில்லை.

    ஜேகே-யின் கருத்தாழம் கொண்ட பாடல்கள். எம் எஸ் வி-யின் குரலில் நான் ரசித்தது?
    இவையல்ல. இன்னொன்று:

    அல்லா.. அல்லா..
    ஓ! அல்லா.. அல்லா!
    நீ இல்லாத உலகே இல்லை
    நீதானே உலகின் எல்லை
    அல்லா.. அல்லா..
    ஓ! அல்லா.. அல்லா ..

    சின்ன வயதில் இதைப் பாடித் திரிந்திருக்கிறேன்.
    யார் எழுதியது? படம்? ஒன்றும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஸார்.. படம் பார்க்கலாம். மோசமாய் இருக்காது.

      அல்லா அல்லா பாடல் முகமது பின் துக்ளக் படம். கண்ணதாசன் பாடலாயிருக்கலாம்.

      நீக்கு
    2. 'நீ இல்லாத இடமே இல்லை...’ என்று வரவேண்டும் (நான் மேலே எழுதியிருப்பதில்). பாடலை இயற்றியது வாலி. படம் நீங்கள் சொன்னது.

      கடைசி பாரா இப்படி:

      இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
      இல்லார்க்கு எதுதான் சொந்தம்
      நல்லார்க்கும் பொல்லார்க்கும்தான்
      நாயகனே நீயே சொந்தம்..

      அல்லா.. அல்லா..

      **
      சில நேரங்களில் சில மனிதர்கள் தரமான படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். டிவிடி கிடைத்தால் வாங்கிப் பார்க்கலாம்.

      நீக்கு
    3. முகமது-பின் - துக்ளக் படமும் பார்த்திருக்கேன். சோவின் "யாருக்கும் வெட்கமில்லை!" படமும் பார்த்திருக்கேன். இரண்டுமே நாடகங்களாகவும் பார்த்தேன். யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தில் சுகுமாரி நடித்த பாத்திரத்தில் படத்தில் ஜெயலலிதா நடித்திருப்பார்.

      நீக்கு
    4. கீதா அக்கா நானும் இந்த இரண்டு படங்களும் பார்த்திருக்கிறேன். கூடவே 'உண்மையே உன் விலையென்ன படமும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    5. ஏ அண்ணன் இந்தாங்கோ கச் இட்:)).. நானும் இனிமேல்தான் பார்க்கப் போகிறேன்ன்.. நீங்களும் பாருங்கோ.. மறக்காமல் இதைக் காவிக்கொண்டு வந்து தந்தமைக்கான ஃபீஸ் ஐ என் எக்கவுண்டில் சேர்த்திடுங்கோ:))... நல்ல கிளியராகவே இருக்கு.

      https://www.youtube.com/watch?v=RsijKvLbTQM

      நீக்கு
  15. நிதானமாக, அருமையாக நகரும் காட்சிகளைக் கொண்ட அருமையான படங்கள். ஒவ்வொரு நடிகரும், நடிகையும் நன்கு நடித்திருப்பார்கள். லட்சுமியைவிட நாகேஷை அதிகம் ரசித்தேன், இப்படத்தில்.

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிதாக அமைந்திட எல்லாம் வல்லவனின் பூரண அருள் உங்களுக்குக் கிடைத்திடட்டும்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் - புத்தகமாக என்னிடம் இருக்கிறது. படம் பார்த்ததில்லை. பாடல்கள் கேட்டதுண்டு.

    எம்.எஸ். குரலில் பாடல்கள் - என்ன ஒரு குரல்.... கம்பீரமான குரல்! எனக்கும் அவரது குரலில் சில பாடல்கள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய மாலை வணக்கம் வெங்கட்! வாழ்த்துகளுக்கு நன்றி. எம் எஸ் வி குரலில் இன்னும் பல பாடல்கள் எனக்குப் பிடடிக்கும். சொல்லத்தான் நினைக்கிறேன், திருப்பதி மலையில் ஏறுகின்றாள், எனக்கொரு காதலி இருக்கின்றாள்...

      நீக்கு
  17. இரண்டாவது பாடல் மிகவும் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  18. இனிய திருமணநாள் வாழ்த்துகள் ஶ்ரீராம்.

    படம் பார்த்து இருக்கிறேன்.புத்தகம் படித்ததில்லை.

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்....புத்தகம் வெளிவந்த புதிதில் மதுரை அமேரிக்கன் கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அப்போது எங்கள் கல்லூரியில் இருந்து அவருடன்
    உரையாட வகுப்பு முழுவதும் சென்று இருந்தோம். அது நினைவிற்கு வந்தது.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. ஓ.. நீங்கள் அமெரிக்கன் கல்லூரியில் படித்தவரா?

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் ஸ்ரீராம்...

    அனைத்து நலன்களுடன்
    ஆண்டுகள் பலநூறு வாழ்தற்கு
    அன்புடன் வாழ்த்துகிறேன்...

    மனை மங்கலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம் உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.

    பாடல் நல்லா இருந்தது. வரிகளையும் புரிந்து படித்தேன். எம்.எஸ்.வி. குரலே வித்தியாசமா நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லைத்தமிழன். பாடலை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  22. வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார்!
    பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  23. முதலில் திரைப்படம்,பிறகு நாவல், பிறகு சிறுகதை என்று ரிவர்ஸ் ஆர்டரில் படித்தேன். லக்ஷ்மி, மற்றும் நாகேஷின் திறமை எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடிக்கவே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஶ்ரீகாந்தும், அதுவரை வில்லியாகவே நடித்துக் கொண்டிருந்த சுந்தரி பாயும்(லக்ஷ்மியின் அம்மாவாக வருவார்) பிரமிப்பூட்டினார்கள்.
    அதை விட பிரமிப்பூட்டிய விஷயம் 'அக்னி பிரவேசம்' கதையை படித்த பொழுதுதான் ஏற்பட்டது. தான் வாழும் சமூகத்தின் மீது, சுற்றியுள்ள மனிதர்கள் மீது எத்தனை அக்கறை இருந்தால் இப்படி ஒரு கதை எழுத தோன்றியிருக்கும்? என்று ஜெயகாந்தன் மீது பிரமிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. அந்த அக்கறையை மக்கள் அங்கீகரிக்காத பொழுது வந்த வருத்தமும், கோபமும்தான் 'கண்டதைச் சொல்லுகிறேன்...' பாட்டாக வெளிப்பட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீகாந்த் அடக்கி வாசிப்பார் எப்போவும். முதல் படமான வெண்ணிற ஆடையில் ஒரே மாதிரி முகபாவத்துடன் இருப்பார். ஆனால் போகப் போக நன்கு நடிக்க ஆரம்பித்து விட்டார். பல நகைச்சுவைப்படங்களில் அவர் நடிப்பு நன்றாக இருக்கும். ஆர்ப்பாட்டமாக நடிக்க மாட்டார். இந்தக் கதாபாத்திரத்துக்கு ஶ்ரீகாந்தைத் தவிர்த்து யாரைப் போட்டிருந்தாலும் எடுபடாது! ஜிவாஜியெல்லாம் அமர்க்களப்படுத்திடுவார். இது அப்படி நடிக்க வேண்டிய பாத்திரம் அல்ல! அதை உணர்ந்து ஶ்ரீகாந்த் நடித்திருப்பார்.

      நீக்கு
    2. ஆமாம் பானு அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களை நனையும் ரசித்தேன். நீங்கள் சொன்னதும்தான் உரைக்கிறது!

      கண்டதையும் எழுதி இருக்கான் பாரு என்று திட்டி இருப்பார்களோ என்னவோ... கண்டதைச் சொல்கிறேன் என்று பாட்டு எழுதி விட்டார்.

      நீக்கு
    3. கீதா அக்கா.. ஜேகே நிச்சயம் சிவாஜியைத் தெரிவு செய்திருக்க மாட்டார். ஆனால் நாகேஷ் அவருடைய லிஸ்ட்டில் எப்போதும் இருப்பார். அவருடைய "யாருக்காக அழுதான்" பட ஹீரோ ஜோசப் நாகேஷ்தானே?

      நீக்கு
    4. யாருக்காக அழுதான் படமும் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    5. //Geetha Sambasivam17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:28
      யாருக்காக அழுதான் படமும் பார்த்திருக்கேன்.// என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈ:) என்னைத்தூக்கித் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    6. பானு மேடம்.. அக்னி பிரவேசம் கதையை இன்னும் துல்லியமாக வாசிக்க வேண்டும். அவள் அம்மா அவள் தலையில் தண்ணீரைக் கொட்டும் பொழுதும் அவன் அளித்த சூயிங்கம்மை குழந்தைத்தன்மையாய் அவள் ரச்னையுடன் வாயில் குதப்பிக் கொண்டிருப்பாள்.

      அறியாப் பருவத்து அவளின் அந்த ரனையும். இந்தக் கதை பிரசுரம் கண்ட பொழுது எழுந்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் முயற்சியுமாகத் தான் சி.சி.ம. அவர்டமிருந்து வெளிப்பட்டது.

      நீக்கு
  24. சி.நே.சி.ம. படத்தின் துவக்கத்தில் வரும் மழை காட்சியை அப்போது சென்னையில் அடித்த புயலின் பொழுது அப்படியே லைவ் ஆக படமாக்கினார்களாம்.

    பதிலளிநீக்கு
  25. ஶ்ரீராம் தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் மீண்டும் மீண்டும் வரவும், விரைவில் மாமனார், மாமியாராகவும் வாழ்த்துகிறேன்.🎉🎁🎂🙌💏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே,! விரைவில் மாமனார், மாமியார் ஆகித் தாத்தா, பாட்டியாகவும் ஆகணும்.

      நீக்கு
    2. /விரைவில் மாமனார், மாமியாராகவும் வாழ்த்துகிறேன்// // விரைவில் மாமனார், மாமியார் ஆகித் தாத்தா, பாட்டியாகவும் ஆகணும்.//

      ஹா... ஹா... ஹா.... உங்கள் வாக்கும், கீதா அக்காவின் வாக்கும் பொன்னாகட்டும்...

      நீக்கு
    3. ஆவ்வ்வ்வ் மீயும் மீயும் இதுக்கு படுபயங்கரமா வழிமொழிஞ்சு வாழ்த்துகிறேன்ன்:)).. அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:))

      நீக்கு
    4. // அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:)) //

      வரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. நீங்கள்தான் ஞாயிறு படங்கள் பக்கம் வருவதேயில்லையே...

      நீக்கு
    5. ///வரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. ///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜத்தியமாக? ஆணையாக? நிட்சயமாக?.. ஹையோ நேக்கு காண்ட்ஸும் ஓடல்லே லெக்ஸ்சும் ஆடல்லே.. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ.. கீதாஆஆஆஆஆஆஅ எங்கே போயிட்டீங்க எல்லோரும் ஓடி வாஅங்கோ.. சனிக்கிழமை இரவு யாருமே நித்திரை கொள்ளக்கூடா ஜொள்ளிட்டேன்ன்ன்:).. பக்கோடா செய்கிறேன் கச்சானும் வறுத்தெடுத்துக் கொண்டு வந்து எங்கள் புளொக் கதவுக்குப் பக்கத்தில வெயிட் பண்ணுவோம்:)).. ஒருவேளை ஏமாத்தினாரெனில்.. ஸ்ரெயிட்டா காவிரிதான்:)) கீசாக்கா இதுக்கு ஜெல்ப் பண்ணுவா:)).

      //நீங்கள்தான் ஞாயிறு படங்கள் பக்கம் வருவதேயில்லையே...//

      ஞாயிறில் வரவைப்பதற்கான உத்தியோ?:) ஹா ஹா ஹா அப்படியில்லை சனிதான் வந்து என்ன பண்ணுவது என வரமாட்டேன், ஞ்ஜ்யிறு முடியும்போதெல்லாம் வருவேன்ன்.. வீட்டில் இல்லாட்டில்தான் விடுபட்டுவிடும்..

      நீக்கு
    6. பொய்யா சொல்றேன்..... வந்துதான் பாருங்களேன்...

      நீக்கு
    7. http://68.media.tumblr.com/abeaf00d2c4c3a30921ab7744e4236e3/tumblr_os1r31WKhF1uuyy36o1_400.gif

      நீக்கு
  26. அருமையான பாடல்கள் பகிர்வுக்கு மி்க்க நன்றி

    பதிலளிநீக்கு
  27. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் ஹர்ட்டில் பொயிங்குதே....

    வாவ்வ்வ்வ்வ்வ்வ் நான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஸ்டோரி வாசித்து விட்டேன்..ன்ன்ன்ன்ன்ன்ன்.. ஆனா ஜத்தியமா தலைப்பு மட்டும்தான் மனதில இருக்குது கதை நீறு பூத்த நெருப்பு:).. நினைவுக்கு வரமாட்டேன் என அடம் புய்க்குது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... படத்தைத் தேடி எடுத்து விட்டீர்கள் போல... பாருங்கள் படத்தை.

      நீக்கு
  28. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் உங்களுக்கும் ஓகஸ்ட்டிலாஆஆஆஆஆஆஅ அவ்வ்வ்வ்வ்வ்வ்
    ஸ்ரீராமுக்கும் அண்ணிக்கும் இனிய இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..

    கயூனா பீஜ் இன்
    கடற்கரை மணல்போல்
    பல்லாண்டு காலம்
    நீடூழி வாழ வாழ்த்துகிறோம்..
    ////இப்படிக்கு அதிராவும் பிரித்தானிய மக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவும் பிரித்தானிய மக்களும் வாழ்த்தியது மகிழ்ச்சி! நன்றி. உங்களுக்கும் ஆகஸ்டிலா என்றால் நீங்களும் ஆகஸ்டில்தான் திருமணம் செய்தீர்களா?

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    முதலில் தங்களுக்கு இன்று திருமண நாளென்று அறிந்து கொண்டேன். நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தபடி ,நானும் என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த படம் பார்த்ததில்லை. வந்த புதிதில் பிரபலமாக பேசப் பட்டது. படம் பார்க்க எங்கள் அம்மா வீட்டில் தடை.. அப்போது எனக்கு இன்னமும் கால் விலங்கிடவில்லை. ஆனால் பாடல்கள் கேட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் இரண்டும் நன்றாக இருக்கும். இப்போதும் பாடல் வரிகளுடன் கேட்டு மகிழ்ந்தேன். இந்த நாவல் பிறகு படித்ததாகவும் நினைவிருக்கிறது. ஆனாலும் கதை, கதை முடிவு சட்டென்று நினைவு வரவில்லை. ஜெயகாந்தன் எழுத்துக்களை பிற கதைகளில் ரசித்துப் படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் பார்க்க எங்கள் அம்மா வீட்டில் தடை.. அப்போது எனக்கு இன்னமும் கால் விலங்கிடவில்லை. // நான் பார்த்தது தொலைக்காட்சியில் தான். அப்போ சென்னைத் தொலைக்காட்சியில் ஞாயிறன்று எல்லா மொழிப்படங்களிலும் விருதுகள் வாங்கின படங்களைப் போடுவார்கள். அப்படி வந்தப்போ பார்த்தது தான்! :) பொதுவா நான் பார்த்த எந்தத் திரைப்படமும் வந்த அன்னிக்கேயோ அல்லது உடனேயோ திரை அரங்கில் போய்ப் பார்த்தது இல்லை. பெரும்பாலான படங்கள் தூர்தர்ஷன், பின்னர் வந்த கேபிள் தொலைக்காட்சி சானல்கள் தயவு! :)

      நீக்கு
    2. ///நான் பார்த்தது தொலைக்காட்சியில் தான்.///

      கேட்டாவா? கேட்டாவா கமலா சிஸ் கேட்டாவா?:)).. ஹையோ ஆண்டவா நான் என் பாட்டில தேம்ஸ் கரையால போகும்போது இதை எல்லாம் எதுக்குக் கண்ணில காட்டிக் குதிக்க வைக்கிறாயப்பனே:))

      நீக்கு
    3. வாங்க கமலா சிஸ்...

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      படம் வெளிவந்த ஆண்டு 76. அப்போது உங்களுக்குக் கல்யாண வயது என்றால்....

      எப்படி எல்லாம் துப்பறிய வேண்டி இருக்கிறது...!!!! ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    4. கீதாக்கா.. நான் இந்தப் படத்தைத் தியேட்டரில்தான் பார்த்தேன். தஞ்சாவூரில்!

      இரண்டு வருடங்களுக்கு முன் டிசம்பர் கச்சேரின் சென்ற ஒரு நாளில் கௌ அங்கிளும் நானும் சங்கரா ஹாலில் டிவிடி, சிடி பக்கம் மேய்ந்தபோது இதன் டிவிடி கண்ணில் பட வாங்கி வைத்தேன்... இப்போது எங்கே இருக்கிறது என்று தேடவேண்டும்!

      நீக்கு
    5. ஹா... ஹா... ஹா.. கீதாக்கா தொலைக்காட்சியில் பார்த்ததில் உங்களுக்கென்ன கஷ்டம் அதிரா?!!!

      நீக்கு
    6. //படம் வெளிவந்த ஆண்டு 76. அப்போது உங்களுக்குக் கல்யாண வயது என்றால்....

      எப்படி எல்லாம் துப்பறிய வேண்டி இருக்கிறது...!!!! ஹா... ஹா... ஹா...///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும்:))

      நீக்கு
    7. அதானே, என்ன கஷ்டம் அதிரடி! :P :P :P

      நீக்கு
    8. ///
      ஸ்ரீராம்.17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:23
      ஹா... ஹா... ஹா.. கீதாக்கா தொலைக்காட்சியில் பார்த்ததில் உங்களுக்கென்ன கஷ்டம் அதிரா?!!!///

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இருங்கோ கீசாக்கா இப்போ லாண்ட் ஆவா:)) இடி முழக்கத்தோடு:))

      நீக்கு
    9. ஹையோ கீசாக்கா லாண்டட்.. அதிர்வினால என் கையில இருந்த ரீ யைக் கீ போர்ட்டில ஊத்திட்டேன்ன்:) இப்போ எனக்கு நஷ்டைஇடு தரோணும்? ஆர் தருவீங்க உடனே ஜொள்ளுங்கோ?:))

      நீக்கு
    10. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!ஒண்ணும் கிடையாது!

      நீக்கு
    11. https://tse4.mm.bing.net/th?id=OIP.cSIq6r8c9DFkmVwQxiOxvwAAAA&pid=15.1&P=0&w=197&h=171

      நீக்கு
  30. இரு பாட்டுக்களுமே சூப்பர்.. முதல் பாட்டு கேட்டதே இல்லை, இரண்டாவது முதல்வரி எங்கோ கேட்டதாக நினைவு இருக்கு.. அதெதுக்கு சைக்கிள் ஓடும்போது நாகேஸ் கிரான்பா[[அதிராட முறையில நொட் நெ.தமிழனின் முறையாக்கும்:)) ஹையோ இதை எல்லாம் தெளிவாச் சொல்ல வேண்டிக் கிடக்கே:))]] காலைத்தூக்கிச் சொறிகிறார்? ஹா ஹா ஹா..

    என்ன இருந்தாலும் எனக்கு என் பாலார் பாட்டுத்தான் கொஞ்சம் கூடவா பிடிச்சிருக்கு.. மற்றதுக்கு 2ம் இடம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகேஷ் காலைத் தூக்கிச் சொரிகிறார். ஏன் தெரியுமா? அவர் இயற்கையான நடிகராம். படமும் இயல்பாக எடுக்கப் பட்டிருக்கிறதாம். ஹா... ஹா... ஹா.. நாணல் படத்திலும் நாகேஷ் சைக்கிள் ஒட்டி வருவார். "நல்லா இருக்கே.. நீ கேஸ் எழுதணும்ங்கறதுக்காக நான் லாரி வாங்கியா ஆக்சிடன்ட் செய்ய முடியும்?" என்று கேட்பார்!

      நீக்கு
    2. ஶ்ரீராம், நாணல் நல்ல படங்களில் ஒன்று. பல முறை ரசித்திருக்கிறேன். முதல் முதலில் பார்த்தது மதுரைக்கு அருகே உள்ள எங்க அப்பாவின் பூர்விகமான மேல்மங்கலத்தில்! அதன் பின்னரும் சில முறை பார்க்க நேர்ந்தது.

      நீக்கு
    3. ஆங்ங்ங்ங் கையும் களவுமாப் பிடிச்சிட்டேன்ன்:)) எனக்குப் படம் பிடிக்காது சினிமாப் பார்ப்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே.. முழுப்படக்கதையும் ஜொள்ளுறா கீசாக்கா:)).. ஆவ்வ்வ்வ்வ்வ் வழி விடுங்கோ நான் நீந்தியே கடந்திடுவேன் காவிரியை:)) கீசாக்காவுக்கு நீந்தத் தெரியாது:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. ஹா... ஹா... ஹா... ஆமாம். கீதாக்கா படங்கள் பற்றி இன்னும் நிறைய பேசுவார். சும்மா சொல்வதுதான் நான் படமே பார்ப்பதில்லை என்று!

      நீக்கு
    5. //சும்மா சொல்வதுதான் நான் படமே பார்ப்பதில்லை என்று!//

      அதே அதே அதிரபதே:) பாருங்கோ ஸ்ரீராம் கீழே அந்தக் ஹிந்திப்படம் கூடப் பார்த்திருக்கிறா, அதில் சகி சகி என அடிக்கடி கூப்பிடுவார் என்பதையும் நினைவில வச்சிருக்கிறா கர்ர்:)).. இனிமேலும் நான் சினிமா பார்ப்பதில்லை எனச் சொன்னால் காவிரியில தள்ளப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு தாமிரபரணியில வீசிடுங்கோ அது கீசாக்கா வீட்டுக்கு தூரமா ஓடுது:))

      நீக்கு
    6. @கீதாக்கா.... நாணல் நல்ல படங்களில் ஒன்று. அதில் பிலஹரி ராகத்தில் "பொறுமையுடன் நினது" என்று சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடலும், விண்ணுக்கு மேலாடை பாடலும் நன்றாயிருக்கும்.

      நீக்கு
    7. @அதிரடி, @ஶ்ரீராம், நான் சொல்வது நல்ல படங்களை மட்டுமே! மற்றபடி தமிழ் சினிமாவை அல்ல! இது புரியுதா? அதோடு ஶ்ரீராம் மாதிரி பாட்டைச் சொன்னதுமே படம் பெயரோ, படம் பெயரைச் சொன்னதுமே பாட்டு நினைவோ வரதில்லை! நீங்கள் இங்கே போடும் பல பாடல்கள், சினிமாக்கள் எனக்குப் புதிது! தெரிந்ததைத் தெரிந்தது என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் சொல்லும் ஒரே நபராக்கும் நான்! ஹிஹிஹி, சத்தியம் தொலைக்காட்சி பார்க்கிறாப்போல் இருக்குமே! :)))))))

      நீக்கு
    8. ஆமாம் அதிரா.. அந்த இந்திப்படம் கூட அக்கா பார்த்திருப்பது ஆச்சர்யம். அனால் அந்தப் பாடல்கள் பற்றி பேசவில்லை. நான் அமிதாப் ரசிகன் அப்போது. அதைவிட ஆர் டி பர்மன் கிஷோர் ரசிகன். அந்தப் பாடல்கள்தான் என்னை அந்தப் படம் பார்க்க இழுத்தன!

      நீக்கு
    9. வீட்டுக்கு எண்பதில் தொலைக்காட்சி வந்தது. அதன் தயவில் சினிமாப்படங்கள் பார்க்க முடிந்தது. ஞாயிறு படத்துக்கு எங்க வீட்டில் அப்போ கூட்டம் கூடும். டிக்கெட் வைச்சிருந்தால் கூட வாங்கிட்டுப் பார்க்க வந்திருப்பாங்க! சில சமயங்கள் எங்களுக்கே உட்கார இடம் கிடைக்காது! :))))

      நீக்கு
    10. நாணல் படமும் விரைவில் பார்க்கப்போறேன், கீசாக்கா நல்லதென சொல்லியிருப்பதால்..:))

      நீக்கு
    11. இப்படி லிஸ்ட் எடுத்தால் நீங்கள் நிறைய படம் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டி இருக்கும் அதிரா.

      நீக்கு
    12. //ஞாயிறு படத்துக்கு எங்க வீட்டில் அப்போ கூட்டம் கூடும்.//

      எங்கள் வீட்டிலும்தான். அதே... அதே....

      நீக்கு
    13. நல்ல கதையுள்ள படங்கள் எனில் பார்க்கப் பிடிக்கும் ஸ்ரீராம்.. சிலது நல்லாயிருக்கே என தொடங்கி பாதியில் விட்டு விடுவதும் உண்டு..

      நீக்கு
    14. அப்போ பழைய படங்கள்தான் பார்க்கணும். நான் சமீபத்தில் டோரா பார்த்தேன். அப்புறம் குற்றம் 23. இரண்டுமே ரசிக்கும் வண்ணம் இருந்தன. டோராவில் நயன் தூள் கிளப்பி இருக்கிறார்!

      நீக்கு
    15. கடைக்குட்டி சிங்கமும் பாருங்கோ.. ஓ நயன் எனில் பார்க்கலாமே...:)

      நீக்கு
  31. பெண் செய்த தவற்றுக்கு தாய் ஒரு குடம்தண்ணிர் ஊற்றி எதுவும் நடக்காதது போல் இருப்பாரே அந்தக் கதையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... ஆமாம்... அந்தக் கதையேதான் ஜி எம் பி ஸார்.

      நீக்கு
    2. ஜிஎம்பி சார், மறுபடி அந்தக் கதையை (கிடைச்சால்) படியுங்க. பெண் தவறெல்லாம் செய்திருக்க மாட்டாள். ஆண், பணக்காரன் என்ற திமிரில் ஆண் அவளை பலவந்தப்படுத்தி இருப்பான்! உங்கள் கருத்து ஏற்கத் தக்கது அல்ல. அதை ஶ்ரீராமும் ஆமோதித்திருக்க வேண்டாமோ! :(

      நீக்கு
    3. ஆவ்வ்வ்வ் மீயும் இதையேதான் நினைச்சேன் கீசாக்கா.. ஜி எம் பி ஐயாவுக்கு பெண்ணில தவறு என்பது மட்டும் எவ்ளோ சார்ப்பா நினைவில இருக்குது பாருங்கோ கர்ர்ர்:)) ஹா ஹா ஹா நான் படம் பார்க்காமையால காக்கா போகப்பார்த்தேன்ன்:) விடாதீங்கோ கீசாக்கா ஸ்ரீராம் ரெண்டு தரம் ஆமாம் ஜொள்ளிட்டார் அதுக்கு கர்ர்ர்ர்:))

      நீக்கு
    4. கீதாக்கா... ஆமோதித்திருப்பது தாய் பெண்ணின் தலையில் தண்ணீர் ஊற்றும் காட்சி வரும் படம் என்று சொல்ல.

      அதே சமயம்.... படத்தைப் பார்த்தீர்களானால், அல்லது கதையில் வருமோ என்னவோ.. கனகாவுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கும். அது பாலியல் பலாத்காரம்தானா, நாமும் விரும்பியே உடன்பட்டோமா என்று... அதன் காரணமாகவே அவள் பிரபுவை நட்பில் தொடர்ந்து காதலிக்க ஆரம்பிப்பாள்.

      நீக்கு
    5. கனகா என்று டைப் ஆகிவிட்டது. கங்கா என்றிருக்க வேண்டும்!

      நீக்கு
    6. ஶ்ரீராம், சினிமாவில் இப்படியான அர்த்தத்தில் வருதோ என்னமோ! நினைவில் இல்லை. ஆனால் நாவலில் இப்படி அர்த்தத்தில் வராது. ஓர் ஆர்வ மிகுதியால் அவன் இப்போ எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அவள் சிநேகிதியும் தூண்டி விடுவாள் என்ற நினைவு. தேடிப் பார்ப்பாள். அவன் திருமணம் ஆகி பதின்ம வயதுப் பெண் ஒருத்தியின் தகப்பன் என்பது தெரியும்.பெண்ணிடம் தான் முதலில் நட்புக் கொள்ளுவாள் என நினைக்கிறேன். பின்னரே அவன் வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்றே நுழைவாள். ஆரம்பத்தில் அது ஒரு விதமான பழிவாங்கலில் ஆரம்பிக்கும் என எண்ணம். பின்னர் அது மாறிப் போகும்.

      நீக்கு
  32. எனக்குத்தெரிந்த ஒரு அண்ணாவின் அப்பா, நிறைய இப்படித் தொடர்கதைகளைச் சேகரித்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தார், பல புத்தகங்களும் சேர்த்து வைத்திருந்தார், அப்போ எனக்கிருந்த கதைப்புத்தக மோகம் பார்த்து, அந்த அண்ணா, அப்பாவிடமிருந்து வாங்கி வந்து தருவார், நான் பத்திரமாக வாசித்து விட்டுக் குடுப்பேன், இப்படிப் பல கதைகள் படித்தேன்.. பெயர்கள் நினைவிலில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா தயவில் என் பாட்டி தயவில் என்னிடமும் ஏராளமான பைண்டிங் புத்தகங்கள் இருக்கிறது அதிரா... பூதம் காக்கும் புதையல் போல அவற்றைக் காத்து வருகிறேன். எப்போதாவது ஒரு ஞாயிறில் ஒரு படம் போட்டு விளக்குகிறேன்!!! வைக்க இடமில்லாமல் அவஸ்தை.

      நீக்கு
    2. வாசிக்காது விட்டாலும் அடிக்கடி பார்த்து ரசிப்பதில் ஒரு ஆனந்தம்.. எனக்கும் அப்படியே.. ஆனா இனி வருங்கலத்தில் எல்லாமே இண்டநெட் என ஆகிடப்போகுது... இப்பவே ஸ்கூல் புக்ஸ் எல்லாம் நெட்டில்தான் படிக்கிறார்கள்.

      நீக்கு
    3. அது ஒரு கஷ்டம். எனக்குப்பின் இந்தப் புத்தகங்களை பாதுகாக்கப் போவது யாரும் இல்லை!

      நீக்கு
    4. //வைக்க இடமில்லாமல் அவஸ்தை.// இங்கே தள்ளிடுங்க. ஹிஹிஹி, வெகுநாட்கள் முன்னர் ஆரம்பித்த புத்தக அலமாரி க்ளீனிங் இன்னமும் முடியலை! இது வேறு சேர்ந்தால், படிக்க்த் தான் நேரம் இருக்கும். :)

      நீக்கு
    5. மீயும் இந்தியா வந்தால் ஸ்ரீராமிடம் வாங்கி வருவேன் கொஞ்சத்தை:) ஆனா அவர் தரமாட்டார் என நினைக்கிறேன்..:) பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    6. அதுதான் புதையல் காக்கும் பூதம் போலன்னு சொல்லி இருக்கேனே கீதாக்கா.. கொடுக்கவும் மனசு வரமாட்டேங்குது!

      நீக்கு
    7. //மீயும் இந்தியா வந்தால் //

      வந்தால்தானே... அப்போ பார்த்துக்கலாம்... அப்போ பொருத்தமா ஒரு காரணம் கண்டுபிடிசுசுடுவேன்!

      நீக்கு
    8. //வந்தால்தானே... அப்போ பார்த்துக்கலாம்... அப்போ பொருத்தமா ஒரு காரணம் கண்டுபிடிசுசுடுவேன்!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  33. ஸ்ரீராம் “மேகப் பாறைகள்~ எனும் ஸ்டோரி படிச்சதுண்டோ?.. அது சரியாகச் சொல்கிறேனோ தெரியவில்லை, கதையையும் தலைப்பையும்.. ஆனா அதுதான் தலைப்பென நினைக்கிறேன்.. திரும்ப படிக்க ஆசை கிடைக்குமா தெரியவில்லை.

    இதுதான் கதை.. ஒரு பிள்ளை ஒருவரை விரும்புவா,இருவரும் சிலகாலமாக நன்கு விரும்புவர், பின்பு கால ஒட்டத்தில் இருவரும் பிரிந்து காணாமல் போய் விடுகின்றனர்.. தொடர்பற்றுப் போய் விடுகிறது... தொலைந்து விட்டோம் என முடிவெடுத்து இருக்கும் வேளை, தன் காதலனைப்போலவே சாயல், அதேபோல மருவிய பெயர், குணம் உடை நடை அனைத்தும் தன் காதலன் போலவே இருக்கும் ஒருவரை சந்திக்கிறா.. நமக்குப் பிடிச்சவர்போலவே இன்னொருவர் இருக்கும்போது டக்கென ஒரு ஈர்ப்பு வருவது இயல்புதானே.. அப்பாவைப்போல அண்ணாவைப்போல இருக்கிறாரே என்பதுபோல...

    அப்படி ஈர்ப்பு வந்து காதலாகி திருமணமும் முடிந்த பின், அவர் சொல்வார் எனக்கொரு அண்ணா இருக்கிறார் வா போய்ப் பார்க்கலாம் என.. போனால் அவரின் அண்ணாதான் இவவின் பழைய காதலன்.. ஆனா அவர் மணம் முடிக்கவில்லை இவவின் நினைவாகவே வாழ்கிறார்ர்..

    அந்த கட்டங்கள் சொல்ல முடியாத தவிப்பு கொடுமை.. அதில்தான் முடிவில்.. வரும்..

    இவவின் காரின் சிகப்பு விளக்குகள் பத்தி பத்தி சென்று சந்தியில் மறையும்... அதை[அண்ணா] கை காட்டியபடி வழி அனுப்பும்.. அவரின் கண்ணீர் மறைக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதை பற்றிக் கேள்விப்பட்டதில்லை அதிரா.. ஆனால் கிட்டத்தட்ட இந்தக் கதையின் சாயலில் ஒரு ஹிந்திப் படம் பார்த்திருக்கிறேன். பெமிசால் என்றொரு ஹிந்திப் படம். அதில் அமிதாப் ஒரு திருமணமான பெண்ணைக் கைக்கொள்ள முயற்சி எடுப்பார். அவரது நலம் விரும்பியான அவரின் தோழரின் மனைவி ராக்கிக்கு இது பிடிக்காது. அந்தப் பெண்ணும் இவருக்கு உடன்படுவாள். அவள் அமிதாப்பை முன்னர் காதலித்திருப்பாள். ஆனால் அவரைக் கெடுக்காமல் அழைத்துச் சென்று காட்டும்போதுதான் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் இவரைப்போன்றே இருந்து இப்போது பைத்தியமாகி இருக்கும் இவரது அண்ணன் (அவரும் அமிதாப்) என்று. இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எனக்கு மி.......க.....வு....ம் பிடிக்குமாக்கும்!

      நீக்கு
    2. இந்தப்படம் அந்தக் கால கட்டத்தில் மிகவும் பிரபலமான படம். அமிதாப் படம் முழுவதும் ராக்கியை "சகி" என்றே அழைப்பார்.

      நீக்கு
    3. ஓ, எனக்கு ஹிந்திப்படத்தில அபிமான் மட்டுமே பார்த்தேன், அதுவும் அப்பாதான் பார்க்கச் சொல்லி எல்லோரும் பார்த்தோம். மற்றும்படி 2015 இல் ஒரு படம் ஷாருக்கானின் படம், பெயர் அப்பவும் இப்பவும் வாயில் நுழையாது.. ஆனா சூப்பர் படம், ஒரு பாகிஸ்தான் குழந்தை வழிதவறி, இந்திய எல்லைக்குள் வந்துவிடுகிறது அதைக் காப்பாற்றி திருப்பி அனுப்புவதுதான் கதை, சூப்பர் படம்.

      //பெமிசால்//
      இதைத் தழுவிய தமிழ்ப் படம் ஏதும் உண்டோ?

      நீக்கு
    4. @அதிரடி, அபிமான் படத்தில் அமிதாப், ஜெயபாதுரி இரண்டு பேரின் நடிப்பும் நல்லா இருக்கும். அதுவும் அவர் தொண்டைக் கோளாறில் பாட முடியாமல் போவதும்! ஹிஹிஹிஹி! இந்தக் கதை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? தேரே மேரே மிலன் பாட்டு நல்லா இருக்கும். பிடிச்ச பாட்டும் கூட! :)))))

      நீக்கு
    5. அதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. அபிமான் படத்தில் எல்லாப் பாட்டுமே நல்லாயிருக்கும் கீதாக்கா... ஆர் டி பர்மனின் அப்பா எஸ் டி பர்மன் இசையமைத்த படம்.

      நீக்கு
    7. //
      Geetha Sambasivam17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:02
      அதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

      நோஓஓஓஓஒ கீசாக்கா அப்படி இல்லை, கொஞ்சக்காலம் வராமல் விட்டபோது எங்கும் போகவில்லை, பின்பு வந்தேனெல்லோ.. கடசிப்பதிவு வாழ்த்துத்தானே சுகந்திரதினம், அதனால அன்று எங்கும் போகவில்லை விட்டுவிட்டேன்.. உங்கள் போஸ்ட் க்கு வராட்டில் எனக்கு எப்படி நித்திரை வரும் ஜொள்ளுங்கோ?:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  34. Happy Anniversary Sriram:)

    Angelin

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெயரில்லா17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:57
      Happy Anniversary Sriram:)///

      இது என்ன இது பெயரில்லா வாம்ம்ம் அப்பூடி ஒரு பெயர் இருக்கோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:))

      நீக்கு
  35. பாட்டு கேட்டிருக்கேன். கதை படிச்சிருக்கேன். ஆனா, இதுவரை படம் பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
  36. அக்னி பிரவேசம் ஆனந்த விகடனிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் தினமணிக் கதிரிலும் அதன் தொடர்ச்சி கங்கை எங்கே போகிறாள் என்று குமுதத்திலும் வெளிவந்தது.

    தினமணி கதிருக்கு சாவி ஆசிரியராய் இருந்த பொழுது அவர் கேட்டு ஜே.கே. எழுதிக் கொடுத்த தொடர்கதை சி.நே.சி.மனிதர்கள்.

    ‘காலங்கள் மாறும்’ என்று தொடர் பற்றிய விளம்பரங்களில் பெயர் சூட்டப்பட்டு பின்னர் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தொடரின் தலைப்பும் மாறியது.

    “‘காலங்கள் மட்டுமா மாறும்? ஒரு தொடரின் தலைப்பு மட்டும் மாறாதா, என்ன?” என்று ஜே.கே. அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

    தொடரின் ஆரம்ப சில அத்தியாயங்களுக்கு ‘காலங்கள் மாறும்’ என்றே தலப்பிட்டு. அந்தத் தலைப்பை இரட்டை கோடுகளிட்டு கிராஸ் பண்ணி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று அச்சிட்டு ஒரு புதுமையைச் செய்திருந்தார் ஆசிரியர் சாவி.


    பதிலளிநீக்கு
  37. இரண்டு பாடல்களுமே மிகவும் பிடித்த பாடல்கள்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!