புதன், 8 ஆகஸ்ட், 2018

காற்றில் கலந்த தமிழ்


ஒரு வார்த்தை 
பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..

மறுபடி அந்தக் கரகர 
குரல் காட்டிச் 
சென்றிருக்கலாம் 

பேசாமல் சென்றுவிட்டார்.

யாரிடமும் 
சொல்லாமல் கொள்ளாமல் 
பேசாமல் சென்றுவிட்டார் 

பேச்சாலேயே வளர்ந்தவர் 
பேச்சாலேயே உயர்ந்தவர் 
பேச்சாலேயே பல 
மனங்களில் அமர்ந்தவர்.. 

இரண்டு வருடங்களுக்கும் மேலாய் 
பேசாமல் இருந்து சென்றுவிட்டார் 

அன்பர்களையும் நண்பர்களையும் 
உடன்பிறப்புகளையும் 
பேசமுடியாமல் செய்து விட்டு 
பேசாமல் சென்று விட்டார் 

வசனக் கலைஞரைப் 
பார்த்திருக்கிறோம் 
கவிதைக் கலைஞரைப் 
பார்த்திருக்கிறோம் 
எள்ளலுடன் சேர்ந்த 
துள்ளல் தமிழ்க் 
கலைஞரைப் பார்த்திருக்கிறோம் 

ஆனால் 

இரண்டு வருடங்களாய்தான் 
மௌனக்கலைஞரைப் பார்த்தோம்...

ம்ம்ம்ம்...

ஒரு வார்த்தை 
பேசி விட்டுச் சென்றிருக்கலாம்....

********************************************************************************************************************************************
எழுதத் துடிக்கும் 
விரல்களின் துடிப்பு 
எனக்கு மட்டும்தான் தெரிகிறது.

எழுத்து என்று நின்றுபோனதோ
அன்று கொஞ்சம் இறந்துபோனேன்.

படித்த புத்தகங்களும் 
படைத்த புத்தகங்களும் 
படிக்கக் காத்திருக்கும் 
புத்தகங்களுடன் 
சுற்றி நின்று 
பார்த்துக் கொண்டிருக்கின்றன.

படிப்பு என்று நின்று போனதோ 
அன்று கொஞ்சம் 
​​
இறந்துபோனேன்.

எதிரில் இருப்பவரிடம்
எண்ணங்களை வார்த்தையாக்கிப் 
பேச முடியாமல் 
மூச்சுத் திணறுகிறது.

குரல் என்று நின்றுபோனதோ 
அன்று கொஞ்சம் 
இறந்துபோனேன்.

விரும்பியோ விரும்பாமலோ 
நேசிப்பவர்கள் கூட
என் மரணத்துக்காகக் 
காத்திருக்கிறார்கள் 
கண்ணீருடனும் 
கதை வசனங்களுடனும்.

மூச்சு நின்று உடல் இயக்கம் 
நிற்பதுதான் மரணமாம்...

இனிதானா இறப்பு?


**************************************************************************************************************************************


இருந்தும் 
இல்லாமல் இருந்தார்   
இறந்தும் 
இனி நம் நினைவில் இருப்பார்.இன்று வெளியாக இருந்த கேள்வி பதில் பதிவு நாளை வியாழக்கிழமை வெளியாகும்.


23 கருத்துகள்:

 1. ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடி படிச்சேன்.

  பதிலளிநீக்கு
 2. கலைஞரின் இலக்கியப் பணிக்காக, அவரது இழப்பு துயரைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 3. இரண்டையும் முகநூலில் படித்தேன் , மீண்டும் படித்தேன்.
  அருமையான அஞ்சலி.

  //இறந்தும்
  இனி நம் நினைவில் இருப்பார்.//

  உண்மை.  பதிலளிநீக்கு
 4. என்னால் நம்பவே முடியவில்லை. இவருக்குமா மரணம் வரும்? அவரது ஆனன்மா நற்கதி அடைய வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு அஞ்சலி...... தமிழகத்தின் இரு பெரிய ஆள்மைகள் மறைவு என்பது மிகப் பெரிய இழப்பு

  பதிலளிநீக்கு
 6. உண்மையே. ஒரு பெரிய சகாப்தமே முடிவடைந்திருக்கிறது.
  அந்தத் தமிழ் இனி யாரும் பேசிக் கேட்க முடியாது. நாவண்ணம், சொல்வண்ணம் எல்லோரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நல்லதொரு அஞ்சலி.
  இனியாவது அவர் ஓய்வு பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 7. அட்டா இன்று கேள்வி பதில் இல்லையா? கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டீர்களே. கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 8. அரசியல்வாதியாய் மறந்து பார்த்தால் ???
  ஒரு மகா எழுத்தாளர் மறைந்தது தமிழ் மொழிக்கு இழப்பே...

  பதிலளிநீக்கு
 9. அஞ்சலிகள்! தமிழுக்கு என்றும் இல்லை அஸ்தமனம்!

  ஆத்மார்த்தமான அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 10. காற்றில் கலந்த தமிழ்...உண்மை தான் இனி அந்த தமிழ் இங்கு இல்லை...

  பதிலளிநீக்கு
 11. விதை படித்து மனம் கலங்கி விட்டேன். உண்மை தான்! வாழ்க்கை முழுதும் பல விஷயங்களால் அவ்வப்போது மனம் மரணித்துப்போய் விடுகிறது.

  கடந்த 2 வருடங்களாக உடலால் மிகவும் கஷ்டப்பட்டவருக்கு மரணம் உண்மையில் விடுதலை தான் அளித்திருக்கிறது.

  உங்களுடன் சேர்ந்து நானும் என் அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 12. இரண்டு வருஷங்களாக வயோதிகம் வாட்டி வதைத்து விட்டது. மௌனம் இன்னும் சில விஷயங்களை அவருக்கு உணர்த்தி இருக்கும். காற்றில் கலந்தவர். உண்மை. என்னுடைய அஞ்சலிகளும்.

  பதிலளிநீக்கு
 13. கவிதை படித்ததும், கண்களின், கண்ணீருடன், மனதும் கனத்தது.

  தமிழின் தனயன் மறைவு வேதனையை தந்தது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
  என்னுடைய அஞ்சலிகளும்.

  பதிலளிநீக்கு
 14. கவிதை வரிகள் மனம் கனக்க வைத்தன...

  எமது இரங்கல்கள்

  காலையிலிருந்து பலமுறை வந்தும் கருத்துப்பெட்டி இப்பொழுதே திறந்தது.

  பதிலளிநீக்கு
 15. spontanious ஆக வெளி வந்த எழுத்துகள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 16. ஸ்ரீராம் மற்றும் நண்பர்கள் -

  நேரமிருக்கையில் ’ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!’ என்கிற தலைப்பிலான எழுத்தாளர் வ.மு.முரளி அவர்களின் இன்றைய பதிவினை வாசித்துப் பாருங்கள்.

  லிங்க்: https://writervamumurali.wordpress.com

  பதிலளிநீக்கு
 17. காற்றில் கலந்த தமிழ் அருமை தமிழ் தாத்தாவுக்கு அஞ்சலி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!