புதன், 1 ஆகஸ்ட், 2018

இன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....
இன்று நம் அரங்கத்தில் ஆசிரியர்கள் திரு ராமன், திரு கௌதமன் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்களில் திரு ராமன் அவர்களிடம் ஒரு கேள்வி..  "ஐயா..  இந்தக் கேள்வி பதில் என்கிற பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  எப்படி இது பிரபலம் ஆகிறது என்று நினைக்கிறீர்கள்?"திரு ராமன் : "கேள்வி பதில் தற்காலத்தில் மிகப் பிரபலம். 

அந்தக் காலத்தில் கூட கேள்வி - பதில் பிரதானமாக பல தளங்களில் இருந்திருக்கிறது.  பிரஸ்னோத்தர மஞ்சரி என்று கேள்வி பதிலாக அரிய விஷயங்கள் விளக்கப் பட்டுள்ளன.  சாக்ரடீஸ் தன் தத்துவங்களை கேள்விகள் கேட்டுக் கேட்டு ஸ்தாபிதம் செய்திருப்பது உலகப் பிரசித்தம்.

ஊடகங்களை எடுத்துக் கொண்டால் "நயன்தாராவைக் கேளுங்கள்" , பாணி கவர்ச்சி அம்சத்தை குமுதம் பிரபலப் படுத்தியது.  கூடவே சுஜாதா போன்ற இலக்கியப் பிரபலங்களுக்கும் இடம் தந்ததற்கு நாம் நன்றி பாராட்ட வேண்டும்.

"நடுவில் நண்பர் கில்லர்ஜியிடமிருந்து வந்திருக்கும் கேள்வி...  'அனுஷ்காவின் கணவருக்கு துரோகம் செய்வதாக மனசு உறுத்தவில்லையா?'  அநேகமாக இந்தக் கேள்வி ஸ்ரீராமுக்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.    ஸ்ரீராம்..."ஸ்ரீராம்  :  "இதற்கு நான் அங்கேயே பதில் சொல்லி விட்டேன்.."

தொகுப்பாளர் : "பதில் அடுத்த புதன் கிழமை சொல்வதுதானே முறை?  ஏன் அவசரப்பட்டீர்கள்?"

ஸ்ரீராம்  :  "மன்னிக்கவும்...  அனுஷ் என்றதும் 'சட்'டென பதில் சொல்லி விட்டேன்..."

"சரி..  பதில்தான் என்ன?"

"அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை..."

தொகுப்பாளர்  :   "அவ்வளவுதானா?  சரி ராமன் ஸார்..  நம் பேட்டியைத் தொடர்வோம்..."

கேள்வி :  "பிரபலங்கள் பதில் சொன்னால்தான் கேள்வி கேட்பார்கள் என்கிறீர்களா?"

திரு ராமன் : "யார் பதில் சொன்னால் என்ன வாசகர்கள் மிக்க ஆர்வத்துடன் பங்குகொண்டு சிறப்பிக்க எப்போதும் தயார் !

கேள்வி  :  "அப்படி யாருடைய கேள்வி பதில்கள் எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்?"

திரு ராமன் :  "அந்தக் காலத்தில் ஃபிலிம் இண்டியா பத்திரிகை ஆசிரியர் பாபுராவ் படேல் கே-ப மிகப் பிரசித்தம். கிட்டத்தட்ட இருபது பக்கங்களில் கேள்வி - பதில்  வெளியாகி மக்கள் மனம் கவர்ந்தது. கிண்டலும் தாக்கலும் அவரது ஸ்பெஷாலிட்டி.

தமிழ் வாணன் கல்கண்டு பத்திரிகை கேள்வி - பதில்  பலத்தில் மட்டுமே லட்சக் கணக்கில் விற்பனையானது.

கார்டூனிஸ்ட் மதன் கேள்வி பதிலில் முத்திரை பதித்தவர். துக்ளக்கில் சோ பதில்கள் சுவாரஸ்யம், பிரசித்தம்.  இப்போது குருமூர்த்தியும் நன்றாகவே பதிலளிக்கிறார்.

இடையில் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்...  அதாவது...' சாதாரணமாக ஆறு ஓடுகிறது என்றுதான் கூறுவது வழக்கம், ஆனால் இளங்கோவடிகள் "நடந்தாய் வாழி காவேரி" என்றிருக்கிறாரே?'  இதற்கு என்ன பதில்?

ஸ்ரீராம்  :  "இதற்கு 'ஃபோன் எ பிரெண்ட் ஆப்ஷன்' உபயோகிக்கலாமா?"

தொகுப்பாளர்  :  "யாருக்கு ஃபோன் செய்யப்போகிறீர்கள்?"

ஸ்ரீராம்  :  "இன்னொரு ஆசிரியருக்கு...  இதோ அவரே லைனுக்கு வந்து விட்டார்...  ஹலோ..  அதாவது கேள்வி...  ஓ...  நீங்களே கேட்டு விட்டீர்களா?  பதில்?  அதாவது அவர் சொல்கிறார்..  இளங்கோ அடிகள் காவிரியை பதினெட்டாம் பெருக்கு அன்று பார்த்திருப்பார்..  அப்போது காவிரி நடந்து கூட வராது..  காய்ந்திருக்கும் மணலில் ஊறிக்கொண்டு தவழ்ந்துதான் வரும்.. என்கிறார். 

கேள்வி  :  " சரி நிகழ்ச்சிக்கு வருவோம்...  அதாவது நாம் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கு வருவோம்.  கேள்வி - பதில்  பாபுலாரிட்டிக்குக் காரணம் என்ன?"


​திரு ராமன்  :  "கேள்வி மனதை அரிக்கிறது பதில் தெரியும் வரை ஊண் உறக்கம் பிடிக்காது என்றெல்லாம் ஏதுமில்லை.

பெரும்பாலும் கேள்வி கேட்பவர் தன் சாமர்த்தியம், கவனிப்பு அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறார் அல்லது தன் பெயர் போட்டு கேள்வி அச்சிடப் பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்க இருக்கிறது என்பது ஒரு கிளர்ச்சியை உண்டாக்குகிறது. 

பதில் பற்றி இவ்வகை வாசகருக்கு அக்கறை இல்லை.  இதை சுஜாதா ரங்கராஜன் கூட சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கேள்வி  :  "அப்படியானால் பதில் சொல்பவர்கள் எல்லாம் ஏமாந்து போகிறார்கள் என்று சொல்லலாமா?"

ஒரு நிமிடம்..  தோழி அதிராவிடமிருந்து ஒரு கேள்வி..  'இங்கே மஞ்சள் பதில்கள் கெள அண்ணனுடையதோ?.. இல்ல 2 வது ஆசிரியருடையதோ?..' என்று கேட்கிறார்.

ஸ்ரீராம்  :  "அதிராவினுடைய கேள்விக்கு பதில்..  கௌ அண்ணனுடையது இல்லை என்று மட்டும் சொல்கிறோம்..."

தொகுப்பாளர்  :  "மறுபடி நம் பழைய கேள்விக்கே வருகிறேன்... அப்படியானால் பதில் சொல்பவர்கள் எல்லாம் ஏமாந்து போகிறார்கள் என்று சொல்லலாமா?"

திரு ராமன் :  "ஊ...ஹூம்....  கேட்பவர் இப்படி என்றால் பதில் சொல்பவரும் தம் பாண்டித்தியத்தை அல்லது அடக்க குணத்தை அல்லது நகைச்சுவைத் திறனை ஷோகேஸ் செய்ய முனைகிறார். 

கேள்வி கேட்பவர்களில் சிலர் "பதிலில் சில தவறு" களை சுட்டிக்காட்டுவதில் ஒருவகை மகிழ்ச்சி அடைகின்றனர்.

எது எப்படியானாலென்ன, காருள்ளவரை, நீருள்ளவரை, காகிதம் மை உள்ள வரை கேள்வி -பதிலும் நிலைக்கும். (இங்கில்லை என்றால் பிறிதோர் இடத்தில்).


கேள்வி  :  "நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் திரு கௌதமன்...   சொல்லுங்கள்..."
திரு கௌதமன். :  "சில நேரங்களில் நாம் நமக்குத் தெரிந்த சிலரிடம் சில கேள்விகள் (நேரில் பார்த்தால் ) கேட்க நினைப்போம். உதாரணமாக : பிடித்த டிபன் என்ன, பிடித்த ஊர் எது,  சமீபத்தில் வாய் திறந்து சிரித்தது எப்போது, சமீபத்தில் கண்ணீர் விட்டது எப்போது, பிடித்த பாடல்,   பாடகர், பாடகி , உபயோகப்படுத்தும் சோப் எது ....  என்றெல்லாம் கேட்க நினைத்திருக்கலாம். ஒவ்வொரு  கேள்விக்கும் பிறகு நான் கேட்கும் முக்கியமான கேள்வி, ஏன் என்பது .   இதுதான் உண்மையை வெளியே கொண்டு வரும்...." 

தொகுப்பாளர்  : "சகோதரி ஏஞ்சல் கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டீர்கள் என்றால் நிகழ்ச்சியைத் தொடரலாம்...இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறார் சகோதரி ஏஞ்சல்..  அதாவது முதலாவது 1, இக்காலத்து பிள்ளைகள் பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லையென்ற feeling உங்களுக்கு வருவதுண்டா ? 

ஆசிரியர்கள் கோரஸாக  :  "இல்லை"

ஏஞ்சலின் இரண்டாவது கேள்வி 'அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு கடைசியில் கமல் நடக்கும்போது கூட நடக்கும் புலியின் வால் ஆடிட்டே போகும் ஒருவர் அதைப்பார்த்து அரண்ட மாதிரி உங்களை அதிர வச்ச சீன்ஸ் நிஜ வாழ்க்கையில் ? அதாவது உங்கள் கண் உங்களை ஏமாற்றிய நிகழ்வு ?'

ஸ்ரீராம் :  கயிறைப் பாம்பென நினைத்து எப்போதாவது ஏமாந்திருக்கக் கூடும்...  சட்டென சொல்ல எதுவும் இல்லை"
அரைகுறை இருட்டு...

தண்ணீர் இல்லாத ஆற்றில் இறங்கி ஆற்றுப் போக்கில் நடக்கிறோம். ஓரிரு அடி வைத்தவுடன் நம் எதிரில் ஒரு குழப்பமான உருவம் தோன்றி மறையும்.

கரைப் பக்கமே பார்க்காமல் வேகம் வேகமாக நடந்தாலும் உருவம் மட்டும் கடைக்கண் பார்வையில்..

நிலவு முழு வீச்சில் வந்ததும் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்தோம்.

நாணல் புதர்

மன்னார்குடி சாலையிலிருந்து கொட்டாரக்கு டி அணைக்குடி வழியே நடக்கும்போது நாம் நடந்தால் பின் தொடரும் சப்தம் நின்றால் நின்றுவிடும்.

எல்லாக் கதைகளில் வருவது போல் எப்போது நம்முடன் சேர்ந்துகொண்டது என்பது தெரியாத நம் செல்லகருப்பன்தான் நம்மை பயம் காட்டியது.


1974 குரோம்பேட்டையில் அண்ணன் வீட்டுல தங்கி நான் வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன்.  காலையில அஞ்சு மணிக்கு சாதாரணமாக  எழுந்துவிடுவேன்.  அப்படி ஒருநாள் இருட்டுல எந்திரிச்சு  தட்டுத் தடுமாறி ஜன்னல்  திரையை திறக்கும் போது அந்தப் பக்கம் ஒரு பெரிய முகம் என்னை பார்த்தது.  பயந்துபோய் யாருப்பா அது என்ற சத்தம் போட்டு கேட்டேன். அப்புறம் விளக்கு சுவிட்சை போட்ட உடனே தான் தெரிஞ்சது.  ஜன்னலில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி!  என்னுடைய முகத்தையே பார்த்து நான் அப்படி சத்தம் போட்டது எனக்கு இப்பவும் ஒரே வேடிக்கையா இருக்கு!

அதே திருவாரூர் மன்னார்குடி சாலை.  வெள்ளைக்கொடி அய்யனார் கோவில் நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்.  ஒரு ஆள் தலையில் கை வைத்துக் காலை நீட்டி உட்கார்ந்திருப்பது தெரிந்து 'கிட்டே போய் விசாரிப்போம் நாம் இருவர் அவர் ஒருவர்' என்று சொல்லி ரோட் கற்களில் இரண்டை எடுத்துக் கையில் வைத்திருந்த துணிப் பையில் போட்டுக் கொண்டு அடிமேலடி வைத்து நெருங்கும்போது ஒரு மின்னல் ...

பின்னர் ஒரே சிரிப்பு தான்...

கால் நீட்டி இருந்த உடல் ஈச்ச மட்டை.  உடல் குட்டையாக வெட்டப் பட்ட மரம்.  அதன் மீது கவிழ்த்திருந்தது பானைத் தலை

இப்படி எங்கள் திடுக்கிடும் கணங்கள் எல்லாமே சொந்த ஊரை சுற்றிதான். 
மற்றொரு முறை கும்பகோணத்திலிருந்து வரும் அண்ணனை வரவேற்று ஊருக்கு அழைத்துப் போக இரட்டை மாட்டு வண்டியை அண்ணன் வந்ததும் கிளம்ப ஆயத்தமாக மாடுகளை பூட்டி ஹரிக்கேன் விளக்கையும் ஏற்றி மாட்டிக் காத்திருந்தால்,  பஸ் வரவே இல்லை  21..22..23 மணி ஆயிற்று.  பிறகு ஏதோ பஸ் வந்து எதிர் பக்கம் நின்ற மாதிரி இருந்தது. 

சற்று நேரம் கழித்து 'அடா இறங்கி வராமல் என்னடா பண்றீங்க?' என்று அத்தை கோபமாகப் பேசும் சப்தம் கேட்டுக் கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தால் வண்டி வீட்டு வாசலில்..  இரண்டு தூங்கு மூஞ்சிகளுடன் மாடுகள் தாமாகவே வீட்டுக்கு சுமார் 7 கி மீ. விபத்தின்றி வந்து விட்டன

தொகுப்பாளர் :  "ஓகே.. ஓகே...  நிறையவே சொல்லிட்டீங்க..   அப்போ நாம் நம் நிகழ்ச்சிக்குத் திரும்புவோம்...  பத்திரிகைகள் திடீரென்று சிறந்த கேள்விகளுக்கு பரிசு என்றெல்லாம் அறிவித்தார்கள்..."


திரு ராமன்  :  "சிறந்த கேள்விக்கு ரூ 5 பரிசு எனத் தொடங்கி இப்போது 500 ஆயிரம் என்று தட்சிணை தரப் படுகிறது. எல்லாம் விலை உயரும்போது இது மட்டும் தப்புமா என்ன ?


திரு கௌதமன் :  "ஒரு காலத்தில் சோ, சிறந்த கேள்விக்கு தமிழக அரசு பரிசுச் சீட்டு (அப்போ அது ஒரு ரூபாய் விலை!) கொடுத்து உண்டு!"

கேள்வி  :  "எங்கள் தளத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு பரிசு ஏதும் வழங்கும் எண்ணம் இருக்கிறதா?"

திரு கௌதமன் :  "ஓ...  கட்டாயம்.  அதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..."

கேள்வி  :  "எவ்வளவு பரிசுத்தொகை?"

திரு கௌதமன் :  "தொகையா?  அது எதற்கு?  வாசகர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.  வழக்கம்போல 1000, 2000 என்று பாயிண்ட்ஸ் கொடுத்து விடுவோம்.  வாசகர்கள் விரும்பினால் சிறந்த பதிலுக்கு பணப்பரிசு தரலாம்... அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை!"

கேள்வி : "கேள்விகள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன கௌதமன் ஜி..?"


திரு கௌதமன் : "கேள்வி கேட்பவர்களில்  பல வகைகள் உண்டு.  பதில் தெரிந்தே கேட்பவர்கள் ஒரு வகை.  அவருக்கு தெரிந்த பதிலை நாம் சொல்லவில்லை என்றால் அவர்  ஏற்றுக்கொள்ள மாட்டார்!  வேறு சிலர்   பதில்  தெரிந்திருந்தாலும்  நாம்  சொல்லுகின்ற பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள்.  பதில் தெரிந்து கொள்வதற்காக கேள்வி  கேட்பவர்கள் நாம் அளிக்கின்ற பதிலை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்"

கேள்வி  :  "நீங்கள் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள்?"

திரு கௌதமன் : "நான் விரும்பிப் படித்தகேள்வி பதில் என்று பார்த்தால் தமிழ்வாணனின் கேள்வி பதில்கள்.  அதற்குப்பிறகு அரசு பதில்கள், சோ கேள்வி பதில், 'ஏன் எதற்கு எப்படி' சுஜாதா பதில்கள், 'கிரேசி' மோகன் பதில்கள்,  இப்படிச் சில விஷயங்கள் ஞாபகம் வருகின்றன."

சரி...  இந்த வாரம் ஒரு மாறுதலான நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் சந்தித்தது மகிழ்ச்சி..   இன்றைய நேரம் முடிந்து விட்டது...  அடுத்த வாரம் சந்திப்போமா?

72 கருத்துகள்:

 1. வருக.. வருக.. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் விடை தேடிக் காத்திருக்கும் வித்தகர் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி வந்தால் இப்படியா எங்களை எல்லாம் ஏமாற்றுவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விகளுக்கும் பதில் இருக்கே கீதா அக்கா... வந்த கேள்விகள் அவ்வளவுதான்!

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், போய்ப் பாருங்க, போன வாரம், எத்தனை கேள்விகள் கேட்டிருந்தேன்! ஒரு கேள்விக்கும் பதிலே இல்லை!

   நீக்கு
 4. சுவாரசியமான எழுத்து நடை. ஶ்ரீராம் ஏதேனும் பத்திரிகைகளுக்கு அனுப்பி முயற்சிக்கலாம். சரளமாக வருது! கொஞ்சம் பொறாமையுடன்! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. / சுவாரசியமான எழுத்து நடை. ஶ்ரீராம் ஏதேனும் பத்திரிகைகளுக்கு அனுப்பி முயற்சிக்கலாம். சரளமாக வருது! கொஞ்சம் பொறாமையுடன்! :))))) //

   பதில்கள் உண்மையிலேயே அந்தந்த ஆசிரியர்களிடமிருந்து வாங்கியதுதான் அக்கா. இதில் என் சாமர்த்தியம் எதுவும் இல்லை.

   நீக்கு
  2. கலந்துரையாடல் வெகு அருமை . இனிய காலை வணக்கம்.
   செல்ல கருப்பனும், கூட்டு வண்டிப் பயணமும் மிக அருமை.
   இது தனிப் பதிவாக வெளியிடலாம் ஸ்ரீராம். இது யாரோட அனுபவம்னு தெரியவில்லை.

   இப்போது என் கேள்வி
   கேள்வி கேட்டால் விருப்பமா
   பதில் சொன்னால் இன்பமா
   கேள்விக்குறி இந்தக் கணினி போடாது, மன்னிக்கணும்.

   நீக்கு
  3. கேள்விக்கு பதிலாக வந்திருக்கா விட்டால் தனிப்பதிவாக வெளியிட்டிருக்கலாம் வல்லிம்மா.. எனக்கும் தோன்றியது.. அடடா.. அமானுஷ்ய அனுபவப் பதிவு போகிறதே என்று!

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  இன்றைய கேள்வி பதில் பகுதி நன்றாக இருக்கிறது.

  //வாசகர்கள் விரும்பினால் சிறந்த பதிலுக்கு பணப்பரிசு தரலாம்... அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை!"//

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்றைய கேள்வி பதில் பகுதி நன்றாக இருக்கிறது.//

   நன்றி கோமதி அக்கா...

   நீக்கு
 6. காலை வணக்கம்.

  நல்லதோர் கலந்துரையாடல். மதன் கேள்வி-பதில்களுக்காகவே சில சமயம் விகடன் படித்ததுண்டு. சோ அவர்களின் கேள்வி பதில் தான் துக்ளக் பார்த்தவுடன் படிக்கும் பகுதி.

  அனுஷ்கா.... இல்லாம ஒரு கேள்வி-பதில் பகுதி கூட வராது போலிருக்கிறது! எப்படியாவது அனுஷ்காவினை பதிவில் நுழைத்து விடுகிறீர்கள்! ஹாஹா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிய வணக்கம் ( ! ) வெங்கட்.

   //அனுஷ்கா.... இல்லாம ஒரு கேள்வி-பதில் பகுதி கூட வராது போலிருக்கிறது! எப்படியாவது அனுஷ்காவினை பதிவில் நுழைத்து விடுகிறீர்கள்! ஹாஹா....//

   என்மேல் தப்பில்லை. கில்லர்ஜிதான் கேள்வி கேட்டிருந்தார்.

   நீக்கு
 7. திடுக்கிடும் கணங்கள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதி அக்கா.. சுவாரஸ்யமாய் சொல்லி இருக்கிறார்கள். தனிப்பதிவாகவே போட்டிருக்கலாம் - வல்லிம்மா சொல்லி இருப்பது போல.

   நீக்கு
 8. 'சட்'டென பதில் உங்களுக்கு தோன்றிய மாதிரி, எனக்கும் தோன்றியது :-

  " // அழகு சிரிக்கின்றது, ஆசை துடிக்கின்றது...
  பழக நினைக்கின்றது, பக்கம் வருகின்றது... //

  என்கிற பாடலும் நன்றாக இருக்கும்" என்று எனது பதிவில் சொன்னது இன்று தான் புரிந்தது... ஹா... ஹா...

  கண்களை ஏமாற்றிய நிகழ்வுகளை ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபாலன்.

   சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் நினைவுக்கு வரவில்லையா!

   நீக்கு
 9. மாறுதலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய பதிவு அருமை...

  வித்தக அரங்கம்..
  வித்யாசமான கோணம்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 11. அடடே நமது கேள்வியும் இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. உங்கள் கேள்வியும் இருக்கிறது கில்லர்ஜி.

   நீக்கு
 12. குறைந்த கேள்விகள், ஆனாலும் பகுதியைச் சமாளித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

  நல்ல பதிலுக்குத்தான் நீங்களே அனுஷ்கா படம் போட்டு மகிழ்ந்து கொள்கின்றீர்களே.. அப்புறம் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நல்ல பதிலுக்குத்தான் நீங்களே அனுஷ்கா படம் போட்டு மகிழ்ந்து கொள்கின்றீர்களே.. அப்புறம் என்ன?//

   நெல்லை...

   நல்ல பதில் என்றால்? அவசியமான இடங்களில் படம் சேர்க்கிறோம்.. அவ்வளவே... இங்கு புதிதாய் வரும் வாசகர்களுக்கு எந்த அனுஷ்கா என்பதில் குழப்பம் வந்து விடக் கூடாது என்கிற நல்லெண்ணம்தான் காரணம்!

   நீக்கு
 13. கண்ணாடி பார்த்தே பயந்துட்டீங்களா?! அப்ப வடிவேலு காமெடிக்கு இதுதான் கருவா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய கிராமப்புற அனுபவங்களை தமிழ் சினிமா காமெடியாக்கி இருக்கிறது.. நன்றி சகோதரி ராஜி...

   நீக்கு
 14. என் பதிவுகள்சிலவற்றை இப்படி கேள்வி பதிலாக நான் அமைத்துக் கொண்டது உண்டு அது ஒரு உத்தியும் ஆகலாம் வாசகர்கள் கேட்கமல் இருக்கும்சந்தேகங்களுக்கு பதிலாகவும் இருக்கலாம் எனக்கு அந்த உத்தி பலன் தந்திருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொலைகாட்சி நிகழ்ச்சி போல அமைத்திருக்கிறேன் ஜி எம் பி ஸார்.. நன்றி.

   நீக்கு
 15. //ஆசிரியர்கள் கோரஸாக : "இல்லை"// இதிலே வண்ணங்கள் மூலம் ஆ"சிரியர்"களை அடையாளம் காட்டி இருப்பது நல்ல உத்தி! எத்தனை பேர் கவனித்தார்களோ. காலம்பரேயே கவனிச்சேன். கோவிச்சுண்டு போனதிலே சொல்லலை! போனால் போகுதுனு இப்போப் பாராட்டிட்டேன். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. / கோவிச்சுண்டு போனதிலே சொல்லலை! போனால் போகுதுனு இப்போப் பாராட்டிட்டேன். :)))))/

   ஹா... ஹா... ஹா.. நன்றி கீதா அக்கா.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில் பதிவு நல்ல தொகுப்புடன் சுவாரஸ்யமாக இருந்தது. வாரத்துக்கு வாரம் தலைப்புடன் வித்தியாசப்படுத்தி வழங்கும், கேள்வி பதில் பதிவு, இந்த வாரம் முழுமையும் வித்தியாசமாக மிக அருமையாக இருந்தது கண்டு மிகவும் ரசித்தேன்.மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  உண்மையிலேயே நீங்கள் குறிப்பிட்ட பத்திரிக்கைகளில், கே. பதிலுக்குகாகவே நிறைய பேர் எனக்கு தெரிந்து பத்திரிக்கை வாங்கிப் படித்தனர். எ. பியிலும் அந்த முறை வெற்றியடைந்து வருவதைக்கண்டு மனம் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.

  சென்ற தடவை பதிலிலேயே எழுந்த என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா ஸிஸ்டர்... சென்ற முறை கேள்வி கேட்டிருந்தீர்களா? நான் சரியாக கவனிக்கவில்லை போலும். கீதாக்கா கூட கேள்விகள் கேட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள். விட்டுப்போன கேள்விகள் அடுத்தவாரம் இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   சென்ற முறை நான் எதுவும் கேட்கவில்லை. சென்ற பதிவில் அதற்கும் முந்தைய வாரத்தில், எனக்குள் எழுந்த சந்தேகத்திலான (ஏன் என்னிடம் ஒரு கேள்வியும் அமையாமல் அடம் பிடிக்கிறது..இந்த மாதிரி ஒரு கருத்துரை.. ) கேள்விக்கு பதில் அளித்திருந்தீர்கள். அதற்கு நன்றி கூறினேன். சற்று குழப்பி விட்டேனோ..ஹா ஹா. மன்னிக்கவும்.

   நீக்கு
  3. ஓ... புரிந்து கொண்டேன் கமலா சிஸ்டர்.. !

   :)))

   நீக்கு
 17. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது நம்மை தைரியமளிக்கும் பழமொழி என்றாலும், தனியே, இருட்டில் அரண்டு மிரண்டு போகும்படியான சந்தர்ப்பங்கள் அவரவர்களுக்கு வரும் போதுதான் தெரியும். "தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது போல.. தங்கள் அனைவரின் "திகில் தருணங்கள்" அந்த நேரம் சற்று பயமுறுத்திதான் கடந்து சென்றிருக்கும். பின் பகிரும் போது சுவாரஸ்யமானவை... நானும் ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்ததற்கு நன்றி கமலா சிஸ்டர்..

   நீக்கு
  2. இல்யூஷனிஸ்ட் என்று யூடியூபில் பார்த்தால் நிறைய ரசிக்கலாம், நம்மால் அதை விளக்க முடியாது.

   நான் என் மேனேஜர் அறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த அறையில் அவரது செக்ரட்டரியும் (அரபிப் பெண்) இருந்தாள். இடையில் நான் வெளியே வந்தேன். எதிர் அறையில் இருந்து (கான்ஃபரன்ஸ்) அந்த செக்ரட்டரி என்னை நோக்கி வந்தாள். நான் அலறிவிட்டேன். (மேனேஜர் அறையில் அவள் இருக்கும்போதுதான் நான் அறையை விட்டு வெளியே வந்தேன். மேனேஜர் அறைக்கு நான் வெளியே வந்த ஒரே கதவுதான்). அலறல் சத்தம் கேட்டு வந்த செக்ரட்டரி, சிரித்துவிட்டாள். அது என் ட்வின் சிஸ்டர் என்றாள். இருவரும் நிற்கும்போது ஒரே மாதிரி வித்தியாசமே இல்லாமல் இருந்தார்கள். நிகழ்வுக்கு அப்புறம் சிரிப்பு உண்டாக்கும், ஆனால் நிகழும்போது பயம்தான்.

   இன்னொன்று, நம்புவதற்கு ரொம்பக் கடினம். என் அம்மா வீட்டிலிருந்து நான் என் பெட்டியைக் கொண்டுவந்து, தி. நகர் லாட்ஜுக்கு வந்தேன். அதில் முக்கியமான செக் இருந்தது. அதை நான் இன்னொருவருக்கு மறுநாள் கொடுக்கணும். அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நேரத்துல பெங்களூர் போவதற்கு செண்டிரல் ஸ்டேஷன் போய்ச்சேர்ந்திருப்பார்கள். என் சாவியை பையில் நல்லாத் தேடினேன். இல்லவே இல்லை. எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இரவு 9 மணி. பூட்டை உடைக்கிறவனும் கிடைக்கமாட்டான். சாவியை அம்மா ஊருக்குப்போயும் கொண்டுவரமுடியாது (பெற்றோர் ஏற்கனவே அங்கிருந்து கிளம்பியிருப்பார்கள்). என்ன செய்யறதுன்னு தெரியலை. உடனே மனதில் 'சத்யசாய்' நினைத்துக்கொண்டு, இந்தப் பிரச்சனையிலிருந்து என்னை விடுவிக்கணும்னு நினைத்துக்கொண்டேன். அப்புறம் பாக்கெட்டில் கைவிட்டால், சாவி அங்கு இருந்தது. இதற்கு 'நீ பையில் சரியாகத் தேடியிருக்கமாட்டாய்' என்றுதான் பிறர் சொல்வார்கள். நடந்தது எனக்குத் தெரியும். இதுபோல வேறு ஒன்றும் நடந்திருக்கிறது. அது இன்னும் டென்ஷன் உண்டாக்கும் சமாச்சாரம். இதெல்லாம் விளக்குவது மிகக் கடினம்.

   நீக்கு
  3. இல்லை நெல்லை... புரிந்து கொள்ள முடிகிறது. சில சம்பவங்கள் நடக்கும்போது நிஜமாக இருப்பவை பின்னர் நினைத்துப் பார்க்கும்போது நம்ப முடியாததாய் இருக்கும். நீங்கள் சொல்லி இருக்கும் சாவி சம்பவம் போல எனக்கும் பலமுறை நடந்திருக்கிறது. நான் முருகா என்று தேடுவேன்! அவன் பெயர் சொன்னதும் அவ்வளவு நேரம் கிடைக்காதது கிடைத்து விடும்!

   நீக்கு
 18. வித்தியாசமாக முயன்றிருக்கிறீர்கள், நன்று!

  பதிலளிநீக்கு
 19. //இளங்கோ அடிகள் காவிரியை பதினெட்டாம் பெருக்கு அன்று பார்த்திருப்பார்.. அப்போது காவிரி நடந்து கூட வராது.. காய்ந்திருக்கும் மணலில் ஊறிக்கொண்டு தவழ்ந்துதான் வரும்.. என்கிறார். //

  காய்ந்து கிடைக்குமாம்..! அநியாயமாக இல்லை? பதினெட்டாம் பெருக்கன்று காவேரி பாலத்தின் மீது புகைவண்டி வரும் பொழுது, செயின் புல் செய்து, காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களையும் ஏமாற்றி வண்டியிலிருந்து 'தொபீல்' என்று பெருகி ஓடும் காவேரியில் குதித்து, நீந்தி வருவார்கள். நாங்களே பார்த்திருக்கிறோம்.
  இளங்கோவடிகள் காலத்தில்தடுப்பணைகள் கிடையாது,அதனால் காவேரி பிரவாகமாகத்தான் ஓடியிருப்பாள், குறிப்பாக ஆடி பெருக்கன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை இளங்கோ அடிகள் பார்த்த அன்று அப்படி இருந்திருக்குமோ... ஃபோனில் அவர் ஏன் அப்படிச் சொன்னார்?

   நீக்கு
 20. கொஞ்சம் வித்தியாசமான விவாத மேடை , இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு
  நடந்தாய் வாழி காவேரி நல்ல கேள்வி .படிக்கிற காலத்தில் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது,

  பதிலளிநீக்கு
 21. ஸ்கூல் ஹாலிடேஸ் என்கிறதால் கணினி பக்கம் வர நேரம் இல்லை :)
  இல்லைன்னா கேள்விகள் பத்துக்கும் குறையாம அனுப்பிடுவேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி ஏஞ்சல்.. இந்த வாரம் கேள்வி மழை இல்லையோ!!

   நீக்கு
  2. இவ்ளோ நேரமா அதானே செஞ்சிட்டிருந்தேன் :)

   நீக்கு
  3. கடகடன்னு தோணினதை கேட்டு வச்சிருக்கேன் :)
   bye for now :)

   நீக்கு
  4. ஹா... ஹா.. ஹா,, கேளுங்க... கேளுங்க... கேட்டுகிட்டே இருங்க! நீங்கள்தான் கேள்வியர் திலகம்!

   நீக்கு
 22. ஆஹா !! எத்தனை அறிவு அந்த வண்டி ஓட்டிய 4 கால் செல்லங்களுக்கு .
  என் கண் என்னை ஏமாற்றிய சம்பவம் ..
  நான் ஜன்னல் வழியா பார்க்கும்போது எதிர் வீட்டு பொண்ணு அவங்க ஜன்னல் ( Awning வின்டோஸ் )கர்ட்டன் லிப்ட் பண்ற மாதிரிரி உள்புறமிருந்து வெளிப்பக்கம் தள்ளி திறக்கலாம் )

  அதில் தலை முடியை விரித்து போட்டு எட்டி வெளியே பார்த்திட்டிருந்தா 5 நிமிஷம் கழிச்சு பார்த்தா அவள் முகம் நீளமா தெரியுது பயந்திட்டேன் :) என்ன தெரியுமா அவளும் அவள் பெட் dog உம மாறி மாறி வேடிக்கை பார்த்திட்டிருந்தாங்க அது cocker ஸ்பானியல் வெரைட்டி ரெண்டு பேருக்குமே கோல்டன் கலர் முடி :)
  இப்படி 5 நிமிஷம் மாறி மாறி என்னை அலற வச்சாங்க .நான்தான் என் கண்ணு full அவுட்டுன்னு நினைச்சுக்கிட்டேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... அப்படியாவது அதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்திருக்க வேண்டுமா!!!

   நீக்கு
 23. இன்றைய பதிவு வித்யாசமா கலந்துரையாடல் டைப்பில் இருக்கு :)

  பதிலளிநீக்கு
 24. /
  ஆசிரியர்கள் கோரஸாக : "இல்லை"//

  அதுதானே :) நாங்கள்ளாம் எங்கள் பிளாக் ஸ்கூல் பிள்ளைங்கள் ஆச்சே :)

  பதிலளிநீக்கு
 25. 1,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...அப்படின்னா என்ன ?
  2, தமிழில் க் ,ங் இதுக்கு புள்ளி இருக்கிற மாதிரி இங்கிலீஷிலே i ,j இதுக்கு மட்டும் புள்ளியிருக்கே why ???
  3,யாருடைய ஸ்டோரீஸ் ரொம்ப பிடிக்கும் ?

  ,hans christian andersen அல்லது jk rowling


  4,சின்ன சின்ன ஆசைகள் 5 கூறவும் ?
  5,இதுவரையில் உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பாராட்டு ?
  6,மூளைச்சலவை அப்படீன்னா என்ன ? எது போட்டு சலவைப்பண்ணுவாங்க
  7,ஒரு பிரபலத்துடன் ஒரு ஸ்டார்பக்சில் அரைமணி நேர சந்திப்பு
  யாரை தேர்ந்தெடுப்பீர்கள் ?
  அனுஷ்கா பாவனா பெயர்கள் பதிலில் வர தடை செய்யப்பட்டுள்ளது :)
  8,உங்க பள்ளிக்கால நட்புக்களுடன் இன்னும் தொடர்பில் உள்ளீர்களா ?
  9, புத்தகத்தை எடுத்ததும் முதல் பேஜ் அதோட கடைசி பேஜுக்கு தாவி படிப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து ?
  10,லைப்ரரி புக்சில் சிலர் பேனாவால் கோடு போட்டு கிறுக்கி வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
  11, KiKi Challenge நம்ம ஊர் ரோட்டில் பார்த்தீர்களா ? உங்கள் கருத்து ?
  12,எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாராவது ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல அழைத்தால் யார் போவீர்கள் ?
  கட்டாயம் ஒரு பேரை சொல்லியே ஆகணும் :)


  பதிலளிநீக்கு
 26. //கயிறைப் பாம்பென நினைத்து... //

  ஆஹா. எவ்வளவு பெரிய தத்துவம்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி ஸார்... உங்கள் லேட்டஸ்ட் பாரதியார் பதிவுக்கு முந்தைய பதிவுக்கு போட்ட கமெண்ட்டை நீங்கள் விடுவிக்கவில்லை! தத்துவம் என்று நீங்கள் சொல்வது நகைச்சுவையாக ரசிக்கிறீர்கள் என்று அர்த்தமா?

   நீக்கு
  2. 'கயிறு--பாம்பு' தத்துவத்தை பெரிய விஷயமாகத் தான் {ஆதி சங்கரரை
   மனத்தில் நினைவு கொண்டு} சொன்னேன்.

   உங்கள் கமெண்ட் வந்து சேரவில்லையே, ஸ்ரீராம்?.. புதுசாகத் தான் இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்துப் போட்டு விடுங்களேன்.

   நீக்கு
 27. Angel
  1,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...அப்படின்னா என்ன ?

  கால் கை பிடித்தல் தான் -- காக்கா பிடித்தல் என்று மருவி போயிற்றாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா !! இதுதானா தாங்க்ஸ் ஜீ.வி சார்
   நானும் பறக்கிறகாகத்தை எப்படி பிடிப்பாங்கன்னுலாம் யோசிச்சி குழம்பிட்டேனே !!

   நீக்கு
 28. ஸ்ரீராம் ... நல்லா தொகுத்து எழுதியிருக்கீங்க. நான் 'புதன் கேஜிஜி ஏரியா' என்பதால் அவரா எழுதியிருப்பது என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதன் கேஜிஜி ஏரியாதான். ஆனால் அவர் கணினியிலிருந்து தொலைவில் இருப்பதால் இரு வாரங்களாக நான் சமாளித்து வருகிறேன்! அதனால் நகைச்சுவை கம்மியாய் இருந்தால் பொறுத்தருளுங்கள்! நேற்று ஆசிரியர்கள் குழுமத்தில் எழுதப்பட்ட வரிகளை என் பாணியில் இணைத்தது மட்டுமே என் வேலை. அந்தக் கருத்துகள் எல்லாம் அவரவர்கள் ஒரிஜினலாய்ச் சொன்னதுதான்!

   நீக்கு
 29. தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்....
  கேள்வி பதில்களை தொடருங்கள் நன்றாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!