வியாழன், 2 ஆகஸ்ட், 2018

எதிர்பாராத சிறு அணைப்பு...


கொடிமரத்துக்குப் பக்கத்தில் நமஸ்கரித்து எழுந்து வந்த ரமேஷை வேகமாக நெருங்கினான் ராஜு - ரமேஷின் அன்பு மருமான்.



"மாமா..   மாமா..  "

'என்னடா.."

"நமஸ்காரம் செஞ்சு எழுந்தீங்களே..  உங்க சட்டைப் பைலேருந்து ஐநூறு ரூபாய் கீழே விழுந்தது.  நான் கம்பிக்கு அந்தப்பக்கம் நிக்கறேன்.  இந்தப் பக்கம் வரதுக்குள்ள அதோ ..  அந்த சேப்பு சட்டை ரூவாயை எடுத்து அவர் சட்டைப் பைக்குள்ள வச்சுக்கிட்டார்..."

"அடப்பாவி..  குரல் கொடுக்கக் கூடாது?  என்னடா இது?"  

சட்டைப்பைக்குள் துழாவியதில் தெரிந்த விஷயம், இழந்தது ஒரு ஐநூறு இல்லை, ஒன்றுக்குள் ஒன்றாக வைத்திருந்த இரண்டு ஐநூறு!

அந்த "சேப்பு சட்டை"யைப் பார்த்தால் கேட்டால் கொடுப்பவராகத் தெரியவில்லை.  இவர்களை ஓரப்பார்வையாகப் பார்த்தார்.

"குரல் கொடுத்தேன்..   சரியான கூட்டம் வேற...  உங்க காதிலேயே விழலை...  நான் என்ன செய்ய..?"

"சேப்பு சட்டை" எங்களை நெருங்க, ராஜு பரபரத்தான்.

"கேக்கவா?  சும்மா விடக்கூடாது...  கோவில்ல போய் இப்படிலாம் செய்வார்களா?"

"சும்மா இர்றா... "

"கேக்கறேன்..  அதெப்படி..."

எங்களை லேசாகக் கவனித்தபடியே அவன் தாண்ட, ரமேஷ் ராஜுவின் கையைக் கிள்ளியபடியே சொன்னான்.  அவன் கையைக் கிள்ளியதை அந்த 'சேப்புச்சட்டை'யும் பார்த்தான்...

"சும்ம்ம்மா இர்ர்ர்ர்ர்றான்னா..  அப்புறம் என் கிட்டயே கொடுத்துடப்போறான்...  உண்டியல்ல கூடப் போடலாம்...  நாயர் சொன்ன பரிகாரம் ஞாபகமில்லையா? பேசாம வா..  சட்டுனு ஓடிடலாம்..  பீடை தொலையணும்..."  மெல்லிய குரலில் பேசுவது போல பல்லிடுக்கில் பேசினான் ரமேஷ்.

ராஜு புரியாமல் நிற்க, "காரியத்தையே கெடுத்துடுவே போலிருக்கே.." என்றபடி ரமேஷ் அந்த 'சேப்புசட்டை'யை பார்க்காதவன் மாதிரி வேகமாகத் தப்பிப்பது போலத் தாண்ட முயற்சிக்க,  'சேப்புசட்டை'  ரமேஷை மறித்தான்...

"ஸார்..  நீங்க நமஸ்காரம் செய்யும்போது உங்கள் சட்டைப்பையிலிருந்து இது கீழே விழுந்தது..  இந்தாங்க.." என்று அந்த இரண்டு ஐநூறு ரூபாய்களை நீட்டினான்.

ரமேஷ் வெற்றியை மறைத்துக்கொண்டு தோல்வியை முகத்தில் காட்டி, "வேதனையுடன்" வாங்கிக்கொள்வது போல அந்தப் பணத்தை "தேங்க்ஸ்" என்று வாங்கிக்கொண்டான்.  'சேப்புசட்டை' சட்டென அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து மறைந்தான்.

ராஜு புன்னகைத்தான்.  "ரொம்ப லாங் ஷாட் மாமா..   சட்டுனு எப்படித் தோன்றியது?  என்ன வேணா ஆவட்டும், போனாப் போகுதுன்னு அவன் பணத்தோட போயிருந்தா என்ன செய்வீங்க?"

"கிருஷ்ணார்ப்பணம்னு விட்டிருப்பேன்.."  ரமேஷ் பணம் திரும்ப வந்த நிம்மதியில் சொன்னான்!


===============================================================================================================================

இதற்கு அப்போது வந்த பின்னூட்டங்களில் மேலும் இதே போல சில தகவல்கள் கிடைத்தன!





===============================================================================================================




நன்றி இணையம் 



இந்த நாட்டில் மெழுகுவர்த்தி கிடைப் பதில்லை. அதற்கு பதிலாக, விளக்கு பிடிப்பவர்கள் என்ற பெயரில், அழுக்கு கும்பல் ஒன்று, தங்கள் கைகளில் தீவெட்டிகளைப் பிடித்து நிற்கின்றனர். 

வசதி படைத்தவர்கள், நூறு தீவட்டி மனிதர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். இருட்டு வேளைகளில் வெளிச்சம் தேவைப்பட்டால், இந்த அழுக்கு மனிதர்கள், தங்கள் கைகளில் தீவட்டிகளுடன் அருகில் வந்து நின்று கொள்வர். விவசாயிகள். 

பாமர மக்கள் அரை நிர்வாணமாகவே காணப்படுகின்றனர். இவர்கள் இடையில் மிகச் சிறிய, 'லங்கோடு' என்ற துணியை மட்டுமே கட்டியிருக்கின்றனர்.....



- 500 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவைப்பற்றி முஸ்லீம் மன்னர் பாபர், தன் சுயசரிதையான, 'துசுக்கி ஈ பாபரி' நூலில் குறிப்பிட்டுள்ளவை.

- தினமலர் - திண்ணை - 2014 



===================================================================================================


இதுவும் ஒரு பொழுது போகாத வெட்டி ஆராய்ச்சிதான்!






===================================================================================================

இவள் எங்கள் காம்பவுண்ட் அழகி.   முன்னர் இவள் படம் இங்கு பகிர்ந்ததுண்டு..



 சமீப ஒரு வாரமாய் இவள் நோயுற்றாள்.  என்னவென்றே தெரியாத வியாதியால் மிகவும் கஷ்டப்பட்டாள்.  காதில் புண்...  கழுத்தில் பெரிய கட்டி போல தொங்கியது...  நகரவே முடியவில்லை இவளால்...




நேற்று ப்ளூ க்ராஸ் காரர்களுக்கு ஃபோன் செய்து சொல்லி, அவர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்,  "திரும்பவும் இங்கேயே கொண்டு வந்து விட வேண்டுமா?" என்று அவர்கள் கேட்டதும் என் அண்ணன் மகனும், பாஸும் "ஆமாம்..  ஆமாம்...  சீக்கிரம் சரிசெய்து கொண்டு வந்து விடுங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  மிகவும் பாசமானவள்.





============================================================================================================


படம் நன்றி இணையம் 


எதற்கென்றே தெரியாத புன்னகைகளும் 
எதிர்பாராத சிறு அணைப்பும் 
எப்போதுமே சுகமானதுதான்.


                                                                                
                                                                                                                        படம் நன்றி இணையம்                                 படம் நன்றி இணையம் 




=====================================================================================================

91 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும்
    அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம்...
      வணக்கம் வலைத்தளம்...

      அப்புறம்,
      அவங்க எல்லாம் நாளைக்குத் தானா!..

      நீக்கு
    3. //அப்புறம்,
      அவங்க எல்லாம் நாளைக்குத் தானா!.. ​//

      ஸார்... அபுரி!!!!

      நீக்கு
    4. ஆகா...
      நான் ஒரு பக்கம் பொடி வைத்தால்
      நீங்க மறுபக்கம் வெடியா!?....

      அதென்ன அபுரி!?...

      நீக்கு
    5. நான் கேட்டிருப்பதைத் தான் துரையும் கேட்டிருக்காராக்கும்! :))))))

      நீக்கு
    6. அச்சச்சோ... "அபுரி"யைத் தெரியாதா? ஜி எம் பி சாருக்குக் கூடத் தெரியுமே....!!

      நீக்கு
    7. துரை செல்வராஜு சார்... இடுகை போட்டு நாளாச்சு

      நீக்கு
    8. // இடுகை போட்டு நாளாச்சு..//

      ஆமாங்க... தளத்தைப் பார்க்கிறதுக்கு எனக்கே பாவமா தான் இருக்கு...

      மதியம் 2 - இரவு 8 வரை தான் தூக்கம்....

      நேரம் இன்னும்
      கூட வில்லையே.. ஏஏ!...

      நீக்கு
  2. நல்லாச் சிரிக்கிறா உங்க காம்பவுண்ட் அழகி! விரைவில் குணம் அடையட்டும். ப்ளூ க்ராஸில் உடனே வருவதும் பாராட்டத்தக்கது. கோலத்தையும் அழகியையுமே ஏற்கெனவே பார்த்த நினைவு.
    முதல் கதை விறுவிறு! எப்படிப் பணத்தைத் திரும்ப வாங்கப் போறாரோனு நினைச்சால்! அட! என ஆச்சரியமா இருந்தது. ஆனாலும் சிலர் அதையும் லட்சியம் செய்யாமல் போயிடுவாங்க! அப்படி இருந்தால்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கெல்லாம் அடையாளம் தெரியவேண்டுமே என்பதற்காக மறுபடி பதிவிட்டேன்!

      கதை விறுவிறுப்பு பாராட்டுக்கு நன்றிகள்!

      //ஆனாலும் சிலர் அதையும் லட்சியம் செய்யாமல் போயிடுவாங்க! அப்படி இருந்தால்? //

      அதற்குத்தான் கடைசி வரி!!!!

      நீக்கு
    2. ஆமாம் கீதா அக்கா... கோலமும் அழகியும் ஏற்கெனவே வந்ததுதான். அழகியை...


      இது முந்தைய பதிலில் முதலில் ஒட்ட மறந்து இட்ட அல்லது மறுத்துவிட்ட வரி!

      நீக்கு
  3. காம்பவுண்ட் அழகி
    விரைவில் நலம் பெறட்டும்..

    பதிலளிநீக்கு
  4. இந்த வியாழன் "அனு அக்கா" இல்லாத வாஆஆஆஆஆரமா? ஒருத்தருமே இல்லையே? ஒரு வேளை பதிவு ஶ்ரீராம் போடலையோ? வெட்டி ஆராய்ச்சியை ஆய்வு செய்தால் ஶ்ரீராம் போட்ட பதிவு தான் சொல்லுதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      ///அனு அக்கா..///

      அவங்க வேறயா!..

      ஆனாலும் இவ்வளவு தீர்க்க தரிசனம் ஆகாது!...

      நீக்கு
    2. கீதா அக்கா... அனுஷ் இல்லாத வாரமாக அமைக்க பெருமுயற்சி எடுத்து கஷ்டப்பட்டு சிரமப்பட்டு கையை நிறுத்தி, மனதை அடக்கி பதிவிட்டேனாக்கும்!

      நீக்கு
    3. /////அனு அக்கா..///

      அவங்க வேறயா!..

      ஆனாலும் இவ்வளவு தீர்க்க தரிசனம் ஆகாது!...//

      அதுதான்... அதேதான்... அதனால்தான்! நெல்லைக்கு பயந்து இன்று அனுஷ் படம் இல்லை... அதுதான் நேற்றைய பதிவில் படத்தைப் போட்டுட்டாங்களே!!!!

      நீக்கு
    4. என்னது.. அனு இல்லாத வாரமா?...

      ஓலைக் குடிலுக்குள் நுழையும்
      காற்றே.. சந்தனக் காற்றே..
      உனக்கும் இப்படித் தடையா?..
      இதுதான் காலத்தின் விடையா!...

      நீக்கு
    5. ஆஹா.. சந்தனக் காற்றா? இஞ்சி இடுப்பழகி படத்துக்கு அப்புறம் புயலோன்னு நினைத்தேன். இருந்தாலும் சந்தனம், மைசூர் சான்டல் பொருத்தமாத்தான் இருக்கு.

      துரை சார்... குவைத்தின் ஆகஸ்ட் வெயிலுக்கு சந்தனக் காற்று வேண்டியதுதான்

      நீக்கு
    6. சந்தனக்காற்றை அடுத்த வாரம் வீச விடுவோம் துரை ஸார்.

      நீக்கு
    7. //துரை சார்... குவைத்தின் ஆகஸ்ட் வெயிலுக்கு சந்தனக் காற்று வேண்டியதுதான்/

      ஆகஸ்ட் வெய்யில் அங்கு கடுமையாக இருக்குமோ!

      நீக்கு
  5. அ.பா.நா.தி. படம் இருக்கு. கொ.ச. படம் இருக்கு. வீ.பா.க.பொ. எங்கே? ஜிவாஜியை நீங்க இப்படி மறக்கலாமோ? ஜிவாஜி ரசிகர்கள் ஏமாந்துடமாட்டாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் தாங்கும் இதயம்
      ஜிவாஜி ரசிகர்களுக்கு!..

      நீக்கு
    2. சிவாஜி மீசையைக் கண்டால் எனக்கு பொறாமை! நம்ம கில்லர்ஜி போல மீசை வைத்திருப்பார் சிவாஜி.. அதனால் வீ பா க பொ படம் போடவில்லை!

      நீக்கு
    3. ஜிவாஜி வைத்து இருப்பது ஒட்டு மீசை.

      நீக்கு
    4. கில்லர்ஜி மாதிரி சிவாஜி எந்தப் படத்துல மீசை வச்சிருந்தார்? கண்டுபிடிச்சு படம் போடுங்க ஶ்ரீராம். எனக்கு அப்படிப் பார்த்த ஞாபகம் இல்லையே

      நீக்கு
    5. கில்லர்ஜி மீசை மாதிரி சிவாஜி... தங்கப்பதக்கம் சொல்லலாமோ!

      நீக்கு
  6. கதையை மிகவும் ரசித்தேன். ஒரு வியாழனை செவ்வாய் ஆக்கலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பச் சிறுசாய் இருப்பதால் வியாழன் பதிவிலேயே இணைத்தேன்! அதுவும் அவசரமாக நேற்றிரவு எட்டரை மணிக்குமேல் எழுதித் செய்தது!

      நீக்கு
  7. "பரிகாரம்" எப்படியெல்லாம் வேலை செய்கிறது...!

    பைரவர் விரைவில் நலம் பெறட்டும்...

    பதிலளிநீக்கு
  8. திரைப்பட விஷயங்களில் ஒரு தீசிஸே எழுதும் அளவுக்கு தேர்ச்சி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிகாரம் என்னும் சொல் எப்படியெல்லாம் வேலை செய்கிறது பயத்தால் உங்களுக்கு உங்கள் பணம்திரும்பக் கிடைத்தது

      நீக்கு
    2. //திரைப்பட விஷயங்களில் ஒரு தீசிஸே எழுதும் அளவுக்கு தேர்ச்சி/

      ஹா... ஹா... ஹா...

      /உங்களுக்கு உங்கள் பணம்திரும்பக் கிடைத்தது//

      எனக்கு இல்லை ஜி எம் பி ஸார்.. ரமேஷுக்கு!

      நீக்கு
  9. எடுத்த பணத்தை திருப்பிக் கொடுப்பவர்கள் இன்னும் சிலர் உண்டுதான்.

    பைரவர் நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.. பணத்தை அவராக எங்கே திருப்பிக் கொடுத்தார்? ரமேஷ் கொடுக்க வைத்தார். பைரவ நலவேண்டலுக்கு நன்றி.

      நீக்கு
  10. காலை வணக்கம்.

    காம்பௌண்ட் அழகி விரைவில் குணமாகட்டும்.

    அனுஷ்கா இல்லாத வாரமா.... நேற்று கூட இருந்தாரே உங்கள் பதிவில்! :)))) இன்னிக்கு தான் ஆரம்பிக்குமா அந்த வாரம்!

    சினிமா தகவல்கள் - எவ்வளவு தகவல்கள் உங்களிடம்.

    பணம் திரும்பி வந்ததே.... இப்படி பயமுறுத்தினால் தான் வரும். நேற்று சாலையில் நடந்து சென்ற போது ஒரு ஐந்து ரூபாய் காயின் கிடந்தது - யார் விட்டார்களோ பாவம் என்ற நினைவுடன் கடந்து விட்டேன்... யார் விட்டார்களோ, யார் எடுத்துக் கொண்டார்களோ என இன்னமும் மனதில் எண்ணம் வந்தபடி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் வெங்கட்!

      காம்பவுண்ட் அழகி நலமாக வேண்டலுக்கு நன்றிகள்.

      //அனுஷ்கா இல்லாத வாரமா.... நேற்று கூட இருந்தாரே உங்கள் பதிவில்! :)))) இன்னிக்கு தான் ஆரம்பிக்குமா அந்த வாரம்!//

      பழகுகிறேன்!!

      கீழே காசு / பணம் கிடந்தால் நான் கூட எடுக்க மாட்டேன். ஏதோ வேண்டுதல் செய்த்து போட்டிருக்கிறார்கள் என்று தோன்றும்!!!

      நீக்கு
  11. நவரசமும் நர்த்தனம் ஆடுகிறது!! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  12. இழந்த பணத்தை பெற நல்ல ஐடியா! சாதாரணமாக இந்த மாதிரி தருணங்களில் சட்டென்று உணர்ச்சி வசப்படுவார்கள், ஆனால், ரமேஷின் நிதானமும்,சாதுர்யமும் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. ரமேஷுக்கு அந்த யோசனை சட்டெனத் தோன்றியது போலும்! நான் இந்த மாதிரி ஒரு ஜோடி வளையல்களை மீட்டிருக்கிறேன்! அதே வகையில் இந்தக் கதையை எழுதினேன்!

      நீக்கு
  13. சுஹாசினி இந்திராவில் அனுஹாசனுக்கு மட்டுமல்ல, இருவரில் ஐஸ்வர்யா ராய்க்கும், திருடா திருடாவில் ஹீராவிற்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

    சரிதா நிறைய படங்களில் பின்ணணி பேசியிருக்கிறார். 47 நாட்களில் ஜெயப்ரதாவிற்கு அவர்தான் குரல் கொடுத்திருப்பார். அதனால் அவரே வரும் கடைசி காட்சியில் வித்தியாசப் படுத்துவதற்காக கீ...ச் என்று கத்தியிருப்பார். எம்.குமரன், சன் ஆஃப் மஹாலட்சுமியில் நதியாவிற்கு அவர் குரல் மிக அழகாக பொருந்தியிருக்கும்.

    இவரைத்தவிர ரோஹிணி நிறைய பேருக்கு பேசுகிறார். சுலட்சனா, வனிதா போன்றவர்களும் குரல் கொடுத்திருக்கிறார்களோ என்று சந்தேகம் உண்டு.

    படம் பார்க்கும் பொழுது தீபா வெங்கட்டின் குரல், ரோகிணியின் குரல், நாசர், நிழல்கள் ரவி என்று கண்டுபிடித்து கடைசியில் டைட்டில் போடும் பொழுது சரி பார்த்துக் கொள்வேன். என் கணவர் குரல்களை கண்டு பிடிப்பதில் கில்லாடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவுக்கெல்லாம் கண்டு பிடிக்கத் தெரியாது. "மைக்" நடிகர் மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் (நடிகர் விஜயின் தாய் மாமா) குரல் கொடுத்திருப்பதாக முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு பேட்டியில் "பொதிகை"யில் சுரேந்தரே சொல்லி இருக்கார். அதான் தெரியும். மற்றபடி தீபா வெங்கட் பின்னணியும் கொடுப்பாரா? இப்போ அவரைத் தொடர்களில் அதிகம் காணோம்! அவர் சகோதரி ஒருத்தியும் ஏதோ ஒரு வெங்கட்! இரண்டு பேருமாய்ப் பாடிக் கேட்டிருக்கேன்.

      நீக்கு
    2. நான் சரிதா குரல் கண்டுபிடிப்பேன். எஸ் என் சுரேந்தர் கூட கண்டுபிடிப்பேன். மற்றவர்கள் கஷ்டம்!

      நீக்கு
  14. உங்கள் வீட்டு அழகியின் கண்களில் எத்தனை சோகம்! பாவம், வேதனை தாங்க முடியவில்லை போலும். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளூ க்ராஸ் காரர் இரக்கமே இல்லாமல் பாதிக்கப்பட்ட கழுத்திலேயே கம்பியைப் போட்டு அழைத்துச் சென்றார். சாதாரணமாக ஓடிவிடும் அழகி, ஓடமுடியாமல் வேதனையுடன் நடந்தது பாவமாக இருந்தது.

      நீக்கு
  15. பாபர் நாட்டு முழுநிர்வாணங்களைப்பற்றி யாரும் எழுதவில்லையா! நம்மவர்களுக்கு அயல்நாட்டுக்காரனைப் புகழ்ந்தே பழக்கம். கேட்டால், பர்ஷியன் பர்ஃப்யூம்பற்றிச் சொல்லியிருப்பார்கள்!

    எப்படி வந்தது இப்படி ஒரு நோய் அதற்கு? விரைவில் குணமாகி மீண்டு வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார்.. வல்லிம்மா பேசி இருக்கிறார்.

      நீக்கு
  16. கதை நன்றாக இருக்கிறது. கோலத்தின் முன் பார்த்த அழகி வலியுடன் பார்க்க வேதனைாக இருந்தது. மனிதர்களும் வலியில் அவதிப்படுவது இப்படித்தானே. விரைவில் நலம் பெறட்டும். பாமரமக்கள் வயலிலும்,வரப்பிலும் வேலை செய்தபோது என்ன செய்ய முடியும்? அரை நிர்வாணமில்லையது. உண்டுகெட்டான்பாப்பான்,உடுத்துக் கெட்டான் மற்றவன். அந்த மற்றவன் இல்லையா பாபர். அப்படித்தான் தோன்றும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி அம்மா, அது ‘மற்றவன்’ இல்லை. அவர்கள் போருக்கு எப்போதும் தயாரா இருக்கணும், காவலில் கவனத்தைச் செலுத்தணும் என்பதால் இந்த பழமொழி. முதல் பகுதியை விளக்கத் தேவையில்லை ஹா ஹா

      நீக்கு
    2. வாங்க காமாட்சி அம்மா.. பாராட்டுக்கு நன்றிகள். அழகி சீக்கிரம் சரியாவாள். நன்றி.

      நீக்கு
  17. புத்திசாலி கதை மிக நன்று...


    அந்த செல்லம் விரைவில் நலம் பெற்று தங்கள் வீடு வரட்டும்....

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
    முதல் கதை போல் என் பர்ஸை கொடிமரம் கும்பிடும் போது கீழே வைத்து கும்பிட்டேன் மறந்து விட்டேன் எடுக்க. நினைவு வந்து திரும்பி போன போது அங்கு இல்லை. இப்படி யாராவது பார்த்து இருந்தால் சொல்லி இருப்பார்கள் கிடைத்து இருக்கும்.

    புத்திசாலிதனமாக பணத்தை திரும்ப பெற்றவிட்டார் மாமா.
    பொழுது போகாத நேரத்தில் கணக்கெடுப்பு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. அடடா.. பர்ஸ் தொலைந்து விட்டதா? அவ்வளவு வேகமாகவா அடித்து விட்டார்கள்? எவ்வளவு வைத்திருந்தீர்கள் அதில்?

      பொழுது போகாத கணக்கெடுப்புப் பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  19. வெட்டி ஆராய்ச்சியும் நன்றாக இருக்கிறது.
    காம்பவுண்ட் அழகி நலம் பெற வேண்டும், அன்பால் அதன் வரவை எதிர்பார்ப்பவர்களுக்காக முழுநலம் பெற்று வருவாள்.

    பதிலளிநீக்கு
  20. //எதற்கென்றே தெரியாத புன்னகைகளும்
    எதிர்பாராத சிறு அணைப்பும்
    எப்போதுமே சுகமானதுதான்.//

    உண்மை, உண்மை.

    பதிலளிநீக்கு
  21. கோலம் அழகி போட்ட தா? பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  22. நல்ல சாமர்த்தியக் கதை. கெட்டிக்காரர். பரபரப்பாக இருந்தது. தராமல் போனால் என்ன செய்வது .விட்டு விட வேண்டியதுதான்.
    கொஞ்சும் சலங்கை படம் மிக அழகு. கட்டபொம்மன் படம் போடாதது ரொம்பத் தப்பு சொல்லிட்டேன்.
    தங்கள் கட்டிட அழகி சீக்கிரம் நலம் பெறட்டும். எத்தனை அழகா சிரிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... ஒரு சான்ஸ் பாக்க வேண்டியதுதான். வந்தால் நம்மாளுக்கு.. வராவிட்டால் பெருமாளுக்கு!

      //கட்டபொம்மன் படம் போடாதது ரொம்பத் தப்பு சொல்லிட்டேன்.//

      ஹா... ஹா... ஹா... ஜிவாஜி படமா? கீதாக்கா கிட்ட சொல்லுங்க!

      நீக்கு
  23. பாபர்க்குத் தெரிந்ததை சொல்லி இருக்கார். அவர் ஊருக்குப் போயி நாம் பார்க்காமல் விட்டுவிட்டோம்.
    தாங்களே தீவட்டியாக மாறியவர்கள் நம் ஏழை மக்கள்.
    பின்னணிக் குரலின் பின்னணி சூப்பர்.
    சரிதாவின் குரல் நன்றாகத் தெரியும். சுஹாசினி போரடிக்கும்.
    ரோஹிணி உணர்ச்சியோடு சிறப்பாகப் பேசுவார்.
    சுரேந்தர் குரல் நிறைய பேருக்கு சரியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாபர் ஊரில் என்ன நடந்தது என்பதை நாம் என்ன கண்டோம்?!! டப்பிங் வாய்ஸ் கொடுப்பவர்களுக்கு சாதாரணமாக அவ்வளவு அங்கீகாரம் கிடைப்பதில்லை.

      நீக்கு
  24. அஜீத்துக்காக கமல் பாடியது என்ன பாட்டு?!

    சுகாசினி குரல் மத்தவங்களுக்கு செட் ஆகல. ஆரம்பகாலத்தில் கார்த்திக்கு சுரேந்தர்தான் குரல் கொடுத்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி.... அஜீத்துக்கு கமல் பாடிய பாட்டு உல்லாசம் படத்தில் "முத்தே முத்தம்மா.."

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    கதை அருமை. பரிகாரம் என்ற சொல்லுக்கு இன்னமும் ஒரு பய உணர்ச்சி இருக்கிறது. எப்படியோ போன பணம் திரும்ப பத்திரமாய் கிடைத்ததே... புத்திசாலி ரமேஷ்.

    வாசலில் கோலத்துடன் பைரவரையும் தங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன். கோலம் போட்ட தாயே.. என்ற வசனத்துடன் "யாராவது உணவையும் கொண்டு வந்து போடுங்களேன்" என்ற பாவத்தில் அமர்ந்திருக்கும். அதற்காக உடல் நிலை சரியில்லை. பாவம்.. என்னமாய் வாடிப் போயிருக்கிறது. நல்லபடியாக அந்த செல்லம் குணமாகி வர கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    சினிமா செய்திகள் தொகுப்பு அருமை. விபரங்களை அருமையாய் சேகரித்திருக்கிறீர்கள். அறிந்து கொண்டேன்.

    கடைசியில் உள்ள வாசகங்கள் உண்மையானது.

    அனைத்தும் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா சிஸ்டர்...

      அந்த பயம் இல்லாவிட்டால் பணம் திரும்பி வந்திருக்காது ரமேஷுக்கு! கோவிலிலேயே திருக்கிறார்கள்.. பாருங்கள் கோமதி அக்கா பர்ஸைக் கூட திருடி இருக்கிறார்கள்.

      //கோலம் போட்ட தாயே.. என்ற வசனத்துடன் //

      அடடே.... நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க...

      வருகைக்கும் கருத்துக் பதிவுக்கும் நன்றி.

      நீக்கு
  26. //எதற்கென்றே தெரியாத புன்னகைகளும்
    எதிர்பாராத சிறு அணைப்பும்
    எப்போதுமே சுகமானதுதான்./

    ஆஆ !! என்னென்னமோ நடந்திருக்கு :) அதிராவ் இந்த நேரம் பார்த்து பிசியா இருக்காங்க !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிராவ் இந்த நேரம் பார்த்து பிசியா இருக்காங்க !!//

      நீங்கள் எல்லாம் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்ஜாய்!

      நீக்கு
  27. பாவம் அழகி செல்லம் .சீக்கிரம் குணமாகி வருவா .
    அதற்க்கு காது பக்கம் வீக்கம் இருக்கு hematoma னு சொல்வாங்க மடிஞ்ச காதுள்ள பைரவர்களுக்கு இந்த பிரச்சின்ன வரும் .கூடவே டிக்ஸ் இருந்தா அதுவும் தொல்லைதரும் .

    ப்ளூக்ராஸ் ஊழியர் :( இங்கெல்லாம் ரொம்ப கவனமா ஹாண்டில் செய்வாங்க செல்லங்களை .
    சீக்கிரம் வருவா அழகி .அங்கே ப்ளூக்ராஸ் நல்ல சேவைன்னு சொல்றாங்க ஆனாலும் ஒரு போன் போட்டு எப்படி இருக்குன்னு விசாரிச்சு வைங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ப்ளூ க்ராஸ் ஊழியர் சம்திங் எதிர்பார்த்து சிறிது நேரம் நின்றார். கையில் ஐம்பது ரூபாய் தயாராய் வைத்திருந்தும் ஏனோ கொடுக்கவில்லை. "திரும்ப கொண்டுவந்து விடவேண்டும்? என்றார். இது ஒரு முக்கியமான கேள்வி. ஆமாம் என்றால் கொஞ்சம் பொறுப்புடன் மருத்துவம் பார்ப்பார்களே... மூன்று நான்கு வருடங்களுக்கு முன் அனுப்பிய இதே போல ஒரு தாய் திரும்பி வரவில்லை. அவ்வப்போது போனில் நிலை அறிந்து கொண்டிருந்தேன். ஒருநாள் அவர்களே தொலைபேசி அவள் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. அந்த செல்லத்தின் வீடியோ முன்னர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன். குட்டிகளைக் கவ்விக்கொண்டு நடக்கும் படம்.

      நீக்கு
    2. மகன் இருந்தவரை ப்ளூக்ராஸ் பற்றி அத்தனை நல்ல ஒப்பீனியன் இல்லை அவன் சர்க்கிளில். இப்போது தெரியவில்லை. ஆனால் நீங்கள் அழைத்ததும் வந்திருக்காங்களே அதுவே பெரிய விஷயம்தான். பாவம் அழகி. நான் அவளுடன் பேசி தடவிக் கொடுத்திருக்கேனே உங்கள் வீட்டு வாசலில்தானெ இருப்பாள். ஏஞ்சல் சொல்லியிருப்பது போல அதே அதே ஹெமோடோமா...

      இப்ப திரும்பி வந்திருப்பாள்னு நினைக்கிறேன். உங்க பாஸும் அண்ணா பையரும் (ன் போட்டா கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு சொல்லுவாங்க அதான்!!!ஹா ஹா ஹா) திரும்ப கொண்டு விட்டுருங்கனு சொன்னதை மிக மிக மிக மிக மிக மிக.....இந்த மிகவும் முடிவில்லை....எனவே ரசித்தேன் என்று முடித்துக் கொள்கிறேன்....!!!!!

      கீதா

      நீக்கு
  28. பின்னணி ஆராய்ச்சி ரசித்தேன் .முந்தி நினைப்பேன் 90 களில் ஹீரோயின்ஸ் அவங்க சொந்த குரலில் பேசறாங்கன்னு :) பிக்காஸ் பழைய படங்களில் ஒரிஜினல் வாய்ஸ் தானே .

    பதிலளிநீக்கு
  29. பணத்தால் பிரச்சினைனா மனுஷங்களுக்கு சும்மா கொடுத்தா கிடைத்தா கூட வேணாம்னு ஓடுறாங்களே :) குட்டி கதை நல்லா இருக்கு .நிஜத்தில் நடந்திருக்கா ? எனக்கு இப்படி பணம் கிடைச்சா கோயில் உண்டியல் தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன், ஜோ போன்றவர்கள் சொந்தக் குரலில் பேசத் தொடங்கினார்கள். சகிக்கவில்லை!

      நீக்கு
    2. மோகன் எந்தப் படத்தில் நடித்தாலும் வெற்றிபெறும் என்ற கால கட்டம். தன் வெற்றி தன்னால்தான், சுரேந்தரால் இல்லை என்று, மோகன் தானே டப்பிங் பேசுவேன் என்று ஆரம்பித்தார் (சுரேந்திரன் வளர்ச்சியைத் தடுக்க). அதிலிருந்து மோகன் வெற்றி பெறவில்லை.

      டப்பிங்கை எப்படி உபயோகப்படுத்துவாங்கன்னா, படத்துக்கான முழுப் பணமும் கைக்கு வந்தால்தான் டப்பிங்குக்கு பெரிய ஆர்டிஸ்ட்லாம் வருவாங்க. வேற ஆளைப் போடவும் முடியாது, போட்டால் ரிஸ்க் வேற. பிரகாஷ்ராஜ், முழுப் பணத்தை கலெக்ட் செய்தால்தான் டப்பிங்கை முடிப்பார் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. மோகன் மார்க்கெட் சரிந்ததன் காரணம் வேறே என்று சொல்லுவாங்க! இது பற்றி எந்தப்பத்திரிகையிலோ மோகன் பேட்டி கூடக் கொடுத்திருந்தார்.

      நீக்கு
  30. சமீப ஒரு வாரமாய் இவள் நோயுற்றாள். என்னவென்றே தெரியாத வியாதியால் மிகவும் கஷ்டப்பட்டாள். காதில் புண்... கழுத்தில் பெரிய கட்டி போல தொங்கியது... நகரவே முடியவில்லை இவளால்...

    வருத்தமான செய்தி...

    பதிலளிநீக்கு
  31. கதை அருமை:). ரமேஷின் சமயோசிதம் பாராட்டுக்குரியது.

    அழகான கோலத்திற்கு முன் நிற்கும் உங்கள் காம்பவுண்ட் அழகி விரைவில் குணமாகி திரும்பி வரப் பிரார்த்தனைகள். அவளுக்குப் பெயர் ஏதும் வைக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.. மிரட்டி மிரட்டி படிக்க வைத்து விட்டேன்!!

      அவள் பெயரே அழகிதான்!

      நீக்கு
  32. ஸ்ரீராம், துளசி அப்போது கொடுத்திருந்த கமெண்டை இப்பத்தான் பார்த்துப் போடறேன்.

    துளசி: கதை நன்றாக இருக்கிறது. யார் யாருக்குக் குரல் கொடுத்தார்கள் என்பதும் திண்ணை தகவலும் இப்போதுதான் அறிந்து கொண்டேன். உங்கள் காம்பவுன்ட் அழகி பாவம். எப்படி உள்ளாள்?

    பதிலளிநீக்கு
  33. பின்னணிக் குரல்கள் எனக்குத் தெரிந்து அனுவுக்கு சுஹாசினி மோகனுக்கு சுரேந்தர் இது மட்டுமே தெரியும் மற்றவை எல்லாம் இப்பத்தான் தெரியும். உங்க வெட்டி ஆராய்ச்சி!!!!! ஹா ஹா ஹா ஜூப்பர் அதுவும் ஒரு தகவல்தானே ஏன் வெட்டினு சொல்லணும் ஹிஹீ....

    உங்கள் கதை செம நல்ல டெக்னிக்கு சாரி தக்னிக்கி!!! நல்ல காமன் சென்ஸ்!! அஃப்கோர்ஸ் அந்த காசெ கதாசிரியரின் தானே!!!ஹா ஹா ஹா

    உங்க பாஸ் கோலம் செம அழகு!!! ரொம்ப நல்லா போடுறாங்க!! அழகி எதையே எதிர்பார்த்திருப்பது போல இருக்கே....பாஸ் இன்னும் அதுக்கு அன்னைக்கானது கொடுக்கலையோ...இதே தானே முன்பு ஒரு முறை பகிர்ந்த நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!