சனி, 25 ஆகஸ்ட், 2018

பிறக்கும்போதே போராடி ஜெயித்த குழந்தை.

1)  கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தபோது, உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவர் தனது முதல் மாத ஊதியத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


2)  , ''எங்கள் மாநிலத்தில் நிலவும் வெள்ளச் சூழலைப் பார்த்து, என்னிடம் இருக்கும் பணத்தில் ரூ.1.50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறேன்.  கேரளாவில் மீன் விற்பனை செய்துவரும் மாணவி ஹனன்.3)  பிறக்கும்போதே போராடி ஜெயித்த குழந்தைவளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு  பாராட்டு குவிந்தது. 


4)  கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம்தான்.  ஆனாலும் நெகிழ்த்துகிறதே...


5)  தேவைதான் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.  கேரள பொறியியல் மாணவர்களைப் பாராட்டுவோம்.  


6)  ..... வரும் நவம்பரில், இரண்டாவது அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதற்கு தேவையான, 2.50 லட்சம் ரூபாயை, சமூக வலைதளங்கள் மூலமாக, சிறுமி திரட்டி வருகிறார்.இதுவரை, 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது. இந்நிலையில், கேரள மக்கள், வெள்ள பாதிப்புகளால் பரிதவிப்பதைப் பார்த்த அக்ஷயா, 20 ஆயிரம் ரூபாயில், 5,000- ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்....  7)  "...........அதனால், நேரடியாக சென்று, விழிப்புணர்வூட்ட நினைத்தேன்.பொன்னேரியை சுற்றியுள்ள, பாலவாக்கம், ஜே.ஜே. நகர், பூவலம்பேடு, ஓபசமுத்திரம், செங்குன்றம் அருகேயுள்ள நரிக்குறவர் குடியிருப்புகள் என்று, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 25 கிராமங்களுக்கு சென்று வருகிறேன்.  விடுமுறை நாட்களில் ஒவ்வொரு வாரமும், ஒரு கிராமத்திற்கு மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும், என் பைக்கிலேயே கொண்டு செல்கிறேன்....."

இருளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று, இலவச மருத்துவம் செய்பவரும், நான்கு முறை, 'சிறந்த மருத்துவர் விருதை' பெற்றவருமான, மருத்துவர் அனுரத்னா.8)  கிட்டத்தட்ட இந்த வாரம் கேரள வெள்ளச் செய்திகளாகவே சேர்ந்து வருகின்றன..  நான்கு ஆண்டுகளாக ஆசையாக சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணம் ரூ.8 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்த சிறுமி பற்றிய செய்தியும், கேரளாவின் மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், அபுதாபி உள்பட பல்வேறு நாடுகளில் மருத்துவமனைகள் நடத்தி வரும் டாக்டர் ஒருவர் ரூ.50 கோடி அளிக்கப்படும் என அறிவித்துள்ளதும் இந்தச் செய்திகளில் இடம் பெறுகின்றன.
17 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. பெரும்பாலும் கேரள செய்திகள்.... சில செய்திகள் படித்தவை.

  இப்படி அதிகமான கஷ்டம் வரும்போது மனிதம் மிளிர்கிறது.

  பதிலளிநீக்கு
 3. கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தினை கொடுத்த சிறுமி, தனது சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தைக் கொடுத்த சிறுமி - சிறப்புப் பாராட்டுக்குரியவர்கள்.

  பதிலளிநீக்கு
 4. இந்தப் பதிவின் செய்திகள் அனைத்துமே மனிதநேயம் தழைத்திருப்பதன் அடையாளங்கள்...

  புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லை...

  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
 5. சில செய்திகள் படித்தவை. அதிலும் சாக்கடையிலிருந்து ஆண் குழந்தை மீட்கப்பட்ட செய்தியும் அதன் வீடியோ காட்சிகளும் கண்ணில் நீரை வரவைத்தது. அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 7. செய்திகள் அனைத்தும் மனித நேயத்தை சொல்லும் பகிர்வுகள். தினம் தொலைக்காட்சிகள் இந்த நல்ல செய்திகளை சொல்லி வருகிறார்கள்.
  பேரிடர் தருணம் இது போன்ற செய்திகள் உதவும் குணத்தை எல்லோருக்கும் தரும்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. கேரள வெள்ள உதவி செய்திகள் கேட்க நன்றாக இருக்கிறது. சிறுமி, தன் நோய் நிவாரண நிதியிலிருந்து கொடுத்ததும், வளசரவாக்கம் கீதாவும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
  நல்ல செய்திகளுக்கு மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 9. எழுதிக் கொண்டிருக்கும் பதிவுகளுக்கு இவர்களே சிறந்த உதாரணங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. அனைத்துச் செய்திகளும் அருமை. அதிலும் வளர்ப்பு நாய்களை விட்டுவிட்டு வருவதற்கு மறுத்தவரும், இருளர்களுக்கும் நரிக்குறவர்களுக்கும் மருத்துவ சேவை செய்யும் டாக்டரும் என்னைக் கவர்ந்தனர்.

  பதிலளிநீக்கு
 11. பணம் அளித்தவர் பற்றிய தகவல்களை யார் வெளியிடுகிறார்கள் ஓசைப்படாமல் உதவுவோரும் இருக்கிறார்கள் என்ன ஆனலும் உதவும் உள்ளங்களுக்கு ஒரு பெரிய நன்றி

  பதிலளிநீக்கு
 12. அனைத்தும் அருமையான செய்திகள் தான் ஆனாலும் கால்வாயிலிருந்து குழந்தையை மீட்ட பெண்ணும் தன் சிகிச்சைக்காக கிடைத்த பணத்தில் தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்ணும் போற்றுதலுக்குரியவர்கள்!!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  அனைத்தும் நல்ல செய்திகள். இரக்க குணம் கொண்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சிறுமிகளின் கருணைக்கு வாழ்த்துகள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!